Wednesday, April 23, 2014

தமிழக பஞ்சபூத ஸ்தலங்களை


உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்) 

சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள்
1. திருவானைக்காவல் –நீர்,
2. ஸ்ரீகாளகஸ்தி (வாயு),
3. தில்லை சிதம்பரம் – ஆகாயம்.
4. காஞ்சீபுரம் – நிலம்.
5. திருவண்ணாமலை –நெருப்பு.


மகாவிஷ்ணுவின் பஞ்சபூத தலங்கள்
1. அழகர் கோவில் (மதுரை) – நீர்,
2. திருப்பதி – வாயு (காற்று),
3. ஸ்ரீரங்கம் – ஆகாயம்.
4. திருகண்ணபுரம் (திருவாரூர் மாவட்டம்) –  நிலம்.
5. திருஆத்வீர் – அக்னி (நெருப்பு).

மதுரை
1.நீர்- திருவாப்புடையார் கோயில் - செல்லூர்
2.காற்று-முக்தீஸ்வரர் கோயில் - தெப்பக்குளம்
3.ஆகாயம்- மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
4.நிலம்- இம்மையில் நன்மைதருவார் கோயில்-மேலமாசிவீதி
5.நெருப்பு-தென்திருவாலவாய் கோயில்-தெற்கு மாசிவீதி

சென்னை
1 நீர் -  கங்காதரேசுவரர்-புரசைவாக்கம்
2 வாயு - காளத்தீசுவரர் -பவளக்காரத்தெரு,பாரிமுனை
3 ஆகாயம் - சிதம்பரேசுவரர் ஆலயம் - சூளைமேடு  
4 மண் - ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவி -தங்கச்சாலை
5 நெருப்பு - அருணாச்சலேசுவரர் - சவுகார்ப்பேட்டை

தென் தமிழகம் 
நீர் -  தாருகாபுரத்தி மத்தியஸ்தநாதர் கோயில்
வாயு - தென்மலை பிரகதீஸ்வரர் கோயில்
ஆகாயம் -தேவதானம் நச்சாடைதவிர்த்தருளியசுவாமி கோயில்
மண் - சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோயில்
நெருப்பு - கரிவலம்வந்தநல்லூரிலுல்ல பால்வண்ணநாதர் கோயில்

அன்பர்கள் இந்த பஞ்சபூத ஸ்தலங்களை, சிவராத்திரி, பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமியன்று ஒரே நாளில் வலம் வந்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்...


No comments:

Post a Comment