Friday, January 5, 2024

சித்தர் வழியில் – போகர் - 2

 சித்தர் வழியில்  போகர் - 2


சித்தர் பெருமக்களே! மாண்டவர்களை மீளச்செய்யும் மந்திரத்தை நீங்கள் எனக்கு அருள

வேண்டும்.’ என்று மண்டியிட்டு வேண்டினார்.

 

இயற்கைக்கு மாறாக செயல்பட நினைக்கும் உனக்கு தெய்வ குற்றம் வந்தடையும்

என நவசித்தர்கள் வெகுண்டார்கள். இதனால் நீ கற்ற வித்தைகள் யாவும் மறந்து

போகாட்டும் ! என ஒரு சித்தர் சாபமிட்டார்..

 

’’மக்கள் தொண்டாற்றுவதும்இறைவனின் படைப்பின் மீது இரக்கம் கொள்வது பாவம்

என்றால்... நான் மகிழ்ச்சியுடன் இந்த சாபத்தினை ஏற்று இங்கேயே இறந்துவிடுகிறேன்

என்றார். இதனை கேட்டு சித்தர்கள் திடுக்கிட்டுபோகர் மீது இரக்கம் கொண்டனர்.


போகரேகாயகல்ப முறைகளை நன்கு அறிந்தவன் நீ. இறந்தவர்களை உயிர்பிப்பது

சரியல்ல. இயற்கைக்கு மாறானது. ஆண்டவனின் அருள் பெற்றவர்களே முடியும். ஆனால்,

அதற்கு மாற்றாக தகுதியுள்ளவர்களை தேர்தெடுத்து அவர்களுக்கு நீண்ட நாட்கள் வாழும்

காயகல்ப முரைகளை சொல்லிக்கொடு.அவர்களை நீண்ட நாள் வாழவழிவகைகளை செய்.

உன் மீது கொண்ட அன்பினால் சொல்கிறோம்என மேலும் சில காயகல்ப முறைகளை

விளக்கினார்கள்..

 

இதுவரை தான் அறிந்தவற்றைஅனுபவங்களை அத்தனையும் நூல்களாக தொகுக்கத்

தொடங்கினார். தன் சீடர்களுக்கும் போதித்தார்.

இறவாமல் இருந்தால் பிறவாமையும் உறுதி. ஆகவேதான் சித்தர்கள் பிறவாமையை

இறைவனிடம் வேண்டி நின்றனர்.

                ’நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடு போய்

                  எல்லை வாசல் கண்டபின் இனிப்பிறப்பதில்லையே

 என சிவ வாக்கியரும் உபதேசித்தார்.

 

மண்ணில் வீழ்ந்து அழிந்து போகக் கூடிய உடலை அழியா கல்ப தேகமாக்கி காலம்

கடந்து வாழ்ந்து வந்த சித்தர்களின் அருட்கொடையாக போகர் எண்ணற்ற வைத்திய

நூட்களை எழுதினார்.

 

இலகிமா சித்து என்பது  கனமான இந்த உடலை இலகுவான பஞ்சு போலாக்குவது.

இந்த சித்தியால் புவி ஈர்ப்பு விசையை விஞ்ச இயலும். நினைத்த மாத்திரத்தில் தன்

உடல் எடையை குறைத்து இலகுவாக்கி பஞ்சு போல் சித்தர்கள் ஆகாயத்தில் சஞ்சரிக்க

முடிகிறது. மனித உடல் ஒரு அற்புதம் வாய்ந்தது. இந்த உடல் மேல் நோக்கி நகரக்

கூடிய தன்மைக்கு ஆதாரமாக இருக்கிற உதானன்(காற்று) எனும் வாயுவை வெற்றி

பெற்றால் இலகிமா சித்தியாகும். ஆகாயம் உடல் இந்த தொடர்பை இவ்வகையில்

சம்யமம் செய்யும் போது இந்த வித்தை கைகூடுகிறது.நமது உடல் இலேசாகிறது.

 

ஆகாய வானில் நடப்பதுபடுப்பதும்நிற்பதுமான ககனப் பயிற்சில் போகர் வல்லவராக

திகழ்ந்தார். இந்த இலகிமா சித்தியால் போகர் அவ்வப்போது சீன நாட்டுக்கு நினைத்த

நேரத்தில் சென்று வந்தார். சீனாவில் வாழ்ந்த காலத்தில் சீன மக்களுக்கு இவ்வகை

சித்துக்கள் மூலம் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறார். கடற்பயணம் செய்ய நீராவிக்

கப்பலையும்பறக்கும் இயந்திரம் ஒன்றையும் உருவாக்கித் தந்துள்ளார்.

 

சித்த இரகசியங்களை பொதுவுடமை யாக்குவதில் அலாதி ஆர்வம் கொண்டவராய் போகர்

இருந்த காரணத்தால் பல்வேறு சங்கடங்கள் இருந்தன.

 

மூத்த சித்தரான சிவபெருமான் ஒருமுறை சவுக்காரத்தின் பெருமையை அன்னைக்குச் சொல்ல,

அன்னை அதனை நந்திக்கு உபதேசித்தாள். நந்தி திருமூலருக்குக் கூறி அவர் அதனை காலாங்கி

நாதர்ருக்கு உபதேசிக்க அவர் அதனை போகருக்கு இரகசியமாய் உரைத்தார். ஆனால்போகர்

சவுக்காரத்தின் இரகஸ்சியம் மிகக் கடினமானதாகவும் யாரும் எளிதில் புரிந்துகொள்ள

இயலாமற் இருந்ததால் எல்லோரும் அறிந்துக்கொள்ளட்டும் என்று எளிமையாக

வெளிப்படையாக மூடுமந்திரமின்றி எழுதிவிட்டார்.

 

இப்படி வெளிப்படையாக எழுதிவிட்டதை கண்டு மற்ற சித்தர்கள் யாவரும் அலறினர்.

இதனை கூர்மமுனிவர் அகத்தியரிடம் புகார் செய்தார்.. அகத்தியர் இதற்கு தீர்ப்பு செல்ல

வேண்டியர் கைலாகநாதர். அவரிடமே முறையிடுவது சரியான வழி என்று கைலாயம்

சென்றனர்.

 

’’அய்யனே! போகமுனிவர் சித்தர்களுகெல்லாம் பெருந்துரோகம் இழைத்துவிட்டார்.

வெடியுப்பு, இரவாதம்யோக மார்க்கம்ஞானமார்க்கம் போன்ற இரகசியங்களை வெளிப்

படையாக வெளிப்படுத்தி இருக்கிறார்’’, என புகார் செய்தனர்.

 

  ‘போகா! நீ பூனைக்கு வேதங்களை உபசேத்தித்துள்ளாய்.விதிப்படி வறுமையில் துன்பப்

பட்டவர்களுக்கு அவர்களின் துயரை நீக்கியுள்ளாய். இறந்தவர்கள் உயிர்ப்பிக்க துடிக்கிறார்.

நான் பார்வதி தேவிக்கு உபதேசத்த தீட்சை விதியோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு

காண்டமாக எழுதியிருக்கிறாயாமே!’  என சிவபெருமான் கேட்டார்.

 

--
எளியெனின் நன்றிகள்,
வணக்கம்
அன்பொடு,

கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam

No comments:

Post a Comment