Wednesday, July 26, 2017

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் பைரவ பூசை


Thank : 
Siva A Vijay Periaswamy [FB] 

No automatic alt text available.


"உன் பாதம் போகும் பாதை,நானும் போக வந்தேனே".....''பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் குருபூஜை": 26-7-17..''வலங்கைமான் பாடகச்சேரி பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள் திருக்கோயில் திருமடம்''..கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் பாடைக்கட்டி மாரியம்மன் திருக்கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் பாடகச்சேரி உள்ளது.இங்கு தான் பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள் பல ஆண்டுகள் தங்கி இருந்தார்.இங்கு பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் விந்தையான பைரவ பூசையை நடத்துவார்.நூற்றுக்கணக்கான இலைகளில் விருந்தைப் படைக்கச் செய்து வெளியே சென்று அவர் விளித்தவுடன் திடீரென்று நூற்றுக்கணக்கான நாய்கள் எங்கிருந்தோ மந்தையாக வரும்.அவர் கட்டளைப்படி குளத்தில் மூழ்கி எழுந்து அமைதியாக தனித் தனி இலைகளில் விருந்து உண்டுவிட்டு வந்தவழியே மாயமாய் மறைந்து போய்விடும். போடப்பட்ட இலைக்கு கூடவோ குறையவோ இல்லாமல் நாய்கள் வந்து போவது தான் விந்தை.இந்த விருந்தை சேலம் ஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகளும் வியந்து பாராட்டியுள்ளார்.பாடகச்சேரியில் இன்றும் பௌர்ணமி நாட்களில் ஒன்பது நாய்களுக்கு விருந்தளிக்கும் தொண்டு நடைபெற்று வருகிறது. இப்படி நாய்களுக்கு விருந்தளிப்பதால் பூர்வ ஜென்ம தீவினைகளிலிருந்து விடுபடலாம் என்பது சுவாமிகளின் சித்தம்."கரும நோய் தீருவதற்கு தருமந்தான் நல்ல வழி'' என்று உணர்த்தி, செயல்படுத்திக்காட்டிய இந்த மகானின் குரு பூஜை வைபவத்தில், ஆன்மீக அன்பர்கள் அவசியம் பங்கேற்கவேண்டும்..பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் குரு பூஜை வைபவம் வருகிற ஆடிப் பூர தினத்தில் கும்பகோணம் அருகில் உள்ள பாடகச்சேரி கிராமத்தில்அவரது மடத்தில் [ 9443075837,9841718839]
No automatic alt text available.


சிறப்பாக நடைபெற உள்ளது. இங்கே சுவாமிகள் பயன் படுத்திய பிரம்பு
நாற்காலி,ருத்ராட்சம்,நாய் முகம் கொண்ட கைத்தடிகள், சுரைக்காய் கமண்ட லங்கள்,சங்குகள், மருந்துபுட்டி களை இன்றும் காணலாம்."உன் பாதம் போகும்பாதை,நானும் போக வந்தேனே".ஆம்!பாடகச்சேரி ஸ்வாமிகளை மானசீகமாக குருவாக ஏற்று அவர் வழியில் பைரவர் பூசனை செய்து,சிவத்தை நினைத்து வாழ்வில் நற்கதி பெறுவோம்.. பைரவசித்தர் ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் அடிமை "நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப் பெற்றேன்?"."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள்மணக்கும் முருகன் மலரடி நிழலில்"

No automatic alt text available.


1 comment: