உ
சிவமயம்
thank to whatapp created..
அருள்நிறை அங்கயற்கண்ணி உடனாய சொக்கலிங்கப்பெருமான் திருவடிகள் போற்றி
மெய்யன்பர்களே,
மெய்ச்சமயமாம் சைவம் சார்தல் அரிதிலும் அரிது என்பது ஆன்றோர் வாக்கு. அதில் ஆழங்காற்பட்டு இறைவனது பெருமைகளை இவ்வுலகிற்கு எடுத்தியம்பியவர்கள் பலர். அவர்களுள் சிறந்த பெண்பாற் அடியராக விளங்கியவர் மங்கையர்க்கரசி அம்மையார்.
திருஞானசம்பந்தப் பெருந்தகையார் அம்பிகை சிவஞானம் குழைத்து அருளிய இன்னமுதை உண்டவர். அவர் கடவுளைத் தவிர வேறு யாரையும் பாடாதவர். அவர், இப்பதியில், மங்கையர்க்கரசியாரை நோக்கி, ``உமைக் காண வந்தனம்`` என்றதோடு அவரைத் திருப்பதிகத்துள் வைத்துப் பாடியருளியுள்ளார்கள். ஆதலால், மங்கையர்க்கரசியார் பெருஞ்சிறப்பு வாய்ந்தவர் என்பது பெறப்படுகிறது.
மங்கையர்க்கரசியார் நாயனார் | |
---|---|
பெயர்: | மங்கையர்க்கரசியார் நாயனார் |
குலம்: | அரசர் |
பூசை நாள்: | சித்திரை ரோகிணி |
அவதாரத் தலம்: | பழையாறை (கீழப் பழையாறை) |
முக்தித் தலம்: | மதுரை [1] |
மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் பதிகத்தில் வைத்துப் பாடும்பொழுது, மங்கையர்க்கரசியாரைக் குறிக்குங்கால் சிவன், உமை இவர்களோடு தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். குலச்சிறையாரைக் குறிக்கும்பொழுது சிவபெருமானோடுமாத்திரம் தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். இவற்றால் மங்கையர்க்கரசியார் தம் கணவரோடு வாழவேண்டுமென்று, ஞானசம்பந்தர் திருவுளங்கொண்டதாகத் தோன்றுகின்றது. இக்கருத்தைத்தான் ``பையவே சென்று பாண்டியற்காகவே`` என்ற அவரது தேவாரப் பகுதியும் தெரிவிக்கின்றது.
மங்கையர்க்கரசியார் திருநீறு அணிந்திருந்த செய்தி ``முத்தின் தாழ்வடமுஞ் சந்தனக்குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்கப் பத்தியார்கின்ற பாண்டிமாதேவி`` என்னும் ஞானசம்பந்தரது தேவாரப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.
இத்துணை பெருமை வாய்ந்த அம்மையாரை பாண்டி நாடு மருமகளாக பெற்றது நம் முன்தவப்பயனே.
அம்மையார் அவர்களின் குருபூசை தினம் வரும் ஞாயிறன்று (மே 8) , திருவாலவாயில் ( மதுரை ), நந்தி மண்டபம் அருகில் உள்ள நால்வர் சன்னதியில் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.
அங்கு திருவிளங்கித்தோன்றியருள்செய்யும் மங்கையர்க்கரசி அம்மையாருக்கு திருமுழுக்கு, அலங்கார, தூப,தீபாராதனைகள் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
திருவாலவாயிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அடியார் பெருமக்களின் திருவடிகளுக்கு அடியோங்கள் கண்ணினை திருப்பாத போதுக்கு ஆக்கி, இந்நிகழ்வில் தவறாத கலந்து கொண்டு பிராட்டியாரின் திருவடிகளை சிந்தனை செய்ய வேண்டுகிறோம்.
சிவாய நம..
No comments:
Post a Comment