குலதெய்வத்தை கூப்பிடுவது எப்படி..?
நம் குடும்பத்தை காப்பது நமது குலதெய்வத்தை விட வேறு ஒருவர் இல்லை. நாம் கூப்பிடும்போது ஓடிவருப்பவள் தான் நமது குலதெய்வம். குலதெய்வத்தை கொண்டாடுபவனுக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் என்பது முற்றிலும் உண்மை. குடும்பத்தில் காலா காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கும், திருமணம் முடித்தவர்களுக்கு சந்ததி தோன்றுவதற்கும், தொழில் வியாபார அபிவிருத்தி அடைவதற்கும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து நடத்தி தருபவர்
பொதுவாக ஐந்தாமிடத்தை வைத்து குலதெய்வத்தை குறிக்கலாம் என்றாலும், இது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. காரணம் ஒரு வீட்டில் இரண்டு மூன்று அண்ணன் தம்பிகள் இருக்குபோது ஒவ்வொருவருக்கும் ஐந்தாமிடம் வேறுபாடும் போது, அந்த வீட்டிற்குரிய குலதெய்வம் கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்படும்.
குடும்பத்தின் கோத்திரம் தெரிந்தால், கோத்திர பங்காளிகளிடம் சென்று அறிந்து கொள்ள முடியும். ஒரு சிலருக்கு கோத்திரம் ஒன்றாக இருந்தாலும் சூத்திரங்கள் மாறுபடும். அப்பொழுதும் சில குழப்பங்கள் தோன்றும்.
ஐந்தாமிடம் பெண் ராசியாக இருப்பின் அம்மன், அம்பாள் போன்றவர்கள் என்பதும், ஆண் ராசியாக இருப்பின் அய்யனார், கருப்பன், என்பதுமாக பார்கின்றனர். ஒரு சிலர் ராசியின் அதிதேவதை கொண்டு குலதெய்வத்தை குத்துமதிப்பாக கூறுவார்கள்.
ஒவ்வொரு குடும்பத்தில் தந்தை தாத்தா குலதெய்வத்தை சென்று வணங்கும்போது அடுத்து வரும் பிள்ளைகளும் தொடர்வார்கள். இவர்களின் தொடர்ச்சி எப்பொழுது விடுபடுகிறது என்றால், அந்த குடும்பத்தில் தாத்தா மற்றும் அவருக்கு முந்தைய தலைமுறையில் சில பெரும்பாவங்களை செய்யும்போது பிறக்கும் பேர குழந்தைகளுக்கு ஐந்தாமிடம் பாவகிரகங்களின் ஆதிக்கத்தில் வந்துவிடுகிறது. இதனால் குலதெய்வ வழிபாடு நின்றுவிடுகிறது. இதற்கு தான் குலதெய்வ சாபம் என்கின்றனர்.
ஒரு சிலருக்கு ஜாதகமே இல்லாமல் போகக்கூடிய நிலை இருக்குபோது, இந்த ஐந்தாமிடத்தை பற்றி கூட தெரிந்து கொள்ள இயலாமல் போகிறது.
ஆக, இந்த ஐந்தாமிடத்தை வைத்தோ, ஒன்பதாமிடத்தை வைத்தோ மிக சரியாக கணிக்க இயலாது. இதற்கும் மேலாக இறைவனின் அருள் இருந்தால் தான் குலதெய்வமே கூட கண் முன் தோன்றும். இது சில நேரங்களில் பிரசன்னத்தின் மூலமாக அறியலாம்.
சில குடும்பங்களில் பூவாடைகாரி என்று புடவையை மடித்து வைத்து வணங்கிவருவார்கள். அதாவது, பூவும் பொட்டுவுடன் ஒரு கட்டுகழுத்தி என்கின்ற சுமங்கலி பெண் இறந்து விட்டு இருக்கும்போது, அந்த பெண்மணி நம் குடும்பத்தை காப்பாள் என்ற ஐதீகம்.
சில நேரங்களில் அசரீர் மூலமாக அறியலாம்.கோத்திரம் அறிந்து, அந்தந்த கோத்திர ரிஷிகளின் நட்சத்ர, கோவில் அல்லது தெரிந்த சமாதிகளுக்கு சென்று வழிபடலாம்.
அடுத்து,
ஒரு சிறிய வழி ஓன்று உள்ளது, நாம் இருக்கும் இடத்தின் எல்லை தெய்வத்தை வணங்கி, குலதெய்வத்தை காட்டும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். அதற்காக சிறு காணிக்கைகளை வீட்டில் போட்டு கொண்டு வரவேண்டும். இந்த வேண்டுதல் ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் உங்கள் குலத்தில் உங்கள் உறவினர்களாக உள்ள ஒருவர் மூலம் நிச்சயம் உங்கள் குலதெய்வம் தெரியவரும்.
அடுத்து
மாதா, பிதா, குரு தெய்வம் என்பதை அனைவரும் அறிவர், எனவே குலதெய்வம் தெரியாதவர்கள் தாய்தந்தையரை வணங்கினாலே போதும். இல்லை உங்களது அஞ்ஞானத்தை யார் போக்கினாரோ அவரையே நீங்கள் குருவாக நினைத்து வந்தாலே போதும்.
அடுத்து
பிரசன்னத்தின் மூலம் அன்றைய பிரசன்ன கட்டத்தில் உதயத்தையும், உதயத்தில் நின்றவரையும் வைத்து அறியமுடியும்.
அடுத்து
உங்களுக்கு குழப்பம் வருவதாக உணர்ந்தால், கவலையே படவேண்டாம், நமது இந்து மதம் ஆறு மதங்களை கொண்டது என்றாலும், இவை ஆறும் சேர்ந்து இரண்டு பெரிய பிரிவுகளாக சைவம், வைஷ்ணவம் என்று உள்ளது. எனவே உங்கள் மரபு சைவ மரபாக இருப்பின் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு (அல்லது சிதம்பரம்) சென்றோ, வைஷ்ணவமாக இருப்பின் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு (அல்லது திருப்பதி) சென்றோ தொடர்ந்து வழிபட்டு வந்தால் குலதெய்வம் ஒரு நாள் உங்கள் முன் வந்து நிற்கும்.
(என்ன இவர் ஜோதிட ரீதியாக கூறி முடிக்காமல், ஆன்மீகத்தில் முடித்துவிட்டாரே என்று தாங்கள் நினைக்க தோன்றும். ஜோதிட ரீதியாக எந்த மார்க்கமாக குலதெய்வத்தை குறிப்பிட்டு கூறினாலும், சில வருடங்களுக்கு பிறகு, அதில் மனதிற்குள் சந்தேகம் ஏற்படுவதையும், சில நாட்கள் கழித்து அதையும் தொடராமல் விட்டுவிடுவதும் அனுபவத்தில் காண்கிறேன்..
other link :
No comments:
Post a Comment