Friday, January 5, 2024

காளமேகப் புலவர்

 காளமேகப் புலவர்

தமிழ்ப்புலவர்களின் வாழ்க்கை வரலாறுகள்சுவையான புனைக்கதைகளாவே தமிழ்நாட்டில் நிலவுகின்றன.
கற்பனையுடன் தெய்வீகத்தையும் புலவர்களின் வாழ்வில் கலந்துவிடுவதால் அவர்தம் பெரிதும்
போற்றப்படுகின்றனர்இத்தகைய புலவர்களின் கால கட்டம் குறித்து அறிஞர்களிடையே கருத்திசைவு
இருப்பதாகத் தெரியவில்லைகாளமேகப் புலவர் இதற்கு விதிவிலக்கு அல்ல.

திருக்குடந்தைப் பதியில் பிராமணர்மரபில் தோன்றியவர் இவர் என்று கூறுவார் உண்டு.                        இல்லை அந்த ஊரில் பிறந்த சோழியப்பிராமணர் என்று கூறுவோரும் உண்டு.                                         வேறு சிலரோ காளமேகப்பெருமாள் என்னும் கோயில் உள்ள பாண்டி நாட்டுத்                                     திருமோகூரில் பிறந்தவர் என்றும் கூறுவர்கோயிலில் பரிசாரராக இருந்த ஒருவரின்
மகன் இவர் என்று அவர்கள் கூறுகின்றனர்இதற்கு ஆதாரமாக இவர் மோகூர்ப்                                 பெருமாளைப் பாடியிருப்பதையும் அப்பெருமாளின் பெயர் காளமேகமாகவும்                            இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் காளமேகம் என்பது இவரின் இயற்கைப் பெயராக                             இருந்திருக்கவேண்டும்ஆனால் இதனை மற்றவர்கள் ஏற்பதில்லை.

தேவியின் அருளுக்குப்பின்னரே ஆசுமதுரம் சித்திரம் வித்தாரம் என்ற கவிதைகளின் நான்கு              வகைகளையும் கார் மேகத்தைப்போல பொழிந்ததால் அவருக்குக் காளமேகம் என்ற பெயர்            பின்னர் ஏற்பட்டது என்பர்அப்படியாயின் அவரின் இயற்பெயர்தான்என்ன?
வரதா என்பதாக இருக்கலாம் என ஒரு பாடல் வழி அறிய முடிகிறது.                                                                                                                                

அப்பாடல் இதுதான்:
"
வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசு கவிகாள மேகமே - பூசுரா
விண்தின்ற வெவ்வழலில் வேவுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்"

இவரின் இளமைப் பருவம் அப்படி ஒன்றும்சிறப்பானதாக அமைந்ததாதக் கூறமுடியாது.                          வேலை தேடிச் சென்ற இவருக்குக் கடைசியில் ஸ்ரீரங்கத்தில் கோயில் பரிசாரகர் பணிகிடைத்தது.


 

No comments:

Post a Comment