Monday, December 14, 2015

பிருகு மகரிஷி குரு விழா / Bhrigu Maharishi Guru Pooja 24th December 2015 near chennai


 Date: 24th December 2015 (ROHINI STAR) /  மார்கழி மாதம் ரோகினி நட்சத்திரம் 
 பிருகு மகரிஷி குரு விழா / Bhrigu Maharishi Guru Pooja

எல்லா  மெய் ஞான அன்பர்களையும் அன்புடன் அய்யன் பிருகு மகரிஷி சார்பாக அழைகின்றோம்
 Location : Maruderi, Singaperumal Koil / மருதேரி, சிங்கபெருமாள் கோவில் 

Thank: http://18siddhar.blogspot.in/2015/12/maruderi-principles-bhrigunaadhar.html


மருதேரி நிகண்டு / Maruderi Principles

1) காலமிதில் செய்முயற்சி எங்கள் மார்கம்
      காணும்வகை சிந்தையதை பலிதம் ஆக்கி
    நிலமதனில் சூட்சமத்தை தூலமாக்கி
      நயனமதில் பலனதுவை காட்டி விப்போம்
   பிலமான மனோமய கோசம் தன்னை
      பெருவழியில் பொதிந்தோர் வரங்கள் தன்னை
   ஆலமான கருமமேனும் விடத்தை நீக்கி
      அமிர்தமெனும் அழியாத மார்கம் செல்ல

     This time the efforts in Siddha Margam on
        Ideas postulated in mind will come to reality
     In Earth will unveil the hidden
        thus effects will be seen and realized
    Strong mind-oriented-process-body thyself
       The cosmos's boons in Plethora by itself
    Shall cure the Poisonous Karma and
       Lead to Immortal path of Nectar


2)செல்லவே வழிமுறைகள் உரைபோம் இப்போ
     செப்புகின்ற கலியதிலே நாங்களும் தான்
    அல்லலுறும் மாந்தர்களும் அவத்தை நீக்க
     ஆசிரம நியதிபடி அவரவர் கர்மம் நீங்க
   நல்லதொரு வழியளிக்கும் குடிலம் தன்னில்
     நிர்மான வகை பூர்த்தி தருணம்யிதுவே
   மாசில்ல தடம்தனில் பஞ்ச பூதம்
    மணிவகுத்து நிற்குதப்பா திங்கள் முதல்

   To lead there will shows the path now
       In this age of Kaliyuga as I voice
   To save troubled ones from sufferings
      By Ashram's principle to cure individual's karma
   This kudilam (Maruderi) providing right path
       From formations is heading completion
   The flawless place is blessed by Panchabootha
       Aligned and beautiful from this month on


3) முதலான தீர்த்தம் அதே நிச்சயித்த
     முடிவுருமோர் நந்தியதின் சின்னம் வைத்தே
   பூதலத்தில் காமதேனு அம்சம் ஒப்பாய்
      பெண் ஆணும் பாகமதாய் நிறுவிபாரே
   ஒதவதால் ஊரணியும் தெய்வ அம்சம்
      ஔடதமாய் சித்திக்கும் வருவோர்க்கு எல்லாம்
   நாதமான சுழியரிவை அதிர்வை தூண்டி
      நிலைநாட்டும் ஆத்மவிளக்கம் தன்னால் கூடும்  

    The Prime Theertham(well) as decided
       fulfills by bearing symbol of Nandi
    Besides the Nandini symbol harmonizing
       thus symbolizing male female depictions
    The spring here thus is of holy nature
       will work as Medicine for all visitors
    Nadam bustles and opens notches of mind
       To bring steadiness on self realization  
 
4) கூடுமப்பா  இத்தேகம் தொட்ட சிந்தை
      குருதியுற்ற பருவுடலும் அவற்றில் தோன்றும்
    பீடு பிணியும் வாதமொடு பல்கால் நோயும்
      பிறவிமுதல் தொட்டுவரும் குருதி கர்மம்
    நாடும்பல அவத்தையோடு வாழ்வதெல்லாம்
      நித்தியமாய் தொடரும் இந்த சழக்கில் விட்டு
   கடுகளவு அதில் பயமும்  துன்பம் நீங்கி
     காலபயம் அன்றியே என் மக்கள் வாழ

     The body and thoughts related to them
         result in the blood and flesh created of it
     Illness, disorders, disability and all-type diseases
        Including diseases tainted in body from birth
     With a life filled with pain and Sufferings
        To getaway from this that has been a daily agony
      In order to heal and stay from that fear
        Forever without fear for my people to live
 

5)  வாழவே அத்தனான பிரம்ம விதி
       வழிமாற்றி சென்றிடவே வழியில்லை என்றாலும்
     சூழவே சித்தர்களின் வரங்களாலும்
       சுத்த மனோ வேண்டுதலின் வரத்தினாலும்
     ஆழந்த துயர் நீக்கி தேகதுச்சமாய்
       அமைதியுற செய்யும் விதம் ஆசிஇன்று
    சூழந்ததொரு இருள் அனைத்தும் விலகியோடி
      சுத்தமுள்ள மார்கநெறி நிறுவி நிற்க

     Though father Lord Brahma destines so
         and there is no way to change one's fate
     The "Siddhars-Here" boons can
         work difference by a pure mind & seek
     Even for deepest of the problems in one's body
          will be silenced here; so is my blessed-boon today
     Surrounded all darkness will go away
         As pure Margam Principles will stay-on here


6)  நிற்கவே சூட்சமத்தை இன்று சொல்வோம்
       நெறியான ஞானத்திற்கு தடையானது தான்
     உற்ற பசி அதனால் உண்டாகும் சினமும் தானே
       ஒதிட்டோம் துர்வாசன் என்னும் உவமை
     பெற்ற தனம் தனில்பசி ஆற்றுவிக்க
       பிழையற பேதமற தலத்தின் அன்னம்
     உற்ற செயல் மாறாது மாச்சரியம் அற்று
      உள்ளம்நோகா மருந்தெனவே ஈவாய் அப்பா

     To Stay-on will tell you soochma principle
       The one that is a big problem for Gnana is
     Hunger and the anger that raises out of hunger
       Said as Dhurvasa using anecdotes
     With resources received Annam palithal happens
      With no mistake and equality Annam
     With focus and without pride this happens
      Hurt nobody's feeling as food is medicine here


7)  ஈவாயே எக்குணமும் உள்ள மாந்தர்
        இருளென்ற கடும் பீடை உள்ளவர்க்கும்
     பூவுலகில் இறை பற்றே அற்றோர் ஆனாலும்
       பற்றியும் தடம் நோக்கி வந்துவிட்டால்
     கவனமுடன் குருசித்தமாகவே தானிருந்து
       கலக்கமதை போக்கிடும் உபாயம் ஒன்று
    குவலயத்தில் குருதர்மம் தனை போதித்து
       கலக்கமதை தீர்க்கும் ஞான வாக்குரை

     Annam to all nature of people coming here
       Those who are stuck with Darkness and toughness
     Even the ones who don't believe in eternal
       What ever maybe if they come to this place
    With Care and Guru's Sittham take care
       One Simple rule to overcome problems
    Voice to them about Guru Dharma
      And Gnana Verses that removes Distress


---------------------------------------------------------------------------

அப்பனே குடிலமது பொலிவும் காணவே
         அகத்தியனும் நந்தியும் காப்பு செய்வார்
பூரணமாய் ஆசிபல சோதி கண்டோம்
         புந்தி ஒன்றி உரைத்திட்ட வாக்கு முற்றே


   Appa this place is increased with Serenity
       Agathiar,Nandi have secured this place
  Poornam blessings from Aganda Sothi
      In alignment the verses are complete


Posted by Radhakrishnan R.A.V at 3:39 AMNo comments:

Post a Comment