பாகம் 3:
நந்தி தேவர் திருவாரூரின் சிறப்பினை கூறிவிட்டு தொடர்ந்தார்.

ஆனந்த கூத்தனாய் இந்த உலகிற்கே இதயமாய் இயங்கிக் கொண்டிருக்கும் ஊர் ஒன்று உள்ளது. அங்கே இருக்கும் இறைவனை அவனின் ஆட்டத்தை தரிசித்தாலே நாம் வீடு பேறு அடையலாம். அந்த பொண்ணம்பலத்தில் நடனமாடும் நடராஜனின் கையில் ஆயிரத்தில் ஒரு பங்கு தான் கயிலாயத்தில் உள்ளது இத்துனை சிறப்பு பெற்ற சிதம்பரத்தை அங்கே ஆனந்த நடனம் ஆடிக்கொண்டே இருக்கும் நடராச மூர்த்தியை தரிசித்தால் மேலான பிரம்மாவும் விஷ்னுவும் பெறாத முக்திப்பேறு நாம் பெற முடியும்.
ஆதியில் பிரம்மா மலைகளை படைக்க வேண்டி பூஜை செய்ததும் விஷ்னுவானவர் பூஜித்ததும். இத்தலத்தில் உயிர் பிரிந்தால் அவை அழுகாமல் புழுக்கள் வைக்காமல் முக்தி அடையும் தலமான விருத்தாச்சலம் என்னும் விருத்தகிரியை தரிசிப்போருக்கு முக்தி கிட்டும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை.
உமையம்மைக்கு இடப்பாகம் தந்த ஈசன் மகிழ்ச்சியோடு உறையும் இடம் . மூவுலகத்தவர்க்கும் முக்தி பெற ஏற்ற தலமாய் விளங்கும் இடம் திருக்கேதாரம் என்னும் தலம். இப்பிறவியில் வரும் துன்பத்தையும் மறுபிறவியில் வரும் துன்பத்தையும் போக்கும் சிறப்பு கொண்டது திருக்கேதாரம் ஆகும்.


அன்ன வாகனத்தை உடைய பிரம்மன் இந்த உலகத்து உயிர்களை படைப்பதற்கு முன்
மல்லிகார்சுனமலையில்(பர்வத மலை) வீற்றிருக்கும் மல்லிகார்சுனேஸ்வரரை பூசித்தான். இன்றும் தினமும் இருவேளை பிரம்மன் வந்து பூசை செய்து கொண்டிருக்கும் தலம் பர்வதமலை ஆகும். மேலும் வேங்கடவன் வந்து பூசை செய்துவிட்டு தான் மானிட பிறப்பெடுக்க சீனிவாசனாக மாற பூசை செய்த தலமாகும்.
இப்படி பல சிவஸ்தலங்களின் சிறப்பை நந்தியெம் பெருமான் சிறப்பாக கூறுகிறார்.

தலங்களின் சிறப்பு தொடரும்...
அண்ணாமலையெம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி.
அண்ணாமலையாருக்கு அரோகரா.
- சிவனடி சிவகேணசன்.
பஞ்சபுராணம் 🌻 ஐம்புராணம
அருணாசலபுராணம்:
பாகம் 4:
நந்தி தேவர் தொடர்ந்து தலங்களின் சிறப்புகளை கூறலானார்.
சிவகோசாரியர் என்னும் பிராமனர் அருகு புஷ்பங்களை பூஜித்தும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட ஈசன் உறையும் தலமொன்று உண்டு கேளுங்கள். பக்தியுடன் கண்ணைப்பிடுங்கி பதித்த கண்ணப்பரின் கால் செறுப்பையும் விறுப்பமோடு ஏற்ற சிவலிஙகம் உறையும் தலமாகும் அது. குளிர்ந்த தேன் சொரியும் தாமரையில் அமர்ந்த லட்சுமியுடன் உறையும் திருப்பதி வேங்கடவன் வேண்டுகோளுங்கு இணங்கி எப்போதும் அந்த வாசனைமிக்க துளசிமாலை அணிந்த சீனுவாசன் காணுறும் பொருட்டு மலையாய் மாறி காட்சி தரும் திருக்காளத்தி என்னும் தலமாகும். இத்தலத்தின் தெய்வீகத்திற்கு வேறேதும் உதாரணம் தேவையோ.
அகன்ற எட்டு திக்கில் உள்ளவர்களும் புகழ்ந்து கொண்டிருக்கின்ற தெய்வீகம் பொருந்திய தொண்டை மண்டலத்தில் தரிசனம் செய்பவர்களின் பாவங்களை போக்கும் தலம் ஒன்று உண்டு.
சரஸ்வதிதேவியின் கணவாகிய நான்முகன் உலக உயிர்கள் பிழைக்கும் பொருட்டு 32 தருமத்தையும் செய்து எந்நாளும் காக்கின்ற காமாட்சி அம்மை உடனாய் வீற்றிருக்கும் ஏகாம்பரநாதர் ஆணந்தமாய் உரையும் காஞ்சிபுரம் என்னும் தலமாகும்.
முடியைக் கண்டதாக பொய் உறைத்த நான்முகன் தன் பாவம் போக வழிபட்ட தலமாம். சிவ சர்மன் என்னும் அந்தனச் சிறுவனாக சென்று சிவ லிங்கத்தின் தலையை தொட முயன்று முடியாததால் ஈசனே தன் சிரம் வளைத்தருளிய விரிஞ்சிபுரம்( விரிஞ்சி=பிரம்மன்) என்னும் புண்ணிய தலத்தை தரிசிததால் பாவமெல்லாம் பறந்தோடுமாம்.
வற்றாமல் ஓடும் காவிரி ஆறு செலுலும் தலங்களாம் திருவையாறு திருவிடைமருதூர் கும்பகோணம் சீர்காழி திரிசிரபும் திருவானைக்காவல் இரத்தினகிரி முதலிய புண்ணிய தலங்களின் பெருமையை என்னவென்று கூறுவது.
இப்படி பல சிவஸ்தலங்களின் சிறப்பை நந்தியெம் பெருமான் சிறப்பாக கூறுகிறார்.
தலங்களின் சிறப்பு தொடரும்...
அண்ணாமலையெம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி.
அண்ணாமலையாருக்கு அரோகரா.
- சிவனடி சிவகேணசன்
No comments:
Post a Comment