Tuesday, December 25, 2012

Siva Panjatcharam



ஐந்து எழுத்து மந்திரம் 





ஐந்து எழுத்துக்கள் (அட்சரங்கள்) அமையப் பெற்றிருக்கும் மந்திரம்!


ந + ம + சி +வா + ய!
மேலோட்டமான பொருள்: நம (வணங்குகிறேன்), சிவாய (சிவனை)!

நுட்பமான பொருள்: (முன்பு அடியேன் ஓம் நம நாராயணாய என்னும்திருவெட்டெழுத்துக்குச் சொன்னது போலத் தான்...)
ந+ம =இல்லை+எனது=எனதில்லை
சிவாய = (அனைத்தும்)சிவனுடையதே!
பஞ்சாட்சரதத்துவம் மிகவும் பெரிது! திருமூலர் திருமந்திரத்தில் இதைப் பலவாறு விளக்குவார்!பஞ்சாட்சரமே மொத்தம் ஐந்து வகையாய் இருக்கு!
ஆமாம் மொத்தம் ஐந்து வகையானஐந்தெழுத்து! இதோ.....


நமசிவாய = ஸ்தூல பஞ்சாட்சரம்
சிவாயநம = சூட்சுமபஞ்சாட்சரம்
சிவாயசிவ = கரண பஞ்சாட்சரம்
சிவாய = மகா கரண பஞ்சாட்சரம்
சி =முக்தி பஞ்சாட்சரம்

எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும், ஆண் பெண்பேதமின்றி, சாதி மத பேதமின்றி, தீட்டு/பூட்டு என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல், யார்வேண்டுமானாலும் துதி செய்யவல்லது இந்தத் திருவைந்தெழுத்து! 


குளித்தோ, குளிக்காமலோ, உடுத்தியோ உடுத்தாமலோ, உண்டோ, உண்ணாமலோ எப்போது வேண்டுமானாலும் ஜபிக்கவல்ல மந்திரம் இது!
இதன் பெருமையைப் பலரும் போற்றி உள்ளனர். திருமூலர்சிவசிவ என்று சிந்தித்து இருந்தால் தீவினை எல்லாம் தீரும் என்கிறார்










திருவைந்தெழுத்தின் பொருமையை திருமந்திரம் குறிக்கையில்
‘அஞ்ந்தெழத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்ந்தெழத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்ந்தெழத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்ந்தெழத் தாலே மெர்ந்துநின் றானே’
குறிப்பிடுகின்றார். திருவைந்தெழுத்தின் ‘ம’காரத்தினால் உலக படைக்கப்பட்டது. ‘ய’காரத்தால் உடலும் உயிரும் இணைந்து விளங்குகின்றது. யோனியான உயிர் நகர அடையாளத்தால் விரிந்த உலகத்தை இயைந்து யாக்கிக் காக்கும் நடுநிலைமை விளங்கும் ‘சி’காரம் ‘வ’கார அடையாளங்களால் எல்லாமாய் அமர்ந்தமை விளங்கும் என குறிப்பிட்டுள்ளார். அஞ்தெழுத்து உலகத்தை ஆக்க வல்லது என்பது புலணாகும்.
அஞ்செழுத்து பந்தத்திலிருந்து விடுலையளிக்கும் என்பதை
‘வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவர்ற்குச்
சார்ந்த வினைத்துயார் போகத் தலைவனும்’ 
போந்திடும் என்னும் புரிசடை யோனே
திருவருட் துணையால் திருவைந்தெழுத்தை முறையாக ஒதுவதனால் உலகியல் நுகர்வுடன் அதன் கண் தொடக்கின்றி வாழ்தலுமாகும். புpறவிப் பெருந்துயர் நீங்கத் தம் முதல் முருவுமாய் வந்தருலுவான். புரிகடையோன் என்னும் போது புரி 10 சடையோன் என்பது திருவாதிரை நாளை விரும்புபவன் என்றும் ஒன்றாய் வேறாய் உடனாய் விரும்பி உறையும் பண்பினேன். என்பது பொருள்.

திருவைந்தெழுத்தால் எல்லாவுலகமும் ஒழுங்காக நடைபெறுகின்றது. என்பதை
ஐந்தின் பெருமையே அகலிட மாவது
ஐந்தின் பெருமையே ஆலய மாவது
ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனு மாமே’
திருவைந் தெழுத்தின் சிறந்த திருக்குறிப்பே திருக்கோயிலாகும். அதில் ‘சி’காரம்; சிவலிங்கமாகும். ‘வ’காரம் அடுத்த மண்டபமாகிய மனோன்மணி நிலை. ஆனேற்று நிலை ‘ய’காரம். அம்பலவாணர் நிலை ‘ந’காரம். பலிபீடம் ‘ம’காரம் அவ்வாறு பெருமை பெற்றது திருவைந் தெழுத்து.
ஓர்எழுத்தான ஓமிலிருந்து பஞ்சபூதங்களானான் ஐந்தெழுத்தில் என்பதை திருமந்திரம்
‘வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரேழுத் தாயநில ந்தங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாயுயி ராமெழுத்து
ஓரெழுத் தீசனும் ஒண்சுட ராமே’ 
விண் ‘வ’காரமாயும் நீர் ‘ம’ காரமாயும் நிலம் ‘ந’ காரமாயும் தீ ‘சி’ காரமாயும் காற்றாகி உயிரெழுந்து ‘ய’ காரமாயும் உள்ளவன் சிவன் ‘வமநசிய’ என்பதில் அடங்கும்.
திருவைந்தெழுத்தல் ‘ந’காரமே உலகை உருவாக்கும் என்கின்றது திருமந்திரம்

‘நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே’ 

உலகம் அடங்கி அதன் ஆணைப்படி நடக்கும் ‘நமசிவாய’ என ஓதுவார்க்கு நன்நெறி செல்லும் வெல்வர்களாவர்.









அகாரம் உயிரே உகாரம் பரமெ
முகாரம் மலமாய் வருமுப் பதத்திற்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென் றறையலு மாமே’

உயிரெனக் குறிக்கும் உடல் மெய் இருபத்திநான்கும் அகாரமாகும். புரமென குறித்து உணர்ந்து மெய் ஐந்தும் உகாரம் மாகும். முலமெனக் கூறிய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும். இம் முப்பத்தாறும் மெய்களுள் சிகாரம் கிவமாய் உயிருக்குயிராய் வகாரம் சிவனின் திருமேனியாய் யகாரம் திருவருளாகும். ஏனக் குறிப்பிட்டுள்ளார்.

‘நகார மகார சிகார நடுவாய்
வகாரம இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதற்கொண்டு டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்கத் தானே’

நமசிவாய என்பதில் சிகாரம் நடு இரண்டு வளி என்பது இடபால் வலபால் மூச்சு என உயிர் அடையாளமான யகாரத்தைக் குறிக்கின்றது. ஓம் எனும் மந்திரத்துடன் சேர்த்து நமசிவாய மந்திரத்தை ஓம் நமசிவாய என ஓத சிவப்பரம் பொருள் நெஞ்சகத்தே கோயில் கொள்வான் என்கின்றது திருமந்திரம்.

சிவபெருமானின் மந்திரவுருவை கூறுகையில்
‘சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுமஞ்
சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே’

‘சிவய’ என்பதுடன் முதலாக ‘சிவ’ என்பதைச் சேர்த்து ‘சிவயசிவ’ என்பதே சிவபெருமானின் மந்திரவுருவாகும். இதனை தெளிந்தார் ‘சிவசிவ’ என சிந்திப்பர். இதனை ‘ஓம் சிவ சிவசிவ சிவயசிவ சிவாயநம மசிவாயந நமசிவாய யநமசிவ வயநமசி சிவசிவ சிவசிவ ஓம்’ என்று உட்சாடணம் செய்வதனால் இம்மந்திரத்தின் உன்னதபலனை பெறமுடியும் என்பது தின்னம்


Thank:https://aanmikam.blogspot.com/2011/02/blog-post_6926.html
         https://janahang.com/kumar/?p=882



Thanks & Regards

Harimanikandan.V
Sadhanandaswamigal Blogspot

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌யநமசிவ‌வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)



4 comments:

  1. Excellent post about Panjacharam.....nandri

    ReplyDelete
  2. நல்ல விளக்கம் . நன்றி

    ReplyDelete
  3. நல்லதொரு விளக்கம் அளித்த தற்கு 🙏🙏🙏

    ReplyDelete