Wednesday, July 2, 2014

தவம் - யோகம் (YOGAM)

நிறைய நண்பர்கள் தமிழில் எழுத கேட்டார்கள். என் இயலாமையே முக்கிய காரணம்.

மனதில் தோன்றுவதை அப்படியே எழுத்தில் கொண்டுவருவதென்பது கொஞ்சம் கஷ்டம். தமிழ் தட்டெழுத்து தெரியாத காரணத்தால் ஆங்கிலத்தில் எழுத வேண்டிய கட்டாய நிலை ஆகி விட்டது. தமிழில் இங்கே இப்பொழுது என் கைகளால் தட்டெழுத்து செய்து இணைத்திருக்கிறேன். குருவின் அருள் இருந்தால்  பின்னர்  தட்டெழுத்தால் தமிழில் எழுதி இணைக்கிறேன்.

“யோகம்” என்பது தெய்வீகம் தொடர்புடையது, நினைத்த போது கடைத்தெருவில் வாங்க இயலாத ஒன்று

எதிலும் அவசரம் காட்ட வேண்டாம் என்றே யோகத்தில் ஆரம்ப நிலைகளில் சொல்லப்படுகிறது.

அவசரமே செயலின் நோக்கத்தை பெரும்பாலும் குறைத்து விடும் எந்த காரணத்திற்காக அந்த செயல் தொடங்கப்பட்டதோ அதன் தன்மையை அவசரம் சாப்பிட்டு விடும்.
தாகம் ஏற்ப்பட்டால் அமைதியாக பொறுமையாக இருங்கள் என்றே பல குருமார்களால் மிக அழுத்தமாக எடுத்துரைக்கபடுகிறது.

அது முழுமையடையும் போது அதை தீர்க்க சந்தர்ப்பம் தானே வரும் அது எந்த தாகமாக இருந்தாலும் சரி அதன் முழுமையை பகரும் போதும் அதை தெளிவாக உணர முடியும்.

ஓவ்வொரு செயலுக்கும் ஒரு காலம் அல்லது பருவம் உண்டு விதைத்தது முளைத்து தான் ஆக வேண்டும். அது வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். காத்திருப்பும் கவன குவிப்புமே தவத்தின் வெற்றி. இது என் வாழ்க்கையில் என்னுடே தழுவி வந்ததை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

வேலையை மட்டும் நீங்கள் செய்யுங்கள். அந்த தாகத்திற்குரியது கட்டாயம் வந்தே தீரும்.
தவம் என்பது தற்போது தெருவிற்கு தெரு கூவி விற்கும் பல வகுப்புகள் போல அல்ல அது. தவம் உள்ளுக்குள் ஓட ஆரம்பித்து விட்டால் அதன் பிறகு வரும் செயல்கள் நாம் நினைத்த படி தான் முடிவுக்கு வரும். வெளியில் அமாவாசை நாள் என்றால் உள்ளுக்குள் அதன் தாக்கம் நேரடியாக இரண்டு நாட்கள் முன்பே ஆரம்பமாகி விடும். தலை பாரம் வயிற்று வலி இவைகள் அக்காலங்களில் சித்தனின் அவஸ்தைகள். யோக நிலைகளில் உள்ளுக்குள்ளும் அண்ட வெளிக்குள்ளுமாக தொடர்பு யோகியை உலுக்கி எடுக்கும் நாட்கள் வேதனைக்குரியவை. பௌர்ணமி நாளில் சக்தி ஒட்டம் உடம்பிற்குள் தலைகீழாக ஓட அரம்பிக்கும். புவி ஈர்ப்பு விசை அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் கொண்டு வந்து விடும். அதன் அவஸ்தையை நான் உடம்பினுள் அவதிபட்டிருக்கிறேன். தவம் செய்யும் நேரங்களில் யோகம் கூடும் சமயங்களில் மொத்தென்று விழுந்திருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்பு மந்திர தீட்சை கொடுத்த ஆரம்ப நாட்கள் அவைகள். விடிந்த வேளையில் சமாதி நிலையான குரு என்னை எழுப்பி இன்றிலிருந்து 48 நாட்கள் நீ என் கட்டளைக்கு கீழே வருகிறாய் என்றார். என் உடல் கட்டிலில் இருந்து அவரை நோக்கி எழும்பி செல்கிறது. என் மனது கால பைரவர் மந்திரத்தை ஓங்கி ஒலிக்கிறது. அவர் என்னை நோக்கி என்னிடமே பிரோயகமா ஜாக்கிரதையாக இரு” என்கிறார். நான் கட்டிலை கெட்டியாக பிடித்தேன். அப்போது அந்த கணங்களில் நான் என் உடலை என் கண்களால் பார்க்கிறேன். மனைவி கைகளில் காப்பியை வைத்துக் கொண்டு என் உடலை எழுப்புகிறார். என் மகன் முன் அறையில் சூரிய ஒளியில் விளையாடுவதை பார்க்கிறேன். எதிரே குருநாதர் ஏளனமாக சிரிக்கிறார். நான் கொஞ்சம் பொறு என்பது மனைவிக்கு கேட்கவில்லை. உன் புலன்கள் அடைக்க பட்டு பல நாட்கள் ஆச்சு என்றார்” குரு. விழிப்பு நிலைக்கு என் உடல் வருவதை நான் உணர்ந்தேன்.

அண்டமும் இந்த பிண்டமும் ஒன்றாக முறுக்கிக் கொண்டு என்னை யோகத்திலும் மனித வாழ்கையின் சாதரரண மகிழ்ச்சியை யோகத்தினுடே செல்வதிலும் அறிந்து மிகவும் துன்புற்றிருக்கிறேன்.

ஏந்த அளவிற்கு எளிமையோ அந்த அளவிற்கு அருள் என்பார்  என் குரு.
இதை தினமும் ஒரு முறையாவது படிக்கிறேன்.

சுமாதி நிலைக்கு மனத்தை தயார் படுத்துபவனே யோகநிலைக்கு எளிதாக வசப்படுவான். ஞானத்தின் திறவு கோல் அஷ்டமா சித்திகள். ஆனால் பலர் சித்திகள் அடைவதே குறிக்கோளாய் திரிகிறார்கள்.  மந்திரங்களாலும் பல மணி உருட்டி செபித்தலாலும் வாழ்க்கை பயனற்று போகும் என்றே சித்தர்களால் சொல்லப்படுகிறது.

ஓரு முறை என் குருநாதரிடம் எனக்கு சமாதி நிலை எப்போது கிடைக்கும் என்று கேட்டேன். நடந்து கொண்டிருந்த போதே நடு ரோட்டில் என்னை விட்டு சென்று விட்டார்.

பல வருடங்களுக்கு பிறகு அண்மையில் நான் அவரிடம் எனக்கு வேலையில் பரோமஷன் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்ட போது அவர் கூரிய வார்த்தைகள் பல நாட்கள் தொடர்ச்சியாக காதில் கேட்டுக் கொண்டிருந்தது.
 “சனி திசையில், இந்த நாளில், இந்த நட்சத்திரத்தில் அந்தி சாயும் நேரத்தில் எல்லாம் வல்ல குரு அருளினால் நீ சமாதியடைவாய்”.

இதனுடன் இந்த பகுதியை முடிக்கிறேன். மேலே பல விஷயங்களை இலை மறை காயாக திறந்திருக்கிறேன். தகுதியான நபர்கள் அறிவார்கள். சரியான குரு யார் என்பதும் தவம் என்ன என்பதை அறிவதற்கும் ஆன்மீகத்தின் மறைவான பகுதிகளை உணர்ந்து கொள்வதற்குமே இது எழுதப்பட்டது.
thank : https://kthillairaj.blogspot.com/2011/12/yogam.html

No comments:

Post a Comment