Baskar Jayaraman [FB]
குரு எப்பொழுது கிடைப்பார் ?
நமக்கு அமையும் குரு என்பவர் ஒரு வழி காட்டிக்கொடுப்பார் அந்த வழியை நாம் தான் பின்பற்றி செல்லவேண்டும். அவரின் பங்கு சிறிதளவு இருந்தாலும் நமது முயற்சியால் முன்னேற்றத்தை அடையவேண்டும். நமது குரு இருப்பார் அந்து குருவிற்க்கு முன்னர் பல பேர் இருப்பார்கள் அவர்கள் உங்களுக்கு பல வழிகாட்டுதலை கொடுப்பார்கள்.
அவர்கள் இறந்து இருப்பார்கள் ஆனால் அவர்களின் வழிகாட்டுதல் மிகமுக்கியமான ஒன்றாக நமக்கு அமையும். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் உள்ளவர்கள் கூட உங்களுக்கு வழிகாட்டுதலை தருவார்கள்.
நமது குருவின் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டுதலை செய்வதோடு நின்றுவிடாமல் நமக்கு ஆபத்து காலத்தில் உதவ முன்வருவார்கள். இப்படிபட்ட வழிகாட்டுதலை நான் பெற்றதால் உங்களுக்கு இதனை சொல்லுகிறேன். இந்த காரணத்தில் தான் சீடனாக ஒருவரை எடுப்பதற்க்கு பல காலம் யோசனை செய்து எடுக்கிறார்கள். இந்த ஒன்று மட்டுமே பணம் கொடுத்து வாங்கமுடியாத ஒன்றாக இருக்கும்.
ஒரு குருவை மட்டும் நாம் வாங்கமுடியாது. அவர்களாக பார்த்து நம்மை ஏற்றுக்கொண்டால மட்டுமே சாத்தியப்படும்.கோடிக்கணக்கில் பணம் இருக்கலாம் அநத் பணத்தை வைத்துக்கொண்டு குருவை வாங்கலாம் என்று நினைத்தால் ஒருவரும் குருவாக வரமாட்டார்கள்.
ஒரு குரு தனக்கு சேவை செய்பவர்களா என்று தான் எதிர்பார்ப்பார்கள். அதைப்போல் இவனால் பல பேர்க்கு நன்மை செய்வானா என்றும் பார்ப்பார்கள். இதனை மட்டும் நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு குரு கிடைப்பார்.
நாம் இதற்க்கெல்லாம் தயார் நிலையில் இல்லை என்பதால் அவர்களும் தயார் நிலையில் இல்லை. நாம் குருவை தேடுவது போலவே அவர்களும் தனக்கு ஒரு நல்ல சீடன் கிடைப்பானா என்று பார்ப்பார்கள். பெரிய குருவிற்க்கு கூட சீடன் இல்லாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment