Thanks FB
அவனே இவன்
ஹரியும் சிவனும் ஒன்றே 3a
புருஷா என்கிற புருஷ மிருகம்
தருமர் ராஜகுரு யாகம் செய்ய விரும்பினார்.
அந்த யாகம் நடத்த புருஷா மிருகத்தின் பால் தேவைபட்டது.
புருஷா மிருகம்
மனித முகத்தையும் சிங்க உடலையும்
கொண்ட மிருகம்.
இந்த புருஷா மிருகம் சிவனின் மேல் அதீத பக்தி கொண்டது.
ஸ்ரீ மகாவிஷ்ணுவை அதற்கு பிடிக்காது.
குபர வனத்தினை பாதுகாக்கும் வேலையை இந்த புருஷா மிருகம் செய்கின்றது.
சிவன் விழாக்காலங்களில்
இந்த புருஷா மிருகத்தின் வாகனத்தின் மீது அமர்ந்து வீதியுலா வருவதை காணலாம்.
பதினாறு வகையான தீப வழிபாடுகளில்
இந்த புருஷா மிருக தீப வழிபாடும் உள்ளது.
மூன்று கதைகள் புருஷா மிருகத்தினை
மையமாக வைத்து இருக்கிறது.
கதை 1
காசியில் புருஷ மிருகம் சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தது.
மதுரைக்கு அருகே திருவாதவூரில் கடும் வறட்சி ஏற்பட்டது.
ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் வறட்சியை போக்கி மழை பெய்ய வைக்க வேண்டினர்.
காசியில் இருக்கும் புருஷ மிருகத்தை அழைத்து வந்து யாகம் செய்தால் மழை பெய்யும்,
புருஷா மிருகத்தினை பீமன் அழைத்தால் வரும் என கூறினார் ஸ்ரீமகாவிஷ்ணு.
மக்கள் பீமனிடம் வேண்டினர்.
பீமன் புருஷா மிருகத்தினை திருவாதவூர் அழைத்து வந்து யாகம் செய்தார்.
மழை பொழிந்தது.
வறட்சி நீங்கியது.
தான் வந்த வேலை முடிந்து விட்டது
நான் திரும்ப காசி போகிறேன் என்று சொன்ன புருஷா மிருகத்திடம்
நீ இந்த ஊரின் காவல் தெய்வமாக இரு என்றார் ஸ்ரீ மகாவிஷ்ணு.
அதன்படி இந்த ஊரின் காவல் தெய்வம் ஆனது.
திருவாதவூரில் உள்ள சிவபெருமானை
பிரம்மாவின் சத்திய லோகத்தில் இருந்து புருஷா மிருகம் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாக தலபுராணம் தெரிவிக்கின்றது.
அந்த கோவில் தீர்த்தம்
புருஷா தீர்த்தம்
புருஷா மிருகத்தினால் உருவாக்கப்பட்டது..
புருஷா மிருகம் இந்த ஊர் கண்மாயின்
கரையில் உள்ள இரண்டு பெரிய கல் தூண் மேல் இருந்து இந்த ஊரை காக்கிறார்.
பீமனும் புருஷா மிருகமும் நண்பர்களான கதையும்,
சிவபெருமான் தவிர்த்து மற்றவர்களை வணங்காத புருஷா மிருகம் மகாவிஷ்ணுவை வணங்கியவை அடுத்த பதிவுகளில்...
தொடருவோம்...
No comments:
Post a Comment