பயம்
அன்புடையீர் உலகத்திலே பயம் என்ற ஒன்று நம் எல்லாரிடத்திலும் எல்லா நேரங்களிலும் உள்ளது . உதாரணமாக இவனால் என்ன வம்பு வருமோ ...,இதை சாபிட்டால் அந்த நோய் வருமோ ..., மகன் பள்ளிக்கு போனானே போய் சேர்ந்தானோ ... இப்படி எப்போதும் இதை கண்டால் பயம் அதை கண்டால் பயம் என்று பயந்து கொண்டே இருக்கிறோம் . பயத்தில் பெரிய பயம் மரண பயம். ஒருவன் தன்னை பயத்தில் இருந்து காத்து கொள்ள கடவுளை நாடுகிறான் . கடவுளை அதிகம் வேண்டுபவர் அதிகம் பயந்தவராவர் . கடவுள் அதிகமான சக்தி வாய்ந்தவர் பயம் அவரிடம் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆழ் மனதில் நம்பிக்கை உடையவராக இருப்பார் .
பிரபஞ்சமே இறைவனாக ஆன்மாவாக இருப்பதை அறிந்துவிட்டால் பிரபஞ்சத்தில் உள்ளவை அனைத்தும் இறைவன் என்று புரிந்துவிடும்.அவ்வாறு தெளிந்துவிட்டால் இன்பம் துன்பம் இரண்டுமே இறைவன் என்று தெரிந்துவிடும் . இன்பம் துன்பம் என்ற முகமூடியை கொண்டு நம்மை ஏமாற்றுகிறான் என்பது புரிந்துவிடும் . இதனால் மனதில் பயம் என்னும் சலனம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து சலனமற்ற நிலைக்கு வந்துவிடும்.
இனி கடவுளை வேண்டுவது குறைந்து விடும் . கடைசியில் வேண்டுவது நின்றே போய்விடும் . கடவுள் நம்மை காப்பவர் கருணையே வடிவானவர் அவரால் நாம் நஷ்டமடையோம் என்ற உண்மை தெரிந்தவுடன் வேண்டுதல் இல்லாமல் போய்விடும் . எல்லா நிகழ்வுகளும் நன்மைக்கே என்ற தெளிவு ஏற்படும் . எல்லாம் பகவான் என்று தெளிந்தவுடன் மன சலனம் முழுமையாய் மறைந்துவிடும் .பயம் அகன்றுவிடும் . கடைசியாக மரண பயமும் அகன்று போகும் .
மரணத்தை கொண்டுவரும் நோய் ,விபத்து ,மூப்பு போன்ற எல்லாமே பிரபஞ்ச பொருள்கள் தான் . பிரபஞ்சம் என்பது இறைவனாகும் . இறைவனால் துன்பம் எதுவும் வராது என்ற தெளிவு வந்துவிட்டால் , சலன மற்ற நிலைக்கு வந்துவிட்டால் ,எண்ணம் அற்ற நிற்குண நிலை வந்துவிட்டால் , மரண பயத்தை கடந்து விட்டால் மரணமில்லா பெறு வாழ்வை அடையலாம் .
ஆகையால் பயமற்ற ,எண்ணம் அற்ற, நிற்குணத்தில் சலனமில்லாமல் சும்மா இருக்க பழகுவோம் .
......உயிர்.
TRY TO BE IN SUMMA IRU STATE BY SURRENDERING OURSELF TO THE SUTHASIVAM AND PRAY SUTHASIVAM TO TAKEOVER OURSELF TO GIVE DEATHLESS LIFE.
ellaam sivan seyal..sathaa avan naamam jebippom..thunbankalai virattuvom..bayathai olippom......OUM NAMASIVAYA....SIVAAYA NAMA OUM..
ReplyDelete