https://www.vallamai.com/?p=56144
bout the Author
PART3
யோகம் செய்யச்… சோம்பலே தடை..
அன்பர்களே!
தினசரி காலையில் 5-மணிக்கு எழுந்து குளித்துவிட்டு யோகமும், நல்ல தியானமும் செய்ய வேண்டுமென்று மனதார நினைப்போம்.ஒன்றிரண்டு நாள் இந்த நல்ல பழக்கம் மிகஅற்புதமாய்நடந்தேறும்.நெஞ்செல்லாம் மகிழ்ச்சி பொங்கும்.முகத்தில் ஏதோ ஒரு தேஜஸ் வருவதாய் நம் நண்பர்கள்(நக்கலாகக் கூட!)-சொன்னாலும் சொல்வர்…ஆயின் ஒரு ஐந்து நாள்கழிந்தவுடன் மனத்தில் ஒரு சின்ன குட்டிச் சாத்தான் எட்டிப்பார்க்கும். ‘என்னடா இது, ஒன்றுபோல அதிகாலை 5க்கே எழுந்திருக்கவேண்டியிருக்கே.. இந்த மார்கழிக்குளிரில் போர்வைக்குள் முடங்கிச் சுகமாக நித்ரா தேவியை அணைத்துத் தூங்காமல்சீக்கிரமே எழுந்து எதற்கு இப்படி யோகா செய்யணும்? இதனால் யாருக்கு என்ன பயன்? அதுதான் நண்பர்களே சொல்லிவிட்டார்களே.. முகத்தில் ‘ஒரு ஒளிவட்டம்’ எட்டிப்பார்க்கிறதென்று!..” என்று அந்தச் சாத்தான் உபதேசம் கொசுவுடன் சேர்ந்து
காதில் சொய்ங்..கென்று ரீங்கரிக்கும். அவ்வளவுதான் மனம் அதை உண்மையென நம்பிக் குரங்காட்டம் போட்டு, போர்வையைஇன்னும் இழுத்து அணைக்கும்!.
அன்பர்களே.. யோசித்துப்பாருங்கள்! உங்கள் குரு இப்படியா மட்டிச் சோம்பலுக்கு இடம் கொடுக்கச் சொன்னார்?கடைசி
ஆயுள் நிமிடம் வரை உடம்பும் மனதும் சுறுசுறுப்பாக இருக்கவன்றோ அவர் இவ்வளவு சிரமப்பட்டு, உங்களுக்கு யோகாகற்பித்தார்! விடியும்வரை நீங்கள் தூங்கிவிட்டு இப்படி குருத்துரோகம் பண்ணலாமா?சாத்தானுக்கு அடிமையாகி, தெய்வநிந்தனைக்கு ஆளாகலாமா?தெய்வ வாக்கும்,மந்திர பலமும்,எதையும் சாதித்து வெற்றிபெறும் மனோபாவமும் உங்கட்குவரவேண்டாமா?சிந்தனை செய்யுங்கள்!நான்சொல்லும் உறுதிமொழியாக இதை எடுப்பீர்!
.. “நான் தினசரி சோம்பலுக்கு இடம் கொடாமல் யோகா செய்வேன்; கூடவே தியானமும் செய்வேன்”.. என்று.
..நிச்சயம் தினசரி யோகத்தியானத்தால்
(யோகப்பயிற்சியும், அதன்பின் தியானம்)-உங்கள் வாழ்க்கையே ஒரு புதுப்பொலிவு பெறும்..இறைவன் நிதம் உங்களுடன் மெதுவாகப் பேசுவதை அனுபவத்தில் உணர்வீர்கள்.உண்மை..இந்த அற்புதச்சொத்தை உங்களைக் கீழே தள்ளப்பார்க்கும் சாத்தான் எண்ணம் கொடுக்குமா?
… ஆகவே, இந்தச் சோம்பல் உங்கள் முதல் எதிரி!அதற்கு இடம் கொடுக்காதீர்கள்!தினசரிப் பழக்கமாக நீங்கள் இதனைக்கைக்கொண்டால், பின்பு அது உங்களை யோகா விடாது.உங்கள் குருவாக்கும் உங்களைக் கைவிடாது.
உங்கள் செயல் யாவும் வெற்றியே பெறும்.உங்கள் ‘குலதெய்வமும்’ உங்கட்குப் பக்கபலமாக நிற்பதை வெகுவாகஉணர்வீர்! ஆம்.. இது என் அனுபவ உண்மை.
……….அடுத்தது.. தினசரி நான் தினசரிச் சேதி படித்தபின்தான் யோகா செய்வேன்..தினசரிச்சேதிகள் எனக்கு உற்சாகம்
கொடுக்கிறதே!’- என நினைத்தால் அதைப்போல ஒரு மடத்தனம் கிடையாது.அதனால்தான் நான் உங்களை அதிகாலை.5 க்கே எழுந்து காலைக்கடன் யாவும் முடித்து யோகா செய்ய அவசரப்படுத்தினேன்.ஸ்வாமி சிவாநந்தர்(பத்தமடை)அழகாகச் சொல்வார்! ‘காலையில் அழகிய தியானம் செய்யாமல் தினசரியில் நீங்கள் மூழ்கினால் தியானம், மத்யானமாகிவிடும். அதாவது அதிலுள்ள சேதிகள், அரசியல் நீசத்தனம், வன்முறைச் சேதிகள் எல்லாமே நம்மை வேறுஎண்ணங்களில் கொண்டுபோய் மூழ்கடிக்கும்.நேரமும் ஓடிவிடும்.சோம்பலும் கூடிவரும்..அவ்வளவு பேட் வைப்ரேஷன்(BAD vibration)அது என்பார்.சலனத்தை உண்டாக்கும் அந்த பேப்பர் முக்கியமா? இல்லை அதிகாலை வரும் தெளிவான, தெய்வீகச் சிந்தையோடு நீங்கள்..செய்யப்போகும் யோகா முக்கியமா? நீங்களே தீர்மானியுங்கள்’ என்பார்.
ஆகவே ஒரு குறிப்பிட்ட காலை நேரத்தை யோகாவுக்கு என ஒதுக்கினால் அந்த நேரத்தில் உங்களைச் சுற்றிலும் பாதுகாத்து நிற்க உங்கள் குலதெய்வதமும், குருவின் சூக்கும உருவும் தயாராக நிற்பதை அனுபவத்தில் உணர்வீர்!நேரம் தவறாமல்அதே காலத்தை யோகத் தியானத்திற்கே பயன்படுத்துவீர்கள் எனில் நம் வாழ்க்கையே சீராகி உண்மையான வாழ்க்கையைவாழ்ந்தவர்கள் ஆவோம்.ஒரு அற்புத தெய்வீக சக்தியே நம்முள் குடியேறும். இது என் அனுபவம்!அதனால்தான் இந்த நல்ல நெறியை உங்களுக்கு வலியுறுத்திச் சொல்கின்றேன்.
No comments:
Post a Comment