Friday, January 5, 2024

சித்தர்கள் - 1

 சித்தர்கள்

**********                    
புலன்களை அடக்கி அகக்கருவிகளுள் ஒன்றாகிய 'சித்தத்தை' சிவ பரம்பொருளிடம் வைத்து மன ஓட்டத்தைத் தடுத்தவர்களே சித்தர்கள். சித்தர் இ இஇங்கேயே சிவலோகம் தா¢சித்தவர்கள் என்பார்.

 

திருமூலர். எட்டுவகை யோக நெறியியல் பயின்று எண்வகை சித்திகளை அடையப்பெற்றவர்கள். அவற்றை 'அட்டமா சித்திகள்' என்பர். இதனை உலக நன்மைக்கும் பொது மக்களின் மேன்மைக்கு பயன்படுத்துவார்களே தவிர தங்களது சுயதேவைகளை நிறைவு செய்யவோ அல்லது தங்களது விளம்பரப்படுத்திக் கொள்ளவோ முற்படமாட்டார்கள்.  

   மனித வாழ்வு நிலையற்ற ஒன்று.ஆயினும் இதனை நீண்டதாக ஆக்க வல்ல  'ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்கும்' தன்மையினைக் கண்டு தெளிந்து போற்றிவர்கள் சித்தர்கள், மனித யாக்கையில் வாழுகின்ற மாக்களை மனித பண்புள்ள மக்களாக மாற்றி,பின்னர் அவர்களுக்கு அமர நிலை தரவேண்டும் என்ற பரந்த நோக்கம் கொண்டவர்களே சித்தர்கள். இ இயற்கையோடு ஒன்றியது.வையத்தை வாழ வைக்கும் குறிக்கோளே அவர்களுடையது.

 

  சித்தர்கள் ஒரு குறிக்கோளை நிறைவேற்றவே மானிடப் பிறப்பு பிறந்து வாழ்வார்கள்.

தங்களது குறிக்கோள் நிறைவேறும் வரை இ இந்த உடலில் உயிர் தங்க வேண்டும் என்பதற்காக உடலைப் பேண விழைந்து நீண்ட நாள் வாழ மருந்துகள் தயார் செய்தனர்.  இந்த உடல் ஐந்து பொருட்களால் ஆனது.

 

[பஞ்ச பூதங்கள்: நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்]

 

 எனவே,இ இயற்கையாகவே அமையப் பெற்ற இவ்வுடல் நோயினால் வாடாமல் தவிர்க்க

இ இயற்கையில் விளையும் மூலிகைகளைக் கொண்டு, மந்திரங்களைச் சொல்லி அவற்றைப் பறித்து, பக்குவப்படுத்தி மருந்து தயா¡¢த்தனர். முதலில் நோயின் தன்மையை ஆராய்ந்து, மூலிகைகளின் தன்மையை ஆராய்ந்து இ

இன்ன  இஇன்ன வகை மூலிகைகளே மருந்து என தீர்மானித்தனர். இஇ இதில் சிறப்புத்தன்மை என்னவென்றால் உடனடி நிவாரணம் பெறுவதைவிட நிரந்தர நிவாரணம் என்பதாகும்.

              

 'யாம் பெற்ற இன்பம் பெறுக  இவ்வையகம்' என்பதே சித்தர்களின் அடிப்படைக் கோட்பாடு. மந்திர நூல், இரசவாத நூல், யோகநூல், புவி இயல், தாவர  இஇயல், வான சாத்திரம் போல் சித்த வைத்தியமும் சிறப்பு வாய்ந்த மருத்துவ இ இயல்.இ இதனை ஒரு சித்தர் தனக்கு தொ¢ந்த வைத்திய முறைகளை முறையாகத் தமது சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்து இந்த வைத்திய முறை நசித்துவிடாமல் தொடர்ச்சியாக நிலைபெற காத்து வருகிறார்கள்.

              

 புலிப்பா, போகர் போன்ற சித்தர்கள் ஆகாய மார்க்கமாக சீனா போன்ற நாடுகளுக்கு

சென்று மூலிகைகளை கொண்டு வந்து சித்தர் வைத்திய பரம்பரையைத் தோற்றுவித்தனர். மூலிகைகளின் வகைகள்,  மருத்துவப் பண்புகள்,பக்குவப்படுத்தும் முறைகள்,பயன்கள்,உட்கொள்ளும் முறை,பத்தியம் போன்றவற்றைப் பாடல்களாகப் பாடினர். மக்கள் பேசுகின்ற மொழியிலேயே அவர்களைக் கவரத்தக்க வகையில் கும்மி,  சந்தம்  போன்ற எளிய இ இலக்கிய வடிவங்களில்,எளிமையான பேச்சு வழக்கில் உள்ள சொற்களைப் பயன்படுத்தியே பாடினர்.அதில் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பொருளும்; ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் வேறு ஒரு பொருளும் அமைந்திருக்கும்.காரணம்,அவற்றில் ஆர்வம் தேர்ச்சி பெற்றவர்கள் அவற்றின் பொருளை நன்கு பு¡¢ந்துகொண்டு வைத்தியம் செய்ய வகை செய்தனர்.இ இதனால் உடலை நோய் நொடிகளிலிருந்து காக்கும் வண்ணம் கண்டனர். இதனை குரு- சீடன் முறையில் பரவியது. ஐயப்பாடுகளை தெளிவுபடுத்திக் கொள்ள சீடன் குருவின் உதவியை நாடியும்,தமது சிகிச்சை முறைகளை சீடர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டும்  இஇ இந்த சித்தர் வைத்திய முறை நன்கு பரவியுள்ளது.

  

      சித்தர்களின் தத்துவத்தை அவர்களுடைய வழிபாட்டு முறையை, அவர்களுடைய துதி இ   இலக்கியத்தை,அவர்களுடைய ஞானப் பாடற் களஞ்சியங்களை, அவர்களுடைய  யோக நூல்களை அவர்கள் வழிவழியாக வழங்கி வருகிற பல மெய்ஞ்ஞான நுட்ப இரகசியங்களை எழுத்திலக்கியத்தைக் கொண்டும், வாய்மொழி இ இலக்கியத்தைக் கொண்டும், சித்தர் நெறியை பயிற்சி முறைகளும் குரு- சீடர் முறையில்தான் வந்துள்ளது.

 

சங்க காலத்துக்கு முன்பு தொடங்கி, வரையறை செய்து நாம் தெளிவாகக் காணக்கூடிய வரலாறு பொதிந்த  இஇ இரண்டாயிரம் ஆண்டுகளாக நமது தமிழகத்தில் உலவி வருகிற சித்தர்களின் தமிழிலே ஒரே பண்பாடு கூடிய தனித்தன்மை ஒருமைப்பாடு, மாறுபடாத கோட்பாடு காணலாம்.  இஇஇந்த பண்பு இ இஇடையீடு இ இ இல்லாததாய், முறிவு காணாத தொடராய், ஒரு ஜிவநதியாய், வற்றாத ஞான ஊற்றாய்ச் சுரந்து, பொங்கி இ இ இன்றும் உயிராய் உலா வருகிறது. காரணம் அறிவுகொண்டு ஒப்புக் கொள்ளவேண்டிய, விஞ்ஞான மெய்ஞ்ஞானம் அடங்கியுள்ளது.

 

   சித்தர்கள் ஆலய வழிபாட்டை அறவே வெறுத்தனர்.சடங்குகள்,வேள்விகள், விழாக்கள் அனைத்தும் தேவை அற்றனவாக் கருதி வெறுத்தனர். காரணம் உடம்பினுக்குள்ளே உறுபொருளைக் கண்டு பேரானந்தத்தில் திளைப்பதே வாழ்வின் பயன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். சாத்திரங்கள் ஓதுவதைச் சாடினர். உடலின் உள்ளே உறையும் நாதனை உணர்வதை விட்டுவிட்டு நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தி மொனமொனக்கும் மந்திரங்கள் தேவையில்லை என்று கருதினர். மூலாதாரத்தில் மூண்டெழும் சக்தியை யோக முறையில் எழுப்பி ஆதாரங்களில் செலுத்தி பேரானந்தம் அடையும் போதே இ இறைவனை அகத்தில் காண முடியும்.எனவே முகத்தில் கண் கொண்டு கண்டதைக் கண்டு வாழ்நாளை வீணாக் கழிப்பதை வெறுத்தனர்.

 

  எனவேதான் நரை திரை மூப்பு என்பவை உடலை வதைக்காமல் இ இருக்க, இ இஇயற்கை வைத்திய முறையைக் கொண்டு உடலைப் பேணி அதன் மூலம் உயிரை பேணினர்.

இ இந்த பழந்தமிழ் நாட்டில் தோன்றி சித்தவைத்திய முறை தமிழர்கள் சென்ற இ இடமெல்லாம்

பரவியது.படகுகளிலும், கப்பல்களிலும், தோணிகளிலும் மூலமாகவும் பிறநாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் நோய்களைப் போக்க சித்த வைத்தியம் [அல்லது நாட்டு வைத்தியம்] பயிற்சி பெற்றவர்கள் அந்தந்த இ

இடங்களில் தனக்கு தொ¢ந்த சிகிச்சை அளிக்க ஆரம்பித்து இஇந்த சித்த வைத்தியம் நசித்துவிடாமல் காப்பாற்றி வநதனர்.அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலைகளுக்குக்கேற்பவும், கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டும் வைத்தியம் செய்யத் தலைப்பட்டனர்.

 

 

  சித்தர்களின் சிகிச்சை முறையில் நோய்க்கு நிரந்தர தீர்வு காண்பதுதான் குறிக்கோள். தற்கால நிவாரணம் என்பது கிடையாது.முதலில் நோயின் ஆரம்பம், அதன் தன்மை, உடலை அது பாதித்திருக்கும் விதம், உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முதலியவற்றை நாடியின் மூலம் கண்டுபிடித்தனர்.வாதம்,பித்தம், கபம் போன்றவற்றின் அளவு ஆகியவற்றின் அளவு கண்டுபிடித்த பின்னரே சிகிச்சை முறையை ஆரம்பிப்பார்கள், ஏனெனில் வாதம்,பித்தம்,கபம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றோ, அல்லது அனைத்துமோ உடலில்  இஇஇருக்க வேண்டிய அளவுக்கு மீறி இ இஇருந்தால் நோய் ஏற்படும்.எனவே, இ இவற்றின் அளவைத் தொ¢ந்து கொண்ட பின் எது அதிகா¢த்திருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சை அளிப்பார்கள். மூலிகைச்சாறு, சூரணம், மாத்திரை என்று பல்வேறு முறைகளில் சிகிச்சை நடைபெறும்.

நோய் மீண்டும் பரவாமல் இ இருக்கவேண்டியதின் அவசியத்தின் காரணமாக உணவில் கட்டுப்பாடு, உப்பு, புளி, காரம் ஆகியவற்றைக் குறைத்தல் போன்ற சில அவசியமான கடும் பத்தியத்தினை கடைப்பிடிக்க வேண்டி இ  இருக்க வரும்.

                                                 
" முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம்பொருளே
 பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே"
     

  இ இறைவனது  இ இயல்பைப் பெற்ற சித்தர்களுக்கு காலவறை  செய்யமுடியாது.அறமாவது,பாவம் அனைத்தும் பற்றறுப்பதும்; இஇருமை இ இஇன்பம் எய்துவிப்பதும்; அன்பு,அருள் ஆகிய இ இஇறைமைக் குணங்களின் முதிர்வு ஆகும்.

   

    'சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
          சாத்திரக் குப்பையும் தணந்தேன்...'

  

'  இஇயல் வேதாகமங்கள் புராணங்கள் இ இதிகாசம்

       இஇவை முதலா  இஇந்திர சாலங்கள்.... '

              

   "  கலையுரைத்த கற்பனையே நிலைனெக் கொண்டாடும்

         கண்மூடி வழக்கமெலாம் மண் மூடிப்போக...." 

 

என அதன் வழி மக்கட் சமுதாயத்திற்கும் மேன்மைக்கும் ஆற்றியுள்ள தொண்டு மிகப் பொ¢யது. சமுதாயத்துடன் சேர்ந்தும் சேராமலும் தாமரை இலை நீர் என வாழ்ந்த இவர்கள் உண்மை இயல்புகளை அவற்றைப் பயன்படுத்தும் முறையினையும் அறிந்து நூல்களை எழுதி இலக்கிய வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க தொண்டு செய்துள்ளனர்.மனித சமுதாயம் ஏதேனும் ஒருவகையில் பயன்படும் வகையில் வாழ்க்கையின் உண்மையோடு இ  இஇணைந்தாக  இஇஇயற்றப்பட்டு, காலம் கடந்து வாழும் இ இலக்கியம் சித்தர் இ இலக்கியம்.

   தமிழில் இ இஇருக்கும் இஇலக்கியங்களை காலமுறைப்படி பார்த்தால்,ஒவ்வொரு வகையான

இ இலக்கியம் ஒவ்வொன்றும் ஒரு அமைப்போடும் பயனோடும்  இஇருக்கும்.பாடலாக அல்லது அவர்கள் காலத்தவரால் இயற்றப்பட்டதாக இ இருக்கும். ஆனால், சித்தர் பாடல்களில் நமக்கு கிடைக்கும் இ இஇலக்கியம் அனைத்தும் எந்த துறையைச் சார்ந்ததாக இருந்தாலும், அனைத்தும் மக்கட் சமுதாயத்திற்கு தேவையானதாக  இருக்கும்.

              

 ஆனாலும், " ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் " என்ற தன் மனப்பக்குவம்

பெற்றவர்க்கே விளங்கும்.காரணம் தீயவர் கையில் போய் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்க்காக.ஆகவே அவை மறைக்கப்பட்டு,மறை என மறைவாகவே வைக்கப்பட்டன.எனவே மறை எனக்குறி வேதமாயிற்று.ஞானம் என்னும் பொருளுடைய வித் என்பதே  வேதத்தின் அடிச்சொல் என்னும் கருத்தும் நிலவுகிறது? மூடிமறைத்தல் என்னும் பொருளுடைய வேய்தல் என்பதே வேதமாயிற்று.

              

 செவிவழியாக வந்த இந்த சித்தர் கருத்துக்களை அண்மைக் காலத்தில் உலகுக்கு உணர்த்த வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட சிலர் அப்பாடல்களை வெளிக் கொணர்ந்துள்ளனர். எனவே அவர்கள் பாடலைகளை எளிமையாக,புதுமை சொற்களளாக, பேச்சு வழக்கு சொற்களாக எல்லோரும் பு¡¢யும்படி

அச்சேற்றியுள்ளார்கள்.அல்லது இஇப்படியும் கூறலாம். சித்தர்கள் காலத்தால் முன்னும்,பின்னும் போகும் ஆற்றல் உள்ளவர்கள். ஆகவே, சில பல ஆண்டுகளுக்கு பின்னர் வரும் மக்களின் மொழி நடையைக் கொண்டு, அவர்கள் பாமரமக்களைச் சேர்ந்தே இ இஇருந்தமையால் மொழியும்,நடையும் எளிதாக அமைந்தது என்று கூட கூறலாம்.

             

  எப்படி இ இஇருப்பினும் அவர்கள் பழமையான மரபாக வந்த இ இலக்கியவடிவத்தை- புலவர்கள்,கற்றவர்கள் மட்டுமே அறிய கூடிய  இஇலக்கிய வடிவத்தை மிகச் சாதாரண மக்களும் எளிதில் விளங்ககூடிய புதிய வடிவத்தில் தந்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

 

   பல சித்தர்கள் பல  இரவு பகல்களில் காடு,மேடு,மலை என்று ஊண் உறக்கமின்றி கண்டு பிடித்த வைத்திய முறைகள் இஇன்றைய நிலையில் ஓரளவு மதிப்பு குறைந்துதான் வருகிறது.காரணம், மக்கள் உடனடி நிவாரணம் பெற வேண்டி மேலை நாட்டு சிகிச்சை முறையைப் பின்பற்றத் தொடங்கி விட்டனர்.

 

 மற்றொன்று, அரைகுறையாக்த் தொ¢ந்தக் கொண்டு பலர் சித்த வைத்திய முறையைச்

சா¢யாக செய்வதில்லை.பொருளுக்கு ஆசைப்பட்டு ஒரு சிலர் நெறி முறை தவறி சிகிச்சை செய்வதனால் விபா£த விளைவுகள் ஏற்பட மக்கள் இம்முறையில் நம்பிக்கை  இஇழக்க தொடங்கினர். 

 

மேலும் பரம்பரையாகத் தொடந்து வந்த இந்த வைத்திய முறை ஒரு தலைமுறையில் ஒருவர் வைத்திய துறையை விடுத்து வேறு ஒரு துறைக்குச் சென்றுவிடுவதாலும் இம்முறை தொடர்ச்சி விட்டுப் போகிறது.

 சித்தர்களின் வைத்திய முறை செய்யுள் வடிவில் கடினமான தமிழில் உட்பொருள் நிறைந்ததாக உள்ளன.அவற்றை எளிமைப்படுத்தி பு¡¢ந்து கொள்ளும் ஆற்றல் மிக்க இளைய தலைமுறையினர் குறைந்து வருகின்றனர்.எனவே சிகிச்சை முறையும் ஆதரவு குறைந்து காணப்படுகிறது.

                                              

  சித்தர்கள் இ இயற்றிய இந்த நூல்களை எல்லாம் பல்கலை கழகத்தினர் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். ஆராய்ந்ததை உலக மொழிகளில் கொடுத்திருந்தால் நாம் உலகத்துக்குப் பல துறைகளில் வழிகாட்டிகளாக இ இருந்திருப்போம்.இது நம் நாட்டுக்கும்,உலகத்துக்கும் பொ¢ய நஷ்டமாகும்.
      

  அறிவியலில் கருச்சிதைவு [Neuclosr fission] என்னும் முறையின்படி ஒரு

பொருளின் கருவைச் சிதைப்பதன் மூலம் அப்பொருளை வேறு பொருளாக ஆக்கலாம் எனக் கண்டுள்னனர். எனவே ஒரு பொருளைப் பற்றிய அறியவும்,அப்பொருளின் கருவைப்பற்றிய அறிவும் பெற்றவர்கள்  எப்பொருளையும் வேறு ஒன்றாக மாற்றுதல் கூடும்.

   இஇதேபோல் மனிதர்க்கு இ ஈன்றியமையாக் கருவாக இ இருப்பது  DNA [De[s]

oxyriboncleic] எனப்படும் உயிர்ப்பொருளாகும். இ இதுவே இயல்புகளையும், குணங்களையும் நிர்ணயிருப்பது என்பது அறிவியலார் கூற்று.

  எனவே,ஒவ்வொரு உயி¡¢ன் கருவைப் {DNA} பற்றியதெளிந்த அறிவு பெற்றவர்கள் கருவை{DNA} மாற்றுவதன் மூலம் வேண்டிய வடிவங்களில் மாற்றிக்கொள்ளுதல் கூடும்.பா¢சோதனைக் குழாய் [Test tube] செயற்கை முறையில் குழந்தையை உண்டாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் அறிவியலுக்கு இ இந்த தத்துவம் நம் சித்தர் பல்லாண்டுக்கு முன்பே கண்டுபிடித்துள்ளனர். இஇந்த தத்துவம் அவர்களுக்கு விளங்காததாகவோ, புதிதாகவோ இ இருக்க முடியாது.

 
   நாம்தான்,  "தங்க சுரங்கத்தின் மேல் குடிசை போட்டுக் கொண்டு  இஇன்னும் வாழ்கிறோம்.
            

 எனவே பாரம்பா¢யம் மிக்க, தொன்மையான வளம் கொண்ட சித்தர் வைத்தியம் முறைக்குப் புத்துயிர் ஊட்டுவது தமிழர்களாகிய நம் தலையாய கடமையாகும்.

 நன்றி, வணக்கம்.

 அன்புடன்,
கிருஷ்ணன்.


--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

காளமேகப் புலவர்

 காளமேகப் புலவர்

தமிழ்ப்புலவர்களின் வாழ்க்கை வரலாறுகள்சுவையான புனைக்கதைகளாவே தமிழ்நாட்டில் நிலவுகின்றன.
கற்பனையுடன் தெய்வீகத்தையும் புலவர்களின் வாழ்வில் கலந்துவிடுவதால் அவர்தம் பெரிதும்
போற்றப்படுகின்றனர்இத்தகைய புலவர்களின் கால கட்டம் குறித்து அறிஞர்களிடையே கருத்திசைவு
இருப்பதாகத் தெரியவில்லைகாளமேகப் புலவர் இதற்கு விதிவிலக்கு அல்ல.

திருக்குடந்தைப் பதியில் பிராமணர்மரபில் தோன்றியவர் இவர் என்று கூறுவார் உண்டு.                        இல்லை அந்த ஊரில் பிறந்த சோழியப்பிராமணர் என்று கூறுவோரும் உண்டு.                                         வேறு சிலரோ காளமேகப்பெருமாள் என்னும் கோயில் உள்ள பாண்டி நாட்டுத்                                     திருமோகூரில் பிறந்தவர் என்றும் கூறுவர்கோயிலில் பரிசாரராக இருந்த ஒருவரின்
மகன் இவர் என்று அவர்கள் கூறுகின்றனர்இதற்கு ஆதாரமாக இவர் மோகூர்ப்                                 பெருமாளைப் பாடியிருப்பதையும் அப்பெருமாளின் பெயர் காளமேகமாகவும்                            இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் காளமேகம் என்பது இவரின் இயற்கைப் பெயராக                             இருந்திருக்கவேண்டும்ஆனால் இதனை மற்றவர்கள் ஏற்பதில்லை.

தேவியின் அருளுக்குப்பின்னரே ஆசுமதுரம் சித்திரம் வித்தாரம் என்ற கவிதைகளின் நான்கு              வகைகளையும் கார் மேகத்தைப்போல பொழிந்ததால் அவருக்குக் காளமேகம் என்ற பெயர்            பின்னர் ஏற்பட்டது என்பர்அப்படியாயின் அவரின் இயற்பெயர்தான்என்ன?
வரதா என்பதாக இருக்கலாம் என ஒரு பாடல் வழி அறிய முடிகிறது.                                                                                                                                

அப்பாடல் இதுதான்:
"
வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசு கவிகாள மேகமே - பூசுரா
விண்தின்ற வெவ்வழலில் வேவுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்"

இவரின் இளமைப் பருவம் அப்படி ஒன்றும்சிறப்பானதாக அமைந்ததாதக் கூறமுடியாது.                          வேலை தேடிச் சென்ற இவருக்குக் கடைசியில் ஸ்ரீரங்கத்தில் கோயில் பரிசாரகர் பணிகிடைத்தது.


 

சித்தர் வழியில் – போகர் - 2

 சித்தர் வழியில்  போகர் - 2


சித்தர் பெருமக்களே! மாண்டவர்களை மீளச்செய்யும் மந்திரத்தை நீங்கள் எனக்கு அருள

வேண்டும்.’ என்று மண்டியிட்டு வேண்டினார்.

 

இயற்கைக்கு மாறாக செயல்பட நினைக்கும் உனக்கு தெய்வ குற்றம் வந்தடையும்

என நவசித்தர்கள் வெகுண்டார்கள். இதனால் நீ கற்ற வித்தைகள் யாவும் மறந்து

போகாட்டும் ! என ஒரு சித்தர் சாபமிட்டார்..

 

’’மக்கள் தொண்டாற்றுவதும்இறைவனின் படைப்பின் மீது இரக்கம் கொள்வது பாவம்

என்றால்... நான் மகிழ்ச்சியுடன் இந்த சாபத்தினை ஏற்று இங்கேயே இறந்துவிடுகிறேன்

என்றார். இதனை கேட்டு சித்தர்கள் திடுக்கிட்டுபோகர் மீது இரக்கம் கொண்டனர்.


போகரேகாயகல்ப முறைகளை நன்கு அறிந்தவன் நீ. இறந்தவர்களை உயிர்பிப்பது

சரியல்ல. இயற்கைக்கு மாறானது. ஆண்டவனின் அருள் பெற்றவர்களே முடியும். ஆனால்,

அதற்கு மாற்றாக தகுதியுள்ளவர்களை தேர்தெடுத்து அவர்களுக்கு நீண்ட நாட்கள் வாழும்

காயகல்ப முரைகளை சொல்லிக்கொடு.அவர்களை நீண்ட நாள் வாழவழிவகைகளை செய்.

உன் மீது கொண்ட அன்பினால் சொல்கிறோம்என மேலும் சில காயகல்ப முறைகளை

விளக்கினார்கள்..

 

இதுவரை தான் அறிந்தவற்றைஅனுபவங்களை அத்தனையும் நூல்களாக தொகுக்கத்

தொடங்கினார். தன் சீடர்களுக்கும் போதித்தார்.

இறவாமல் இருந்தால் பிறவாமையும் உறுதி. ஆகவேதான் சித்தர்கள் பிறவாமையை

இறைவனிடம் வேண்டி நின்றனர்.

                ’நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடு போய்

                  எல்லை வாசல் கண்டபின் இனிப்பிறப்பதில்லையே

 என சிவ வாக்கியரும் உபதேசித்தார்.

 

மண்ணில் வீழ்ந்து அழிந்து போகக் கூடிய உடலை அழியா கல்ப தேகமாக்கி காலம்

கடந்து வாழ்ந்து வந்த சித்தர்களின் அருட்கொடையாக போகர் எண்ணற்ற வைத்திய

நூட்களை எழுதினார்.

 

இலகிமா சித்து என்பது  கனமான இந்த உடலை இலகுவான பஞ்சு போலாக்குவது.

இந்த சித்தியால் புவி ஈர்ப்பு விசையை விஞ்ச இயலும். நினைத்த மாத்திரத்தில் தன்

உடல் எடையை குறைத்து இலகுவாக்கி பஞ்சு போல் சித்தர்கள் ஆகாயத்தில் சஞ்சரிக்க

முடிகிறது. மனித உடல் ஒரு அற்புதம் வாய்ந்தது. இந்த உடல் மேல் நோக்கி நகரக்

கூடிய தன்மைக்கு ஆதாரமாக இருக்கிற உதானன்(காற்று) எனும் வாயுவை வெற்றி

பெற்றால் இலகிமா சித்தியாகும். ஆகாயம் உடல் இந்த தொடர்பை இவ்வகையில்

சம்யமம் செய்யும் போது இந்த வித்தை கைகூடுகிறது.நமது உடல் இலேசாகிறது.

 

ஆகாய வானில் நடப்பதுபடுப்பதும்நிற்பதுமான ககனப் பயிற்சில் போகர் வல்லவராக

திகழ்ந்தார். இந்த இலகிமா சித்தியால் போகர் அவ்வப்போது சீன நாட்டுக்கு நினைத்த

நேரத்தில் சென்று வந்தார். சீனாவில் வாழ்ந்த காலத்தில் சீன மக்களுக்கு இவ்வகை

சித்துக்கள் மூலம் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறார். கடற்பயணம் செய்ய நீராவிக்

கப்பலையும்பறக்கும் இயந்திரம் ஒன்றையும் உருவாக்கித் தந்துள்ளார்.

 

சித்த இரகசியங்களை பொதுவுடமை யாக்குவதில் அலாதி ஆர்வம் கொண்டவராய் போகர்

இருந்த காரணத்தால் பல்வேறு சங்கடங்கள் இருந்தன.

 

மூத்த சித்தரான சிவபெருமான் ஒருமுறை சவுக்காரத்தின் பெருமையை அன்னைக்குச் சொல்ல,

அன்னை அதனை நந்திக்கு உபதேசித்தாள். நந்தி திருமூலருக்குக் கூறி அவர் அதனை காலாங்கி

நாதர்ருக்கு உபதேசிக்க அவர் அதனை போகருக்கு இரகசியமாய் உரைத்தார். ஆனால்போகர்

சவுக்காரத்தின் இரகஸ்சியம் மிகக் கடினமானதாகவும் யாரும் எளிதில் புரிந்துகொள்ள

இயலாமற் இருந்ததால் எல்லோரும் அறிந்துக்கொள்ளட்டும் என்று எளிமையாக

வெளிப்படையாக மூடுமந்திரமின்றி எழுதிவிட்டார்.

 

இப்படி வெளிப்படையாக எழுதிவிட்டதை கண்டு மற்ற சித்தர்கள் யாவரும் அலறினர்.

இதனை கூர்மமுனிவர் அகத்தியரிடம் புகார் செய்தார்.. அகத்தியர் இதற்கு தீர்ப்பு செல்ல

வேண்டியர் கைலாகநாதர். அவரிடமே முறையிடுவது சரியான வழி என்று கைலாயம்

சென்றனர்.

 

’’அய்யனே! போகமுனிவர் சித்தர்களுகெல்லாம் பெருந்துரோகம் இழைத்துவிட்டார்.

வெடியுப்பு, இரவாதம்யோக மார்க்கம்ஞானமார்க்கம் போன்ற இரகசியங்களை வெளிப்

படையாக வெளிப்படுத்தி இருக்கிறார்’’, என புகார் செய்தனர்.

 

  ‘போகா! நீ பூனைக்கு வேதங்களை உபசேத்தித்துள்ளாய்.விதிப்படி வறுமையில் துன்பப்

பட்டவர்களுக்கு அவர்களின் துயரை நீக்கியுள்ளாய். இறந்தவர்கள் உயிர்ப்பிக்க துடிக்கிறார்.

நான் பார்வதி தேவிக்கு உபதேசத்த தீட்சை விதியோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு

காண்டமாக எழுதியிருக்கிறாயாமே!’  என சிவபெருமான் கேட்டார்.

 

--
எளியெனின் நன்றிகள்,
வணக்கம்
அன்பொடு,

கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam

ஆறாம் திருமுறை 042 திருநெய்த்தானம்

 திருநாவுக்கரசர்!                                                         திருச்சிற்றம்பலம்!                            சிவாயநம! 

   

"
தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்
    பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
அனைத்துலகும் ஆளலா மென்று பேசும்
    ஆங்காரந் தவிர்நெஞ்சே
 
"

 

"நெஞ்சே ! உரிய காலம் முடிந்த பின் சிறிது நேரமும் தாமதிக்காமல் உயிர்விடுத்து நீங்கும் இவ்வுடம்பை மேம்பட்ட பொருளாகப் பெரிதும் கருதி நம் புத்தியினாலே இந்த உலகம் முழுதையும் நமக்கு அடிமைப்படுத்தலாம் என்று பேசும் தன் முனைப்பை நீக்கு"


 

 

                                                                                   ஆறாம் திருமுறை  

                                                    

                                                                                                  042 திருநெய்த்தானம்  

 
 
 

பாடல் எண் : 5

 

தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்
    பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
அனைத்துலகும் ஆளலா மென்று பேசும்
    ஆங்காரந் தவிர்நெஞ்சே
 யமரர்க் காக
முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று
    முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்த பெருங் கருணையன்நெய்த் தான மென்று
    நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.


 

பொழிப்புரை :

 

நெஞ்சே ! உரிய காலம் முடிந்த பின் சிறிது நேரமும் தாமதிக்காமல் உயிர்விடுத்து நீங்கும் இவ்வுடம்பை மேம்பட்ட பொருளாகப் பெரிதும் கருதி நம் புத்தியினாலே இந்த உலகம் முழுதையும் நமக்கு அடிமைப்படுத்தலாம் என்று பேசும் தன் முனைப்பை நீக்கு. தேவர்களுக்காகப் பகைத்து வந்த மதில்கள் மூன்றும் அழியுமாறு முன்னொரு காலத்தில் விரைவாகத் தூக்கிய வில்லை வளைத்து அம்மதில்களைத் தீக்கு இரையாக்க நினைத்துச் செயற்பட்ட பெரிய கருணையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும்.  
 
 
 
 
 
    

பாடல் எண் :  6

 

மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி
    வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை    கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப
    அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று
    நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.


 

பொழிப்புரை :

 

நெஞ்சே ! துன்பமே விளைக்கின்ற இந்த உடலில் வாழும் வாழ்வு நிலையானது என்று கருதி வினைப்பயனிலே கிடந்து ஈடுபட்டு மகிழாதே. தம்மைப் பற்றித் தாழ்வாகக் கருதுபவர் மனத்து இருப்பவனாய், முருகனுக்குத் தந்தையாய், கூத்தாடுதலைப் பண்பாக உடையவனாய், கொல்லும் முத்தலை வேல் ஏந்திய கையனாய்த் திருவடிகளில், கழலும், சிலம்பும் ஒலிக்க இவ்வுலகமே பெயருமாறு ஆடும் ஊழிக் கூத்தில் மனநிறையுடையவனாகிய சிவபெருமானுடைய திருத்தலமாகிய நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாம்.
  
  
 

பாடல் எண் :  7

 

பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்
    பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு
வாசக் குழல்மடவார் போக மென்னும்
    வலைப்பட்டு வீழாதே
 வருக நெஞ்சே
தூசக் கரியுரித்தான் தூநீ றாடித்
    துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லா
நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று
    நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

 
 
பொழிப்புரை :
 
நெஞ்சே ! வருக. பேசுதற்கு ஏற்ற உயர்ந்த பொருள் அல்லாத இப்பிறவியைக் கிட்டுதற்கு அரிய பொருளாக உன் அற்பப்புத்தியில் கருதி நறுமணம் கமழும் கூந்தலையுடைய மகளிர் இன்பம் என்னும் வலையில் அகப்பட்டு அழியாமல், யானைத்தோலை உரித்துப் போர்த்துத்தூய திருநீறு பூசிப் பூணூல் அணிந்து, தன்னை அணுகாத கீழ்மக்களுக்கு அரியவனாயுள்ள சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.