Thank to FB
'‘பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா''.....
"பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் குருபூஜை":26-7-17.
'''சென்னை கிண்டி மங்களாம்பிகை உடனுறை பாடாலீஸ்வரர் திருக்கோயில்''.இங்கு 26-7-17
அன்று சிறப்பு அபிசேக ஆராதனைகள் உண்டு...சென்னை கிண்டியில் பாடகசேரி சுவாமிகள் பிரதிஷ்டை செய்த பாடாலீஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோயில் சென்னை கிண்டி ரயில் நிலையம் சுரங்கபாதை அருகில் உள்ளது.அங்கு ஆலய விமானத்தின் அருகில் பாடகசேரி சுவாமிகள் சுதை சிற்பம் உள்ளது..நோய் வாய்ப்பட்ட மக்களுக்கு
"ஆபத் சகாயம் "எனகூறி,சிவாயநம சொல்லி திருநீறு பூசிவிடுவார் பாடகச்சேரி ஸ்வாமிகள்....உடனே சில நாட்களிலேயே மக்கள் அந்த கொடிய நோய்களில் இருந்து முற்றிலும் விடுபடுவர்.தன்னை நம்பிய பக்தனை பாம்பு கடித்தபோது, ஒன்றும் ஆகாமல் இருக்க, மறுநாள் பைரவ சித்தருக்கு கால் வீங்கியிருந்தது. காரணம் கேட்டபோது, “ஒன்றுமில்லை. என் பக்தனின் பாம்புக் கடியை நான் வாங்கிக்கொண்டேன். குடும்பஸ்தன் பாவம் அவன் தாங்கமாட்டான் ”என்றாராம்.“என்னை நம்பியிருப்பவர்களுக்கு என்றும் நான் துணையாக உடனிருப்பேன். நம்பாதவர்களுக்கும் என்மீது நம்பிக்கை வரும்பொருட்டு தொடர்ந்து உதவிகள் செய்து வருவேன்” என்பார் பாடகச்சேரி இராமலிங்க வாமிகள்.'‘பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா'''...ஆம்!பதைபதைக்கும் நெஞ்சுடன் உங்கள் வாழ்வில் ஒரே போராட்டமா?!...கவலையை விடுங்கள்..உங்கள் வீட்டில் உங்கள் சொந்த அண்ணனைபோல உங்களை வாழ்வில் பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள் அரவணைப்பான் என்பது உண்மை.
பைரவசித்தர் ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் அடிமை "நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப் பெற்றேன்?"."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்"...
கட்டுரையாக்கம்:அன்பன்.சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம்,
9787443462.....
No comments:
Post a Comment