இறப்பு தீட்டு விபரங்கள் யதுர்வேத அபர பிரயோகம் தேடலில் கிடைத்தது
Thank kuhan sarma
சாஸ்திரப்படி பெண்கள் தங்களின் பெற்றோர்களுக்கு இறுதி சடங்கு, காரியம் செய்ய முழுஉரிமை உண்டு
பெண்களை காரியம் செய்யாமல் தடுப்பது மகாபாவகரமான செயல்
நல்ல பக்குவமும், வயதும் உடைய பெண் தங்கள் பெற்றோர்களின் இறுதிசடங்கு காரியம் செய்வதுதான் சரியானது இதை தடுப்பது மகா பாவகரமான செயல்.
மருமகள் அவளின் தாய்-தகப்பனாருக்கு இறுதிசடங்கை செய்வதை தடுப்பது மகா பாவகரமான செயல். திருமணத்திற்கு முன்னபே நன்கு தெரியும் அவர்கள் வீட்டில் ஆண் இல்லை என்று அந்த நிலையில் சாஸ்திரப்படி உரிமை உடைய மகளை தடுப்பது தர்மம் அல்ல
இன்னும் சிலர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மகளை இறுதிச்சடங்கு செய்ய தடுக்கிறார்கள்.
சகோதரன் இல்லாத பெண்கள் திருமணத்திற்கு முன்னதாகவே மணமகன் வீட்டினரிடம் இந்த விஷயத்தை பேசுவது நல்லது
யஜூர் வேதம் - ஆபஸ்தம்ப சூஸ்திரம் சாஸ்திரப்படி பெண்களுக்கு முழுஉரிமை தரப்பட்டுள்ளது ( வைதியநாத தீக்ஷியம் தர்ம சாஸ்திர நூலை பார்வை இடவும்)
பெண்கள் தயங்காமல் தங்கள் பெற்றோர்களுக்கு இறுதி சடங்கை செய்ய முன்வருவது நல்லது.
பெண்கள் சுடுகாட்டுக்கு வரக்கூடாது, காரிய மண்டபத்திற்கு வரக்கூடாது என்பதெல்லாம் சிறுவயது பெண்குழந்தைகளுக்கு வேண்டுமென்றால் ஏற்கலாம். ஆனால் வயது வந்து பக்குவமடைந்த ஒரு பெண் இன்னும் சொல்லப்போனால் திருமணம் ஆன மகள் வரக்கூடாது என தடுப்பதை ஏற்கமுடியாது
பாவத்திலும் பாவம் இறுதி சடங்கை மகள் செய்யக்கூடாது எனும் வாதம் ஆகும்.
தர்ம சாஸ்திரத்தில் ஆண் பெண் எனும் பாகுபாடு கூறப்படவில்லை. பெண்ணுக்கு "தீட்டு நாள்" தவிற மற்ற நாட்களின் பூஜை, இறுதி சடங்கு செய்வதில் எந்த தடையும் இல்லை
பெண் குழந்தை பெற்றவர்கள் எல்லாம் அனாதைகளைப்போலும் ஆண் குழந்தை பெற்றவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் போன்று சித்தரிப்பது ஒரு "ஆண்ஆதிக்க நிலை" வக்கிர புத்தியாகும்.
தொப்புள் கொடி உறவிற்குத்தான் அதிக பாசமும் அன்பும் இருக்கும் அப்படிப்பட்ட மகள் இறுதிச்சடங்கை செய்வதுதான் அந்த ஆத்மாவிற்கு திருப்தி அளிக்கும் ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் பெண்தான் கடமைப்பட்டவள்
மேலும் தொடர்ச்சியை கீழ்கண்ட இணைய இணைப்பில் பார்வையிடவும்
http://www.prohithar.com/women-right.html
No comments:
Post a Comment