Friday, January 5, 2024

உத்திராக்கம் என்றால் என்ன ? , அதன் மந்திர மணி மொழிகளும்

 FROM MY FILE - நமது கோப்பிலிருந்து ]

உத்திராக்கமும், அதன் மந்திர மணி மொழிகளும்.

        1. உத்திராக்கம் என்றால் என்ன?

   உத்திராக்கம் மணிகள் எலியோகார்பஸ் கனிற்றஸ் றொக்ஸ்ப் (Elacocarpus Ganitrus Roxb)

என்றழைக்கப்படும் உத்திராக்க மரங்களிலிருந்து பெறப்படுகிறன. இவை தென்கிழக்காசியாவில் குறிப்பிட்ட சில இடங்களில்ஜாவா,கொரியாமலேசியாவின் சில பகுதிகள்,தைவான்,சீனாதெற்காசியாவிலும்வளர்கின்றன.

உத்திராக்க மணிகள் பயனுடன் கூடியவை.இவை ஆற்றல் வாய்ந்த மின்காந்தப் (Electro- Magnetic) பண்புகளைக் கொண்டன. இவை அணிவோரின் அழுத்த நிலைகள்(tress Levelsஇரத்த அழுத்தம்(Blood Pressure) மிக உயர்ந்த இரத்த அழுத்தம் (Hypertension) ஆகியவைகளைக் கட்டுப்படுத்துவதுடன் அணிவோரிடம் சாந்தமான ஒரு உணர்வையும் தூண்டுகின்றன.

இவை அணிவோருக்கு ஒரு முகக்குவிவு (Concenration) கூர்ந்த நோக்கு (Focus), மந்த்திண்மை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன். உத்திராக்கம் பல நூற்றாண்டுகளாக கீழ்த்திசைப் பண்பாட்டினராகிய சீனர்கள்,பௌத்தர்கள்தாவோ,ஜப்பானியர்கள்,சென் மதத்தோர்,கொரியர்கள்இந்தியர்கள் ஆகியோரிடையே பரவலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.கீழ்த்திசைப் பண்பாட்டின் இன்றியமையாப் பண்பான

கூர்ந்த நோக்குத் தியானத்திற்கு உகந்ததாகக் கொள்ளப்படும் அமைதிசாந்தம் ஆகியவற்றை இந்த மணிகளை இதயத்தைச் சுற்றி அணிவதால் பெறமுடிகின்றது எனக் கண்டுகொள்ளப்பட்டது.

   ஒருவரின் ஆளுமையை மாற்றவும்,அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பலவேறு ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உத்திராக்கத்தின் ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த

போதும்எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது.குறிப்பாக,இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே உத்திராக்கம் புகழ்பெற்றது.இவர்கள் உயிர்வேதியல் துறை (Biochemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறைக(Psychiatry) பொது மருத்துவத் துறைஉளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து உத்திராக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்கள் உத்திராக்கத்தின் தாம் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன்,தாம் கண்ட முடிவுகளை மீண்டும் செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது.

    உத்திராக்கத்திற்கு,சக்திமிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால் ஈர்க்கப்படும்தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை(Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர்.மேற்கூறிய ஆற்றல்கள் உத்திராக்கத்தின் முகப்புகள் அல்லது முகங்கள் மேற்பரப்பிலுள்ள பகுப்புகளின் எண்ணிக்கை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய உத்திராக்கத்தையோ அன்றேல் ஒரு தொகுதி முகங்கள் கொண்ட உத்திராக்க மணிகளையோஅணிவோருக்குஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள்(Transformatiom in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மைதன் ஆர்வம்,மனத்திட்பம்ஆகியன மாற்றம் பெறுகின்றன. மேலும் இந்த ஆய்வாளர்கள்,உத்திராக்க மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு,அதன்வழியாக மூளைக்கு செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் நிறுவினர்.

உயர்ந்த மன அழுத்தம் கூர்ந்த மனக்குவிவு ஆகியவை ஒருவருக்கு ஏற்படும் போது,மூளைக்கும் மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்வது நோக்கத்தக்கது. இந்த மணிகளின் துணையுடன் ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவுகூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது.

  இந்த ஆய்வாளர்களால் நரம்பு மாற்றிகள் (Neuro Transmiters) டொபமைன்(Dopamine),செறொரின்(Serotinin),போன்ற செயல்பாடுகளில் உத்திராக்கமணிகளை அணிவதால் ஏற்படும் தாக்கங்களையும் நிலைநாட்ட முடிந்தது.  இத்தகைய தாக்கங்களினால் ஒருவரது ஆளுமையிலும் மனப்பாங்கிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன.உத்திராக்கத்தை அணிவோர்தமக்கு ஏற்படும் ஏனைய நன்மைகளுடன்,அவர்களுடைய                     மன அழுத்த நிலை எதிர்பாராத அளவு குறைந்திருப்பதையும் கண்டனர்.இத்தகைய மன அழுத்த                  நிலைகுறைவு,

இதுவரை சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்வதால் பெறப்பட்டுள்ளது மட்டுமே உருத்திராக்க மணிகள்ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும்மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. உத்திராக்க மணிகள் ஒருவரை 'அல்பா மன நிலைக்கு' (Alpha state of mind) இட்டு செல்கின்றன.


இந்த நிலையில் ஒருவரின் இதயத்துடிப்பு,இரத்தச் சுற்றோட்டம்என்டோகிரையின் சுரப்பிகளின்(Endorine glands)  செயல்கள்,நியூரோன்களி (Neuron) செயல்கள்,சுவாசித்தல் ஆகியவை சாதாரண நிலைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அத்துடன் ஒருவன் தன்னை அதிகளவுக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்துக் கொள்ள முடிகிறது.

அதாவது உடலில் தன்முனைப்புடன் செய்யும் செயல்களை மட்டுமன்றிதன் முனைப்பு இன்றிச் செய்யும் செயல்கலையும் கூட கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிகிறது. ஆகவேஇம்மணிகல் கீழ்த்திசை மரபில் வியத்தக்க ஒன்றாகவும்இயற்கைக்கிகந்த ஆற்றல்களையும் கொண்டனவாகவும் கொள்ளப்பட்டன.

        உன்மையான உருத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கானோர்,இரத்த அழுத்தம்,மனஅழுத்தம்மிக உயர்ந்த இரத்த அழுத்த்ம்,மனச் சோர்வு,நரம்புக்கோளாறு உட்பட்ட ஏனைய மனம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து குறிப்பிடத்தக்க நிராவணம் கிட்டியுள்ளது என மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றனர்.

அத்துடன் உருத்திராக்கம்,அதை அணிவோருக்கு குறிப்பிடத்தக்க அளவு மனத்திடத்தையும்உள்ளார்ந்த பலத்தையும் அளிப்பதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டிற்கான உருத்திராக்க மணிகளைவிட,ஒன்றிலிருந்து இருபத்தொரு முகங்கள் வரை உள்ள அதிஅக் ஆற்றலுள்ள உருத்திராக்க மணிகளுமுண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும்நம்மைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான சக்திகளையும் ஒரு நிலைப்படுத்திசெழிப்பு,ஆக்கம்,உள்ளுணர்வுத்திறன்எதிர்கால நிகழ்வுகள் குறித்து ஆய்தல்,பாலிஅன் ஒத்திசைவு போன்ற சிறப்புப் பண்புகளை அளிக்கின்றன.

உறுதியாகஉருத்திராக்கள் நாம் இன்னும் திறம்படச் செயலாற்றவும்இன்னும் வெற்றிகாணும் வாழ்க்கையை வாழ்வும் உதவுகின்ற வியத்தகு மணிகளாகும்.

 2. உருத்திராக்கம் பற்றிய புனை கதை

        உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் சிவனின் ''கண்களைக்'' குறித்தாலும்அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினதும் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார்.தியானத்தினின்றும் கண்ணை விழித்ததும்,சூடான கண்ணீர்த்துளிகள் உருண்டோடின.அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள்.

  பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம் ஜபம்,சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டிமனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன. இமயத்திலும்,, ஏனைய காடுகளிலும் அலைந்து திரியும் ஞானிகளும் ரிஷிகளும் உருத்திராக்கங்களையும் அவற்றினால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிந்து, நோயற்ற, அச்சமற்ற, முழுமையான வாழ்க்கையை வாழந்துள்ளார்கள்.இந்தத் துடிப்பவைகளுடனும் தொடர்பில்லாத எந்த ஞானியோ இறை அவதாரமோ       அல்லது சங்கராச்சாரியர்களோ இல்லை எனலாம்.

  4. நோய் தீர்க்கும் பண்புகள்

   பல்லாயிரம் ஆண்டுகளளாக, நல்ல உடல் நலமும், ஜபம், சக்தி ஆகியன வழியாக சமய ஈடேற்றம்,        அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டிமனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு                   வந்தன.

   எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப்படுகின்றோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள்.          ருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராக்கம்               குண்டலினியை  (ஆத்ம இன்பமுனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு,                  விண்ணுலகபேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராக்கம் உதவுகின்றது. இது முழுக்                          குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச்செய்யும்.உருத்திராக்கம்                                     அதனுடைய உயிரியல் மருத்துவப்(Biomedical) பண்புகளுக்கும்,மன அழுத்தம், அதி உயர்ந்த                                      இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் போனது.

உருத்திராக்கம் சுய ஆற்றலையும்,சுய அன்பையும் மேம்படுத்த உதவும்.                                                அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது.                                                                                        

இது பெரியம்மை,காக்காய் வலிப்பு,கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்தவல்லது.குறிப்பிட்ட முறையில்,மருத்துவ விதிமுறைகளைக்கேற்பக கையாளப்                                 -பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.  இது அணிவோருக்கு மன அமைதியையும்,மன ஊக்கத்தையும்,புத்திக் கூர்மையும் அளிக்கிறது

--

5. முகப்புகள் அல்லது முகங்களை உடையன

        ஒரு முகம்.

      மந்திரம்-- '' ஓம் நமச்சிவாயஓம் ஹரீம் நமஹ''

  ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது.

இந்த உருத்திராக்கம் ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால்,

இது தூய உணர்வைக்(Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும் மோட்சமும் கிட்டும்.

இவர் ராஜா ஜனகர் போன்று வாழ்வர்.இவர் வேண்டும்போது எல்லா சுகங்களையும் அநுபவிப்பர்.

எனினும் பற்றற்றவராய் இருப்பர். ஒரு முகத்துஉருத்திராக்கம்நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும்,

அறுவை சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும்.


இரண்டு முகம்.

                 மந்திரம் -- ''ஸ்ரீ கௌரி சங்கராய நமஹஓம் நமஹ''

இரு முகமுடைய உருத்திராக்கத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும்தேவி பார்வதியும்

(சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது.(மாதொரு பாகன்) இந்த உருத்திராக்கம்

அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சிஷ்யன்,பெற்றோர்-     

குழந்தைகள்கணவன் - மனைவிநண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம்.

ஒருமைத் தன்மையை நிலை பெறச்செய்வது இதன் தனித்தன்மையாகும்.

 

'மூன்று முகம்.

                        மந்திரம்-- '' ஓம் கிளீம் நமஹ ''

       

இந்த மும்முகமுள்ள உருத்திராக்கதை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை குறிக்கிறது. எல்லாப்

பொருட்களையும் உண்ட பின்னரும் தீ தூய்மை இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை

அணியவரும் அருள் கிட்டிய போது,தனது வாழ்க்கையில் பாவங்களில்,தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய

நிலையை அடைகின்றார். இந்த மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை(Inferiority Complex)

உள்ளார்ந்த பயம் (Subjective fear)குற்ற உணர்வு(Guilt) மனச்சோர்வு போன்றவற்றால் துன்பபடுவர்களுக்கும்

உகந்ததாகும்.

 நான்கு முகம்

                             மந்திரம்-- ''ஓம் ஹரீம் நமஹ''

        இந்த நாலு முகமுள்ள உருத்திராக்கத்தை ஆளும் கோள் புதன். இது பிரமனைக் குறிக்கிறது.

அணிவோருக்கு அருள் கிடைத்தபோது ஆக்க சக்தி கிட்டுகிறது.மாணவர்கள்அறிவியலாளகள்,

எழுத்தாளர்கள்பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்கவல்லது.ஞாபகசக்தி,

கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள்

மூன்றினை வலது கையில் கட்டினால்,அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது.

 ஐந்து முகம்.

                        மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ

        ஐந்து முகங்களுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் வியாழன்.இது மங்களகரத்தின்

குறியீடான சிவனை குறிக்கும்.இந்த ஐந்து முகமுடைய உருத்திராக்க மாலை அணிதோருக்கு உடல்

நலம்அமைதி ஆகியன் கிட்டும்.இது ஒருவரின் இரத்த அழுத்தம்,இதய நோய்கள் ஆகியவற்றைக்

கண்காணிக்கிறது. இந்த உருத்திராக்க மாலை ஜபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை

அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும்.அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால

மரணம் ஏற்படாது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.

அறு முகம்

                மந்திரம்-- ''ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ''

       

இந்த ஆறுமுக உருத்திராக்கத்தை ஆலும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம்

சிவனின் இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து

வேண்டியோருக்கு அறிவுமேம்படுத்தப்பட்ட புத்தி,மனத்திட்பம்,திடமான மனம் ஆகியவை

அருளப்படும்.இந்த ஆறுமுக உருத்திராக்கம்,மேலாளர்கள்,வணிகர்கள்,நிர்வாகிகள்பத்திரிகையாளர்கள்,

ஆகியோருக்கு உகந்தது. இது ஒருவரின் பிறப்புறுப்புகளை ஆள்கிறது.

 

ஏழு முகம்.

                மந்திரம்-- ''ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக''

        இந்த எழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும்.

        இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள்பாலிக்கப்படும். உடல் தொடர்பான

        துன்பங்கள்,நிதித்தொல்லைகள்,மனத்துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர்

        இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை

        ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம்,பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன்

        அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.

 

எட்டு முகம்.

                மந்திரம் -- ''ஒம் ஹீம் நமஹஓம் கணேஷாய நமஹ''

       

இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக்]

குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. அணிவோருக்கு

ரித்திகள்(Riddhis),சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிக்கும். இதை

அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது இவர்கள் எதிரிகளின் மனத்தையும்,

நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றிவிடும்.

 

ஒன்பது முகம்.

        

      மந்திரம்-- ''நவ துர்க்காயை நமஹஓம் ஹரீம் ஹும் நமஹ''

       

இந்த ஒன்பது உருத்திராக்கத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக் (சக்தி)

குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள் வெற்றிகரமான

வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி,ஆற்றல்,செயல் திறம்அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.

 

பத்து முகம்

        

     மந்திரம்-- ''ஸ்ரீ நாராணாய நமஹ,ஸ்ரீ வைஷ்ணவை நமஹஓம் ஹ்ரீம் நமஹ''

     

    இந்த பத்து முகமுள்ள உருத்திராக்கத்திற்கு ஆளும் என்று ஒன்றுமில்லை.கோள்களினால்

        ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும்,பத்து அவதாரங்களிலும்

        செல்வாக்கு இந்தப் பத்துமுக உருத்திராக்கத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம்

        போல்ச் செயல்பட்டுஎல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து

வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும்.

 

பதினோரு முகம்

         

   மந்திரம் - ''ஒம் ஸ்ரீ ருத்திர நமஹஒம் ஹரீம் நும் நமஹ''


இது பகவான் அநுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு,நேர்மையான நீதி

ஆற்றல் மிக்க சொல்லாட்சிதுணிவுள்ள வாழ்க்கை,வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும்

மேலாகவிபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும்.இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார்.

தியானத்திற்கும் இது உதவும்.


பன்னிரண்டு முகம்

             மந்திரம்-- ''சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ''

 

இது சூரிய கடவுளை குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற  நிர்வாகத்திறனைப் பெறுவர்.

அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும்

ஒளியுடனும்பலத்துடன்,பிறரை ஆட்சி செய்து நிலவுவர். இந்தப் பன்னிரண்டு முக உருத்திராக்கம்

மந்திரிகள்,அரசியல்வாதிகள்,ஆட்சியாளர்கள்வணிகர்கள்நிர்வாகிகள் போன்றோருக்கு

உகந்தது. இது வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது.

 

பதின்மூன்று முகம்.

      

         மந்திரம்-- '' ஓம் ஹரீம் நமஹ''

               

இது  இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா

சுகங்களையும் இது அளிக்கும்.செல்வம்,மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள்

அனைத்தும் இது நிறைவேற்றும்.அத்துடன் அஷ்டமா சித்திகளையும் இது அளிக்கவல்லது. இதை

அணிவோரை காமக்கடவுள் விரும்புவர்..மகிழ்ச்சி அடைந்த காமக்கடவுள் அணிவோருக்கு உலகத்து

ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.


பதினான்கு முகம்

                

               மந்திரம் -- ''ஓம் நமஹ சிவாய''

       

        இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராக்கமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக

        மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது

        புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார்.

        இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒருபோதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர்

        இடர்கள்துன்பங்கள்,கவலைகள் எல்லாவற்றையும் கடந்துவிட முடிகிறது.மேலும்அணிவோருக்கு

        பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.

 

பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள்.

               

                பண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூஜை மேடையில்

                வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன

                பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.

 

கௌரி சங்கர்.

                மந்திரம் -- '' ஓம் கெள்ரி சங்கராய நமஹ''

      

          இயல்பாகவே ஒன்றாக இணைந்த இரு உருத்திராக்கங்கள் கௌரி சங்கர் என அழைக்கப்படுகின்றன.

        இது சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவாகக் கொள்ளப்படுகின்றது. இது கணவனும் மனைவியும்

        ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ள உதவுகிறது. எனவே இந்த உருத்திராக்கம் குடும்பத்தில்

        அமைதியும் சுகமும் விளங்க வைக்கும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது.கௌரி சங்கர்

        உருத்திராக்கத்தை ஒருவர் வழிப்படும் இடத்தில் வைத்துத் தொழுது வந்தால் அவருக்கு

        ஏற்படும் துன்பம்,வேதனை,உலகியல் தடைகள் எல்லாம் அழிகின்றன. குடும்பத்தில் அமைதியும்

        மகிழ்ச்சியும் மேலோங்குகின்றன.

                    ^^^^^^^^^^^^^^^^^^^    ^^^^^^^^^^^^^^^^^     ^^^^^^^^^^^^^^^^^^

 

6.   உருத்திராக்கம் வழி நோய் நீக்கல்

   இன்றைய உலகில் உங்களுக்கு என்ன செய்ய முடியும்?

 

உருத்திராக்கங்கள் ஒரு பயனுடன் கூடிய மணிகளாகும். இந்த மணிகள் மன அழுத்தம்,

உயர் இரத்த அழுத்தம் மனச்சோர்வு மனம் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு

உகந்ததாக விளங்குகினறன. இந்த  உருத்திராக்க மணிகள்இந்தியாவின் சில இடங்களிலும் தென்

கிழக்காசியாவிலும் வளரும் மரங்கலிலிருந்து பெறப்படுகின்றன. பொதுவாக நோய்களை நீக்குவதற்கும்,

தியானம் செய்வதற்கும் ஆசிய மக்களால் பரலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

 

        உருத்திராக்க மணிகள் அணிபவர்களுக்குக் குறைந்துள்ளதையும் அவர்கள் கண்டனர். இவ்வாறு

மன அழுத்த நிலை குறைவதுதொடர்ச்சியாகச் சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில்

உட்கொள்வதால் மட்டுமே செய்ய முடிந்துள்ளது.  உருத்திராக்க மணிகள் ஆக்கபூர்வமான அதிர்வலைகளை

வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன.

               ----------------------------------------------------------------

இந்த நிலையில் ஒருவரின் இதயதுடிப்பு,இரத்தச் சுற்றோட்டம்என்டோ கிரைன் சுரப்பிகளின் [Endocrine glands] செயல்பாடுகள்நியூரோன்களின் [Neurons] செயல்கள்,சுவாசித்தல் ஆகியவை சாதாரண நிலைக்குக் கொண்டு வரப்படுகின்றன.இந்த நிலையில் ஒருவன் தன்னை அதிகளவுக் கட்டுப் பாட்டுக்குள்ளும் வைத்துக் கொள்ள முடிகிறது. அதாவது உடலில் தன் முனைப்புடன் செய்யும் செயல்களை மட்டுமன்றிதன்முனைப்பு இன்றிச் செய்யும் செயல்களையும் கூட கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிகிறது.

    யோகிகள் வியத்தகுவகையில்,மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்திருக்கின்றனர்.அதாவது உடலில் தன்முனைப்புடன் கூடிய செயல்கள்தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்கள் இரண்டையும்குறிப்பாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தக் கூடியவர்கள் இருந்தனர்.இவர்கள்,உடலின் பாதுகாப்பிற்கு எந்த விதத் துணிகளும் அணியாமலேயே இமாலய மலையின் கடுங்குளிரைத் தாங்கினார்கள். இவர்கள் தமது உடலிலுள்ள வெப்பத்தை வெளிக்கொணரும்போது அதைக் கட்டுப்படுத்தி அதன் வழி குளிரைத் தாங்கினார்கள்.  இது சாதாரணமாக செய்யத்தக்க செயல் அல்ல.

        உத்திராக்க மணிகளுக்குச் சில விளக்க முடியாதஆனால் வியக்கத்தக்க மின்காந்தாப் பண்புகளும்             ஊசி அடுத்த முறைப் பண்புகளும் [Acupressure] உண்டு என்பதைப் ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். கழுத்தைச்   சுற்றி உத்திராக்கத்தை அணிவதால்அது இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுவதுடன் நமக்கு உகந்ததாகவும் ஆகிறது. நமது இதயத்துடிப்புகளை கட்டுப்படுவதால் சாத்தியமாகிறது.

        உடலில் அல்லது மனதில் அசாதாரண நிலையோ அன்றேல் ஏதாவது நோயோ இருந்தால் அவற்றைச்  சுட்டிக் காட்டும் இரத்தச் சுற்றோட்டம் விளங்குகிறது.எடுத்தக்காட்டாக ஒருவர் உயர்ந்த மன அழுத்த நிலையையோ அன்றேல் உறுப்பு உறுப்புகளில் சீர்கேட்டையோ உணரும் நேரத்தில் அவருடைய இரத்தச் சுற்றோட்ட வீதம் அதிகமாகிறது.இதற்கு மாறாக இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்துவதால் அவருடைய மன அழுத்த நிலை குறைகிறது. சோமடைசேசன்[Somatisation] அதாவது சீரற்ற சுவாசமும் இரத்தச் சுற்றோட்டமும் கட்டுப்படுத்தப்பட்டவுடன் அதற்கான காரணி அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது.இந்த அடிபப்டை விதிமுறையைக் கொண்டே எல்லா சைகோ பார்மகோலொஜின்[Psycho pharmacological] மருந்துகளும் செயல்படுகின்றன். இரத்தச் சுற்றோட்டம் சாதாரண நிலைக்கு வந்ததும்ஒருவருக்கு மனத்தெளிவு ஏற்படுத்துவதுடன்,உடல் மனம் ஆகிய இரண்டின் செயல்பாடுகளிலும் கூர்ந்த நோக்கு உண்டாகின்றது.

     உத்திராக்கம் நமக்கு,உடலில் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தை அளிக்கிறது.அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது.உத்திராக்க மணிகளை அணிவதால் மட்டும் ஏற்படும் வியத்தகு விளைவுகளைக் கண்ட பலர்,இம்மணிகள் தெய்வீகமானவை

இறைவனால அனுப்பப்பட்டவை எனக் கருதி அவற்றை வணங்கினர். உண்மையான உத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான் மக்கள்,அவை தமக்கு இர்த்த அழுத்தம்,மனச்சோர்வு,மற்றும் நரம்புக்கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரனம் கிடைத்ததாக அறிகிறார்கள்.அதை அணிவோருக்குத் தன்னம்பிக்கை,உள்ளார்ந்த பலம் [Inner Strengh] இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச் செய்வதாக்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  சாதாரண பயன்பாட்டிலுள்ள உத்திராக்க மணிகளை விடமிகச் சக்திவாய்ந்த ஒன்று முதல் இருபத்தொரு உருத்திராக்க மணிகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும்,நம்மைச் சுற்றியுள்ள                          ஆக்க பூர்வமான சக்திகளையும் நேர்ப்படுத்தி,அவற்றைச் செழிப்பு[PROSPERITY] படைக்கும் ஆற்றல் [Creativity] உள்ளுணர்வுத் திறன்[Intutivity] எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை,தீமை பற்றி ஆய்ந்து நோக்கும் திறன்,பாலின ஒத்திசைவு போன்ற செயல்படவும்,மேலும் வெற்றியுள்ள வாழ்க்கையை நாம் வாழவும் உதவுகின்றன.

  உத்திராக்கத்தை கொண்டு நோய் தீர்க்கும் முறையில் நம்மை உத்திராக்கத்தினால் எவ்வாறு குணப்படுத்தக் கொள்ளலாம் என்பதைக் கற்றுக்கொள்கிறோம்.ஆக்கபூர்வமான நோக்கே எந்த உத்திராக்கத்திற்கும் அதன் தனிச்சிறப்பாகும்.பயன்படுத்துவோருக்கு உத்திராக்கம் எந்தத்தீமையும் அளிக்காது.இதிலுள்ள முகங்கள் அல்லது பகுப்புகளைப் பொறுத்து இதனுடைய தரமும்,இதனால் விளைபயனும் வேறுபடும். உத்திராக்கம் கொண்டு நோய் தீர்க்கும் முறையில்,வாழ்க்கையில் ஏற்படும் வேறுபட்ட தொல்லைகளையும்,நோய்களையும் எவ்வாறு உத்திராக்கத்தைக் கொண்டு தீர்க்கலாம் என்பதை அறிந்து கொள்கின்றோம். இந்தச் செயல்திட்டம் உத்திராக்கத்தின் ஒவ்வொரு பண்பையும் அதன் பயன்பாட்டையும் குறித்து விளக்குகிறது.

     * ஒரு நல்ல உருத்திராக்கத்தின் நாம் எவ்வாறு தேர்தெடுக்கலாம்?--


 உத்திராக்கத்தின் உருவம், அளவு பற்றி பலருக்கு குழப்பம் ஏற்படுகின்றது.இவை குறித்து அதிகம் கவலைப்படவேண்டாம். நன்கு வரையறுக்கப்பட்ட முகங்கள்,சிறு மணிபோன்ற அமைப்புகள், மேடுபள்ளக்  கோடுகள் இவையெல்லாம்

   7  அடிக்கடி எழுப்படும் வினாக்கள்.

     உத்திராக்க மணிகள் என்றால் என்னஅவை எங்கே கிடைக்கின்றன?

  எலியோகார்ப்பஸ் கனிற்றால் றொக்ஸ்ப் [Elaeocarpus Ganitrus Roxb] என்ற தாவர இனப் பெயரைக் கொண்ட உத்திராக்க மரங்களில் விளையும் பழங்களின் விதைகளே உத்திராக்க மணிகளாகும்.இந்த மரங்கள் பெரும்பாலும் தென்கிழக்காசியத் தீவுகளான ஜாவா,சுமத்திரா,டாருசலம்(போர்ணியோ) பாலி,இரியன் ஜயா,தீமோர் போன்ற நாடுகளிலும்நேப்பாளம்இந்தியாவின் சில பகுதிகளிலும் காண்ப்படுகின்றன. இந்த உத்திராக்க மரங்களில் 75 சதவீதம் இந்தோனேசியாவிலும், 25 சதவீதம் நேப்பாளத்திலும், 5 சதவீதம் இந்தியாவிலும் காணப்படுகின்றன். உருத்திராக்க மணிகளின் மேற்பகுதியில் பிளவுகள் உண்டு. இவைகள் முகங்கள் என அழைக்கப்படுகின்றன.

  உத்திராக்க மணிகளின் சிறப்புத்தன்மை என்ன?

   ஆசியர்கள் மரபு வழியாக உத்திராக்கத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆசியாவின் யோகிகளும் துரவிகளும் உத்திராக்கத்தை வெறுமனே அணிவதால் மட்டும்அவர்களுக்கு வியத்தகு முறையில் அதிக அளவு சாந்தியும்,குறிப்பிடத்தக்க மன அடக்கத்துடன் நீண்ட நேரம் தியானம் செய்யும் ஒரு முகக்குவியும் ஏற்பட்டத்தைக் கண்டனர்.

   * உத்திராக்க மணிகள் தியானத்திற்கு மட்டுமே பயன்படுகின்றனவா?                                              இவை ஒரு குறிப்பிட்ட ஒரு பின்னிணியுடையவர்களின் பயன் பாட்டிற்கும் மட்டுமே உள்ளனவா?

       இந்த உத்திராக்கத்தினை ஒரு குரு மூலம் அல்லது சான்றோர்கள் மூலமும்,அவர்களின் பெறுவது சிறப்பாகும்.நல்ல உத்திராக்க மணிகளை இவர்கள் மூலம் பூஜை செய்து,உரு ஏற்றி கொடுக்கும் போது அணிவதனால்ஒருவருக்கு சாந்தி,மன அமைதி,கூர்ந்த நோக்கு,ஒருமுகக் குவிவு ஆகியன கிட்டுகின்றன. இத்தகைய மனோநிலை தியானம் செய்வதற்கும்,இன்றைய உலகில் மனம் தொடர்பான செயல்பாடுகளுடன் கூடிய தொழில் புரியவர்களுக்கும் உகந்ததாக அமைகிறது. ஒரு முகக் குவியும்கூர்ந்த நோக்குமே எந்தத்துறையிலும் வெற்றியீட்டுவதற்கு மிக இன்றியமையாத பண்புகளாகும்.

ஐந்து முகப்புள்ள உத்திராக்க மணிகள் தவிர,ஒன்று முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள மணிகளும் கிடைக்கின்றன.பதினைந்து முகப்புகள் முதல் இருப்பத்தியொரு முகப்புள்ள மணிகளும் கிடைக்கின்றன.

எனினும் பொதுவாகக் கிடைப்பதில்லை. இருபத்திரண்டு முகப்புகள் முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள வரை உத்திராக்க மணிகள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இந்த உத்திராக்க மணிகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை.அத்துடன் அவற்றிகு சில சிறப்புப் பயன்பாடுகளும் உண்டு.இந்தப் பல்வேறு முகப்புடைய மணிகள் மனிதனுடைய ஆளுமையையும்மனநிலையும் ஆக்கபூர்வமான வழியில் மாற்றுகின்றன.

உத்திராக்க மணிகள் அனைத்தும் மனித குலத்தின் பயன்பாட்டிற்குகாகவே உள்ளன. இந்த உத்திராக்க மணிகள் நமது மனம்,உடல்,ஆத்மா அனைத்தையும் மீண்டும் இளமை பெறச்செய்யும்.இம்மணிகளுக்கு இயற்கைக்குகந்த ஆற்றலுடன்,தெய்வீகமானவை. புராதன இந்திய நூல்களிலும்,பௌத்தர்களது நூல்களிலும் இந்த மணிகளைப்பற்றியும்அவற்றின் ஆற்றல்கள் பற்றி குறிப்புகள் உண்டு.

 

    * வேறுப்பட்ட முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்த்து அணியலாமா?

   பல்வேறு முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்ந்து அணியலாம். இவ்வாறுnசேர்த்து அணிபவருக்கு வேறுபட்ட மணிகளின் தனிப்பட்ட ஆற்றலை ஒரே நேரத்தில் உணர முடியும்.ஒருவர்குறிப்பிட்ட எண்ணுள்ள முகப்புகளைடைய மணிகளினால் செய்யப்பட்டதை கூட அணியலாம்.

          * எல்லோரும் உத்திராக்கத்தை அணியலாமா?

  அணியலாம். பால்,வயது,பண்பாடு,இனம்,நிலம்,மயப்பின்னணி குறித்த எந்தவிதப்பாகு பாடுமின்றி எல்லோரும் இதை அணியலாம் எட்டு வயதுக்குட்பட்டவர்களால் எல்லா மணிகளையும் அணிய முடியாது.

    * உத்திராக்கத்தின் தாக்கத்தை ஒருவர் உணர்ந்து கொள்ள எத்தனை நாட்கள் ஆகும்?

   ஒருவர் தனது உள்ளங்கையில் உத்திராக்கத்தைப் பிடித்த மாத்திரத்திலேயே அதனுடைய குறிப்பிடத்தக்க தாக்கத்தை உணர முடியும் என்பது வெளிப்படை. இது ஆற்றலோடு இலேசக அதிர்ரும் சக்தியுண்டு. [இது அவரவர் உடல் மின்சக்தி ஆற்றலைப் பொறுத்தது]

  * இந்த உத்திராக்க மணிகளுடைய உண்மைத் தன்மையை எவ்வாறு சோதிக்கலாம்?

       நீரில் மூழ்கும் மணிகள் உண்மையானவைநீரில் மிதக்கும் மணிகள் போலியானவை என்ற அடிப்படையில் நிகழ்த்தும் சோதகள் சரியானவை அல்ல.மரத்தினால் செய்யப்பட்டு உள்ளே ஈயத்தை அடைத்துள்ள மணிகள் கூட நீரில் எளிதாக மூழ்கிவிடும். இவற்றை நம்பகமான இடத்தில் -நம்பிக்கையான நண்பர் மூலம் பெறுவது சிறந்த வழியாகும்.

 --


 உத்திராக்க அணிந்திருக்கும் போது செய்யவேண்டியவை,செய்யக்கூடாதவை

                என்று எதுவுமில்லை. நமது புனித நூல்களின்படி உத்திராக்கத்தை எப்போது

                அணியலாம். அவற்றை நம்பிக்கை,மரியாதை,அன்பு ஆகிய பண்புகளுடன் அணியவேண்டும்.

    இந்துக்கள் மட்டும் இதை அணியலாமா?

                இல்லை. எல்லோரும் உத்திராக்கத்தை அணியலாம். சூரியன்,சந்திரன்,ஆறுகள்

                கோள்கள் ஆகியவற்றிற்கு மதம் என்பது ஒன்றில்லை.

   * உத்திராக்க மணிகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?

          எத்தனை ஆண்டுகளுக்கு இவை இருக்கலாம். இவற்றை நன்கு பாதுகாத்து

           வைத்துக் கொண்டால் தலைமுறை தலைமுறையாகக்கூட வைத்துக் கொள்ளலாம்.

 * வேறு எந்த வழியில் உருத்திராக்கம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும்

        ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.முடிந்தால் சூரிய

        அஸ்தமனத்திற்கு பின்னர் இரண்டு ஐந்து முக உருத்திராக்கங்களை அந்த நீரில்

        அமிழ்த்துங்கள்.காலையில் எழுந்ததும் வேறு எதையும் உண்பதற்கு முன்னர்

        அந்நீரைக் குடியுங்கள். இவ்வாறு செய்வதற்கு பித்தளைக் குவளையைப்

        பயன்படுத்த வேண்டாம்.

தீடீரென்று ஏற்படும் நரம்புத்தளர்ச்சி உருத்திராக்கம் உதவுமா?

        ஆம். ஒரு பெரிய அளவுடைய ஐந்து முக உருத்திராக்கங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

        திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியால் நரம்பு தளர்ந்து,குளிராக உணர்ந்த போதெல்லாம் வலது

        உள்ளங்கையில் ஐந்து முக உருத்திராக்கத்தை வைத்து பத்து மணித்துளிகளுக்கு இறுக

        மூடிக்கொள்ளூங்கள்.நீங்கள் உங்கள் மனத்திடத்தை மீண்டும் பெறுவதுடன்,உங்கள்

        உடலிலும் சூடு ஏறத்தொடங்கும்.

 

ஒரு குடும்பத்தில் வாழ்பவர்கள் கழுத்து மாலைகள்,ஜபமாலைகள்

   உருத்திராக்க மணிகள் ஆகியவற்றை மாற்றிக் கொள்ளலாமா?

        இல்லை. உருத்திராக்கத்திற்கு அதை அணிபவருக்கும் இடையே ஒருவகை

        உறவுண்டு. இது மிக அந்தரங்கமானது. இதை வேறோருவருடனும் பகிர்ந்து

        கொள்ளக் கூடாது. ஆனால்,இவற்றை வாழ்விறுதி விருப்பப் பத்திரத்தில்[Will]

        எழுதி அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கலாம்.

                           - நிறைவு -

       

  



அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

ஆலய நுழை வாசல்

 'சிங்கப்பூர் ஆலயங்கள்'' எனது அண்மைய நூல்.

அறிமுக உரையாக ‘ஆலய நுழை வாசல்’ என்ற ஒரு குறிப்பையும்
இணைத்திருந்தேன். சாதாரண மனிதனும், சாதாரண ஆன்மாவும்
இறைவனோடு எப்படி இணையலாம் என்று நம் ஆன்றோர்களும்
மகான்,   பெரியோர்களும்,   சித்தர்களும்   நமக்கு   வழிக்காட்டி
 சென்றுள்ளார்கள்
 என்பதையும், அதனை நாம் நம் வாழ்வில் கடை
பிடித்து, கைக்கொண்டு
 இந்த மானிட பிறவினை இறைவனின்
திருவடியில் இணையலாம்,
 இணைக்கலாம் என்று என்ற
சிந்தையில் ஒரு சிறு குறிப்பு.

(குறைகள் இருப்பின் பொறுத்தருளக - கிருஷ்ணன், சிங்கை)
                  ******************************

     ஆலய நுழை வாசல்

           திருக்கோயில்கள் இல்லாத திருஇல் ஊரும்
        திருவெண்ணீறு அணியாத திருஇல் ஊரும்
        பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும்
        பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்
        விருப்பொடு வெண்சங்கம் ஊதா ஊரும்
        விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்
        அரும்போடு மலர் பறித்திட்டுண்ணா ஊரும்
        அவை எல்லாம் ஊரல்ல அடவி காடே.

                                           (தனித்திருத்தாண்டகம்: பாடல்: 933)
‏ 
 இயற்கை முழுவதிலும் அழகு உண்டு. சில ‏இடங்களில் அமைந்துள்ள அழகு நம் உள்ளத்தைத் கொள்ளை கொள்கிறது. மேலான எண்ணங்களை வளர அத்தகைய அழகு பய‎ன் படுகிறது.
உயர்ந்த எண்ணங்களை
 எண்ணுவதற்கு அழகிய ‏இடங்கள் பெரிதும் பய‎ன்பட்டு வந்திருக்கின்றன. அந்த இடத்துக்குப் புதிய அருள் சக்தியை நல்குகிறது. இயற்கையி‎ன் பொலிவும், அழகும்
ஒ‎ன்று சேர்ந்து அந்த இடத்தை புண்ணிய
 ஸ்தலமாக, ஆலயமாக அமைகிறது. பாடல் பெற்ற ஸ்தலங்கள் எ‎ன்றென்றும் மறையாத மகிமையுடன் விளங்குகிறது. பாமர மக்களும் பய‎னுறம் பொருட்டே ஆலயங்கள் அமைக்கப் பெற்றன. ம‎னித உடலில் உள்ள தத்துவங்களை
விளக்குவதற்கே ஆலயங்கள் அமைந்துள்ளன.

 
   அரசர்களும் செல்வந்தர்களும் பக்தர்களும் காலம் காலமாக் கோயில்களை எழுப்புவதிலும் அவற்றிற்குத் திருப்பணிகள் செய்வதிலும், அவற்றில் வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறச்செய்வதிலும் அதிக ஈடுபாடு காட்டினர். தங்கள் அரண்மனைகளை விடக்
கோயில்களே நிலைத்து நிற்க வேண்டும்  என்று   எண்ணிய மன்னர்கள் ஆலயங்களை
 வலிமையாகக் கட்டியதுடன் அவற்றை அவ்வப்போது புதுப்பித்தனர். ஊரின் உயர்ந்த
கட்டிடம் ஆலய இராஜ கோபுரம் என்று வரம்பு நிர்ணயித்து அதனைப் பிற கட்டிடங்கள்
 மிகா வண்ணம் வாழ்ந்தனர். காலப்போக்கில் எல்லாத் துறைகளிலும் அன்றாட வாழ்வியலிலும் ஆலயங்கள் பின்னிப் பிணைந்தன. தமிழ்நாட்டின் வரலாறே திருக்கோயில்களின் வரலாறு
என்று கூறுமளவு ஆலயங்கள் முக்கியத்துவம் பெற்றன. அரசர்கள், அதிகாரிகள், செல்வந்தர்கள், அன்பர்கள் ஆகியோர் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களுக்குக் கோயில்கள் அமைத்தனர்.
எனவே சிவன், திருமால், முருகன், விநாயகர், அம்மன், கிராம தெய்வங்கள் ஆகிய
வடிவங்களுக்குக் கோயில்கள் தோன்றின.


எங்கும் வியாபித்திருக்கும் இறைவனுக்கு ஆலயம் எதற்கு என்று வினா எழலாம்.
தொலைக்காட்சி, வானொலி நிலையங்களிலிருந்தும் ஒலிரும் மின்னலையை  அதற்குரிய
சாதனங்கள் மூலம்தான் நாம் ஒலி,
ஒளியை இனம் கண்டு பார்த்தும்,கேட்டும் இன்புற
 முடியும்.பூமியின் மடியில் நீர்பரந்து,விரிவியிருந்தாலும் 
தோண்டிதான் எடுக்கவேண்டும்;
பசுவின் உடல் முழுதும் பால் விரவியிருந்தாலும், மடிக்காம்பின் மூலம்தான் நாம் பெறமுடியும்.
 அது போன்றுதான் இறைவன் எங்கும் நீக்கமற வியாபித்து இருந்தாலும் ஆலயத்தின்
மூலம்தான் அருள் பாலிக்கிறார்.இதனைத்தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று
ஒளவையார் கூறியுள்ளார்.


 கோவில் வழிபாடு, திருவிழா நடைபெறும் போது அற்புதமான அலங்காரங்கள்
பற்பல வடிவங்களில் கண்களையும், கருத்தையும் கவர்கிறது. இவைகள் அங்கு
கூடியுள்ள அன்பர்களின் சூட்சும உடல்களைத் தூய்மைப்படுக்கிறது.
 மனத்திற்கு இதமான சாந்தி அளிக்கிறது.


மூவேந்தர்களின் அரண்மனைகள் இன்று மண்ணோடு மண்ணாய்ப் போயின.
ஆனால் அவர்கள் எடுத்த திருக்கோயில்கள் நம் தமிழ் நாட்டை அலங்கரிப்பதோடு,
சிறந்த அருள் நிலையங்களாகவும் விளங்குகின்றன.


எகிப்து, ரோம், கிரீஸ், பாபிலோன் முதலிய பழம் பெருமை வாய்ந்த நாட்டின்
கோவில்கள் இன்று பாழாகி
விட்டன.அங்கு வழிபாடு நடப்பதில்லை.
அக்கால மக்கள் வழிபட்ட உருவங்கள்,சிலைகள் இன்று கண்காட்சிச்

சாலையில் வைக்கப்பட்டுவிட்டன.

ஆனால் நமது கோயில்கள் இறைவன் உறைவிடமாகவும்,மனம் இறைவன்

இடத்தில் லயிக்கும் இடமாகவும், பக்தியோடு வழிபாடு செலுத்தும் அருள்
நிலையங்களாகவும் இருப்பதை எண்ணி எண்ணி இறும்பூதெய்த வேண்டும்.
திருக்கோவிலுக்குச் செல்வோர் கோயிலை இறைவன் இருப்பிடமாகவும்
அங்கு திருவுருவங்களை இறைவனின் அருளுருவ அடையாளங்களாகவும்
 நினைந்து வழிபட வேண்டும்.

            
           திருக் கோயில் உள்ளிருக்கும்
             திருமேனி தன்னைச்
            சிவனெனவே கண்டவர்க்கும்
              சிவன் உறைவன் அங்கே           - திருநாவுக்கரசர் -


     திருக்கோவில்களும்,அங்குள்ள திருவுரு மேனிகளும் நமக்கு இறையுணர்வைத்
தூண்டி வளர்ப்பதற்காக நம்
 முன்னோர்கள் அன்போடு செய்து வைத்த அரும்
பெருஞ் செயல்களின் அருள் தோற்றங்களாக
 விளங்குபவை.
          குறிகளும் அடையாளமும் கோயிலும்
            நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
         அறிய ஆயிரம் ஆரனம் ஓதிலும்
           பொறியிலீர் மனம் என்கொல் புகாததே!

                                                               -என்கிறார் திருநாவுக்கரசர்.

நமது முன்னோர்கள் கோவிலினுள் உள்ள திருவுருவத்தை ஏதோ கற்சிலையென

எண்ணவில்லை.அங்கு கடவுளையே கண்டார்கள்; அவரோடு பேசினார்கள்.
 'ஓங்கி ஆழ்ந்து அகன்ற
 நுண்ணியனே' என்றும், சிந்தையே கோவிலாகக்
கொண்ட எம்பெருமான் திருபெருந்துறை சிவனே'
என்றும்,

விண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக் கண்ணாரமுதமுமாய் நின்றான்'
என்றும்,
இறைவனது
 உண்மைத் தன்மைகள் பலவற்றையும் அனுபவித்துப் பாடினார்கள்.
கோவிலில் சிறு உருவத்தின் முன் நின்று பாடும்போதும் அவர்கள் அங்கு
கல்லிலான ஒரு வடிவத்தைக் காணவில்லை. அன்போடு, உருகி அகம்

குழைந்து பாடினார்கள்.

கண்ணப்பர், காளத்தீஸ்வரர் கோவிலில் உள்ள உருவத்தை ஒரு கற்சிலை என்று எண்ணியிருப்பாரானால் கல்லுக்குத் தான் ருசி பார்த்த மாமிசத்தை
உணவூட்டியிருப்பாரா?
தன் கண்ணைத் தோண்டிக் கற்சிலைக்கு அப்பியிருப்பாரா?
அவர் கடவுளையே கண்டார் .
‘பொய்யாருக்குப் பொய்யனாகவும், மெய்யர்க்கு மெய்யனாகவும் உள்ளவர் கடவுள்
'
 
       என்னன்  புருக்கி இறைவனை ஏத்துமின்
         முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
       பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியுந்
         தன்னன் பெனக்கே தலை நின்ற வாறே   
                                                               -திருமூலர்-

கோவிலில் கல்லாகக நின்று காட்சியளிக்கிறார் இறைவன்.
இராமகிருஷ்ணர், சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்.
தாம் பூஜை செய்து வந்த காளியின் திருவுருவத்தோடு அவர் பேசினார்;
காளியும் அவரோடு பேசினாள்.
தாம் வழிப்படும் அம்பிகையின் திருவுருவத்தோடு  உயிருண்டா இல்லையா
என்று பஞ்சை அதன் மூக்கின் முன் வைத்துப் பரிசோதிப் பார்த்து
அத்திருவுருவிற்கு உயிருண்டு என்று துணிந்தார்.

தெய்வம் என்றால் அது தெய்வம்.
வெறும் சிலை என்றால் அது சிலைதான்.
உண்டு என்றால் அது உண்டு.
இல்லை என்றால் அது இல்லை.
கண்ணதாசனின் வரிகள் கவிக்கம்பனை நினைவூட்டுகிறது.

யுத்த காண்டக் கடவுள் வாழ்த்துப் பாடல்
             ‘'ஒன்றே என்னில் ஒன்றே யாம்
                    பலவென்றுரைக்கில் பலவே யாம்!
              அன்றே என்னில் அன்றே யாம்
                ஆம் என்றுரைக்கில் ஆமே யாம்!


சமய நிறுவனங்கள் மூவகையின.
ஒன்று திருக்கோயில்கள்.
பிறிதொன்று திருமடங்கள்,
மற்றொன்று
 சமுதாயத்தினர் சமய வளர்ச்சியில் ஆர்வம் காட்டி
தோற்றுவித்த அமைப்புகள்.

இம்மூன்றும் சமய வளர்ச்சிக்கு முக்கியமானவை.
இறை வழிபாடு அகவாழ்வையும்,புறவாழ்வையும் நெறிபடுத்துகிறது.

நேர்மையும், புனிதமும் நிறைந்தது.

இன்று நம்மில் பலர் கோவிலுக்குப் போகும் கடமை மறந்துவிட்டனர்.
படித்தவர்களில் பெரும்பாலோர் ஆலய வழிபாட்டை அறவே
கைவிட்டனர்.  ஏதோ பாமர   மக்களுக்கும்,  பெண்களுக்கும்தான்
ஆலய வழிபாடு என்று எண்ணவும் செய்கிறார்கள்.   வாரத்திற்கு
ஒரு முறையாவது  இல்லறத்தாரோடு சென்று வழிபாடு செய்யும்
நியதியை மேற்கொள்வோமாக.  அப்படி செல்லும்போது மனம்
அடங்கி அமைதியான சிந்தையுடன்,பக்தியுடன் இறைவன்பால்
செலுத்தினால் இன்மையிலும்,மறுமையிலும் இன்பம் காணலாம்.

   
         ‘'நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
           நித்தலும் எம்பிரானுடைய கோவில் புக்குப்
           புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
            பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித்
           தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
              சங்கரா சயபோற்றி என்றும்
         அலைபுனல்சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும்
            ஆரூரா என்றென்றே அலறா நில்லே''            
                                                           - திருநாவுக்கரசர் -



மாணிக்கவாசகப் பெருமான்,
"தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்"

                                    (போற்றித் திருவகவல்)

ஒரு சமுதாயத்தில் அல்லது ஊரில் எத்தனையோ பெரிய மனிதர்கள்
தோன்றினாலும், வாழ்ந்தாலும், அவர்களை எல்லாவிதத்திலும்
குற்றமிலாதவராகப் பார்க்க எல்லாராலும் முடியாது. மனிதனுக்கு
மனிதன் பார்வைகள் வேறு பட்டுக் கொண்டே இருக்கும்.
அம்மனிதனின் வாழ்வும் நிலையிலாததது. சில தலைமுறைகளுக்குப் பி
ன்னர் மக்கள் அம்மனிதரை மறந்து விடக்கூடும்.


அதனால்தான், எல்லோராலும் குற்றம் சொல்லமுடியாத பொருளாக,
எல்லோருக்கும் உயர்வானதொரு பொருளாக, ஏற்றத்தாழ்வு இல்லாத
ஒரு பொருளாக, எல்லாக் காலங்களிலும் நிலைத்த பொருளாக

இறைச் சித்தாந்தம் தோன்றி அந்த இறைவனைக் கோயிலுக்குள்
 மனித குலம் கண்டு வருகிறது.


அதனால்தான், ஒவ்வொருவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை,
மேலோனாக, அன்பனாக,குழந்தையாக 
ஏன் காதலியாகக் கூடக்கண்டு
இன்புற்றுவருகிறார்கள். ஒவ்வொருவரின் அகத்தையும் இறைவன்
அறிவான். அன்போடு நாம் சென்று இறைவனைக் கோயிலில் சென்று
வழிபட்டு நமக்கு நிம்மதி கிடைப்பதே நமது இந்தத் தத்துவத்தால்தான்.


எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவன் இறைவன். அவன் சன்னதியில்
எல்லோருக்கும் நிம்மதி கிடைக்கிறது என்றால் இதனை விட வேறு
உயர்வான பொருள், முனிவு இலாத பொருள் வெறென்ன இருக்க முடியும்?


          "தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
          முனிவி லாததோர் பொருளது கருதலும்"


                  * அர்த்த யாம பூசனைக்கு வாசல் நிறைவுபெறுகிறது *

--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

கோபுர தரிசனம் #2

 கோபுர தரிசனம் #2


கொடி மரத்தில் காணப்படும்  கொடிக் கயிறுகள் இடைபிங்கலை, பிங்கலை என்ற  நாடிகளைக் குறிக்கின்றன. இவற்றின் வழியே மூச்சைச் சரியான முறையில் அமைத்து யோகம் பயிலும்போது,  ஆத்மா ‘ஆனந்தம்' எனப்படும் இறையடியை அடைந்து, பிறவியிலா பெரு நிலையை அடைகிறதென்பதைக் குறிக்கவே திருவிழாவின் போது, ‘கொடியேற்றம்' நடைபெறுகிறது.

எண்ணங்களின் பிறப்பிடமாக விளங்கும் கொப்புள் ஸ்தானத்தில் சிவனுடைய வாயிற் காப்போனாகிய  நந்தியைப் பிரஷ்டை செய்வதன் மூலம் எண்ணங்களை அடக்கி, மனதினைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அல்லது  மூலஸ்தானத்தைப் பிரம்ம கபால உருவில் அமைப்பது வழக்கம். புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படும் பொழுது  ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக்  குறிக்கவே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்த கோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்துக் கொடுத்து, கோயில் திசை நான்கிலும்  விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன்  கருதி  கூறியவை.

 ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,  அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும்  பிராண சக்தியைக் கிரகித்து வெளிவிடுகிறது. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.  இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம்  என்று  நம் முன்னோர்கள் கூறினர்.

 கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு  இடையறாது  அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு  ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுக்கிறது.

 இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ஆயிரம் உயிர் சக்தி)  நம் உடலில் உள்ள உயிர் அணுக்களை தாக்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள  திருவுருவச் சிலை அந்த சக்தியை  பிரித்து  ஒன்பது  முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அப்போது அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் நமக்கு ஆன்மீக உணர்வு, புத்துணர்வு, புத்துணர்ச்சியை  ஏற்படுத்தி நம்முள்ள கவலைகள், பிரச்சனைகள், உடல் நோய்களைப் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.

 கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர்  செல்லும் பொருட்டு  ஓர் துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும்  நீரிலும் பிராண சக்தி  கலந்து  வெளிப்படுகிறது.  அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரைக் கோயிலை வலம் வரும் நாம் எடுத்து கண்ணிலும், சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீது பிராண சக்தி பரவுகிறது.

 இந்த பிராண சக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில்தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன்,  அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறுகாலை கர்ப்பக்கிரத்தின் வாயிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது  என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் கூறியுள்ளனர்.

 தமிழ் நாட்டுப் பல கோயில்களில்  சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள்.  சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இந்த இறைவுணர்வும்,  ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும். நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை, ஆகியவை எழும் போது  நம்  உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். நாம் ஓய்வெடுக்கும் போது  (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் என கூறுகின்றனர். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ஸ்ட்கு கீழே  இருக்கும்.  இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து வெளிப்பட்டு  கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம்  இதுதான்.

பலி பீடம்.

பலி பீடம் என்பது  இங்கு  உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல.

நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும்  காமம், ஆசை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம்  எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.

வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் ந‎லன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த ‏ இடத்திலே பலி கொடுக்கவேண்டும். ம‎னிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்கவேண்டும்.                                                            

ஆண்கள் இங்கு தலை, கையிரண்டு, இருசெவிகள், இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில் படும்படி அஸ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் தலை,இரண்டு முழங்கால், மார்பு, என  நமஸ்காரம் செய்ய  வேண்டும். அவ்வாறு கீழே வீழ்ந்து வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து  வணங்க வேண்டும்.

 சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டி வரவேற்கின்றோம்?

வாழ்+ ஐ = வாழை என்பதற்கும் வாழ்+கை =வாழ்க்கை என்பதற்கும் நிறைய தொடர்புண்டு. வாழை நட்ட இடத்தில் ஒன்று தன் இனத்தைப் பெருக்கி கொள்ளூம்..பருவம் பாராது பலன் கொடுக்கும். வாழை தன்னுடற் பகுதியிலுள்ள அனைத்தையும் ஈகம் செய்யும். தன் உயிரை இழந்த பின்னும் தநுச்,நார், காய்,கனி என்று உலகுக்கு வழங்கும். வாழை போன்றே தென்னையும் ஈகையின் வெளிப்பாடாகும். இவ்விரண்டு மரங்களும் அறவாழ்க்கையின் எடுத்துக் காட்டுகளாகும். இவ்விரு மரங்களையும் கற்பகத்தரு என்று  தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவர். மனித வாழ்க்கையில் உற்றவர்களுக்கும் உலத்தாருக்கும் முறையாக பயன் தருகின்ற அறவாழ்க்கையாக அமைய வேண்டுமென்று தமிழ்ச் சான்றோர்கள் எண்ணினார்கள்.

 வாழையும் தென்னையும் போல ஈகைவாழ்வாக அமைய வேண்டுமென்று நம்பினார்கள். அந்த அருமையின் வெளிப்பாடாக வாழையும் தென்னையும் மங்கல நிகழ்ச்சிகளில் கட்டினார்கள். இன்று வாழையும் தென்னையும்கட்டுவது ஒரு சடங்குபோல் செய்யப்படுகிறதே தவிர அதன் பண்பாட்டு நோக்கம் பலருக்கு தெரியவில்லை.

வாழ்க்கையில் தீயவைகளும், தொல்லைகளும் நீங்கி வசந்தமும், ஏற்றமும் வரவேண்டும் என்பதற்காக சுப காரியங்கள் போதும், குடும்பம் வாழையடி வாழையாக வளர வேண்டும் வளம் பெற வேண்டும் என்பதற்காகதான் வாழை மரம் கட்டுகிறோம்.  அத்துடன் வேறு சில சிறப்புகளும் வாழைக்குண்டு. வாழை மரம் சிறியதாக இருந்தாலும், அதனிடமிருந்து வருகிற இலையோ நீண்டு இருப்பதுடன்,  அகலமாகவும் இருக்கும். வாழை தண்டு மிகமிக மென்மையானது. கடுங்குளிரையும் கொடும் வெயிலையும் வாழைத்தண்டால் தாங்க இயலாது. இதற்காக இயற்கை தண்டை சுற்றி மடல்களைப் பொதிந்து வைத்திருக்கிறது. உடலின் உட்பகுதியில் ஆயிரக்கணக்கில் பொடிப் பொடியாக கண்ணறைகளை வைத்திருக்கிறது. இந்த கண்ணறைகள் குளிரின் கடுமையையும், சூட்டின் கொடுமையையும் வடிக்கட்டித் தண்டுக்குத் தேவையான அளவில் விடுகிறது. அடுத்து வாழை தரும் வாழைப்பழம். பூஜையின் போது, வாழைப்பழம் பெருமளவில் பயன்படுத்துகிறோம்.

அப்படி என்ன வாழைப்பழத்திற்கு மகத்துவம்?

 வாழைப்பழம் எல்லா காலங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைக்க கூடியது. வாழைப்பழத்தில் கொட்டை கிடையாது. பேய் வசிக்கும் காட்டில் பேயனாக நடமிடும் ஈசன் பேயன் வாழையிலும், முகுந்தனாகிய மகாவிஷ்ணு முகுந்தன் வாழையிலும் (இதுவே மொந்தன் வாழை என்று மருவியுள்ளது) தாமரைப் பூவில் உதித்த பிரம்மன், பூவின் வாழையிலும் குடியிருப்பதாக ஐதீகம். அதனால் வாழைப்பழம் இறை பூஜையில் உயர்வாக இடம் பெற்றுள்ளது.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஐந்து முக விளக்கும் ஐந்து முக தீபாராதனை.

 உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி, காற்று, மழை, நெருப்பு. உடலில் பஞ்ச பூதங்களும்  ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை. இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முக விளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.

 நாம்  ஏன்  திருநீறு  சந்தனம்  குங்குமம் நெற்றி  குறியில் இட்டு கொள்கிறோம்?

 நம்  கபாலத்தில்  உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு  புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும்.  மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும். ஆகவே  அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

 சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்  என்பதற்காகச் சந்தனம் பூசி,  சந்தனம் காயாமல் இருக்க  குங்குமம் இடுகிறோம். சந்தனம், திருநீறு சிவனுக்கும், குங்குமம் சக்திக்கும் அடையாளமாகும். இவற்றைத் தரித்தால் புத்துணரவும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும்,  உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.

 இறைவனையும், கோவிலையும் ஏன் வலமாகச் சுற்றுகிறோம்.

இறை சிந்தனையோடு, இறைவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டு வலம் வரும்போது நம் மனம் இலகுவாகிறது புராண காலத்தில் பார்வதி சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் மலையை வலம் வந்த போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு.

 மேலான மனப்பா‎ன்மை உடையவர்க்குச் சுவாசத்தின் போக்குவரவு அல்லது பிராணயாமம் முறையாக நிகழ்கிறது.தங்கு தடையி‎ன்றி அமைதியாக வலம் போது பிராணயாமமும்  ஒழுங்காக நிகழ்ந்து விடுகிறது. சூட்சமமாக உடலி‎ன் கண் நிகழும் நிகழ்ச்சி பிராணயாம‎ம்.

. --

--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

கோபுர தரிசனம் # 1

 சிங்கப்பூர் ஆலயங்கள்'' எனது அண்மைய நூலிருந்து  ஆலயங்களில் அமைந்துள்ள கோபுரங்களின் அமைப்பு பற்றியும்,, கொடி மரம்,,பலி பீடம், கலசம் போன்றவை ஏன் நம் முன்னோர்கள் அமைத்து வழிப்பட்டார்கள் என்பது குறித்த சிறு விளக்கம்


===============================================
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

நாம் ஏன் கோபுர தரிசனம் செய்யவேண்டும்?


 சிந்து சமவெளி நாகரிகக் காலத்திலும் அதற்கு முன்னரும் இறை வழிபாடு இருந்தது பற்றியும்,

சிவபெருமான் பசுபதி எனும் பெயரில் வழிபடப்பட்டது பற்றியும் குறிப்புகள் உள்ளன. ஆயினும்

கோயில்களின் அமைப்பு எவ்வாறு இருந்தது என்பது பற்றிய செய்திகள் முழுமையாக கிட்டவில்லை.

வரலாற்றுத் தொடக்கமான கி.மு. 6-ஆம் நூற்றாண்டு வரையும் கூட வழிபாட்டு அமைப்பு பற்றி

தகவல் இல்லை.

தென்னிந்தியக் கோயில்களில் காணப்படும் அமைப்பு முறை, திராவிட முறை என்றும் அழைக்கப்படுகிறது.

கி.பி 6-7 ஆம் நூற்றாண்டு தொடங்கி 18 ஆம் நூற்றாண்டு வரை தமிழகம்,கர்நாடகா,ஆந்திரம் உள்ளிட்ட

பகுதிகளில் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்களில் இந்த அமைப்பைக் காணலாம்.ஆகம நுட்பங்கள்,

சிற்ப சாஸ்திரம்,கலை நுணுக்கங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி,கோயிலின் அமைப்பும் தன்னையும்

நிர்மாணிக்கப்பட்டன.கோயில் என்பது மனித உடலிலுள்ள தத்துவ ஆதாரத்திற்கு ஏற்றபடி கோயில்

கட்டப்பட வேண்டுமென ஆகமங்கள் தெரிவிக்கின்றன.

 கோபுர அமைப்பு

     ஆலய நுழை வாயிலில் நம்மை வரவேற்பது இராஜ கோபுரம். இராஜ கோபுரத்தை ஸ்துல லிங்கம் எ‎‎‎‎ன்று கூட கூறுவார்கள். ஆலயத்தி‎ன் உள் இருக்கும் கோபுரங்கள் எல்லாம் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்து இருப்பதால்,நெடுந்தூரத்திற்கு அப்பால்  இருந்தும் கோபுரம் காணலாம். கோபுரத்தையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள். தூரத்தில் இருப்பவர்களுக்கும் இறைவனி‎ன் நினைவு கூறவே கோபுரம் அமைக்கப்பெற்றது. கோபுரத்திம் தளங்கள், கோபுர நிலைகள் என்று அழைக்கப்படும்.

 கருவறை சிறியதாகவும், கோயில்களின் மையப்பகுதியிலும் அமையும்.கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம்,அதற்கு முன்பாக ஸ்தபன மண்டபம், அதற்கும் வெளியே மகா மண்டபம் ஆகியன காணப்படும்.உள்ளிருக்கும்பிரதான தெய்வத்தைப் பொறுத்து வாகனம் இடம் பெறும்.ஒரே கோயில்,ஒன்றுக்கு மேற்பட்ட சந்நிதிகள்இருக்கலாம்.ஆனாலும் மூலஸ்தானம் என்பது பிரதான தெய்வத்தின கருவறைக்கு வழங்கப்படும்.மூலஸ்தானக் கருவறையும், பிற சந்நிதிகளையும் தனித்தனியாக வலம் வரும் அமைப்பு இருக்கலாம்.

 எல்லா  கோபுரஙகளிலும் உயரமானது இராஜ கோபுரம்.கருவறையின் மீது அமைக்கப்படும் சிகரம்,விமானம்எனப்படும். எண்கோண வடிவத்தைக் கொண்தாகவே இவை அமைக்கப்படுகின்றன.இராஜ கோபுரத்தி‎‎ன் அருகில்செ‎‎‎‎‎‎ன்‎று அத‎ன் அமைப்பைக் கவனித்தால் சில அதியசங்களைக் காணலாம். கோபுரத்தில் கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்ப வடிவங்களைக் காணலாம். அவற்றுள் மா‎னிட வடிவங்களையும் காணலாம். ‏ இறைவனி‎ன் திருவிளையாடல்கள், அற்புதம் நிகழ்த்திய காட்சிகள்,தேவர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள் அதில் ‏ இடம் பெற்று, விளக்கங்களும் ‏ இருக்கும். பிரபஞ்ச அமைப்பில் ‏இவைகளுக்கும்  இடமுண்டு எ‎ன்பது கோட்பாடுகள். சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்கினம், மக்கள் ‏இனம், தேவர் கூட்டம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் ‏இருக்கிறார்கள், அண்டத்தினுள் ‏ இ‎‎ன்‎னது ‏இருக்கிறது எ‎‎‎‎ன்று எல்லாப் படித்தரங்களிலும் உள்ள அனைத்தும் அங்கு ‏ இடம் பெற்றிருக்கும். ‏இக்கோட்பாட்டை ‏ இராஜகோபுரம் உருவகப்படுத்தி விளக்குகிறது.

இயற்கையி‎‎ன் நடைமுறையி‎ன் புறச்சி‎‎ன்‎னமாகப் பெரிய கோபுரம் அமைந்திருக்கிறது  எ‎‎ன்றால் ‏ இயற்கையில் ‏உள்ளவைகளை எல்லாம் அத‎‎ன் மூலம் விளக்கம் பெற்றுள்ளன.

 இராஜ கோபுரத்தி‎ன் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும். மூ‎‎‎ன்று,  ‏ஐந்து, ஏழு, ஒ‎‎ன்பது, பதினெ‎ன்று எ‎‎ன்ற நிலையில் கோபுரம் வாயில் அமைந்திருக்கும்.அத்தகைய வாயில் தத்துவத்துக்கு விளக்கம் ‏இருக்கிறது.மூ‎ன்று வாயில் உள்ள இராஜ கோபுர ‏இடத்துக்கு ஜாக்கிரத, சொப்பன, சுஷுப்திஎ‎ன்னும் மூ‎‎‎ன்று அவஸ்தைகளை அவை குறிக்கி‎ற‎ன. ஐந்து வாயில்கள் உள்ள ‏இடத்து ஐம்பொறிகளை அவை பெறுகி‎‎‎‎ன்ற‎ன. ஏழு வாயில் உள்ள ‏இடத்து மனம், புத்தி எ‎‎னும் ‏இ‎ன்னும் ‏‏இரண்டு தத்துவங்கள் சேர்க்கப் பெறுகி‎‎‎‎ன்ற‎ன.  ஒ‎‎ன்பது வாயில் உள்ள ‏இடத்து சித்தம் அகங்காரம் எனும் ‏இன்னும்  இரண்டு தத்துவங்கள் சேருகி‎‎ன்ற‎ன.‏ இப்படி நம்முடைய அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்துவங்களுக்குக் கோபுர வாயில் சி‎‎ன்‎னங்களாக அமைந்திருக்கி‎ன்றன.

 ஒரு யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு காணப்படுகிறது. மனிதனுடைய  உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டே திருக்கோவில்கள்  கட்டப்பட்டு, வழிபாட்டுக்கு உரிய அமைப்பாக மதிக்கப்படுகின்றன.

 பல கோயில்கள் அரசர்களால் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளன.ஆகம விதிப்படி ஆலயங்களை அமைத்து,மூர்த்தியை  நிலைப்பெறச் செய்து பூஜை செய்து வந்தால், அங்கே இறைவன் எளிதில் காட்சி கொடுத்து வேண்டும் வரங்கள் அருள்வான் என்பது நம்பிக்கை.சமூக ஒற்றுமையையும், ஒழுக்கத்தையும், கட்டுப்

பாட்டையும்,கலைகளையும் வளர்க்கும் இடங்களாகக் கோயில்கள் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. ஆலயத்திற்கு செய்யும் தொண்டுகள் ஆண்டவனுக்குச்  செய்யும் வழிபாடாகும்.பல  நாயன்மார்களும்,ஆழ்வார்களும், உழவாரப் பணி செய்தும்,நந்தவனம் அமைத்தும்,திருவிளக்கிட்டும் பல வகையில் ஆலயத் தொண்டு செய்து இறையருள் பெற்றுள்ளனர்.

 கொடிக்கம்பம் உள்ளிருக்கும் தெய்வத்தையும்,தெய்வத்தை வணங்குவதால், உண்டாகும்  மகிழ்ச்சியையும்சுட்டுகிறது. கொடிமரத்துக்குக் கீழ் வாகனம் இருக்கும்; இது ஆன்மாவைச் சுட்டு; ஆன்மாவான வாகனம்  தெய்வத்தைப் பார்த்தபடி காணப்படும். கோயிலின் மைப்படுதியாக உள்ள கருவறையில், தெய்வ திருமேனிஇருக்கும்.கருவறை, மனித இதயத்தைக் குறிப்பதாகும்.கருவறையில் இருப்பது போல்,இறைவன் இதயத்தில்இருக்க வேண்டும்.கோவில்களும்,கோயில் கட்டுமானமும் வளர்ச்சி பெறப் பெற,கலை,பண்பாடு,வாழ்வியல்ஆகிய பல்வேறு துறைகளும் கோயில்களோடு இணைப்பட்டுள்ளன.

 குண்டலினி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரமே கொடி மரமாகச் சித்திரிக்கப்பட்டு, ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்தில் காணப்படும் 32 வளையங்கள், மனித உடலின் முதுகுத் தண்டிலுள்ள 32 எலும்புகளைக் குறிப்பதாகும்.  மேலும் மனிதனுடைய முப்பத்து இரண்டாவது வயதில்தான் அறிவுப் பல் முளைக்கிறது.


சித்தர்கள் ஜீவ சமாதி

 சித்தர்கள் ஜீவ சமாதி


                தமிழ் நாட்டுப் பல கோயில்களில்  சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள். 
சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இந்த இறைவுணர்வும்,  ஈர்ப்பு சக்தியும் 
அதிகமிருப்பதை நாம் உணரமுடியும்.

    நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை, ஆகியவை எழும் போது  நம் 
உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும்.
இதனை பீட்டா    அலைகள் என கூறுகின்றனர்.

நாம் ஓய்வெடுக்கும் போது  (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள்
14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் என கூறுகின்றனர்.
அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே  இருக்கும். 
இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.தவ நிலையில் உள்ள
சித்தர்களின் உடலில் இருந்து வெளிப் பட்டு  கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான
கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம்  இதுதான்.

 
பதினெட்டு சித்தர் அடங்கியிருக்கும் ஜீவ சமாதி பீடங்கள்.


தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளன. உதாரணமாக சென்னையில் திருபொற்றீஸ்வரர் ஆலயம்.

அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம்.தண்டையார் பேட்டை திருவருள் குணங்குடி மஸ்தான்

தர்க்கா,மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம்,முண்டகக் கன்னியம்மன்ஆலயம்,திருவான்மியூர்

 மருந்தீஸ்வவரர்

ஆலயம், கொரட்டூர் ஐம்புகேஸ்வரர் ஆலயம்,திருமுல்லைவாசல் மாசிலாமணீஸ்வரர் ஆலயம்,பூந்தமல்லி
அருகில் திருமிழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு ரத்தினசபாபதி ஈஸ்வரர்

ஆலயம், திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம்,மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி,காளகத்தி,
திருப்பதி இவையாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள்.
இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றியும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.

   ஸ்ரீரங்கத்திலும் ஸ்ரீராமானுஜரும்,சீர்காழி,ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் சட்டமுனியும்(சீர்காழி சட்ட

நாதர்),சிதம்பரம் திருவாடுதுறை ஆகிய இடங்களில் திருமூலத்தேவரும் இருந்து அருள்புரிகின்றனர்.                                          திருவாடுதுறை நரசிங்கம் பேட்டைக்குக்கருகில்(மயிலாடுதுறை கும்பகோணம் மார்க்கம்) உள்ளது.
இங்கு தான் சிறப்புமிகு திருவாடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது.இங்கே ஸ்ரீ மாளிகை தேவரின்                                                       சமாதிபீடமும் உள்ளது.

 இதற்கு அருகிலேயே திருவிடைமருதூர் உள்ளது. இங்கு ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

இங்கு ரோமரிஷி,நாரதர் ஜீவ சமாதியில் இருந்து அருள்கின்றனர். இங்கு தல விருட்சமாக உள்ள

மருத மரத்தினருகில் இருந்து வாசி லயம் செய்தால் உணரலாம்.இங்கிருந்து பத்து கி.மீ தூரத்தில் கும்ப

கோணத்தில் உள்ளது. இங்கே கும்பேஸ்வரர் ஆலயம்  உள்ளது.இங்கு அகத்தியப் பெருமான

அருளுகின்றார். இதற்கு அருகிலேயே சாதார வீதி என்ற இருக்கிறது. இங்கே சிவவாக்கியராக இருந்த

திருமிழிசை ஆழ்வாரகிய பெருமான் ஜீவ சமாதி கொடுள்ளார்.

 குடந்தைக்கு அருகில் உள்ள திருப்பனந்தாள் ஆதீன மடாலயத்திலும் சித்தர்கள் ஜீவ சமாதிலிருந்து

அருள்கிறார்கள்.இதற்கு அருகில் திருபுவனம் இருக்கிறது.இங்கு விராலிமலைச் சித்தர்கள் ஜீவசமாதியுள்ளது.

   திருவிடைமருதுருக்கு அருகிலிருப்பது கோவிந்தபுரம். இங்கு ஸ்ரீ போதேந்திராள் ஜீவசமாதியுள்ளது.

ஆடுதுறை,குத்தாலம் கதிராமங்கலத்தில் வன துர்க்கை ஆலயமுள்ளது. இங்கு அகத்தியர் அருள்கிறார்.

மயிலாடுதுறையில் மயூரநாதர் ஆலயத்தில் காலங்கி நாதரும்,மற்றும் பல சித்தகளின் ஜீவசமாதியாகி

உள்ளார்கள். மயிலாடுதுறைக்கு அருகில் தருமபுர ஆதீனம். இங்கும் பல சித்தர்கள் ஜீவசமாதி

ஆகியுள்ளார்கள்.திருக்கடையூரிலும் காலங்கிநாதர் அருள்கின்றார்.

 மாயவரம், சீர்காழி மார்க்கத்தில் வைத்தீஸ்வரன் கோவில் மருந்தீஸ்வரர்,முத்து குமாரசுவாமி ஆலயம்

இருக்கிறது.இங்கே தல விருட்சமாகிய வேப்பமரத்தினடியில் தன்வந்திரியின் ஜீவசமாதியும்,ஆலயத்தினுள்

வசிஷ்டரின் ஜீவசமாதியும் அமைந்து அருள் ஒளி பாய்ச்சுகின்றது. சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில்

கொள்ளிடத்திலிருந்து 4 கி,மீ. தூரத்தில் ஆச்சாள்புரம்.இங்கே சத்குரு ஸ்ரீகாகபுஜண்டர் அருள்கின்றார்.

திருஞானசம்பந்தர் ஜோதியில் கல்ந்த ஆலயம் இங்குள்ளது.வடலூரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ தூரத்தில்

மேட்டுக்குப்பம்.இங்கே அருட்பிரகாசர் இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்த சித்தி வளாகம்

தவறாது கண்டு களித்து அருள்பெற வேண்டிய இடம். நெய்வேலிக்கருகில் விருத்தாசலம் இருக்கிறது.

இங்கே பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி இருக்கிறது.திருவாரூர்,நாகை சாலைக்கருகில் எட்டுக்குடி
 ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தல விருட்சத்தின் அருகில் வால்மீகி ஜீவசமாதியும்,  
இதனருகில் சிக்கல் சிங்கார வேலன் சந்நிதியில் ஸ்ரீ போகநாதரும், வசிஷ்டரும்,மற்றும் பல
சித்தர்களும் அருளாட்சி செய்கிறார்கள்.

அகப்பேய் சித்தர் எட்டுக்குடி,தஞ்சைக்கருகில் திருவையாற்றிலும் அருள்புரிகின்றார்.தஞ்சையிலும்,திருச்சியை

அடுத்த கருவூரார் எனப்படும் கருவூர்த்தேவரும், திருச்சி திருவானைக்காவலில் ஸ்ரீகாகபுஜண்டரும், நாகப்

பட்டினத்தில் நாகை நாதர் ஆலயத்தில் அழுகண்ணரும்,காசிபரும் வரதரும் அருள்புரிகின்றனர்.

 நாகைக்கருகில் பொய்கை நல்லூரில் ஸ்ரீகோரக்க நாதரும், அருகில் புஜண்டவனத்தில் ஸ்ரீ காக

புஜண்டரும்,நவநாதாக்களும் அருள் புரிகின்றனர்.நாகப்பட்டினம் அருகில் நாகூர் மீரான் சாகிப்,முகைதீன்

ஆண்டவர் தர்க்கா இருக்கிறது.மதுரையில் ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் சுந்தரனந்தர் அகத்தியரரும்,

அருகிலே அழகர்மலையில் பதஞ்சலியும்,இராமதேவர்,யாக்கோப்பு என்ற தேரையரும்,அழமுதிர்சோலையில்

ஸ்ரீ போகநாதர்,கமலமுனியும்,மதுரைக்கருகில் திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ போகநாதரும்,மலை உச்சியில்

மச்சமுனியும்,சிக்கந்தர் பாத்ஷா ஒலியுல்லாவும் அருலள்கின்றனர்.

   திருச்செந்தூரில் புண்ணாக்கீசர்,காசிபர் ஆகியோர் மாபெரும் திருவருள் புரிகின்றார்கள். இங்கே

எம்பெருமான் சுப்ரமண்யர் சந்நிதிக்கருகில் இடது புறத்தில் சிறிய கதவுண்டு.இதன் வழியே உள்ளே

சென்றால் குகையினுள் பஞ்சலிங்க வடிவாக ஐந்து சித்தர்கள் இருப்பதையும்,அக்குகைக்குள் சூரிய ஒளி

உள்ளே புகுவதையும் கண்ணாரக் கண்டு அருள் பெறலாம்.

   திருச்செந்துருக்கு அருகில் காயல்பட்டினம் உள்ளது.இங்கு பல சித்தர்களும் அருள் வழங்குகின்றனர்கள்.

தரிசித்து இன்புறுக.கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரத்தில் விஸ்வாமித்திரர்,வசிஸ்டர்,பிருகு முனிவர்

ஆகியோரும்,பழனியில் உள்ளது போல் இங்கு நவபாஷாணத்தால் உள்ள சிவலிங்கமுள்ளது.

சுசீந்திரத்திற்கு அருகில் மருந்து மலை உள்ளது. இங்கு காகபுஜண்டாரும், நவநாதாக்களும் நாகர்

கோயிலுக்கு அருகில் 11 கி.மீ தூரத்தில் திருவணந்தபுரம் செல்லும் சாலையில் தக்கலை உள்ளது. இங்கு

கேட்டதை வழங்கும் இறைவள்ளர் பீர் அப்பா எனப்படும் பீர் முகமது தர்க்கா உள்ளது. இரவு,பகல்

   தங்கிதொழுது கண்கூடாய் அருள் பெறலாம்.இராமேஸ்வரத்தில் பதஞ்சலி முனிவரும், இங்கிருந்து

இராமநாதபுரம் செல்லும் சாலையில் 12கி.மீ. தூரத்தில் கோசமங்கை உள்ளது. இங்குள்ள தலவிருட்சம்

இலந்தை மரத்தடியில் மரத்தடியில் காகபுஜண்டர் ஜீவ சாமதியும், மற்றும் திருக்கழுகுன்ற ஆலயத்தில், உச்சியில் ஸ்ரீ

கோரக்காரும்,காஞ்சிபுரத்தில் கடுவெளிச்சித்தர்,காளங்கிநாதர், மற்றும் பல சித்தர்களும்

இருந்து ஞானச் செல்வத்தை வாரி வழங்குகின்றார்.

 திருக்கழுகுன்ற ஆலய உச்சியில் ஸ்ரீ கோரக்கரும்,காஞ்சிபுரத்தில் கடுவெளிச்சித்தர்,காளங்கிநாதர்,

மற்றும் பல சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்துள்ளார்கள்.

  திருவாரூரில் கமல்முனி,சுந்தரானந்தர், இடைக்காடரும், திருவண்ணாமலயில் தேரையார்,இடைக்காடர்,

கெளதம மகரிஷி,நந்தீஸ்வரர்,சுப்ரமணியர்,அகப்பேய்ச்சித்தர் மச்சமுனி,குகை நமச்சிவாயர்
 மற்றும் எண்ணிடலங்கா சித்தர்களும் ஜீவசமாதியில் இருந்து அருள்புரிகின்றனர்.
திருவண்ணாமலைக் கார்த்திகை மாத பெளர்ணமியன்று உள்ளன்போடு சென்றால்,மானிட வடிவில்
 வந்து இன்றும் சித்தர்கள் காட்சிக் கொடுத்து காத்து இரட்சிக்கின்றனர்.சத்குருநாதர்
ஸ்ரீ காகபுஜண்டரின் ஜீவசமாதிகள் பல்வேறு இடங்களில் இருக்கிறது.

 சேலம், நாமக்கள்(வழி சேந்தமங்கலம்) சாலைக்கருகில் கொல்லிமலை என்னும் சதுரகிரி அமைந்து

உள்ளது. தென்காசிக்கு அருகில் திருகுற்றாலமலை அமைந்துள்ளது. பாபநாசத்திற்கு அருகில் பொதிகை

மலை அமைந்துள்ளது.மதுரை ஸ்ரீ வில்லிபுத்தூர் சாலைக்கருகில்(தானிப்பாறை வழி) சுந்தரமகாலிங்கமலை

என்னும் சதுரகிரி அமைந்துள்ளது. பக்தியோடு,உள்ளுணர்வோடு இம்மலைகளுக்குச் சென்று தங்கி வந்தால்

சித்தர்கலின் அருளை,சிவனருளையும் முழுமையாகப் பெறலாம்.

 கொல்லியில் ஸ்ரீ அறைப்பள்ளீஸ்வரர் ஆலயம்(குகையில் குடிகொண்ட ஈசன்) பெரியண்ணசாமி

ஆலயம், சோரமடையான் ஆலயம், எட்டுக்கை அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களும் காகபுஜண்டர்

குகை,அகட்தியர் குகை,பாம்பாட்டி சித்தர்,புலிப்பாணி குகை,காலங்கிநாதர் குகை,கன்னிமார் குகை,

கோரக்கர் குன்றம் ஆகிய இடங்கள் சித்தர்கள் வழி செல்லும். நாமும் தரிசித்து, தங்கியிருந்து அருள்

பெற வேண்டிய இடங்கள்.

  குற்றாலமலையில் அருள்மிகு செண்பகாதேவி ஆலயமும்,வாலைக்குகை என்று வழங்கும் தெட்ணா

மூர்த்தி குகை, [பொதிகையில்]அகத்தியர் குகை, ஒளவையார் குகை,கோரக்கர் குகை,புஜண்டர் குகை –

[தேனருவியில் உட்புறடத்தில் உள்ளது] பரதேசிப்பாறை ஆகிய தரிசித்து தங்கி அருள் பெற வேண்டியஇடங்கள்.]
---
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை