Wednesday, February 17, 2016

'சக்கரை அம்மா குருபூஜை'':18-2-16


Thank From FB 
சென்னை திருவான்மியூர் சக்கரை அம்மா குருபூஜை :18-2-2016'சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன்இல்லை நீ இல்லையே"....''சக்கரை அம்மா குருபூஜை'':18-2-16...,"சென்னை திருவான்மியூர் பெண் சித்தர் சக்கரை அம்மன் சமாதி திருக்கோயில்"..

ஆலயதொடர்புக்கு:9444017389......இங்கு உண்டியல் கிடையாது...எப்போதும் தன் இடையில் நாக பாம்பை சுற்றி கட்டி இருப்பார் இந்த பெண் சித்தர் சக்கரை அம்மன் ..பறக்கும் சக்தி உடையவர் இந்த சக்கரை அம்மா..ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பறந்தே செல்லும் சக்தி படைத்தவர் .இதனால் இவரை ‘பறவை சித்தர் என்றும் கூறுவர்..இவரது உபாசனை தெய்வம் சிவபெருமானே.....“காஞ்சி மகா பெரியவர் 1948, ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் சக்கரை அம்மா சன்னிதியில் உட்கார்ந்து தியானம் செய்தாராம்.இவரது குரு சிவபெருமானே.. சிவனையும் ஸ்ரீசக்கரத்தையும் மட்டுமே வழிபட்டு வந்ததால், ஸ்ரீசக்கர அம்மா என்றாகி சக்கரை அம்மாவாக மருவிவிட்டது.

தன் பக்தர்களை எல்லாம்"சென்னை திருவான்மியூர் திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துப் போய் ஈசனிடம், “என்னோட இந்த குழந்தைகளுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்க. உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீதான் முக்தி கொடுக்கணும் சரியா?” என்று உரக்கச் சொன்னாராம். அப்படி சொன்ன பத்தாவது நாளில் 28-2-1901 பிற்பகல் 3.30 மணிக்கு சக்கரை அம்மா ஈசனுடன் கலந்தார்..சமாதி ஆவதற்கு முன் தன் முதன்மை சிஷ்யன் மகாகவி பாரதியாரின் நண்பர் டாக்டர் நஞ்சுண்ட ராவ் என்பவரை அழைத்து தான் சமாதி ஆகி சரியாக 100 வருடங்கள் ஆனதும் என் சமாதி துலங்கும் என்றாராம்..அதன்படியே தற்போது மிகுந்த அதிர்வுகளுடன்,வேண்டியதை கொடுக்கும் திருத்தலமாக சக்கரை அம்மாவின் சமாதி திருக்கோயில் திகழ்கிறது.இன்றும் இந்த ஜீவ சமாதியில்இங்குமங்கும் சக்கரை அம்மா நடந்தபடி இருக்கும் காலடி ஓசையை கேட்க முடியும் என்கிறார்கள் அடியவர்கள்..இங்கு மாதாந்திர திருவாதிரை,பௌர்ணமி நாட்கள் சிறப்பு...இதன் அருகிலேயே முருக அடியவர் மகான் பாம்பன் சுவாமிகள் சமாதி திருக்கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.. தமிழறிஞரும் தேசபக்தருமான தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் 'உள்ளொளி' என்ற தலைப்பில் தமது நூல் ஒன்றில் "'
சென்னை கோமளீச்சுவரன் பேட்டையில்[தற்போது புதுபேட்டை] ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற மருத்துவர் நஞ்சுண்டராவின் குரு சக்கரை அம்மா. அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் (இராயப்பேட்டைவெஸ்லி கல்லூரி) மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கின்றது என்றால் விந்தையல்லவா? நான் தேசபக்தன் ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்டராவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. நஞ்சுண்ட ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார்" என்று கூறியுள்ளார்.''சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே""...சக்கரை அம்மாவை மனதில் கொண்டு வாருங்கள்...உங்கள் வாழ்வில் நிம்மதி தேடி ஓடி வரும்..ஆம்!மன நிம்மதி வேண்டுபவர்கள்,மனகுழப்பம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் உடனே சரியாகும்...அதுமட்டுமல்ல சக்கரை அம்மா சன்னதி வந்து தொடர்ந்து 11 திருவாதிரை நாட்கள் வழிபட உங்கள் எண்ணம்கள் யாவும் ஈடேறும்..இங்கேசென்றவர்களின் மன உளைச்சல், தீராத வியாதி, குடும்பத்தில் மன வருத்தங்கள் ஆகியனவற்றுக்குத் தீர்வு கிடைப்பதாயும் கூறுகின்றனர்..ஆலயத்தின் பின்னால் இருக்கும் கூடத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு நீதிக்கதைகள், ஆன்மீக சிந்தனைகள், போதிக்கப்படுகின்றன. தியானம் செய்ய தியான மடமும் உள்ளது.கோயிலை நிர்வகிப்பது சுமனா சுரேஷ் என்பவர்.சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா ரோட்டில்,பாம்பன் சுவாமி திருக்கோயில் அருகில் சக்கரை அம்மா திருக்கோயில் உள்ளது.நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்"...கட்டுரையாக்கம்:
அன்பன்.சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம்,9787443462

Sri Sakkarai Amma Temple Late Dr. MCN Pvt Religious Trust # 75 Kalkshetra Road Thiruvanmiyur Chennai 600 041 India Tel: +91-44-2452 1236 Contact Person: Smt. Sumana Suresh
http://www.srisakkaraiamma.com/thetemple.htm


2 comments:

  1. அற்புதம்!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  2. வாழ்க வளமுடன்

    ReplyDelete