Sunday, July 30, 2023

கற்சிற்பம் பிரதிஷ்டைக்குப் பின் கடவுளாவது எப்படி??

கற்சிற்பம் பிரதிஷ்டைக்குப் பின் கடவுளாவது எப்படி??

Thank fb
கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற்சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள். சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.

1. ஜலவாசம் :

புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறை பட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

2. தான்யவாசம் :

48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய 

48 நாட்கள் வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவதானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்யவாசம். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசத்தையும் தாண்டி ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். 

நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக் கொடுத்து விடும்.

3. ரத்னவாசம்

ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்னவாசம்.

4. தனவாசம்

பின்னர் சிலைகளை பொற்காசுகளில் மூழ்கவைப்பர்கள் இது தனவாசம்.

5. வஸ்திர வாசம்

பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலைவாசம் செய்யும்

6. சயன வாசம்

இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகாமஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான்தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலைவைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்

கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.

7. ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். ரத்தினவாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான 

நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

8. ஆறு மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வசிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான்  திறக்கப்படும்.

கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வசிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. அதன் பிறகே அந்த தெய்வ சிலைக்கு முழுமையான அழகு வருகிறது. பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற

பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை அதிர்வுகள் ஊட்டப்படுகிறது. ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் சுவாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. 

இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது, கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை. அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது. மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன.

Friday, July 7, 2023

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம்.


உங்கள் கையெழுத்து சொல்லும் ரகசியம் ..
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம். அவர்கள் தங்கள் கையெழுத்தை மாற்றுவதன் மூலம் தங்களது குணாதிசயங்களை சீர்திருத்திக்கொள்ளலாம்.

நம் எதிர்காலத்தினை ஜோதிடம், கைரேகை பார்த்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. அவரவரின் கையெழுத்தினை பார்த்து கூட தலை எழுத்தினை தீர்மானித்து விடலாம்.

ஒருவர் செல்வந்தர் ஆவதும் செல்வாக்கான வாழ்க்கையினை இழப்பதும் அவரவரின் கையெழுத்தினை பொருத்து கூட அமையும். கையெழுத்தினை வைத்து அவரின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் கலைக்கு பெயர் கிராபாலஜி.

கி.பி.1782-க் ஆண்டு இஸ்ரேல் நாட்டினை சேர்ந்தஅன்னா கோரன் என்னும் பெண்மணி கையெழுத்து ஆராய்ச்சி கலை பற்றி இவர் நிறுவிய நிறுவனம் இன்றும் இயங்கி வருகிறது.

ஒவ்வொருவரின் மூளையிடும் கட்டளையின்படி தான் அவரவரின் கையெழுத்து அமைகிறது. இதன்மூலம் அனைவரின் குணசதியத்தினை அறிய இயலும் என்கிறது விஞ்ஞானம்.

ஒருவர் எந்த மொழியில் எழுதினாலும் அதன் வடிவத்தினை வைத்து அவர்களின் எதிர்காலத்தினை அறிய இயலும்.

கையெழுத்து குறித்து ஆராயும் கல்விக்கு ‘கிராபாலஜி’ என்பது பெயராகும். இது ஒரு பழங்கால கலையாகும். இதன்படி ஒருவரது கையெழுத்தை ஆராய்வதன் மூலம் அவரது குணாதிசயங்கள், எதிர்காலம் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளமுடியும் என்று கருதப்படுகிறது.

மனிதர்களின் கையெழுத்து ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் கையெழுத்தும் ஏதாவது ஒரு வகையில் மாறுபட்டதாகவே இருக்கும். எழுத்துக்களை எழுதும் முறை, அந்த எழுத்தின் மீது ஏற்படுத்தும் அழுத்தம், வார்த்தைகள் இடையே கொடுக்கும் இடைவெளியின் தூரம் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதன் அடிப்படையில் ஆராய்ந்து அந்த எழுத்துக்குச்சொந்தக்காரரின் குணநலன்களை அறிந்து கொள்வது தான் ‘கிராபாலஜி’ எனப்படும் கையெழுத்துக்கலையாகும்.

ஒருவரின் கையெழுத்தின் மூலம் அவரது குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. அழுத்தம்: எழுத்தின் மீது ஒருவர் கொடுக்கும் அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பதன் மூலம் ஒருவரது விடாமுயற்சி மற்றும் பிடிவாத குணம் குறித்து அறியலாம். காகிதத்தில் ஒருவர் எழுதும் எழுத்து, அந்த காகிதத்தின் பின்பிறம் தெரிந்தால் அவர் ஊக்கமும், உற்சாகமும் நிறைந்தவராக இருப்பார். அதேநேரத்தில் அவரிடம் பிடிவாத குணமும் அதிகமாக இருக்கும்.

உங்களது கையெழுத்து காகிதத்தின் பின்பிறம் தெரியவில்லை என்றால் நீங்கள் எதிலும் முனைப்புடன் செயல்படக்கூடியவர்கள், எளிதில் பிறரிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களின் விருப்பத்தின்படி நடப்பதை விரும்பமாட்டீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே எதையும் செய்வீர்கள். மேலும் நீங்கள் பிறரின் கருத்துக்கும், விருப்பத்திற்கும் மதிப்பு கொடுத்து, பிறர் சொல்வதை பொறுமையுடன் கேட்டால் நீங்கள் வெற்றியாளர்களாக மாறலாம்.

2. எழுத்தின் கோணம்: சிலர் எழுதும் போது இடது அல்லது வலது புறத்தில் சரிவாக எழுதுவதுண்டு. இவ்வாறு எழுத்துக்களை சரித்தும், கோணலாகவும், நேராகவும், சாய்த்தும் சிலர் எழுதுவது உண்டு. வலது அல்லது இடது புறம் சரித்து எழுதுவதன் மூலம் ஒருவர் எந்த அளவுக்கு நட்புடன் பழகுவார் என்பதை அறிந்து கொள்ளமுடியும். ஒருவரது எழுத்து வலது புறம் சரிவாக இருந்தால் அவர் திறந்த மனதுடன் பழகுவார். இயற்கையாகவே கலகலப்பாக பேசும் குணம் கொண்டவர். இடதுபுறம் சாய்வாக எழுதுபவர்கள் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரிடம் எளிதில் பேசிப்பழக தயங்குவார்கள்.

3. 'ஐ’ (மி) என்று உச்சரிக்கப்படும் ஆங்கில எழுத்தை சிலர் பெரியதாகவும், அழுத்தமாக எழுதுவதுண்டு. அப்படி எழுதுபவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றவேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் செயல்திறன் மிக்கவர்களாவும் இருப்பார்கள்.

பெரிய எழுத்துக்களாக எழுதுபவர்கள் சமூக வாழ்வில் வெற்றியாளர்களாக திகழ்வார்கள். அவர்கள் சொல்லிலும், செயலிலும் தன்னம்பிக்கை வெளிப்படும்.

4. எழுத்தின் இடைவெளி: எழுதும் போது ஒவ்வொரு எழுத்துக்களும் நெருக்கமாக இருப்பது அல்லது ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகமாக இருப்பது உண்டு. இதில் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்கள் நெருக்கமாக இருந்தால் அவர்கள் அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள். அந்த நண்பர்களிடம் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவர்களிடம் உள்ள குறைபாடு என்னவென்றால் நல்ல நண்பர்கள், தீய நண்பர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களிடம் இவர்கள் நெருக்கம் காட்டுவார்கள். மேலும் இத்தகைய எழுத்துக்களை எழுதுபவர்கள் எதிலும் ஒழுங்கான தன்மையை கையாள மாட்டார்கள். இவர்களிடம் எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் குணம் இருக்காது.

வார்த்தைகளுக்கு இடையே அதிக இடைவெளி இருந்தால் அவர் அதிக செலவாளியாக இருப்பார்கள். அதேநேரத்தில் இவர்கள் தெளிவாக சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எழுத்துக்களுக்கு இடையே உள்ள இடைவெளி சீராக இருந்தால் அவர்கள் புத்திசாலிகளாக, நட்பு பாராட்டுபவர்களாக இருப்பார்கள்.

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம். எனவே அவர்கள் தங்கள் கையெழுத்தை மாற்றுவதன் மூலம் தங்களது குணாதிசயங்களை சீர்திருத்திக்கொள்ளலாம்.

ஒருவர் தன் கையெழுத்தினை அரிசாண்டில்(Horizantal) நிலையில் தெளிவற்றதாக எழுதினாலோ அல்லது 15டிகிரி என்ற நிலையில் எழுதினாலோ அவரின் எதிர்காலம் சிறப்பாக அமையும். இது ஆண், பெண் இருபாலர்க்கும் பொருந்தும்.

30 டிகிரி கோணத்தில் ஒரு பெண் தன் கையெழுத்தினை எழுதினால், அவர் புகழ் பெற்ற வாழ்க்கையினை அடைவர். ஆனால், ஆண்களின் கையெழுத்து இருந்தால் துன்பத்தினை அடைவர்.

45 டிகிரி கோணத்தில் தங்களின் பெயர் தெரியும்படி கையெழுத்து இடுபவர்களுக்கு வாழ்வு சிறப்பானதாக அமையும்.

கையெழுத்திடும் போது 1 செ.மீ. க்கு அதிகமாக கையெழுத்திற்கு அடியில் நீளமான கோடு வரைவது அவ்வளவு நல்லது.

கையெழுத்திற்கு நம் தலையெழுத்தினை மாற்றும் சக்தியுண்டு அதற்கேற்ப நம் கையெழுத்தினை மாற்றி கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நன்றி ; கண்ணன்

Sunday, June 25, 2023

ஆடி அமாவாசை நாளில் அன்னதானம் - ராமேஸ்வரம் 17/07/2023

ஆடி அமாவாசை நாளில் சிறப்பு விருந்து - ராமேஸ்வரம் 24/07/2025
                                ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இணைந்து




அன்படையீர் ..

 அனைவருக்கும் வணக்கம். வருகின்ற 24/7/25  ஆடி அமாவாசை அன்று இராமேஸ்வரத்தில் இராமகிருஷ்ண மடத்தில் நமது பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் சிறப்பு விருந்து மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. 

 நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு  பணி சிறப்பாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். 


" பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை "  Regd.No 32/16
C/o சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell: 9442408009

வாஸ்து சாந்தி விதி படல சந்த்ரிகை.

Thanks FB🙏🙏

வாஸ்து சாந்தி விதி படல சந்த்ரிகை.
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

Friday, June 23, 2023

கும்பாபிஷேகம்

Thanks FB... 

#கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் என்றால் என்ன?

கும்பாபிஷேகம் என்பது குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கோவில்களில், சம்பந்தப்பட்ட தெய்வ திருமேனிகளின் மீது தெய்வ சக்திகளை எழுந்தருளும்படி செய்வதற்கான வழிமுறைகளை செய்வது ‘கும்பாபிஷேகம்’ ஆகும். அது ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் என்ற பொதுவான நான்கு வகைகளில் உள்ளது.

ஆவர்த்தம்

ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.

அனாவர்த்தம்

பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

புனராவர்த்தம்

கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

அந்தரிதம்

கோவில் உள்ளே ஏதேனும் தகாதது நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் பரிகார பூஜை.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் அவசியமான பூஜைகள் பற்றிய விளக்கம்.

அனுக்ஞை – (அனுமதி வாங்குதல்) செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் (புரோகிதர்) தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

சங்கல்பம் – இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை. பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.

கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல். துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு செய்யப்படும் பரிகாரம்.

மிருத்சங்கிரஹணம் – (மண் எடுத்தல்) அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில் இருந்து மண் எடுத்து அந்த பள்ளத்தில் அபிஷேகம் செய்தல். ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் சாந்தி பரிகாரம்

அங்குரார்ப்பணம் – முளையிடுதல் எடுத்த மண்ணில் விதைகளை யிட்டு முளை வளர செய்தல் இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

ரக்ஷாபந்தனம் – காப்புக்கட்டுதல் பூஜைகளை செய்யும் ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் எவ்வித இடையூறுகளும் வராதபடிக் காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு கட்டுதல்.

கும்ப அலங்காரம் – கும்பங்களை இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

கலா கர்ஷ்ணம் – விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் சூரிய சந்திரனை வழிபடுதல்.

மண்டப பூஜை – அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

நாடி சந்தானம் – யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல்.

விசேஷ சந்தி – 36 தத்துவ தேவதைகளுக்கும் பூஜை செய்வது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது.

பூத சுத்தி – இந்த பூத உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

அஷ்டபந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல் இதை மருந்து சாத்துதல் என்பர்.

பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.

கும்பாபிஷேகம் –  யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 45 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில

ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்

பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்

நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்

உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைத்தல்

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தனை தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2 காலம், 4 காலம், 8 காலம், 12 காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது. ஆலயங்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

Wednesday, June 21, 2023

கள்ளழகர் சித்திரை மாதத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கவில்லை.

 1650க்கு முன்பு வரை #கள்ளழகர் சித்திரை மாதத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கவில்லை.


#சோழவந்தான் அருகிலுள்ள #தேனூர் வைகையாற்றில் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுந்தருளி வந்தார்.


1650 காலகட்டத்தில் மதுரையை ஆட்சி செய்த மன்னர் திருமலை நாயக்கர் சைவ, வைணவத்தை ஒன்றினைக்கும் விதமாகவும், நிர்வாக காரணங்களுக்காகவும் 

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்துடன் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவையும் இனைத்து மதுரைக்கு மாற்றினார்.


அதற்கு முன்பு வரை கள்ளழகர், அழகர் மலையிலிருந்து கிளம்பி அலங்காநல்லூர், சோழவந்தான், #திருவேடகம் வழியாக தேனூர் வைகையாற்றில் இறங்கி வந்தார்.


இவ்விழா மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகு கள்ளழகர் தல்லாகுளம் வழியாக வரத் தொடங்கினார்.


இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது.


ஆனால் உண்மையில் மண்டூக மகரிசிக்கும், நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.


திருவிழா மதுரைக்கு மாற்றப்பட்டதை இப்பகுதி மக்கள் விரும்பவில்லை, 


(இதை ஏற்காமல் இன்றுவரை தேனூரில் ஒரு சமூகத்தினர் அழகர்கோயில் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது)


இதைத் தொடர்ந்து தான் மக்களின் எதிர்ப்பை சமாளிக்கும் விதமாக மதுரை வைகையாற்றில் அழகர் இறங்குமிடத்தில் #தேனூர் பெயரில் மண்டபம் அமைத்து மரியாதை செய்ததுடன், மற்றொரு நாளில் தேனூர் அழகுமலையான் கோவிலிலிருந்து தேனூர் வைகையாற்றில் இறங்க ஏற்பாடு செய்தும்,


கள்ளழகர் மதுரையில் இறங்கும் அதே தினத்தில் பாண்டியர் கால பழங்கோவிலான #சோழவந்தான் #ஜெனகைநாராயணப்பெருமாள் கள்ளழகராக #சோழவந்தான் வைகையாற்றில் இறங்கும் விழாவும் ஏற்படுத்தப்பட்டது.


அன்றிலிருந்து இன்றுவரை 370 ஆண்டுகளுக்கும் மேலாக சோழவந்தான் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.


இதற்கு பின்னர் சிவகங்கை மக்களின் வேண்டுகோளை ஏற்று #மானாமதுரை மற்றும் #பரமக்குடி யிலும் அழகர் இறங்கும் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


#படித்ததைப்பகிர்ந்தேன்

#வேகவதி நன்றி 🌿


புருஷா என்கிற புருஷ மிருகம்


Thanks FB


அவனே இவன்
ஹரியும் சிவனும் ஒன்றே 3a
புருஷா என்கிற  புருஷ மிருகம் 

தருமர் ராஜகுரு யாகம் செய்ய விரும்பினார்.

அந்த யாகம் நடத்த புருஷா மிருகத்தின் பால் தேவைபட்டது.

புருஷா மிருகம்
மனித முகத்தையும் சிங்க உடலையும் 
கொண்ட மிருகம்.

இந்த புருஷா மிருகம் சிவனின் மேல் அதீத பக்தி கொண்டது.
ஸ்ரீ மகாவிஷ்ணுவை அதற்கு பிடிக்காது.

குபர வனத்தினை பாதுகாக்கும் வேலையை இந்த புருஷா மிருகம் செய்கின்றது.

சிவன் விழாக்காலங்களில்
இந்த புருஷா மிருகத்தின் வாகனத்தின் மீது அமர்ந்து வீதியுலா வருவதை காணலாம்.

பதினாறு வகையான தீப வழிபாடுகளில் 
இந்த புருஷா மிருக தீப வழிபாடும் உள்ளது.

மூன்று கதைகள் புருஷா மிருகத்தினை
மையமாக வைத்து இருக்கிறது.

கதை 1

காசியில் புருஷ மிருகம் சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தது.

மதுரைக்கு அருகே திருவாதவூரில் கடும் வறட்சி ஏற்பட்டது.

ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் வறட்சியை போக்கி மழை பெய்ய வைக்க வேண்டினர்.

காசியில் இருக்கும் புருஷ மிருகத்தை அழைத்து வந்து யாகம் செய்தால் மழை பெய்யும்,
புருஷா மிருகத்தினை பீமன் அழைத்தால் வரும் என கூறினார் ஸ்ரீமகாவிஷ்ணு.

மக்கள் பீமனிடம் வேண்டினர்.

பீமன் புருஷா மிருகத்தினை திருவாதவூர் அழைத்து வந்து யாகம் செய்தார்.

மழை பொழிந்தது. 

வறட்சி நீங்கியது.

தான் வந்த வேலை முடிந்து விட்டது 
நான் திரும்ப காசி போகிறேன் என்று சொன்ன புருஷா மிருகத்திடம்
நீ இந்த ஊரின் காவல் தெய்வமாக இரு என்றார் ஸ்ரீ மகாவிஷ்ணு.

அதன்படி இந்த ஊரின் காவல் தெய்வம் ஆனது.

திருவாதவூரில் உள்ள சிவபெருமானை 
பிரம்மாவின்  சத்திய லோகத்தில் இருந்து புருஷா மிருகம் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாக தலபுராணம் தெரிவிக்கின்றது.

அந்த கோவில் தீர்த்தம் 
புருஷா தீர்த்தம்
புருஷா மிருகத்தினால் உருவாக்கப்பட்டது..

புருஷா மிருகம் இந்த ஊர் கண்மாயின்
கரையில் உள்ள இரண்டு பெரிய கல் தூண் மேல் இருந்து இந்த ஊரை காக்கிறார். 

பீமனும் புருஷா மிருகமும் நண்பர்களான கதையும்,
சிவபெருமான் தவிர்த்து மற்றவர்களை வணங்காத புருஷா மிருகம்  மகாவிஷ்ணுவை வணங்கியவை  அடுத்த பதிவுகளில்...

தொடருவோம்...