திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்ய அழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்...
We need volunteers for feast service ,if you are interests please register with us.
Harimanikandan .V
மதுரை பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்தசபை சார்பாக கடந்த 14 ஆண்டுகளாக மீனாட்சி–சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தன்று விருந்து வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகள் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திலும், கடந்த 4 ஆண்டுகளாக சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டும் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 12,000 சதுர அடி சாமியானா பந்தலில் வருகிற 10–ந்தேதி அன்று காலை முதல் சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு திருக்கல்யாணம் விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தில் கல்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சாம்பார் சாதம், தக்காளிசாதம், தயிர்சாதம், உருளைக்கிழங்கு கூட்டு, பச்சடி, ஊறுகாய், தண்ணீர் பாக்கெட்டுடன் பாக்கு தட்டில் வைத்து வழங்கப்படும்.
இந்த விருந்துக்கு தேவையான எல்லா காய்கறிகளையும் பரவை மார்க்கெட் மற்றும் மாட்டுத்தாவணி மார்க்கெட் வியாபாரிகள் கொடுக்கிறார்கள். மேலும் விருந்துக்கு தேவையான அரிசியை பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை உறுப்பினர்களும், பக்தர்களும் கொடுக்கின்றார்கள்.
மேலும் விருந்துக்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி கொடுக்க விரும்புவோர் 8,9–ந்தேதிகளில் விருந்து நடைபெறும் சேதுபதி பள்ளியிலேயே கொடுக்கலாம். 9–ந்தேதி மாலை 4 மணி முதல் சேதுபதி பள்ளியில் உள்ள ரமணா ஹாலில் காய்கறிகள் வெட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதில் ஈடுபட விரும்புவோர் தங்கள் வீட்டிலிருந்து அரிவாள்மனை, கத்தியுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
9–ந்தேதி (வெள்ளிக் கிழமை) இரவு மாப்பிள்ளை விருந்தும் பக்தர்களுக்கு வழங்கப்படும். உணவு வழங்கும் சேவை செய்ய விரும்புபவர்கள் 8–ந்தேதி தங்கள் புகைப்பட அடையாள அட்டையுடன் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை அமைப்பாளர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
Thank to https://www.maalaimalar.com/2014/05/05101803/meenakshi-amman-thirukalyanam.html
Thanks & Regards
Harimanikandan .V
ஹரிமணிகண்டன்
Be Good & Do Good
No comments:
Post a Comment