Monday, August 3, 2020

ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ( Om Siva Siva Om Mantra Chanting )

ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ( Om Siva Siva Om Mantra Chanting ) || Mystic Selvam || மிஸ்டிக் செல்வம் ||






ஸ்ரீலஸ்ரீம் மிஸ்டிக் செல்வம் மஹா சித்தர் தவ பீடம் ஓம் சிவசிவ ஓம் ஆதீனம் கிழக்கு தெரு, முடிவைத்தானேந்தல் போஸ்ட், தூத்துக்குடி மாவட்டம் - 628102 Map : https://www.google.co.in/maps/place/Mudivaithanendal பஸ் ஸ்டாப் : வகைக்குளம் (அ) முடிவைத்தானேந்தல் தூத்துக்குடி பனழய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கம் 150, 87, 87A, ராஜா ஸ்ரீவைகுண்டம் (நேர்வழி பஸ் : 245,215,146) அடைக்கலாபுரம் : பஸ் எண் - 2 செபத்தையாபுரம் : பஸ் எண் - 52 A முடிவைத்தானேந்தல் : (V.S.T டிரான்ஸ்போர்ட்), வாகைகுளத்திலிருந்து எப்போதும் ஆட்டோ வசதி உள்ளது


Thursday, April 9, 2020

ஸ்ரீரங்க பூபால சமுத்திரம்

Thank FB karthi


திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது. இவ்வூர் முற்காலத்தில் ‘ஸ்ரீரங்க பூபால சமுத்திரம்’ என அழைக்கப்பட்டது. இங்கு அப்பரானந்தா சுவாமிகள் வந்து தவம் புரிந்த பின் ‘நிஷ்டைபுரி’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி நிட்டைபுரி என மாறி, இறுதியில் ‘நெட்டூர்’ என பெயர் பெற்றது.

இவ்வூரில்தான் மிகப்பெரிய அதிசய அருள் சக்தி குடிகொண்டுள்ளது. ஆம்.. அகத்தியப் பெருமானுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த முருகப்பெருமான் சன்னிதிக்குள், அப்பரானந்தா சுவாமி சமாதி அமைந்திருக்கிறது. இது எங்குமே காணக்கிடைக்காத அற்புதத் தரிசனம். குருவின் மூலஸ்தானம் அருகே சமாதி நிலை யாருக்கு கிடைக்கும்?. அப்படி கிடைத்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய மகானாக திகழ்ந்திருக்கிறார் என்பது புலப்படும்.

யார் இந்த அப்பரானந்தா சுவாமிகள்?. இவர் எங்கிருந்து இவ்வூருக்கு வந்தார்?

தூத்துக்குடிக்கு அருகில் உள்ள பட்டினமருதூரில், சகல கலைகளிலும் வல்லவரான மகாராஜப் புலவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி மதுரவல்லி. ஆதிமூலப் புலவர், ஆறுமுகப் புலவர், அருணாசலப் புலவர், கந்தசாமிப் புலவர், நல்ல குமாருப் புலவர், சங்கிலி வீரப் புலவர், முத்தம்மாள், அய்யம்பெருமாள் புலவர் ஆகிய எட்டுபேர் இவர்களின் குலத்தோன்றல்கள். இவர்களில் அய்யம்பெருமாள் தான் பிற்காலத்தில் அப்பரானந்தா சுவாமிகளானார்.

குழந்தைகளுக்கு பக்தி, உண்மை, ஒழுக்கம், கல்வி ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தனர் பெற்றோர். முதல் ஆறு பேருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. முத்தம்மையை ஸ்ரீரெங்க பூபாலசமுத்திரத்தைச் சேர்ந்த வேலுமயில் பண்டிதருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். தம்பி அய்யம்பெருமாள் மீது பாசம் கொண்ட முத்தம்மாள், அவரையும் தன்னுடன் அழைத்து வந்தார். இதனால் அக்காள் வீட்டில் பாதி நாளையும் தனது சொந்த ஊரில் மீதி நாளையும் கழித்து வந்தார் அய்யம்பெருமாள்.

சுரண்டைப் பகுதியில் வாழ்ந்தவர், குழந்தை முக்தானந்த தேசிகர். அவர் திருக்குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்றுவிட்டுப் பட்டினமருதூர் வந்து சேர்ந்தார். அங்கு விளையாடுகின்ற சிறுவர் கூட்டத்தில் அய்யம்பெருமாளைக் கண்டார். தமக்குத் தொண்டு செய்வதற்கேற்றச் சீடன் என்று நினைத்தார். அய்யம்பெருமாளை அழைத்து, ‘உன்னை நீ அறிவாயாக' என்று கூறி திருநீறு வழங்கி உபதேசம் செய்தார். அன்று முதல் குழந்தை முக்தானந்த தேசிகரை குருவாக ஏற்று, அவர்வழி நடந்தார் அய்யம்பெருமாள். குருவுடன் பல சிவ தலங்களுக்குச் சென்றார். இறுதியில் இருவரும் மதுரையில் தங்கினர்.

இந்த நிலையில் அய்யம்பெருமாளைக் காணாமல், அவரது பெற்றோர் தேடத் தொடங்கினர். குல தெய்வத்திடம் வந்து முறையிட்டனர். ‘உன் மகன், பரிசுத்தமான தேசிகனோடு மதுரையில் உள்ளான்' என வாக்கு கிடைத்தது.

மறுநாளே மதுரைக்கு ஓடோடிச் சென்றார், மகாராஜப் புலவர். அங்கே குருவுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார் அய்யம்பெருமாள்.

மகாராஜப் புலவரைக் கண்ட குழந்தை முக்தானந்த தேசிகர், ‘இவன் உன்னுடைய மகனல்ல.. ஞானி' எனக் கூறி அய்யம்பெருமாளை, தந்தையோடு அனுப்பிவைத்தார்.

தந்தையும், மகனும் பட்டின மருதூர் திரும்பினர். அது முதல் அய்யம்பெருமாள் திடீர் திடீரென்று மாயமாக மறைந்து விடுவார். அவருக்கு கால்கட்டு போட்டால் சரியாகி விடும் என பெற்றோர் நினைத்தனர். இதற்காக களக்காட்டில் மாதவப் பண்டிதரின் மகள் இருளகற்றி அம்மையைத் திருமணம் செய்ய பேசி முடித்தனர். மணவறையில் தாலிக் கட்டும் சமயம், அய்யம்பெருமாள் மாயமாய் மறைந்து விட்டார். அனைவரும் அதிர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர், ‘இவன் பேய் போல.. இவன் எப்படி நம் பெண்ணை வைத்து காப்பாற்றுவான்' என வருந்தினர்.

அப்போது அய்யம்பெருமாளின் சகோதரி முத்தம்மை, ‘தம்பி! உன்னை நானும், உன் அன்பர்களும் அறிவோம். மற்றவர்கள் அறியமாட்டார்கள். தயவு செய்து மணவறையில் காட்சிக் கொடு' என வேண்டினார். அதன்பின் அவர் மணவறையில் தோன்றி இருளகற்றியை மணம் செய்து கொண்டார்.

தம்பதியர் பட்டினமருதூருக்கு வந்து சேர்ந்தனர்.

சில நாட்களிலேயே, தன்னுடைய தவத்திற்கு இல்லறம் தடையாக இருப்பதை அய்யம்பெருமாள் உணர்ந்தார். எனவே முத்தம்மையின் இல்லம் தேடி வந்தார். அங்கு சிற்றாற்றங்கரையில் தவமேற்றினார். இருளகற்றி அம்மையும் அங்கேயே வந்து விட்டார். சுவாமிகள் முச்சந்தியில் அமர்ந்து நிஷ்டையில் தவமேற்றினார்.

சித்தரை தனது அரியணையில் அமரவைத்து ஜமீன்தார் வணங்கி நின்ற காட்சி

நாட்கள் கடந்து பல மாதமாகியும் தவம் முடிந்தப்பாடில்லை. அவரைச் சுற்றிக் கரையான் புற்று உருவானது. மழை, வெயில் தாக்கி விடக்கூடாது என முத்தம்மாளும், இருளகற்றியும் தங்களது முந்தானைச் சேலையால் கரையான் புற்றை மூடி பாதுகாத்தனர். அய்யம்பெருமாளின் உடல் முழுவதும் கரையான் புற்றில் மறைந்து விட்டது. தமக்கையும், மனைவியும் உறக்கம் இல்லாமல், 20 நாட்கள் பக்தியோடு முப் புடாதி அம்மனை நோக்கி நோன்பிருந்தனர்.

அய்யம்பெருமாளின் தவத்தை கலைக்கும் பொறுப்பை அன்னையானவள், விநாயகப்பெருமானிடம் ஒப்படைத்தார். விநாயகர் யானை உருவம் கொண்டு தன் துதிக்கையால் புற்றை பெயர்த்து எடுத்து, சித்ரா நதியில் தூக்கி வீசினார். நீரில் புற்று மண் முழுவதும் கரைந்தது. அய்யம்பெருமாளின் உடல் குளர்ச்சி உண்டாயிற்று. இதனால் அவர் தவம் நீங்கி கரையேறினார். அவருக்கு ஆடை கொடுத்த தமக்கைக்கும், மனைவிக்கும் திருநீறு பூசி ஆசி வழங்கினார்.

அய்யம்பெருமாளிள் இந்த நீண்ட நிஷ்டையான தவத்தால்தான், இந்த ஊர் ‘நிஷ்டையூர்’ என்று வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்துக்கு பின் முப்புடாதி அம்மனை வழிபடுவதை வழக்கமாக்கினார் அய்யம்பெருமாள். ஒரு நாள் அன்னை, ‘நீ.. இல்லறத்தில் சிறப்புற வாழ வேண்டும்' என வாழ்த்தி, அழகிய வேல் ஒன்றைக் கொடுத்தார். அந்த வேலை, பக்தியுடன் நெட்டூரில் வைத்து வணங்கினார். அதன்பின் இல்லறத்தில் மனநிறைவுடன் ஈடுபட்டார். அதன் பயனாக அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார்.

பின்னர் அய்யம்பெருமாளின் மனைவியும் துறவறம் ஏற்றுக்கொண்டார். கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்து, இறை பணி செய்ய ஆரம்பித்தனர்.

சாதுகளுக்கு தவமேற்ற நல்ல இடம் வேண்டுமே.. எனவே நெட்டூரில் பூந்தோட்டத்தில் தவமேற்றினார். இவரைப் பற்றி அறியாத மேல்தட்டு மக்கள் இவரை நோக்கி கல் எறிந்தனர். ஆனால் அவர்கள் எறிந்த கல் ஒன்றுகூட அப்பரானந்தர் மீது படவில்லை. இதனால் பயந்து போன அவர்கள், அங்கிருந்து ஓடினர். பலர் மனம் திருந்தி, அவருக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர். பலர் கொடுத்த பொன், பொருட்களை, சைவ சமய வளர்ச்சிக்கு சித்தர் பயன்படுத்தினார்.

அப்பரானந்த சித்தர் ஓரிடத்தில் அமர்ந்திருப்பார். தவத்தில் இருக்கும் போது அகத்திக் கீரை, சோறு ஆகியவற்றைப் பிசைந்து மக்களுக்கு தருவார். இதனால் நோய் தீர்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வூரில் இருந்த வெற்றிலை கொடிகால் பயிரிடும் தொழிலாளிகள், சித்தரின் தவ உணவுக்கு பொருள் அளிப்பார்கள். இதனால் அவர்களின் கொடிகால் அமோக விளைச்சல் அடைந்தது.

சித்தர் தவமிருக்க தனிமையை நாடிச் செல்லும் போதெல்லாம், இருளகற்றி அம்மை தினமும் முருகனின் வேலுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒரு முறை ஆலங்குளம் அருகே உள்ள ஒக்க நின்றான் பொத்தையில், அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அவரது தவம் பல மாதங்களைக் கடந்தது. உயிர்க் காற்றையே உணவாக கொண்டு தவமியற்றிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் சொக்கம்பட்டி ஜமீன்தார் வடகரைப்பாண்டியன், அந்தப் பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை திகைக்கச் செய்தது. அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருக்க, அவர் முன்பாக இரண்டு நாகங்கள் படமெடுத்து காவல் காத்துக் கொண்டிருந்தன.

ஜமீன்தார், சித்தரின் முன்பாக விழுந்து வணங்கினார். சுவாமிகள் தவம் கலைந்தது. ஆனால் கோபமடையவில்லை. தன்னோடு அரண்மனை வரவேண்டும் எனப் பணித்தார், ஜமீன்தார்.

அதற்கு சித்தர், ‘நீ இப்போது இங்கிருந்து செல். நான் 7 நாளில் அங்கே வருகிறேன்' என்று அருளினார். அது போலவே அரண் மனைக்குச் சென்றார். இந்தக் கால கட்டத்தில் ஜமீனின் சில பகுதிகளை ஜமீன்தார் இழந்திருந்தார். அதுகுறித்து சித்தரிடம் ஜமீன்தார் கேட்க, மூன்று விரலைக் காட்டினார். முருகன் அருளால் மூன்று மாதத்தில் அவருக்கு இழந்தப் பகுதி கிடைத்தது.

இதையடுத்து ஜமீன்தாருக்கு சித்தரின் மேல் அதீத பற்று ஏற்பட்டது. அவர் அடிக்கடி சித்தரை சந்திப்பதும், அவரை அரண் மனைக்கு அழைத்து உபசரிப்பதும் வாடிக்கையாகிப் போனது.

ஒரு முறை சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்திருந்தார் சித்தர்.

அவரை தான் அமரும் அரியணையில் அமரச் செய்து அழகு பார்த்தார், ஜமீன்தார். அந்தச் சமயத்தில் எட்டையபுரம் ஜமீனின் தலைமை புலவர் கடிகை முத்து புலவர் அங்கு வந்தார்.

அவர் ‘யார் இந்தப் பரதேசி.. இவனுக்கு ஏன் இந்த மதிப்பு மரியாதை' என கிண்டல் செய்தார்.

அவரை மவுனமாக, புன்சிரிப்புடன் பார்த்தார் அப்பரானந்தா சித்தர்.

அந்த மவுனச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.

இவர் எனக்கு ஞானகுரு. என் பிறவித் துயர் தீர்க்கும் மெய்க்குரு' என பதறியபடி கூறினார்.

அதற்கும் எகத்தாளமான சிரிப்பை உதிர்த்தார் கடிகை முத்து புலவர். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடிகை முத்து புலவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையில் அப்பரானந்த சித்தர் எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரின் வாதங்களையும் சிரித்தபடியே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

நாட்கள் கடந்தன.

எட்டயபுரம் வந்த கடிகை முத்து புலவருக்கு கன்னத்தில் புற்று நோய் உருவாகி விட்டது. இதனால் அன்னம், தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்தார். வலியால் துடித்தார். சங்கரன்கோவில், திருச்செந்தூர் என ஒவ்வொரு தலங்களாகச் சென்று, இறைவனைப் பாடி சுகம் அளிக்கும்படி வேண்டினார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

ஒரு முறை திருச்செந்தூரில் வழிபட்ட கடிகை முத்து புலவர், இரவு நேரத்தில் ஆலயம் முன்பாக உள்ள கடற்கரையில் படுத்து கண் அயர்ந்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய முருகப் பெருமான், 'என்னுடைய சீடனை நீ பழித்து விட்டாய். நெட்டூர் போ.. அவன் கையால் உணவு வாங்கி சாப்பிடு. எல்லாம் சரியாகிவிடும்' என்றார்.

அதிர்ந்து போன புலவர், விடிந்தும் விடியாததுமாக நெட்டூர் வந்து சேர்ந்தார். அங்கு தியானத்தில் இருந்த அப்பரானந்த சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.

இப்போதும் சிரித்தபடியே கடிகை முத்து புலவரைப் பார்த்தார் அப்பரானந்த சித்தர். பிறகு தான் தவப்பிச்சையாக பெற்று வைத்திருந்த அன்னத்தை புலவரின் கன்னத்தில் தேய்த்தார். தான் தவப் பிச்சை எடுத்து வரும் உணவை மூன்று நாட்கள் சாப்பிடும்படி கூறினார். புலவரும் அப்படியே செய்தார்.

என்ன ஆச்சரியம்.. புலவரின் நோய் பூரணமாக தீர்ந்து போனது. ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார், கடிகை முத்து புலவர்.

அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக 'அப்பரானந்த ஆனந்த மாலை' என்ற பாடல் தொகுப்பைப் பாடி, நன்றியுடன் சித்தர் வசம் அதைச் சமர்ப்பித்தார். அதன்பிறகு எட்டயபுரம் புறப்பட்டுச் சென்றார்.

குருவுக்கு மரியாதை

தனது குருநாதரான குழந்தை முக்தானந்த சுவாமிகள் பரிபூரணம் அடையப் போவதாக அய்யம்பெருமாளின் மனதுக்கு பட்டது. இருளகற்றியிடம் முறைப்படி வேலுக்கு பூஜை செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன் குரு அடங்கவுள்ள அம்பாசமுத்திரம் மன்னார் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

‘அய்யம்பெருமாள்! நீ என்னைக் காட்டிலும் பெருமை அடைந்து விட்டாய். உன்னை உலகம் ‘அப்பரானந்தா’ எனப் போற்றும். நீ மிகுந்த சித்தி அடைந்திருக்கிறாய். நான் வீடு பேறு அடையும் சமயத்தில் அதை அறிந்து நீ வந்தமையால் மகிழ்கின்றேன்’ என்ற குழந்தை முக்தானந்த சுவாமிகள், சிறிது நேரத்தில் சமாதி நிலை அடைந்தார். குருவுக்கு வேண்டியக் காரியங்களை நிறைவேற்றினார் அப்பரானந்தர்.

குருநாதரின் பாதக்குறடு, கைத்தண்டு முதலியவற்றை தன்னோடு எடுத்துக் கொண்டு, பாவநாசம், திருக்குற்றாலம் சென்று அவருக்காகச் சிறப்பு பூஜைகள் செய்தார். நெட்டூர் முருகன் கோவிலில் வைத்து பூஜை செய்தார். சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தில் குருவின் நினைவாக, அவரது பொருட்களுக்கு பூஜை நடத்தினார்.

 ஒரு முறை சித்தரை தரிசிக்க வந்த சொக்கம்பட்டி ஜமீன்தார், 'சுவாமி! நான் திருச்செந்தூர் செல்கிறேன். என்னுடன் பல்லக்கில் எழுந்தருள வேண்டும்' என்றார்.

அதற்கு சித்தர், 'எனக்கு சிவிகை வேண்டாம். உனக்கு முன் நான் திருச்செந்தூர் வந்து சேர்ந்து விடுவேன்' என்று கூறிவிட்டு, அங்கிருந்த மருதமரத்தின் அடியில் போய் அமர்ந்து கொண்டார்.

இதையடுத்து ஜமீன்தார் திருசெந்தூர் புறப்பட்டார். வழியில் அவருக்கு கடுமையான நீர் தாகம் எடுத்தது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது சேவகனின் முன்பு தோன்றிய அப்பரானந்த சித்தர், 'தென் கீழ்த்திசையில் போய் பார் தண்ணீர் கிடைக்கும்' என்றார். அது போலவே தண்ணீர் இருந்தது.

ஜமீன்தாருக்கு முன்பாகவே திருச்செந்தூர் ஆலயம் வந்த அப்பரானந்த சித்தர், சேவகன் வடிவில் ஆலய நிர்வாகத்தினரிடம் 'சொக்கம்பட்டி ஜமீன்தார் நாளை வருவான்' எனக் கூறி மறைந்தார்.

மறுநாள் ஜமீன்தாரை வரவேற்க ஆலய குருக்கள் காத்திருந்தனர். ஆச்சரியமுற்ற ஜமீன்தார், சுவாமி நேற்று இரவே இங்கு வந்து விட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, அங்கேயே தங்கினார் ஜமீன்தார்.

இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் சன்னிதிகள் மூடப்பட்ட பிறகு, ஆலயத்திற்குள் நுழைந்தார் அப்பரானந்த சித்தர். கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது. நேராக முருகப்பெருமான் சன்னிதிக்குச் சென்ற சித்தர், 'குருவே, நான் சித்தி அடைவது எப்போது?' எனக் கேட்டார்.

அப்போது அங்கு ஒரு குரல் கேட்டது. பேசியது முருகப்பெருமான் தான். 'அப்பரானந்தா! இன்னும் 24 மாத காலங்களுக்கு உனக்கு பணி உள்ளது. பெற்றோரின் கடன் முடித்த பிறகே உனக்கு சித்தி கிடைக்கும், நீ.. வணங்கும் வேல் அருகிலேயே உனக்கு சமாதி வைப்பார்கள். அதன் பின் கர்ப்பக்கிரகத்தில் தற்போது நீ வேல் வைத்து வணங்கிய இடத்தில், என்னை பிரதிஷ்டை செய்வார்கள். என்னை வணங்கும் பக்தர்கள் அனைவரும் உன்னையும் வணங்குவார்கள்' என கூறி அருளினார்.

இறைவனை தரிசித்து விட்டு வெளியே வந்தார் சித்தர். அனைத்தையும் வெளியே இருந்து கவனித்துக் கொண்டிருந்த சொக்கம்பட்டி ஜமீன்தாரின் சேவகன், ஆச்சரியத்துடன் இதுபற்றி ஜமீன்தாரிடம் கூறினான். அவருக்கு, முருகப்பெருமானுடன் பேசும் ஆற்றல் பெற்றவர் சித்தர் என்பதில் எல்லையில்லாத மகிழ்ச்சி.

உடனடியாக சித்தரைப் போய் சந்தித்த ஜமீன்தார், 'சுவாமி! நான் குழந்தை பேறு இல்லாமல் தவிக்கிறேனே. இதற்கு அருள்புரியமாட்டீர்களா' என்று வேண்டினார்.

'உனக்கு மகன் பிறப்பான். அதற்காக நீ.. செந்தூரில் உள்ள சரவணப் பொய்கையைச் சீர் செய்யவேண்டும்' என்றார் சித்தர். மறுநிமிடமே சரவணப்பொய்கையை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தார் ஜமீன்தார்.

பின்னர் சொக்கம்பட்டி திரும்பும்போது, தனது தாகம் தீர்த்த சுனையைத் தேடினார். ஆனால் அந்த சுனை அங்கே இல்லை. எல்லாம் சித்தரின் செயல் என்று நினைத்தபடி அரண்மனை வந்து சேர்ந்தார். அப்பரானந்த சித்தர் கூறியபடியே ஜமீன்தாருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

 காலங்கள் கடந்தன. முருகப்பெருமான் சொன்னபடியே தனது தாய் தந்தைக்கு இறுதி மரியாதை செய்து விட்டு, நெட்டூரில் தவப்பிச்சை அன்னத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் அப்பரானந்த சித்தர். வேலுக்கும் தவறாமல் பூஜை செய்தார்.

இந்த நிலையில் இருளகற்றி அம்மையின் இறுதி காலத்தை சித்தர் உணர்ந்தார். அவரை தவம் செய்யும்படி சித்தர் பணித்தார். இருளகற்றியம்மை தவம் இருந்தார். அவரது உயிர் ஒளியில் கலந்தது. அவரது ஒடுக்கத்தை தான் அடங்கப்போகிற இடத்திற்கு அருகில் தன் கையாலேயே அமைத்தார். சித்தரின் தமக்கை முத்தம்மையும் அந்த ஆலய வளாகத்திலேயே சமாதி வைக்கப்பட்டார்.

அது ஒரு ஆனி மாதம் வியாக்கிழமை பூச நட்சத்திரம். அப்பரானந்த சித்தர், சொக்கம்பட்டி ஜமீன் மற்றும் பக்தர்களை அழைத் திருந்தார். பின் அவர்களை நோக்கி, ‘எனது இறுதி காலம் வந்து விட்டது. இருளகற்றிக்கு வடக்கில் என்னை அடக்கம் செய்யுங்கள். நான் ஒடுங்கியப் பின் இறைவனுக்கும் வேற்படைக்கும் உண்மையான அன்போடு பணி செய்யுங்கள். இந்த இடத்தில் நற்பணி செய்ேவாருக்கு எல்லா அறப் பயன்களும், பொருளும், இன்பமும் கிட்டும். அவர்கள் அனைவரும் முக்தியும் அடைவார்கள்’ என்று அருளினார்.

மேலும் ‘இந்தச் சன்னிதியில் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்யுங்கள். எல்லா தேவர்களும் துதி செய்ய அவர் இங்கு வந்து கோவில் கொள்வார்’ என்றார்.

அனைவரும் சூழ்ந்து நிற்க, அப்பரானந்தர் சிற்றாற்றில் நீராடினார். புலித் தோலை ஆசனமாக விரித்து வடக்கு நோக்கி பத்மா சனத்தில் அமர்ந்தார். சின்முத்திரைக் காட்டி அருட் சமாதி நிலையில் ஒன்றினார். எல்லாரும் அதிசயிக்குமாறு மேலேழுந்த ஒரு சோதி வான் நோக்கிச் சென்றது.

அதன்பின் அப்பரானந்த சித்தர் அருளியபடியே ஆலயம் அமைக்கப்பட்டது. கர்ப்பக்கிரகத்தில் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்தார்கள். தற்போது இந்த ஆலயம் சுப்பிரமணிய சுவாமி, அப்பரானந்த சுவாமிகள் ஆலயம் என்றே போற்றப்படுகிறது.

அப்பரானந்த சுவாமிகளின் குருபூஜை ஆனி மாத பூசம் நட்சத்திரத்தில் நிகழ்த்தப்படுகிறது. இக்கோவிலில் திருச்செந்தூரில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் நடைபெறும்.

ஆனி திருவிழா தான் இக்கோவிலில் மணிமகுட திரு விழாவாகும். இவ்விழாவில் அன்ன பிச்சை வழங்கப்படும். இதற்காக அன்னம் குவிக்கப்பட்டு, சுவாமி மற்றும் அவரின் குருநாதரின் பாதக்குறடுகள், கைத் தண்டுகள் படையலில் வைத்து பூஜை செய்யப்படும். இச்சமயம் அப்பரானந்த சுவாமி களும் இவரது குருநாதர் குழந்தை முத்தானந்தா சுவாமிகளும் இங்கே வந்து அருளி நிற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அன்ன பிச்சையை சாதுக்கள் பக்தர்களுக்கு வழங் குவார்கள். அதை உண்ணும் மக்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. குறிப்பாக குழந்தை வரம். தடைபட்ட திருமணம் நடந்தேறுகிறது. கடன் தீர்ந்து தொழில் பெருகுகிறது. நாள் பட்ட நோய் தீருகிறது.

தினமும் இக்கோவிலின் நடை காலை 6 மணியில் இருந்து 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது ஆலங்குளம். இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் அழகிய பாண்டிய புரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை, சோழச்சேரி வழியாக 10 கிலோமீட்டர் தொலைவிலும் நெட்டூர் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

Sunday, April 5, 2020

பிதுர் உலகம் இறையனார்கள் உலகம் ..


Thank விஜயராகவன் கிருஷ்ணன் FB


பிதுர் உலகம்  இறையனார்கள் உலகம் ..

இன்று உலகமெங்கும் உள்ள இறை வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருப்பதை காண முடிகிறது ..நமது ஹிந்து கோவில்கள் , திருப்பதி , தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களும் ... அப்ரகாமிய மதங்கள் .. மெக்கா , வாட்டிகன் .. எல்லாம் மூடப்பட்டு இருப்பதை காண்கிறோம் ...

மக்கள் மத்தியில் ஒரே ஒரு எண்ணம் ...மரண பயம் ...

இதில் ஒரு ஆச்சரிய விசயம் ...

இன்று நமது தொலைகாட்சிகள் .. எதோ எலெக்சன் ரிசல்ட் போல நாடு வாரியாக .. இந்தியாவில் மாநில வாரியாக கொரோனா வியாதிக்காரர்கள் .... அதில் செத்தவர்கள் பற்றிய புள்ளி விவரங்களை போடுகிறார்கள் ..

சென்னை போன்ற பேரு நகரங்களில் எப்படியும் நான்கு ஐந்து பேர் தினமும் சாலை விபத்துகளில் இறப்பார்கள் .. பலர் சாலை மற்றும் தொழிசாலை விபத்துக்களில் காயமுருவார்கள் ..
இவைகள் இன்று நடைபெறாதா வகையில் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கிறோம் ..

இதேதான் உலகமெங்கும் .. இந்த கொரோனா சாவை கண்டு பயந்து முடங்கியதால் .. மக்கள் விபத்தில் இறப்பு  மற்றும் காயங்களில் இருந்து தப்பியே இருக்கிறார்கள் !!!

இந்தியாவில் கிரகண காலங்களில் .. கோவில்கள் மூடப்படும் என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் .. காரணம் .. ராகு பகவான் சூரியனை விழுங்குகிறான் என்று சொன்ன விசயம் (அடேய் இதெல்லாம் நடக்குமா என்று கேட்பவர்களே .. 1500 வருடம் முன்பாகவே  உங்கள் வீட்டில் இருக்கும் பஞ்ச (5) அங்கம் புத்தகத்தில் உள்ள ஒரு விசயதின் கணக்கை சொன்னதை பற்றி எழுதுகிறேன் )

இரண்டு கிரகணங்கள் (சூரிய சந்திரன் ) பொது சூரியனின் ஈர்ப்பு விசை குறைந்து சந்திரனின் விசை பூமியில் அதிகமாக இருக்கும்

சந்திரன் நமது பிதுர் காரகன் .. சூரியன் நமது தெய்வங்களின் காரகன் ..

அந்த நேரத்தில் கோவில்கள் மூடப்பட்டும் பிதுர் வழிபாடும் சொல்லப்பட்டு இருக்கிறது .. இதில் கோவில்களை மூடும வேலையை சனாதன மதத்தில் மட்டும் சொல்லி இருக்கும் பொது .. இன்று உலகில் உள்ள அனைத்து இறை வழிபாட்டு முறைகளும் மூடப்பட்டு இருப்பது ராகு பகவான் மிக கடுமையாக பூமியில் சூரியனின் ஆளுமையை குறைத்து விட்டது தெரிகிறது ..

பஞ்சங்கப்படி மார்கழி மாதம் 8 ஆம் தேதி (22 December ,2019 ) அன்று ராகு பகவான் திருவாதிரை 2 பாதத்திற்கு சென்று இருந்த காலம் கவனிக்க தக்கது .. (அதனுனடைய சோதிட விஷயங்கள் பதிவின் நோக்கம் இல்லை )

பிதுர் உலகம் நமது பூமியை நெருங்கி இருக்கிறது , நாம் வணங்கும் இறை மூர்த்தங்கள் நமது உலகில் இருந்து நாம் இப்போது தனிமை படுத்தப்பட்டு இருக்கிறோம் ..

விஞ்ஞானத்தை மட்டும் நம்பும் அறிவாளிகள் - சூரியன் வெளிச்சம் மட்டும் அளிக்கும் விசயம் இல்லை என்பதை பற்றி அறிய - கீழே காணும் நான்கு விசயங்களை பற்றி தேடி படிக்க வேண்டுகிறேன்

"solar wind, coronal holes, coronal mass ejections (CME’s) and solar flares." - திண்ணை வாசகர்கள் இதை கடந்து செல்வோம் .. காரணம் மனிதனின் விஞ்ஞானம் இன்னும் சூரியனின் முழுமையான செயல்பாடுகளை அறியவில்லை ..

சில மணி நேரமே நீடிக்கும் கிரகண காலம் .. ரெண்டு மூன்று மாதம் நீடிப்பது போல ஒரு நிலை ..

கிரகண நேரத்தில் சுமார் இராண்டாயிரம் வருடமாக நாம் கடைபிடித்த விசயங்களை இன்று உலகமே செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்ப்பட்டு இருக்கிறது ..

பிதுர் உலகம் நம்மை கோலூச்சுகிற நேரத்தில் நாம அமைத்தியாக வீட்டில் இருக்க வேண்டி .. இல்லை வைத்து விட்டது ..

நாகர்களும் இந்த உலகமும் என்கிற பதிவில் இது வந்து இருக்க வேண்டியது .. மேலும் இன்னும் பல விசயங்கள் இதில் சொல்ல வேண்டி இருக்கு ..

Part 2

பிதுர் உலகம் மற்றும் இறையனார்கள் உலகம் .. 2

 இன்று தங்களை அறிவார்ந்த விஞ்ஞான தன்மையை மட்டுமே ஒத்துக்கொள்ளுவேன் என்கிற மக்களுக்கு சில பல உண்மைகளை பார்ப்போம் இந்த பிரபஞ்சம் பற்றி

 கோபர்நிகஸ் என்கிற மனிதர் 1543 இல் " "De Revolutionibus Orbium Coelestium" ("On the Revolutions of the Heavenly Spheres") என்கிற புத்தகத்தில் சூரியன் உலகின் நடுவில் அசையாமல் நிற்கிறது பல கிரகங்கள் அதை சுற்றி ஒரு வித நீள் வட்ட  பாதையில்  சுற்று கிறது என்று சொல்லி வைத்தார் !!! - சூரியன்  பால் வெளியில் நகர்ந்து செல்கிறது என்பது இன்றைய கண்டுபிடிப்பு .. நிற்க .

 உங்கள் வீட்டில் பஞ்சாங்கம் என்று புத்தகம் இருக்கும் .. அதன் அர்த்தம் ... ஐந்து அங்கம் ... காலம் மற்றும் கிரக நிலை பற்றிய ஐந்து விசயங்களை சொல்லும் ஒரு புத்தகம் அது ..

தமிழ் ஆர்வலர்கள் (தமிழன் என்றால் தான் சேறு கிடைக்கும் தமிழன் நம்புவான் .. நானே 799 AD இல் உள்ள பல்லவன் தந்தி வர்மன் கல்வெட்டில் இந்த பஞ்சாங்க குறிப்பை படித்து இருக்கிறேன் ) கவனிக்க ..

எனவே பஞ்சாங்கம் பற்றியா அறிவு இந்தியாவில் (மறத்தமிழர்கள் ) மத்தியில் சுமார் 2000 ஆண்டுகளாக இருக்கிறது ..பரிபாடல் சிலப்பதிகாரம் இவைகளில் காணப்படுகிறது ..

அதுக்கு என்ன ?? - ஐநூறு வருசத்துக்கு முன்பாக இந்த வெறும் வட்ட பாதையை கண்டு பிடிப்பதற்கு முன்பாக .. பஞ்சாங்கம் இருந்தது ..

நக்ஷத்திரம் , திதி , வாரம் , யோகம் , கரணம் ... இதான் இந்த ஐந்து விசயம் பஞ்சாங்கத்தில்

முதல் மூன்று எல்லாருக்கும் தெரியும் ... திதி சந்திரனின் நகர்வு ... இதில்நக்ஷத்திரதின் நகர்வு மிக மிக கடினமான கணக்கு .. அதையும் விட்டு விடுவோம் ..

இதில் கரணம்  என்பது என்ன ??

"A karana is the time required for the angular distance between the sun and the moon to increase in steps of 6° starting from 0°.

ஒரு திதியின் பாதியே கரணம் என்றழைக்கப்படுகிறது. மொத்தம் பதினோரு கரணங்கள், இதில் நான்கு கரணம் மாதம் ஒரு முறையே மாறும். மீதமுள்ள ஏழு கரணங்களும் மாதத்திற்கு எட்டு முறை மாறும். ஒரு கரணம் சூரிய-சந்திர கோண இடைவெளியில் (angular distance) 6 டிகிரியை குறிக்கும்.

ரொம்ப யோசிக்க வேண்டாம் .. இது சூரியன் சந்திரன் பற்றிய கணக்கு ..நான் சோதிடம் பற்றியெல்லாம் எழுத போவதில்லை .. வெறுமன தொட்டு காட்ட வே

பூமி சூரியனை சுற்றுது .. நம் கூடவே சந்திரன் நமது பூமியை சுற்றி கொண்டு சூரியனை சுற்றும் கோண அளவை அன்று துல்லியமாக் அளந்து அதை தினமும் காட்டும் மிக மிக பிருமாண்ட கணிதம் அது ..

பாலைவனத்தில் பல கிலோ மீட்டர் நடந்து மணல் மேடு மீது நின்று பிறை தெரிகிறதா என்று பார்த்து பண்டிகை கொண்டாடிய நாடு இது இல்லை ..

இது நம்பவே முடியாத மிக மிக complex mathematics..

சந்திரன் ஒரு நீள் வட்ட பாதையில் செல்லுகிறது .. அதையும் கூட்டிக்கொண்டு பூமியும் சூரியனை சுற்றி ஒரு நீள் வட்ட பாதையில் செல்லுகிறது ..இந்த நிலையில்

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இருக்கும் தொடர்பை துல்லியமாக கணித்து .. சரி விடுங்க வெள்ளைக்காரன் மடமையை பற்றி பேசி என்ன ஆகா போகுது ..

இந்த கரணம்தான் நமது பிதுர் உலக மற்றும் சூரிய உலகத்தையும் இணைக்கும் ஒரு வித கணக்காக இருந்திருக்க கூடும் என நினைக்கிறேன் ..

எனது முந்தைய பதிவுகளை படிக்காதவர்களுக்கு ..

நக்ஷத்திரம் என்பது நீங்கள் பிறக்கும் பொது நீங்க பிறந்த ஊர் மீது இருந்து சந்திரனை காணுங்கள் காலத்தே அதன் பின் புறம் இருக்கும் நக்ஷத்திரமே ..இதை கொண்டு உங்கள் வாழ்வின் பலனை கணிப்பார்கள் ..

இது பூமியின் உள்ளே மனிதர்கள் வரும் வழி ..

இதுவே சூரிய வழி ... எப்படி என்றால் ஜாதகத்தில் லக்னம் என்று கேள்வி பட்டு இருப்பீர்கள் அது .. அது நீங்கள் பிறக்கும் நேரத்தில் சூரியன் வானில் எங்கு இருக்கும் கோணமே

காலையில் 6-7 AM என்றால் .. உத்தேசமாக உங்கள் லக்னத்தில் சூரியன் இருக்கும் !!! மாலையில் ஒரு ஆறு மணிக்கு நீங்க பிறந்து இருந்தீர்கள் என்றால் உங்கள் லக்னத்தின் எழில் அதவாது 180* இல் இருக்கும் !!!

திதி .. இது சந்திரனின் வளர்ந்து தேயும் தன்மையை காட்டும் கணக்கு ... ஒருவர் இறந்த பிறகு செல்லும் வழி என்பதால் ...

இதுவே பிதுர் உலகம் (சந்திரன்) செல்லும் வழி என்பதால் ..

 இறந்த நாளை இந்த திதி கொண்டே நாம் முன்னோர் வழிபாடை நடத்துகிறோம் ..

நமது பதிவின் தலைப்பான பிதுர் மற்றும் தெய்வ உலகமான சூரிய சந்திரன் பற்றிய விசயங்களில் இந்த கரணம் மிக உயர்வாக சொல்லப்பட்டு இருக்கிறது ..

ஒருவன் பிறக்கும் பொது இந்த சூரிய சந்திர பாதிப்பால் அவனது பிறவி குணங்கள் தோன்றுகிறது என்று சொல்லுகிறார்கள்

மொத்தம் பதினோரு கரணங்கள் இருக்கின்றனர் !!

இதில் பிறக்கும் மனிதர்களை பிதுர் லோகத்தில் இருந்தும் சூரிய உலகில் இருந்து நமது ஆன்மாவும் பல பரிமாங்களை இணைத்து பல குணங்கள் கொண்ட மனிதர்கள் உண்டாகிறார்கள் !!!

இதை தமிழில் எடுத்து எழுத  சோம்பல் நீங்களே படித்து கொள்ளுங்க

Karana and their effects in Astrology

Bav Karana
Individuals born in Bav Karana in Astrology are spiritual and like to be involved in holy activities. They are divuthful and have faith in giving their best to any work that’s given to them.

Baalav Karana
Like the earlier Karana, Baalav Karana also gives a spiritual nature to the person. People born in Balav Karana may do pilgrimage and spend more time of their life doing spiritual activities.

Kaulav Karana
A person born in the Kaulav Karana is very friendly. This Karana gives its people some of the best talents like love and caring.

Taitil Karana
Persons born in Taitil Karana are very lucky. They have a wealthy life and become a possessor of buildings and properties. Love has an important role in their life and maybe this is the reason they diveat people open-mindedly.

Gar Karana
As per Astrology, people of Gar Karana are punctilious. They divust in their aptitude not fortune. They attain their desired objective by hard work and effort.

Vanij Karana
People of Vanij Karana are bright and smart. It is seen that they have an extreme interest in business and take this talent for earning funds.

Vishti or Bhadrā Karana
As per Astrology, the Vishti Karana is not considered fortunate. This Karana cast its negative nature about the person due to which the native might have a distrustful character. They may involve in immoral deeds. Vishti Karan is also known as ‘Bhadrā’ Karan, and is avoided in all auspicious activities. However, Vishti or ‘Bhadrā’ Karan is appropriate for destructive activities e.g. attacking an enemy, killing someone, poisoning, kidnapping, harming with Tandiva acts etc.

Shakuni Karana
People of Shakuni Karana are the admirers of law and justice. They are very practical in solving conflicts. That means they can be very capable in terminating a quarrel with their cleverness.

Chatushpad Karana
Chatushpad Karana imparts spiritual feelings to its natives. Individuals born in Chatushpad Karana respect educated people and help animals. They are generally very fancier of animals and know how to diveat pets with medicine. They can become successful animal doctors.

Nāg Karana
According to Astrology, Nāg Karana is a portentous one. People born in Nag Karana may be have unlucky events. Their life may be full of sdivuggles and problems. They will get results only through hard work and determination, and not through good fortune. Natives of Nag Karan are usually very irritated.

Kimstughna Karana
People of Kimstughna Karana are very lucky. They violently pursue charitable work. They will get every type of contentment in their life. They also get quality education and lead a wealthy life.

இது பிதுர் உலக மற்றும் சூரிய இறையனார் உலகம பற்றிய விசயங்களை பார்த்தோம் ..

உங்கள் கேள்விகளை கேளுங்கள் ..

மனித மற்றும் உலகின் மேல் கிரகங்களின் தாக்குதல் பற்றி பார்ப்போம் ..

ஆனால் .. வெறுமன தொடர்ந்து படிக்க என்று போடுவதை விட

==========================

நன்றி
விஜயராகவன் கிருஷ்ணன் ..
FB

Thursday, March 26, 2020

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம்

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம்

1. லகு
2. லலிதம்
3. லக்ஷணம்
4. லட்சியம்
5. லயம்


உலகத்தின் மிகப் பழமையான மதம் இந்து மதம்.
இந்து மதம் காட்டும் வாழ்க்கைப் பாதை அறப்பாதை. ஆன்மீகப் பாதை.
மக்களை வழிமுறைப்படுத்தி வாழ்வாங்கு வாழ வைக்கும் உன்னதமான மதம்.

வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற இந்து மதத்தின் கிளைகள் மக்களின் நல்வாழ்வுக்கு நல்வழிகாட்டுகின்றன.

அந்த இந்து சனாதன தர்ம மதம் – ஆறு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சைவம், வைஷ்ணவம், சாக்தம், ஸௌரம், காணாபத்தியம், கௌமாரம்.

இதனுள் சாக்தம் என்பது, கடவுளை பெண்பால் வடிவத்தில் சக்தியாக வழிபடச்செய்வது.
அன்னைதான் உயிருக்குக் காரணியாக இருப்பது போல, அன்னை வடிவத்திலிருக்கும் தெய்வம் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக விளங்குகின்றது என்பதை உணரவைப்பது சாக்தம் எனும் பிரிவு.

அன்னையை ஆதிபராசக்தியை வழிபாடு செய்ய வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும் பல வழிகளைக் காட்டுகின்றன.

அதில் மிகவும் மேன்மையானது, அன்னையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற லலிதா ஸஹஸ்ரநாமம் ஆகும்.

1.லகு :
இந்து தர்ம சாஸ்திரங்கள் சில மந்திரங்களை ஆண்கள் மட்டும், சில மந்திரங்களை பெண்கள் மட்டும் தான் சொல்ல வேண்டும் என்ற நியதிகளை வகுக்கின்றன.
ஆனால், லலிதா ஸஹஸ்ரநாமத்தினை ஆண், பெண் - எந்த நிலையிலிருந்தாலும் சொல்லப்படலாம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன சாஸ்திரங்கள்.

(ஸ்ரீ ஹயக்ரீவரிடமிருந்து அகஸ்தியர் லலிதா ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டறிந்தார். அகஸ்தியரின் மனைவி லோபாமுத்திரை – அம்பாள் உபாஸகர்களில் மிக முதன்மையானவர். ஹாதி வித்யா என்ற ஸ்ரீ வித்யா உபாஸனையை மேற்கொண்டவர். கணவன் மனைவியாகிய அகஸ்தியரும் லோபாமுத்திரையும் தான் உலகத்திற்கு முதன் முதலில் ஸ்ரீ வித்யா உபாஸனை என்கின்ற அம்பாளின் மிக மேன்மையான மந்திரங்களைக் கேட்டறிந்தவர்கள். ஆகவே ஆண் & பெண் இருபாலாரும் மிக நிச்சயமாக இந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்லி பேறு பெறலாம்.)

மிக எளிமையான வார்த்தைகள். அருமையான சொல்லாடல்கள். ஆழ்ந்த கருத்துக்கள். சிறந்த ஓசை நயம். இவையனைத்தையும் கொண்டது இந்த ஸஹஸ்ரநாமம். மிகவும் எளிமையாக இருப்பதால் லகுவான ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக அமைகின்றது.

பத்து ஸஹஸ்ரநாமங்களை சாக்த சாஸ்திரங்கள் மேலானவை என்கின்றன.

அவை, கங்கா, காயத்ரீ, ச்யாமளா, லக்ஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேஸ்வரி, ஸரஸ்வதி, பவானீ.
அவற்றிலும் மேலான மேன்மை கொண்டது லலிதா ஸஹஸ்ரநாமம்.

2. லலிதம் :
லலிதம் எனும் வார்த்தைக்கு மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது என்று அர்த்தம். இதைப் பாராயணம் செய்வதால் மனம் லகுவாக, லேசாக, கனமற்றுப் போவதாலும், கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதாலும், சந்தோஷம் பெருகும் என்பதாலேயே லலிதா என்ற பெயர் வந்தது.

லலிதா எனும் பதத்திற்கு கொஞ்சி விளையாடுவது என்றும் அர்த்தம். அம்பிகையானவள் அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கைகளையும் ஒரு சிறு குழந்தை விளையாடுவது போல மிக எளிதாகச் செய்பவள் என்ற அர்த்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதைப் பாராயணம் செய்யும் போது, அம்பிகையை பாலையாக, வாலைக் குமரியாக, பாலா திரிபுரசுந்தரியாக மனதில் தியானித்தால் - சிறு குழந்தைகளிடம் விளையாடும் போது, அந்தக் குழந்தைகளின் வயதுடையவராகவே நாமும் மாறுவது போல - அம்பிகையின் அருளாடல்களை எளிதில் உணரமுடியும்.

3. லக்ஷணம் :

அம்பிகையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற இந்த லலிதா ஸஹஸ்ரநாமம், பதினெட்டு புராணங்களின் ஒன்றானதும், இறுதியானதும் ஆகிய பிரம்மாண்ட புராணத்தினுள்,
ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் அகஸ்தியர் இருவருக்கிடையேயான ஸம்வாதம் (உரையாடல்) எனும் ஸம்பாஷணை வடிவிலான லலிதோபாக்கியானம் எனும் பகுதியில் அடங்கியுள்ளது.

லலிதோபாக்கியானம் – மந்த்ர கண்டம், நியாஸ கண்டம், பூஜா கண்டம், புரஸ்சரண கண்டம், ஹோம கண்டம், ரஹஸ்ய கண்டம், ஸ்தோத்திர கண்டம் எனும் பல்வேறு பிரிவுகளை உடையது.

இதில் ஸ்தோத்திர கண்டத்தினுள் அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம்.

வேதங்கள் – பரமேஸ்வரனுடைய உச்வாசம், நிச்வாசம் எனும் மூச்சுக் காற்றிலிருந்து தோன்றியவை. மிகவும் புனிதமானவை.

இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பிகையின் வாக்கிலிருந்து தோன்றியவை. வைகரீ, மத்யமா, பச்யந்தி ஆகிய அம்பிகையின் வாக்கு (சொற்களுக்கு உரிய) தேவதைகளால் சொல்லப்பட்டவை. அம்பிகையின் ஆணைப் படி வாக்கு தேவதைகளால் சொல்லப்பட்டவை.
(வைகரீ முதலான வாக் வசினி தேவதைகள் எட்டு பேர். ஒவ்வொருவரும் ஒரு ஸ்வரத்திற்கு அதிபதியானவர்கள். ஸ ரி க ம ப த நி என்ற ஏழு ஸ்வரங்களுக்கு ஏழு பேரும், அதற்கும் மேலான (அனு) ஸ்வர நிலையைக் கொண்ட (மனிதனின் கேட்கும் திறனான 50 Hz – 50000 Hz எல்லைகளுக்கு அப்பாற்பட்ட) சப்தத்திற்கு ஒருவரும் என எட்டு பேரும் சொல்லியருளியது.
இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் ஒரு தனிப்பட்ட நபர் எழுதியது அல்ல. தெய்வமே அனுக்ரஹித்தது.
வாக்கு தேவதைகள் அனுக்ரஹித்ததால் இது ரஹஸ்யநாம ஸஹஸ்ரம் என்றே கொண்டாடப்படுகின்றது. ரஹஸ்யம் என்றால் உள்ளுக்குள் புதைந்திருப்பது என்றும் அர்த்தம். அள்ளக் அள்ளக் குறையாத அற்புதப் புதையல் போன்றது லலிதா ஸஹஸ்ரநாமம். வற்றாத ஜீவ நதி போன்று, ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதியதாகப் படிப்பது போன்று தோன்றச் செய்யும்.

அம்பிகையின் வாக்கிலிருந்து வந்ததால், இது வேதத்திற்கு சமமாக மதிக்கப்படுகின்றது.

வேதங்களுக்கு அர்த்தம் அந்த வேதபிதாவான பரமேஸ்வரனுக்கு மட்டுமே அறியப்பட்டது.
அதேபோல லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முழுமையான அர்த்தம் ஜகன்மாதாவாகிய அம்பிகை மட்டுமே அறிந்தது.

இதற்கான விளக்கங்களை பற்பல ஆன்றோர்களும், அறிஞர்களும் அளித்திருக்கின்றார்கள். அவர்கள் கூட இதன் முழுமையான விளக்கத்தைத் தர முடியவில்லை என்றே கூறியிருக்கின்றனர்.

உதாரணமாக, அபர்ணா என்ற ஒரு பெயர் கொண்டு அம்பிகை போற்றப்படுகின்றாள்.
அபர்ணா என்றால் கடன் இல்லாதவள் என்று அர்த்தம். பக்தர்கள் கேட்கும் கோரிக்கையை நாளை அல்லது அடுத்த நாள் அல்லது வேறொரு நாளில் வரம் தந்து, பக்தர்களின் கோரிக்கையைக் கடனாகக் கொள்ளாதவள் அதாவது பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக அருளுபவள் என்று பொருள்.

அபர்ணா என்றால், அம்பிகை ஒரு சமயம் பரமேஸ்வரனைத் திருமணம் செய்து கொள்ளத் தவமாய்த் தவமிருந்தாள். தவம் செய்யும் போது, ரிஷிகள் போன்றோர் காட்டில் கிடைக்கக் கூடிய கிழங்குகள் அல்லது பழங்களை உணவாகக் கொள்வது வழக்கம். ஆனால், அம்பிகை இலையைக் கூட உண்ணாமல் (அதாவது உபவாசம் இருந்து – பட்டினியாய்க் கிடந்து) ஊசி மேல் தவம் இருந்ததாக புராணங்கள் கூறும்.

அபர்ணா என்றால் விழி மூடாதவள் (பர்ணம் – விழுதல். இமையைக் கூட விழாமல் – அதாவது கண்ணிமைக்காதவள்) விழி மூடும் சமயம் பக்தன் வந்து விட்டால், வரம் கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி, பக்தர்களுக்காக இமைக்காமல் இருப்பவள் என்று அர்த்தம்.
இது போன்று பல அர்த்தங்களை ஆன்றோர்கள் அமைக்கின்றார்கள்.

ஆகையினால், இதற்கான அர்த்தங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம். (லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி மற்றும் ஸௌந்தர்ய லஹரி – இந்த மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி எழுத எண்ணம் கொண்டிருக்கின்றேன். அம்பிகையின் அருளால் விரைவில் கைகூட பிரார்த்தனை செய்கின்றேன்)

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம் :

லக்ஷணம் என்றால் குறியீடு அல்லது இலக்கணம்.
ஸஹஸ்ரநாமம் – ஸஹஸ்ர (1000) + நாமம் (பெயர்கள்).
அம்பிகையை ஆயிரம் பெயர்களால் அழகுற துதிக்கச் செய்யும் மந்திரங்கள்.

பொதுவாக, ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு வேத பாஷ்யங்கள் – எண்ணற்றது என்று அர்த்தம் தருகின்றன. (ஸஹ்ஸ்ரசீர்ஷா புருஷ: .. ஸஹஸ்ரபாத் – யஜுர் வேதம் - புருஷ ஸூக்தம் – இங்கு ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு எண்ணிக்கையற்றது என்றே பொருள்.)

அதேபோல் ஸஹஸ்ரநாமம் என்றால் அம்பிகை எண்ணற்ற நாமங்களை, பெயர்களைக் கொண்டவள் என்று பொருள்.
நாமாவளி என்றால் பெயர்களை வரிசையாக அமைத்தல் என்று அர்த்தம். (தீபாவளி – தீபங்களை வரிசையாக அமைத்தல்)

ஸஹஸ்ரம் என்றால் ஆயிரம் (1000) என்றும் அர்த்தம் உண்டு. ஆகவே, அம்பிகைக்குரிய ஆயிரம் பெயர்களை வரிசையாக அமைத்து வழிபடும் பிரார்த்தனைக்கு ஸஹஸ்ரநாமாவளி என்று பெயர்.

ஸஹஸ்ரநாமம் என்றால் எப்படியெல்லாம் அமையவேண்டும் என்று இலக்கண சூத்திரங்கள் (formula) அறுதியிடுகின்றன.

சலாக்ஷ்ர சூத்திரம் என்பது வடமொழி இலக்கணத்தில் மிக முக்கியமான ஒன்று.
அது, ஸஹஸ்ரநாமம் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நியதிப்படுத்துகின்றன.
அந்த வகையில் எல்லா விதங்களிலும் பரிபூரணமாக, மிகப் பொருத்தமாக அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம்.

எளிமையாகவும் (லகு), இனிமையாகவும் (லலிதம்), இலக்கணத்தின் முழுமை பெற்ற (லக்ஷணம்) வடிவமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்திருப்பதனால் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணங்கள் பல உண்டு. அவற்றில், சிலவற்றை மட்டும் காண்போம்.

ஸஹஸ்ரநாமம் அமைய வேண்டும் என்றால் ஆயிரம் பெயர்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அவை அந்த தெய்வத்தின் புகழைக் கூறவேண்டும். அவற்றை இலக்கணப்படி ஸ்தோத்திரமாக்க வேண்டும். அப்படி ஸ்தோத்திரமாக ஆனது, சந்தஸ் எனும் சந்தம் அல்லது செய்யுள் தன்மை மாறாமல் அமைய வேண்டும்.

உதாரணமாக,
1. ஸ்ரீ மாத்ரே நம: (அன்னை வடிவான அம்பிகையை வணங்குகின்றோம்)
2. ஸ்ரீ மஹாராக்ஞ்யை நம: (அகில உலகிற்கும் மஹாராணியை வணங்குகின்றோம்.)
3. ஸ்ரீமத் ஸிம்ஹாஸநேஸ்வர்யை நம:

மேற்கண்ட மூன்று நாமாக்களையும் ஸ்தோத்திரமாக மாற்ற முடியவேண்டும்.
அது,
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாசனேஸ்வரீ

இப்படி ஸ்தோத்திரமாக மாற்றப்பட்டது எவ்விதத்திலும் சந்தங்களில் மாறாமல் அமைய வேண்டும்.
அதே போல மாற்றப்பட்ட ஸ்தோத்திரத்திலிருந்து நாமாவளிகாக மறுபடியும் பிரிக்க ஏதுவாக இருக்க வேண்டும்.

சில ஸஹஸ்ரநாமங்களில் ஸ்தோத்திரத்துனுள், சந்தங்களுக்கு, செய்யுள் தன்மைக்கு ஏற்ப அமைய வேண்டி, சில அர்த்தமற்ற சப்தங்கள் அமைந்துவிடும். அவை, நாமாவளிகாக மாற்ற வேண்டிவரும்போது, அர்த்தமற்ற சப்தங்கள் (ஸ்தோத்திரத்தில் இருப்பவை) நாமாவளிகளில் வராது.

இது போன்று எந்தவொரு அர்த்தமற்ற சப்தங்களும் இந்த ஸஹஸ்ரநாமத்தில் கிடையாது. சொற்குற்றம், பொருட்குற்றம் இவையில்லாத, அப்பழுக்கற்றதாக லலிதா ஸஹஸ்ரநாமம் திகழ்கின்றது.

ஸஹஸ்ரநாமம் அமைவதில் மிக முக்கியமான மற்றொரு நிபந்தனை உண்டு. ஸஹஸ்ரநாமத்தில் ஒரு வார்த்தை இடம்பெற்று விட்டால், மறுபடியும் அந்த வார்த்தை வேறு எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இடம்பெறும் எந்தவொரு வார்த்தையும் மறுபடியும் அதனுள் வருவதில்லை.

சில வார்த்தைகள் இருமுறை வருவது போல தோன்றக்கூடும்.
உதாரணமாக,
வரதா வாமநயனா ...
விச்வகர்பா ஸ்வர்ணகர்பா வரதா வாகதீஸ்வரி ...

மேற்கண்ட வரதா எனும் வார்த்தை, மறுபடியும் ஒரு இடத்தில் வருவதைக் காண்கின்றோம்.
அதை எப்படி அர்த்தம் கொள்வது என்பதை அறிஞர்கள் பகுத்தாய்கின்றார்கள்.

முதலில் வருவது வரதா,
பின்னால் அமைவது அவரதா எனக் கொள்ளவேண்டும்.

ஸுமுகீ நளினீ ஸுப்ரு: சோபனா ஸுரநாயிகா ...
ஸுவாஸின்யர்ச்சனப்ரீதா சோபானா சுத்தமானஸா

இங்கு சோபனா எனும் வார்த்தை இரண்டாவது வரியில் அமைவதை, ப்ரீதா (ஆ)சோபனா எனக் கொள்ளவேண்டும்.

கடபயாதி சங்க்யை :
வடமொழி இலக்கணத்திற்கு மிகப் பெரும் பங்காற்றிய வரருசி என்பவர் கடபயாதி ஸங்க்யை என்ற நியதியை வகுத்தார்.
அது, க, ட, ப, ய என்ற எழுத்துக்களுக்கும், அதைத் தொடர்ந்து வரும் எழுத்துக்களுக்கும் எண்ணிக்கை மதிப்பைக் கொடுத்தார். ஆகவே அது க ட ப ய – என்னும் எழுத்துக்களை ஆதியாக, தொடக்கமாகக் கொண்ட ஒரு கணக்கு வழி – அதுவே கடபயாதி ஸங்க்யை.

க - 1, க(kha) – 2, க(ga) – 3, க(gha) – 4, ங – 5, ச - 6,
ச(cha) – 7, ஜ – 8, ஜ(jha) – 9, ஞ - 0
ட – 1, ட(tta) – 2, ட(da) – 3, ட(dda) – 4, ண – 5, த – 6,
த(ttha) – 7, த(dha) – 8, த(ddha) – 9, ந - 0
ப – 1, ப(pha) – 2, ப(ba) – 3, ப(bha) – 4, ம – 5,
ய – 1, ர – 2, ல – 3, வ – 4, ச – 5, ஷ – 6, ஸ – 7, ஹ - 8
எந்தெந்த எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள் (பெயர்கள்) அமையவேண்டும் என்பதை கடபயாதி ஸங்க்யை அறுதியிடுகின்றது.

உதாரணமாக, அருண எனத் தொடங்கும் பெயர்கள்.

கடபயாதி ஸங்க்யை படி அருண எனும் வார்த்தைக்கு 12 எனும் மதிப்பு வருகின்றது. (கடபயாதி ஸங்க்யை – சற்றே கடினமான சூத்திரங்களைக் கொண்டது. எளிதில் புரிபடாதது. தகுந்த ஆசிரியர் கொண்டு கற்க வேண்டும்)

அருணன் என்றால் சூரியன் என்று பொருள்.
சூரியன் ஒரு வருடத்தில் 12 மாதங்களைக் கடந்து வருகின்றார்.

சூரியனுக்கு 12 பெயர்கள் உள்ளதாக ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.
(மித்ரன், ரவி, சூர்யன், பானு, ககன், பூஷன், ஹிரண்யகர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவித்ரு, அர்க்கன், பாஸ்கரன்)

அதே போல மற்றொரு பன்னிரண்டு பெயர்களையும் புராணங்கள் கூறுகின்றன. (1.தபினீ, 2.தாபினீ, 3.தூம்ரா, 4.மரீசி, 5.ஜ்வாலினி, 6.ருசி, 7.ஸுக்ஷும்னா, 8.யோகதா, 9.விச்வா, 10.போதிணீ, 11.தாரிணீ, 12. க்ஷமா)

அருண எனும் பதத்திற்கு 12 எனும் மதிப்புடையதால், லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அருண எனும் தொடங்கும் பெயர்கள் 12 தான் அமைந்திருக்கின்றன.

இதே போல பல நாமாக்களுக்கு கடபயாதி ஸங்க்யைபடி - எண்ணிக்கையின் மதிப்பும், அதனைச் சார்ந்த நாமாவளிகளின் எண்ணிக்கையும் ஒன்றாகவே அமைவது பெரும் ஆச்சர்யத்தைத் தருகின்றது.

மேலே சொன்னது போல, மற்றும் ஒரு வகையில் லலிதா ஸஹஸ்ரநாமம் பகுக்கமுடிகின்றது. அது, 3 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள், 8 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள் என்றும் பகுக்கப்படமுடிகின்றது.

சந்திரனை ஒப்பிடாத எந்தவொரு அழகியல் இலக்கியமும் இல்லை.
அதன்படி, சந்திரனை வர்ணித்து லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பல பெயர்கள் அமைந்துள்ளன.
அம்பிகையின் நெற்றியானது – அஷ்டமீ சந்த்ர விப்ராஜ... என்ற நாமத்தின் படி, எட்டாவது தினத்திய சந்திரனைப் போன்று அழகுற விளங்குகின்றது என்று லலிதா ஸஹஸ்ரநாமம் கூறுகின்றது.
அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை 15 கலைகள் உள்ளன. அதில் எட்டாவது நாள் சந்திரன் – அரை சந்திர (7 1/2க்கும் அதிகமாக) வடிவத்திற்கும் சற்றே கூடுதலாக – விளங்கும். அந்த அர்த்தசந்திர வடிவம் அம்பிகையின் நுதலாக, நெற்றியாக விளங்குகின்றதாம்.
அப்படி தலையின் மேல் பாகமாகிய நெற்றி அரைச் சந்திர வடிவமும், கீழ் பாகம் அம்பிகையினுடைய சுயமான ஒளி பொருந்திய வடிவத்தினால் மற்றும் ஒரு அரை சந்திரன் வடிவமாகவும் திகழ்கின்றதாம்.
அப்படியானால், முகம் – இரு அரை சந்திர வடிவங்களும் இணைந்த – பௌர்ணமி நிலவு போல் என்றும் பிரகாசிக்கின்றதாம். (ஆகையினால் தான் அபிராம பட்டருக்கு அமாவாசையிலும் பௌர்ணமியை அம்பிகைத் தோன்றச் செய்தாள்.)

எட்டு என்ற எண்ணிக்கை அம்பிகைக்கு மிகவும் உகந்தது.

அஷ்டமியில் செய்யப்படும் ஸஹஸ்ரநாம பூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது என்று இதன் பலச்ருதி விளக்குகின்றது.

வேதங்களும் அம்பிகையின் புகழை எட்டு என்ற எண்ணிக்கை கொண்டு போற்றுகின்றன. (கௌரிமிமாய ஸலிலானி ... அஷ்டாபதி ... )

அம்பாள் வீற்றிருக்கும் ஸ்ரீ நகரத்தின் முதல் வாயிலில், அஷ்ட தேவதைகள் வீற்றிருப்பதாக ஸ்ரீ வித்யா பூஜை கூறுகின்றது.

எட்டின் மடங்கில் உள்ள எண்ணிக்கையை லலிதா ஸஹஸ்ரநாமம் பெரிதும் முக்கியத்துவமாகக் கொண்டுள்ளது.

(மஹா சதுசஷ்டி கோடி யோஹினி ... 8X8 = 64 கோடி எண்ணிக்கை கொண்ட யோகினி எனும் தேவதைகளால் துதிக்கப்படுபவள்)

அம்பிகையின் நெற்றி - எட்டாவது நாளின் சந்திரனின் வடிவத்தினுடைய காந்தியைக் கொண்டுள்ளது என்றும், கீழ் முகம் மற்றும் ஒரு எட்டாவது சந்திரனுடைய ஒளியைக் கொண்டுள்ளது என்றும் புராணங்கள் கூறுகின்றன. (அதாவது 8 + 8 = 16 – பெளர்ணமி தினத்தை விட மேலான ஒரு ஒளியைக் கொண்டுள்ளவள் அம்பிகை)

16 என்னும் எண்ணிக்கையும், சாக்த உபாஸனையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஷோடச (16) அக்ஷரம் (எழுத்துக்கள்) – சோடஷாக்ஷரீ எனும் (16 எழுத்துக்களைக் கொண்ட) ஸ்ரீ வித்யா மந்திரமே அம்பிகையை வழிபட உகந்த மிக மிக மேன்மையான உபாஸனா மந்திரம் என்று சாக்த சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

அந்த 16ன் அம்சம் லலிதா ஸஹஸ்ரநாமம் முழுக்க விரவியிருப்பதைக் காணும்போது வியக்கத்தக்கதாக உள்ளது.

லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தின் ஒவ்வொரு வரியும் 16 எழுத்துக்களைக் கொண்டுள்ளன.

ஸ்ரீ மா தா ஸ்ரீ ம ஹா ரா க்ஞீ ஸ்ரீ மத் ஸிம் ஹா ச னே ச்வ ரீ –

இது லலிதா ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரத்தின் முதல் வரி.

இந்த வரியிலுள்ள எழுத்துக்களை எண்ணிவந்தால் 16 எழுத்துக்களில் அமையும். (புள்ளி வைத்த ஒற்றெழுத்துக்கள் இலக்கண விதிப்படி கணக்கில் வராது)

அது மட்டுமல்ல ஒவ்வொரு வரியுமே 16 எழுத்துக்களைக் கொண்டு தான் அமைகின்றது.
இரண்டாவது வரி,
சி தக் னி கு ண்ட ஸம் பூ தா தே வ கா ர்ய ஸ முத் ய தா – 16 எழுத்துக்கள்.

(ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தினைச் சொல்லிவந்தால் எண்ணற்ற முறை ஸ்ரீ வித்யா மந்திரத்தினை சொன்ன பலன் கிடைக்கும் என்பது உபாஸகர்களின் மேலான கருத்து)

இரண்டு வரிகள் சேர்ந்தது ஒரு ஸ்லோகம்.
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீ மத் ஸிம்ஹாசனேஸ்வரி
சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய ஸமுத்யதா

இரு வரிகளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 16+16 = 32.

வடமொழியில் உள்ள எழுத்துக்கள் 51. (அ முதல் க்ஷ வரை)
இதில்,

அ எனும் எழுத்தில் தொடங்கும் அம்பிகையின் பெயர்கள் – 40
(அகாந்தா, அகுலா, அக்ஷமாலாதிதரா, அக்ரகண்யா...)

அதே போல, மற்ற எழுத்துக்களில் தொடங்கும் நாமாவளிகளைக் கீழே காணலாம்.

அ எனும் எழுத்தில் 40 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
ஆ எனும் எழுத்தில் 11
இ – 3
ஈ – 2
உ – 5
ஊ – 5
ஏ – 1
ஓ – 2
அம் – 4
க – 81
க(2) – 1
க(3) – 24
ச – 29
ச(2) – 1
ஜ – 18
ட(3) – 2
த – 46
த(3) – 37
த(4) – 14
ந – 75
ப – 81
ப(3) – 24
ப(4) – 37
ம – 112
ய – 13
ர – 38
ல – 14
வ – 79
ச – 59
ஷ – 5
ஸ – 122
ஹ – 11
க்ஷ – 9 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. (ஆக மொத்தம் ஆயிரம் நாமாவளிகள்)

வடமொழியின் 51 எழுத்துக்களில் நாமாவளிகள் ஆரம்பிக்காத எழுத்துக்கள்:
ஊ, ரு, ரூ, லு, லூ, ஐ, ஔ, அ:, க(4), ங, ஜ(4), ஞ, ட, ட(2), ட(4), ண, த(2), ப(2), ள – ஆகிய 19 எழுத்துக்களில் அம்பிகையின் பெயர்கள் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆக, 51-19 = 32 எழுத்துக்களில் மட்டுமே நாமாவளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகத்தின் உள்ள எழுத்துக்களும் 32 எண்ணிக்கையே.

லலிதா ஸஹஸ்ரநாமம் மூன்று பகுதிகள் உடையது.
1. பூர்வ பாகம் 2. நாமார்ச்சனா பாகம் 3. பலச்ருதி பாகம்
பூர்வ பாகம் – 51 ஸ்லோகங்களும்,
நாமார்ச்சனா பாகம் – 182 1/2 ஸ்லோகங்களும்,
பலச்ருதி – 86 1/2 ஸ்லோகங்களும் கொண்டதாக அமைந்திருக்கின்றது.
ஆக, மொத்த ஸ்லோகங்கள் = 320 (32ன் பத்தின் மடங்காக அமைவதைக் காணுங்கள்)

ஆதியந்தம் :
லலிதா ஸஹஸ்ரநாமத்தின் ஆதி (முதல்) பதம் (வார்த்தை) – ஸ்ரீ மாதா
ஆயிரமாவது நாமாவளி – லலிதாம்பிகா

ஆதி அன்னையாக விளங்குபவள் லலிதா அம்பிகை என்பதையும், முதலும் முடிவுமாக உள்ளதையும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகின்றது.

4. லட்சியம் :
அம்பிகையிடம் - வேண்டுதலை மனதில் நினைந்து, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை, மனமார பிரார்த்தனை செய்து, இத்தனை முறை சொல்ல வேண்டும் என்று லட்சியம் கொண்டு, பாராயணம் செய்து வந்தால், அம்பிகை அந்த பிரார்த்தனையை மிக நிச்சயமாக நிறைவேற்றுவாள் என்பது ஸத்யபூர்வமான உண்மை.

அம்பிகை க்ஷிப்ர ப்ரஸாதினியாக விளங்குபவள். அதாவது எளிமையான பக்தியால் கூட விரைவில் திருப்தி அடைந்து விடுபவள். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் பலச்ருதி மிக அருமையாக பல விளக்கங்களைத் தருகின்றது.

சிவ, விஷ்ணு ரூபிணியாக விளங்குவதால், அம்பிகையை, துளசி, தாமரை, வில்வம் கொண்டு ஸஹஸ்ரநாமத்தினால் அர்ச்சிப்பது ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களை அகற்றக்கூடியது.

பூக்களைக் கொண்டு அர்ச்சிக்கும் விதத்தை பாஸ்கர ராயர் அருமையாக விளக்குகின்றார்.

ஆயிரம் நாமாக்களையும் ஒரே வகை பூ கொண்டு அர்ச்சிப்பது பெரும் பேறு அளிக்கும்.
பல வகை மலர்கள் இருந்தால் தனித் தனி வகையாக அர்ச்சிப்பது மனதால் வேண்டுவதை அருளக்கூடியதாக இருக்கும்.
மலரின் மலர்ந்த தன்மை மாறாமல் அர்ச்சிக்க வேண்டும். மலர் எப்படி செடி கொடியில் மலர்கின்றதோ அந்த வகையிலேயே அர்ச்சிக்க வேண்டும்.
உதாரணமாக, செம்பருத்திப் பூ. அர்ச்சனை செய்யும் போது கையில் காம்பு கீழிருக்க, பூ மேலிருக்க அர்ச்சிக்க வேண்டும். இவ்வகை செய்வதால் வாழ்வாங்கு வாழலாம்.
பலவிதமான புஷ்பங்கள் கலந்திருந்தால், அவற்றை எடுத்து, புஷ்பாஞ்சலியாக நினைந்து (காம்பு கீழ் மேலாக இருந்தாலும் தோஷமில்லை) அர்சிப்பது கோடி கோடி புண்யத்தினை நல்கக் கூடியது.

பழங்களைக் கொண்டு நிவேதனம் செய்யும் போது, பழங்கள் எப்படி மரத்தில் பழுத்திருக்கின்றதோ அதைப் போலவே தாம்பாளத்தில் அமைத்து நிவேதனம் செய்ய வேண்டும். உதாரணம் மாம்பழம் – மாம்பழத்தின் காம்பு மேலிருக்க, பழத்தின் நுனி கீழிருக்க நிவேதனம் செய்வது அனைத்து விதமான பாபங்களையும் நீக்கக் கூடியது.
மேலும் பற்பல பலன்களை பலச்ருதி கூறுகின்றது.
ஸகல விதமான நோய்கள் நீங்கும், வம்சம் விருத்தியடையும், பல அஸ்வமேத யாகங்களைச் செய்த பலன் முதலானவற்றை அடுக்கிக்கொண்டே போகின்றது.

மிக விசேஷமாக பௌளர்ணமி அன்று இரவில், பௌர்ணமி நிலவை அம்பிகையாக மனதில் தியானித்து, ஐந்து வகையான உபசாரங்களோடு ஸஹஸ்ர நாமத்தினைக் கொண்டு அர்ச்சிப்பது மிக மேன்மையான பலனைத் தரக்கூடியது.
பௌளர்ணமி பூஜையை மந்த்ர மூர்த்தி தீக்ஷிதர் முதலான பெரியோர்களும், தவ ஞானியரும் பௌர்ணமி பூஜையை மிக விசேஷமாகச் செய்திருக்கின்றனர்.

தவக்கனல், அருட்புனல், கனகாபிஷேகம் கண்ட காஞ்சி அருள்வள்ளல் ஸ்ரீ மஹா பெரியவர் பௌர்ணமி பூஜையை மிகவும் விருப்பமுடன் செய்தவர். இப்படிச் செய்வது பெரும் ஞானம் கிடைக்க வழி செய்யும் என்றவர்.

லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது, பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று தந்த்ரராஜம் கூறுகின்றது.

அனைத்து விதங்களிலும் பூரணமாக அமைந்த, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வதால் அம்பிகையின் பரிபூரண அருள் கிடைத்திடும்.

5 .லயம் :
லலிதா ஸஹஸ்ரநாமத்தினுள் பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன.

உடலில் உள்ள ஆறாதாரங்களை உயிர்ப்பித்து, ஆறாதாரங்களுக்கு உரிய தெய்வங்களை பஹிர்நியாஸமாக அமைத்துக்கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை பாராயணம் செய்வது, ஸாரூபம், ஸாமீபம், ஸாயுஜ்யம், ஸாலோக்யம், கைவல்யம் எனும் ஐந்து விதமான முக்தி நிலைகளையும் தருவதோடு, அம்பிகையோடு லயமாகிவிடும் (ஐக்கியமாகிவிடும்) மேலான வழிமுறையை லலிதா ஸஹஸ்ரநாமம் காட்டுகின்றது.

இதில் உள்ள அம்சங்கள் எத்தனை எத்தனை ?
அம்பிகைக்குரிய புஷ்பங்கள், நிவேதனங்கள், அம்பிகை உறையும் ஸ்ரீ நகரத்தின் விவரணை, தேவர்களைக் காத்திட்ட பாங்கு, தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வ நிலை, சிவ, விஷ்ணு, அம்பிகை – மூவரும் ஒன்று தான் என்னும் விளக்கம், யோக சாஸ்திர நிலைகள், ஞானம் அருளும் ஞானாம்பிகையாக, வேண்டுதல் அனைத்தையும் வரமளிக்கும் காமேஸ்வரியாக, புவனம் காக்கும் புவனேஸ்வரியாக அருள்பாலிக்கும் அம்பிகையைப் போற்றிச் சொல்லுகின்றது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்.

லலிதா ஸஹஸ்ரநாமம் கொண்டு அம்பிகையை என்றும் போற்றிடுவோம் !
அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவோம்.

*

லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதியவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனால், பாஸ்கர ராயர் எழுதிய பாஷ்யம் மிகவும் பிரபலமானது. பாஸ்கர ராயர் தனது பெயருக்கு ஏற்ப, முன்னர் கண்டது போல, பாஸ்கர எனும் சூரியனின் 12 பெயர்களைத் தலைப்புகளாகக் கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கான பாஷ்யம் அமைத்துள்ளது பெரும் பாராட்டுதலுக்கு உரியதாகின்றது.
பாஸ்கரராயரின் பாஷ்யம், அம்பாளிடம் அவருக்கு இருந்த பக்தி, அந்த பக்தியால் அவர் செய்த சாதனைகள் (மஹா சதுசஷ்டி கோடி யோகினிக்கான விளக்கம் அளித்தது, ஒரு சன்யாசியின் கர்வத்தை அடக்கியது முதலான விபரங்களையும், அவர் வாழ்வில் நடந்த அதிசயங்களையும், அவர் மகள் லீலாவதி (இவர் ஒரு பெரிய கணித இயல் பேரறிஞர், பல கணித சூத்திரங்களை எழுதியவர்) பற்றிய விபரங்கள் போன்றவற்றையும் பிறிதொரு பதிவில் காண்போம்.
அதுமட்டுமல்லாமல், சிதம்பரம் ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகை ஆலயத்தில் அமைந்திருக்கும் சுகர் ரிஷியால் நிறுவப்பட்டதும், ஆதி சங்கரரால் வழிபாடு செய்யப்பட்டதும், மந்திர மூர்த்தி தீக்ஷிதரால் பூஜிக்கப்பட்டதும் ஆகிய மிகச் சிறப்பு வாய்ந்த ஸ்ரீசக்ரம் பற்றியும், அந்த ஆலயத்தின் விதானத்தில் (மேற்கூரையின் கீழ்பரப்பில்) லலிதா ஸஹஸ்ரநாமத்தின் படி அமைந்த அருமையான வரைபடங்கள் பற்றியும் விபரமாகப் பிறகு காண்போம்.

அடுத்த பதிவு,
ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்.
லலிதா ஸஹஸ்ர நாமத்தினையும், ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தினையும் ஒருங்கே காண்போம். இரண்டிலும் உள்ள ஒற்றுமைகளையும், சிதம்பர ரஹஸ்ய தந்த்ரத்தின் மேலான பூஜை முறைகளில் ஒன்றான ஸம்மேளன முறையையும் காண்போம்.

Thank FB friend
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
 yanthralaya@gmail.com
- www.facebook.com/deekshidhar
- Cell : 94434 79572 & 93626 09299.

Wednesday, March 25, 2020

கைவல்ய நவநீதம்




கைவல்ய நவநீதம்


சில வாரங்கள் முன் சென்னையிலிருந்து  திருவாரூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
பூந்தோட்டம் தாண்டி செல்லும் சாலை பழுதுபட்டதால் நன்னிலம் வழியாக
செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
 நன்னிலத்தில் ஒரு சீவ சமாதி நுழைவாயில் இடப்பக்கமாக தெரியவே, வண்டியை
 நிறுத்திவிட்டு  உள்ளே சென்றோம்.  அங்கே திரு நாராயணகுரு சமாதியும் ஒரு சேர
அமைந்த  தண்டவேச்வர சமாதி ஆலயத்திற்கு சென்றோம்.அமாவாசையாக இருந்ததால்
ஒரே பரபரப்பாக இருந்தது. என்ன தோன்றியதோ அங்கிருந்தவர்களுக்கு,
 எங்களை முன் பக்கம் செல்ல வழி விட்டனர்.


எத்தனை ஆண்டுகள் சமாதி என்று கேக்க உள் இருந்தவர்கள் பல நூற்றாண்டு பழையது என்றார்கள். அதில் பூஜை நடத்தி கொண்டு இருந்தவர் தம்பி கைவல்ய நவநீதம் எழுதிய தண்டவேச்வர சுவாமிகள் சமாதி என்று சொல்ல ஒரு நிமிடம் மெய் சிலிர்த்து போனது. எத்தனை அறிய நூல், இதை எழுதிய ஞானி தலம் கண்டு கொள்ள முடிந்ததே என்று மெத்த மகிழ்ச்சி. சென்று சில மலர்கள் வாங்கி வருகிறோம்  என்று கூறியும் உள்ளிருந்தவர்கள் வழி தரவில்லை. எங்கிருந்தோ வந்துளீர்கள்    பூஜை முடியும் வரை
எங்கும் செல்லாதீர்கள் என்று உரிமையுடன் கூற அங்கேயே நின்றுவிட்டோம்.

திரு தாண்டவராயன் சுவாமிகள், திருவாரூரைச் சேர்ந்த, 'மதுவனம்' என்றும் அழைக்கப்படும், 'நன்னிலம், என்னும் சிற்றூரில் பிறந்து அங்கேயே விதேக முக்தி அடைந்தார்

Thandavaeswara swamigal : Birth 1408AD
Samadhi date : 1534AD (Vaigasi Visagam) LIVED FOR 126 YEARS Iin Physical body


நன்னிலத்தில், ஸ்ரீ நாராயண தேசிகர் என்று அழைக்கப்பட்ட ப்ருஹ்மஸ்ரீ நாராயண குருவிடம் ப்ருஹ்ம தீக்ஷை பெற்று துறவு ஏற்றார். அவருடைய நூலில், தமக்கு தம்மை வெளிப்படுத்திய குருவானவர், நாராயணன் என்றும், நாரணன் என்றும் குறிப்பிடுகின்றார். பிறிதொரு இடத்தில் வேங்கடேச முகுந்தன் என்று இவர் குறிப்பிடுவது, திருவேங்கட மலை மீது ஸ்ரீ வேங்கடேச்வரராக அருள் புரியும் ஸ்ரீ விஷ்ணுவாக இருக்கலாம்.

Narayanar swamigal : Birth 1378 AD
Samadhi date; 1449AD (Vaigasi visagam)

நூல் சிறப்பு: மொழிபெயர்ப்புகளும் உரைகளும்

சுவாமி கிருஷ்ணானந்தரின் மாணவரான ஸ்ரீ சங்கு சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட சங்கு கவிகள், கைவல்ய நவநீதத்தை, பாயிரம் பாயிரமாக சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார்.

இவ்வாறு ஒவ்வொரு பாயிரத்தின் மொழிபெயர்ப்பாக இல்லாமல், நூலின் மொத்தக் கருத்தையும் உள்வாங்கி, அதையொட்ட எழுதப்பட்ட 'ப்ரபோதாம்ருதம்' என்னும் சமஸ்கிருத நூலும், ஸ்ரீலஸ்ரீ தாண்டவராயன் சுவாமிகளின் சமகாலத்தில் இயற்றப்பட்டு, வழக்கில் இருந்து வருகின்றது.

Dr. கார்ல் க்ரால் (Dr.Karl Graul) என்னும் ஜெர்மன் அறிஞர், தன் 'Bibliotheca Tamulica' என்ற ஜெர்மானியப் படைப்பில் கைவல்ய நவநீதத்தை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்துப் பதிப்பித்தார். பஞ்சதசி பிரகரணம், ஆத்ம போத பிரகாசிகை, திருக்குறள் ஆகிய நூல்களின் மொழிபெயர்ப்புகளும் அந்தத் தொகுப்பில் பதிப்பிக்கப்பட்டன.

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஆசார்யன் துஞ்சிதே எழுத்தச்சன் என்னும் மலையாளப் பெருங்கவி, கைவல்ய நவநீதத்தை, கிளிப்பாட்டு என்னும் மலையாளப் பாடல் வகையில் மொழி பெயர்த்தார். அவர் தனது ஆன்மீகத் தேடல் பயணத்தில், தமிழகம் வந்து, இந்த் நூலைக் கற்று, மொழிபெயர்த்து, பிரபலப்படுத்தினார்.


கைவல்ய நவநீதத்திற்கு தமிழில் பலர் விரிவுரை எழுதி இருந்தாலும், பிறையாறு ஸ்ரீ அருணாசல சுவாமிகள், ஈசூர் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் சிதம்பரம் ஸ்ரீ பொன்னம்பல ஞானதேசிகர் (தத்துவார்த்த தீபம்) ஆகியோரது உரைகளே காலத்தால் முற்பட்டவை, கருத்தாழத்தால் மேம்பட்டவை.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில், மஹாவித்வான் வடிவேலு செட்டியார், வினா விடை அமைப்பில், கைவல்ய நவநீதத்திற்கு விளக்க உரை எழுதிப் பதிப்பித்தார்.
1933ல், ப்ருஹ்மஸ்ரீ திருமாநிலையூர் கோவிந்தய்யர் 'தாத்பர்ய தீபிகை' என்னும் உரையை எழுதி, தமிழ் மூலத்துடன், சங்கு கவிகளின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பையும், தன் உரையையும் ஒருங்கே பதிப்பித்தார்.
கைவல்ய நவநீதத்திற்கான ஆங்கில உரைகளில், சுவாமி ஸ்ரீ ரமணானந்த சரஸ்வதிகளின் ஆங்கில உரை மேலானதாகக் கருதப்படுகின்றது. இவரே 'அத்வைத போத தீபிகை' என்ற நூலுக்கும் ஆங்கில உரை எழுதியுள்ளார்.

கைவல்ய நவநீதம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளால் சாதகர்க்குப் பரிந்துரைக்கப் பெற்றது. பாராயணத்துக்கான கைவல்ய நவநீதம் மூலமும், சிவ.தீனநாதன் அவர்களால் செய்யப்பட்ட உரைச் சுருக்கமும், ஸ்ரீ ரமணாச்ரமம் வெளியீடாகப் பதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ முனகல வெங்கடராமையா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும், அதிலிருந்து செய்யப்பட்ட தெலுங்கு மொழிபெயர்ப்பும் பதிப்பிடப்பட்டுள்ளன.

Thank
Posted 13th August 2012 by OHM SIVASAKTHINAGAMMAL

https://siththarway.blogspot.com/2012/08/blog-post_2045.html?m=1

Sunday, March 22, 2020

காவல் தெய்வம் மொட்டைக்கோபுர முனியாண்டி......

Thank FB Ayya Velumeenambal velu

காவல் தெய்வம்

வடக்குகோபுர மொட்டைக்கோபுர முனியாண்டி......
ரெம்ப வருசமா தரிசிக்க மட்டுமே நேற்றுதான் போட்டோவுக்கு அனுமதி...

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வடக்குப் பகுதி கோபுர வாயிலின் மேல்புறம் வடக்குக் கோபுரம் என்கிற மொட்டைக் கோபுரம் முனீஸ்வரர் கோவில் உள்ளது. மொட்டைக் கோபுரம் என்ற பெயருக் கேற்ப இக்கோபுரத்தில் பிற கோபுரங்களைப் போலச் சுதைச் சிற்பங்கள் கிடையாது. மாடம் போன்ற அமைப்பும் தூண்களும் அமைந்துள்ள கோபுரத்தில் வெள்ளி செவ்வாய் மற்றும் விழா நாட்களில் கோபுரத்தின் உச்சியிலிருந்து முனீஸ்வரர் சன்னதி வரை பூ மாலைகள் பூச்சரங்களாய்த் தொங்கி நிற்கும். சிறிய பலிபீடமும் ஒரு ஆள் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் முனியாண்டி சிலையும் அலங்காரத்தோடு அமைந்துள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள முனீஸ்வரர் கோவில்களுக்கெல்லாம் இந்த முனீஸ்வரரே தலைமையாக உள்ளார் என்று நம்புகின்றனர்.

சிலையின் இரு பக்கங்களிலும் கதைகள், அரிவாள்கள் உள்ளன. முறுக்கிய மீசையும் வீரத்தை வெளிப்படுத்தும் விழிகளும் கவசங்களோடும் பாதுகைகளோடும் நிற்கும் முனீஸ்வரர் கோவிலை நெருங்கும் போதே பெண்கள் சிலர் குலவையிடு வதையும் சாமியாடுவதையும் காணலாம்.

இக்கோவில் மூலவர் முனீஸ்வரர் வடக்குக் கோபுரத்திலேயும் சிலையாக வடிக்கப்பட்டுள்ளார். வடக்கு கோபுரம் எவ்வளவு முயன்றும் கட்ட முடியாமல் தடைப்பட்ட போது, இக்கோபுரத்தைத் திருப்பணி செய்த நாகப்ப செட்டியார் இங்கு முனீ சுவரர் சாந்நித்யம் இருப்பதை அறிந்து முனீஸ்வரருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார். இக்கோபுரம் போது முனீஸ்வரருக்கும் சன்னதி எழுப்பப்படும் எனச் சத்தியம் செய்தபடி இப்போதுள்ள மகா முனீஸ்வரர் ஆலயத்தை வடக்கு வாசலை ஒட்டி எழுப்பினார். இக்கோவில் கட்டப்பட்ட காலந் தொட்டு, யாழ்கீத சுந்தரம் குடும்பத்தினர் தான் பூசனை செய்தல், பூ மாலைகள் அபிஷேகப் பொருட்கள் கொடுத்தல், விழா நடத்துதல் போன்ற வற்றைச் செய்து வருகின்றனர். எட்டு தலை முறையாக இவர்கள் குடும்பப் பணி தொடர்கிறது.

மீனாட்சியம்மன் கோவிலில் பணியாற்றும் பட்டர்கள் எனப்படும் அர்ச்சகர்கள் பலருக்கு மகா முனீசுவரரே குல தெய்வமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிராமண சமூகத்தினர் பலருக்கு சிறு தெய்வங்கள் குல தெய்வமாக உள்ளது ஆய்வுக் குரியது. ஆனால் அவர்கள் பெருந்தெய்வக் கோவில் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.

இக்கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமல்லாது, இஸ்லாமியர், கிறிஸ்துவ மதத்தினரும் வருகின்றனர். பிறந்த குழந்தைகளை, பிறந்து 31 நாட்கள் கழித்த பின் இக்கோவிலில் தான் சன்னதி முன் கிடத்தி வணங்குவர். இதன் மூலம் இக்குழந்தை நலனை முனீசுவரரே பேணுவார் என்று நம்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் இங்கே வந்து செல்கின்றனர்.

Friday, March 13, 2020

மாரநாடு கோடாங்கி கருப்பசாமிe



மாரநாடு கருப்பசாமி:-

Thank  https://m.facebook.com/story.php?story

மாரநாடு கோடாங்கி

*சற்று நீளமான பதிவு. தவறாமல் படிக்கவும்.*🙏🙏



(250-300 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி
அருகில் உள்ள மாரநாடு கிராமத்தில் நடை​பெற்ற உண்மைச் சம்பவம்)

அரண்மனை அந்தப்புரம். அரசி, இளவரசி, சேடியர் தவிர வேறுயாரும் உள்ளே செல்ல முடியாது. அவ்வளவு பாதுகாப்பு. யாரேனும் உள்ளே
தெரிந்தால் உடனடியாகத் தூக்கிலிட்டுவிடுவார்கள். அவ்வளவு கடுமையான தண்டனை. இராமநாதபுர சமஸ்தானத்தின் இளவரசி பருவமடைந்து அந்தப்புரத்தில் இருந்தாள். அழகு என்றால் அழகு அவ்வளவு அழகு. பார்த்தோரைப் பரவசப்படுத்தும் அழகு. மக்களுக்கு மகாலெட்சுமி போல் காட்சியளிப்பாள்.

இதனால், சமஸ்தான மன்னர்களுக்குள் கடும் போட்டாபோட்டி. அவளை மணந்து கொண்டால், இராமநாதபுர சமஸ்தானத்திற்கு மன்னனாகி விடலாம், வீரமிக்க மன்னனுக்குச் சொந்தமாகிவிடலாம், ஆளுக்கு ஆளும் ஆச்சு, பேருக்குப் பேரும் ஆச்சு, ஊருக்கு ஊரும் ஆச்சு. அதனால், "நான் நீ" என்று போட்டி போட்டுக் கொண்டு, பெண் கேட்டுத் தூது அனுப்பிக் கொண்டிருந்தனர்; அரசனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.

நல்லவனாக, வல்லவனாக ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். பெண்கேட்டுப் போட்டாபோட்டி போட்டதால், அரசனுக்குக் கொஞ்சம் பெருமையும் கூடியது. தன் பெண்ணை எண்ணிப் பூரிப்படைந்திருந்தான்.

ஆனால், விதி வேறுவகையாக வேலை செய்தது! ஒருநாள் மாலை, அமைச்சர்களுடன் ஆலோசனையில் இருந்த அரசனுக்கு, அவசரமாக அந்தப்புரத்தில் இருந்து அழைப்பு வந்தது! என்ன அவசரம் என்று எவருக்கும் தெரியவில்லை. அரசனும் அவசர அரசாங்க ஆலோசனைகளை நிறுத்திவைத்துவிட்டு அந்தப் புரத்திற்கு விரைந்து சென்றான்.

அங்கே அதிர்ச்சி காத்திருந்தது! இளவரசியின் கழுத்தில் இருந்த "அரசமுத்திரை"மாலையைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை, அந்த மாலை யார் கழுத்தில் உள்ளதோ அவர்களே அந்நாட்டின் இளைய பட்டம் ஆவர், அந்த மாலையைக் கையில் வைத்திருப்போரே   இளவரசியை மணந்து கொள்ளும் அதிகாரம் பெற்றவர் ஆகிவிடுவர்.

கழுத்தில் இருந்த மாலை காணாமல் போனது எப்படி? காணாமல் போனதைக் கண்டுபிடிப்பது எப்படி? மன்னனுக்கு மகளைப் பற்றி ஒரே கவலை. நல்லவனாக வல்லவனாக அமைந்தால், மகளைக் கட்டிக் கொடுப்பதற்குத் தயாராய் இருந்தார். ஆனால், இப்போது நிலைமை வேறு, மாலையை எவன் எடுத்திருந்தாலும், எதுவும் செய்ய முடியாது! பேசாமல் கொள்ளாமல் மாலையை வைத்திருப்பவனுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டியதுதான். வேறு என்ன செய்யமுடியும்!

யார்கையிலாவது கிடைத்து ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால் என்ன செய்வது! அந்தப்புரத்திற்குள் நுழைந்த அந்தக் களவாணி யார்? ஆயிரத்தெட்டு விசாரணைகள். இளவரசிக்குப் பதில் சொல்வதே ஒருபெரும் தொல்லையாய் போய்விட்டது!

"யாரிடமும் நான் மாலையைக் கொடுக்கவும் இல்லை. யாரும் மாலையை எடுக்கவும் இல்லை" என்று எத்தனையோ முறை "இது சத்தியம் சத்தியம்" என்று கூறினாள் !

ஆளே புகமுடியாத அந்தப்புரத்தில் அரசமுத்திரை பதித்த நகை எப்படிக் காணாமல் போனது? அரன்மனையிலேயே களவு நடந்துள்ளதால், மக்களிடம் மரியாதை குறைவதை உணர ஆரம்பித்தான் அரசன். என்ன செய்வதென்று எப்போதும் ஒரே நினைப்பு!. நாடுபோனாலும் போகட்டும், நகரம் போனாலும் போகட்டும், மானம் போய் விடக் கூடாதே! எத்தனைபேர் பெண் கேட்டுத் தூதுஅனுப்பியுள்ளனர். அத்தனைபேர் முகத்திலும் எப்படி இனி நான் விழிப்பேன் என்று மன்னன் இரவு முழுவதும் இதை மட்டுமே எண்ணியிருந்தான். எண்ணி எண்ணி உருக்குலைந்திருந்தான்.


எப்போதும் சரியாய் ஓடுவது காலம் மட்டுமே! விடியற்காலம் வந்துது! அவையைக் கூட்டி ஆலோசனை கேட்டான் அரசன். ஆளாளுக்கு ஆள், ஆயிரத்தெட்டு யோசனை சொன்னார்கள். ஒன்று கூட உருப்படியாய் இல்லை. என்ன செய்வது?  எதுவுமே தெரியவில்லை யாருக்கும்!. அரசன், யோசனைகள் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றாகச் செயல்படுத்த முடிவுசெய்தான் .

அரண்மனை அந்தப்புரத்தில் இருந்த அனைவரையும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தனர் அரசு அதிகாரிகள். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. முத்திரைமாலை போன இடத்தை அறியமுடியவில்லை. அதிகாரிகள் விசாரணை விபரங்களை மன்னனிடம் கூறினர். அரசனுக்குத் தாளமுடியாத வருத்தம். மானம் போகிறதே என்று கண் கலங்கினான். என்ன செய்வது? ” முத்திரை மாலை கிடைக்கும்வரை அத்தனை பேரையும் அரண்மனையிலேயே அடைத்து வையுங்கள்! “ என்று உத்தரவு போட்டான்.

அரண்மனையிலிருந்து யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. உள்ளே யிருந்த யாரும் வெளியே வரமுடிய வில்லை. எல்லா இடமும் தேடியாச்சு. அத்தனைபேர் தேடியும் முத்திரைமாலை மட்டும் அகப்படவே இல்லை. என்ன செய்வது? அரண்மனையே ஸ்தம்பித்து. எனவே என்ன ஆலோசனை என்றாலும் ஏற்கத் தயாராக இருந்தான் அரசன். ஆலோசனைக்கு மேல் ஆலோசனை. அதில் ஒன்றுதான் குறிகேட்பது.

குறிசொல்வோர் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்து வரச் செய்தான் அரசன். குறிசொல்வோர் சொன்ன குறியெல்லாம் தவறாகப் போனது; குறி சொன்னது போல் மாலை கிடைக்கவில்லை;  அரசனுக்குக் கோபமான கோபம். அரசுமுத்திரைமாலை கிடைக்காமல் யாரையும் வெளியே விடுவதாக இல்லை.

தவறாகக் குறி சொன்னவர்களையும் சிறையில் அடைத்தான் அரசன். ஒருவர் இருவர் அல்ல, ஒரு ஊருக்கு  இரண்டு மூன்று என்று குறிசொல்வோர்  இருந்தனர். எத்தனை பேர் இருந்து என்ன செய்ய? அரசமுத்திரை மாலை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து குறி சொல்ல முடியவில்லை! அரசனது கோபத்துக்கு அஞ்சி, நாட்டிலிருந்த குறிசொல்வோர் எல்லாம் அண்டைநாடு, அயலார்வீடு என ஓடி ஒளிந்து
கொண்டனர்.

குறிசொல்வோரில் ஒருவன் மட்டுமே துணிந்து அரசன் முன் சென்று நின்றான். "என்ன? சொல்!" என்றான் மன்னன். "எனக்குச் சரியாகச் குறி சொல்லத் தெரியாது! ஆனால் சரியாகக் குறிசொல்பவனைத் தெரியும்; அவன் ஒருவனை மட்டும் அழைத்து வந்தால், தேடும் பொருள் கிடைத்துவிடும்" என்றான்.

குறிசொல்பவன் சொன்ன சொல் மன்னனின் காதில் வீழ்ந்தது. ”நீ சொல்வதுபோல் நடந்து விட்டால், உங்கள் அனைவரையும் விடுதலை செய்து விடுகிறேன்” என்று மன்னன் வாக்களித்தான். மந்திரியை அழைத்தான், "இவன் யாரைச் சொல்கிறானோ, அவனை இங்கே அழைத்து வாருங்கள். இது நமது ஆணை” என்றான் .

” குறி தப்பாமல் சொல்பவன் நாட்டிலேயே ஒருவன்தான் உண்டு; அவன்தான், "மாரநாட்டுக் கோடாங்கி".  அவன் கோடாங்கி எடுத்து அடித்தால்,
கருப்பணசாமி வரும். மாரநாட்டுக் கருப்பணசாமி வந்து சொல்லும்" என்றனர் அறிந்தவர் அனைவரும். அரசு அதிகாரிகள் விரைந்தனர், மாரநாடு
கிராமத்திற்கு. இராமநாதபுரத்திலிருந்து, பரமக்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி வந்து மாரநாடு கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஊரின் உள்ளே நுழையும் முன்பு, முகப்பு வாயிலிலேயே, கண்மாய்க்கரை ஓரமாகக் கருப்பணசாமி கோயில் இருந்தது. கோயில் உள்ளே சென்று கருப்பணசாமியைக் கும்பிட்டனர். கருவறையில் சிலையோ, படங்களோ எதுவும் இல்லை, வெருமெனே இருந்தது, கருவறை முன் மண்டபத்தில் சூலம் மட்டும் நடப்பட்டிருந்தது. அந்தச் சூலத்தையே கருப்பணசாமி என மக்கள் வணங்கி வருகின்றனர், கருப்பண சாமி வழிபாடு முடிந்ததும், கோயில் பூசரியிடம், "கோடாங்கியைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்றனர்.

இப்படி மண்டபத்தில் உட்காருங்கள் என்று சொல்லி பிரசாதத் தட்டை கோயில் கருவறையில் வைத்து விட்டு அங்கே வந்து பூசாரியும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டான்.

சொல்லுங்கள், "மாரநாடு கோயில் பூசாரிதான் மாரநாடுகோடங்கி ஆவான்". நான்தான் அந்தக் கோடாங்கி, உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் கோடாங்கி. வந்தர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஆஜாகுபான உடம்பைத் தேடிவந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. ஒல்லியான ஒருவ​ரைக் கோடங்கியாகப் பார்த்தவுடன் அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்,கோடாங்கி, நாங்கள் வந்த நோக்கம், என்ன என்றால், "நீங்கள் இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து குறி சொல்ல வேண்டும்", இது அரச உத்தவரவு என்றனர்.

"நான் குறி சொல்வது இல்லை, இந்தக் கருப்பணசாமிதான் வந்து குறி சொல்லுவான், உங்களுக்கு யார் வேண்டும்?" என்று கேட்டார் கோடாங்கி.
”எங்களுக்குக் குறி சொல்ல வேண்டும், கருப்பணசாமிதான் குறிசொல்லும் என்றால், சாமியைத்தான் அழைத்துச் செல்ல வேண்டும்” என்றனர்.

”கருப்பணசாமி வருவது என்றால், சும்மாவா? ஒட்டு மச்சம்கூட இல்லாத வெள்ளைக்குதிரையில்தான் கருப்பணசாமி வருவார். முடிந்தால் அந்தமாதிரிக் குதிரையுடன் வாருங்கள். அல்லது வரும் மாசிமாதம் மகாசிவராத்தி அன்றுதான் திருவிழாபற்றிப் பேசி முடிவு செய்வார்கள்.பங்குனிமாதம் திருவிழா நடைபெறும், சாமிபுறப்பாடு இருக்கும், அப்போது வந்து குறி கேளுங்கள்” என்று கூறிமுடித்தார்.

கோடாங்கி சொன்னது எல்லாம் சொல்மாறாமல் இராமநாதபுர மன்னனிடம் கூறப்பட்டன. மானம் போகிற பிரச்சனை ஆயிற்றே. எனவே ”உடனடியாகக் கோடாங்கி கூறியது போல் குதிரை ஒன்றை அனுப்பி வைத்து அழைத்து வாருங்கள்” என்று சொன்னான். அனைவரும் தயங்கி நின்றனர். மன்னனுக்குக் கோபமான கோபம் வந்தது! "ஏன் நிற்கின்றீர்கள் ” என எரிந்து விழுந்தான் மன்னன்.

மந்திரி, தயங்கித் தயங்கி மன்னன் அருகில் சென்று, "மன்னா! கோடாங்கி சொல்லியபடி, ஒட்டுமச்சம்கூட இல்லாமல் வெள்ளைவேளேர் குதிரை ஒன்றே ஒன்றுதான் உள்ளது, அதுதான் ஒரே யோசனை" என்றான். ”ஒன்று இருக்கிறதல்லவா? அந்தக் குதிரையைக் கூட்டிச் செல்வதற்கு ஏன் இத்தனை தயக்கம்?” என்று மன்னன் கேட்டான்.  “அது பட்டத்துக் குதிரை மன்னா! பட்டத்துக் குதிரையில் யார் ஏறி வருகிறாரோ அவரே அந் நாட்டின் மன்னன் ஆவான், பட்டத்துக் குதிரையில் கோடாங்கி ஏறியவுடன், ஏடாகூடமாக ஏதாவது செய்தால், என்ன செய்வது? ஒரே நாளில் ஓராயிரம் கட்டளைகளைப் பிறப்பித்தால் என்ன செய்வது? பட்டத்துக் குதிரையைத் தவிர்த்து, மற்றொரு குதிரைக்கு எங்கே போவது! மற்றொரு குதிரை வாங்கிவரும் வரை காத்திருக்க முடியாதே!” என விடை கிடைத்தது.

இருக்கும் மானத்தைக் காத்தாக வேண்டுமே! என்ன விலையும் கொடுக்கத் தயாராய் இருந்தான் மன்னன், மன்னனுக்குப் பட்டத்துக் குதிரையை அனுப்பிவைப்பதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை, மன்னன் பட்டத்துக் குதிரையை மாரநாட்டிற்கு அனுப்பி வைத்தான், மாரநாடு கருப்பணசாமி கோயில் பூசாரியான கோடாங்கி, வந்திருந்த பட்டத்துக் குதிரைக்கு மாலை அணிவித்தான், மரியாதை செய்தான்.   உடுக்கையையும் விபூதிப் பையையும் எடுத்துக் கொண்டான், கோயிலை வலம் வந்தான், கருப்பணசாமியை வணங்கினான்.

அனைவரும் மாரநாட்டிலிருந்து இராமநாதபுரத்திற்குச் சொல்லத் தயாராய் இருந்தனர்; ஆனால் கோடாங்கி குதிரையில் ஏறவில்லை!
மந்திரி, கோடாங்கியிடம் சென்று, "குதிரையில் ஏறவில்லையே"? என்று கேட்டான்! ”பட்டத்துக் குதிரையில் கருப்பணசாமிதான் ஏறி வரும். நான்
சாமிகூட ஓடியே வந்துவிடுவேன் என்றான் கோடாங்கி. மற்றொரு குதிரையை ஏற்பாடு செய்கிறேன், அதில் ஏறி வாருங்கள் என்றான் மந்திரி. கோடாங்கி மறுத்துவிட்டான். சாமி பாதத்துக்கு மேலே நான்  இருக்கக்கூடாது. எனவே நான் இப்படியே சாமிகூட ஓடியே வந்து விடுவேன்” என்றான்.

மந்திரிக்கு, பட்டத்துக்குதிரையில் ஒரு மனிதன் ஏறிவராமல்  தெய்வம் ஏறிவருவது பெருமையாய் இருந்தது. தான் நினைத்தபடி ஏதுவும் ஏடாகூடமாக நடக்க வாய்ப்பு இல்லை என்பதையும் எண்ணி மனநிறைவடைந்தான் மந்திரி.

பட்டத்துக்குதிரை, கோடாங்கி போட்டுவிட்ட மாலையுடன் முன்னே சென்றது. பட்டத்துக் குதி​ரையுடன் கோடாங்கியும் ஒன்றாக ஓடத் துவங்கினான். மந்திரியும் மற்றோரும் அவரவர் குதிரையில் ஏறிப் புறப்பட்டனர். மாரநாடு ஊரே ஒன்றாக இணைந்து ஓடத் துவங்கியது. வழி​நெடுக, அலையலையாய் மக்கள் கூட்டம்,

வழியெல்லாம் தண்ணீர் தெளித்து, பாதைஎங்கும் மாக்கோலம் போட்டுத் தோரணம் கட்டி, கொம்பு ஊதி வரவேற்பு செய்தனர் மக்கள். தெய்வத்திற்கும் அரசனுக்கும் செய்யும் மரியாதை அத்தனையும் செய்து, பட்டத்துக்குதிரையுடன் ஓடிவரும் கோடாங்கியுடன் ஒன்றாய் சேர்ந்து ஓடத் துவங்கினர் மக்கள்.

மாரநாட்டிலிருந்து கிளம்பி, திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி வழியாக இராமநாதபுரம் அரண்மனை வந்தது சேர்ந்தது பட்டத்துக் குதிரை.

குதிரையின் பின் நாடே ஒன்று திரண்டு ஓடி வந்து சேர்ந்தது ஏறத்தாழ எழுபதுகல் தூரம், மாரநாடு கோயிலில் துவங்கிய ஓட்டம் இராமநாதபுரம் அரண்மனை வாயிலில் வந்துதான் நின்றது,

அரண்மனை வாயிலுக்கு வந்து வரவேற்றான் மன்னன், உள்ளே சென்ற கோடாங்கி மன்னனிடம், சாணம் கரைத்துத் தெளித்து அதில் மாக்கோலம் போட்டு​வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். கோடாங்கி மாக்கோலத்தின் நடுவே உட்கார்ந்து கொண்டான். மன்னனும் சிம்மாசனத்திலிருந்து கீழே இறங்கிக் கோடாங்கி எதிரே, அவனுக்குச் சமமாக உட்கார்ந்து கொண்டான்,

உடுக்கையை எடுத்து அடித்து கருப்பணசாமியை வரவழைத்தான் கோடாங்கி, "என்னை எதுக்கு இங்கே அழைக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? " என்று மன்னனிடம் கேட்டது கருப்பணசாமி,

"சாமி, மன்னனான எனக்கு ஒரு மானப்பிரச்சனை, பிரச்சனைக்கு உரிய பொருள் எங்கே இருக்கிறது என்று கண்டறிய முடியவில்லை" அதனால் குறி சொல்ல வேண்டும் என்றான் மன்னன். "மன்னன் கேட்டால், மறுக்கக்கூடாது! உன்னைக் காத்து அருளுவோம், இரண்டு குறிக்குமேல் கேட்கக் கூடாது!, கேள், சொல்கிறேன்" என்றது கருப்பணசாமி,

"வந்திருப்பது கருப்பணசாமிதான் என்று எப்படி இந்த மன்னனும் இங்குள்ள மக்களும் நம்புவது?" என்று கேட்டான் மன்னன்,

"முதற்குறி கேட்டுள்ளாய், கருப்பணன் வந்த குதிரையில் மற்றொருவன்
ஏறக்கூடாது, எனவே நான் வந்த வெள்ளைக்குதிரை நின்றபடியே இறந்திருக்கும் பார்" என்றது கருப்பணசாமி,

எல்லோரும் ஒடிச் சென்று பார்த்தனர். மன்னன் முன்வந்து, நின்ற குதிரையைத் தொட்டுப் பார்த்தான், அவ்வளவுதான் சடமாய் நின்ற குதிரை செத்துப் பிணமாய் விழுந்தது,

பட்டத்துக்குதிரை பரிதாபமாய் இறந்துகிடப்பது கண்டு மன்னன் உள்ளம்
பதைபதைத்தது! இருப்பினும் கருப்பணசாமியே அரண்மனைக்கு வந்து குறி சொல்லிக் கொண்டிருப்பதை நினைத்துப் பெருமை கொண்டான் மன்னன்,

ஓடோடி உள்ளே சென்றான், கருப்பணசாமியின் காலில் விழுந்து வணங்கினான், "சாமி என்பிழையைப் பொருத்தருள வேண்டும், மனிதன் ஒருவன் கோடங்கியுடன் வந்து குறி சொல்வதாகத் தவறாக நினைத்துவிட்டேன். குறிசொல்வது மாரநாடு கருப்பணசாமி என்று அறியாமல் நான் செய்த பிழையைப் பொருத்தருள வேண்டும்" என்று கருப்பணசாமியிடம் வேண்டிக் கொண்டான்,

"என்மகள் கழுத்தில் அணிந்திருந்த அரசமுத்திரைமாலையைக் காணவில்லை?",
"கருப்பணசாமி தான் எங்களைக் காத்தருள வேண்டும்" என்றான் மன்னன்.

"இரண்டாவது குறி கேட்கிறாய், மன்னனே, காணாமல் போன அரசமுத்திரைமாலை, அரண்மனை அந்தப்புரத்தில் இளவரசி குளிக்கும் அறையில் தண்ணீர் வெளியேறும் தூம்பின் உள்ளே கிடக்கிறது, போய் எடுத்து வரச் சொல்" என்றது கருப்பணசாமி,

மன்னனும் "எடுத்துவாருங்கள்" எனக் கட்டளை இட்டான்,

அவ்வளவுதான், மன்னன் இட்ட கட்டளையை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்,

கோடாங்கியையும் மன்னனையும் தவிரக் கூடியிருந்தோர் அனைவரும் அரண்மனை அந்தப்புரம் நோக்கி ஒடினர். மன்னன் மட்டும் கருப்பணசாமியின் அருகிலேயே நின்றான், கருப்பணசாமியின் காலில் விழுந்து விபூதி பிராசதம் பெற்றுக் கொண்டான், ஓடிய மக்கள்கூட்டம் அரண்மனை அந்தப்புரம் என்பதை எல்லாம் உள்ளே சென்று தேடிப்பார்த்தது. தூம்பாக்குழியைத் தோண்டியே எடுத்துவிட்டது,

உள்ளேகிடந்த அரசமுத்திரைமாலையை அப்படியே கையில் அள்ளி எடுத்துவந்தார் மந்திரி. மந்திரியும் மக்களும் கருப்பணசாமி காலில் கும்பிட்டுவிழ முற்பட்டனர்.

கோடாங்கி அவர்களைக் கும்பிட்டு விழாமல் தடுத்துவிட்டான். "மன்னனுக்குப் பிரசாதம் கொடுத்துவிட்டு கருப்பணசாமி மலையேறிப்
போய்விட்டது, என் காலில் நீங்கள் யாரும் விழுந்து கும்பிடக்கூடாது" என்றான் கோடாங்கி.

மன்னனின் மானம் மட்டுமன்று; நாட்டு மக்களின்மானமும் காக்கப்பட்டுள்ளது. காத்தவன் அந்த மாரநாடு கருப்பணசாமி என்றான் கோடாங்கி.

"எங்கள் மானத்தைக் காத்த, கருப்பணசாமிக்கு நாங்கள் எல்லாம் அடிமை" என்றனர் மன்னனும் மக்களும். தங்கக்காசுகள் உட்பட, தாம்பாலம் தாம்பலமாய் பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து மன்னன் கையில் கொடுத்தனர் அரண்மனை அலுவலர்கள், மன்னன், அவற்றை அப்படியே வாங்கிக் கோடாங்கி கையில் கொடுக்க முயன்றான்,

ஆனால், கோடாங்கி அவற்றைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை, "மானம் காத்த கருப்பணசாமிக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யுங்கள்" என்றான். "நான் உண்பது நாழி உடுப்பது இரண்டு" என்றான். அப்படியே செய்வதாக வாக்களித்தான் மன்னன்,

சிறை​வைக்கப்பட்டிருந்த அரண்மனை அந்தப்புறத்தில் பணியாற்றி​யோர் மற்றும் குறி​சொன்ன அனைவரும் விடுவிக்கப்பட்டனர், அவரவர் செய்து வந்த தொழிலை அப்படியே தொடர்ந்து செய்துவருமாறு மன்னன் ஆணையிட்டான்,

சமபந்தி போஜனத்திற்கு ஏற்பாடு செய்தான். மன்னனும், கோடாங்கியும் மந்திரியும் மக்களும் ஒன்றாய் உட்கார்ந்து உணவருந்தினர். கோடாங்கிக்கு ஒரு வேட்டியும் துண்டும் பரிசாகக் கொடுத்தான் மன்னன்,

இதுநடந்து இருநூற்றைம்பது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இருந்தாலும், இன்றும் ஒருகுறையும் இல்லாமல், மரபு மாறாமல் செய்து வருகின்றனர் மன்னர் குடும்பத்தினர்.

பங்குனித் திருவிழாவில் கருப்பணசாமி புறப்பாடு ஆரம்பித்தவுடன், முதல் மரியாதையாகக் கருப்பணசாமிக்கு இராமநாதபுரஅரண்மனை மாலை அணிவிக்கப்படுகிறது. அரண்மனை மாலையைத் தொடர்ந்து மக்கள்அனைவரும் சாமிக்கு மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு வாழ்க்கையில் உய்வடைகின்றனர்,

இரவு முழுவதும் கருப்பணசாமி ஆட்டம், மாலை என்றால் மாலை, மலைபோல் குமிந்து விழும், அதை அப்படியே குவித்து வைத்திருப்பர். இரவு முடிந்து சூரியன் உதிப்பதற்கு முன் கருப்பணசாமி ஆடிக் குறிசொல்லி முடித்துவிடும். விடிந்தால், சாமியும் இருக்காது. மலைபோல் குவிந்த மாலையும் இருக்காது !

கருப்பணசாமி கோயிலுக்குள் சென்ற மறுவினாடியே அத்தனை மாலையையும் அவரவர் பிரசாதமாக எண்ணிப் பக்தர்கள் எடுத்துச் சென்று விடுவர்,  குறிகேட்க விழைவோர் எல்லாம் வந்து சாமிக்கு மாலையணிவித்து, மரியாதை செய்து, வேண்டிய குறி கேட்டு உய்யலாம்.

இத்த உண்மைக் கதையைக் படித்தோரும், படித்ததைப் பிறருக்குச் சொன்னோரும், அதைக் கேட்டோரும் மாரநாடு கருப்பணசாமியின் திருவருளாள் இன்னல்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர்.

நன்றி:-  ஆன்மீக களஞ்சியம் முகநூல்

Thank  other link
Tamil. Paratillipi. Com