Tuesday, May 30, 2017

Religion Vs Spirituality

Religion Vs Spirituality
[ https://stormwolfwords.wordpress.com/2014/03/24/religion-vs-spirituality/ ]
There is more conflict caused by disagreements and arguments over religion than any other issue on this planet. Why? Shouldn’t One’s choice of religion and whether they choose to follow a particular religion be a matter of personal choice?
An Enlightened Person
Enlightened Beings have been attempting to bring this message forth since the beginning. The message has been to “Seek The Guide Inside”, as The One known as Jesus said, “The Kingdom of Heaven is within You.” Religions have attempted to record the history of Spiritual experiences in order to share them but how does one convey a Spiritual experience in a book? It can be referenced but it is a poor substitute for The Real Thing.
Too many religions have become exclusionary. Most religions of the world, if not all, begin based upon the teachings of Enlightened Beings but then quickly stray due to the egoistic tendencies of men. It is the way of man to interpret Spiritual teachings in a manner that benefits them.
The Judeo-Christian religion was based upon ten commandments and quickly turned into countless sub-laws and rules of men that had nothing to do with the original instructions in many cases.
Religious leaders of this time will quote these ancient texts and demand that their followers abide by these rules and yet the very leaders and their organizations do not follow them. You will find Christians who will be obedient in “tithing” 10 percent to their local church but will pass right by the hungry and homeless in their own neighborhoods. Why? Because it is easier to give 10 percent than to give ALL as Spirit asks for. It is easier to tithe than to forgive and love those who we feel have wronged us.
Religion requires faith and trust in what is unseen and for some this is the door that opens the way for them to experience The Spiritual World. For others, the hypocrisy and exclusionary philosophy of many religions close the door and send them in another direction to find what they are seeking.
No one can tell another how to walk their path, each must find their own way. Some will find the beginnings of their Enlightenment in the Ancient Texts but the deeper One goes the more it is realized that The Spiritual Experience MUST be a personal one.
This is why I have titled this post Religion vs Spirituality. Not to insinuate that they are in conflict with each other, but to explain the difference. Religion is devised by and administered by men, Spirituality is actually having a Spiritual Experience. While religion is based upon faith, those who profess to be Spiritual are, in my experience seeking to KNOW.
I do not judge anyone for any reason, a person is free to believe as they choose and to follow any religion they like, or not. All are here to learn their own lessons and to find their Own way back to The One, and ALL eventually return to Oneness.
Just because someone isn’t following the same path you are on doesn’t mean they are lost. If you attained Enlightenment in a certain manner, it doesn’t mean that another must find IT in the same manner that You did… Indeed, it is unlikely that anyone will have the same experience.
I see the same kind of arguments within the so called “New Age” movement. I see debates over who has the most DNA activated, the color of auras, channeling, exclusion of others that don’t believe in their particular philosophy. Again, WHY is it necessary that ANYONE believe in the same way that YOU believe about ANYTHING?
Every Being on this planet has evolved to the point they are at through countless individual experiences that make them completely unique and therefor, no other can expect another Being to accept their beliefs just merely based upon faith if that is NOT the way that they are “wired”.
Some Beings simply MUST know things for themselves, this is NOT a bad thing. It is the key to finding The Truth. The hunger to KNOW. Many who claim to have faith stop at a particular point of comfort while the True Seeker NEVER stops because they KNOW there is more.
While becoming Conscious or realizing Oneness does result in a “KNOWING”, it also creates more questions than it answers. I can promise You that IF You have not had a Spiritual Awakening you may be under the misconception that attaining a certain degree of Enlightenment will allow You to know all you want to know.
The Truth is that IF You have a True Spiritual Experience, while it will replace your faith with Knowingness, it will also cause you to question Your Own sanity. You will try to recall or remember events that occurred and in some instances may lose days of your memory and in some cases even weeks.
Path To Enlightenment
The Spiritual Path is One that everyone is on, even those Who do not realize it. It is a never ending path. We are ALWAYS learning, We are ALL students and We are ALL teachers. If We are open, We will learn from everyone and everything. Stay open, stay in the now, in the moment so You don’t miss a thing!
Religion is faith in The Unseen, True Spirituality is KNOWING The Unseen…
Judge No One, Forgive Everyone, Love Everyone –
We are ALL Brothers and Sisters.
In Lak’ech Ala K’in
Storm Wolf

Tuesday, May 23, 2017

சீர்காழி அருகில் 11 ரிஷபவாகன சேவை 26-5-2017 ....


'பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுக்கும் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி''....'' பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி'': 26-5-2017 ....

''திருநாங்கூர் பக்தவத்சலாம்பிகை உடனுறை நம்புவார்க்கு அன்பர் திருக்கோயில்''....தொடர்புக்கு:9498076515/9840660435....

தமது கட்டளையை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்றுவந்த தாட்சாயணியின் மீது கொண்ட சினத்தினால் சிவபெருமான் இங்கு உள்ள உபயகாவேரி என்னும் இடத்தில் ருத்திரதாண்டவம் ஆடியபோது அவரது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர்ந்தது. அப்பதினொரு இடங்களிலும் இன்னொரு சிவபெருமான் உருவம் தோன்றி ருத்திரதாண்டவம் நிகழ்த்தத் தொடங்கியது.இதனால் இவ்வுலகிற்குப் பேரழிவு நேருமென்று அஞ்சி தேவர்கள் மஹா விஷ்ணுவை அடைக்கலம் பற்ற, அவர் ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த 11 சிவபெருமான்களையும் கட்டி தழுவினார்.இதனால் சினம் தணிந்து சாந்தநிலைக்குத் திரும்பிய சிவபெருமான்,

தமது சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் கோயில் கொண்டு உலக மக்களுக்கு அருளும்படிப் பெருமாளை வேண்டிக்கொண்டாராம். அவ்விதம் மகாவிஷ்ணுவின் பதினொரு திருக்கோலங்கள் கோயில் கொண்ட பதினொரு திருத்தலங்கள் திருநாங்கூரில் திவ்விய தேசங்களாக அமைந்து உள்ளன.அதுபோல இங்கு ஈசன் 11 வடிவம் எடுத்து ருத்திரதாண்டவம் ஆடிய 11 இடம்களிலும் 11 சிவாலயம்களும் உள்ளன .

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவில் திருநாங்கூரில் திருமணிமாடக் கோயில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் 11கருடசேவை திருவிழா சிறப்பாக நடக்கும்.அதுபோல இந்த சிவாலயங்களின் சார்பாக ''பன்னிரு ரிஷபாரூட'' திருவிழா சித்ரா பௌர்ணமி நாளில் அக்காலத்தில் இங்கு நடந்து வந்து உள்ளது.
அதில் இப்போதும் திருநாங்கூரில் தை அமாவாசை மறுநாள் 11கருடசேவை திருவிழா சிறப்பாக நடந்து  வருகிறது.ஆனால் பல வருடங்களுக்கும் மேல் இங்கு சித்ரா பௌர்ணமியில் இரவில் இங்கு நடக்கும் பன்னிரு ரிஷபாரூட திருவிழா தடைபட்டு இருந்து வந்தது.

திருநாங்கூரில், சிவபெருமான் பன்னிரு பீடங்களில் எழுந்தருளி,மதங்க மஹரிஷிக்கு ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்த வைபவம் ஆதி காலத்தில் நடந்து வந்து உள்ளது.கால ஓட்டத்தில் இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி 
மறக்கப்பட்டு ,மறைக்கப்பட்டு இந்த விழா தொடர்ந்து பல வருடங்கள் நடக்காமல் இருந்து வந்தது.ஈசனின் மிகப் பெரும் கருணையால் தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.எனவே பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி விழாவின் அருமையினை உணர்ந்து அன்பர்கள் அனைவரும் இந்த விழாவினை காண திருநாங்கூர் வாருங்கள். ஈசனின் ஒரு ரிஷபாரூட திருக்காட்சி கண்டாலே பெரும் பாக்கியம்.ஆனால் இங்கு ஒரே தலத்தில் பன்னிரு திருக்கோயில்களில் உள்ள ஈசன்களும் அம்மை உமையவளுடன் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி அருள்வது காண்பது வெகு புண்ணியம்.

திருநாங்கூரில் உள்ள பன்னிரு பீட சிவ திருத்தலங்கள்:

1. தத்புருஷ பீடம்-திருநாங்கூர் ராஜ மாதங்கி உடனுறை மதங்கீஸ்வர சுவாமி திருக்கோயில்
2. அகோரபீடம்-கீழைத் திருக்காட்டுப்பள்ளி அகிலாண்ட நாயகி உடனுறை ஆரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில்
3. வாமதேவ பீடம்- கீழ் சட்டநாத புரம் திருயோகீஸ்வரம் யோகாம்பாள் உடனுறை யோகநாத சுவாமி திருக்கோயில்
4. சத்யோத்ஜாத பீடம்- காத்திருப்பு சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி திருக்கோயில்
5. சோம பீடம்- திருநாங்கூர் அமிர்தபுரீஸ்வரர் திருக்கோயில்
6. சார்வ பீடம்-அல்லிவிளாகம் செம்பதனிருப்பு நாகநாத சுவாமி திருக்கோயில்
7. மகாதேவ பீடம்- திருநாங்கூர் பக்தவத்சலாம்பிகை உடனுறை நம்புவார்க்கன்பர் சுவாமி திருக்கோயில்
8.பீமபீடம்-திருநாங்கூர் கைலாசநாத சுவாமி திருக்கோயில்
9.பவபீடம்-திருநாங்கூர் சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயில்
10.பிராண பீடம்- அத்தீஸ்வரம் பெருந்தோட்டம் அதுல்ய குஜாம்பாள் உடனுறை ஐராவதேஸ்வர சுவாமி திருக்கோயில்
11.ருத்ரபீடம்- அன்னப்பன் பேட்டை சுந்தராம்பாள் உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
12. பாசுபத பீடம்-மேல்நாங்கூர் நயனவரதேஸ்வர சுவாமி திருக்கோயில்
......இத்திருக்கோயில்களில் உள்ள ஈசனும் அம்பாளும் மஹாதேவ பீடம் என்று அழைக்கப்படும் நம்புவார்க்கு அன்பர் திருக்கோயிலில் இரவில் தனித்தனியாக எழுந்தருளி ''பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி''தந்து நம்மை காலமெல்லாம் அன்பால் அரவணைப்பர்.வரும் 26-5-17 அன்று மாலை 6.30 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் பன்னிரு சிவபெருமானின் உற்சவ திருமேனிகளுக்கும் சமகாலத்தில் திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டு, திவ்யதம்பதிகள் ரிஷபாரூடத்தில் திருக்காட்சி தரும் வைபவம் நடைபெறும்.
பின்பு அன்று இரவு 9.30 மணிக்கு மேல் பன்னிரு ரிஷபாரூட மூர்த்திகளும், திருமுறை பாராயணங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, வானவேடிக்கையுடன், திருவீதியுலா வரும் நிகழ்வு நடைபெறும்.இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி காண்பதன் மூலம் நம் பாவ வினைகள் அகன்று ஒளிமயமான நல் வாழ்க்கை அமையும்.

சீர்காழியில் இருந்து 8 கி.மீ., தூரத்திலுள்ள அண்ணன் கோயிலுக்கு சென்று,அங்கிருந்து ஆட்டோவில் திருநாங்கூர் செல்லலாம். "நாயேனை ஆட்கொண்டஅண்ணாமலையானைப் பாடுதும் காண்".
"நாயேனை நாளும் நல்லவனாக்க,ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்"..."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடிநிழலில்"...

கட்டுரையாக்கம்:அன்பன்.ப்ரியமுடன்;சிவ.அ.விஜய்பெரியசுவாமி

Friday, May 19, 2017

திதி நித்யா தேவதைகள் - தெய்வங்கள்

Thank:

  திதி நித்யா தேவதைகள் - தெய்வங்கள்



நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள்.

ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை. அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது. அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள்.

அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

1. பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி நித்யா
2. துவதியை –பகமாலினி நித்யா 
3. திரிதியை – நித்யக்லின்னை நித்யா
4. சதுர்த்தி – பேருண்டா நித்யா
5. பஞ்சமி – வந்நிவாசினி நித்யா
6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி நித்யா
7. ஸப்தமி – சிவதூதி நித்யா
8. அஷ்டமி – த்வரிதா நித்யா
9. நவமி – குலசுந்தரி நித்யா
10. தசமி – நித்ய நித்யா
11. ஏகாதசி – நீலபதாகா நித்யா
12. துவாதசி – விஜயா நித்யா
13. திரயோதசி – ஸர்வமங்களா நித்யா
14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி நித்யா
15. பவுர்ணமி – சித்ராதேவி நித்யா

அன்னையின் காலவடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திரகலை வளர்கிறது.ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக அம்பிகையே வீற்றிருக்கிறாள்.

திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள்.
அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,
திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் 43 முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும்

15 தேவியர் தான் இந்த திதி நித்யா.
நீங்கள் பிறந்த திதியும் திதி நித்யாவும் வளர்பிறை ப்ரதமை திதிக்கும் தேய்பிறை அமாவாசை திதிக்கும்

ஸ்ரீ காமேச்வரி நித்யா வளர்பிறை த்விதியை திதிக்கும் தேய்பிறை சதுர்த்தசி திதிக்கும்

ஸ்ரீ பகமாலினி நித்யா வளர்பிறை த்ருதியை திதிக்கும் தேய்பிறை த்ரயோதசி திதிக்கும்

ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் தேய்பிறை த்வாதசி திதிக்கும்

ஸ்ரீ பேருண்டா நித்யா வளர்பிறை பஞ்சமி திதிக்கும் தேய்பிறை ஏகாதசி திதிக்கும்

ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா வளர்பிறை சஷ்டி திதிக்கும் தேய்பிறை தசமி திதிக்கும்

மகா ஸ்ரீ வஜ்ரேச்வரி நித்யா வளர்பிறை சப்தமி திதிக்கும் தேய்பிறை நவமி திதிக்கும்

ஸ்ரீ சிவதூதி நித்யா வளர்பிறை அஷ்டமி திதிக்கும் தேய்பிறை அஷ்டமி திதிக்கும்

ஸ்ரீ த்வரிதா நித்யா வளர்பிறை நவமி திதிக்கும் தேய்பிறை சப்தமி திதிக்கும்

ஸ்ரீ லஸுந்தரி நித்யா வளர்பிறை தசமி திதிக்கும் தேய்பிறை சஷ்டி திதிக்கும்

ஸ்ரீ நித்யா நித்யா வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும்

ஸ்ரீ நீலபதாகா நித்யா வளர்பிறை த்வாதசி திதிக்கும் தேய்பிறை சதுர்த்தி திதிக்கும்

ஸ்ரீ விஜயா நித்யா வளர்பிறை த்ரயோதசி திதிக்கும் தேய்பிறை த்ருதியை திதிக்கும்

ஸ்ரீ ஸர்வமங்களா நித்யா வளர்பிறை சதுர்த்தசி திதிக்கும் தேய்பிறை த்விதியை திதிக்கும்

ஸ்ரீ ஜ்வாலாமாலினி நித்யா வளர்பிறை பவுர்ணமி திதிக்கும் தேய்பிறை ப்ரதமை திதிக்கும்

ஸ்ரீ சித்ரா நித்யா 15 திதி நித்யா தேவதைகளின் காயத்ரி மந்திரங்கள் :

லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான ‘பராபட்டாரிகா’ என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

ஒரு மாதம் கிருஷ்ண பக்ஷம் (பௌர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பக்ஷம் (அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பக்ஷமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது. மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பக்ஷத்திற்கும் ஒருநாள் ஆக மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

தெய்வங்களை கோகுலாஷ்டமி, ராமநவமி போன்ற திதிகளிலும், நீத்தார் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் உலகை நீத்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அதே நாளில் இந்தத் திதிக்குரிய தேவதைகளை வழிபட மறந்து விடுகிறோம். இதனாலேயே நாம் உரிய பலன்களை பெற முடிவதில்லை என்றும் சொல்லலாம். அன்றன்றைய திதிகளை பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால் நம்மை வறுமை அணுகாது, அனைத்து சங்கடங்களிலிருந்தும் விடுதலையாவோம், இக பர சுகங்களை நிச்சயமாகப் பெறுவோம்.

கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால் மிகச் சிறந்த நலன்களை அந்த உபாசனை தரும். பிரதமை முதல் பௌர்ணமி வரை அப்பிரதட்சணமாகவும், திரும்பவும் அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரை பிரதட்சணமாகவும் பூஜிக்க வேண்டும். இந்த பதினைந்து தேவிகளுக்கும் நம் அன்றாடப் பணிகளில் ஒரு பணியும், அப்பணி நன்கு நடைபெற ஒரு மந்திரமும், யந்திரமும் நியமிக்கப்பட்டுள்ளன.

ஆதிசங்கரரால் பிரசித்தமான ‘சுபாகம தந்த்ர பஞ்சகம்’ என்ற நூலில் இவர்களின் உபாசனை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ‘தந்த்ர ராஜ தந்த்ரம்’ என்ற நூலிலும் இவர்களின் தியான ஸ்லோகங்கள், யந்திரங்களின் விளக்கங்கள், உபாசனை புரியும் முறை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

சர்வம் சக்தி மயம். ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருவருள் பாலிக்கும் இந்த அன்னையர்களின் தோற்றம், வழிபடும் நாட்கள், பலன்கள் என்னென்ன?

1.காமேஸ்வரி

‘காம’ எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள். பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.

மந்திரம்:

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.

வழிபடு பலன்கள்:குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.

2. பகமாலினி

இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். பகம் என்ற சொல்லுக்கு பரிபூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி என்றெல்லாம் பொருளுண்டு. இவற்றுடன் அம்பிகை கூடியிருப்பதால் பகமாலினி ஆனாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இவளுடைய அம்சம் ஆதலால் தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு. சிவந்த நிறமுள்ளவள். சிவப்புக் கற்களால் ஆன நகைகளை அணிவதில் மகிழ்பவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழ்கிறாள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும் வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தருகிறாள். 

மந்திரம்:

ஓம் பகமாலின்யை வித்மஹே ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:சுக்ல பக்ஷ த்விதியை, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி.

வழிபடு பலன்கள்:வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.

3. நித்யக்லின்னா

நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவளின் இதயம் என்றும் கருணையிலேயே ஊறிப்போனதாம்! இவளின் மகிமையைப் பற்றி கருட புராணத்தில், ‘நித்யக்லின்னா மதோவக்ஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்பிகையைத் துதிப்போர் மூவுலகிலும் புக்தி சக்தியோடு வாழ்வர் என்று பொருள். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல் சிந்தும் திருமுக மண்டலம், முக்கண்கள், நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடனும், திரு முடியில் பிறைச்சந்திரனுடனும் அருள்பாலிக்கும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.

மந்திரம்:

ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:  சுக்லபட்ச த்ருதியை, கிருஷ்ணபக்ஷ திரயோதசி.

வழிபடு பலன்:குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் எதுவும் வராது.

4. பேருண்டா நித்யா

அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத்துக்கே ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ’ என்றும் ஓர் திருநாமம் உண்டு. உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடைகளையும், குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் முக்கண்கள் தரித்தவள். 

புன்முறுவல் பூத்து தரிசிப்போரைப் பூரிக்க வைக்கிறார். தன் கர கமலங்களிலும் பக்தர்களின் பாதக மலங்களை அழிக்க பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடித் தாமரையைத் தாமரை மலர் தாங்குகிறது.

மந்திரம்:

ஓம் பேருண்டாயை வித்மஹே விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சதுர்த்தி, கிருஷ்ண பக்ஷ துவாதசி.

வழிபடு பலன்கள்: விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.

5. வஹ்னிவாஸினி

அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி. அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். தேவி லலிதையின் பஞ்சதசாக்ஷரி என்னும் மகா மந்திரத்தின் வாக்பவ, காமராஜ, சக்தி கூடங்களும் மூன்றே ஆகும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள். 

மந்திரம்:

ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ பஞ்சமி, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி.

வழிபடு பலன்கள்:நோய் தீரும். தேக காந்தியோடு, உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.

6. மஹா வஜ்ரேஸ்வரி

இந்த நித்யா ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும் அதற்கருகில் வஜ்ரமயமான நதியொன்று உள்ளதென்றும் அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாஸ மகரிஷி தன் லலிதாஸ்தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க வருபவள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிற பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள். வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். அன்பர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகி, அவர்தம் உடலும், உள்ளமும் தூய்மை பெறச் செய்யும் அதியற்புத சக்தி. கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.

மந்திரம்:

ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சஷ்டி, கிருஷ்ண பக்ஷ தசமி.

வழிபடு பலன்: அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலை.

7. சிவதூதி

இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப&நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குமுன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற க்ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர். எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூர்ய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்னங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள்.

மந்திரம்:

ஓம் சிவதூத்யை வித்மஹே சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சப்தமி, கிருஷ்ண பக்ஷ நவமி.

வழிபடு பலன்கள்: நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கை எதுவும் எளிதில் நிறைவேறும். எந்த ஆபத்தும் நெருங்காது.

8. த்வரிதா

இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள். சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி ஸித்திகளும் ஞானமும் கைகூடும். 

மந்திரம்:

ஓம் த்வரிதாயை வித்மஹே மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ அஷ்டமி.

வழிபடு பலன்கள்: எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.

9. குலஸுந்தரி

குலஸுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள்  துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, ஜபமாலை, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் இவளைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும் அசுரர்களும்கூட இந்த அன்னையின் அருளை வேண்டி  நிற்கின்றனர்.

மந்திரம்:
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ நவமி, கிருஷ்ண பக்ஷ ஸப்தமி.

வழிபடு பலன்கள்:இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.

10. நித்யா

அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, புஷ்பபாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சௌந்தர்ய ரூபவதியான இவள் அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழும் பச்சைப் பசுங்கிளி. 

மந்திரம்:

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ தசமி, கிருஷ்ண பக்ஷ சஷ்டி.

வழிபடு பலன்கள்: அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.

11. நீலபதாகா

நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள். இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள். சிகப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்னங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள். இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் திருவருட் பார்வையினால் ஒரு நொடிப்போதில் மேன்மை கைகூடும்.

மந்திரம்:

ஓம் நீலபதாகாயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ ஏகாதசி, கிருஷ்ண பக்ஷ பஞ்சமி.

வழிபடு பலன்கள்: எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.

12. விஜயா

இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்களும் அழகுக்கு அழகு செய்கின்றன. திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லி மலரை ஏந்தி வலதுகாலை மடித்து இடதுகாலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள். 

மந்திரம்:

ஓம் விஜயா தேவ்யை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ துவாதசி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி.

வழிபடு பலன்கள்: எந்தவகை வழக்குகளிலும் வெற்றி. கலைகளில் தேர்ச்சி.

13. ஸர்வமங்களா

இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்னங்களும் இழைக்கப்பட்ட வைடூர்ய மகுடம் துலங்கப் பொலிகிறாள். இந்த நித்யா தேவியின்  கடைக்கண் பார்வை அனவரதமும், அன்பரைக் காக்கின்றது. தன் நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டுடுத்தி ஸர்வாலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள். இந்த நித்யா தேவியைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன. 

மந்திரம்:

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே சந்த்ராத்மிகாயை திமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ திரயோதசி, கிருஷ்ண பக்ஷ த்ரிதியை.

வழிபடு பலன்கள்: பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.

14. ஜ்வாலா மாலினி

இந்த நித்யா தேவி நெருப்பு ஜ்வாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது. வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜ்வாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள். பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும் முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சதா சூழ்ந்துள்ளனர்.

மந்திரம்:

ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சதுர்த்தசி, கிருஷ்ண பக்ஷ த்விதியை

வழிபடு பலன்கள்: எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.

15. சித்ரா

திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திருமேனியள். பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள். 

மந்திரம்:

ஓம் விசித்ராயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: பௌர்ணமி, கிருஷ்ண பக்ஷ பிரதமை.

வழிபடு பலன்கள்:  திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.


Image result for "திதி தேவதைகள்"


திதிகளின் தெய்வங்கள் !


சுக்லபட்சம்

1. பிரதமை –  குபேரன் மற்றும் பிரம்மா
2. துவதியை – பிரம்மா 
3. திரிதியை – சிவன் மற்றும் கெளரி மாதா
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர் 
5. பஞ்சமி – திரிபுர சுந்தரி
6. ஷஷ்டி – செவ்வாய்
7. ஸப்தமி – ரிஷி மற்றும் இந்திரன் 
8. அஷ்டமி –  காலபைரவர்
9. நவமி –  சரஸ்வதி 
10. தசமி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன் 
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – மகா விஷ்ணு 
13. திரயோதசி – மன்மதன் 
14. சதுர்த்தசி –  காளி
15. பவுர்ணமி – லலிதாம்பிகை 


கிருஷ்ணபட்சம்

1. பிரதமை –  துர்க்கை
2. துவதியை – வாயு 
3. திரிதியை – akni
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர் 
5. பஞ்சமி – நாகதேவதை 
6. ஷஷ்டி – முருகன் 
7. ஸப்தமி – சூரியன் 
8. அஷ்டமி –  மஹாருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி –  சரஸ்வதி 
10. தசமி – எமன் மற்றும் துர்கை 
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – சுக்ரன்
13. திரயோதசி – நந்தி
14. சதுர்த்தசி –  ருத்ரர் 
15..அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி 



இறை நம்பிக்கை + தன்னம்பிக்கை + முயர்ச்சி + உழைப்பு = வெற்றி
புடிச்ச பகிருங்கள் ! லைக் பொடுங்கள் !!
வெற்றி நிச்சயம் !
வாழ்க வளமுடன் !!


Tuesday, May 16, 2017

மந்திர ஜெபம் செய்யும் முறை

மந்திர ஜெபம் செய்யும் முறை
Image result for "மந்திர ஜெபம் செய்யும் முறை"



திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில் மந்திரப்பிரயோகம்  https://goo.gl/3d1ff4 

1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.

2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் பலன் இல்லை.

3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும்.

4. க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.

5. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.

வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.

6. ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.

7. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.

8. தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.

9. எந்த ஒரு செயலும் அதற்குறிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். உதாரணமாக சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசௌகரியம் ஏற்படுவது இயல்பு. இது போல மந்திரஜெபம் செய்ய ஏற்ற இடம் என சில இடங்கள் உண்டு. இடத்திற்கு ஏற்றவாறு மந்திரத்தின் பலமும் , பலனும் வேறுபடும்.

வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்தால் 100 மடங்கு பலன்கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன். மலை மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.

10. சந்தியாகாலவேளை எனும் சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. இந்த காலகட்டத்தில் ஜெபம் செய்யாமல் மற்ற நேரங்களில் மந்திரம் அஜபமாக உருவாகும். கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படு ம்
Image result for "மந்திர  செய்யும் முறை"
11. மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன ஆகும். சில மந்திரங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும், சில பகையை வெல்லவும் பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை மானிடர்களின் நலனைக் கருதியே வெளிப்படையாக வெளியிட்டனர்.  

12. மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தில், அல்லது தேவதையில் நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய விரிப்பில் (மான் தோல், புலித்தோல், உரிய மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை, வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க வேண்டும்.

13. கண்டிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது. அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும்.

14. மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக, 2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில் மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக பலன் உள்ளது. அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும்.

15. மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு நோக்கியும், அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நாவசையாமல் உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம். 16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க வேண்டும். 

16. மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது.

17. யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது. 

18. பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.

19. மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. மந்திர உச்சாடணம் செய்வதற்கு முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.

20. முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்கு மலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும். 

21. மந்திரங்களை ஒரு குருவின் மூலமாக உபதேசம் பெற்று ஜெபிப்பதே சிறப்பு. தகுந்த குருவினால் மட்டுமே மேலே சொல்லப்பட்ட சகல விடயங்களிலும் சரியான வழியினைக் காட்ட முடியும்.

முறைப்படி மந்திர உச்சாடணம் செய்து வாழ்வில் சகல வளமும், சகல நலமும் பெறுவோமாக.
Image may contain: drawing

Monday, May 15, 2017

சித்தர்களுக்கு முழு முதற்கடவுள்" "வாலைத்தாய்"


Thank: https://sivarppanam.blogspot.com/2014/12/blog-post_38.html
https://ravindhaa.blogspot.com/2017/02/



வாலாம்பிகை (சித்தர்களின் தெய்வம்)
image from whatapp
வாலாம்பிகை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக இருந்து வந்தது.இவள் சித்தர்களுக்கு முழு முதற் கடவுள்.இவளைக் கொண்டே அறுபத்து நாலு கலைகளையும் சித்தர்கள் அறிந்தனர். இவளை திரிபுரை என்றும் , வாலை என்றும் ,பத்து வயதானவள் என்றும், பதினாறு வயதாள் என்றும், கனியென்றும்,பச்சை நிறத்தாளென்றும் ,சக்கரத்தாளென்றும் , வாமியென்றும் ,தேவியென்றும், மாயையென்றும், புவனையென்றும், அன்னையென்றும், ஆவுடையாளென்றும், தாரையென்றும் , அமுதக் கலசமென்றும்,தாயென்றும் உண்ணாமுலையென்றும் ,கோவுடையாளென்றும் , அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும் அழைப்பார்கள். வைத்தீஸ்வரனான ஈஸ்வரனே இவள் தயவில்தான் மண்ணையே மருந்தாகக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியம் புரிந்து வருகிறான்.இவளை அறிய ஏழு பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள். இவளால் தர இயலாதது எதுவும் இல்லை. இவளைப் பூசை செய்யும் செய்யும் முறையைப் பற்றி சட்டை முனி கூறுவதைப் பாருங்கள்.
சட்டை முனி ஞானம் -4  பூசை செய்யும் முறை

காணப்பா பூசை செய்யும் முறையைக் கேளாய் கைம் முறையாய்ச் சுவடி வைத்துப் பூசை செய்வார்பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துபுகழாக பூசை செய்வார் பெண்ணை வைத்தும்நாளப்பா சக்கரத்தை பூசை செய்வார்நம்முடைய பூசையென்ன மேருப் போலேஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தேஉத்தமனே பூசை செய்வார் சித்தர்தானே! பாடல் (1)தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்தேனென்ற மேருவுக்கு தீட்சை வேண்டும்சிறுபிள்ளையாமொருவன் தீண்டப் போகாவானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்வாய்திறந்தே உபதேசம் சொன்னாராகில்கோனென்ற வாத சித்தி கவன சித்திகொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே! பாடல் (2)கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தைக் கேளாய்குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்மைந்தனே இவளை நீ பூசைபண்ணதேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்திறமாக புவனையை நீ பூசை பண்ணுஆறியதோர் யாமளை யாறெழுத்தைக் கேளாய்அவளுடைய பதம் போற்றி பூசை பண்ணே! பாடல் (3)பண்ணிய பின் யாமளையை ஐந்தெழுத்தைக்  கேளாய்பண்பாக தீட்சையைந்தும் முடிந்தபின்புவன்னியதோர் வாசியென்ற யோகத்துக்குமைந்தனே வைத்துப் பிராயாமந் தீரும்கன்னியதோர் இத்தனையு மறிந்திருந்தாற்காயசித்தி விக்ககினங்கள் இல்லை யில்லைஉன்னியதோர் உலகமென்ன சித்தரென்னஉத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! பாடல் (4)

சிலர் தீபம் வைத்து பூசை செய்வார்கள் . சிலர் இந்த வாலைப் பெண்ணை வைத்து பூசை செய்வார்கள் . சிலர் சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் .சிலர் மகா மேருவை வைத்து பூசை செய்வார்கள் .சித்தர்கள் நாற்பத்து முக்கோண சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் சித்தர்கள் .  மேருவைப் பூசிக்கின்றவர்கள் சாபமிட்டால் அண்டரண்டமெல்லாம் தீயாய்ப் பிடித்து வேகும். இதற்கு தீட்சை அவசியம் வேண்டும் . சிறுபிள்ளைபோல எண்ணி யாரும் இதைத் தொடல் ஆகாது.வான் தத்துவமாகிய இந்த மேரு பூஜை செய்கிறவர்கள் வாயைத் திறந்து யாருக்காகிலும் உபதேசம் ( இரு தேசங்களைப் பற்றிய ரகசியங்களை) சொல்ல முற்படுவரானால் , அவர்களுக்கு ஞான , யோக, வாத ரகசியங்கள் எல்லாம் வசப்படும்.
வாலையின் மூன்றெழுத்தான அகார , உகார , மகாரத்தின் குறி எது என்றுணர்ந்து பூசை செய்வாய்.திரிபுரையின் எட்டெழுத்தை (தமிழில் எட்டுக்கு அ என்பதே குறி) புரிந்து பூசை செய்வாய்.எட்டும் இரண்டுமாகிய ( இரண்டுக்கு தமிழில் உ என்பதே குறி ) இதை உணர்ந்தால் வாலைத்தாயின் இருப்பிடம் தெரியும் .அவள் அருள் உனக்குக் கிடைக்கும். யாமளையாகிய அவளின் ஆறெழுத்தையும் நீ உணர்ந்து பூசை செய்வாய்.
ஐந்தெழுத்தாகிய பஞ்ச பூதங்களின் உறைவிடத்தைக் காண்பாய் . இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை அறிந்த பின், வாசியை உணர்ந்து கொள்.இதில் வகாரமான காற்றையும் , சிகாரமான நெருப்பையும் உணர்ந்து ( இதையே நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும் என்கிறார் திருமூலர். நாயை எப்படி ஓட்டுகிறோம் , சி என்றல்லவா?இந்த சிகாரமான நெருப்பு யமனை வெல்லும். ) வகாரமான காற்றையும் சிகாரமான நெருப்பையும் சரியாக வைத்துக் கொள்ளாமல் இறந்துவிட்டான் என்பதால்தான் , இறந்து போனவனின் எலும்பில் பாலூற்றும் போது காசி ,காசி என்று ஊற்றுகிறார்கள். அவன் இவற்றை சரியாக பராமரிக்காமல் இறந்து போனான் ,உயிரோடிக்கும் நீயாவது இறக்காமல் இருந்து கொள் என்றுணர்த்தவே சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன . இறந்தவனை கொண்டு போகும் போது  உறுமி மேளம் அடிப்பார்கள் , அது உண்டுண்டு என்றடிக்கப்படும் . அதாவது இந்த மரணம் உனக்கும் உண்டு , உனக்கும் உண்டு என்று உணர்த்தவே ஆகும் .
உத்தமனே முந்தைய பிறவிகளில் இந்த வாலையைத் தியானித்திருந்து அரைகுறையாக விட்டிருந்தால் , அந்த விட்ட குறை , அந்தப் புண்ணியம் இந்தப் பிறவியில் தொடர்ந்து வந்து ஞானத்தைத் தந்தே தீரும் . இதை அந்த வாலைத் தாய் மரணமில்லாப் பெருவாழ்வை  நிறைவேற்றித் தருவாள்.Image may contain: 1 person, standing
பட்டினத்தார் ஞானம் -100

நெஞ்சமுடனே தாம்புலம்பி நீலநிறத் தாளீன்றகுஞ்சரத்தை யாதரித்து கும்பிட்டால்- தஞ்சமுடன்காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்பூமிதனில் வாழ்வரெ ப்போதும்  பாடல் (1)ஆவுடையாளொடிருந்தேன் அருளானந்தம் பெறவேகோவுடையாள் நின்றதினம் கூடிய – பூவுடையாள்கட்டழகியைத்தான் கடந்து பெருவெளியில்இட்டமுடன் நெஞ்சே இரு (பாடல் 4)

நெஞ்சமுடன் தாம்புலம்பி , நீலநிறத்தாள் ஈன்ற குஞ்சான அகார , உகாரத்தைக் கும்பிட்டால் , நம்மைத் தஞ்சமடைந்திருக்கின்ற காமம் முதலான மும்மலத்தின் கட்டறுந்து ஞானத்துடன் பூமியில் வாழ்ந்திடுவார்கள் எப்போதும். பட்டினத்தார் ஆவுடையாளோடிருந்தேனென்றும் (வாலைத் தாயுடன் இருந்தேன் ) , அவளுடைய அருளானந்தம் பெற்று , பூவுடையாள் கட்டழகியைத்தான் கடந்து , வேதாந்தப் பெருவெளிக்குள்   இட்டமுடன் நெஞ்சே இரு என நெஞ்சுக்கு கட்டளை இடுகிறார்.
இந்த வாமியான வாலையைக் கனவினில்  கண்ட காட்சியையும் , அவளிடம் கேட்ட வரம் பற்றி பாரதியார் தனது பாடலில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.                             மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்.வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை! பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும், புன்னகையின் புதுநிலவும்  போற்ற வரும் தோற்றம்! மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்! துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து, துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து,தூங்காதே எழுந்தென்னை பாரென்று சொன்னாள்! அங்கதனில் கண்விழித்தேன் !அடடா ஓ அடடா!
அழகென்னும் தெய்வம் அதுவென்றேயறிந்தேன்! காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோவென்றேன்? காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்! ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ வென்றேன் ? நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்! மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்! – பாரதியார் –
முதலில் அந்த வாலாம்பிகையின் காட்சியை வருணித்த பாரதியார் , வாலாம்பிகையிடம் காலத்தின் விதி தமது மதியைக் கடந்திடுமோவென்று கேட்கிறார்.அதற்கு வாலாம்பிகை காலமே மதியினுக்கு ஓர் கருவி என்று கூறுகிறாள். இந்த உலகத்தில் விரும்பியது கிடைக்குமா என்று வினவுகிறார் பாரதி , அதற்கு வாலைப் பெண்ணாத்தாள் , நாலில் ஒன்றிரண்டு கிடைக்கலாம் என்றாள்.
வாலை தெய்வம்★
★வாலையை பணியாமல் சித்தராக முடியாது!
★அவளை யறியா அமரரும் இல்லை
★அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
★அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை
★அவளின்றி யூர் புகு மாறறி யே னே"
★அவள் - சக்தி - வாலை - தாய் - 'உ' இடது மணி ஒளி! சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா? சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்!
★அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா?
★ சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே!
★உடலில் சக்தி இருந்தால் தானே நடமாட முடியும்!
★பின்னரல்லவா தவம் செய்வது?! ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது!
★சக்தி - வாலை துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய இயலாது!
★பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க சக்தி வேண்டும்!. ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம்! எங்கும் சிவமயம்! சிவம் சக்தி மயம்!
★அவளே வாலை! தாய்!
★அந்த தாய் வாலை அருள் தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்!
★சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்!
★நம்மை கருவாய் வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே!
★நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்!
★உலக அன்னை ! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி !
★அவளை அறியாத பேர்க்கு மாயை! மகாமாயை அவளே! அறிந்து பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை!
★வாலையை பணியாமல் யாரும் தேவராக முடியாது! சித்தராக முடியாது! ஞானியாக முடியாது! சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம் புரியவேண்டாமா?
★"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
செம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே!
முக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம்
கன்னியவள் குமரி யிலே கண்டு கொள் பணிந்தே"
“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.”
இன்புற்றிருக்க ஈசனுடன் உறைந்ந அன்னையை சரனடைவோம்
சிவ சக்தி போற்றி.
அம்மா தாயே சரணம் 
வாலையைக்கும்பிட்டு சித்தரானார்..
வாலைக்கொத்தாசையாய் சிவகர்த்தரானார்... 
வாலைக்கு மேலான தெய்வமில்லை....
கொங்கண சித்தர் ...
தாயிர் சிறந்த கோயிலும் இல்லை 
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
சக்தி இல்லையேல் சிவம் இல்லை
அவளை அறிய முதலில் ஐவரை அறிய வேண்டும் 
இருப்பிடம் உள்நாக்கு 
இயக்குவது காற்று
கன்னி வாலை பெண்ணாகி தாயுமாகி உயர்ந்து நிற்கும் உன்னத தாய்மை பொருந்திய உண்மை தெய்வம்.