அயனாம்சம் ஒரு பார்வை
(C.S.Mallish Kumar) thanks for fb
"ஜோதிடம்" என்றால் ஜாதக பலன், ராசி பலன், குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி, ஏழரை சனி, அஷ்டம சனி என்றுதான் பாமர மக்களுக்கு தெரியும். ஆனால் அதனுள் இருக்கும் நுட்பமான விசயங்களை ஜோதிடர்கள் நன்கறிவர். காரணம், இன்றைய ஜாதக கணிதத்திற்கு பயன்படுத்தும் பஞ்சாங்கம் நபருக்கு நபர் வேறுபடுகிறது. ஏனெனில், நடைமுறையில் இருக்கும் வெவ்வேறான அயனாம்சங்களே இதற்கு காரணம். உதாரணமாக,
1. நிராயன வாக்கிய பஞ்சாங்கம் (Vakya Panjangam)
2. நிராயன திருகணித பஞ்சாங்கம் (Drik Panjangam)
3. சாயன மேற்கத்திய ஜோதிடம் (Western Zodiac)
மேலை நாடுகளில் சாயன முறையும் (Tropical system); இந்தியாவில் நிராயன முறையும் (Sidereal system) பயன்பாட்டில் இருந்தாலும், நிராயனத்தில் "வாக்கியம் - திருகணிதம்" என இருவேறான கணிதமுறைகள் உண்டு. இம்மூன்று முறைகளிலும் வேறுபடும் காரணியான பூமியின் சாய்மானம் எந்த கோணத்தில் இருக்கிறது என்கிற "அயனாம்ச" கணிதமே ஜோதிடத்தின் 'அச்சாணி' ஆகும். ஏனெனில் அயனாம்சத்தைப் பொருத்தே கிரகங்களின் நகர்வு, வேகம், கோணம், பாகை என அனைத்தின் துள்ளியமும் இருக்கிறது.
அதாவது, புவியின் சுற்றுரேகை (Ecliptic) மற்றும் சாய்வு ரேகை (Celestial equator) இரண்டும் வெட்டும் புள்ளி (Vernal eqinox) மேஷத்தின் ஆரம்புள்ளியில் இருந்து எவ்வளவு தூரம் நகர்ந்துள்ளது என்பதே தற்போது புவியின் சாய்மான "அயனாம்ச" கோண அளவாகும். Vernal equinox அன்று (March 20, 2020) பூமியில் இரவு / பகல் சமமாக இருக்கும்
சாயன முறையில் சூரியனை மையமாக வைத்து நகரும் புள்ளியைக் (moving zodiac) கணக்கிடுவதால் ஒரே ஒரு அயனாம்சம் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது; மாறாக நிராயன முறையில் புவியை மையமாகக்கொண்டு அஸ்வினி-மேஷத்தை நிலையான ஆரம்பப் புள்ளியாகக் (fixed zodiac) கணக்கிடுவதால், காலப்போக்கில் பூமியின் கோண வேறுபாட்டைப் பொருத்து வாக்கிய முறையில் சில அயனாம்சங்களும்; திருகணித முறையில் எண்ணிலடங்கா அயனாம்சங்களும் நடைமுறையில் உள்ளது. வாக்கியத்தில் சூர்ய சித்தாந்த அயனாம்சமும்; திருகணிதத்தில் லஹிரி அயனாம்சமும் பயன்படுத்தப்படுகிறது. எனில், இந்த அயனாம்சங்கள் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றால்,
1. ராசி சக்கரத்தின் ஆரம்பப் புள்ளி (Meshadhi zero point)
2. பூமி சூரியனை சுற்றிவரும் பாதை மாறுபாடு (Eccentricity)
3. பூமியின் சாய்வு கோணம் (Obliquity)
4. அயனாம்சம் மொத்த சுற்றுகாலம் (Axial precession year)
5. பூஜ்ஜிய அயனாம்ச வருடம் (Zero ayanamsa year)
6. பூமியின் அச்சு/சாய்மானம் வெட்டும் புள்ளி (Vernal equinox point)
7. புவியின் தள்ளாட்டம் ஒரு பாகையில் நகரும் காலம் (Wobbling 1 deg/yr)
8. தள்ளாட்டத்தின் அதிகபட்ச கோணம் (Maximum wobbling angle)
9. தள்ளாட்ட கால வேறுபாடு (Axial precession time)
Precession time என்பது புவியின் கோணம், வேகம் மற்றும் சுற்றும் பாதையைப் பொருத்து அளவில் வேறுபடும். பூமியின் சாய்மானம் பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து அதிகபட்சமாக 27 பாகை வரை சென்று மீண்டும் பூஜ்ஜிமாகும் நிகழ்வு 3600 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாக "சூரிய சிந்தாந்தம்" கூறுகிறது. ஆனால், இந்த தள்ளாட்ட வேறுபாடு 360 பாகைகள் முழுவதும் நிகழும் காலம் ஒவ்வொரு முறையிலும் வேறுபடுகிறது.
1. சூரிய சித்தாந்தம் 21,600 வருடங்கள்
2. ஶ்ரீயுக்தேஸ்வர் 24,000 வருடங்கள்
3. சாயன/நிராயன 25,771.5 வருடங்கள்
அதுபோல பூமி சூரியனை சுற்றிவரும் ஒரு வருட காலம் ஒவ்வொருவரின் கூற்றிலும் வேறுபடுகிறது:−
1. பழைய சூர்ய சித்தாந்தம் 365.25875 days
2. புதிய சூர்ய சித்தாந்தம் 365.258756 days
3. வராகிமிரனின் சித்தாந்தம் 365.25875 days
4. ஆரய்பட்டா அர்த்தராத்ரிகா 365.25875 days
5. ஆர்யபட்டா சித்தாந்தம் 365.25868 days
6. பிரம்மகுப்தா 365.2584375 days
7. தாலமி நிராயன 365.256813 days
8. தற்கால நிராயன 365.2563624 days
9. சாயன 365.24219 days
10. ஹிப்பார்கஸ் 365.24667 days
11. Anomalistic year 365.25963 days
இவற்றிற்கெல்லாம் மேலாக, தற்போது 24 பாகை சாய்மானத்தில் இருக்கும் பூமியின் பூஜ்ஜிய அயனாம்ச வருடம் குறித்து 'சூர்யசித்தாந்தம்' முதல் தற்போதுவரை வெவ்வேறான கருத்துக்கள் நிலவுகிறது.
1. De Lice 1 B.C
2. Galactic centre 69 A.D
3. Cyril Fagan 213 A.D
4. Aldebran 15 Taurus 220 A.D
5. Fagan / Bradley 221 A.D
6. Babylonian, Huber 229 A.D
7. Chandra Hari 233 A.D
8. Old Surya Siddhanta 238 A.D
9. N.C. Lahiri 285 A.D
10. K.S. Krishnamurthy 291 A.D
11. B.V. Raman 397 A.D
12. Sepharial 498 A.D
13. Aryabhata 499 A.D
14. Yukteshwarar 499 A.D
15. Varahimira 505 A.D
16. Grahalaghava/Munjala 522 A.D
17. Bhaskara 523 A.D
18. Laghumanasa/Kapileshwara 527 A.D
19. Hipparchos 545 A.D
20. Ushashashi 559 A.D
21. Sassanian 564 A.D
இதுபோல இன்னும் பலரின் கருத்துக்களும் உண்டு. அளவீட்டில் இத்தகைய மாறுபாடுகள் இருப்பதனால் அயனாம்சங்களும் மாறுபட்டே இருக்கிறது. அதில் அவரவருக்கு ஏற்புடையதைப் பயன்படுத்தி பலன் சொல்லி வருகின்றனரே, தவிர சொல்லும் பலனை வைத்து இதுதான் சரியென யாராலும் நிரூபிக்க இயலாது. காரணம், மூன்று முறைகளிலும் சரியாக பலன்கூறும் ஜோதிடர்களும் உண்டு. இதிலிருந்து எம்முறையும் முற்றிலும் தவறில்லை, மாறாக 100% துல்லியமும் இல்லை என்பது ஆய்வின் முடிவாகும்!
C.S.#மல்லீஸ்குமார் / #சென்னை
அயனாம்சத்தை யாரும் சரியாகக் கணக்கிட முடியாது. இதனால் சாதகக் கணிப்பு சரியாக இருக்காது. ஒரு குழந்தை பிறந்த நேரத்துக்கும் இன்னுமொரு குழந்தை பிறந்த நேரத்துக்கும் 4 நிமிட வித்தியாசம் இருந்தாலே கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் இருப்பு மாறும் என்றால் வெவ்வேறு அயனாம்சத்தில் காணப்படும் வித்தியாசம் சாதகக் கணிப்பில் தவறு நேர்ந்துவிடும்.
ReplyDeleteஉங்களின் ஜாதகம் துல்லியமான திருக்கணித முறையில் அமைக்கப்பட்ட சிறந்த முறையில் ஆன்லைனில் சேவை வாங்கி வருகிறோம் .www.onepagehoroscope.com
ReplyDelete