Saturday, April 1, 2017

சகுனம்

சகுனம்
சகுனம்,ஜோதிட சாஷ்திரத்தின் ஒரு அங்கமே.இது ஒரு உண்மையான சாஸ்திரம் .நமது நாட்டில் அனேகமாக எல்லோருடைய வாழ்க்கையிலும் சகுனம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது .நாம் வெளியே புறப்படும்போது சகுனம பார்த்து புறப்படுகிறோம்.
பலர் ,குடும்பங்களில் திருமணம் நிச்சயம் செய்யும்போது அந்தஸ்து
(சமூக,பொருளாதார,குடும்பம்).ஜாதகப்பொருத்தம் , படிப்பு ...போன்ற பலவற்றை பார்த்துத்தான் நிச்சயம் செய்கிறார்கள் .இதில் ஏதவது ஒரு சில குறைகள் இருந்தால் அவற்றின் காரணமாகவும் வேறு சில காரணங்களினாலும்குழப்பங்கள் ஏற்படுகின்றன. இந்தத் குழப்பங்களைசகுனம்தான் முடிவு செய்கிறது.சில திருமணங்கள் சகுனம் சரியில்லாமல் நின்று போய்விடுகின்றன.இப்படி சகுனம் ஒருவருடைய வாழ்கைகையை தீர்மானிக்கிறது இது போல் பல முடிவுகள் சகுனத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன.


சகுனம் உண்மைதான்,சகுனம் ஜோதிட சாஸ்திரத்தின்  ஒரு அங்கம்.ஜோதிட சாஸ்திரம்
1.சித்தாந்த ஸ்கந்தம் ]
2.ஹோரா ஸ்கந்தம்
3.ஸம்ஹிதா ஸ்கந்தம் என்று மூன்று பெரிய கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.சகுன சாஸ்திரம் ஸம்ஹிதா ஸகந்தத்தில் வருகிறது.
‘சகுனம் ‘என்பது ‘சகுனி’ என்ற ஒருவகை பறவை இனத்தைக் குறிக்கும் சொல்லில் இருந்து வந்தது.(மகாபாரத சகுனிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ) பறவைகளின் அசைவு சப்தம் போன்றவற்றால் நமக்கு முன்கூட்டியே சூசகமாக புலப்படும் செய்திகளுக்கு சகுனம் என்று பெயர் வந்தது .,சகுனம் நிமித்தத்திலிருந்து வேறுபடும்.சகுனம்கள் பறவைகளின் அசைவுகளால் ஏற்படுவன.
நிமித்தம் பாறவை கலித் தவிர(பூனை,நாய் போன்றவை)மிருகங்கள் ,மனிதர்கள் போன்ற மற்ற இனங்களில் சலங்களிருந்து நமக்கு புலப்படுவது ஆகும்.

சகுனம்-நிமித்தம் போன்றவை புராணம் ,தமிழ் இலக்கியங்ககள் /நாடகங்கள் ஆங்கில நாடகங்கள் இவைகளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.உதாரணமாக ராமாயணத்தில் அசோகவனத்தில் சீதாபிராட்டிக்கு இடதுகண் துடித்தது அது நல்ல சகுனம் (நிமித்தம்)-உடனே அனுமன் சந்தித்தான்.அதே போல் சிலப்பதிகாரத்தில் மாதவிக்கு வலதுகண் துடித்தது-கெட்ட சகுனம் (நிமித்தம்).கோவலன் பிறந்தான் என்று சொல்லப்படுகிறது .மேலும் சிலப்பதிகாரத்தில் கோவலன் சிலம்பை எடுத்துக்கொண்டு விற்க புறப்படும்போது ,சகுனம் சரியில்லை என்று கண்ணகிக்கு பல அபசகுனங்கள் நேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.இதிலிருந்து இது தொன்றுதொட்டு நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாஸ்திரத்தில் என்பது புலப்படுகிறது.

மகரிஷிகள் ,” உலகத்திலுள்ள அனைத்திற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது .சம்பந்தம் இல்லாமல் எதுவும் இல்லை.நடைபெறுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் நேராகவோ ,மறைமுகமாகவோ சம்பந்தம் இருக்கத்தான் செய்கிறது.நடப்பவை எல்லாம் ஒரு கணக்கில் அடிப்படையில்தான் 


நடைபெற்றுவருகிறது.ஆகவே ஒன்றின் மூலம் மற்ற எல்லாவற்றையும் அறிய முடியும்.இதற்கு அதன் கணக்கு தெரியவேண்டும்.அதில் ஒன்றுதான் சகுனம்” என்று கூறுகின்றார்கள்.சகுனத்தில் ஏற்படுகின்ற செயலுக்கும் நாம் செய்யப்போகிற வேலைக்கும் ஏதோசம்பந்தம் இருப்பதால்தான் சகுன சாஸ்திரம் நமக்கு முன் கூட்டியே ,நாம் செய்யப்போகிற செயலுக்கான பலனை அறிவித்து விடுகிறது என்றும் முனிவர்கள் கருதுகிறார்கள்.

சகுனம் உண்மை ,அனால் அதன் பலனை அறிந்து நமக்கு விளக்கிக் கூறுபவர்கள் குறைவு .ஆகவே சில சகுனங்களின் பலனை புரிந்து கொள்ள முடியாமல் தவறாகஎண்ணி விடுகிறோம்.


கேரள மாநிலத்தில் ஜோதிடர்கள் பிரச்சனை காலங்களின்போது இத சகுன/நிமித்த சாஷ்திரத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.இந்த சகுன சாஸ்திரம் காட்டில் வேட்டையாட செல்பவர்களுக்கும் ,காட்டுவாசிகள் /மலைவாழ் ஜனங்களுக்கும் அன்றாட வாழ்க்கையில் உபயோகமாகிறது .இன்னும் நாட்டில் விலைவாசி நிலவரம் ,விவசாயம்,பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றங்கள் பலவற்றையும் முன்கூட்டியே இந்த சாஸ்திரத்தின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும் . 


தினமலரில் இருந்து :
இந்து மதத்தின் பல நெறிமுறைகளில் சகுனமும் நிமித்தமும் முக்கியமானவையாக இருந்தாலும்,   சில குறிப்பிட்ட சகுனத்தடை அல்லது நல்ல சகுனம் என்று பொதுவாகக் கருதப்படும் சில விஷயத்திற்கு  விளக்கங்கள்:
1. வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா?
இந்த விஷயம் சற்று சுவாரசியமானது. அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை என்று ஒன்று இருந்தாலும்விருந்தினர்கள் வந்தாலோ அதிகப்படி சமைக்க நேரிட்டாலோவீட்டின் கொல்லைப்புறத்தில் (முதல் கட்டுஇரண்டாம் கட்டு என்று கொல்லைப்புறம் பிரிக்கப்பட்டிருக்கும். முதற்கட்டில் கிணறு இருக்கும். குளிக்க வெந்நீர் போடுவதுதேவைப்பட்டால் அங்கே சமைப்பது - இவை நடக்கும். இரண்டாம் கட்டில் கழிவறைதோட்டம் இவை இடம்பெறும்)அதிகப்படி சமையலானால் அது முதற்கட்டில் (வெட்டவெளிதான்) நடக்கும். சாதம் தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்துசுற்றியுள்ள மரங்களில் அமரும் காக்கைகள் முதற்கட்டைச் சுற்றிச் சுற்றிக் கரையும். சமையலறையில் சமைத்தாலும்விருந்தினர் சாப்பிட்ட பின் மிச்சத்தை முதற்கட்டில் (சிலர் வீட்டை முதற்கட்டு என்றும்இதை இரண்டாம் கட்டு என்றும் சொல்வார்கள்) கொட்டுவார்கள். எப்படியோ சாதம் இரைவதைக் கண்டு காக்கைகள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காக்கைகள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர். இதுதான் நாளடைவில் தலைகீழாக மாற்றப்பட்டுகாக்கை கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகிறது.
2. வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வந்தால் அபசகுணம் என்று கூறுகிறார்களே இது உண்மையா?
பூனை என்கிற பிராணி எப்போது எப்படிப் பாயும் என்று எதிர்பார்க்க முடியாத குணாதிசயம் உள்ளது. நாய் என்றால்அது தெரிந்தவர்களிடம் வாலை ஆட்டிப் பின்தொடரும். தெரியாதவர்களைப் பார்த்துக் குலைக்கும். வெகு சில நாய்களே தெரியாதவரைக் கடிக்க முற்படும். ஆனால்பூனைஎதிர்பாராத வகையில் மேலிருந்து கீழும் குறுக்கேயும் ஆள்மேலேயே கூட பாயும். பாய்வது அன்பினாலும் இருக்கலாம். விரோதத்தினாலும் இருக்கலாம். அப்படி எதுவும் காரணமே இல்லாமல்கூட சடாரென்று பாயும் சுபாவம் பூனைக்கு. நாம் வெளியே செல்ல எத்தனிக்கும்போது அப்படிப் பூனை பாய்ந்தால் நாம் பயந்து விடலாம் அல்லது நமது மனநிலை ஏதோவொரு வகையில் பாதிக்கப்படலாம். இதை மனதில் வைத்துத்தான் பூனை குறுக்கே போவதை அபசகுனம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
3. நாம் வெளியே செல்லும் போது விதவைப் பெண் எதிரே வந்தால் அபசகுனமா?
அந்தக் காலத்தில்இந்தியாவில் மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பதை ஒட்டித்தான் இருந்தது. அதிலும்ஆண்வயதில் மூத்தவராக (குறைந்தபட்சம் ஏழு வயது வித்தியாசம் இருந்தது) இருந்ததால்கணவனை இழந்த பெண்கள் பெரும்பாலும் இளம் வயதுக்காரர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் பூபொட்டுவளையல்வண்ண உடைகள் எதுவுமே அணியக் கூடாது. வெள்ளைப் புடவை மட்டும்தான் உடுத்த வேண்டிய சமூகக் கட்டுப்பாடு. திருமணமான தம்பதிகளோஅலங்காரம் செய்து கொண்ட திருமணமான பெண்ணோ வெளியே போகும்போது இவர்கள் எதிர்ப்பட்டால்இந்த இளம் விதவைகளின் மனம் தனக்கு இந்த பாக்கியம் பறிபோனதே என்று வேதனைப்படும். அது ஏதோவொரு வகையில்இப்படி சந்தோஷமாக வெளியே கிளம்பும் பெண்/தம்பதி பேரில் லேசான பொறாமையாகவும் பிரதிபலிக்கலாம். அந்த உணர்ச்சி இவர்களைப் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும்அந்த விதவைப் பெண்மணிக்கு வேதனையைத் தரக் கூடாது என்று நினைத்துகொண்டு வரப்பட்ட சம்பிரதாயம். ஆனால் வேதனையைத் தவிர்ப்பதற்காக வந்த சகுன சம்பிரதாயமேஅந்த விதவைகளுக்கு மேலும் வேதனையைத் தருகிறாற்போல் ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் இந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பதில் அர்த்தமுமில்லைஅவசியமும் இல்லை.
4. சாலையில் செல்லும்போது எதிரே பிணம் எடுத்துச் சென்றால் பார்க்கலாமா?

இதன் அடிப்படையும் சுவாரசியமானது. நமக்குத் தெரிந்தவர் யாரேனும் இறந்துவிட்டால்நாம் அந்த மனிதரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடந்துசெல்வது வழக்கம். எதிரில் அப்படி ஒரு இறுதி ஊர்வலம் வந்தால்நல்லவேளை இறந்தவர் நமக்கு வேண்டியவர் இல்லை என்று சிறு நிம்மதியும் கொள்ளலாம். ஆகஊர்வலத்தின்பின் செல்லவேண்டி வந்தால் நாம் துக்கமாகவும்எதிரிலே வந்தால் சற்று நிம்மதியுடன் இருப்பதும் இயல்பு. இந்த மனநிலையைத்தான் காலப்போக்கில்எதிரே பிணம் வந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்..

சூரியனை பார்த்து நாய் குலைத்தால்..




“சகுனம் (நிமித்தம்) என்பது ஒருவரின் முற்பிறவியில் செய்த நல்ல மற்றும் கெட்ட கர்மாக்களை அனுசரித்து,என்ன நடக்கப்போகிறது என்பதை முன் கூட்டியே அறிவிக்கும்”-என்று “வராஹமிஹிரா’இயற்றிய “ப்ருஹத் ஸம்ஹிதை” என்ற நூல் கூறுகிறது.மேலும் ஒருவன் தான் தனியாகப் போகும்போது தோன்றும் சகுனம்,அவனை மட்டும்தான் பாதிக்கிறது.ஒரு படை (ராணுவம்)செல்லும் போது ஏற்படும் சகுனம்.அந்த நாட்டின் அரசனையும் பாதிக்கும்.பாலர் கூட்டமாக செல்லும்போது நிகழும் சகுனத்தின் பலன்,அந்தக் கூட்டத்தில் உள்ள முக்கியமான மனிதருக்கு (வயது, அறிவு, அந்தஸ்து அடிப்படையில்) பாதிப்பு ஏற்படும்.ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் நிகழும் சகுனத்தில் அல்லது நகரத்தின் தர்ம தேவதையின் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். இவ்வாறெல்லால் அந்த நூல் கூறுகிறது .

மேலும் கூறும்போது ஸ்ரீ வராஹமிஹிரர் –நாட்டில் ஏற்பட போகின்ற அரசியல் மாற்றம், விவசாயம்,பொருளாதார வளர்ச்சி மற்றும் நிகழக்கூடிய ஆபத்துகள் போன்றவற்றை,சில பறவைகள் மற்றும் பிராணிகளின் சலனத்தையும் அவை ஏற்படுத்தும் சப்தங்களையும் வைத்து சொல்ல முடியும் என்கிறார். உதாரணமாக நாய்,பசு,யானை போன்ற பிராணிகளின் சலங்களையும் (சேஷ்டைகளையும்), அதன் மூல நாம் அறியக்கூடிய பலன்களையும் பார்ப்போம் .

கிராமங்களில் நம் பெரியோர்கள்,யாரவது எந்த பயனுமில்லாமல் அளந்து திரிபவர்களை ‘நாய்க்கு வேலை இல்லை: நிற்க நேரமில்லை’என்று கூறிக்கொண்டிருப்பார்கள்.அதாவது ‘நாய் மாதிரி எந்த பயனுமின்றி ,அலைந்து திரிகிறாய் என்று பொருள்பட கூறுவது வழக்கம். ஆனால் நாய்க்கு நிறைய வேலை இருக்கிறது. அது மனிதனால் அறிய முடியாததை முன்கூட்டியே அறிந்து, நமக்கு அதன் சேஷ்டைகள் மூலம் தெரியப்படுத்துகிறது. சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்குத்தான் கஷ்டம் என்ற வசனகளையும் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் ஒரு நாய் (அல்லது பால் நாய்கள்) ஒரு நகரத்தின் அல்லது கிராமத்தின் நடுவில் நின்று கொண்டு , சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரியனைப் பார்த்து குரைத்தால், ஆட்சியாளர்கள் மாறுவார்கள் . அரசனுக்கு அனர்த்தகம்.

ஒரு நாய் சூரியனைப் பார்த்து ,தென் கிழக்கே நின்று கொண்டு குரைத்தால்நாட்டில் திருட்டு பயம்,நெருப்பினால் அழிவும் ஏற்படும் நண்பகலில் குரைத்தால், தீ விபத்தால் பாலர் இறந்து போவார்கள்.பிற்பகலில் குரைத்தால்கொலை கொடூரமான சண்டை (ரத்தவெள்ளம் )ஏற்படும். அந்திம நேரத்தில் குரைத்தால், விவசாயிகளுக்கு ஆபத்து நேரிடும் என்று நாய்களின் செஷ்டையினால் ஏற்படும் நிமித்தங்களை கூறுகிறார்.பசுவை பற்றி கூறுகையில்,ஒரு பசு சோர்வடைந்து பரிதாப நிலையில் காட்சியளித்தால் ,அரசனுக்குத் துக்கத்தைக் கொடுக்கும்.ஒரு காரணமுமின்றி ,உலகத்திற்கு துர்பிசஷாம்  ஏற்படப் போவதை முன் கூட்டி அறிவிக்கிறது.


யானையைப் பற்றி குறிப்பிடும்போது ஸ்ரீ வராஹ மிஹிரா ,யானை தந்தம் அதன் , இடது, வலது தந்தங்களின் லஷணம் ,அது உடைத்தால் இன்னின்ன பலன் என்பதையெல்லாம் கூறிய பின் ,ஒரு யானை தன நடை மாறி,நிலை தடுமாறி நடந்தாலும், திடீரென்று அதன் அசைந்து கொண்டிருக்கும் காதுகள் அசையாமல் நின்றாலும்,சோர்வடைந்து காணப்பட்டாலும் ,மூச்சுத்திணறி / மாறி பெருமூச்சுவிட்டுக் கொண்டோ,தூக்க கலக்கத்துடனும்,தாறுமாறாக சேஷ்டைகள் செய்து கொண்டும்,சரிவர உணவு அருந்தாமல் இருந்தால்,அது உலகத்திற்கு பெரிய ஆபத்தை முன்கூட்டி அறிவிப்பதாக ஆகும்.அது சந்தோஷத்துடன் காணப்பட்டு அதுவாகவே எறும்பு புற்றை இடித்து தள்ளியும்,பச்சை மரங்களையும் கிளைகளையும் ஒடித்தும் , ஆரவாரத்துடன் தன்  முகத்தை நிமிர்த்தி நடை போட்டுக்கொண்டு, தனது துதிக்கையை தன் வலது தந்தத்தை சுற்றிக்கொண்டு  காணப்பட்டால், அது தேசத்திற்கு பெரிய வெற்றியைக் குறிக்கும் .

முதலையால் ஒரு யானை நீர்நிலைக்குள் இழுத்து செல்லப்பட்டால், அரசனுக்கு அழிவையும், அதே சமயத்தில் முதலையை இழுத்துக் கொண்டு தண்ணீர்லிருந்து கரைக்கு அந்த யானை வந்து விட்டால் அரசனுக்கு சுபிஷத்தையும் கொடுக்கும்.

இதே போல் இன்னும் சில பிராணிகள் மற்றும் பறவைகள் அதன் சலங்கள் அதனால் ஏற்படும் நிமித்தங்கள். அது ஏற்படும் நேரம்,திசை, இடம் போன்றவைகளினால்அறியக்கூடிய பலன்களையும் விவரித்து கூறுகிறார் ஸ்ரீ வராஹமிஹிரா .

ஆகவே ஒவ்வொரு செயலும் ஒரு கர்மாவின் பலனாக ஏற்படுகின்றன. அதை பல வழிகளில் தெரிந்து கொள்ளமுடியும். அதில் ஒரு வழிதான் இந்த நிமித்த மற்றும் சகுன சாஸ்திரம் ஆகும்.

No comments:

Post a Comment