Monday, April 1, 2013

நெற்றிக்கண்ணைத் திறக்க அஞ்சனப்பிரயோகம்அஞ்சனம்

நெற்றிக்கண்ணைத் திறக்க ஒரு எளிய முறை

Third Eye Opening 


 திரு. மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அஞ்சனப்பிரயோகம் [ Anjanap Prayogam ] அனுபவங்களை 

 அஞ்சன என்பது கண்களுக்கு தீட்டும் மையே 
பார்வதி தேவியை,அஞ்சன மையிடும் அம்பிகே என்றழைப் பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.பெண்கள் மட்டுமே கண்ணில் மையிடுவார்கள் என்பது தவறு.பெண்களும்,ஆண்களும் கண்ணுக்கு தவறாமல் மையிட்டு வரலாம்.அதன் மூலம் பல நோய்கள் நம் உடலை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளலாம். 

நீலாஞ்சனம் அல்லது சுருமாக்கல் அல்லது  கருமாக்கல் என்றழைக்கப்படும். 

அஞ்சனக்கல் பன்னீர் விட்டு இழைத்து கண்புருவங்கள் ,கண் பட்டை,லலாட மத்தி என்று அழைக்கப்படும் நடு நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள நெற்றிக்கண் எனப்படும் புருவப்பூட்டு 90 நாட்களில் திறக்கும். எனது உறவினரும் பலருக்கு ஆன்மீக குருவாகத் திகழும் ஆன்மீகச் செம்மல் அமரர் திரு மிஸ்டிக் செல்வம் அவர்களும் இதைப் பற்றி தமது நூலில் விவரித்துள்ளார்.


முஸ்லீம் அன்பர்கள் ஒவ்வொரு தொழுகையின்போதும் இந்த சுருமாவை கண் பட்டைகளில் போட்டுப் பின் தொழுகை செய்வதை கடமையாகச் சொல்லி இருக்கிறார்கள்.நெற்றிக் கண் 

மக்களின் ஆன்மீக நிலை பஞ்சபுதங்களாலும், நட்சத்திரங்களாலு��- �் அடிப்படையில் மாறுபடுவதால் ஒரே வித்தை (பயிற்சி) பலருக்கு பலவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். 


ஆண்கள் பாதரச அம்சம். பெண்கள் கந்தக அம்சம். பெண்களின் சக்தி மாதம் ஒரு முறை குறைந்து விடுகிறது. 
யோக நிலையில் மிக உயர்ந்த நிலையாகக் கருதப் படுவது நெற்றிக் கண் திறப்பது. 

நெற்றிக் கண்ணைத் திறக்கப் பல்வேறு உபாயங்கள் மனிதர்களால் செய்யப்பட்டு வருகின்றன. 

 
திபெத் நாட்டில் வாழும் லாமாக்கள் நெற்றியில் ஓட்டை போட்டு குச்சியால் அடைக்கின்றனர். பழங்குடி மக்கள் புருவ மத்தியில் சூடு போடுகின்றனர். வைணவர்கள் சுழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர். சாக்தர்கள் குங்குமம் இடுகின்றனர். பெண்கள் நெற்றி சுட்டி அணிகின்றனர். இஸ்லாமியர் முட்டி முட்டித் தொழுகின்றனர். 
பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி உபநயனம் செய்கின்றனர். யோகிகள் சுழுமுனை மந்திரத்தாலும், பிராணாயாமத்தாலும��- � நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர். 


ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர். மருத்துவர்கள் கண்ணுப் புழை என்னும் மூலிகையால் திறக்கின்றனர். 
ராஜ குருக்கள் வைரக் கற்களால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர். மந்திரவாதிகள் ருத்திர பஸ்பத்தால் திறக்கின்றனர். 


சைவ மடாதிபதிகள் ஒரு முக ருத்திராட்சத்தால��- � நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர். மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக் கல்லால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர். கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளி மூலம் கண்ணைத் திறக்கப் பயிற்சி செய்கின்றனர்.

நெற்றிக்கண்ணைத் திறக்க ஒரு எளிய பயிற்சி முறை: 


நாட்டு மருந்துக் கடையில் சுருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் எனக் கேளுங்கள். 5 கிராமிற்குக் குறையாமல் 10 கிராமிற்கு மிகாமல் ஒரே கல்லாக வாங்கவும். கோணல் மாணலாக இருக்கும். வாங்கிய கல்லை உப்புத் தாளில் தேய்த்துக் கொள்ளவும். 
அதிலுள்ள ஒளிக்கற்றை சூட்சுமமாக வெளிப்படும். தரையில் விரிப்பு விரித்துத் தலையணை வைக்காமல் விளக்குகளை அணைத்து இருளில் படுக்கவும். வடக்கு தவிர இதரப் பக்கம் தலை வைத்து மல்லாந்து படுக்க வேண்டும். 


இரவில் சுமார் 7 மணிக்குப் பால் சிறிது சாப்பிட்டு 10 மணிக்கு மேல் இப்பயிற்சியை ஆரம்பிக்கலாம். அஞ்சனக் கல்லை கண்களை மூடியோ அல்லது மூடாமலோ இரு புருவங்களுக்கு மத்தியில் வைக்கவும். சுருமாக்கல்லில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தெய்வீக ஒளிக்கற்றைகள் நெற்றிக் கண் ஜவ்வை சிறிது சிறிதாக கிழிக்கும். ஒளி சிறிது சிறிதாக வெளிவரும். 


ஒளி நிலை கூடுதலாகி நெற்றிக்குள் பு+ரண சந்திரன் போல் காட்சி கொடுக்கும். அருள்நிலை பெருகும். 90 நாள் பயிற்சியில் வெற்றி பெறுவீர்கள் . 


சங்கரன் கோவிலில் அம்பாளுக்கு மாவிளக்குச் செய்து நெய்யு+ற்றித் தாமரை நுhல் போட்டு மல்லாந்து படுத்து நெற்றியில் வைத்து நோன்பு நோக்கின்றனர். இதுவும் ஒரு முறையாக செய்கின்றனர். 


குண்டலினி யோகப் பயிற்சிக்கு மட்டும் கால வரையறை கிடையாது. மற்ற எல்லா வித்தைகளையும் 90 நாள் தொடர்ச்சியான சாதனையால் முடித்து விடலாம். இந்த காலத்தில் முடிக்க முடியாதவர்கள் மன ஊக்கத்துடன் பயிற்சியைத் தொடரலாம்.
Thank to http://en.netlog.com/thillairaj/blog/blogid=5223413

7 comments:

 1. Realy a wonderfull message,that can be practiceable and achievable by those who really OPEN MINDED TO OPEN THEIR(D) EYE.May the eternal power will give wisdom to the blessed Ones...

  ReplyDelete
 2. நல்ல பயனுள்ள தகவல் .நன்றி

  ReplyDelete
 3. dear hari manikandan sir , that information very nice to all and mystic selvam ayya book i want to read , that book where available now and pl send yr phone no pl sir ....

  ReplyDelete
 4. MysticSelvam Ayya have written books Sri Swarna bhairava, Aanmika Thiravukol, Siva Parakramam about 64 siva , I got information from selvam ayya Brother Sri varahi Balan , this year end above three book will reprint ... chamundihari@gmail.com

  ReplyDelete
 5. sir ungala meet panna mudiyuma?

  my mobile number 9003127339

  ReplyDelete
 6. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நெற்றிபொட்டில் அந்த அஞ்சன கல் வைக்க வேண்டும் ? 90 நாட்களுக்கும் மேலும் வைக்கலாமா ?

  ReplyDelete