Tuesday, December 29, 2015

ஆன்மாவின் நிலைகள்

thank: https://suzhimunai.wordpress.com/

அன்பே சிவம்
ஆன்மாவின் நிலைகள்
ஆத்மாவாகிய பிரம்மத்திற்கு நான்கு நிலைகள் உள்ளன்…
1. விழிப்பு நிலை – சாக்கிரம்2. சொப்பன நிலை – கனவு3. சுழுத்தி நிலை – நித்திரை4. துரியநிலை – தன்னுடைய சுயநிலையாகிய ஆன்மா
துரிய நிலையில் உள்ள ஆத்மாவுக்கு மற்ற மூன்று நிலைகளும் சொப்பன நிலையாகும்.
இந்த மூன்று நிலைக்குள் உலகம் முழுவதும் அகப்பட்டுள்ளது. ஆகவே எல்லாம் பிரம்மம்.
பிரம்மம் – அத்மா – பிராணன் – கடவுள்
அத்மாவே பிராணனாகவும், மனமாகவும், புத்தியாகவும், சித்தமாகவும், அகங்காரமாகவும், பஞ்சேந்திரியங்களாகவும்,
இவைகள் அனுபவிக்கும் உலகங்களாகவும் ஆகின்றது.
மனம் நான்கு விதமாக திகழ்கின்றது.
1. பஞ்சேந்திரியங்களோடு வியாபாரத்தில் ஈடுபடும் மனம்
.
[பஞ்ச இந்திரியங்கள் – கண், காது, மூக்கு, வாய், மெய்]
2. மனத்தை அடக்கியாளும் புத்தி
3. எப்பொருளையும் தனதாகக் கொள்ளும் அகங்காரம்.
4. அதன் சுத்த நிலையாகிய சித்தம்
இச்சித்தம் தான் இதயத்தில் பிராணனின் உறைவிடம்.
1. காற்றாடி விடுபவன் நூலைப்பற்றியிருப்பது போலும்,
2. மூலையில் மாடு கயிற்றினால் கட்டப்பட்டது போலும்,
3. தாயில் முந்தாணியைப் பிடித்துக் கொண்டே செல்லும் குழந்தை போலும் பிராணனும் மனமும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
பிராணன் மனதை தாய்போல காக்கிறது.
விழிப்பு நேரத்தில் குழந்தையாகிய மனதை இந்திரியங்களோடு விளையாட விடுகிறாள்.
அந்திப்பொழுதானதும் மனதை உள்ளே இழுத்துத் தூங்க பண்ண முயற்சி செய்கிறாள்.
மனது தன் நண்பர்களாகிய பஞ்சேந்திரியங்கள் இல்லாமல் தனக்குத்தானே விளையாடிக் கொள்கிறது..
பிறகு இதயத்துக்குள்ளே இழுத்து மடியிற்போட்டு தூங்கப் பண்ணுகிறாள். இங்கே சித்தாக இருந்து கொண்டு மனம் சுகத்தை அனுபவிக்கிறது
.
[சூக்கும காரண உடலை கடந்த போது ஆத்மாவே இதயம்]
பிராணன் விழித்துக் கொண்டிருந்து குழந்தையாகிய மனதின் விளையாட்டு சாமாங்களாகிய உடலையும், ஞாபக சக்தியையும், புத்தியையும், அகங்காரத்தையும், ஜாக்கிரதையாய் வைத்துக் கொண்டு விழித்தவுடன் அதனிடம் கொடுத்து விடுகிறது.
சுழுத்தி : தூக்க நிலையில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மனிதன் கடவுளோடு இதயத்தில் ஒன்றியிருக்கிறான்.
மனது சுதந்தரமின்றி பிராண சக்தியால் இழுக்கப்பட்டு தூக்க நிலைக்கு போவதால் அங்கிருந்து கடவுள் அறிவை கொண்டு வர முடியவில்லை.
ஆனால் தானாகவே உலகத்தை உதறி தள்ளிவிட்டு புத்தி கூர்மையால் அகங்காரத்தையும், தள்ளிவிட்டு இதயக்குகையில் இருக்கும் தன்னுடைய சுயவீடாகிய சித்தத்தில் குடிக்கொண்டிருக்கும் கடவுளிடம் செல்லுவோமானால் விசித்திர அனுபவம் ஏற்படுகிறது. கடவுளின் அருள் ஏற்படுகிறது.
இதுதான் உண்மை ஞான அறிவு. இந்த அறிவால் பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம். எல்லா தத்துவங்களையும் எளிதாக அறியலாம். மனம் எப்படி அடிக்கடி கடவுளிடம் போக்குவரத்து வைத்துக் கொண்டு இருக்குமானால் பேரின்பம் உண்டாகும். இதனை அடையச் செய்யும் சாதனையே பிராணாயாமம் ஆகும்.
பிராணாயாமம் பற்றி ஞானிகள் கூறும் மெய்ஞான விளக்கம் வருமாறு
நாதவிந்து என்றும் நடுவனையிலே இருந்தபோதமென்று மீண்டும் புகன்றதெல்லாம் – ஓதரியவாசிக்கே சொன்ன வகையல்லால் வேறன்றுநேசித்து நீ முனையில் நில்
நாசிவரும் வாசி நடுவனையிலே மறித்துஊசித்துளை வழியே உள்ளேற்றிப் பேசும்இடமறிந்து சென்றே எல்லாமும் நீயதுவாய்த்திடமறிந்து கண்டு தெளி
கண்டதுண்டந் தானறிந்து காரணராஞ் சற்குருவைத்தெண்டனிட்டு நின்று தெரிசித்தாற் – துண்டமதிற்காலைமே லேற்றுங் கருத்தனைக் காட்டுவார்[வேல் முனையைக் கண்டுமே லேற்று]
வாசி என்பது பிரமரந்திரம் நோக்கிச் செல்லும் பிராணனுக்கு பெயர்
.
ஊசி என்பது சுழுமுனைக்கு பெயர்.
“ஊசி துளையில் பாம்பு அடைப்போம்” – என்றார். ஒரு பெரியோர்.
அதன்செயல் கீழ்முகமாகச் செல்லும் அபானனது கதியை மேல் நோக்க செய்தல்.
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்உறக்கத்தை நீக்கி உணரவல்லார் கட்குஇறக்கவும் வேண்டாம் இருக்கலுமாமே
இடகலை, பிங்கலை நாடிகளின் வழிப் பிராணன் இயங்குவதை மாற்றி சுழுமுனை வழியாகப் பிராணனை செலுத்த வல்லார்க்குத் தளர்ச்சி இராது. உறங்கும் காலத்தில் விழித்திருந்து, பயில்வார்க்கு இறப்பின்றி அழியாது இருக்கக்கூடும்.
சுழுமுனைத் தியானத்தை அதிகாலையில் தொடங்குவார்க்கு அழிவில்லை என்று திருமூல நாயனார் அருளியுள்ளார்கள்.
படித்ததில் பிடித்தது
[நன்றி : ஜோதி சற்குருநாதர்]

No comments:

Post a Comment