Tuesday, October 21, 2014

Kedhara Gowri vradham book pdf

மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் - கேதார கௌரி விரதம் ..




                Kedhareshvara Vratam



கேதார கௌரி நோன்பு விரத மகிமை

“முனிவர்களே! இப்போது சர்வ கல்யாணங்களுக்கும் காரணமான கேதார விரதத்தின் மகிமைகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இந்தக் கேதார விரதமானது, புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அஷ்டமியில் ஆரம்பித்து, இருபத்தியோரு நாட்கள் முடியும் வரையிலும் முறைப்படி அனுஷ்டிக வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தின் முடிவு தினத்திலும், முறைப்படி அனுஷ்டித்து நியமத்துடன் உணவு உட்கொள்ள வேண்டும். எவனொருவன் சகல மனோ விருப்பங்களையும் அடையக்கூடிய இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறானோ, அவன் இந்த உலகத்தில் சகலவிதமான போகங்களையு அனுபவித்துவிட்டு, முடிவில் மோக்ஷத்தையும் அடைவான்.
முன்பொரு சமயம் ஸ்ரீகௌரிதேவி இந்த விரதத்தை அனுஷ்டித்து, அதன் மகிமையால் சிவபெருமானின் பாதி உடலைப்பெற்று மகிழ்ந்தாள். திருமாலும் அவ்வாறே வைகுண்டத்திற்கு அதிபதியாக விளங்கினார். பிரும்மதேவனும் அதன் பயனாகவே அன்னத்தை வாகனமாக அடைந்தார். அஷ்டதிக்குப் பாலகர்களும் இந்த விரதத்தை அனுஷ்டித்து அந்த வினாடியிலேயே பிரும்ம தேவனுடைய சாபத்திலிருந்தும் விடுதலை பெற்றார்கள். இதேபோன்று முன்பொரு பாக்கியவதி, புண்ணியவதி என்னும் பெண்மணிகள் இருவர், இந்த விரதத்தை அனுஷ்டித்ததின் பயனாக அளவற்ற ஐஸ்வரியங்களை அடைந்து மகிழ்ந்தார்கள். நற்குணம் வாய்ந்த பிராமணச் சிரேஷ்டர் ஒருவர் உமாபதியின் பிரியத்திற்குப் பாத்திரமான இந்த விரதத்தை அனுஷ்டித்து ஒப்பற்றவர்களான நூறு புத்திரர்களைப் பெற்றெடுத்தார். அப்பிள்ளைகளையும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கச் செய்த அவர், நீண்ட காலம் அவர்களோடு சேர்ந்து பலவிதமான போகங்களையும் அனுபவித்துவிட்டு, முடிவில் சிவலோகத்தை அடைந்து, மோக்ஷத்தையும் பெற்றார். இதுபோலவே கௌரிநாதருக்கு பிரீத்தியளிக்கக் கூடிய இந்த விரதத்தை அனுஷ்டித்து மோக்ஷமடைந்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். ஆகையால் இந்தச் சிறப்பு வாய்ந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ, அல்லது கேட்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் பல போக பாக்கியங்களையும் அனுபவித்துவிட்டு முடிவில் ஈடு இணையற்ற மோக்ஷத்தையும் அடைவார்கள்”. இவ்வாறு தவ சீலரான சூதமாமுனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு கூறினார்.
            - ஸ்ரீகந்த புராணம்; உபதேச காண்டம்.
https://www.shaivam.org/siddhanta/feskedhara-vrata-mahimai-tam.htm




கேதாரநோன்பு விரத பூஜை

விக்நேச்வர பூஜை :

(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)
 
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே  
 கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|  
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே  
 ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||  
 
 அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி  
 மஹா கணபதிம் ஆவாஹயாமி 
 
    மஹாகணாதிபதயே  ஆஸநம்     ஸமர்ப்பயாமி  
 " " அர்க்யம்    " 
 " " பாத்யம்    " 
 " " ஆசமநீயம்    "  
 " " ஔபசாரிகஸ்நாநம்  "  
 " " ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் "  
 " " வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந்  "  
 " " யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் "  
 " " கந்தாந் தாரயாமி   "  
 " " கந்தஸ்யோபரி அக்ஷதாந்  "  
 " " அலங்கரணார்த்தம் அக்ஷதாந் "  
 " " ஹரித்ரா குங்குமம்  "  
 
    புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.) 
 
 ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம: 
  "   ஏகதந்தாய நம:  "   கணாத்யக்ஷாய நம:  
  "   கபிலாய நம:  "   பாலசந்த்ராய நம:  
  "   கஜகர்ணகாய நம:  "   கஜாநநாய நம:  
  "   லம்போதராய நம:   "   வக்ரதுண்டாய நம:  
  "   விகடாய நம:  "   ச்சூர்ப்ப கர்னாய நம:  
  "   விக்நராஜாய நம:  "   ஹேரம்பாய நம:  
  "   கணாதிபாய நம:  "   ஸ்கந்த பூர்வஜாய நம:  
 
    ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. 
 
  தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. 
 (வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.) 
நிவேதந மந்த்ரங்கள் :
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.
 
 ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே  
 குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி. 
 மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்) 
 
 அம்ருதாபிதாநமஸி - உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம்  
 எடுத்து விடவும்)  
 
 தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்)  
 (கற்பூரம் ஏற்ற வேண்டும்.) 
 நீராஜநம் ஸமர்ப்பயாமி. 
 நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)  

பிரார்த்தனை :

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப | அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் செய்யவும்) கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில் தரித்துக் கொள்ள வேண்டும்)
ப்ராணாயாமம் :
ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: - ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந: ப்ரசோதயாத் - ஓமாப: - ஜ்யோதீரஸ: - அம்ருதம் ப்ரஹ்ம - பூப்ர்புவஸ்ஸுவரோம்.  
ஸங்கல்பம் : 
அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.
விக்நேஸ்வர உத்யாபநம் :
உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு, "விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச" என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

ப்ரதாந பூஜை

பூஜா ஆரம்பம் :

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் | ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே || ப்ராணாயாமம் : ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: - ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந: ப்ரசோதயாத் - ஓமாபோ: - ஜ்யோதீ ரஸ: - அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ் ஸுவரோம்.

ஸங்கல்பம் :

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்--சுபே சோபநே முஹூர்த்தே--ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே--ச்வேத வராஹ கல்பே--வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே--ப்ரதமே பாதே--ஜம்பூ த்வீபே--பாரத வர்ஷே--பரத கண்டே--மேரோ; தக்ஷிணே பார்ச்வே--சகாப்தே--அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே--ப்ரபவாதி ஷஷ்டிஸம்வத்ஸராணாம் மத்யே. . . . நாம ஸம்வத்ஸரே ருதௌ மஸே பக்ஷேசுபதிதௌ. . . . வாஸரயுக்தாயாம். . . . நக்ஷத்ர. . . . யுக்தாயாம் ச ஏவங்குணவிசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம். . . . சுபதிதௌ அஸ்மாகம் ஸஹகுடும்பாநாம் க்ஷேமஸ்த்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்யைச்வர்யாபி வ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷசதுர்வித பல புருஷார்த்த ஸித்த்யர்த்தம், புத்ரபௌத்ராபி வ்ருத்த்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்த்யர்த்தம் மநோவாஞ்சா பல ஸித்த்யர்த்தம் கேதாரேச்வர வ்ரத பூஜாம் கரிஷ்யே. | என்று ஸங்கல்பம் செய்க.
விக்நேச்வர உத்யாபநம் :
விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. (என்று கூறி மஞ்சள் பிள்ளையார்மீது புஷ்பம் அக்ஷதை சமர்ப்பித்து வடக்காக நகர்த்த வேண்டும்.)

கலச பூஜை :

(சந்தநம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை அலங்கரித்து வலது கையால் மூடிக்கொண்டு) கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : | மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: || குக்ஷெள து ஸாகரா: ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா | ருக்வேதோ ஸ்த யஜுர்வேத: ஸாமவேதோப்யதர்வண : || அங்கைச்ச ஸஹிதா: ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : | ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷயகாரகா: || கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி | நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு || (என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், ஸ்வாமியையும் தன்னையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க.) சுலம் டமருகம் சைவ ததாநம் ஹஸ்த யுக்மகே | கேதாரதே தேவ மீசாநம் த்யாயேத் த்ரிபுர காதிநம் || கேதாரேச்வரம் த்யாயாமி கைலாஸ சிகரே ரம்யோ பார்வத்யா ஸஹித ப்ரபோ | ஆகச்ச தேவ தேவேச மத்பக்த்யா சந்த்ர சேகர் || கேதாரேச்வரம் ஆவாஹயாமி ஸுராஸுர ச்ரோரத்ந ப்ரதீபித பதாம்புஜ | கேதார தேவ மத்தத்த மாஸநம் ப்ரதிக்ருஹ்யதாம் || கேதாரேச்வராய ஆஸநம் ஸமர்ப்பயாமி. கங்காதர நமஸ்தேஸ்து த்ரிலோசந வ்ருஷத்வஜ | மௌக்திகாஸந ஸம்ஸ்த்தாய கேதாராய நமோநம: || கேதாரேச்வராய பாத்யம் ஸமர்ப்பயாமி. அர்க்யம் க்ருஹாண பகவந் பக்த்யா தத்தம் மயேச்வர | ப்ரயச்ச மே பகவந் க்ருஹாணாசமநம் விபோ || கேதாரேச்வராய அர்க்யம் ஸமர்ப்ப்யாமி. முநிபிர் நாரதப்ரக்யைர் நித்யமாக்யாத வைபவ | கேதார தேவ் பகவந் க்ருஹாணாசமநம் விபோ || கேதாரேச்வராய ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. கேதாரதேவ பகவந் ஸர்வலோகேச்வரப்ரபோ | மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி க்ருஹாணத்வம் சுபங்கர || கேதாரேச்வராய மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி. ஸ்நாநம் பஞ்சாம்ருதைர் தேவ ச்ரிதம் சுத்தோதகைரபி | க்ருஹாண கௌரீ ரமண த்வத்பக்தேந மயார்ப்பிதம் || கேதாரேச்வராய பஞ்சாம்ருதஸ்நாநம் ஸமர்ப்பயாமி. நதீஜலம் ஸமாயுக்தம் மயா தத்த மநுத்தமம் | ஸ்நாநம் ஸ்வீகுரு தேவேச ஸதாசிவ நமோஸ்து தே || கேதாரேச்வராய சுத்தோதகஸ்நாநம் ஸமர்ப்பயாமி. வஸ்த்ரயுக்மம் ஸதா சுப்ரம் மநோஹரமிதம் சுபம் | ததாமி தேவதேவேச பக்த்யேதம் ப்ரதிக்ருஹ்யதாம் || கேதாரேச்வராய வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி. ஸ்வர்ண யஜ்ஞோபவீதம் சகாஞ்சநம் சோத்தரீயகம் | ருத்ராக்ஷ மாலயா யுக்தம் ததாமி ஸ்வீகுரு ப்ரபோ || கேதாரேச்வராய யஜ்ஞோபவீதோத்தரீயே ஸமர்ப்பயாமி. ஸமஸ்த கந்தத்ரவ் பாணாம் தேவ த்வமஸி ஜந்மபூ: | பக்த்யா ஸமர்ப்பிதம் ப்ரீத்யா மயா கந்தாதி க்ருஹ்யதாம் || கேதாரேச்வராய கந்தாந் தாரயாமி. அக்ஷதோபி ஸ்வபாவேந பக்தாநா மக்ஷதம் பதம் | ததாஸி நாத மத்தத்தை: அக்ஷதை: ப்ரீயதாம் பவாந் || கேதாரேச்வராய அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. கல்பவ்ருக்ஷ ப்ரஸூநைஸ்த்வ மப்யர்ச்சிதபத; ஸுரை: | குங்குமை: பார்த்திவைரேபி: இதாநீ மர்ச்யதே மயா || கேதாரேச்வராய புஷ்பை: பூஜயாமி.
இந்த்ராதி அஷ்டதிக்பாலக பூஜை
(ஒவ்வொரு பெயருக்கும் உண்டான மந்திரம் சொல்லி புஷ்பம் அக்ஷை சேர்க்கவும்) 1. இந்திரன்: (கிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ரபரிவார ஸமேதம் இந்த்ரம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. 2. அக்நி: (தென்கிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் அக்நிம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. 3. யமன்: (தெற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸ்வாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவாரஸமேதம் யமம் திக்பாலம் த்யாயாமி, ஆவாஹயாமி. 4. நிருருதி: (தென்மேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸ்வாஹநம் ஸசக்திம், பத்நீ புத்ர பரிவார ஸமேதம் நிருருதிம், திக்பாலம் த்யாயாமி, ஆவாஹயாமி. 5. வருணன்: (மேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் வருணம் திபாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. 6. வாயு: (வடமேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம், பத்நீபுத்ர பரிவார ஸமேதம் வாயும் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. 7. குபேரன்: (வடக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம், பத்நீபுத்ர பரிவார ஸமேதம் குபேரம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. 8. ஈசாநன்: (வடகிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் ஈசாநம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி. இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:, ரத்நஸிம்ஹாஸநம் ஸமர்ப்ப்யாமி. பாத்யம் ஸமர்ப்பயாமி. அர்க்யம் ஸமர்ப்பயாமி. ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. ஸ்நாபயாமி. ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. யஜ்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. கந்தாந் தாரயாமி. அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. புஷ்பாணி ஸமர்ப்பயாமி. தூபமாக்ராபயாமி. தீபம் தர்சயாமி. மஹாநைவேத்யம் நிவேதயாமி. தாம்பூலம் ஸமர்ப்பயாமி. மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி. ஸர்வோபசாரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து. பிறகு சிவபெருமானுக்குத் தெற்கில் 'ப்ரஹ்மணே நம:' என்று பிரம்மாவையும், வடக்கில் 'விஷ்ணவே நம:' என்று விஷ்ணுவையும், நடுவில் 'கேதாரேச்வராய நம:' என்று கேதாரேசுவரனையும் அக்ஷதை போட்டு தியானிக்கவும்.

|| அங்க பூஜா ||

மஹேச்வராய நம: பாதௌ பூஜயாமி ஈச்வராய நம: ஜங்கே " காம ரூபாய நம: ஜாநுநீ " ஹராய நம: ஊரு " த்ரிபுராந்தகாய நம: குஹ்யம் " பவாய நம: கடிம் " கங்காதராய நம: நாபிம் " மஹாதேவாய நம: உதரம் " பசுபதயே நம: ஹ்ருதயம் " பிநாகிநே நம: ஹஸ்தாந் " சிவாய நம: புஜௌ " சிதிகண்ட்டாய நம: கண்ட்டம் " விரூபாக்ஷாய நம: முகம் " த்ரிநேத்ராய நம: நேத்ராணி " ருத்ராய நம: லலாடம் " சர்வாய நம: சிர: " சந்த்ர மௌளயே நம: மௌளிம் " பசுபதயே நம: ஸர்வான்யங்காநி " (பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)
|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி ||
ஓம் சிவாய நம: ஓம் மஹேச்வராய நம: " சம்பவே நம: " பிநாகிநே நம: " சசிசேகராய நம: " வாமதேவாய நம: " விரூபாக்ஷாய நம: " கபர்திநே நம: " நீலலோஹிதாய நம: " சங்கராய நம்: (10) " சூலபாணயே நம: " கட்வாங்கிநே நம: " விஷ்ணுவல்லபாய நம: " சிபிவிஷ்டாய நம: " அம்பிகாநாதாய நம: " ஸ்ரீ கண்ட்டாய நம: " பக்தவத்ஸலாய நம: " பவாய நம: " சர்வாய நம: " த்ரிலோகேசாய நம: (20) " சிதிகண்ட்டாய நம: " சிவப்ரியாய நம: " உக்ராய நம: " கபர்திநே நம: " காமாரயே நம: " அந்தகாஸுரஸூதநாய நம: " கங்காதராய நம: " லலாடாக்ஷாய நம: " காலகாலாய நம: " க்ருபாநிதிதயே நம : (30) " பீமாய நம: " பரசுஹஸ்தாய நம: " ம்ருக பாணயே நம: " ஜடாதராய நம: " கைலாஸ வாஸிநே நம: " கவசிநே நம: " கடோராய நம: " த்ரிபுராந்தகாய நம: " வ்ருஷாங்காய நம: " வ்ருஷபாரூடாய நம்: (40) " பஸ்மோத்தூளித விக்ரஹாய நம: " ஸாமப்ரியாய நம: " ஸ்வரமயாய நம: " த்ரயீமூர்த்தயே நம: " அநீச்வராய நம: " ஸர்வஜ்ஞாய நம: " பரமாத்மநே நம: " ஸோமஸூர்யாக்நி லோசநாய நம: " ஹவிஷே நம: " யஜ்ஞமயாய நம: (50) " ஸோமாய நம: " பஞ்சவக்த்ராய நம: " ஸதாசிவாய நம: " விச்வேச்வராய நம: " வீரபத்ராய நம: " கணநாதாய நம: " ப்ரஜாபதயே நம: " ஹிரண்யரேதஸே நம: " துர்தர்ஷாய நம: " கிரீசாய நம: (60) " கிரிசாய நம: " அநகாய நம: " புஜங்கபூஷ்ணாய நம: " பர்காய நம: " கிரிதந்வநே நம: " கிரிப்ரியாய நம: " க்ருத்திவாஸஸே நம: " புராராதயே நம: " பகவதே நம: " ப்ரமதாதிபாய நம: (70) " ம்ருத்யுஞ்ஜயாய நம: " ஸூக்ஷமதநவே நம: " ஜகத்வ்யாபிநே நம: " ஜதக்குரவே நம: " வ்யோமகேசாய நம: " மஹாஸேநஜநகாய நம: " சாருவிக்ரமாய நம: " ருத்ராய நம: " பூதபதயே நம: " ஸ்த்தாணவே நம: (80) " அஹிர்புத்ந்யாய நம: " திகம்பராய நம: " அஷ்டமூர்தயே நம: " அநேகாத்மநே நம: " ஸாத்விகாய நம: " சுத்தவிக்ரஹாய நம: " சாச்வதாய நம: " கண்டபரசவே நம: " அஜாய நம: " பாசவிமோசகாய நம: (90) " ம்ருடாய நம: " பசுபதயே நம: " தேவாய நம: " மஹாதேவாய நம: " அவ்யயாய நம: " ஹரயே நம: " பூஷதந்தபிதே நம: " அவ்யக்ராய நம: " தக்ஷாத்வரஹராய நம: " ஹராய நம: (100) " பகநேத்ரபிதே நம: " அவ்யக்தாய நம: " ஸஹஸ்ராக்ஷாய நம: " ஸஹஸ்ரபதே நம: " அபவர்கப்ரதாய நம: " அநந்தாய நம: " தாரகாய நம: " பரமேச்வராய நம: (108) ஸாம்ப பரமேச்வராய நம:, நாநாவித பரிமளபத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி || என்று சொல்லி புஷ்பம் சேர்க்கவும்.

தோரக்ரந்தி பூஜை :

சிவாய நம: ப்ரதமக்ரந்திம் பூஜயாமி வாஹாய நம: த்விதீயக்ரந்திம் " மஹாதேவாய நம: த்ருதீயக்ரந்திம் " வ்ருஷபத்வஜாய நம: சதுர்த்தக்ரந்திம் " கௌரீசாய நம: பஞ்சமக்ரந்திம் " ருத்ராய நம: ஷஷ்டக்ரந்திம் " பசுபதயே நம: ஸப்தமக்ரந்திம் " பீமாய நம: அஷ்டமக்ரந்திம் " த்ரியம்பகாய நம: நவமக்ரந்திம் " நீலலோஹிதாய நம: தசமக்ரந்திம் " ஹராயே நம: ஏகாதசக்ரந்திம் " ஸ்மர ஹராய நம: த்வாதசக்ரந்திம் " பவாய நம: த்ரயோதசக்ரந்திம் " சம்பவே நம: சதுர்தசக்ரந்திம் " சர்வாய நம: பஞ்சதசக்ரந்திம் " ஸதாசிவாய நம: ஷோடசக்ரந்திம் " ஈச்வராய நம: ஸப்ததசக்ரந்திம் " உக்ராய நம: அஷ்டாதசக்ரந்திம் " ஸ்ரீகண்ட்டாய நம: ஏகோநவிம்சக்ரந்திம் " நீலகண்ட்டாய நம: விம்சதிதமக்ரந்திம் " கேதாரேச்வராய நம: ஏகவிம்சதிதமக்ரந்திம் " கேதாரேச்வராய நம: நாநாநாவித பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி. தசாங்க தூபமுக்யச்ச அங்கார விநிவேசித: | தூபஸ் ஸுகந்தை ருத்பந்ந: த்வாம் ப்ரீணயது சங்கர || கேதாரேச்வராய நம: தூபமாக்ராபயாமி. யோகிநாம் ஹ்ருதயேஷ்வேவ ஜ்ஞாத தீபாங்குரோஹ்யஸி | பாஹ்யதீபோ மயாதத்த: க்ருஹ்யதாம் பக்த கௌரவாத் || கேதாரேச்வராய தீபம் தர்சயாமி. த்ரைலோக்யமபி நைவேத்யம் ந தே த்ருப்திஸ் ததா பஹி: | நைவேத்யம் பக்தவாத்ஸல்யாத் க்ருஹ்யதாம் த்ர்யம்பக த்வயா || கேதாரேச்வராய மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி. நித்யாநந்த ஸ்வரூபஸ்த்வம் யோகிஹ்ருத்கமலேஸ் தித: | கௌரீச பக்த்யா மத்தத்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் || கேதாரேச்வராய தாம்பூலம் ஸமர்ப்பயாமி. அர்க்யம் க்ருஹாண பகவந் பக்த்யா தத்தம் மஹேச்வர | ப்ரயச்ச மே மநஸ்துஷ்டிம் பக்தாநா மிஷ்டதாயக || கேதாரேச்வராய அர்க்யம் ஸமர்ப்பயாமி. தேவேச சந்த்ர ஸங்காசம் ஜ்யோதி: ஸூர்யமிவோதிதம் | பக்த்யா தாஸ்யாமி கர்ப்பூர நீராஜநமிதம் சிவ || கேதாரேச்வராய கர்ப்பூர நீராஜநம் தர்சயாமி. பூதேச புவநாதீச ஸர்வதேவாதி பூஜித | ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் வ்ரதம் மே ஸபலம் குரு || கேதாரேச்வராய ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி. ஹர சம்போ மஹாதேவ விச்வேசாமர வல்லப | சிவ சங்கர ஸர்வாத்மந் நீலகண்ட நமோஸ்து தே || கேதாரேச்வராய நமஸ்காராந் ஸமர்ப்பயாமி.
ப்ரார்த்தனை :
அபீஷ்டஸித்திம் குரு மே சிவாவ்யய மஹேச்வர | பக்தாநா மிஷ்டதாநார்த்தம் மூர்த்தீக்ருத களேபர || கேதார தேவ தேவேச பகவந் அம்பிகாபதே | ஏகவிம்சத்திநே தஸ்மிந் ஸூத்ரம் க்ருஹ்ணாம்யஹம் ப்ரபோ ||

தோரத்தை எடுத்து அணிதல் :

ஆயுச்ச வித்யாம்ச ததா ஸுகம் ச ஸௌபாக்ய ம்ருத்திம் குரு தேவ தேவ | ஸம்ஸார கோராம்புநிதௌ நிமக்நம் மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே ||
வாயந தானம் :
கேதார: ப்ரதிக்ருஹ்ணாதி கேதாரோ வை ததாதி ச | கேதாரஸ் தாரகோபாப்யாம் கேதாராய நமோ நம: ||

ப்ரதிமா தானம் :

கேதாரப்ரதிமா யஸ்மாத் ராஜ்ய ஸௌபாக்ய வர்த்திநீ | தஸ்மா தஸ்யா: ப்ரதாநேந மமாஸ்து ஸ்ரீரசஞ்சலா || தக்ஷிணை தாம்பூலத்துடன் கேதாரேசுவர பிரதிமையை அளித்து விடவும். யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தபோஹீநம் ஜநார்தரு | யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே || - கேதார விரத பூஜை முற்றும் -

"கேதார கௌரி விரதம்"


பதினாறு பேறுகள் தரும் கௌரி வடிவங்கள்

தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலிப் பெண்கள் "கேதார கௌரி விரதம்" அனுஷ்டிப்பது வழக்கம். மகாகௌரியான அம்பிகை சிவபெருமானின் முழு அருளையும் அன்பையும் பெற 21 நாட்கள் விரதம் மேற்கொண்டாள். அதுவே கேதாரீஸ்வரர் விரதம் அல்லது கேதார கௌரி விரதம் என்று போற்றப்படுகிறது. 
அதன் பயனாக ஈசன் உடலில் சரிபாதியைப் பெற்றாள் அம்பிகை. இந்த விரதத்தை பெண்கள் மேற்கொண்டால் கணவனின் முழு அன்பைப் பெறுவதுடன், பதினாறு பேறுகளையும் பெற்று வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. அம்பிகையை 16 வடிவங்களாகப் போற்றி, சோடசகௌரி வழிபாடு செய்தால் சகல பாக்கியங்களையும் பெறலாம் என்கிறது ஸ்கந்த புராணம்.

ஆதிபராசக்தியின் வழிபாடே உலகில் தோன்றிய முதல் வழிபாடாகும். ஆதியில் அன்னை, பரமசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளிபோல் வெண்மையான வடிவில் தோன்றி, பெண் வடிவில் திகழ்ந்தாள். பேரண்டங்களையும் உலகங்களையும், அவற்றில் உயிர்த் தொகுதிகளையும் உண்டாக்கினாள். உயிர்களுக்கு அருள்புரிய மலைகளின் மீது வந்து தங்கினாள். அவள் மெல்லிய பனி போன்ற வெண்மையான வண்ணத்துடன் இருந்ததாலும், மலை(கிரி)களில் வந்து தங்கியதாலும் "கெளரி என்று அழைக்கப் பட்டாள் (வெண்மை நிறத்தைக் கெளர வர்ணம் என அழைப்பர்).



ஸ்ரீ கெளரி தேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். அவள் சிவனிடம் உமையாகவும், திருமாலிடம் லட்சுமியாகவும், பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். இவ்வாறே வேளாண்மை செய்பவர்களிடம் செளபாக்ய கெளரி; வணிகர்களிடத்தில் சுவர்ண கெளரி; வீரர்களிடத்தில் ஜெயகெளரி, ஞானிகளிடத்தில் ஞானேஸ்வரி, அரசர்களிடத்தில் சாம்ராஜ்ய மஹாகெளரி என்று பல்வேறு வடிவங்கள் தாங்கி உலகெங்கும் நிறைந்திருக்கின்றாள்.
 

01 ஸ்ரீ ஞான கௌரி

"உலக உயிர்களுக்கு சக்தி கொடுப்பது நானே" என்று சிவபெருமானிடம் வாதிட்டாள் சக்திதேவி. உடனே சிவபெருமான் உலக உயிர்களின் அறிவை ஒரு கணம் நீக்கினார். அதனால் உலக இயக்கம் நின்று பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதைக்கண்ட தேவி, உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்பதை உணர்ந்து இறைவனைப் பணிந்தாள். பின்னர் இறைவன் மீண்டும் உலக உயிர்களுக்கு ஞானமளித்து, அறிவின் திறனை தேவி உணரும்படி செய்தார். தன் நாயகனிடம் வாதிட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தாள் அம்பிகை. அவளது தவத்தினைப் போற்றிய இறைவன், தன் உடலில் பாதியை அளித்து அறிவின் அரசியாக்கினார். எனவே ஞான கௌரி என்று போற்றப்பட்டாள். சிவாலயங்களில் அமைந்துள்ள அம்பாள் சந்நிதியில் அருள்புரியும் அம்பிகையை, ஞான கௌரியாக மனதில் நினைத்து வழிபட்டால் ஞானம் பெருகும், எண்ணியது நிறைவேறும். விஜயதசமியில் வழிபட கூடுதல் பலன் கிட்டும்.

02 ஸ்ரீ அமிர்த கௌரி

உலகில் வாழும் உயிர்களுக்கு வளமான வாழ்வையும் ஆயுளையும் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான இறைவனின் தேவியானதால் கௌரிக்கு அமிர்த கௌரி என்று பெயர். இந்த தேவியை வழிபடுவதால் ஆயுள் மற்றும் வம்சம் விருத்தியாகும். இந்த கௌரி அருள்பாலிக்கும் தலம் திருக்கடவூர் ஆகும். திருக்கடவூர் அபிராமி "அமிர்த கௌரி" என்று போற்றப்படுகிறாள்.

03 ஸ்ரீ சுமித்ரா கௌரி

இறைவனின் உடலில் பாதி இடத்தைப் பிடித்த தேவி, அவரைப் போலவே உயிர்களுக்கு உற்ற தோழியாகத் திகழ்வதால் சினேகவல்லி என்று போற்றப்படுகிறாள். தேவகோட்டைக்கு அருகிலுள்ள திருவாடனைத் திருத்தலத்தில் அருள்புரியும் அம்பிகைக்கு "சினேகவல்லி" என்று பெயர். இந்த அன்னையை வடமொழியில் ஸ்ரீ சுமித்ரா கௌரி என்று போற்றுவர். இவளை வழிபட நல்ல சுற்றமும் நட்பும் கிட்டும்.

04 ஸ்ரீ சம்பத் கௌரி

வாழ்வதற்கு மிகவும் அவசியமானது உணவு, உடை, உறைவிடம். இவற்றை "சம்பத்" என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்புரிபவள் ஸ்ரீ சம்பத் கௌரி. இந்த அம்பிகை பசுவாக உருவெடுத்து சிவபூஜை செய்த திருத்தலங்கள் உண்டு. எனவே கோமதி, ஆவுடை நாயகி என்றும் போற்றுவர். இந்த கௌரியை திருச்சிக்கு அருகில் உள்ள துறையூர் தலத்தில் சம்பத் கௌரி உடனாய நந்தீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம். மேலும், காசி ஸ்ரீ அன்ன பூரணியையும் மகாமங்கள கௌரி, சம்பத் கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட செல்வ வளம் பெருகும்.

05 ஸ்ரீ யோக கௌரி

யோக வித்தைகளின் தலைவியாக ஸ்ரீ மகா கௌரி திகழ்கிறாள். இவளையே யோக கௌரி என்றும் போற்றுவர். யோகங்களை வழங்கும் அம்பிகை யோகாம்பிகை; யோக கௌரி எனப்படுகிறாள். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவிலில் எழுந்தருளியுள்ள கமலாம்பிகையே யோக கௌரி ஆவாள். திரிபங்க ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அற்புதமான திருக்கோலம். அங்கு அருள்புரியும் தியாகராஜரின் ரகசியங்கள் யோக வித்தை எனப்படுகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவள் யோக கௌரியான கமலாம்பிகை. இந்த தேவியை வழிபட யோகா, கல்வி, இசை சம்பந்தமான கலைகளில் சிறந்து விளங்கலாம்.
06 ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி

உறுதியான, ஆரோக்கியமான உடலை "வஜ்ரதேகம்" என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் தேவியே ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி என்று போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இந்த கௌரி சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியையும் கையில் ஏந்தியிருப்பாள். ("ச்ருங்கலம்" என்பதற்கு சங்கிலி என்று பொருள்.) வைரமயமான சங்கிலியைத் தாங்கியிருப்பதால் வஜ்ரச்ருங்கல கௌரி என்பர். சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூர் தலத்தில் அருள்புரியும் வடிவுடையம்மனே இந்த கௌரியாகத் திகழ்கிறாள். இந்த அன்னையை வழிபட உடல் உறுதியாகத் திகழும்; வலுவுடன் காட்சி தரும்.
 
07 ஸ்ரீ த்ரைலோக்ய மோகன கௌரி

மனதிற்கு உற்சாகத்தையும், உடலுக்கு தெய்வீக சக்தியையும் அளிக்கும் சக்தி கொண்டவள். காசியில் நளகூபரேஸ்வரர் கோவிலுக்கு மேற்குப் பக்கத்திலுள்ள குப்ஜாம்பரேசுவரர் சிவாலயத்தில் இந்த தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், திருநெல்வேலியிலுள்ள நவகயிலாயங்களுள் முதல் தலமான பாபநாசத்தில் அருள்புரியும் உலகம்மை எனும் விமலை சக்தியே த்ரைலோக்ய மோகன கௌரியாகப் போற்றப்படுகிறாள். கிரக தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நீக்கி மகிழ்ச்சியைத் தருபவள். பெண்கள் தீர்க்கசுமங்கலியாக- மகிழ்வுடன் வாழ அருள்பவள்.

08 ஸ்ரீ சுயம்வர கௌரி

சிவபெருமானை தன் மணாளனாக எண்ணியவாறு நடந்து செல்லும் கோலத்தில் காட்சி தருபவள். மயிலாடுதுறை- திருவாரூர் வழியிலுள்ள திருவீழிமிழலை அம்மையை சுயம்வர கௌரிஎன்பர். இவளை வழிபட மனதிற்குப் பிடித்த மணாளன் அமைவார்.

09 ஸ்ரீ கஜ கௌரி

காசி அன்னபூரணி ஆலயத்தில் ஸ்ரீ கஜ கௌரிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அன்னையே கஜ கௌரியாகப் போற்றப்படுகிறாள். இந்த தேவியை வணங்கினால் குழந்தைச் செல்வம் கிட்டும்; வம்சம் விருத்தியாகும்.

10 ஸ்ரீ விஜய கௌரி

நற்செயலால் ஒருவன் பெரிய அந்தஸ்தை அடைந்திருந்தாலும், அதன் முழுப்பயனையும் அனுபவிக்கச் செய்பவள் ஸ்ரீ விஜய கௌரி. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் - ஸ்ரீ வண்டார்குழலி ஆலயத்தில் மகாகாளி அருள்புரிகிறாள். இத்தலத்திற்கு வருபவர்கள் முதலில் இந்த தேவியை வழிபட்ட பின்தான் இறைவனை வழிபட வேண்டும். இது இறைவன் தந்த வரம் என்பதால் இந்த காளி விஜய கௌரி எனப்படுகிறாள். இறைவனுடன் போட்டி நடனமாடிய இந்த தேவியை வழிபட்டால் எதிலும் வெற்றி கிட்டும்; பகைவர்கள் விலகுவர்.

11 ஸ்ரீ சத்யவீர கௌரி

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பவள் இந்த அன்னை. நாகை மாவட்டம் திருவெண்காட்டில், ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருடன் இணைந்து அருள்புரிகிறாள் பிரம்ம வித்யாம்பிகை. இத்தேவியை வழிபட கொடுத்த வாக்கினைக் காப்பாற்றும் திறன் கிட்டும்; இந்த தேவியை வழிபட்டால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும்.

12 ஸ்ரீ வரதான கௌரி

வள்ளல் மனம் கொண்டவர்களுக்கு அருள்புரிபவள் இந்த அன்னை. பரந்தமனம் கொண்டவர்கள் விரும்பும் வரங்களை தானமாக வழங்குவதால் இவள் ஸ்ரீ வரதான கௌரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் அருள்புரியும் அறம்வளர்த்த நாயகியை வரதான கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட்டால் கருமி கூட கொடைவள்ளல் ஆவான் என்பர்.

13 ஸ்ரீ சுவர்ண கௌரி

ஒரு பிரளய காலத்தின் முடிவில் கடலின் நடுவே சுவர்ணலிங்கம் தோன்றியது. இதனைக் கண்ட தேவர்கள் அதனைப் பூஜித்தார்கள். அப்போது அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே, தேவியை சுவர்ணவல்லி என்று போற்றினார்கள். கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலய மங்களாம்பிகையே சுவர்ண கௌரியாக விளங்குகிறாள். இவளை வழிபட குபேர வாழ்வு கிட்டும். குலதெய்வத்தின் அருளும் கிட்டும். இல்லத்தில் தங்க நகைகள் சேரும். தொழிலில் லாபம் கிடைக்க அருள்பவள்.

14 ஸ்ரீ சாம்ராஜ்ய மகாகௌரி

அன்பையும் வீரத்தையும் ஒருங்கே அருளும் தேவியாவாள். தலைமைப் பதவியைத் தரும் இவள் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபடப்படுகிறாள். இந்த தேவியின் அருள் இருந்தால் ராஜயோகம் கிட்டும். உயர் பதவிகள் தேடிவரும். மதுரை மீனாட்சியே சாம்ராஜ்ய மகாகௌரியாகப் போற்றப்படுகிறாள்.

15 ஸ்ரீ அசோக கௌரி

துன்பமற்ற வாழ்வைத் தருபவள் இவள். ஈரோடு மாவட்டம் பவானி திருத்தலத்தில் அருளும் வேதநாயகியே அசோக கௌரியாவாள் மகிழ்ச்சியான வாழ்வைத் தருவதால் அசோக கௌரி எனப்படுகிறாள். இந்த தேவியை வழிபட துன்பங்கள் நீங்கும்; சோகம் மறையும்; சுகமான வாழ்வு கிட்டும்.

16 ஸ்ரீ விஸ்வபுஜா மகாகௌரி

தீய சக்திகளை அழித்து நல்வினைப் பயன்களைத் தருபவள். தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, விருப்பங்களை நிறைவேற்றுவதால் மனோரத பூர்த்தி கௌரி என்றும் போற்றுவர். திருவிடைமருதூர் தலத்தில் விளங்கும் ஒப்பிலாமுலையாள் எனும் அதுல்ய குசலாம்பாள் அன்னையே மேற்சொன்ன கௌரியாகத் திகழ்கிறாள். இந்த தேவியை வழிபட்டால் வேண்டியது கிட்டும்.

"ஓம் ஸுபதாயை வித்மஹே 
காம மாலின்யை தீமஹி
தன்னோ கெளரீ ப்ரசோதயாத்"

அம்பிகையான கௌரி பலவித திருப்பெயர்களில் எழுந்தருளியிருந்தாலும், பக்தியுடன் விரதம் மேற்கொண்டு மனதில் எண்ணி வழிபட்டாலே போதும்; பதினாறு செல்வங்களையும் தருவாள்


https://www.shaivam.org/siddhanta/feskedhar_puja_tam.htm

other link :
https://ta.wikipedia.org/
https://www.vallamai.com/?p=9587
https://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=18012
https://natarajar.blogspot.com/2010/11/blog-post.html



4 comments:

  1. போற்றிப் பாதுகாக்கவேண்டிய புத்தகத்தை வலைப்பதிவில் பதித்து மிக எளிய வழியில் அனைவருக்கும் உதவுமாறு வழங்கிய திரு. வி.ஹரி மணிகண்டன் அவர்களுக்கு நன்றிகள், தாங்களின் இதுபோன்ற சிறப்பான பனி மேன்மையடையவும், மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... அன்புடன் வைஷாலி வாசகர் வட்டம் NCR-NEW DELHI.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. இன்றய தலைமுறையினர் அறிந்துக் கொள்ள வேண்டிய அறிய தகவல். ஆசிரியருக்கு பாராட்டுக்கள். 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete