Sunday, November 4, 2012

சும்மா இரு; சுகம் அறி!


சொல் அற சும்மா இரு ... சொல் ஒழித்து மெய்ஞான உணர்வு பெற்று மோன நிலை அடைந்து இருப்பாய்,


உரை ஒழித்து சும்மா இரு ..

... என உபதேசித்த மாத்திரத்தில் என்ன ஆச்சரியம். (அ + மா ...அந்த மாப் பொருள்) அந்த பெரிய பொருளை நான் அறியவில்லையே என்பது
இவர்கள் கூற்று. பாடலின் மெய்ப்பொருளை அறியாமலேயே சொல்லியதாகும் அது இது என்ற சுட்டுணர்வும் பேத உணர்வும் போய், யாவற்றையும் அவனாகவே பார்ப்பது அன்றி வேறு எந்த நன்மையையும்நான் அறியவில்லை.

சும்மா இருக்கும் சுகமறியனே...

   சும்மா இருப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதை தானே உணர்ந்ததால் தான் தாயுமான சுவாமிகள் 

அது எவ்வளவு முடியாததொன்று என்பதை தாயுமானவரே பாடியிருக்கிறார்.கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடிவெம் புலிவா யையும் கட்டலாம் ஒருசிங்க முதுகின் மேற்கொள்ளலாம்
கட்செவி யெடுத்தாட் டலாம்
வெந்தழலி னிரதம்வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்றுண் ணலாம்
ஐந்து லோகத்தையும் கையில் கொண்டு
வேறொருவர் காணாமல் உலகத்து உலவலாம்
விண்ணவரை ஏவல் கொளலாம்
சந்ததமும் இளமையொடிருக்கலாம்
சலம் மேல் நடக்கலாம் கனல்மே லிருக்கலாம்
சிந்தையை அடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது.

......... விளக்கவுரை .........


மதங் கொண்ட யானையை வசப்படுத்தி நடக்க விடலாம்
கரடி புலிகளின் வாயைக்கட்டி, சிங்கத்தின் முதுகிலேறி சவாரி செய்யலாம்
காதை தனியே எடுத்து ஆட்டலாம்
யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி விற்று சாப்பிடலாம்
யார் கண்ணிலும் படாமல் உலகத்தில் நடமாடலாம்
வானிலுள்ள தேவர்களுக்கு கட்டளையிட்டு வேலை வாங்கலாம்
எந்த வயதிலும் இளமை பொருந்திய உடலோடிருக்கலாம்
நீரின் மீது நடக்கலாம் நெருப்பின்மீது இருக்கலாம்
எண்ணங்கள் எழாமல் அடக்கி சும்மா இருக்கக்கூடிய திறன் என்பது அரிதானது, எளிதானதல்ல...


வலம் புரிஜானை பார்க்க
ஒரு நண்பர் வந்திருக்கிறார், அவருடன் ஒரு இளைஞர் பரஸ்பர விசாரிப்புக்குப்பின்
வலம்புரிஜான் நண்பரிடம், தம்பி யாரு, என்ன செய்கிறார் என்று கேட்க
நண்பர் தம்பியின் பேரைச் சொல்லி சும்மாதான் இருக்கிறார் என்று சொல்ல
வலம்புரிஜான், ‘அது ரொம்ப கஷ்டமான வேலையாச்சே’என்று சொல்லியிருக்கிறார்.சும்மா இருப்பது  என்பது கேலிக் குறியதல்ல.
எவ்வளவு கஷ்டமானது என்பதைத்தான் தாயுமானவ சுவாமிகள் கூறியுள்ளார்.

பரஞ்ஜோதி பாபா பார்க்க 

அப்படியெல்லாம் சொல்வதில்லை ஆனால் அவர் அருகேயமர்ந்தால் சும்மா இருக்கும் சுகமறியலாம் ‘அந்த சும்மா இருத்தல்’ பணத்தால் பதவியால் லௌகீக எந்த அளவிடலிலும் அடங்காத
பெருஞ்செல்வம். வேண்டுதல் வேண்டாமை இல்லாத சும்மா இருத்தல்.

இனிப்புக் கடையில் சிக்கிக் கொண்ட எறும்பு இனிப்பு சாப்பிடமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது போலத்தான் சும்மா இருப்பது.
விளையாட்டு மைதானத்திற்கு குழந்தையை கூட்டிப்போய் விட்டு எதுவும் விளையாடாதே சும்மா இரு என்பது போலத்தான்…..

Thank:Saamakodai


Tamil speech about StayIdle [ சும்மா இரு ] by Dr.Dheena Dayalan:

StayIdle [ சும்மா இரு ] Brahmam [2hrs.28m]: http://www.mediafire.com/?xpitr1e4kqd0e8n
StayIdle [ சும்மா இரு ] Q&A [2hrs.33m]: http://www.mediafire.com/?ke4s9fus7ys44rc
Dr Dheena Dayalan his site : http://suthasivam.blogspot.com/
Thanks - Regards

Harimanikandan.V
chamundihari@gmail.com

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் நமசிவய‌, யநமசிவ‌சிவயநம‌வயநமசி ,சிவயசிவ‌ ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)1 comment:

 1. சும்மா இரு - என்று தியானத்தை விளக்கிய கூற்று மிக அருமை
  தியானத்ததின் பயன்களை மறைமுகமாக செவ்வனே விளக்கிய விதம் தாயுமனவருக்கே சாரும்
  பாடலின் கருத்து எளிய பழமொழியினை புதையுண்ட பொன்மணி விளக்கங்கள் விவரிக்க முடியாத பொதிகை
  கடுகில் உள்ள காரத்தை விட தங்களின் பழமொழி மிக்க அருமை
  அன்பன் வை,பூமாலை சுந்தரபாண்டியம்

  ReplyDelete