Friday, January 5, 2024

கோபுர தரிசனம் # 1

 சிங்கப்பூர் ஆலயங்கள்'' எனது அண்மைய நூலிருந்து  ஆலயங்களில் அமைந்துள்ள கோபுரங்களின் அமைப்பு பற்றியும்,, கொடி மரம்,,பலி பீடம், கலசம் போன்றவை ஏன் நம் முன்னோர்கள் அமைத்து வழிப்பட்டார்கள் என்பது குறித்த சிறு விளக்கம்


===============================================
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

நாம் ஏன் கோபுர தரிசனம் செய்யவேண்டும்?


 சிந்து சமவெளி நாகரிகக் காலத்திலும் அதற்கு முன்னரும் இறை வழிபாடு இருந்தது பற்றியும்,

சிவபெருமான் பசுபதி எனும் பெயரில் வழிபடப்பட்டது பற்றியும் குறிப்புகள் உள்ளன. ஆயினும்

கோயில்களின் அமைப்பு எவ்வாறு இருந்தது என்பது பற்றிய செய்திகள் முழுமையாக கிட்டவில்லை.

வரலாற்றுத் தொடக்கமான கி.மு. 6-ஆம் நூற்றாண்டு வரையும் கூட வழிபாட்டு அமைப்பு பற்றி

தகவல் இல்லை.

தென்னிந்தியக் கோயில்களில் காணப்படும் அமைப்பு முறை, திராவிட முறை என்றும் அழைக்கப்படுகிறது.

கி.பி 6-7 ஆம் நூற்றாண்டு தொடங்கி 18 ஆம் நூற்றாண்டு வரை தமிழகம்,கர்நாடகா,ஆந்திரம் உள்ளிட்ட

பகுதிகளில் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்களில் இந்த அமைப்பைக் காணலாம்.ஆகம நுட்பங்கள்,

சிற்ப சாஸ்திரம்,கலை நுணுக்கங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி,கோயிலின் அமைப்பும் தன்னையும்

நிர்மாணிக்கப்பட்டன.கோயில் என்பது மனித உடலிலுள்ள தத்துவ ஆதாரத்திற்கு ஏற்றபடி கோயில்

கட்டப்பட வேண்டுமென ஆகமங்கள் தெரிவிக்கின்றன.

 கோபுர அமைப்பு

     ஆலய நுழை வாயிலில் நம்மை வரவேற்பது இராஜ கோபுரம். இராஜ கோபுரத்தை ஸ்துல லிங்கம் எ‎‎‎‎ன்று கூட கூறுவார்கள். ஆலயத்தி‎ன் உள் இருக்கும் கோபுரங்கள் எல்லாம் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்து இருப்பதால்,நெடுந்தூரத்திற்கு அப்பால்  இருந்தும் கோபுரம் காணலாம். கோபுரத்தையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள். தூரத்தில் இருப்பவர்களுக்கும் இறைவனி‎ன் நினைவு கூறவே கோபுரம் அமைக்கப்பெற்றது. கோபுரத்திம் தளங்கள், கோபுர நிலைகள் என்று அழைக்கப்படும்.

 கருவறை சிறியதாகவும், கோயில்களின் மையப்பகுதியிலும் அமையும்.கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம்,அதற்கு முன்பாக ஸ்தபன மண்டபம், அதற்கும் வெளியே மகா மண்டபம் ஆகியன காணப்படும்.உள்ளிருக்கும்பிரதான தெய்வத்தைப் பொறுத்து வாகனம் இடம் பெறும்.ஒரே கோயில்,ஒன்றுக்கு மேற்பட்ட சந்நிதிகள்இருக்கலாம்.ஆனாலும் மூலஸ்தானம் என்பது பிரதான தெய்வத்தின கருவறைக்கு வழங்கப்படும்.மூலஸ்தானக் கருவறையும், பிற சந்நிதிகளையும் தனித்தனியாக வலம் வரும் அமைப்பு இருக்கலாம்.

 எல்லா  கோபுரஙகளிலும் உயரமானது இராஜ கோபுரம்.கருவறையின் மீது அமைக்கப்படும் சிகரம்,விமானம்எனப்படும். எண்கோண வடிவத்தைக் கொண்தாகவே இவை அமைக்கப்படுகின்றன.இராஜ கோபுரத்தி‎‎ன் அருகில்செ‎‎‎‎‎‎ன்‎று அத‎ன் அமைப்பைக் கவனித்தால் சில அதியசங்களைக் காணலாம். கோபுரத்தில் கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்ப வடிவங்களைக் காணலாம். அவற்றுள் மா‎னிட வடிவங்களையும் காணலாம். ‏ இறைவனி‎ன் திருவிளையாடல்கள், அற்புதம் நிகழ்த்திய காட்சிகள்,தேவர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள் அதில் ‏ இடம் பெற்று, விளக்கங்களும் ‏ இருக்கும். பிரபஞ்ச அமைப்பில் ‏இவைகளுக்கும்  இடமுண்டு எ‎ன்பது கோட்பாடுகள். சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்கினம், மக்கள் ‏இனம், தேவர் கூட்டம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் ‏இருக்கிறார்கள், அண்டத்தினுள் ‏ இ‎‎ன்‎னது ‏இருக்கிறது எ‎‎‎‎ன்று எல்லாப் படித்தரங்களிலும் உள்ள அனைத்தும் அங்கு ‏ இடம் பெற்றிருக்கும். ‏இக்கோட்பாட்டை ‏ இராஜகோபுரம் உருவகப்படுத்தி விளக்குகிறது.

இயற்கையி‎‎ன் நடைமுறையி‎ன் புறச்சி‎‎ன்‎னமாகப் பெரிய கோபுரம் அமைந்திருக்கிறது  எ‎‎ன்றால் ‏ இயற்கையில் ‏உள்ளவைகளை எல்லாம் அத‎‎ன் மூலம் விளக்கம் பெற்றுள்ளன.

 இராஜ கோபுரத்தி‎ன் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும். மூ‎‎‎ன்று,  ‏ஐந்து, ஏழு, ஒ‎‎ன்பது, பதினெ‎ன்று எ‎‎ன்ற நிலையில் கோபுரம் வாயில் அமைந்திருக்கும்.அத்தகைய வாயில் தத்துவத்துக்கு விளக்கம் ‏இருக்கிறது.மூ‎ன்று வாயில் உள்ள இராஜ கோபுர ‏இடத்துக்கு ஜாக்கிரத, சொப்பன, சுஷுப்திஎ‎ன்னும் மூ‎‎‎ன்று அவஸ்தைகளை அவை குறிக்கி‎ற‎ன. ஐந்து வாயில்கள் உள்ள ‏இடத்து ஐம்பொறிகளை அவை பெறுகி‎‎‎‎ன்ற‎ன. ஏழு வாயில் உள்ள ‏இடத்து மனம், புத்தி எ‎‎னும் ‏இ‎ன்னும் ‏‏இரண்டு தத்துவங்கள் சேர்க்கப் பெறுகி‎‎‎‎ன்ற‎ன.  ஒ‎‎ன்பது வாயில் உள்ள ‏இடத்து சித்தம் அகங்காரம் எனும் ‏இன்னும்  இரண்டு தத்துவங்கள் சேருகி‎‎ன்ற‎ன.‏ இப்படி நம்முடைய அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்துவங்களுக்குக் கோபுர வாயில் சி‎‎ன்‎னங்களாக அமைந்திருக்கி‎ன்றன.

 ஒரு யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு காணப்படுகிறது. மனிதனுடைய  உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டே திருக்கோவில்கள்  கட்டப்பட்டு, வழிபாட்டுக்கு உரிய அமைப்பாக மதிக்கப்படுகின்றன.

 பல கோயில்கள் அரசர்களால் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளன.ஆகம விதிப்படி ஆலயங்களை அமைத்து,மூர்த்தியை  நிலைப்பெறச் செய்து பூஜை செய்து வந்தால், அங்கே இறைவன் எளிதில் காட்சி கொடுத்து வேண்டும் வரங்கள் அருள்வான் என்பது நம்பிக்கை.சமூக ஒற்றுமையையும், ஒழுக்கத்தையும், கட்டுப்

பாட்டையும்,கலைகளையும் வளர்க்கும் இடங்களாகக் கோயில்கள் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. ஆலயத்திற்கு செய்யும் தொண்டுகள் ஆண்டவனுக்குச்  செய்யும் வழிபாடாகும்.பல  நாயன்மார்களும்,ஆழ்வார்களும், உழவாரப் பணி செய்தும்,நந்தவனம் அமைத்தும்,திருவிளக்கிட்டும் பல வகையில் ஆலயத் தொண்டு செய்து இறையருள் பெற்றுள்ளனர்.

 கொடிக்கம்பம் உள்ளிருக்கும் தெய்வத்தையும்,தெய்வத்தை வணங்குவதால், உண்டாகும்  மகிழ்ச்சியையும்சுட்டுகிறது. கொடிமரத்துக்குக் கீழ் வாகனம் இருக்கும்; இது ஆன்மாவைச் சுட்டு; ஆன்மாவான வாகனம்  தெய்வத்தைப் பார்த்தபடி காணப்படும். கோயிலின் மைப்படுதியாக உள்ள கருவறையில், தெய்வ திருமேனிஇருக்கும்.கருவறை, மனித இதயத்தைக் குறிப்பதாகும்.கருவறையில் இருப்பது போல்,இறைவன் இதயத்தில்இருக்க வேண்டும்.கோவில்களும்,கோயில் கட்டுமானமும் வளர்ச்சி பெறப் பெற,கலை,பண்பாடு,வாழ்வியல்ஆகிய பல்வேறு துறைகளும் கோயில்களோடு இணைப்பட்டுள்ளன.

 குண்டலினி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரமே கொடி மரமாகச் சித்திரிக்கப்பட்டு, ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்தில் காணப்படும் 32 வளையங்கள், மனித உடலின் முதுகுத் தண்டிலுள்ள 32 எலும்புகளைக் குறிப்பதாகும்.  மேலும் மனிதனுடைய முப்பத்து இரண்டாவது வயதில்தான் அறிவுப் பல் முளைக்கிறது.


No comments:

Post a Comment