Wednesday, September 20, 2017

சடையம்மாள்(எ) கமலாம்மாள்




சடையம்மாள்(எ) கமலாம்மாள்
ஞானமான பெண்களை, உணராத உலகமாக மாறி கொண்டே வருகின்றது. பெண்களில் பலர் துறவிகளாக நம் தமிழகத்தில் அவதரித்து வந்துள்ளார்கள். சிலர் இல்லறத்தில் இருந்து சேவை செய்து, முக்தி அடைந்துள்ளார்கள். ஞானப்பாட்டி ஔவையைப் போன்று கமலாம்மாள் என்பவர் துறவியாக வாழ்ந்தார்.
சென்னையில் திருவொற்றியூரில் ஞானத்தாயாக விளங்கி அருள்புரியும் வடிவுடையம்மனை தொழுது கொண்டே பெண் துறவியாக வாழ்ந்துள்ளார் சடையம்மா. அம்மையார் கொண்டி தோப்பு பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார். அனுதினமும் தன் கைகளாலே வடிவுடையம்மனுக்கு மாலை கட்டி கொடுத்து வந்து, அருட்சேவை செய்து வந்துள்ளார். இவரின் சடையானது தரையில் பிரண்டு கொண்டே இருக்கும். மேலும் ஞானநிலையை உணர்ந்த அம்மா, தற்போது போயிங் சாலை என்று சொல்லப்படுகின்றது மாட்டுசந்தை பகுதியில், தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு சிறிய இடம் வாங்கி அங்கு வடிவுடையம்மன், கொடியுடையம்மன், திருவுடையம்மன் என்று மூன்று அன்னையரின் அழகிய சிலை செய்து, சிறிய ஆலயம் ஒன்றை நிறுவி அனுதினமும் பூஜித்து வந்தார். அங்கு ஒரு சிறிய அறையில் தவம் செய்த படியே வாழ்ந்தார். பல ஆன்ம அன்பர்கள் சடையம்மாளை வழிபட்டு மேன்மை பெற்றார்கள். சமாதி அடையும் நாளை முன்னரே உணர்ந்து, ஆலய பொறுப்புக்களை உடனிருந்த அன்பர் ஒருவருக்கு வழங்கி விட்டு, வரும் புரட்டாசி பௌர்ணமி அன்று தாம் சமாதி அடைவேன் என்றார். அதைப்போன்று தாயாரின் உடல் ஜீவ சமாதி நிலையை அடைந்தது. மூன்று நாட்கள் பக்தர்களின் பார்வைக்கும், அருளுக்கும் வைக்கப்பட்டு சமாதி செய்யப்பட்டது. இன்றும் அந்த சமாதி மிக சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது. சித்தர்களை உணராத பித்தர்கள்

2 comments: