Monday, April 7, 2014

சுழுமுனை தியானம்



அகத்தியர் பாடல்

மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசமெட்டும் பதியவிடங் சுழுமுனை என்றதற்கு பேராம் வேறுபெயர்கள் அடிமுடி, சொல்லற்ற இடம், ஒடுக்கம் , வஸ்து. மவுனம், கேசரம்


சுழுமுனை என்பது அண்ணாக்கிற்கு மேல் உள்ளயிடம். மனத்தை சுழுமுனையில் நிறுத்தி வாசி இடகலை மற்றும் வடகலை அக்னியில் கூடி மூன்றும் ஒன்றாகும். உள் சென்ற காற்று பத்தாம்வசலில் ஏறும், மூக்கில் காற்று வெளியே வராது. ஐந்து புலன்களும் ஒடுங்கும். ரவிமதிசுடர் மூன்றும் ஒன்றாகி உஷ்ணம் கிழே பாயும். உஷ்ணம் உடம்பை வேதித்து காயசித்தி உண்டாகும்.

சுழுமுனை தியானம் 

நன்றாக கால்களை மடித்து நேராக அமர்ந்துகொள்ளுங்கள். கண்களை மூடிகொள்ளுங்கள். மனதை அண்ணாக்கிற்கு நேரே சுழுமுனையில் நின்று, நாக்கை மேலண்ணத்தில் அழுத்தி, பின் தொண்டையில் காற்றை அழுத்தி சுழுமுனையை நோக்கி செலுத்தவும். மனதை அழ்ந்த அமைதியில் வைத்திருக்கவும். காற்றின் அசைவை மேல்நோக்கி மனதையும் சேர்த்து அண்ணாகிற்கு மேல் செலுத்தவும். சிறுதுகாலம் சென்றபெறகு பலபல வண்ணங்கள் தோன்றும். பின் கடைசியாக ஒரு சிருஒளி வெண்மை நிறத்தில் தோன்றும் பின் அதுவே வளர்ந்து அளவில்லாத எல்லையிலததாக மாறிவிடும். இப்போது கண்ணை மூடினால் இருட்டு தெரியாது வெறும் வெளிச்சம் தான் தெரியும். பின்னர் அந்த வெள்ளை ஒளிக்குள் ஒரு பொன்னிற ஒளி தோன்றும். அதுவும் எல்லையில்லாமல் வளர்ந்துவிடும். பின்னர் அந்த பொன்ஒளிகுள். ஒரு செவ்வொளி தோன்றும். அந்த ஒளி எங்கும் எல்லையில்லாமல் வளர்ந்து நிக்கும். பின் அந்த ஒளிக்குள் ஒரு ஒளி உருவாகும் அது வந்து வந்து செல்லும். இதுவே நடராஜர் நடனம் ஆகும். பொன்னமம்பலம் மேடையில் நடராஜர் நடனம் நடக்கும். இப்போது நாம் ஒரு பொருளாகவும் செவ்வொளி ஒரு பொருளாகவும் இறுக்கும். பின்னர் நீ நான் என்று வேறுபாடு இல்லாமல் அந்த பொன்னம்மபலமே மிஞ்சும். (அட்டகம் -- தந்தனை தன் மயமாக்கி ....). பின்னர் எல்லையில்லா ஆனந்தம் உடலில் பாயும். வானவேடிக்கை நடக்கும் ஆயிரதுஎட்டு தாமரை இதழ் மேல் சிவலிங்கம் தோன்றி மறையும். அதன் பின்னர் இப்போது கூடவே சங்கு ஓசையும் பின்னர் சலங்கை ஓசையும் கேட்கும். பின்னர் அமைதி நிலவும். பின்னர் பொன்னம்பலத்தில் ஒரு ஓட்டை ஏற்படும் அதுதான் சொர்கவாசல் திறப்பதாகவும். ( காகபுஜண்டர் பாடல் -- கொல்லிமலை ஏறி குகையை கண்டு குகையில் இருந்து தவமே செய்தால் ....) . இப்போது உள்ளே செல்லும் காற்று வெளியே வராது. இடகலை, பிங்கலை மற்றும் பொன்னம்பலம் மூன்றும் ஒன்றாகிவிடும் இதுவே முச்சுடர் ஆகும்.( அகத்தியர் பாடல் -- ரவிமதிசுடர் மூன்றும் ஒன்றது ஆகும் பின்னர் தணலாய் கீழ் நோக்கி பாயும் .....) கனல் போல் உடலில் வெப்பம் பரவும். உடல் வெப்பத்தில் வேதிக்கபடும். பின்னர் எல்லா காட்சிகளும் மறைந்து நான் நீ என்ற இரு நிலையும் இல்லம்மல் போகும். இப்போது பத்து திசைகளும் தெரியும் உங்கள் உடல் பற்றிய நினைப்பு மறைந்து எல்லையில்லாமல் நாமே விரிந்து விளங்கும். பின்னர் அந்த நிலையும் போய் இப்போது இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. இதுவே சும்மா இருக்கும் இடமாகும். அந்த நிலையில் எவ்வளவு நேரம் நீடித்தது என்றும் தெரியாது. கண்ணை திறந்தால் சிலமணி நேரம் கடந்து இருக்கும். இதுவே அருட்பெரும் ஜோதி அனுபவமாகும். இந்தநிலையை அடைந்த பிறகே அறிவு துலங்க ஆரம்பிக்கும். தன்னை பற்றிய அறிவும், உலகத்தின் இயக்கம் மற்றும் இறைநிலை பற்றிய அறிவும் விளங்கும். இதன் பின்னர் ஞான பாதை துலங்கும். அதன் பின்னர் என்னவாகும் என்று ஆண்டவர் அறிவித்தபின் எழுதுகிறேன்.



கண்களின் ஒளி --- நட்சத்திர ஒளி .
மனதின் ஒளி --- வெள்ளை ஒளி .
ஜீவனின் ஒளி --- பொன் ஒளி.
ஆன்மாவின் ஒளி --- செவ்வொளி

ஆன்மாவுக்குள் -- பதியாக அருட்பெரும்ஜோதி ஆண்டவர் விளங்குகிறார். நானே கடவுள் என்று சொல்லுவதை விடுத்தது என்னுள் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இருக்கிறார் என்பதை உணர்ந்து தத்துவ நிவர்த்தி செய்து அவரோடு கலப்பதே சித்தி நிலையாகும்.



--- உயிர்.
Thank to: Dr Dheena Dayalan : https://suthasivam.blogspot.com/

2 comments:

  1. sir not able understand , மனதை அண்ணாக்கிற்கு நேரே சுழுமுனையில் நின்று, நாக்கை மேலண்ணத்தில் அழுத்தி, பின் தொண்டையில் காற்றை அழுத்தி சுழுமுனையை நோக்கி செலுத்தவும்.

    ReplyDelete
  2. Vanakkam ayya thangalidam neril katru kollalaama intha thiyanaththai illai online vaguppu ethavathu unda ayya? Thayavu seithu kooravum ayya.

    ReplyDelete