அன்பர் ஆறகழூர் வெங்கடேசன் பொன் அவர்களின் விநாயகி திரு உருவப் புகைப்படத்திற்கான ஒரு பின்னூட்டம் .
ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானுக்குப் பல வடிவங்கள் உள்ளன. என்று விநாயகப் புராணம் கூறுகிறது. ஒவ்வொரு யுகத்திலும், விநாயகர் பல வடிவங்கள் தாங்கி அருள்புரிந்திருக்கிறார். அந்த வகையில் தான் ஏற்ற பெண் வடிவத்தால் அவர் விநாயகி என்றே அழைக்கப்பட்டார். இந்த விநாயகிக்கு, வட நாட்டில் தனிக்கோயில்கள் உள்ளன.
பெண் தோற்றத்தில்
தமிழகத்திலும் சில கோயில்களில் கோயில் மண்டபத்தூண்களில், பெண் உருவில் காட்சி தரும் விநாயகரைக் காணலாம்.
பெண் தோற்றத்தில் காணப்படும் விநாயகரை விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி கஜானனி, ஜங்கினி என்ற பெயர்களில் வழிபடுகிறார்கள்.
சமணர்களும், வைணவ சமயத்தினரும் இந்த விநாயகி திருவுருவத்தை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் விநாயகியின் திருவுருவச் சிலைகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் ஒரு தூணில் விநாயகி யின் சிற்பமுள்ளது. இது கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ளது. தலையில் வேலைப் பாடுடன் கூடிய அழ கிய மகுடம் விளங்கு கிறது. மேற்கைகளில் அங்குச- பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய- வரத ஹஸ்தங் களாக விளங்குகின் றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம். கழுத்தணியும் பூணூ லும் அழகு செய்கின் றன. கால்களில் சிலம் புகள். அழகாகக் கட்டப்பட்ட ஆடை யும் மேகலையும் அழகூட்டுகின்றன. இடப்புறம் திரும்பி பாதத்தைத் தொடுமளவு துதிக்கை நீண்டு விளங்குகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில்
குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிற்பம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், சுவாமி சந்நிதியின் நுழைவாயிலில் வடபுறமுள்ள தூணில் காணப்படுகிறது. இது நின்ற கோலம். தலையில் மகுடம்; சற்றே வலப்பக்கம் சாய்ந்து காணப்படுகிறது.
இதனைப் போன்ற மற்றொரு உருவத்தை சிதம்பரத்திலும் காணலாம். நின்ற கோலம்தான். வலக்கையில் பூங்கொத்து. இடக்கை தூக்கிய நிலை. கழுத்திற்குக் கீழ் கச்சையற்ற இரு நகில்கள். இடுப்பிற்குக்கீழ் புலியின் இடுப்பும் இரு கால்களும் உள்ளன. தூக்கிய வால். இத்தகைய யானைத் தலை, பெண் மார்பு- கை, புலியின் கால்பாகம் உடைய சிற்பங்களை சிற்ப நூலார் வியாக்ரபாத விநாயகி என்பார்கள்.
ராஜஸ்தான்
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலிலும் இத்தகைய பெண் வடிவில் அருள் புரியும் விநாயகி உள்ளார். இங்கு பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க வேண்டி பிரார்த்தனை செய்வர்.
விநாயகரின் இடது மடியில் சக்தி அமர்ந்திருக்கும் தோற்றத்தைத் தமிழகத்தில் சக்தி கணபதி என்று சொல்லப்படுகிறது. அதே போல் அவரது வலது இடது புறத்தில் அமர்ந்திருக்கும் தேவியர்களையும் தரிசிக்கலாம். இத்திருவுருவை சித்தி - புத்தி கணபதி என்று போற்றுவர். தமிழகத்தில் சில கோயில்களின் முகப்பில் சித்தி - புத்தியுடன் விநாயகர் சுதை வடிவில் இருப்பதைக் காணலாம். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலுக்கு நுழையும் பிரதான வாசலில், மாணிக்க விநாயகர் கோயில் முகப்பில் சித்தி- புத்தியுடன் கூடிய சுதை வடிவிலான திருஉருவைக் காணலாம்.
ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் கோயிலில் சித்தியுடன் அமர்ந்து தனிச் சன்னிதியில் விநாயகர் அருள்புரிகிறார். விநாயகருக்கு சித்தி - புத்தி என இரண்டு மனைவிகள் உள்ளதாக விநாயகப் புராணம் கூறுகிறது. இவர்களது திருமணம் சென்னை பாடியில் உள்ள திருவலிதாயம் எனப்படும், திருவலியநாதர் தலத்தில் நடந்ததாக தல வரலாறு கூறுகிறது. இத்தனை மெய்ப்படுத்தும் விதமாக திருவலிதாயநாதர் தலத்தில் சித்தி - புத்தியுடன் உற்சவ விநாயகர் அருள் புரிகிறார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமான தோற்றத்தில் விநாயகர் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில் கஜமுகாசுரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக விநாயகர், பெண்வடிவம் எடுத்ததாகவும், புராணம் கூறுகிறது.
மிக அபூர்வமாகக் காணப்படும் விநாயகியின் திருஉருவத்தைத் தரிசித்து வழிபட்டால் மனதில் உற்சாகமும், வீரமும் சிறந்து விளங்கும்.
சமண சமயத்தினர் தாங்கள் வழிபடும் யோகினிகளில் ஒன்றாக விநாயகியைக் கருதினர். சமணரின் பழஞ்சுவடி ஒன்று, மகாயோகி, சித்தயோகி, பிரிடாக்ஷி முதலிய யோகினிகளில் ஒன்றாக கணேசுவரியைக் கருதுகிறது. "சைனபிரபா சூரி' என்ற புகழ் பெற்ற பேராசிரியரால் கி.பி. 1306-ல் எழுதப் பட்ட "விதிப்பிரபா' எனும் நூலில் இத்தெய் வம் விநாயகி அல்லது வைநாயகி எனக் குறிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதத்தில் யானைத் தலையுடன் விளங்கும் இத்தாய்த் தெய்வம், "கணபதி ஹ்ருதயா' என்று குறிக்கப்பட்டுள்ளது. அமிர்தானந்தா என்ற பௌத்த மத அறிஞர், "தர்ம கோச சமக்கிரகா' என்ற நூலில் இத்தேவியைக் கீழ்க்கண்டவாறு குறிக்கிறார்:
இத்தெய்வத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்த பி.என். சர்மாவும், பேராசிரியர் எஸ்.கே. இராமச்சந்திர ராவும் விநாயகியைப் பற்றி விரிவான புராணங்களோ சிற்பக் குறிப்பு களோ இல்லை என்பர். வடமொழியில் ஸ்கந்த புராணத்தில் காசிக் காண்டத்தில் யோகினி களின் பட்டியலில் விநாயகி, கஜானனா எனும் பெயர்கள் காணப் படுகின்றன. அறுபத்தி நான்கு யோகினிகளின் பட்டிலில் விநாயகியும் காணப்படுகிறாள். யோகினி என்பவர்கள், அன்னை பார்வதி அசுரர்களை எதிர்த்துப் போரிடக் காளியாகச் சென்றபோது, அன்னையைச் சூழ்ந்து நின்று காளிக்கு உதவி யாக அசுரர்களை எதிர்த் தவர்கள். இந்த யோகினி கள் தாந்திரீக வழி பாட்டோடு சம்பந்தப் பட்டவர்கள் என்கிறார் ஜெ.என். பானர்ஜி.
கி.பி. 16-ஆம் நூற் றாண்டில் கேரளத்தில் தோன்றிய ஸ்ரீகுமாரர் என்பவரால் எழுதப் பட்ட "சிற்ப ரத்தினா' என்ற சிற்ப நூல் சக்தி கணபதியைப் பின்வருமாறு குறிக்கிறது:
"சக்தி கணபதிக்கு யானைத் தலை, பருத்த வயிறு, செந்தூர வண்ணம், நன்கு அமைந்த பிருஷ்டகம், மார்புகள், இளமைத் துடிப்புடைய பெண்ணுருவம்.'
"இடப்புறம் திரும்பிய யானைத் தலை, இரு கைகள், வலக்கையில் பெரிய தாமரை மொட்டு, தொங்கிய இடக்கை, கச்சுடன் விளங்கும் ஸ்தனங்கள், இடுப்பிற்குக்கீழ் புலியின் கால்பாகம், நிமிர்ந்து சுருண்ட வால்' என்னும் அமைப்புடைய இத்திருவுருவை கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக எ.வி. ஜெயச்சந்திரன் குறிக்கிறார்.
"கணபதி ஹிருதயா, ஏகமுகா, துவிபுஜா, வரதா
அபயா நிரித்யாசனா'.
அதாவது கணபதி ஹ்ருதயாவிற்கு ஒரே முகம், இரண்டு புஜங்கள், வரத- அபய முத்திரைகள், நடன நிலை என்பதாகும்.
அன்பர்களே ,அடியேனுக்கு கிடைத்த தரவுகளைக் கொண்டு இந்த விளக்கத்தினைத் தந்துள்ளேன் .வேறு கருதுகோள்கள் இருப்பின் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .
புகைப்படங்கள் ===
௧ . அன்பர் ஆறகழூர் வெங்கடேசன் பொன் அவர்கள் பகிர்ந்த விநாயகி சிற்பம் .இத்தகைய யானைத் தலை, பெண் மார்பு- கை, புலியின் கால்பாகம் உடைய சிற்பங்களை சிற்ப நூலார் வியாக்ரபாத விநாயகி என்பார்கள்.
௨ . விநாயகியின் திரு உருவம் கேரளா சேரியநாடு [ Cheriyanad] கோயிலில் உள்ளது .
௩ . விநாயகி பத்தாம் நூற்றாண்டு ,பீகார் . தற்பொழுது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது .
௪ . விநாயகி , புலேஸ்வர் கோயில் ,பூனா ,
௫ . விநாயகி ,ஹீராப்பூர் யோகினி கோயில் ,ஒடிசா .
௬ . மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், சுவாமி சந்நிதியின் நுழைவாயிலில் வடபுறமுள்ள தூணில் உள்ள விநாயகி .
௭ . விநாயகி ,பிராகாட் , ஜபல்பூர் ,மத்திய பிரதேசம் பத்தாம் நூற்றாண்டு .the Ibhangana-Vinayaki, called 'sri aingini', Bheraghat, Jabalpur, MP ~10thC
பிற புகைப்படங்கள்
No comments:
Post a Comment