Friday, July 7, 2017

மகான் சாங்கு சித்தரின்குரு பூஜை அழைப்பிதழ் 



Thank https://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html?m=1

குரு பூஜை அழைப்பிதழ் 08/07/2017









குரு பூஜை அழைப்பிதழ் 



மஹான் சங்கு சித்தர் அவர்களின் 118 ஆவது குரு பூஜை வரும் 8/7/2017 - சனிக் கிழமை அன்று நடைபெறுகின்றது. எனவே இறை அடியார்கள் அனைவரும் குரு பூஜையில் கலந்து கொண்டு இறை அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.



மகான் சாங்கு சித்தரின் ஜீவசமாதியைத் தரிசிக்க

கிண்டியில் தாம்பரம் மெயின்ரோட்டிலிருந்து பிரிந்து செல்லும் எம்.கே.என். சாலையில் சிறிது தூரத்தில் மாங்குளம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள தெருவிற்குள் ஜீவசமாதி அமைந்துள்ளது. மேலும் குறிப்பாக 

 கிண்டி MKN ரோடில் உள்ள அருணா லாட்ஜ் எவ்வாறு செல்ல வேண்டும் என்று கேளுங்கள். அந்த அருணா லாட்ஜை ஒட்டி ஒரு தெரு போகும். அந்த தெருவில் தான் சாங்கு சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது.


நம்முடைய  உள்ளமே  பெருங்கோயிலாக இருக்கிறது. ரத்தம்,தசை,எலும்பு போன்றவற்றால் ஆன  நமது உடலினுள் அந்தக் கோயில் இருப்பதால், நமது உடம்பு ஓரு ஆலயமாகத் திகழ்கிறது.
ஆக, ஆலயம் என்பது கோயில்களை உள்ளடக்கியது.ஆலயம் வேறு:கோயில் வேறு: பற்பல கோயில் இணைந்த இடமே ஆலயம். நம்  எனும் கோவில்,இந்த உடம்பு என்ற ஆலயத்தில் இருக்கின்றது.
இறைவன் நம்முடைய மனதின் தேவைகளை அறிந்து அனைத்தையும் வழங்குவதால் வள்ளலாக இருக்கிறார். அந்த வள்ளலை அடைவதற்காக எந்நேரமும் அவனது ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருப்பதால், நமது வாய், நமது உடலென்னும் ஆலயத்தின் கோபுரவாசலாக நிற்கிறது. இறைவனை அடைவதற்கான வழிகளை அறிந்து தெளிந்தவருக்கு அவரது ஆன்மாவே சிவரூபமாக, அதாவது சிவலிங்கமாக இருக்கிறது. அவர்களால் தம்மைத் தவறான வழியில் இட்டுச் செல்லும் ஐம்புலன்களையும் அடக்கி ஆள முடியும். அவர்களுக்கு அந்தக் கள்ளப் புலன்கள் அழகிய விளக்காக மட்டுமே தெரியும். ஆனால் நமக்கு இந்த புலன்கள் அடங்கா. அனுபவிக்க அனுபவிக்க வேண்டும் என்றே சொல்லும். சுருக்கமாக சொன்னால், இந்த புலன்கள் நமக்கு உணர்ச்சி நிலையில் உள்ளது. ஆனால் மகான்களுக்கு உணர்வு நிலையில் உள்ளது.

அப்படி என்றால் நம் உடம்பினுள் உள்ள உள்ளத்தில் உறைகின்ற உத்தமனைக் காண வேண்டும் அல்லவா? அந்த உத்தமனை கண்டால் தான் நாமும் கள்ளப் புலன்களைக் கொண்டு உணர்ச்சி நிலையில் இருந்து,உணர்வு நிலைக்கு மாற்றம் பெற முடியும்.இதற்கு பதில் சொல்கின்றார் கிண்டியில் உள்ள சித்தர் பெருமான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார்.அவரது ஜீவசமாதியில் நுழையுமுன் நம் கண்ணில்படுவது, தமது மாணவர்களுக்கு அவர் கூறிய அறிவுரைதான்.

“உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி”





இதுவே நம்முடைய வினாவிற்கான பதிலுமாக இருக்கிறது.


 சாங்கு என்றால் அதன் பொருள் என்ன?

அம்புகளில் பலவகைகள் உண்டு. அதில் சாங்கு என்கிற அம்பு மிக கூர்மையாக இருக்கும். ஏன்? என்ற கேள்வி. இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. ஞானம் சம்பந்தமாக. நாம் பலவித கேள்வி கணைகளை தொடுக்க வேண்டும். அத்தகைய  கேள்வி களுக்கு  பிறர் மூலமாக பதில் கிடைக்கும். இல்லை சில சமயங்களில். நமது கேள்விகளுக்கு நமது ஆழ்மனமே பதிலை சொல்லும்.
 கேள்வி என்னும் அம்பை கொண்டு. ஞானம் என்னும் கனியை பரி. என்று இவர் தனது சீடர்களுக்கு பலமுறை உபதேசித்து உள்ளார். இவரது கருத்துக்களும், அறிவும். சாங்கு என்கிற அந்த அம்பை போல் கூர்மையாக இருக்கும் என்பதால் அப்பெயர் .


சாங்கு சித்தன் என்றால். குருவின் உபதேசத்தை பெற விரும்புபவர் என்றும் அர்த்தம். சாங்கு சித்தர். சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்தாலும். தான் மேலும், மேலும் பல விசயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார். அதனாலும் இவருக்கு இப்பெயர் வந்து இருக்கலாம். போன்ற பல காரணங்கள் இருந்தாலும். உண்மையில் இவர் கபில முனிவர் வகுத்த சாங்கியம் என்கிற தத்துவத்தை பின்பற்றினார் என்பதாலேயே இந்த பெயர் இவருக்கு வந்து இருக்கும். 

சாங்கியம் இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியான தத்துவம் ஆகும். உலக படைப்பு மற்றும் சீவராசிகளின் தோற்றம் குறித்து சாங்கிய தத்துவம் சொல்கிறது. 
சாங்கிய தத்துவங்களையே ஞான யோகம் என்கிற பெயரில் கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லி இருக்கிறார். கபில முனிவர். வியாசர் போல் விஷ்ணுவின் அம்சமானவர் என்று வைஷ்ணவ நூல்கள் சொல்கின்றன. புத்த மத சிந்தனையில் கூட சாங்கியம் அதிகம் இடம் பெறுகிறது. 


இவரின் இயற்பெயர். சிவலிங்க நாயினார். இவர் பிருங்கி மலையில் தான் பிறந்தார். பிருங்கி மலையா. அது எங்கே? இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். 
அதீத வல்லமை பொருந்திய பிருங்கி முனிவர் தவம் செய்த மலையே பிருங்கி மலை. அது பின்னர் பரங்கி மலையாகி. இன்று Saint Thomas Mount என்று அழைக்கப்படுகிறது.

தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்கிற முதுமொழிக்கு ஏற்ப இந்த சென்னை மாநகரிலே பல சக்தி வாய்ந்த சித்தர்கள் அவதாரம் செய்து இங்கேயே ஜீவ சமாதியும் அடைந்து உள்ளார்கள். 100 இற்கும் மேற்பட்ட சித்தர்கள் கோவில் இந்த சென்னையில் இருக்கிறது. 
சிவலிங்க நாயினார் தனக்கு மெய்யறிவைக் கற்றுக் கொடுக்க வல்ல குருவினைத் தேடியலைந்தார். இவர் பிறவியிலேயே மிகப்பெரிய ஞானியாக இருந்ததால். இவருக்கு மெய்யறிவை போதிக்கும் குரு இவர் காலத்தில், இவர் வாழ்ந்த பகுதியில் இல்லை. ‘ஓழிவிலொடுக்கம்’ என்ற நூல்தான் குருவைக் காட்டிக்கொடுத்தது.

ஒழிவிலொடுக்கம் என்பது கண்ணுடைய வள்ளலார் அவர்கள் எழுதிய நூல். அந்த கண்ணுடைய வள்ளலார். 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரின் சீடர். 
சாங்கு சித்தர். ‘பூரணாநந்தோதயம்’ என்ற பெயரில் ஏராளமான பாடல்களைக் கொண்ட நூல் ஒன்றையும் இயற்றியுள்ளார்.

“காடான ஐம்புலக்காட்டினிலிருந்து உன் ஊர்
கரைசேர திருவருள் புரி
கருணைவழி பரவை நிகரறிவிலறிவாய் முளைக்
கண்ணுடைய வள்ளல் குருவே”.



நாயனார், தமது இடைவிடாத யோகப் பயிற்சிகளின் மூலம் அனைத்து சித்திகளையும் பெற்றார். நவகண்ட யோகத்திலும் இவர் வல்லவர். நவகண்ட யோகம் என்றால் என்ன? 

உடலில் உள்ள நவ த்வாரங்களையும் 9 துண்டுகளாக ஆக்கி. பின்னர் மீண்டும் ஒன்றாக சேர்ப்பது. மிகப்பெரிய சித்தர்களால் மட்டுமே இதை செய்ய முடியும். சாதாரண வித்தை காரர்களால் இதை செய்ய முடியாது. பல் செட் வைத்து இருப்பவர்கள் அதை கழட்டி சுத்தப்படுத்துவதை போல். ஞானிகள் உள் உறுப்புகளை நவகண்ட யோகம் மூலம் சுத்தப்படுத்துவார்களாம். ஷீரடி பாபா அவ்வாறு செய்தார் என்பது. ஸ்ரீ சாய் சத் சரித்திரா படித்தவர்கள் அனைவருக்குமே தெரியும்.
சதானந்த சுவாமிகளும் நவகண்ட யோகத்தில் வல்லவர்.

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால், ஐம்புல கதவை அடைப்பதும் காட்டி என்று அவ்வை பிராட்டியார் விநாயகர் அகவலில் குறிப்பிட்டது இந்த நவகண்டம் பற்றி தான். 

சர்வ சித்துக்களும் பெற்ற சாங்கு சித்தர். பென்னி அண்ட் கம்பெனியின் இயக்குநராக இருந்த சிம்சன் துரையிடம் பணியாளராகச் சேர்ந்தார்.காரணம் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது இவரின் கொள்கையாக இருந்தது. 

ஒருநாள் ஒரு இரவு சிம்சன் துரை தமது படுக்கையறையில் படுக்கச் சென்றபோது நாயனார், அவரை அங்கு படுக்க வேண்டாம் என்று தடுத்தார். சிம்சன் துரை அவரைக் கோபித்துவிட்டுப் படுக்கையறையினுள் சென்று படுத்து உறங்கிவிட்டார். நாயனார் அங்கிருந்த பணியாட்களின் உதவியுடன், துரையைக் கட்டிலுடன் அந்த அறையிலிருந்து அப்புறப்படுத்தினார். சிறிது நேரத்தில் படுக்கையறையின் மேல்தளம் பெரும் சப்தத்துடன் இடிந்து விழுந்தது. சிம்சன் துரை நாயனாரிடம் அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்துகொண்டார். அதன் பிறகு அனைத்து விஷயங்களிலும் நாயனாரிடம் ஆலோசனை கேட்டுச் செய்வதை வழக்கமாகக் கொண்டார்.

 இங்கலாந்தில் உள்ள சிம்சனின் மனைவியிடமிருந்து திடீர் கடிதம் வந்தது. அந்த கடிதத்தை படித்து பார்த்ததும் சிம்சன் அதிர்ந்து போனார். கடிதத்தில் "சிம்சன் துறையின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்றும். பிரசவம் சுக பிரசவமாக இருக்காது. தாயின் உயிருக்கு கூட. அதனால் ஆபத்து வரலாம் என்று மருத்துவர் சொன்னதை பற்றி. சிம்சனின் மனைவி எழுதியிருந்தார். அதை பற்றி சாங்கு சித்தரிடம். சிம்சன் துரை மிகுந்த கவலையோடு சொன்னார்.

அதை கேட்ட சாங்கு சித்தர். நான் சென்று. உன் மனைவியை பார்த்து வருகிறேன். நான் ஒரு மணி நேரத்திற்க்குள். உன் மனைவியை சந்தித்து. அவளுக்கு. விபூதி பிரசாதத்தை மந்திரித்து தந்து. அவளிடமிருந்து. நீ போட்ட கடிதத்திற்கு பதில் கடிதமும் வாங்கி கொண்டு வந்து விடுவேன். நீ என்னை இந்த அறையில் வைத்து வெளியே தாழ்ப்பாள் போடு. நான் கதவை தட்டி, என் குரல் கேட்ட பின்பே நீ கதவை திறக்க வேண்டும் என்றார்.

சிம்சன் துறைக்கு சுவாமிகளின் மகிமை பற்றி நன்றாக தெரியும் என்றாலும். இந்த விசயம் அவரால் நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. ஆனாலும்? சுவாமிகளை எதிர்த்து பேச கூடாது என்கிற பயமும் அவருக்கு  இருந்ததால். வேறு வழியில்லாமல். அரை மனதோடு அவர் ஒப்பு கொண்டார். பின்னர் சுவாமிகள். 45 நிமிடத்திலேயே வந்து. கதவை தட்டி. நான் வந்து விட்டேன் கதவை திற என்றார். நம்ப முடியாத ஆச்சரியத்தோடு சிம்சன் கதவை திறந்தார். கடிதத்தை பார்த்தார். ஆம். அது அவரின் மனைவியின் கை எழுத்து தான்.

அந்த சுவாமிகள் பார்ப்பதற்கு எவ்வாறு இருந்தார் என்று. சுவாமிகளின் உருவ அமைப்பு பற்றி சிம்சனின் மனைவி எழுதியிருந்தார். அவர் கொடுத்த விபூதியை. நான் நெற்றியில் இட்டு கொண்டு. சிறிது உண்ணவும் செய்தேன். எனக்கு, நமக்கு பிறக்க போகும் குழந்தைக்கு இருவருக்குமே ஒன்றும் ஆகாது. பிரசவமும் சுக பிரசவமாக தான் ஆகும் கவலைப்படாதே என்று அந்த சுவாமிகள் சொன்னார். அது எனக்கு புது நம்பிக்கை. தைரியம் இரண்டையும் அளித்தது. ஆனாலும். ஒரு நொடியில் மனோ சக்தியின் மூலம். இந்தியாவிலிருந்து, இங்க்லாந்துக்கு வருதல் என்பது நம்பும் ஒன்றா. என்னுடைய இதே கடிதத்திற்கு. நீங்கள் பதில் கடிதம் எழுதி. அதையும் சுவாமிகள் இதே போல் தந்தால். எனக்கு முழு நம்பிக்கை வரும் என்று சிம்சனின் மனைவி கடிதத்தில் எழுதி இருந்தார். அதை படித்த சிம்சன். உடனே தனது மனைவிக்கு பதில் கடிதம் எழுதினார். சாங்கு சித்தர் மீண்டும் இங்கலாந்து  சென்று. சிம்சனின் மனைவிக்கு அந்த கடிதத்தை கொடுத்தார்.

பின்னர் சிம்சனின் மனைவிக்கு சுக பிரசவம் ஆனது என்பதும் குறிப்பிட தக்கது. 
சிம்சன் கப்பலின் மூலம் இங்கலாந்து  பயணம் செய்த பொழுது. இடையில் பெரும் கடல்கொந்தளிப்பு ஏற்பட்டது. உயிருக்குப் பயந்து கப்பலிலிருந்தவர்கள் கூக்குரலிட்டுக்கொண்டிருந்தபோது சிம்சன் துரை, நாயனாரை மனதில் நினைத்தார். நாயனார் அங்கு தோன்றி அவருக்குத் துணையாக இருந்தாராம். சிறிது நேரத்தில் கடல் கொந்தளிப்பு அடங்கியதும் நாயனார் அங்கிருந்து மறைந்துவிட்டாராம்.

சிம்சன் இங்கலாந்து  செல்லும் முன். சாங்கு சித்தருக்கு. 22 ஏக்கர் நிலத்தை அதாவது 400 கிரௌண்ட்டை எழுதி வைத்து விட்டு சென்றார் என்று அரசு கெசட் ஆதாரம் சொல்கிறது. ஆனால் சுவாமிகள் அந்த 400 கிரௌண்ட்டில் தனது சமாதி கோவிலுக்கு என்று தேர்ந்து எடுத்தது ஒரு கால் கிரௌண்ட் நிலத்தை மட்டுமே. 

சாங்கு சித்தர் தனக்கு அளிக்கப்பட்ட நிலத்தில் ஞானசம்பந்தர் பெயரில், ஒரு மடாலயத்தை நிறுவி, தாம் பெற்ற ஞானத்தைத் தமது மாணாக்கர்களுக்கும் பல ஆயிரம் பொதுமக்களுக்கும் இலவசமாக போதித்துவந்தார். தனது அதிசய, அற்புத  சக்திகளால் சுவாமிகள் பல ஏழை, எளிய மக்களை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளார். தாம் சமாதியடையும் காலம் வந்ததும் அதனை முன்னதாகவே அறிவித்தார்.

1900-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி, மூலநட்சத்திரம் கூடிய பெளர்ணமி திதியில் சுவாமிகள் நிர்விகற்ப சமாதி அடைந்தார்.சாங்கு சித்தரின் ஜீவசமாதியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் அன்று பிருங்குசைலம் என்று அழைக்கப்பட்டது .


கிண்டி MKN ரோடில் உள்ள அருணா லாட்ஜ் எவ்வாறு செல்ல வேண்டும் என்று கேளுங்கள். அந்த அருணா லாட்ஜை ஒட்டி ஒரு தெரு போகும். அந்த தெருவில் தான் சாங்கு சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது.

அன்பர்களே. நமக்கு இங்கே ஏற்பட்ட அனுபத்தைக் காண்போமா?

சென்னையில் பேருந்து பயணங்களின் போது, கிண்டி பேருந்து நிறுத்தம் வரும் போது, இவரின் ஜீவ சமாதியை தாண்டி தான் பேருந்து கடந்து செல்லும்.ஒவ்வொரு முறை அங்கே செல்லும் போது,எப்போ காண்பேனோ? என்று கண்கள் ஏங்கும்? நாம் நினைத்தால் மட்டும் போதுமா? "அவர் அருளாலே அவர் தாள் வணங்கி" என்ற அருள் மொழிக்கேற்ப அவர்கள் மனது வைத்தால் தான் தரிசனம் கிட்டும். அப்படியொரு தரிசனம் கிடைத்தது யாம் செய்த புண்ணியமே.

நானும், அண்ணன் சந்திரசேகரனும் கிண்டியில் சிந்திப்போம் என்று கூறி 2 வாரங்களுக்கு முன்பு சந்தித்தோம்.அன்றைய தினம் காலையில் சதானந்த சுவாமிகள் தரிசனம் முடித்து, மாலையில் இங்கே சந்திக்க விரும்பினோம். அண்ணன் சரியாக மாலை 5:00 மணி அளவில் அங்கே வந்து விட்டார்.வழக்கம் போல், நான் தாமதமாக வந்தேன். வந்த உடன் அப்படியே சித்தரை தரிசிக்க சென்று விட்டேன். எனக்காக காத்திருந்த அண்ணன், பின் உள்ளே வந்தார்.

அமைதி யான அருள் மழை பொழிகின்ற இடம். மெய் சிலிர்த்தது.




(கோவிலின் நுழைவிடம் )

நேரே சென்றதும், சித்தரின் தரிசனம் தான்.அந்த அமைதியின் ஆரவாரத்தில்,மனம் சற்று உணர்ச்சி நிலையில் இருந்து, உணர்வு நிலைக்கு வந்தது உண்மை. அங்கே சில அன்பர்கள் இருந்தனர்.அவர்களிடம் சித்தரின் வரலாறு பற்றி கேட்டோம்.பின்பு இனிப்பான செய்தி ஒன்றை கூறினார்கள்.அது பதிவின் இறுதியில் . கேட்க கேட்க புல்லரித்தது.இப்படி எல்லாம் நடக்குமா? என்று யோசித்துக் கொண்டு இருந்தோம்.சித்தர்களால் இயலாதுது உண்டா? கர்மா கணக்கை சுழியாக்குபவர்கள். சற்று நேரத்தில் வீட்டிற்கு செல்லலாம் என்று புறப்பட்டோம்.

அப்போது அங்கிருந்த சிலர், கொஞ்சம் பொறுங்கள், 6 மணிக்கு பூஜை உண்டு.முடித்து விட்டு செல்லுங்கள் என்றார். நமக்கு மனமில்லை. இருப்பினும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்று முடிவெடுத்தோம்.அந்த முடிவால், சித்தனின் பக்தர் எப்படி வழிபடுவார் ? என்று தெரிந்து கொண்டோம்.

சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதிகோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரதுசீடர்கள் ஸ்ரீ கொள்ளாபுரி   சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின்சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திரகுருபூஜை நடைபெறும் என்று சொன்னார்கள்.


                                                         ஸ்ரீ கொள்ளாபுரி   சாமி




(ஸ்ரீஏழுமலை சாமி)


ஸ்ரீ கொள்ளாபுரி   சாமி,ஸ்ரீஏழுமலை சாமி தரிசனம் பெற்று விட்டீர்களா? பின்பு சற்று நேரத்தில் ஒரு பக்தர் வந்தார். உள்ளே நுழையும் போதே, அப்படியொரு பக்தி சிரத்தையோடு வந்தார்.சட்டையை கழட்டி விட்டு நேரே சித்தரை தரிசித்தார்.கோவிலை வலம் வந்தார். நாங்கள் கோவில் வலப்புறமாக இருந்தோம். வலப்புறத்தில் ஸ்ரீஏழுமலை சாமி இருக்கின்றார். வானத்தை பார்த்தார். சில மந்திரங்களை ஓதினார். பின்பு சுவாமியை நோக்கி வந்தார்.அப்படியே பின் சென்றார்.சில முத்திரைகள் கையில் பிடித்தார்.சில ஆசனங்களை உடலில் செய்து கொண்டே தரிசித்தார்.



இங்கே முடித்ததும், அப்படியே கோவில் வலம் செய்தார். நாங்கள் அங்கே செல்ல வில்லை.சற்று நேரத்தில் கோவில் அர்ச்சகர் வந்தார்.வந்ததும்,சிற் சில பணிகளை செய்துவிட்டு, சுவாமி அலங்காரம் செய்தார்.அந்த சித்த பக்தர் எங்களோடு சாங்கு சித்தர் கோவிலுக்கு வந்தார்.மெய்யுருக சிவ புராணம் பாடினார்.நாங்களும் கரைந்து போனோம்.பின்பு தீப ஆராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நாங்களும் வீட்டிற்கு கிளம்ப தயாரானோம். அந்த சித்த பக்தர் அங்கே நின்று கொண்டிருந்தார்.அவரிடம் சென்று பேசிக் கொண்டிருந்தோம். சித்தர் வழிபாட்டில் இப்படி முத்திரை மற்றும் உடல் அசைவு செய்ய வேண்டுமா? 

உடனே அவர். நீங்கள் சித்தரிடம் பரிபூரண சரணாகதி அடைந்தால், அவரே நமக்கு சூட்சுமுகமாக இப்படி சொல்லிக் கொடுப்பார்கள். 


எங்களுக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டது.இப்போது தானே நாம் சித்தர் வழிபாட்டில் அரிச்சுவடியை ஆரம்பித்து "அ ஆ" என எழுதிக் கொண்டிருக்கின்றோம்.சில பொதுவான விஷயங்களைப் பற்றி கூறினார். அனைவரும் நினைப்பது போல், இல்லறத்தை ஒதுக்கி இறை வழிபாடு,சித்தர் பூஜை செய்வதை ஒரு போதும் அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்றார்.



(யோகத்தில் ஒரு அடியார் )



இல்லறத்தில் இருந்து கொண்டே,நல்லறம் செய்து கொண்டு,இந்த விஷயங்களை செய்ய வேண்டும். அப்படி செய்து கொண்டு வரும் போது,அவர்கள் நமக்கு அடுத்தடுத்து வழி காட்டுவார்கள் என்றார். சித்தர் வழிபாடு செய்யும் போது,கண்டிப்பாக "சிவ புராணம் " ஓதுங்கள் என்றார். மேலும் சித்தர் ஜீவ சமாதிகளை தரிசிக்கும் போது, பிஸ்கட்,பொரி வாங்கி கொண்டு செல்லுங்கள் என்றார். ஏனெனில் சித்தர் கோவில்களில் பைரவர்களை தரிசிக்க முடிகின்றது. 

முக்கிய அறிவிப்பு 





நடை திறப்பு: 

தினமும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை
மாலை 6:00 மணி முதல்இரவு 7:00 மணி வரை
மாதம் தோறும், பவுர்ணமி
சிறப்பு வழிபாடு குருபூஜை: ஆனி மாதம்மூல நட்சத்திரம் தேதியில்.
நடை திறப்பு: தினமும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரைமாலை 6:00 மணி முதல்இரவு 7:00 மணி வரைமாதம் தோறும், பவுர்ணமிபவுர்ணமி: சிறப்பு வழிபாடு குருபூஜை: ஆனி மாதம்மூல நட்சத்திரம் தேதியில்.

நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. அந்த இடத்தை விட்டு செல்ல மனம் இல்லை. பின்பு ஒரு வழியாக சமாதானம் செய்து கொண்டு, சித்தரை மறுபடியும் வேண்டி, அங்கிருந்து நகர்ந்தோம்.


ஒரு வழியாக எப்போது வாய்க்குமோ? என்று ஏங்கிய உயிருக்கு, அருமையாக விருந்தாய் அன்றைய தரிசனம் அமைந்தது.இப்போது தான் புரிகின்றது 



                                              "அவர் அருளாலே அவர் தாள் வணங்கி "

1 comment: