Wednesday, June 21, 2023

புருஷா என்கிற புருஷ மிருகம்


Thanks FB


அவனே இவன்
ஹரியும் சிவனும் ஒன்றே 3a
புருஷா என்கிற  புருஷ மிருகம் 

தருமர் ராஜகுரு யாகம் செய்ய விரும்பினார்.

அந்த யாகம் நடத்த புருஷா மிருகத்தின் பால் தேவைபட்டது.

புருஷா மிருகம்
மனித முகத்தையும் சிங்க உடலையும் 
கொண்ட மிருகம்.

இந்த புருஷா மிருகம் சிவனின் மேல் அதீத பக்தி கொண்டது.
ஸ்ரீ மகாவிஷ்ணுவை அதற்கு பிடிக்காது.

குபர வனத்தினை பாதுகாக்கும் வேலையை இந்த புருஷா மிருகம் செய்கின்றது.

சிவன் விழாக்காலங்களில்
இந்த புருஷா மிருகத்தின் வாகனத்தின் மீது அமர்ந்து வீதியுலா வருவதை காணலாம்.

பதினாறு வகையான தீப வழிபாடுகளில் 
இந்த புருஷா மிருக தீப வழிபாடும் உள்ளது.

மூன்று கதைகள் புருஷா மிருகத்தினை
மையமாக வைத்து இருக்கிறது.

கதை 1

காசியில் புருஷ மிருகம் சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தது.

மதுரைக்கு அருகே திருவாதவூரில் கடும் வறட்சி ஏற்பட்டது.

ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் வறட்சியை போக்கி மழை பெய்ய வைக்க வேண்டினர்.

காசியில் இருக்கும் புருஷ மிருகத்தை அழைத்து வந்து யாகம் செய்தால் மழை பெய்யும்,
புருஷா மிருகத்தினை பீமன் அழைத்தால் வரும் என கூறினார் ஸ்ரீமகாவிஷ்ணு.

மக்கள் பீமனிடம் வேண்டினர்.

பீமன் புருஷா மிருகத்தினை திருவாதவூர் அழைத்து வந்து யாகம் செய்தார்.

மழை பொழிந்தது. 

வறட்சி நீங்கியது.

தான் வந்த வேலை முடிந்து விட்டது 
நான் திரும்ப காசி போகிறேன் என்று சொன்ன புருஷா மிருகத்திடம்
நீ இந்த ஊரின் காவல் தெய்வமாக இரு என்றார் ஸ்ரீ மகாவிஷ்ணு.

அதன்படி இந்த ஊரின் காவல் தெய்வம் ஆனது.

திருவாதவூரில் உள்ள சிவபெருமானை 
பிரம்மாவின்  சத்திய லோகத்தில் இருந்து புருஷா மிருகம் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாக தலபுராணம் தெரிவிக்கின்றது.

அந்த கோவில் தீர்த்தம் 
புருஷா தீர்த்தம்
புருஷா மிருகத்தினால் உருவாக்கப்பட்டது..

புருஷா மிருகம் இந்த ஊர் கண்மாயின்
கரையில் உள்ள இரண்டு பெரிய கல் தூண் மேல் இருந்து இந்த ஊரை காக்கிறார். 

பீமனும் புருஷா மிருகமும் நண்பர்களான கதையும்,
சிவபெருமான் தவிர்த்து மற்றவர்களை வணங்காத புருஷா மிருகம்  மகாவிஷ்ணுவை வணங்கியவை  அடுத்த பதிவுகளில்...

தொடருவோம்...

Thursday, June 15, 2023

அறுபது 60 வயதில் என்ன விசேஷம்


#அறுபது_வயதில்_என்ன_விசேஷம்

ஜன்ம வருஷம் என்பது பிரபவாதி 60 வருஷங்களில், தான் பிறந்த வருஷம் மீண்டும் வருவது. சான்றாக ஒருவர் ஸர்வதாரி வருஷத்தில் பிறந்தால், 60வருஷம் கழித்து அடுத்த ஸர்வதாரி வருஷம் ஜன்ம வருஷம்.
ஒரு வருஷகாலம் சென்றால் ஒரு வயது நிறையும். 60 வருஷம் (வயது) நிறைவடைவதை ஷஷ்டிதமாப்த பூர்த்தி (ஷஷ்டிதம 60ஆவது) எனப்படும். இரண்டும் ஒன்றுதான். 60 ஆண்டு முடிவுற்று 61 ஆவது ஆண்டு ஜன்ம மாதத்தில் ஜன்ம நக்ஷத்ர நாளன்று செய்வதே ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி.

“ஜன்மதினாத் ஆரப்ய ஷஷ்டதம ஸம்வத்ஸரே ஜன்ம மாஸே ஜன்ம நக்ஷத்ரே”
“ஜன்மாப்தே ஜன்ம மாஸே ச ஜன்மர்«க்ஷ வா த்ரிஜன்மஸ§”

என்றார் போதாயனர். இந்த வசனப்படி, ஜன்ம நக்ஷத்ரத்தன்று ஏதாவது அசௌகர்யத்
தால் சாந்தியை நடத்த முடியாவிடில் அதிலிருந்து 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யலாம். ஜன்மானு ஜன்மம் அதாவது கேட்டை முதல் நக்ஷத்ரமானால் ரேவதி 10ஆவது நக்ஷத்ரம். ஆயில்யம் 19ஆவது நக்ஷத்ரம். இதை அனுசரித்தே திருநெல்வேலி ஜில்லாவிலும் கேரள தேசத்திலும் ஸெளரமான ரீதியாக ஒரு மாதத்தில் இரண்டு ஜன்ம நக்ஷத்ரங்கள் வந்தால் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் பிறந்தநாள் வைபவம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு சாஸ்த்ர ப்ரமாணமும் உள்ளது.

இவ்வாறு செய்தால் தான் முதல் நக்ஷத்ரத்தில் செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யமுடியும். பின்னால் வரும் நக்ஷத்ரத்தில் செய்வது என்று வைத்துக் கொண்டால் அன்று செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10 அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்ய முடியாது. ஏனெனில் அப்போது அடுத்த மாதம் வந்து விடும். பங்குனி மாதமானால் வருஷமே மாறிவிடும். எனவே ஜன்ம வருஷத்தில் ஜன்ம மாதத்தில் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் தான் சாந்தி கர்மாவைச் செய்து கொள்ளவேண்டும். சௌனகர் வசனப்படி ஸ்த்ரீகளும் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி செய்து கொள்ளலாம்.

ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என நாம் கூறினாலும் ரிஷிகள் (சௌனகர், போதாயனர்) உக்ரரத சாந்தி என்ற பெயரால் அழைக்கிறார்கள். (உக்ரரதோ ம்ருத்யு ரூபோ கர்த:- உக்ரரதம் எனில் ம்ருத்யு ரூபமான பெரும் பள்ளம் (பாழும் கிணறு)) இந்த சாந்தி செய்யும் முறை பல பிரகாரமாக பல மஹரிஷிகளால் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று சிறிது மாறுதல் இருந்தாலும் பொதுவாக முக்கிய கர்மாவில் மாற்றமில்லை. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸ§மாகரம் ஆகிய க்ரந்தங்களில் சௌனகோக்த ப்ரயோகம் உள்ளது. மதுரைக்கு வடக்கே சௌனகோக்த ப்ரகாரமே அனுஷ்டிக்கப்படுகிறது. திருநெல்வேலி, கன்யாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய தென் பிரதேசங்களில் பெரும்பாலும் ரோமச மஹரிஷி கூறிய பிரகாரம் நடந்து வருகிறது. ரிக்வேதிகள், ஆபஸ்தம்ப ஸ¨த்ரிகள் பலர் பல ஸாமவேதிகள், போதாயன ஸ¨த்ரிகள் எல்லாரும் இந்த முறையையே பின்பற்றுகின்றனர். சில ஸாமவேதிகள் மட்டும் கௌதமர் கூறிய முறைப்படி நடத்தி வருகின்றனர்.

ரோமசர் முறையில் மத்தியில் 3 கும்பங்கள், திக்பாலக கும்பங்கள் 8 ஆக மொத்தம் 11 கும்பங்கள், மத்தி மூன்றில் நடுவில் ம்ருத்யுஞ்ஜயர், தென்புறம் ம்ருத்யு, வடபுறம் நக்ஷத்ரதேவதை. அஷ்டதிக் பாலகர்கள் வருமாறு: இந்திரன்(கிழக்கு); அக்னி (தென்கிழக்கு); யமன் (தெற்கு); நிர்ருதி (தென்மேற்கு); வருணன் (மேற்கு); வாயு (வடமேற்கு); ஸோமன் (வடக்கு); ஈசானன் (வடகிழக்கு).

முதலில் விக்னேச்வர பூஜை. பின் விசேஷமாக சங்கல்பம், பூர்வாங்க வைதிக கட்டங்கள், புண்யதீர்த்தம் நிரம்பிய கும்ப ஸ்தாபனம், அந்தந்தக் கும்பங்களில் அந்தந்த தேவதைகள் த்யானம், ஆவாஹனம், ஷோடசோபசார பூஜை, உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள், ஜபம், ஹோமம், அபிஷேகம், தசதானம் பஞ்சதானம் மற்றும் இஷ்ட தானங்கள், சாஸ்த்ர சம்பந்த மில்லாவிடினும் சம்ப்ரதாயத்தில் உள்ள மாங்கல்ய தாரணம், அக்ஷதை ஆசீர்வாதம் முதலிய காரியக்ரமங்கள் முறையாகவும், ச்ரத்தையுடனும் செய்யப்பட வேண்டும். ரித்விக் ப்ராம்ஹணர்கள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து, மித்ரர்கள் செய்யவே கூடாது. ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தப்பின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.

60வயது வரை வாழ்வது என்பது வாழ்க்கைப் பயணத்தில் பாதிவழி கடப்பது போலாகும். மீதிப்பயணத்தையும் வெற்றிகரமாகக் கடந்து பரப்ரம்ஹ லக்ஷ்யத்தை அடைய ஈச்வரனின் அனுக்ரஹத்தையும், தேவர்களின் அருளாசிகளையும் வேண்டி 60 வயது நிறைந்து 61 வயது தொடங்கும் நாளன்று ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி செய்துகொண்டு பாபங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள், மரணபயமின்மை, உடல்நலம், ஐச்வர்யம் யாவும் பெற்றுப் பல்லாண்டு வளமுடன் வாழ்வோமாக.

ஏவம் ய: குருதே சாந்திம் தீர்கமாயுச்ச விந்ததி |
தஸ்ய ம்ருத்யயுபயம் நாஸ்தி ஸ§கீ பவதி நாரத ||

இவ்வாறு பலச்ருதியுடன் ஹேமாத்ரி தன் தர்மசாஸ்த்ர நூலில் ரோமச மஹரிஷி கூறிய ஷஷ்டிதமாப்தபூர்த்தி சாந்தி விதியில் கூறி முடிக்கிறார்.

எண்பது வயதில் என்ன விசேஷம்? - சதாபிஷேகம்:

சதாபிஷேகம் என்ற சொல் நூறு வயதில் அபிஷேகம் எனப்பொருள்படும். ஆனால் 100 வயது வரை வாழ்வது மிக அரிது என்பதால் பல ரிஷிகள் நம் மீது கருணைகூர்ந்து 1000 சந்த்ர தர்சனம் செய்தவர் (சஹஸ்ரசந்த்ர தர்சீ) ஆயிரம் பிறை கண்டவர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இங்கே சந்திர தர்சனம் என்பதை பௌர்ணமி பூர்ண சந்திரனைப் பார்ப்பது என்று கருத வேண்டும். (ஆனால் அமாவாஸ்யை கழிந்து சுக்ல த்விதியை திதியில் மூன்றாம் பிறைச் சந்திர தர்சனம் செய்வது விசேஷம். ஏனெனில் இந்த மூன்றாம் பிறையே பரமசிவனின் சிரசை அலங்கரித்து அவருக்கு சந்திரசேகரன், சந்திரமௌலி எனப்பெயர் பெற்றுத்தந்தது.) இப்போது ஒருவர் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்து கொள்வது எப்போது எந்த வயதில் என்று பார்ப்போம்.

சாஸ்த்ரக் கணக்கு:

விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்) பின் வருமாறு உள்ளது.

“அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே |
பஞ்சமே பஞ்சமே வர்ஷே த்வெள மாஸெள அதி மாஸகொ இதி (மஹாபாரத) வசனாத் த்வாத்ரிம் சத் அதிக மாஸா: (32) ஸந்தி |
தாவந்த இந்த வச்ச பவந்தி | அத: ஸ த்ருஷட ஸஹஸ்ர சந்த்ரோ (968+32=1000) ப வதி |”

ஆக வைகானஸ க்ருஹ்ய ஸ¨த்ரப்படி 80 வருஷங்களும் 8 மாதங்களும் நிறைந்தவர் ஸஹஸ்ர சந்திர தரிசனம் செய்தவர் ஆவார். மேலும் காலவிதானம் என்ற ஜ்யோதிஷ சாஸ்த்ர நூல் சதாபிஷேக காலத்தை முடிவாக நிர்ணயிக்கிறது.

“தசஹதவஸ§ ஸங்க்யே சார்கவர்ஷே அஷ்டமாஸே
தசசத சசி த்ருஷ்டிர் ஜாயதே மானவானாம் |
ரவி சசி கதிபேதை: பஞ்சமே பஞ்சமே அப்தே
பவதி யததிமாஸ த்வந்த் வமேதத் ப்ரமாணம் ||

மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 வருடங்களுக்கு 80ஜ்12 =960 பௌர்ணமிகள்.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 2 அதிமாஸங்கள் ஏற்படும். (மஹாபாரதவசனம்; காலவிதான ஜோதிட நூல் நிர்ணயம்) 80 வருடத்தில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ஜ்2=32 அதிகப்படி பௌர்ணமிகள், மேலும் 8 மாதங்களுக்கு 8 பௌர்ணமிகள்,
ஆக: 80 வருடம் 8 மாதம் =(80ஜ்12)+(16ஜ்2)+8
=960+32+8=1000 பௌர்ணமிகள் (சந்த்ரதர்சனங்கள்).

விஞ்ஞானக் கணக்கு:
இரு பௌர்ணமிகளுக்கிடையே உள்ள காலம் 29.5306 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 29530.6 நாள்கள். ஒரு வருஷத்திற்கு 365.256 நாள்கள். 80 வருடத்திற்கு 80ஜ்365.256 =29220.48 நாள்கள்.
1000 பௌர்ணமிக்கு 80 வருடத்தை விட அதிகப்படியான நாள்கள் =29530.0 -29220.48 =310.12 நாள்கள்.
எனவே 1000 பௌர்ணமி காண 80 வருடமும் 310 நாள்களும் அதாவது 80 வருடம் 10 மாதம் ஆகிறது.
சிசு பிறந்து மூன்றாம் மாதத்தில் சூர்யனையும், நான்காம் மாதத்தில் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டுமென்கிறது ஜோதிடநூலாகிய காலவிதானம்.

துண்டு விழும் இந்த 4 மாதத்தை 80 வருடம் 8 மாதத்துடன் கூட்டினால் 81 வயது நிறையும் போது சதாபிஷேக காலம் சரியாக வரும்.
எண்பத்தொன்றில் நூறும்! ஆயிரமும்!!
81 வயது பூர்த்தி ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்வதானால் விசேஷமாக கவனிக்க வேண்டாம். திதி, வார, நக்ஷத்ர தோஷங்கள் இல்லை. 80 வருடம் 8 மாதங்களில் ஆயிரம் பௌர்ணமி கண்டபின், உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் (காலவிதான வாக்யப்படி) ரோஹிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி, சதயம், திருவோணம், ஹஸ்தம் ஆகிய 8 நக்ஷத்ரங்களில் ஏதாவதொன்றில் சுபவாரத்தில் சுப திதியில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். 81ஆவது வயதில் அல்லது பின்னர் சதாபிஷேகம் செய்யலாம். இதற்கு முன்னர் செய்யவே கூடாது. ஸஹஸ்ர சந்தரதர்சி ஆகமாட்டார்.

(இந்த சாஸ்த்ர, விஞ்ஞானக் கணக்குகளை நம்பாதவர் பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, தான் பிறந்தத்தி
லிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக ஆயிரம் பௌர்ணமி எண்ணிச் சரிபார்க்கலாமே! நாம் நம் கண்களால் ஆயிரம் முழுநிலவைப் பார்த்தோமா என்கிற சந்தேக ப்ராணிகளுக்கு ஒரு வார்த்தை. நாம் பார்க்காவிட்டாலும், சர்வ வ்யாபியும் ஸாக்ஷியுமான சந்திர பகவான் நம்மை எப்போதும் பார்க்கிறாரே!)

சதாபிஷேகச் சிறப்பு:

த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிடம் “தங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை வணங்குகிறீர்கள்?” என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியுள்ளார்.
நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ

வேதாந்தவித் சந்த்ரஸஹஸ்ரதர்சீ |
மாஸோபவாஸீ ச பதிவ்ரதா ச
ஷட் ஜீவலோகே மம வந்தனீயா: ||

நித்யான்ன தாதா: தினமும் அன்னதானம் செய்பவன், ஸ்நானம், ஸந்த்யா, காயத்ரீ முதலான ஜபம், ஒளபாஸனம் தேவபூஜை, வைச்வதேவம் ஆகிய ஷட்கர்மாக்களைச் செய்தபின், அதிதிக்கு அன்னமிடுபவன்.

தருணாக்னி ஹோத்ரீ: இளம் வயதிலேயே விவாஹம் செய்து கொண்டு அக்னி ஹோத்ரம், ச்ரௌத கர்மாக்கள் ஆகியவற்றைச் செய்பவன்.

வேதாந்த வித்: வேதம், வேதாந்தம், சாஸ்த்ரம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவன்.
சந்த்ர ஸஹஸ்ரதர்ஸீ: 1000 பூர்ண சந்திரர்களைப் பார்த்தவன்

மாஸோபவாஸீ: மாதத்தில் நியமப்படி உபவாசம் இருப்பவன். ஞாயிற்றுக்கிழமை, அமாவாஸ்யை பூர்ணிமைகளில் இரவிலும், இரு பக்ஷங்களிலும் சதுர்தசி, அஷ்டமி திதிகளில் பகலிலும், இரு ஏகாதசிகளில் பகலிலும் இரவிலும் உபவாசம் இருக்க வேண்டும். நாம் செய்த பாபம் நீங்க நம் உடல் உபவாச நியமத்தால் சிறிது கஷ்டப்பட வேண்டும். தர்மசாஸ்த்ரங்கள் தப்தம், ப்ராஜாபத்யம், சாந்த்ராயணம் முதலிய பலக்ருச்ர நியமங்களைச் சொல்கின்றன. சாந்த் ராயணம் என்பது சந்திரனின் வளர்வு தேய்வுடன் தொடர்புள்ள ஓர் உபவாச நியமம் அல்லது ப்ராயச்சித்தம். சந்திரகலைகள் வளரும் சுக்லபக்ஷ ப்ரதமை முதல் பௌர்ணமி வரை தினம்தோறும் ஒவ்வொரு கவளமாகக் கூட்டி உண்டும், பிறகு கலைகள் தேயும் க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை வரை ஒவ்வொரு கவளமாகக் குறைத்து உண்டும் சந்திரனை மனத்தில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமே சந்திராயணம். நம் முன்னோர் பலர் இதை அனுஷ்டித்தனர்.

பதிவ்ரதா: தன் ச்ரமங்களையும் பாராது கணவனுக்குப் பணிவிடை செய்யும் உத்தம ஸ்த்ரீ.

இந்த ஸ்லோகத்திலிருந்து, ஆயிரம் பூர்ண சந்த்ரன் கண்ட “ஸஹஸ்ர சந்திரதர்சி” மற்ற சிறந்த ஐவருக்கு நிகராகப் போற்றப் படுகிறான் என்று தெரிகிறது.

சதாபிஷேகச் செய்முறைச் சுருக்கம்:

1. ரக்ஷ£பந்தனம்: சதாபிஷேகத்திற்கு முதல்நாள் மாலை ப்ரதோஷ வேளையில் கர்த்தாவுக்கு ப்ரதிஸரபந்தம் (ரக்ஷ£பந்தனம்) என்கிற காப்புக் கட்டுதல் செய்ய வேண்டும். அல்லது மறுநாள் காலையில் வைபவம் தொடங்குமுன் செய்யலாம்.
2. அனுக்ஞை: புதிய தீக்ஷ£வஸ்த்ரம் அணிந்து கொண்டு கர்த்தா தன் பத்னியுடன் தெய்வத்தையும் பெரியவர்களையும் வணங்கி விட்டு ஸதஸ்ஸில் உள்ள வைதீக ப்ராம்ஹணர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிபெற்று அனுக்ஞை (அனுமதி) யுடன் சதாபிஷேக வைபவத்தைத் தொடங்க வேண்டும்.
3. விக்னேச்வர பூஜை: ப்ரார்த்தனை.
4. விசேஷ ஸங்கல்பம்.
5. அப்யுதயம்: புண்யாஹ வாசனம்
6. பூர்வாங்க வைதீக கட்டங்கள்.
7. ஆசார்யர், ரித்விக்குகள் (ஜப ப்ராம்ஹணர்கள்) வரித்தல்.
8. கும்பஸ்தாபனம்: சதாபிஷேக கர்மாவுக்கு ப்ரதான தேவதை வேதஸ்வரூபமான ப்ரம்ஹா (நடுவில்) பார்ஷத (பக்க) தேவதைகள் நால்வர்-ப்ரஜாபதி (கிழக்கில்); பரமேஷ்டி (தெற்கில்; சதுர்முகர் (மேற்கில்); ஹிரண்ய கர்பர் (வடக்கில்) குறைந்த பக்ஷம் இந்த ஐந்து தேவதைகளுக்கு 5 கும்பங்களை வைத்து ஆராதிக்க வேண்டும். இது தவிர திக்பாலகர்களுக்குத் தனியாக 8கும்பங்கள் வைக்கலாம். கும்பங்களில் புண்யதீர்த்தம் நிரப்பி; மாவிலைக் கொத்து, (குடுமித்) தேங்காய், தர்ப கூர்ச்சம் வைத்து நல்ல புது வஸ்திரம் கட்டி சந்தானம் குங்குமம் சார்த்தவும் ப்ரதான கும்பத்தில் ப்ரம்ஹ ஸ்வரூப ப்ரதிமையை வைக்கவும்.
9.கும்ப பூஜை: முதலில் மண்டப பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு கும்ப தேவதைக்கும் அதற்குரிய வேதமந்த்ரம், காயத்ரீ, புராண ச்லோகம் சொல்லி த்யானம் செய்ய வேண்டும். பின்னர் ஆவாஹனம், ப்ராண ப்ரதிஷ்டை, பிறகு ப்ரம்ஹஸ¨க்த விதானமாக ஷோடசோபசாரபூஜை செய்ய வேண்டும். ப்ரம்ஹா அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யலாம். மந்த்ரபுஷ்பம், ஸ்வர்ணபுஷ்பம், சத்ர சாமராதி ராஜோபசாரங்கள் செய்யவும்.
10. ஹோமம்: ஸ்தண்டிலம் அமைத்து அதில் லௌகிகாக்னியில் ப்ரம்ஹவரணம் முதல் முகாந்தம் வரை செய்து கொண்டு ப்ரம்ஹ ஸ¨க்தத்தால், ஆயுஷ்ய ஹோமம் போல, 108 ஆவர்த்திக்குக் குறையாமல் ஸமித், ஹவிஸ், நெய்யால் ஹோமம் செய்யவேண்டும். ஜயாதி ஹோமத்துடன் பூரணமடையும். உபஸ்தானம் செய்து நமஸ்கரிக்கவும். ஹ§தசேஷ ஹவிஸ்ஸைத் தனியாக மூடி வைக்கவும்.
11. கும்ப ஜபம்: ரித்விக்குகள் உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள் ஜபம் செய்ய வேண்டும். யஜமானன் ச்ரத்தையுடன் அவற்றைக் கேட்கவேண்டும்.
12. கும்ப புன: பூஜை: முதலில் பூஜிக்கப்பட்ட கும்பங்களுக்கு மறுபடியும் சுருக்கமாக பூஜை செய்து, தூபம், தீபம் நைவேத்யம், கற்பூரம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் ஆகிய உபசாரங்களைச் செய்யவும். பிறகு யதாஸ்தானம், நிரீஷிதாஜ்ய தானம் செய்யலாம்.
13. கும்பாபிஷேகம்: (ஸஹஸ்ரதாராபிஷேகம்) ஸஹஸ்ர தாரா என்பது குழிந்து பரந்த வெள்ளி அல்லது தாமிரத் தாம்பாளத்தில் ஒரே சீராக 1000 வட்டத் துளைகள் பத்ம வடிவில் போடப்பட்டிருக்கும். இந்த 1000 துளைகள் 1000 பூர்ண சந்திரர்களை நினைவூட்டுகிறதோ! ரித்விக்குகள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து மித்ரர்கள் செய்யவே கூடாது.
உறவினர்கள் இத்தட்டை சதாபிஷேக தம்பதியர் தலைமேல் சிறிது உயரே பிடித்துக் கொள்ள வேண்டும். தட்டில் ஸ்வர்ணம் ஏதாவது வைக்க வேண்டும். கும்பதீர்த்த ப்ரோக்ஷணம் செய்தபின், ஆசார்யன் பிரதான ப்ரம்ஹ கும்பத்திலுள்ள பாதி தீர்த்தத்தை, சிறிது சிறிதாக, யாஸ§கந்தா, யாஊர்ஜம் யாஸாம் நிஷ்க்ரமணே..., யாஸாம் இமே த்ரயோ... என்ற நான்கு மந்த்ரங்களால் ஒவ்வொரு மந்த்ர முடிவிலும் தட்டில் விடவேண்டும். பின்னர் “யா: ப்ராசீ ரேவதீ...” என்ற மந்த்ரம் சொல்லி ப்ரஜாபதி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாதக்ஷிணா...” என்ற மந்த்ரத்தால் பரமேஷ்டி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாப்ரதிசீ...” என்ற மந்த்ரத்தால் சதுர்முக கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும்.
அடுத்து, “யா உதீசீ...” என்ற மந்த்ரத்தால் ஹிரண்ய கர்ப கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். கடைசியாக “யா ஊர்த்வா...” என்ற மந்த்ரத்தால் ப்ரதான ப்ரம்ஹ கும்பத்தில் மீதியுள்ள ஜலம் முழுவதையும் ஆசார்யன் விடவும். கும்ப தீர்த்தங்கள் பாபம் போக்கி மங்களம் சுகம் நன்மை தரட்டும் என்பதே இந்த மந்த்ரங்களின் ஸாரம். அபிஷேக காலத்தில் சுமங்கலிகள் மங்களகானம் (கௌரீ கல்யாணம்) பாடலாம். வாத்யங்கள் முழங்கலாம். அனைவரும்
“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே”
என்று பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்யலாம். அபிஷேகம் முடிந்தபின் “ஸ்ரீஹரயே நம:” என்று மூன்று முறை கூறி எல்லாரும் “ஹரி:” என ஹரிஸ்மரணம் செய்யவேண்டும்.
14. சதாபிஷேகம் ஆனபின் கர்த்தா மூன்று புதிய வஸ்த்ரங்கள் தரிக்க வேண்டும். த்ருதீய வஸ்த்ரத்தை பட்டுப்பாயின் மேல் விரித்து அதில் தம்பதியர் உட்கார வேண்டும். புது யக்ஞோப வீதம் (பூணூல்) தரித்து ஆதித்யோபஸ்தானம் செய்து சூர்யதர்சனம் செய்ய வேண்டும்.
15. எடுத்து வைத்த ஹ§த சேஷ ஹவிஸ்ஸை வெண்கலப் பாத்திரத்தில் போட்டு நெய்விட்டு தங்கக் காசு ஒன்றை அதில் வைத்து தட்டால் மூடி, மந்த்ரம் சொல்லித் திறந்து பார்த்துவிட்டு ஆசார்யருக்கு தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும். அபிஷேகத்தால் நனைந்த தீக்ஷ£வஸ்த்ரங்களை (வேஷ்டி, உத்தரீயம், புடைவை, ரவிக்கைத் துணியுடன்) தானம் செய்யவும்.
16. ப்ரதான கும்பத்தையும் ப்ரம்ஹ ப்ரதிமையையும் வஸ்த்ரத்தையும் ஆசார்யருக்குக் கொடுக்கவும். எல்லா ரித்விக்குகளுக்கும் ஜப, ஹோம தக்ஷிணையுடன் கும்பம், வஸ்த்ரம் கொடுக்கவும்.
17. தானங்கள்: தசதானங்களான கோ (பசு), பூமி, எள், தங்கம், நெய், வஸ்த்ரம், தான்யம் (நெல்), வெல்லம், வெள்ளி, உப்பு ஆகிய 10 தானங்களையாவது செய்யவேண்டும். மீதி பஞ்சதானங்களையும் இஷ்ட தானங்களையும் (தீபம், ஜலபாத்ரம், மணி, புஸ்தகம், பலகை, கம்பு, குடை, காலணி, விசிறி மற்றும் பல) ஸெளகர்யம் போல் செய்யலாம்.
18. மாங்கல்ய தாரணம்: இது சாஸ்த்ர ஸம்மதமில்லை. ஸம்ப்ரதாயத்தில் உள்ளது. மாங்கல்ய பூஜை செய்தபின் பல தானம் (ஞாதிகளைத் தவிர) உறவினர்களுக்கு கொடுக்கவும். பின்னர் 81 வயது இளைஞர் (!) தன் க்ருஹிணிக்குத் தாலிகட்டி மகிழ்வார். கொள்ளுத் தாத்தாவுக்குக் கல்யாணம்! கொள்ளுப் பேரனுக்குக் கொண்டாட்டம்!!
19. அக்ஷதை ஆசீர்வாதம். (மந்த்ரம்)
20. ஸ்ரீமட ஸம்பாவனை, கிராம ஸம்பாவனை, கோவில் ப்ரஸாத மரியாதைகள்.
21. ஆசார்ய ஸம்பாவனை, வித்வத் ஸம்பாவனை.
22. பவித்ர விஸர்ஜனம்-ப்ரம்ஹார்ப்பணம்
23. மங்களஹாரத்தி
24. சதாபிஷேக தம்பதி மூத்த பெரியவர்களை நமஸ்காரம் செய்து ஆசி பெற வேண்டும். இளைய உறவினர், நண்பர்கள் சதஸிஷேகத் தம்பதியை வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.
25. தம்பதியை தக்க வாகனத்தில்-காரில் (ரதம், பல்லக்கு என எண்ணிக்கொள்க) அமரவைத்து வேத, வாத்ய கோஷத்துடன் சிறிது தூரம் ஊர்வலம் (கிராம ப்ரதக்ஷிணம்) வரச் செய்யலாம். அருகில் கோவில் இருப்பின், அதுவரை சென்று வணங்கிவிட்டு வரலாம்.
26. போஜனம்: ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தபின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
27. ஸஹஸ்ர சந்த்ரபூஜை: சதாபிஷேக தினத்தன்று ஸந்த்யா வேளையில் ஸஹஸ்ர சந்த்ர தர்சீ விசேஷமான ஒரு சந்த்ர பூஜை செய்வது பற்றி வைகானஸரின் க்ருஹ்ய ஸ¨த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீநிவாஸ தீக்ஷிதீய வ்யாக்யானத்தில் ஸஹஸ்ர சந்த்ர பூஜா மண்டலம் வரையும் முறையும் பூஜை செய்யும் முறையும் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மண்டலத்தை நான்கு கால் பகுதிகளாக ஒவ்வொரு பகுதியிலும் 250 சதுரக் கட்டங்கள் வருமாறும், நான்கு பகுதிகளைச் சுற்றி வீதி(பாதை)கள் வருமாறும் கோலப்பொடியால் போடலாம். ஆயிரம் கட்டங்களிலும் முழுநிலவைக் குறிக்கும் ஆயிரம் வட்டங்கள் வரையலாம். மண்டல மத்தியில் கலசத்தில் வெள்ளி ப்ரதிமையில் சந்திரபகவானை ஆவாஹனம் செய்யவும். சந்திரனுக்கு வலப் பக்கம் ரோஹிணீ கணத்தையும், இடப் பக்கம் அநாவ்ருஷ்டி கணத்தையும் தனித்தனி கலசங்களில் ஆவாஹனம் செய்யவும். சந்த்ரனுக்கு வெண்மலர்களால் ஷோடசோபசாரபூஜை செய்யவும். சந்திரஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யும்போது, வேதப்ராம்ஹணர்கள் ஸோமஸ¨க்தம், மந்த்ரம், காயத்ரீ போன்றவை ஜபிக்கலாம். சந்திர ஸ்தோத்ரங்கள் சொல்லலாம். சந்திர கீர்த்தனை பாடலாம்.

கொள்ளுத் தாத்தாவும் கொள்ளுப் பேரனும்:

81 வயதில் 1000 பிறைகண்டு சதாபிஷேகம் செய்து கொள்ளும் பாக்யசாலிக்கு, தன் புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் ஆகியோருடன் கொண்டாடும் பாக்யமும் நேரலாம். பிதா உ புத்ரன் உ பௌத்ரன் உ ப்ரபௌத்ரன். அதாவது தன் சீமந்த புத்ரனுக்குப் பிள்ளை (பேரன்) பிறந்து அவனுக்கும் புத்ரன் (கொள்ளுப்பேரன்) பிறக்க வேண்டும். இத்தகைய பாக்யம் கிட்டியவருக்கென்றே சாந்தி குஸ§மாகரம், ரத்னாகரம் ஆகிய ப்ரயோக க்ரந்தங்கள் “ஸஹஸ்ர சந்திர தர்சன ப்ரபௌத்ர ஜனன சாந்தி” என்ற ஒரு விசேஷமான சாந்தி செய்யும் முறையைச் சொல்கின்றன. தன் ப்ரபௌத்ரனைப் பார்த்தவர் கனகாபிஷேகம் செய்துகொண்டு பாபங்களிலிருந்து விடுபட்டு புண்யங்கள் பலபெற்று பின்னர் ஸ்வர்கத்தையும் அடைவார் என சௌனகர் கூறுகிறார்.

சந்த்ராணாம் து ஸஹஸ்ரஸ்ய தர்சனாத்பு விமானவ: |
ப்ரபௌத்ர தர்சனாத்வாபி ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||

ஸீமந்தஜஸ்ய புத்ரஸ்ய புத்ரஸ்ஸீமந்தஜஸ்து ய: |
தஸ்யாபி தாத்ருச: புத்ர: ப்ரபௌத்ர: புண்யவர்தன்: ||

ஸஹஸ்ரம் சசினாம் த்ருஷ்ட்வா பூர்வோக்தம் ச ப்ரபௌத்ரகம் |
மஹத்புண்யம் அவாப்னோதி தே வைரபி துராஸதம் ||

சதா பிஷே சனாத்லோகே லோக பூஜ்யத்வம்ருச்சதி |
ச்ரியம் ப்ராப்னோதி விபுலாம் ஸ்வர்கம் அந்தேச கச்சதி ||

நிறைவுரை: ப்ரம்ஹமே லக்ஷ்யம்

இறைவன் அருளால் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை அடைந்த நாம் நமது ஸநாதன வைதிக தர்மத்தைப் பின்பற்றி தினமும் வேதமோதி அதில் விதிக்கப்பட்ட கர்மாக்களை நன்கு அனுஷ்டித்து அவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். கர்மானுஷ்டானத்தால் சித்த சுத்தி; சித்த சுத்தியால் வைராக்யம். வைராக்யத்தால் ஞானம்; ஞானத்தால் மோக்ஷம். அதாவது அதாகவே ஆவது. பிறகு பிறவி என்பதே கிடையாது. எனவே மனிதப் பிறவி எடுத்ததன் பயன் இனி பிறவி இல்லாமல் செய்து கொள்வதே! இதற்கு ஈஸ்வர அனுக்ரஹம் வேண்டும். மேலும் தெய்வ ஆராதனம் வேண்டும். ஆதிசங்கரபகவத் பாதர் தன் சீடர்களுக்கு அருளிய ஸோபான பஞ்சகம் என்ற 5ஸ்லோகங்களில் 40 படிகளாக அமைந்த உபதேசங்களை நாம் ஆதேசங்களாக (ஆணைகளாக) ஏற்று அதன்படி நடந்து படிப்படியாக முன்னேறி ப்ரம்ஹ ஞானத்தை எய்துவோமாக.

ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்.

நன்றி : சீனிவாசன் வைத்தியலிங்கம்

Friday, June 9, 2023

மாந்தி கிரகத்தை பற்றியும், மாந்தியுடன் இணையும் கிரகத்தைப் பற்றியும்


#மாந்தி கிரகத்தை பற்றியும், மாந்தியுடன் இணையும் கிரகத்தைப் பற்றியும் பார்ப்போம்.
Thank Fb
மாந்தி என்றால் குரங்கு என்று பொருள். சனிபகவானின் புத்திரர் ஆவார். சனிபகவானுக்கு இரண்டு புத்திரர்கள் ஒருவர் #குளிகன் (சுபர்) மற்றொருவர் #மாந்தி (அசுபர்) குரங்கு குணம் என்பது சேட்டைகள் செய்வதுதான். அதனால் தான் குரங்கு சேட்டை என்று பெயர் ஆனது.

மாந்தி ஒரு நொடியில் வெளிப்படக்கூடிய கிரகம். அதாவது கண் இமைக்கும் நேரத்தில் தோன்றி மறைய கூடிய தன்மை. ( உதாரணம் : மின்னல் எனலாம் ) மாந்தி மலைநாடு ஆன கேரளத்தில் கணித்து பலன் சொல்லப்படுவதாகும். 

மாந்தி இருக்கும் இடத்தை கெடுக்கும். அவ்வாறு கெடு பலன்களை தரக்கூடிய கிரகம் கால புருஷனின் 10, 11 ஆம் இடங்களில் இருந்தால் நற்பலன்களை தரும். ஏனெனில் 10, 11 ஆம் இடம் சனி பகவானின் வீடு அதனால் தந்தையிடம் மட்டும் அடங்கி செல்வார். மாந்தி மற்ற இடங்களில் அவர் தனது விளையாட்டை காட்டி விடுவார்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் மாந்தி இருக்க ஜாதகரின் செயல்பாடு நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். ஒரே மனநிலையும், ஒரே நிலைபாட்டையும் இருக்க முடியாது. 

"மாந்தி + சூரியன்" இணைவது தந்தைக்கு ஆயுள் கண்டத்தை தரும். உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். அரசு விரோதமும் ஏற்படும். ஜாதகரின் தந்தைக்கு அவப் பெயர்கள் ஏற்படும்.

"மாந்தி + சந்திரன்" இணைவது தாயாரின் மனநிலையை பாதிக்கும். தாய்க்கு ஆயுள் கண்டம். தாயாரின் உடல்நிலை குறைபாடுகள் தரும். ஜாதகருக்கு சித்த பிரம்மை ஏற்படும்.

"மாந்தி + செவ்வாய்" இணைவது இளைய சகோதரருக்கு கெடு பலனை தரும். சகோதரனை புரிந்து கொள்ள முடியாது. ஜாதகருக்கு வெட்டு காயங்கள் ஏற்படும். அதேபோல கவனக்குறைவால் அடிக்கடி விபத்துகளையும் சந்திக்க நேரிடும்.

"மாந்தி + புதன்" இணைவது தாய் மாமாவுக்கு கண்டங்களும், கஷ்டங்களையும் தரும். திடீர் ஞாபகம்  மறதி ஏற்படும். நரம்பு துண்டிக்கும் நிலையை ஏற்படுத்தும். புத்தியை கடன் கொடுத்து பரிதவிக்கு செய்யும்.

"மாந்தி + குரு" இணைவது புத்திரர்களால் கஷ்டம் கவலைகள் ஏற்படும். புத்திர தோஷத்தையும் தரக்கூடியது. ஜாதகர் அடிக்கடி அவமானங்களை சந்திப்பார். நல்லது செய்தாலும் கெட்ட பெயர்கள் ஏற்படும்.

"மாந்தி + சுக்ரன்" இணைவது மனைவி சுறுசுறுப்புடன் இயங்கும் தன்மை. மனைவிக்கு அடிக்கடி கைகளை சுத்தம் செய்யும் பழக்கம் இருக்கும். ஆசைகளால் பணத்தை இழக்க கூடிய நிலை தரும். அஜாக்கிரதையால் பொருள் இழக்க கூடிய நிலையம் தரும்.

"மாந்தி + சனி" இணைவது தொழிலில் நல்ல நிலைப்பாட்டை தரும். தொழிலில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார். கஞ்சத்தனமும், வியாபாரத்தில் கரார்ராகவும் செயல்படுவார். யாரையும் உபசரிக்கும் குணம் இருக்காது.

"மாந்தி + ராகு" இணைவது அவசரத்தால் எதையும் செய்து பின்னர் கவலைப்படுவார். பேச்சில் உண்மை இருக்காது. சொல்வதை நினைவில் வைக்க மாட்டார். சொல் ஒன்று செயல் ஒன்றாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கக்கூடிய குணம் இருக்கும்.

"மாந்தி + கேது" இணைவது குடும்பம் வறுமை நிலையில் இருக்கும். பொறுப்புணர்வுகள் இருக்காது, விளையாட்டுத்தனமுடன் இருப்பார். தீய பழக்கங்கள் ஏற்படும். அடுத்தவர்களுக்காக உதவி செய்யப் போய் தான் தண்டனை அனுபவிக்கக்கூடிய நிலை தரும். 

மாந்தி வழிபாடுகள் :-

முறையான உடல் பயிற்சி, தியானம் செய்தல், தாய் தந்தைக்கு உதவிகள் செய்தல். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் நன்மை தரும். குரங்குகளுக்கு உணவளிப்பது மூலமும் நன்மை தரும். நெற்றியில் செந்தூரம் வைப்பதன் மூலமும் மாந்தியின் கெடு பலன்கள் குறையும். எப்போதும் நேர்மறை எண்ணங்களை பின்பற்றுவதன் மூலம் மாந்தியின் கெடு பலன்களை குறைக்கும்

#ஆன்லைன்ஜோதிடம் #ஜோதிடர்சதாசிவன் #ஜோதிடம் #காரைக்குடிஜோதிடர்சதாசிவன் #karaikkudijothidar 

நன்றி!

ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம் 
காரைக்குடி.
 
Contact (or) WhatsApp : 6381453432

ஜோதிட சார்ந்த பதிவுகளும், கட்டுரைகளும் இந்த குரூப்பில் பதிவு செய்யப்படும். விருப்பம் உள்ள நண்பர்கள் இக்குரூப்பில் இணைத்துக்கொள்ளலாம்.

WhatsApp Group : https://chat.whatsapp.com/IxKFbfbfIFi0jNfiM3nRHX

தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய உங்களது பெயர் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் எனது "வாட்சப்" நம்பரில் அனுப்பவும். (ஜாதகம் பார்க்க கட்டணம் : ₹501/-)

[ குறிப்பு :- அடிப்படை மற்றும் உயர்நிலை தெரிந்தவர்களுக்கு ஜாதகம் பலன் சொல்லும் பயிற்சி நடைபெற்று வருகிறது விருப்பமுள்ள நண்பர்கள் எனது செல் நம்பரில் தொடர்பு கொண்டு பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். ]

பூஜை_துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது


Thank fb
பூஜை_துவக்கத்தில் 

தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது?

சங்கல்பம் உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது.. இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்.. இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது.. மேலும்...

சங்கல்பம்

சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி, இதன நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.

கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது மரபு.

இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையி ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்து விடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத்தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில்… என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகின்றது. ஆனால் இங்கே சுருக்கமாகன முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகின்றது.

“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர 
ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்ய… அஹம் அத்ய கரிஷ்யே”

என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காலவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெவத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும். 

ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.

பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.

“இறைவனின் கட்டலைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..…
என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… நட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்…. இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்.

இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.

அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். “இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.

இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை. ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷ்னும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,

வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய;

இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்னங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;

ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகியா இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்;

அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்;

பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்;

சக்கர்வாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;

இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப்பட்டதும்;

சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும்; உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களினால் சூழப்பட்டதும்;

ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி, குசம், கிரவுஞ்சம், சாகம், புஷ்கரம், என்னும் ஏழு தீவுகளொடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருக்ஷம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளொடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெரு மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்;

இந்திரகண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், சௌம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்;

மஹாமானசத் தாமரைவடிவவான ஐம்பது கோடி யோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, சிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திரகூடம்,விந்த்யாசலம், சுவேதாசலம் என்பனவற்றுக்கும், ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில்; மது, வன, குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே; பொதியமலைக்கு வடக்கே, தென்சமுத்திரத்திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும், ஒன்பது யோசனை அளவு கொண்டதும், பாரதம், கிம்புருஷ்ம், ஹரி, இளாவிருதம், குரு, பத்திராள்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷ்ங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர க்ஷேத்ரத்திலே, தண்டகாரண்யம், கதளிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னும் பதினொரு வனங்களோடு கூடியதும்;

அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கௌசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜூரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், சௌவீரம், சௌராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சீழம்,, கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹூணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிஙகம், யவனம், சாளுவம், சப்பன்னம், என்னும் ஐம்பத்தாறு தேசங்களாககிய பலவித பாஷைகளையுடைய விஷேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்;

ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணீதை, பம்பை, பாபப்ரசமனீ, பயோக்ஷி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுதவதி, சிந்துநதி, அர்ஜூனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுழி, சரயு முதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்;

அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரக முதலிய முக்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச ஸ்ரீஓருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னும் இவைகளின் நடுவாகிய பூமண்டத்தில்;

பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக்கலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்;

சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய மகானகளுக்கும் இந்திரன் முதலிய முபத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரMஆண்டங்களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டுபரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வௌஅது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே ,முதலாம் மாதத்திலே முதலாம் பக்ஷத்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்திமூன்றாம் வினாடியிலே முதற்பிராணம் தொடங்கும் காலத்திலே;

பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம், என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே;

சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர், சூரியசாவவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரௌச்சியர், பௌச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்கஊள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே; 

இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே;

பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம்கழிய;

பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய;

எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய;

நாலுலக்ஷத்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே;

ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திரராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;

யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே;

ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:

மூன்றாம் விம்சதியான – சௌரமான – சார்வரி என்னும் பெயருடைய வருஷ்த்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.

கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;

மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் சய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;

அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும், அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும், அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும்,மிகப்பயின்று செய்யப்பட்டவையும், இடையீடின்றிப் பயிற்சியாகாக்ச் செய்யப்பட்டவையும், நெடுங்காலம் பயிலப்பட்டவையும், ஒன்பதும் ஒன்பது வகையும், பலவும் பலவையும் ஆகிய எல்லப் பாவங்களையும்;

உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவ்ர் சீதா ல்க்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;

சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிகரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்;

இயன்ற நியமஙத்தோடும் இயன்ற வகையில் இயன்ற டிரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராமதனுஷ்கோடிஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.

இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.
1.    நாம் ஆலயங்களைலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்து முடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பப் செய்வதன் அவசியம் புரிந்து கொள்ளப்படுவது.

2.    அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

3.    அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழ்கான அடுக்கு மொழிகளும் அற்புதமான கற்பனை வளமும் சுவைத்து இன்புறத்தக்கன.

4.    புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும்சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிக்ஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.

5.    காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுதப்பட்டிருந்தது என்பதை அறிவதோடுபருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.

6.    இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணீற் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும். இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் – யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத்தக்கதன்றோ?

Tuesday, June 6, 2023

நவாவரண பூஜை


நவாவரண பூஜை  பற்றி அறிந்து கொள்ளுங்கள்

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். 

பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.

எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். 

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். 

இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். 

இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. 
இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. 

ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 
9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.

இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. 

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். 

எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.

ஓம் சக்தி பராசக்தி 🙏

Friday, June 2, 2023

தந்திர யோகம்

🥀 தந்திர யோகம்! 

மனிதனின் உழைப்பு, உணவு, உறக்கம், இன்பம், பாசம், பந்தம் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஆசைகள் பல உள்ளன. அதில் ஆன்மிகத்தை நாடுவோர் முக்தி நிலை பெற வேண்டும் என்ற தணியாத ஆசையும் ஒன்றாகும்.

இந்த முக்தியை மரணமில்லா பெருவாழ்வு, தன்னை அறியும் ஞானநிலை, தன்னுள் உறைந்து இருக்கும் இறைவனை உணர்ந்த ஆனந்த நிலை, இப்பிறவியை விலக்கிய நிலை என வெவ்வேறு பெயர்களாலும் உணரப்பட்டது.

ஆக முக்தி பெற வேண்டி முயற்சி தேவை என்பதை உணர்ந்த மனிதன் அதைப்பெற என்னென்ன வழி என கண்டுணர்ந்தான்.

அவ்வழிகள் யாதெனில் 
பக்தி மார்க்கம், 
ஞான மார்க்கம், 
கர்ம மார்க்கம், 
யோக மார்க்கம், 
தந்திர யோக மார்க்கம், 
என ஐந்து பிரிவுகளில் எதையாவது ஒன்றை பற்றி முயற்சித்தால் முக்தியை அடையலாம் என கண்டுபிடித்தனர்.

பக்திமார்க்கம்
**************
பக்திமார்க்கம் என்னும் வழியாகப்பட்டது அனைத்தும் அவன் செயல். என் தலைவன் இறைவனே அவனே கதி என்று நீங்கா பக்தியோடு இறைவனின் பாத கமலமே கதி என்று இருந்து இறையருளை பெற்று முக்தி நிலை அடையும் மார்க்கம் பக்தி மார்க்கமாகும். அடுத்து

ஞானமார்க்கம் 
***************
அறிவு, புத்தி, சித்தி ஆகியவற்றின் துணைகொண்டு முக்திநிலையை அடைய முயல்வதே ஞானமார்க்கமாகும்.

கர்ம மார்க்கம் 
**************
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதையில் பகவான் அர்ஜுனனுக்கு அறிவுரை கூறியிருப்பார். இது சாதாரண மனிதர்களுக்காக கூறப்பட்டதாகும். கர்ம மார்க்கத்திற்கு விசேஷ பயிற்சி எதுவும் தேவையில்லை. தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும், பொறுப்புகளையும் முழுமையாகச் செய்துவிடும் மனிதனின் ஆத்மா படிப்படியாக பண்பட்டு உயர்நிலையை அடைந்து முக்தி பெற கடைபிடிக்கப்படுபதே கர்ம மார்க்கமாகும். 

யோக மார்க்கம் அறிக 
**********************
அஷ்டாங்க யோகத்தில் தீவிரமாக ஈடுபடக்கூடிய ஒருவரால் சில பிறவிகளிலேயே முக்திநிலையை அடைந்துவிட முடியும். ஆனால் இதற்கு கடுமையான பயிற்சிகள் அவசியமாகும். இந்த பயிற்சிகளால் உச்சநிலை பெறும்போது முக்திநிலையை அடைய முடியும். 

தந்திர மார்க்கம்
****************
தந்திரம் என்பது கடினமான ஒரு செயலை மதி நுட்பத்தால் எளிமையாக விரைவாக செய்து முடிப்பதைத் தான் தந்திரம் எனப் பொருள்படும். முன்பு பார்த்த முக்தி அடைய பயன்படுத்தும் மார்க்கங்களில் முக்தி அடைய சில பிறவிகள் தேவைப்படலாம். ஆனால் தந்திர மார்க்கத்தை அணுகுவதால் இதே பிறவியிலேயே முக்தி அடைய முடியும்.

புறத்தேடலில் உழன்றுகொண்டிருக்கும் மனிதனை அகத்தேடலுக்கு திருப்பிவிடும் மார்க்கமே தந்திர மார்க்கமாகும். மிக எளிய தந்திர வழிகளை கையாள்வதன் மூலம் குறுகிய காலத்திலேயே முக்திநிலையை பெற முடியும். மேற்கண்ட எதாவது ஒரு மார்க்கத்தில்தான் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ கடைபிடித்து வாழ்கிறான். இதில் எந்த மார்க்கம் சிறந்தது என்றால் தந்திர மார்க்கமேயாகும்.

ஒரு குளத்தை புதிதாக வெட்ட 500 பேர் ஒன்றுகூடி குளம் வெட்டி ஒரு வருடத்தில் முடிக்கும் பணியை இயந்திரத்தைக் கொண்டு ஒரு மாதத்திலேயே முடிக்கலாம். இது தந்திரத்தின் பயனால் கிடைத்த சுமூக வெற்றியாகும். அதேபோல்தான் மனித பிறவியின் முக்தியின் வெற்றி ரகசியத்தையும் தந்திரயோகத்தை கையாள்வதன் மூலம் விரைந்து அடையலாம்.

ஒவ்வொரு யுகங்களை மனிதன் கடந்து வரும்போது அவன் அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சியடைந்து கண்டுணரப்பட்டதே இந்த மார்க்கங்களாகும். இதில் மனிதன் இறுதியாக கையாண்டு கொண்டிருப்பது தந்திரயோக மார்க்கமேயாகும்.

மனிதனின் ஆயுள் நிர்ணயமில்லாதது . இருக்கும்போதே வெற்றியை நெருங்க வேண்டுமானால் தந்திர மார்க்கமே அதற்கு உதவுகிறது. தந்திரயோகம் என்பது மற்ற மார்க்கங்களின் கூட்டு கலவையும் இருக்கும் . மற்ற மார்க்கங்களின் வெற்றி முறைகளின் எளிதை எடுத்து பயன்கொள்ள வேண்டும்.

இன்னும் கூடுதலாக தந்திர மார்க்கத்தில் சில யோகங்களை கடைபிடித்தனர். அவை மந்திரயோகம், ஹட யோகம், ராஜயோகம், லய யோகம், குண்டலினி யோகம் ஆகும். இந்த ஐந்து யோக வழிமுறைகளில் சில சக்தி வாய்ந்த வழிமுறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை மேலும் எளிமையாக்கி அவற்றிற்கு மேலும் வலுவூட்டி உருவாக்கப்பட்ட ஒருநிறைவான மார்க்கமே தந்திர யோக மார்க்கமாகும்.

இதில் பெரும்பங்கு குண்டலினி யோக வித்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது . இதனுடன் பிற்காலத்தில சேர்க்கப்பட்டதே சக்கர யோகமாகும். இதனுடன் மந்திர யோகத்தையும் இணைந்து பயன்படுத்தினர். எனினும் ஒவ்வொரு நிலையிலும் தந்திரத்தை கையாளும் போதுதான் வெற்றியை உறுதிசெய்ய முடிகிறது..

யோகம் என்றால் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருங்கிணைத்தல் என்பதாகும். உதாரணமாக ஒன்றை அறியுங்கள்.

மனிதன் என்பவன் பல கூறுகளால் ஒருங்கிணைக்கப்பட்டவன் எனவே மனிதனும் யோகம்தான். ஆன்மா, உயிர்சக்தி, புலன்கள், பிராணன், புத்தி, சித்தம், மனம், பருஉடல் இவை அனைத்தும் சேர்ந்த கலவையே மனிதன். இவை உதாரணத்திற்கு சொல்லப்பட்டது. ஒவ்வொரு கலையிலும் பல நுணுக்கங்கள் உள்ளன. அவைகளை மதி நுட்பத்தால் கண்டு வகை பிரித்து பயன்கொள்ள வேண்டும். இதற்கும் யோகம் என்றுதான் சுருங்க சொல்ல வேண்டும்.

ஒரு வழிபாடு முறையால் வெற்றி காண சில தடங்களை முறையாக நுட்பமாக கையாள வேண்டும். வழிமுறை, செயல்பாடு, குவிந்த கவனம், தியானம், ஆற்றல், துறவு, சமாதி, பலன், நன்மை என பிரித்து பார்த்தால் ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தங்கள் வகைகள், தன்மைகள் யாவும் உண்டு என்றாலும் இவைகளை ஒருங்கிணைத்து வழிபாடுயோகம் என்று சுருங்கக் கூறலாம். இந்த நுணுக்கங்களை அறிந்து கையாண்ட விதத்திற்கு தந்திர மார்க்கம் என்று சுருங்க பெயர் வைத்தனர்.

பின்னால் வந்தவர்கள் அவரவர் அனுபவத்தில் கண்ட சக்திகளை கொண்டு பிரிவுடன் தெய்வ மார்க்கத்தை கையாண்டனர். ஆனால் அடிப்படையில் தந்திரத்தை கையாண்ட வெற்றிபெறும் விதம் மட்டும் பொதுவாக இருந்தது . அனைத்து பிரிவிலும் கையாண்டவிதம் தந்திர மார்க்கம் தான்.

குறிப்பாக சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், இஸ்லாமியம் என மதக்கோட்பாடுகள் பிரிந்தன என்றாலும் இவைகளிலும் காலப்போக்கில் பல பிரிவுகளை பின்னால் வந்தவர்கள் உருவாக்கிவிட்டாலும் எல்லாவற்றிலுமே தந்திர கையாடலே தலைசிறந்த முறையாக அவரவர் மதிநுட்பப்படி கடைபிடித்தனர்.

இவைகள் காலப்போக்கில் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக குரு பரம்பரை உருவானது. இந்த குருமார்களின் வழிமுறையை ஏற்ற சீடர்களின் வட்டம் விரிவடைந்து பல மார்க்கங்களை குழுகுழுவாக உருவாக்கி அதில் பல பிரிவுகள் பேதங்கள் குழப்பங்கள் உண்டாகிவிட்டன. இதனால் சரியான நுட்ப முறைகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறி போயின. குழம்பி கலந்தும் போய்விட்டன.

இதன்பின்னால் வந்தவர்கள் பிரிவை கட்டாயமாக்க வேண்டிய சூழலில் வாழ்ந்தனர். ஒருவர் சைவம் இன்னொருவர் அசைவ முறை பின்பற்றும்போது பிரிவு கட்டாயமானது . இதன்பின்பு அவரவர் வெற்றி முறைகளுக்கு ஒரு பெயரை சூட்டி, பெயரை மட்டும் வெளியிட்டு மூலத்தை ரகசியமென குரு சிஷ்ய பரம்பரைக்கு மட்டும் தெரியும் வண்ணம் உருவாக்கி கலைகள் பின்னப்பட்டுவிட்டன.

இதன்பின்னர்தான் மனிதனை வகைப்படுத்தினர். அடுத்தாற் போல் சாதி பேதம் உருவாக அதுவே வழி செய்தது . பின்பு ஒரு சாரருக்கு மட்டுமே இந்த கலை வரும் என தவறான செய்தியை பரப்பி தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டனர். இதனால் பலமுறைகள் மாறின.

தட்சிணமுறை, வாமாசார முறை, வேதாந்தம் சித்தாந்தம், சடங்குககள், ஆகமங்கள், நியமங்கள் அதிலும் பல பரிவுகள் என அந்தந்த பிரிவினரின் ஏட்டிக்குப்போட்டியான கண்டுபிடிப்புகள் சிலதும், சில உண்மையான வழிமுறைகளும் சேர்த்து இன்று குழப்பமான ஆன்மீகம் உலாவ காரணமாகிவிட்டது .
மெய்யன்பர்களே மனித வளர்ச்சி எப்படி பரிணாம வளர்ச்சி கண்டதோ படிப்படியாக அதைப்போல ஆன்மீகமும் வளர்ந்ததுதான் என்பதை அறிக.

ஒரு காலத்தில் நல்லவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். இன்றைக்கு நல்லவர்கள் சிலபேர்தான் இருக்கிறார்கள். அதைப்போல கலைகளும் நல்லது சரியானது என சில கலைகள் தான் உள்ளது. எல்லாவற்றிற்கும் மனமும் ஒழுக்கமும் தர்மமும் கடமையும் ஆதார சக்திகளாலும் ஆன்மீக உலகம் எவ்வளவு குழம்பிப்போய் இருந்தாலும் மேற்சொன்னதை சரியாக பயன்படுத்தினால் வெற்றி எளிது, அதுவே தந்திரமாகும்.

தந்திர யோக மார்க்கத்தை கடைபிடிக்க பல வழிமுறைகள் உண்டு. அதை தந்திர யோக குறியீடுகள் என்று கூறுவர். யந்திரம், மந்திரம், தர்மநெறி, ஒழுக்கம், விரதம், தீர்த்த தலங்கள், புனிதம், கடவுள், வர்ணபேதம், சூத்திரங்கள், வளர்ச்சி, சடங்குகள், படைப்பு, தியானம், வழிபாடு, கர்மங்கள், சாதனை, புனஸ்கரணம், அழிவு, ஆக்கல், ஞானதெளிவு, தர்மநெறி கடைபிடித்தல் என்று பல்வேறு வகையான வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் முக்தி நிலை அல்லது இப்பிறவியின் வெற்றி நிலையை பெறலாம். இதை வகைப்படுத்தி நுட்பமான முறைகளை இதில் பிழையில்லாமல் கையாண்டு வெற்றி காண்பதே தந்திர யோகமாகும்.

இங்கு  பல விஷயங்கள் கொடுத்திருக்கிறேன். யாவும் தந்திர யோகத்தின் நுட்ப வழிமுறைகளேயாகும். தந்திர யோகத்தின் வெற்றி மன ஈடுபாட்டில்தான் உள்ளது என்பதை மறவாதீர்கள்.

இயற்க்கையை எதிர்க்காமலும், தர்மத்தை மீறாமலும் , எதிரியின் பலகீனத்தை பயன்படுத்தி நம் புத்தியை மேம்படுத்தி வெல்வதோ, அல்லது பயன் பெருவதோ தந்திரக்கலையாகும் .

அறிவை அறிவால் வெல்ல முடியாத போது சூழ்நிலையை சாதகமாக்கி வெல்ல முயல வேண்டும். இதுவும் தந்திரகலையாகும் .

நம்மால் முடிக்கமுடியாத செயலை அதை முடிக்கும் தகுதியானவரை தேர்ந்தெடுத்து ஏவி செயல் படுத்துவதும் தந்திர கலையாகும் .

மெய்யால் முடியாததை தெய்வத்தாலும் தெய்வத்தால் முடியாததை மெய்யாலும் முடிக்க முயல வேண்டும் இதுவும் தந்திர கலையாகும் .

தந்திரம் என்பது ஏமாற்றுவது அல்ல அது ஒரு ரகசிய பிரயோகம் .ரகசியமாக இருந்தால் தான் எதிரியை எதிர்க்காமல் வெல்ல முடியும் .எதிர்ப்பை பகையாகாமல் பலனை நம் வசமாக்க முயல்வதும் தந்திரக்கலையாகும் .

எதிரியை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிகொள்வது வீரம். எதிரியை நண்பனாக்கி அன்பால் வெற்றிகொள்வது தந்திரமாகும் .

உழைத்து பணம் சேர்ப்பது விவேகம் . உழைத்த பணத்தையும் உழைக்க வைத்து சம்பாதிப்பது தந்திர அறிவாகும் .

நீங்கள் உங்களுடைய உழைப்பையும் பலத்தையும் நம்புவது அறிவு, இதன்கூடவே வெற்றி பெற்றவனின் வழித்தடத்தை அறிந்து முன்னுக்கு வர முயல்வது தந்திரம் .

முன்னோர்கள் நமக்கு கொடுத்துச்சென்றுள்ள புரானங்கள் , இதிகாசங்கள் யாவும் சாமான்யருக்கு கதையாக தோன்றுகிறது இதில் பல திருத்தங்களை கவிஞர்களும் தன் பங்கிற்க்கு செய்து வைத்து விட்டு சென்றுள்ளார்கள். ஒருவிஷயத்தை நன்றாக கவனம் வையுங்கள் சாதாரனமாக பார்க்கும் கேட்கும் படிக்கும் நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே பார்ப்பது சராசரி அறிவாகும். ஆனால் அதன் உள்நுழைந்து காரணங்களை தேடுவது பகுத்தறிவாகும். ஆனால் இதையும் கடந்து நடந்த நிகழ்வுகள் யாவும் வாழ்க்கை சூத்திரங்கள் என்றும் நம் வழிகாட்டி மரங்கள் என்றும் யார் எடுத்து கையாழ்கிறாறோ அவரே ஞான அறிவு பெற்றவராவர் .

மகாபாரதத்தை கேட்கும் போது சூது வாதம், வீரம், வேதனை, வெற்றி, பாசம், பிரிவு என்ற சம்பவங்களையே உணர்வோடு பார்த்து சலிப்பும், ஆர்வமும் கொள்கிறோம் . நம்மவர்களுக்கு  உணர்வுகளின் தாக்கம் உணர்ச்சிகளின் தாக்கம் அதிகம் உள்ளதால் எல்லாவற்றையுமே தன் வாழ்க்கை சம்பவங்களோடு ஒற்றுமை படுத்தி உணர்ச்சி வசப்பட்டே பழகிவிட்டது. ஆனால் அதை கடந்து மகாபாரதத்தை ஆய்வு செய்தால், அதுவும் உணர்ச்சிவசப்படாமல் ஆய்வு செய்தால் பல அரிய தந்திர ரகசியங்கள் கிடைக்கும் .

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக ஸ்ரீகிருஷ்னரும், கௌரவர்களுக்காக சகுனியும் வெற்றிக்கு கையான்டது முழுக்க தந்திரம் தான். தந்திரத்தை கையாள்பவன் உணர்ச்சிவசப்படுதலோ, கோபப்படுதலோ கூடாது. எதையும் எளிதில் நம்புதலும் கூடாது. இதை கடைசி நேரத்தில் சகுனியால் கடைபிடிக்க முடியாமல் போனாது. இதுதான் கௌரவர்கள் வீழ்ச்சிக்கு அடித்தளம் போட்டது. ஸ்ரீகிருஷ்னன் எதையும் மறக்கவில்லை கூடவே புன்னகையும் ஒரு தந்திரம் தான் என்பதை வெளிப்படுத்தி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெற்றியை பாண்டவருக்கு பெற்றுத்தந்தார். தர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் ஸ்ரீகிருஷ்னர். அதர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் சகுனி . 

ஆக தந்திரம் நல்லவனுக்கும் பலன் கொடுக்கும் கெட்டவனுக்கும் பலன் கொடுக்கும். தந்திரத்திற்க்கு எந்த பாகுபாடும் இல்லை. ஆனால் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அருவடை செய்வோம். இதை மனதில் வைத்து தந்திரத்தை கையாள வேண்டும். கெட்டவருக்கு சகுனி போன்ற ஒருவர்தான் துணைக்கு தந்திரமாக வந்து இருதியில் தோல்வியை பெற்று தருவர். ஆனால் நல்லவனுக்கு ஸ்ரீகிருஷ்னரை போல தெய்வமே துனையாக வந்து இறுதி வரை உடனிருந்து வெற்றியை பெற்றுத்தரும். இதை மறவாதீர்கள் .

மூலிகையை பயன்படுத்துவது, யந்திரம், முத்திரை, ஆசனம், ஆசனவிரிப்பு, ஆடையின்வண்ணங்கள் , விருட்சங்கள், மந்திரம், தீட்சை, முகூர்த்தம், பட்சி, ஓரை பார்த்தல் , அஞ்சனம் இடுதல், எதிரியின் உடமையை கையாழுதல், அஷ்டகர்ம முறைகள், பலவித மலர்கள், யாகங்கள் செய்தல், மனதை அடக்குதல், உலோகம், நவரத்னம், பரிகாரமுறைகள், சமர்பணம் செய்தல், வணக்கம் செய்தல், முயற்ச்சித்தல் இன்னும் பல்வேறு செயல்களிலும் தந்திரங்கள் மறைந்துள்ளது . காரணகாரியம் இல்லாமல் முன்னோர்கள் எதையும் சொல்லிச்செல்லவில்லை எல்லாம் தந்திரமே .

தந்திரம் என்பது புத்தி யோசனை செயல் விவேகம் இவைகளோடு பின்னிபினைந்தது ஆகும். தந்திரம் என்பது எதிரியின் வலயில் இருந்து தப்பிப்பது மட்டுமன்று, எதிரியை தன் வலையில் விழவைப்பதும் தந்திரமாகும். ஆயிரம் பேரை எதிர்த்து சண்டை இடுவதை விட எதிரி கூட்டத்தின் தலைவன் ஒருவனை பிடித்து விட்டால் மற்றவரை போரிடாமலேயே வென்று விடலாம். இதுதான் தந்திரம் .

வலிமையும் வலிமையும் மோதிக்கொள்வதை விட விட்டுக்கொடுத்து போவதே தந்திரமாகும். எதிரியோடு மோதுவதை விட எதிரியை தன்வசப்படுத்த முயல்வதே தந்திரமாகும்.

நமக்கு தந்திரத்தை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அன்பு, உண்மை, தன்னம்பிக்கை, தர்மம் , விடாமுயற்ச்சி, புரிந்து செயல்படுதல், ஊக்கம் இவைகளை மட்டுமாவது பின்பற்றுங்கள் கூடவே ரகசியத்தை கடைபிடியுங்கள், மற்றவர் நம் மேல் அன்பாய் இருக்க என்ன அனுகுமுறை அவசியமோ அதை கடைபிடியுங்கள் போதும். இறை சக்தி உங்களை நாடிவர இதுவே போதும். இந்த அனுகுமுறையும் தந்திரக்கலைதான்.

-பைரவ கல்பம் என்னும் தந்திர யோக நூலில் இருந்து.....
Thank to FB..