Thank: Vijayaraghavan Krishnan [ FB ]
#இந்திய_சுதந்திரமும்_சனாதன_தர்ம_எழுச்சியும் பாகம் - 1
Theosophical Society Adyar
in picture :-
H.P. Blavatsky standing behind Henry Steel Olcott (middle seated) and Damodar Mavalankar (seated to his left). Bombay 1881
இன்று FB இல் பலர் நமது சனாத தர்மத்திற்கான எதிர்ப்பு மற்றும் கொடுமைகளை பற்றி எழுதி ... பொங்கி எழ அழைப்பு விடுக்கின்றனர் ..
800 வருட துலுக்கர் ஆளுமை 250 வருட கிருஷ்துவ ஆங்கிலேய ஆட்சி நம்மை அசைத்து விடாத காரணம் என்ன ??
நமது சனாதன தர்மம் இறைவனால் தொடங்கப்பட்டு பல ரிஷிகள் , முனிவர்களால் ...(இவர்கள் மனித உடலைத்தாண்டிய தன்மை கொண்டவர்கள் .. காலத்தை வென்றவர்கள் ) தொடர்ந்து பேணப்பட்டு வருகிற தன்மை ...
இதெல்லாம் இந்த விஞ்ஞான உலகில் நம்ப முடியுமா ??
"தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹா " ... என்கிற பல வாக்குகள் சும்மா நாம் ஒழுங்காக இருக்க சொல்லி வைத்த போலி வார்த்தைகள்தானே .. போன்ற பல சந்தேகங்கள் மனதில் எழத்தானே செய்கிறது !!!
இறைவன் ... நமது சனாதன தர்மத்தை காக்க ... நிறைய வேதம் படித்து ... பிராமண குடியில் பிறந்தவனை இதற்காக தேர்ந்தெடுக்க வில்லை ...
இந்த தொடரை படிக்க நாம் செல்லவேண்டியது ... 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பியா ..உக்ரைன் நாட்டுக்கு ....
உலகம் முழுவதும் புத்தகங்கள் எழுதும் பழக்கமும் அறிவை பரவலாக்கும் தன்மை மிக அதிகமாகி கொண்டு இருந்த காலம் 19 நூற்றாண்டு ...
கிருஷ்துவ கருத்துகளை பல கேள்விகள் கேட்டு,பதில் இல்லாமையால் எதிர்மறையான சோஷலிச கருத்துகள் மற்றும் மந்திரவாத கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவி வந்த காலம் ...
ரஷ்யாவில் ஒரு பெண் ..... ஹெலேனா (Helena Petrovna Blavatsky 12 August [O.S. 31 July] 1831 – 8 May 1891 ... அவதரித்தார் ... ஆம் அவதரித்தார் ...
இவர் சிறுவயதில் இருந்தே ஆழ்ந்த தியானம் கைகூடி பல வித காட்சிகளை காணக்கூடிய திறமை உள்ளவராக இருந்தார் .. இவரது தியானகளில் ஒரு இந்திய யோகி தோன்றி தன்னை ஹிமாலயத்தில் வந்து சந்திக்க அழைப்பு விடுத்து வந்தார் ..
அந்த யோகியை இவர் அழைத்த பெயர் "மகாத்மா " ஆம் 1860 களிலே அந்த பெயர் ஐரோப்பாவில் சொல்லப்பட்டு விட்டது ...பல புத்தகங்களில் இந்த பெயரை ஹெலேனா பயன்படுத்தி இருக்கிறார் !!!
இவரது 17 வயதில் பிடிக்காத ஒரு திருமண உறவில் இணைந்தார் .. அதில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறி உலகம் எல்லாம் சுற்றி திரிந்தார் ...
1851 அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கும் ஆசியாவில் ஸ்ரீலங்கா மற்றும் இந்திய வழியாக திபெத் செல்ல முயற்சி செய்தார் .. அனால் அன்றைய பிரிட்டிஷ் அரசு அவரை திபத் உள்ளே அனுமதிக்க வில்லை ...
பின்னர் அவர் இந்தியாவில் இருந்து இங்கிலாந்த் சென்றார் (1854) ... லண்டன் சாலை ஒன்றில் இவர் கனவில் தோன்றிய இந்திய சுவாமிகளை தான் நேரில் கண்டாதாக சொல்லுகிறார் ..
அந்த வருடம் அங்கிருந்து கிளம்பி அமெரிக்கா சென்றார் ... அங்கே நியூயார்க்கில் சாலை ஒன்றில் செல்லும் போது இவரது யோகி நேரில் தோன்றி .. இவரை அந்த சாலையில் ஒரு மாடியில் இருக்கும் வக்கீலை சந்திக்க சொல்லி மறைந்தார் ...
ஹெலேனா சந்தித்த நபர் "Henry Steel Olcott" ... இவர்தான் ஆபிரகாம் லிங்கன் கொலை வழக்கு விசாரணையை நடத்திய புகழ் பெற்ற வழக்கறிஞர் !!!
ஹெலேனாவின் மந்திரவாத திறமையையும் .. அவர் கூறும் சனாதன தர்ம கருத்துக்களையும் "Henry Steel Olcott" ஏற்றுக்கொண்டார் ..
1874 இல் நியூயார்க்கிலே "தியோசாபிகள் சொசைட்டி " ஆரம்பித்தார்கள் Henry Steel Olcott மற்றும் ஹெலேனா உடன் இணைந்து ....
ஆனால் ஒரு பிரச்சனையை .. இந்த இருவருக்குமே சனாதன கருத்துக்களை கூறும் நேரிடையான புத்தகங்களை படித்தது இல்லை ..
February 16, 1879 அனைவரும் கிளம்பி அமெரிக்காவில் இருந்து இந்திய வந்து சேர்ந்தனர் .. ஹிந்து மத கருத்துக்களை நேரிடையாக அதை அறிந்தவர்களிடமே கற்று தெளிய...
ஹெலேனா போலவே இந்தியாவில் ஒரு வாலிபர் அதே யோகியை கனவில் கண்டு விட்டு .. அலைந்து திரிந்து கொண்டு இருந்தார் .. அவர் பெயர் தாமோதர் (Damodar K. Mavalankar) ... அவர் ஹெலேனாவை பார்த்தவுடன் அவரை தனது குரு நாதனாக (பெண் பால் என்ன? ) ஏற்றுக்கொண்டு ..தனது குடும்ப உறவுகளை துறந்து சந்நியாசி ஆனார் !!! (இவர்தான் பல காலம் சென்னை அடையாரு சொசையிட்டியை அன்னி பெசன்ட் வரும் வரை நடத்தியவர் !!! )
அனைவரும் சென்னை அடைந்து அடையாரில் "Theosophical Society Adyar" யை ஆரம்பித்தனர் ..
Henry Steel Olcott ... நிறைய சனாதன நூல்களை சேகரித்து அவற்றை ஆங்கில அறிவு கொண்ட இந்திய அறிஞர்களை கொண்டு மொழி பெயர்ப்பை தொடங்க "Adyar Library and Research Centre " 1886 இல் தொடங்கினார் ..
இவ்வாறாக ... நமது சனாதன தர்மம் ... இந்தியா எங்கே இருக்கு என்று தெரியாத ஒரு உக்ரைன் நாட்டில் பிறந்த ஒரு பெண்ணுக்கு காட்சி குடுத்த யோகி .. அமெரிக்க பணக்கார வக்கீலை கூட்டிக்கொண்டு சென்னை வந்து வேதாந்த புத்தகங்களை சேகரித்து மொழிபெயர்த்து ...
வேதம் ஓதி .. நெம நிஷ்டமாக இருந்த ஆள்களை மேலே இருப்பவன் (யோகிகள் ரிஷிகள் ) தேர்ந்தெடுக்க வில்லை பாருங்கள் ...
சரி .. எதோ விடுதலை என்று சொல்லி இருக்கே என்றால் ... அதை நாளை பார்ப்போம் ....
விஜயராகவன் கிருஷ்ணன்
No comments:
Post a Comment