Saturday, February 8, 2025

விபூதியை கொண்டு அனைத்து வித நோய்களையும் குணமாக்கும்

நீண்ட நாட்களுக்கு பிறகு முறையாக சுரகுடுவையில் புடமிட்டு எங்கள் வீட்டில் சகல நோய்களையும் தீர்க்கும் ஜீவ பஸ்ப திருநீறு தயாரித்து வெற்றியும் கண்டேன். அந்த முறையை இன்று சித்தர்களின் குரலில் உங்களுடன் பகிர்கிறேன்... 
           நீங்களும் தயாரித்து பயன் பெறுங்கள். தேவைப்படுபவர்கள் சித்தர்களின் குரல் ஆலோசகர் ராம்குமார்  whatsaap மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள்..

(சிறு வயதில் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகளிடம் மூலிகை ரகசியங்களை பற்றி படிக்கும் போது "போகர் நிகண்டு" என்ற நூலில் இருந்து மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் அவருக்கு சொன்ன அபூர்வ ரகசியம் இது.)

விபூதியை கொண்டு அனைத்து வித நோய்களையும் குணமாக்கும் மற்றும் அனைத்து வித யோக ஆற்றல்களையும் பெருக்கும் சித்தி முறை இது!!!

நமது நாட்டில் பெரும்பாலும் சாமியார்கள் அவர்களை பார்க்க சென்றால் விபூதி வழங்குவது வழக்கம். சிறிது வாயில் போட்டு விட்டு சிறிது நெற்றியில் இட்டு விடுவார்கள். அது பல விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையதாக இருக்கும். சரி வெறும் விபூதி மட்டும் எப்படி இவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்று சந்தேங்கம் தோன்றுவது இயல்பு தான்.

இவை வெறும் சித்து மட்டும் இல்லை இவை மருத்துவ குணம் வாய்ந்தது !!!

சிலர் சிறுநீரகத்தில் கல் இருந்தது அவர் கொடுத்த விபூதி மூன்று நாள் சாப்பிட சொன்னார் ஸ்கேன் செய்து பார்த்தும் கல் இல்லை என்று சொல்லி வியப்படைவதை பார்த்து இருக்கிறோம். இன்னும் சிலர் கை கால் தீராத வலி இருந்தது அந்த மகான் மந்திரித்து கொடுத்த விபூதி ஒருவாரத்தில் சரி செய்தது என்று சொல்ல கேட்டு இருக்கோம். 
இன்னும் சிலர் மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, குதிங்கால்வலி, கெண்டைக்கால் சதை வலி போன்று அவதியில் இருந்தேன் தினமும் அந்த சாமியார் கொடுத்த விபூதி சாப்பிட்டேன் முழுமையாக குணமாகி விட்டது என்று கேள்விப் பட்டு இருக்கிறோம்.
சிலர் சொறி, சிறங்கு போன்றவற்றால் அவதி பட்டு இந்த விபூதியை அதன் மீது போட்டும் விபூதியை உண்டும் குணமானதை கண்டு இருக்கின்றோம்.

இவை வெறும் கதைகளா அல்லது அவர்கள் சொல்வது உண்மையா ?
          இவை அனைத்தும் நிதர்சனமான உண்மை தான். சரி அந்த விபூதி தயாரிப்பது எப்படி...!!!
இரண்டு கிலோ சுத்தமான பசுஞ்சாண விபூதி வாங்க வேண்டும். அதில் கீழ் கண்ட 11 பற்பங்களையும் 10gr வீதம்  சேர்க்க வேண்டும்.

(1)படிகார பஸ்பம் - 10 கிராம்
(2)கல் நார் பஸ்பம் - 10 கிராம் 
(3)குங்கிலிய பஸ்பம் - 10 கிராம் 
(4)நண்டுக்கல் பஸ்பம் - 10 கிராம் 
(5)ஆமை ஓடு பஸ்பம் - 10 கிராம் 
(6)பவள பஸ்பம் - 10 கிராம் 
(7)சங்கு பஸ்பம் - 10 கிராம் 
(8)சிலா சத்து பஸ்பம் - 10 கிராம் 
(9)சிருங்கி பஸ்பம் - 10 கிராம் 
(10)முத்துச் சிப்பி பஸ்பம் - 10 கிராம் 
(11)நத்தை ஓடு பஸ்பம் - 10 கிராம் -

                  இது அனைத்தும் நீர் சத்து அதனால் மேலே சொன்ன அனைத்தும் நடக்கும்.

மேலும்;
(1) கல்நார் பற்பம் (சிறுநீரகம், பிறப்புறுப்பு மண்டலம்),
(2) படிகார பற்பம் (குடல்புண், சிறுநீரகம்),
(3) சிலா சத்து பற்பம் (எலும்பு மண்டலம், உடலின் அத்தனை உறுப்புக்கள், சிறுநீரகம், பிறப்புறுப்பு மண்டலம்),
(4) ஆமையோட்டு பற்பம் (எலும்பு மண்டலம், வயிறு, கல்லீரல், மண்ணீரல்),
(5) சிருங்கி பற்பம் (எலும்பு மண்டலம், இதயம், இரத்தக் குழாய்கள்).
(சிருங்கி பற்பம் என்பது மான் கொம்பு பற்பம் ஆகும்)

இந்த பற்பங்கள் ஒவ்வொன்றும் 10 கிராம் போதுமானது. இது தான் மருந்து. இவை தான் நோய்களையும் குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.

மேலுள்ள 11  பற்பங்களையும் கலந்து அதை 1kg தூய நாட்டுப்பாசு விபூதியுடம் கலந்து வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டியது தான். சிலர் கோயிலில் சாமியார் போல் உட்கார்ந்து வரும் நபருக்கு வெறும் விபூதியை இட்டுவிட்டு, கலந்து வைத்திருக்கும் பற்பக் கலவையை ஒரு சிட்டிகை எடுத்து விபூதியை வாயில் போடுவது போல போட்டுவிட்டால், அந்த நபருக்கு எந்த வியாதி இருந்தாலும் போய்விடும். இதை சித்து என்றும் சொல்லலாம் மருந்து என்றும் சொல்லலாம். இந்த திருநீறு பிரயோகம் மூலம் அதன்மூலம் பயன் பெற்றவர்கள் ஏராளம்.

இவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும். இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.

இது தூய நாட்டுப்பசு பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர். இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தியாகும்.

இதனை தாம்பளத்தில் பரப்பி எந்த காரியம் சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும்.

சரி "தூய திருநீறு தயாரிப்பது எப்படி?" என்று பல அன்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பார்கள். அவர்களிக்கும் சேர்த்து இந்த பதிவை பகிர்கிறேன்

[திருநீறு என்பது ஆன்மிக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; இது மிகச்சிறந்த மருந்து. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்கள் அவர்கள் முறையில் உருவாக்குகிறார்கள் இந்த திருநீறை. மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது.

பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.

திருநீறு தயாரிக்கும் முறை:-
(1) தூய நாட்டு பசுமாட்டுச் சாணம்
(2) திருநீற்றுப் பச்சிலைகள். (திணுத்திப் பச்சை இலை)
(3) வில்வப்பழ ஓடுகள்

மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும். நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.

இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும். எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும். நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும்.

இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள்.

பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “தந்திரமாவது நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.
மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்பதாலும், திருநீற்றுப் பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை...
புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்
மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு
என்று என் குரு அகத்தியர் அடிக்கடி என் கனவில் கூறுவார்.

இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்தி வந்த மூலிகை மருத்துவப் பொருளாகும். எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு:-
---------------
                 தயாரிக்கும் முறையை ஒளிவு மறைவு இல்லாமல் முழுமையாக பகிர்ந்துளேன். அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேடி வாங்கி நீங்களே வாங்கி தயாரித்து பயன்படுத்துங்கள். முடியாதவர்கள் நம்முடைய கொல்லிமலை ராஜவைத்தியர் தர்மலிங்க சுவாமிகளின் சீடர் நாதாந்த சுவாமிகளால் தயாரிக்கப்படு கொடுக்கப்படுகிறது. 
....

           - சித்தர்களின் குரல்.  shiva shangar

Wednesday, February 5, 2025

விவாஹ முகூர்த்தம்

பிரஸ்ன ஜோதிடம்:

விவாஹ முகூர்த்தம்.

1.உல்கா;
சூரியன்  நின்ற நட்சத்திரத்திலிருந்து பத்தொன்பதாது நட்சத்திரம்  உல்கா அதில் முகூர்த்தம்  கூடாது,

2.பூகம்பம் :கோச்சாரத்திலிருந்து சூரியன்  நின்ற நட்சத்திரத்திலிருந்து ஒன்பாதவது  நட்சத்திரம்  பூகம்பம் . முகூர்த்தம்  கூடாது,

3.உபாகம்;

சூரிய சந்திரன்  கிரகணத்திற்கு முன்பு மூன்று நாளும் கிரகணம் முடிந்து  மூன்று நாளும்  முகூர்த்தம்  கூடாது,

4.குளிகதோயம்.
குளிகன் உதயம் ஆகும் நேரம் முகூர்த்தம்  கூடாது.

5.சஷ்டாஷ்டகம்.
முகூர்த்தம்  லக்கினத்திற்கு  சந்திரன், குரு 6.8.12 கூடாது

6.அஸத் திருஷ்டி.

முகூர்த்தம்  லக்னம் பாவத்தை பாபர்கள்  பார்க்க கூடாது

7.அஸத் ஆருடம்.

முகூர்த்த லக்கினத்தில் பாபர்கள்  கூடாது

8.சித த்ருக்.
சுக்கிரன் முகூர்த்த லக்கினத்தை பார்ப்பது கெடுதி  என சில க்ரந்தங்களில் சொல்லப்படுகிறது, .
ஆனால் பராசார ஹோரையில் முகூர்த்த லக்கினத்தை களத்திர காரகனாகிய சுக்ரன்  பார்ப்பது  மிக நன்று  என சொல்லப்படுகிறது,

9.ஸந்தியா தோஷம்,

சூரியன்  அஸ்தமனம் ஆவதற்கு  முன்னும், பின்னும் இரண்டு  நாழிகை காலம் தோஷம்,  அதில் முகூர்த்தம் கூடாது

10. கண்டாந்தம்.

அஸ்வினி, மகம், மூலம்  கேது நட்சத்திரங்களின் முதல் பாதமும் 

திருவாதிரை. சுவாதீ. சதயம், இராகு நட்சத்திரங்களின் கடைசி  பாதங்களும் முகூர்த்தம்  கூடாது

11.உஷ்ண கடிகை.
உஷ்ண கடிகை நட்சத்திர நாழிகையில் முகூர்த்தம்  கூடாது.

12.தியாஜ்யம்  நேரம்  முகூர்த்தம்  கூடாது

13.ஸ்திர கரணம்.
சகுனி. சதுஷ்பாதம், நாகவம், கிம்துஸ்க்னம்  போன்ற கரணங்களில்  முகூர்த்தம்  கூடாது

15.ரிக்தை.

சதுர்த்தசி சதுர்த்தி, ந.அஷ்டமி, நவமி  போன்ற திதிகளில் முகூர்த்தம் கூடாது

17.லாடம்.

சூரியன் நின்ற நட்சத்திரம்  முதல்  மூலம்  நட்சத்திரம்  வரை எண்ணி வரும்  எண்ணை  அந்த எண் பூராடம்  நட்சத்திரம் முதல் எண்ணி வரும்  நட்சத்திரம்  லடாம் நட்சத்திரம்  அன்று முகூர்த்தம்  கூடாது

18.ஏகார்க்களம்.

மொத்தம்  360 பாகையிலிரூந்து  சூரியன்  நிற்கும்  பாகையை கழித்து வரும்   ஸ்புடத்திற்கு 
உதய நட்சத்திரம்  1,2,7,10,11,14,16,18,20

ஆகிய. நட்சத்திரங்கள் முகூர்த்தம்  கூடாது.

19.வைதிருதம்.

சூரியன்  நின்ற நட்சத்திரம் முதல்  14,வது நட்சத்திரம்  முகூர்த்தம்  கூடாது

20.அஹிசிரசு.

வியதிபாதத்தின் பிற்பகுதி  முகூர்த்தம் கூடாது.

21. விஷ்டி.
வளர்பிறை  அஷ்டமி, ஏகாதசி,  6.முதல்  12 நாழிகை.பௌர்ணமி  12 நாழிகை கூடாது

22.அம்ஹஸ்பதி.
ஒரு மாதத்தில்   இரண்டு  அமாவாசைகள் வந்த மாதம் கூடாது
சித்திரை. வைகாசி  செய்யலாம்

23.ஸமஸர்ப்பம்.
அமாவாசை  வராத மாதம் கூடாது

இவைகள்  எல்லாம்  இப்போது  பார்த்து  திருமணம்  செய்ய முடியாது 
ஆனால் இவை இலக்கணங்கள்

Monday, February 3, 2025

அமாவாசை கோயில்கள்


🙇 அமாவாசை கோயில்கள் 

இராமேஸ்வரம்

இராமேஸ்வரத்தில் தை அமாவாசை அன்று இராமநாதசுவாமியும், அம்பாளும் அக்னி தீர்த்தத்திற்கு வருவார்கள். அங்கு அவர்களுக்கு புனித நீராடல் நடைபெறும்.

குறிப்பாக தை அமாவாசை தினத்தில் இராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலில் அக்னி தீர்த்தமாடி, பின் கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கட்டங்களில் தீர்த்தமாடிய பின இராமநாதர் திருக்கோயிலில் வழிபடுவது சிறப்பு. 

இன்று இங்குள்ள தீர்த்தக்கட்டத்தில் ஒரு முறை நீராடினால் ஆயிரம் தீர்த்தக்கட்டத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.

சதுரகிரி

பூலோக கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் தை அமாவாசை விழா சிறப்பாக நடக்கும். 

முதல்நாள் பரிசுத்த பூஜைகளும், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கும். தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும் நடக்கும். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கான சிறப்பு வழிபாடும், சங்கொலி பூஜைகளும் நடக்கும். 

சிதம்பரம் 

தை அமாவாசையை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர். 

தை அமாவாசை நாளில் தில்லைக் காளியை வழிபட்டால் நம் முன் ஜென்ம வினைகள் யாவும் விலகிவிடும் என்பது ஐதீகம். 

அமாவாசை நாளில் தில்லைக் காளிக்கு 108 திரவியங்களால் அபிஷேகமும் விசேஷ யாகமும் நடைபெறும். 

யாகத்தில், அபூர்வ மூலிகைகளுடன் மிளகாய்வற்றலும் போடப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லை  ஒழியும் குடும்பத்தில் தம்பதிக்குள் ஒற்றுமை மேலோங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சகோதரச் சண்டைகள் யாவும் தீர்ந்துவிடும்; தீய சக்திகள் விலகி ஓடும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமூர்த்தி மலை 

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. 

ஆண்டு தோறும்  தை அமாவாசை தினம் சிறப்பு நாளாகும்.  தை பட்ட சாகுபடியை துவக்குவதற்கு முன்பு விவசாயிகளை அமாவாசை தினத்தில் மாட்டு வண்டிகளுடன் வந்து மும்மூர்த்திகளை தரிசித்து விட்டு, சாகுபடி பணிகளை துவக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

அய்யாவாடி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்யங்கிரா கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. இதில் தைஅமாவாசையன்று இந்த யாக்த்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதிரி தொந்தரவுகள் இருக்காது. 

திருச்சி உறையூர்

குங்குமவல்லி அம்மன் திருக்கோயிலில், அமாவாசை யாகம் சிறப்பாக நடக்கும். இங்குள்ள இறைவன் சுயம்புவாக லிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்ட தானம்

இராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 62 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது  சகல தீர்த்தமுடையவர் கோயில் இங்கு அம்மன்  பெரியநாயகி. 

இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தை மாதங்களில் வரும் அமாவாசைப் புனித நாளில், இந்தத் தலத்தில் திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும் என்பர். 

இந்தத் தலத்தில் திதி கொடுத்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம். அவர்களின் ஆத்மாவும் அமைதிபெறும். பிறகு சர்வதீர்த்தேஸ்வரரை வழிபட்டால். சகல ஞானமும் யோகமும் பெற்று இனிதே வாழலாம் 

வேதரண்யம் 

ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும். 

திலதர்ப்பணபுரி

இத்தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக் காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த தலங்களில் ஒன்று. 

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய வந்த இராமபிரான், இங்கே எள்ளும், நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால் இத்தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்ற பெயர் ஏற்பட்டது.

இங்கு சூரியனும், சந்திரனும் அருகருகில் இருப்பதால் இதற்கு நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் உண்டு.

ஈரோடு மாவட்டம் பவானி 

கூடுதுறையில் கோயில் கொண்டிருப்பவர் சங்கமேஸ்வரர். இத்தலம் பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகவும், இங்கு நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம். 

இங்கு அம்மன், நதி, தலம் மூன்றும் பார்வதியின் திருநாமங்கள் பெற்றும் அமைந்துள்ளதால் மிகச் சிறப்பு வாய்ந்தது.

திருச்செந்தூர்

முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும் திருத்தலம் திருச்செந்தூர். இங்கும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணற்றிலும், கடலிலும் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விளமல்

திருவாரூரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தலம் விளமல் என்ற ஸ்தலம். பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம். 

அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி பின் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.

குற்றாலம், பாபநாசம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது

திருநெல்வேலி

நெல்லையப்பர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று பத்ர தீபம்/ இலட்ச தீபம் ஏற்றுவார்கள். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களால் ஏற்றப்படும் 

திருவள்ளூர்

வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தை `அமாவாசை தலம்' என்றும் அழைப்பார்கள். 

தை அமாவாசை அன்று, பக்தர்களுக்கு தேனும், தினை மாவும் பிரசாதமாக வழங்கப்படும்.

ஆனைமலை 

இங்கு மாசாணியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் அம்மன், சயன கோலத்தில் இருப்பதை தரிசிக்கலாம். 

இங்கு தை அமாவாசை அன்று, பச்சிலை பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த பிரசாதம் வயிற்றுப் பிரச்சினைக்கு அருமருந்தாகும்.

திருஇந்தளூர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் கோவில் இருக்கிறது. 

தை அமாவாசை அன்று, இத்தல இறைவனான பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.

திருக்கடையூர்

அபிராமி பட்டருக்காக, தை அமாவாசை அன்று, வானில் பவுர்ணமி நிலவை தெரியச் செய்து அருளியவர், அபிராமி அன்னை. அந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று திருக்கடையூர் திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடத்திக் காண்பிக்கப்படும்.

தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டு ஆசீர்வாதம் பெறுவோம்.

அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என்‌ வரமே

இனிய ஈசன்  அகிலம் காக்கும் அண்ணாமலையார் அருளால் எல்லா நாளும் இனிய நாளே 🌹

Saturday, January 18, 2025

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரதான அர்ச்சகர் என்று சொல்லக்கூடியவர் ( Head Priest )

ஸ்ரீ பாஞ்சராத்ர  ஆகமத்தில் ப்ரதான அர்ச்சகர் என்று சொல்லக்கூடியவர் ( Head Priest )  கீழ்கண்ட நபர்களை தீக்சை செய்யவேண்டும் (இவர்கள் அனைவரும் நிரந்தரமாக கோயிலில் பெருமாள்  கைங்கரியம் செய்யவேண்டும் )


1) ஆசார்யன் - கர்சனதிப் பிரதிஷ்டைவரை  செய்பவர் 

2) அர்ச்சகர்  - உதவி அர்ச்சகர் ( Helper )

3)சன்னதிபரிசாரகர்  - பெருமாள் பாத்திரத்தை சுத்தம் செய்பவர்  மற்றும் திருமணி கைங்கரியம் செய்பவர்   மற்றும் பெருமாளுக்கு தேவையான சந்தனாதி திரவியங்களை தயார் செய்து வைப்பவர் மற்றும் அர்ச்சகருக்கு தேவையான உதவி செய்பவர்.

4) பரிசாரகர் (மடப்பள்ளி)  -  பெருமாளுக்கு தேவையான நித்யபடி மற்றும் அதிகப்படி உத்ஸவ காலங்களில்        பொறுப்புடன் பெருமாள் தளிகை செய்பவர். 

5) பிசக் (Dr)  - கோயில் அர்ச்சகருக்கு மருத்துவம் பார்ப்பவர் 

6) தைவக்ஞ்யன் ( Astrologer ) - கோயிலுக்கு ஜோதிடம் பார்ப்பவர் , உத்ஸவத்திற்கு  மற்றும் பிரதிஷ்டைக்கு ( கும்பாபிஷத்துக்கு  லக்கனம் மற்றும் முகூர்தம் வைத்து தருபவன் 

7) கர்மஹ:   நாவிதன்  ( சவரர் செய்பவன் )

8)குலால: கோயிலுக்கு தேவையான மண்பாண்டம் செய்பவன் (கலசம்)

9) பார்சவ: டவன்டை அடிப்பவன்.

10) வ்யாத:  வாத்தியம் தயார் செய்பவன்.

11) தந்துவாய:  நாதஸ்வரம் வாசிப்பவன்.

12) கோப: மாட்டை மேய்ப்பவன் ( பசுவை ரட்சிப்பவன் )

13) மாஹீச: எருமை மேய்ப்பவன் (  எருமை பால் கறப்பவன் )

14) கரிபந்தந:  யானைக்காரன் ( யானையை பார்த்துக்கொள்பவன் )

15)சூளிக: ஆயுதம் இரும்பு வேலை செய்பவன்.

16) மணிவித்ரய: பத்தன் ( தங்கம் வேலை செய்பவன் ஆசாரி )

17) புஷ்பகார :  மாலை கட்டுபவர்.

18) மாளவக:  குதிரையை ரட்சிப்பவன் 

19) சூத: வஸ்திரம்  பார்த்துக்கொள்பவன் ( சலவை ரூம் )

20) சண்டாள:  உத்ஸவம் மற்றும் மற்ற கோயில் வைபவங்களை மக்களுக்கு கூறுபவன்.

21) நத்தக: நாட்டியம் ஆடுபவன் .

22) பெளராணிக: புராணம் சொல்பவன் 

23) தக்ஷ:  ஸ்தபதி 

24) ரதகார: வாகனம் செய்பவன் 

25) தைலிக: எண்னை காப்பு தயார் செய்பவன் 

இவர்கள்  25 பேர்களும் பாஞ்சராத்திர ஆகம கோயில்களில் மிக முக்கியமானவர்கள் இவர்கள் அனைவருக்கும் ப்ரதான அர்ச்சகர் தீக்சை செய்யவேண்டும்.

இப்படிக்கு,
R. சக்கரபாணி பட்டாச்சியர்,
திருக்குடந்தை,
9566206189.

Friday, December 13, 2024

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 55 ஆண்டு

    பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 55ஆண்டு




"வரும் 15.12.2024 ஞாயிறு அன்று நமது பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 55 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு  அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்

வரும் 1512.2024 ஞாயிறு பழமுதிர் சோலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சபை சார்பில் விருந்து வழங்கப்படுகிறது"

Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai (Regd.No 32/16) 

Chamundi Supari 
New 41 old 20/3 West Tower Street ,
Madurai -  625 001 
Cell: 9442408009 
chamundihari@gmail.com

Monday, December 2, 2024

சப்தகன்னிகளின் ரகசியம்

சப்த கன்னிகளின் ஆதி ரகசியம்
---------------------------------------------------------

இந்த பிரபஞ்சம் ஒரு பெரு வெடிப்பால் தோன்றியது. அது ஒரு எதேச்சையான செயல் என்றும், வெடிப்பில் உருவான அண்ட சராசரங்களையும் இயக்கும் மிக பெரிய  ஆற்றல் ஒருமையப்புள்ளியாக இருந்து பல்லாயிர கணக்கான பால்வெளி அண்டங்களை இயக்கிக்கொண்டுள்ளது என இன்றைய அறிவியல் சொன்னாலும் 
அந்த அறிவியலை நமக்குள் அடக்கி அது ஒரு பிரமாண்டமான சக்தி என்று  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தங்களின் உடலை (ககன மார்க்கமாக) அஷ்டமா சித்துவில் ஒரு சித்துவான லகிமா சித்துவைக்கொண்டு ஆகாய மார்க்கமாக கடந்து இந்த விண்வெளியை சித்தர்கள் ஆராய்ந்துளர்கள் என்பதற்கு சான்றாக செவ்வாய் கிரகம் செந்நிறத்தில் தான் இருக்கும் என்பதை எப்படி கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்தார்கள்..? 

ஆக இது மட்டும் அல்ல, அன்றே ஏழு கிரகத்தின் தன்மைகளும் அதன் புறஊதா கதிர்களின் நிறங்களும் ஆராய்ந்து அதில் எந்ததெந்த கிரகத்தின் கதிர் வீச்சுகள் எந்த எந்த நாளில் நாம் வாழும் இந்த பூமியை முழுமையாக ஆக்கிரமிக்கிறது, அதில் எந்தெந்த கிரகத்தால் மனிதனின் மூளை எப்படி எப்படியெல்லாம் மாற்றத்தை அடைகிறது என்பதையெல்லாம் சித்த பெருமக்களால் ஆராய்ந்து சொல்ல முடிந்தது.?

குறிப்பாக ஜோதிடம், மாந்திரீகம், ஆன்மீகம். அதிலும் ஜோதிடத்தில் இந்த கிரகங்களோடு இரண்டு நிழல் கிரகங்கள் ராகு -கேது  சேர்த்து ஒன்பது கிரகமா பாவித்து அதன் அசைவுகளை ஒளிகளையும் கொண்டு மனிதனின் புத்தியால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை துல்லியமாக கணிக்க முடிந்தது அன்றைய ஜோதிட சாஸ்திரத்தில்....
         ஆனால் அதே கிரகங்களை வைத்து வேறு ஒரு கோணத்தில் அதாவது கிரக அசைவு மற்றும் ஒளி இவைகளை வைத்து ஜோதிடம் கணிப்பதை போல, கிரகத்தின் வேகத்தையும் அதன் ஒலி அதிர்வலைகளையும் வைத்து ஆன்மீக அடிப்படை தத்துவத்தை தீர்மானித்துள்ளார்கள்.

இந்த இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை கல்வி அறிவு இல்லாத மக்கள் உணர்வதில்லை. ஆகையால்  கிரகங்களின் ஆக்கிரமிப்பு நாட்களை அந்தந்த நாட்களில் அந்தந்த கிரகம் சார்ந்த அதிர்வலைகளுக்கு ஒவ்வொரு உருவகத்தை உருவாக்கி அதை ஆன்மீக வழியில் உண்மை தெரிந்துகொள்ளாமலே வழிபடுகிறார்கள்.
அதாவது புராணங்கள்  சொல்லும் பார்வை ஒரு தனி பட்ட பார்வை அதை பற்றி எழுத விரும்பவில்லை. புராணம் சொல்லும் கதையை பார்த்து விட்டு மீண்டும் சப்த கன்னிகளின் அபூர்வ இரகசியத்தை இன்று தெரிந்துகொள்வோம் 

பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்ற வாரத்தை பிரம்மாவிடம் வேண்டி வாங்கினார்கள் "சண்டர்-முண்டர்" எனும் இரு அரக்கர்கள். பெண் என்றால் அவர்களுக்கு அத்தனை இளக்காரம் போல.... ஒரு பெண்ணா நம்மை கொல்லப் போகிறாள் என்ற தைரியத்தில் அவர்கள் எல்லோரையும் கொடுமை செய்தார்கள். அன்னை ஆதிசக்தியின் அருளைப் பெற்ற காத்தியாயன முனிவரையே கொடுமை செய்யத் துணிந்த நிலையில், அன்னை ஆதிபராசக்தி கொதித்தெழுந்து அசுரர் படையை அழிக்கக் கிளம்பினாள்.

சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, யமன் என ஒவ்வொருவரின் அம்சமாக ஏழு கன்னியர்களை உருவாக்கி அசுரக் கூட்டத்தை  அழித்தனர். அன்று முதல் இந்த சப்த மாதாக்களும் மக்களை காக்குமாறு சிவபெருமானால் பணிக்கப்பட்டு, அவரின் அம்சமான வீரபத்திரரின் துணையோடு அருள்புரியத் தொடங்கினர். சிவாலயத்தில் பெரும்பாலும் இவர்கள் ஏழு பேரின் சிலைகளைக் காணலாம். ஆலயங்கள் மட்டுமல்ல, ஆற்றங்கரையோரம், ஏரி, குளம், ஊரின் எல்லைகள் என எங்கேயும் இவர்களின் சிலைகள் வழிபடும் விதமாக இருந்து வருகின்றன.
              ரிக் வேதம், மார்க்கண்டேய புராணம், காளிதாசரின் குமார சம்பவம், விஷ்ணு தர்மோத்தர புராணம், தேவி பாகவதம் போன்றவற்றில் கன்னிமார்களின் விவரங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளன.

சப்தகன்னியரின் சிறப்புகள்
---------------------------------------------------

இங்கே  கருவில் தோன்றாத பெண் என்பது பிரபஞ்சம் தோன்ற காரணமாக இருந்த பெரும் வெடிப்புக்கான இயற்கை சக்தி என்பது. அது முன்னொரு காலத்தில் நடந்தது என்ற பொருளில் ஆதிசக்தி என்றும், பிரபஞ்சம் என்பது எல்லையற்று நீண்டு சென்றுக்கொண்டே இருப்பதால் அதன் மாயையை பிரம்மம் என்றும், பரந்து கிடைப்பதால் அதுவே பரப்பிரம்மம் என்றும் 
பெண் பாலில் ஆதிபராசக்தி என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் ஆதிபராசக்தி என்பது நீங்கள் நினைப்பதை போல ஒரு பெண் அல்ல. அது ஆதிதொட்டு இயங்கிக்கொண்டுருக்கும் பேரியக்கம் என்பது தான் அதன் பொருள். அதனுள் உருவானதே சப்த கிரகங்கள் அதாவது 7கிரகங்கள். பொதுவாக ஆதி தமிழர்கள் இயற்கையை பெண்மையாகவே போற்றும் குணங்களை கொண்டவர்கள் என்பது இந்த மண்ணின் மரபு.

சப்த கன்னிகள் என்றால் ஏழு கன்னிகள் என்று பொருள் படுகிறது. சப்த-என்றால் ஏழு சப்தம் என்றால் ஒலி. இங்கே சப்த கன்னியர் என்று பெயர் வர காரணம் என்னவாக இருக்கும்...? 

ஒரு நுண்ணொலியை நம்மால் நேரடியாக காதால் கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டுமானால் அதற்கென்று தனி பிரித்தியோகமான ஒரு கருவி வேண்டும் அல்லவா..?

உதாரணமாக, இப்போ எங்கேயோ இருக்கும் ஒரு இடத்தில் ஒலிபரப்பப்படும் ஒலி அலைகளை வேறு ஒரு இடத்தில் இருக்கும் நம்மால் அதை தெளிவாக கேட்க வேண்டுயென்றால், ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ மூலம் மட்டுமே அதன் பண்பலையை கொண்டு தெளிவாக கேட்க முடியும். அந்த ட்ரான்ஸிஸ்டர் கருவி இல்லையென்றால் நம்மால் கேட்க முடியாது அல்லவா..? 

அதேப்போல தான் கிரகங்களில் நுண்ணொலிகளை நம்மால் நேரடியாக கேட்க முடியாது. அவைகளை யோகத்தின் மூலமாக மட்டுமே உணர்ந்து கேட்க முடியும். அப்படி உணரும் ஒலிக்கு பெயர் தான் கன்னி. 
அதாவது எப்படி ஒரு குழந்தை பிறந்நது அதற்கு 12வயது வரை தான் சொந்த பாலினத்தை ஆர்மோன் சுரப்பி உதவி இல்லாமல் ஆணா/பெண்ணா  என்பதை உணரமுடியாமல் கன்னி தன்மையோடு இருக்கின்றதோ அதேபோல் 
இந்த கிரகங்களின் சப்தத்தை  யோகத்தின் மூலம் நாம் அறியாத வரை அந்த நுண்ணொலிகள் கன்னிகள் என்று கருத்த படுகிறது. 

ஆதியில் சப்த கன்னிகள் கண்டறிய பட்டு அவைகளை சிவன் கோவில்களில், மற்றும் ஏரி, குளங்கள் போன்ற இடங்களில் ஒரே கல்லில் ஏழு பெண் சிலைகளாக வடிவமைத்து வைத்தார்கள். இதான் நோக்கம் மக்கள் தாகம் கொண்டு வரும் போது தண்ணீர் அருந்தி தாகம் தீர்ப்பதை போல், இந்த சப்த கன்னியர்களை பற்றிய தாகத்தோடு தேடலை தொடங்க வேண்டும் என்பதை சூட்சகமாய் கூட நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கலாம். 
எது எப்படியோ ஒருவழியாய் என் மூலமாக தான் இன்று சித்தர்களின் குரல் வழியாக அந்த சூட்சமம் உடைகிறது என்பதில் மகிழ்ச்சி தான்.

பொதுவாக சப்த கன்னிகள் ஆசீவகட்டமைப்புக்கு உட்பட்ட தெய்வங்கள் என்பதை  அந்த ஏழு கன்னியர்களும் கையில் தாமரை மொட்டை பிடித்த படி இருக்கும் காட்சிகள் தான் சாட்சி.
ஆசிவகத்தின் அடையாளம் தாமரை. 
(Bjp கட்சியின் தாமரை என்று தவறாக பொருள் கொள்ள வேண்டாம்)
அந்த தாமரை வேறு இந்த தாமரை வேறு, 
அதாவது அது ஆசிவகத்திலிருந்து அபகரிக்கப்பட்ட தாமரை (இந்து தாமரை)
ஆசீவக தாமரை என்பது தத்துவார்த்த தாமரை 
ஆகையால் அதை இங்கே சேர்க்க தேவை அல்ல. 

கல்வி கற்றத் தமிழ் புலவன் புகழ்பெற்ற அரசனுக்குச் சமம் என ஒரு சோழ வேந்தனிடம் நேருக்கு நேர் கூறுகிறார் கி.மு. 2 அல்லது 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலத் தமிழ் புலவர் கோவூர்கிழார் (புறம்-47). குருக்குலக் கல்வியை ஆதியில்  தொடங்கியவர் சிவ சித்தர்கள். அதனால் அவர் ஆதிகுரு (சிவன்) என்றழைக்கப்படுகிறார். அதன்பின் நமது முன்னோர்களான 18 சித்தர்கள் குருகுலக் கல்வி பயின்றவர்கள். அங்கே இருந்த சித்தர்கள் மாணவர்களுக்கு அனைத்து வகையான கலைகளையும் கற்றுத்தந்தனர்.

இந்த யோக கலைகளின் பிறப்பிடமான தமிழ்நாட்டில், பல ஊர்களின்  பரவி இருந்த காலத்திலும், இன்றைய ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் பல ஊர்களின் பெயர்கள் பள்ளி என முடியும். வானியல், இசை, இலக்கணம், தர்க்கவியல், நெறிமுறைகள், ஜோதிடம், மாந்திரீகம்,  வானியல் கணிதம், போர் உத்திகள் ஆகியன மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டன. பொதுவாக அன்று கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தமிழகம், சிங்களதேசம் என ஐந்தும் பொதுவாக தென்னிந்தியா தான்.

ஆறு படிநிலைகளில் கீழ் நிறப் படிநிலையில் உள்ள குருகுல வாழ்வியல் முறையில், தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக் கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப் பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ள மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பர். குருகுல கல்வியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு.

குருகுலக்காலம் என்பது மொத்தம் 18 ஆண்டுகள். 6 ஆம் அகவை முதல் 24 ஆம்
அகவை வரை அனைத்துக் கலைகளும் கற்றுத் தரப்படும். இதற்குப் பிறகு ஒரு இளைஞனானவன் அவனுக்குப் பிடித்த தொழிலை செய்யமுடியும். பெற்றோரின் தொழில் அவன் மீது ஒரு போதும் திணிக்கப்பட்டது கிடையாது!!!! இது தான் உண்மையான தமிழர் கல்வி முறை.
ஒரு மாணவன் அனைத்து கலைகளையும்
கற்றுக்கொண்ட பிறகு அவனுக்கு கை வந்த கலையை மட்டும் தேர்ந்தெடுத்து தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.

கல்வி கற்கும் இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் மாணவர்களை அவர்களது மூளை வளர்ச்சிக்கும், திறமைக்கும் ஏற்றாற்போல் வகைப்படுத்த குருகுல சித்தர்கள் கொண்டு வந்த முறையே வர்ணப் படிநிலை. அந்த வர்ண படிநிலைகளை எப்படி தீர்மானித்தார்கள்? 

வாழ்வியல் முறை கல்வியில் பண்டைய கால தமிழர்கள் ஆறு படிநிலைகளில் கீழ் நிறப் படிநிலையில் தன்மை, தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக் கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப் பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ளவர்களுக்கு சொல்லிக்கொடுப்பர். 

அந்த ஏழு நிறங்கள் என்னென்ன....?
1.கருப்பு,
2.நீலம்,
3.பச்சை,
4.சிவப்பு,
5.பொன்மஞ்சள்,
6.வெள்ளை 
மற்றும் எழாவதாக நீர்வண்ணம் (நிர்வாணா)

ஆதி வழிவந்த சித்தர்கள் நடத்திய குருகுலத்தில் இந்த முறைதான் பின்பற்றப்பட்டது. ஒரு மனிதனின் மூளைவளர்ச்சியை இந்த நிறங்கள் குறிக்கின்றன.
      அதாவது நாம் இன்று பேசும் மனுவின் (மனுதர்ம) வர்ணாசிரமம் என்பது பின்காலங்களில் தோன்றியது.
ஆனால் சித்தர்களின் வர்ணாசிரமம் என்பதே ஆதிகாலத்தில் தோன்றியது. அன்று சாதி, மதங்கள் இல்லை. ஓரிரு சமய கோட்பாடுகள் மட்டுமே இருந்தது.
    அதில் குருகுலக் கல்வி சொல்லித்தரப்படும் இடம் ஆசிரமம் என்றும் அழைக்கப்பட்டது. அந்த ஆசிரமத்தில் பின்பற்றப்பட்ட வர்ணப் படிநிலை தான் வர்ணாசிரமமுறை.(வர்ணம்+ஆசிரமம்=வர்ணாசிரமம்)
அதாவது ஆரியம் கட்டமைத்த வருணாசிரம கோட்பாடுகள் அல்ல. சாதி மதங்கள் அல்லாத மனித வாழ்வியல் கல்வி முறைக்கான ஆறு நிறங்களை கொண்ட கோட்பாடு. இது அது வேற இது வேற.

சூரியன் உதிக்கும் முன்பு இருள் சூழ்ந்து இருக்கும் அல்லவா.? அந்த இருள் எனும் மாயையை  ஒளி எனும் ஞானம் கொண்டு விலக்கவேண்டும்  என்ற பொருளில் இந்த வர்ணாசிரமபடிநிலைகள் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இதுவே பின்னாளில் நன்கு வர்ணமாக சகுனித்தனமாடி வருகிறது.
சரி அதை விடுங்கள் நம் சித்தர்களின் வாழ்வியல் கல்வி படிநிலைகளை மட்டும் 
பார்ப்போம்....  

ஒரு சூரிய உதயத்தின் முன்பு நடு இரவில் இருள் வானம் கருமையாக இருக்கும், பிறகு ஒளிக்கதிர்கள் மேல் எழுந்து வரத்தொடங்கும் பொழுது வானில் கருநீல நிறம் தெரியும். அடுத்ததாக தரையின் மேல் உள்ள பச்சைநிறம் நமது கண்களுக்குத் தெரியும். அதன்பிறகு சிவப்பு நிறப் பந்து போல சூரியன் மேல் எழும்பும். சிறிது நேரம் கழித்து பொன்மஞ்சள் நிறத்தில் மின்னும். பிறகு சூரியன் மேல் எழுந்தவுடன் வெள்ளைநிற ஒளி நமது வளிமண்டலத்தை நிரப்பியிருக்கும்.

இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி இந்த நிறங்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இயற்கையைக் கண்ட மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும் என முடிவு செய்து இதுபோன்ற வரிசையைத் தேர்ந்தெடுத்தான் அவன் தான் பண்டைய கால தமிழ் சித்தன் (தமிழ்பார்ப்பான்)
பார்ப்பனன் என்றால் ஆதி சித்தர்களின் இயற்கையை நகர்வுகளை பார்த்து அதன் உண்மைகளை நமக்கு வழங்கிய மஹான்கள்.
இயற்கை அசைவுகளை பார்ப்பான் அதை நமக்கு போதையாக கொண்டு வந்து சேர்ப்பான் அவனே "பார்ப்பான்"

இங்கே சித்தர்களின் வர்ணாசிரம படி நிலை என்பது,  குருகுலத்தில் ஒரு இளம்பருவ மாணவன் உள்நுழையும் பொழுது அவனுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... ஆதலால் இருள் சூழ்ந்த இந்த நிலைக்கு ஏற்றாற்போல் அந்த மாணவனுக்கு கரிய (கருப்பு) நிற சீருடை அளிக்கப்பட்டது.
உதாரணமாக சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு பதினெட்டு படிகளை கடக்க  செல்லும் கன்னி சாமிக்கு முதல் பயணத்தில் ஆடை கருப்பு தானே? முதல் முறையாக சபரி மலை கோவிலுக்கு செல்லும் நபருக்கு அந்த கோவிலை பற்றி எதுவும் தெரியாது அல்லவா.? 
ஆகவே அவரை வழி நடத்தி அழைத்து செல்ல ஒரு குரு வேண்டும் அல்லவா? இங்கே குரு, பதினெட்டு படி, கருப்பு நிற ஆடை இவைகளை சிந்தித்து பாருங்கள் ஐயப்பன் என்கிற "சாஸ்தா" என்பவர் 18படிநிலைகளை கடந்த ஒரு சித்தர் என்பது புரியும்.
 
குருகுலத்தில் ஒரு மாணவன் ஒவ்வொரு பருவத்தைக் கடந்து செல்லும் பொழுதும் அவனுடைய மூளை வளர்சியடையத் தொடங்கும், சிந்திக்கும் ஆற்றல் பெருகும்,
திறமைகள் வளரும். இதன் அடிப்படையில் ஒரு மாணவனுக்கு நிறப்படிநிலையின் அடுத்த நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட்டன. அதாவது வண்ணங்கள் தொடர்ச்சியாக 3ஆண்டுக்கு ஒரு நிறம் என்று மாறி மாறி வரும். மொத்தம் பதினெட்டு ஆண்டுகள் குருகுலக் கல்வி,  ஆனால் இங்கே ஆறு நிறங்கள் தான் உள்ளன
அதனால் பதினெட்டு ஆண்டுகளை மூன்று மூன்று ஆண்டுகளாக மொத்தம் ஆறு பருவங்களாகப் பிரித்தனர். ஒரு பருவத்துக்கு ஒரு நிறம் என வகைப்படுத்தினர். கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து குருகுலத்தில் சேரும் ஒரு ஆறு வயதுப்பாலகன், குருகுலம் முடிந்து வெளியில் செல்லும் பொழுது அறிவாற்றல் மிக்கவானாக, ஒரு பொறுப்புள்ள இளைஞனாக மாறுகிறான். அதாவது இருளில் இருந்து ஒளியை நோக்கிய குருகுலப் பயணத்தின் இறுதில் ஒளிபொருந்தியவனாய் மாறுகிறான். இந்த ஆறு நிலையை கடந்து பின் 
7நிலைக்கு போக வேண்டும் என்று  தீர்மானித்தால் அதற்க்கான நிறம் 
என்ன  தெரியுமா....???

குருகுல கல்வியில் ஆறு படிநிலைகளை தாண்டி ஏழாவது படிநிலையின் வண்ணம்
நீர் வண்ணம் இப்படி பிரித்து பாருங்கள்... 
நீர்+வனம்=நிர்வாணம். 
       ஆறு வர்ணாசிரம வாழக்கையை முடித்த ஒரு குருகுல மாணவன் அவன் விருப்பபடி அவனது வாழ்க்கையை சுயமாக தீர்மானிக்கலாம். அதாவது இல்லற ல் வாழ்க்கையில் இருந்தும் மக்களுக்கு அறநெறிகளை போதிக்கலாம், துறவறம் சென்றும் அவைகளை போதிக்கலாம் என்பது அவரவர் விருப்பம்....

துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது மிக குறைந்தவர்களாகவே இருந்தார்கள். ஆறு வர்ண படிநிலைகளை கடந்து ஞானத்தால் சிறந்து உயர்ந்தவர்கள்  சித்தர்கள். சித்தம் கொண்டு யோக நிலையைகொண்டவர்கள் யோகிகள். 

ஏழாம் வர்ண படிநிலையை சார்ந்தவர்களை சாதாரண மனிதனால் கொல்வது என்பது சாத்தியமில்லை. நிர்வாண நிற படிநிலை என்பது குண்டலினி யோகத்தில் சக்தி பெற்று 
கடவுளுக்கு நிகரான சக்தியை கண்டவர்களை 
மானிட பதறுகள் ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால், ஆறாம் படிநிலைக்குள் இருந்த பல ஆயிர  கணக்கான சித்தர்களை கஸார் பகுதியில் இருந்து எகிப்து தேசத்தில் குடிபுகுந்து அங்கிருந்து இஸ்லாமியர்களால் விரட்டி அடிக்கப்பட்ட  இஸ்ரேல் யூத களப்பினத்தவர்கள். பின்பு தென்னிந்திய மைசூர் அரசனை காம வஞ்சகத்தால் வீழ்த்தி 
மைசூரை கைப்பற்றி பின் தென்னிந்திய சித்தர்களை வதை செய்து கொன்று குருகுல கல்வி முறையை அழிதொழித்து குல கல்வி முறையை கட்டமைத்து அவன் சமூகத்தை மட்டும் உயர்திக்கொண்டான் கஸார் வந்தேறி. 

வர்ணாசிரம படிநிலையில் ஏழாவது நிறமான நீர்வண்ண நிலையை அடைவது மிகக் கடினம்
அது மாணவர் பருவத்துக்குத் தேவைப்படாது என்றதால் ஆறாவது நிறமான வெள்ளை அவர்களின் இறுதி பருவமாகக் கருதப்பட்டது. (சிறுவயதில் துறவறம் செல்ல போதுமான ஞானம் இருக்காது) தமிழக குருகுலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த வர்ண முறையானது ஆசியக் கண்டம் முழுதும் பரவியிருந்தது.

எடுத்துக்காட்டாக இன்றைய கராத்தே பயிற்சியில், இந்தத் தற்காப்புக் கலையைக் கற்கும் மாணவர்களுக்கு வெவ்வேறு நிறங்களில் இடுப்புப் பட்டைகள் வழங்கப்படுவதை அறிவோம். தொடக்க நிலையில் இருப்பவனுக்கு வெள்ளைநிறப் பட்டையும், இக்கலையை முழுதும் கற்றுத் தேரியவனுக்கு கருப்பு நிறப் பட்டையும் கொடுக்கப்படும். இந்த முறை எதைக் குறிக்கும் என்றால் உடல் வலிமையில்லாத ஒருவன், வலிமை பெற்ற ஒரு போராளியாக மாறுவதைக் குறிக்கிறது.

தற்காப்புக் கலைகளைக் கற்கும் பொழுதுமட்டும் நிறங்களின் வரிசை தலைகீழாக இருக்கும். காரணம் கரிய(கருப்பு) நிறத்தில் ஆரம்பித்து வெள்ளை நிறம் வரை செல்வது அறிவு வளர்ச்சியைக் குறிக்கும். வெள்ளை நிறத்தில் இருந்து கரியநிறத்துக்குச் செல்லுதல் உடல் வலிமை அடைவதைக் குறிக்கும்.

ஆனால் இன்றைய கரெத்தேவில் நிறங்கள் சரியான வரிசையில் அமைந்து இருக்காது.
நீலம், பச்சை, மஞ்சள்,சிவப்பு ஆகியவை மாறிமாறி வரும். இதற்குக் காரணம் காலத்தினால் வந்த சிதைவுகள். தமிழ்நாட்டில் உருவான இம்முறை ஆசிய நாடுகளுக்குச் சென்று நடைமுறைக்கு வரும் பொழுது சிறிய மாற்றங்கள் வருவது இயற்கைதான்.

மேலும் ஆசியாவில் உருவான தற்காப்புக் கலைகளான கராத்தே, ஜூடோ, குங்ம்பூ போன்றவற்றிற்கு பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் உலக அளவில் பள்ளிகள் அமைந்தன. ஆக ஈராயிரம் ஆண்டுகளில் உண்மையான நிற வரிசையில் சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் கொள்கையின் கரு மாறவில்லை என்பதே சிறப்பு!

நிற வரிசை என்பது
1.வெள்ளை
2.பொன்னிறம் 
3.சிவப்பு 
4.பச்சை 
5.நீலம் 
6.கருப்பு 
7.நீர் வண்ணம்.

கிராமங்களில் கன்னிமார் கதை சொல்லுவார்கள், எனக்கு என் பாட்டி சொன்ன கதையில்  ஏழு கன்னியில் இளைய கன்னி நிவாவனமாக இருக்குமாம். அது நம்மை (வயசு பசங்களை) பிடித்துகொண்டாள். உடம்பை உருக்கி எலும்பும் தோலுமாய் தோற்றம் கொண்டு கடைசியில் மரணம் அடைந்து விடுவோமாம் இப்படி கதை  சொல்வாங்க  இந்த கதையை நீங்களும் கேள்வி பட்டிருக்கலாம்.

இதில் இரண்டுவகையில்  நமக்கு நன்மையை மறைமுகமாக சொல்லிருக்காங்க 
1.வெயில் நேரத்தில் காடு மேடுகளில் சுற்ற கூடாது என்பதற்காவும், 
2. ஏழு கன்னியில் இளைய கன்னி நிர்வாணமாக இருப்பாள் என்பது 
     7வது வர்ண படிநிலை என்பது நீர் வண்ணம் என்பதை சூசகமாய் சொன்ன கதை தான் அது. 
அந்த ஏழு வண்ணத்தையும் ஏழு வண்ணப்படி நிலைகளின் அடிப்படையில் ஏழு பெண் உருவகங்களை ஏற்படுத்தினர். அப்பெண்கள் ஏழு கன்னிமார் எனப்பட்டனர். இவர்களுக்கு சிலை கிடையாது. நடுகல் மற்றும் பீடம் மட்டுமே உண்டு குருக்குல வகுப்புகள், மாணவர்கள் குடிநீர் மற்றும் பிற நீர்த்தேவைகளுக்காக நீர்நிலைகள் அருகிலேயே இருந்தன, அதனால் கன்னிமார் கோயில்கள் பெரும்பாலும் நீர் நிலைகளின் அருகிலேயே அமைந்துள்ளன.

இனி கன்னிமார் எனும் சப்த கன்னிகளும், 
ஏழு வண்ணங்களும், அந்த ஏழு கிரகங்களும், 
மாந்திரீகதின் அவைகளின் செயல் பாடுகளும் என இன்னும் ஆழமாக தெரிந்துகொள்வோம் காத்திருங்கள் நன்றி.

Sunday, December 1, 2024

ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் வழிபாடு...

வேண்டிய வரம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்த்திகை மாதத்தில் ஒன்பது நாட்கள் மட்டும் ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் போதும்.
கார்த்திகை மாதம் என்பது சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பலரும் சிவபெருமானை வழிபாடு செய்வார்கள், முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள், ஐயப்பனை வழிபாடு செய்வார்கள், அம்மனை வழிபாடு செய்வார்கள், பெருமாளை வழிபாடு செய்வார்கள். பலரும் அறியாத ஒரு வழிபாடு தான் ஆஞ்சநேயர் வழிபாடு. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கார்த்திகை மாதத்தில் ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

**ஆஞ்சநேயர் வழிபாடும்**

காரிய தடையை நீக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அவரைப் போலவே காரிய தடையை நீக்கக்கூடிய தெய்வமாகவும் கலியுகத்தில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிற தெய்வமாகவும் ஆஞ்சநேயர் திகழ்கிறார். எந்த ஒரு தெய்வத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த தெய்வத்திற்கு இருக்கிறது என்றால் அது ஆஞ்சநேயர் தான். ஆஞ்சநேயரின் பெயரை கூறாமல் இராமா என்ற இரண்டு எழுத்து மந்திரத்தை மட்டும் கூறினாலே ஆஞ்சநேயரின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆஞ்சநேயர் வழிபாட்டை கார்த்திகை மாதத்தில் எந்த நாள் வேண்டுமானாலும் செய்ய தொடங்கலாம். தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து கொள்ளுங்கள். எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வேண்டுதலை முன்வைத்து இந்த வழிபாட்டை ஒன்பது நாட்களும் மேற்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய ஆஞ்சநேயரின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

கிழியாத நல்ல வெற்றிலையாக 9 வெற்றிலையை வாங்கிக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் அல்லது சந்தனத்தை பன்னீர் ஊற்றி குலைத்து ஒரு குச்சியால் ராமா என்று ஒவ்வொரு வெற்றிலையிலும் எழுத வேண்டும். இப்படி எழுதிய வெற்றிலை முற்றிலும் காய்ந்த பிறகு நூலை வைத்து பூ கட்டுவது போல் இந்த வெற்றிலையை மாலையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மாலையை ஆஞ்சநேயரின் படத்திற்கு சாற்ற வேண்டும். பிறகு ஆஞ்சநேயருக்கு ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பின்வரும் இந்த மந்திரத்தை ஒரே ஒருமுறை கூற வேண்டும்.

**மந்திரம்**

ஓம் ஐம் ப்ரீம் ஹனுமதே ஸ்ரீ ராம தூதாய நமஹ

இந்த முறையில் தினமும் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். தினமும் வெற்றிலை மாலை சாற்ற இயலாதவர்கள் முதல் நாளும் ஒன்பதாவது நாளும் மட்டும் சாற்றினால் போதும். ஆனால் இந்த மந்திரத்தை 9 நாட்களும் தொடர்ச்சியாக சொல்லி உங்களுடைய வேண்டுதலை ஆஞ்சநேயரிடம் முன்வைக்க வேண்டும்.

இந்த முறையில் ஆஞ்சநேயரை முழுமனதோடு வழிபாடு செய்து உங்களுடைய வேண்டுதலை முன் வைக்கும் பொழுது ஆஞ்சநேயர் உங்களுடைய வழிபாட்டை முழுமனதோடு ஏற்று வேண்டுதலை நிறைவேற்றுவார்.