Friday, March 31, 2017

கவுமாரி

சப்த கன்னியர்..!

Image may contain: 1 person
🌺 தேவி பெயர்: கவுமாரி
🌺 அம்சம்: முருகப் பெருமான்
🌺 நிறம்: குங்கும நிறமுடையவள்
🌺 வாகனம்: மயில்
🌺 கோடி: சேவல் கோடி
🌺 கவுமாரி வழிபட்ட ஸ்தலம்:
மூலவர்: பஞ்சவடீசுவரர்
அம்பிகை: கல்யாண சுந்தரி,
பெரியநாயகி

🌺 தோற்றம்:
தமிழ் கடவுள் என புராணங்களால் புகழப்படும் குமரக் கடவுளின் சக்தியே கவுமாரியாகும்.
மயில் வாகனமாக கொண்டு அதன் மீது அமர்ந்து, சேவல் கொடியாகவும் கொண்டு அஷ்ட திக்கிற்கும் அதிபதியாக அருளாட்சி புரிகிறார் அன்னை.
ஆறு முகங்களையும், பன்னிரு கரங்களையும் கொண்டிருப்பார் என
ஸ்ரீ தத்துவநிதி கூறுகின்றது.
பன்னிரு கரங்களில் இரு கரங்கள் வரத, அபய முத்திரைகளில் இருக்க
மற்றைய கரங்கள் வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி,  தாமரை, சேவல், பரசு என்பனவற்றினை திருகரங்களில் தரித்திருப்பார்
என விவரிக்கின்றன.
அம்சுமத்பேதாகமம், ரூபமண்டனம், காரணாகமம் என்பனவற்றில்
அன்னைக்கு நான்கு கரங்கள் கூறப்பட்டுள்ளது.
அம்சுமத்பேகாமத்தின்படி இவரது நான்கு கரங்களுள் இரு கரங்கள் அபய வரத முத்திரையிலிருக்கும். மற்றையன வேல்,சேவல் என்பனவற்றினை
தரித்திருப்பார் என விவரிக்கின்றன.

🌺 கவுமாரி வழிபட்ட ஸ்தலம்:
சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம்
அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும்.
இத்தலத்தில் கல்யாண சுந்தரி,பெரியநாயகி ஆகிய இரண்டு அம்மன்கள்
தனித் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஆனந்த முனிவருக்கு சிவன் தாண்டவ தரிசனம் காட்டிய தலம்.
மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த சிறப்புடையது.

🌺 வழிபடுவதால் ஏற்படும் பலன்:

குமரக் கடவுலை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறுவரும் அன்னை கட்டளைக்கு காத்திருப்பர். ஆதலால் அன்னை உபாசித்தால் வேண்டியது கிட்டும். பதவியடையலாம்,திருமண தடைகள் நீங்கும், குழந்தை செல்வம் உண்டாகும். முக்கியமாக பல கிராமங்களில் ஆடி மாதத்தில் உஷ்ண சம்பந்தமான நோய்கள் அகல வழிபடுகிறார்கள்.

🌺 மந்திரம்:
ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

🌺 காயத்ரி மந்திரம்:
ஓம் சிகித்வஜாயை வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்

🌺 தியான ஸ்லோகம்:
சதுர்புஜா த்ரிநேத்ரா
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.

****** சர்வமும் சக்தி மயம் ******
thank: FB post ...

No comments:

Post a Comment