Friday, August 7, 2015

அத்ரி மலையின் அற்புதங்கள்!

Thank to :Madambakkam Shankar

From பிரபஞ்சத்தின் ஜீவநாடி அறுந்து போகாமலிருப்பதற்காக இயற்கை அன்னை பல நற் கொடைகளை வாரி வழங்கியிருக்கிறாள். அந்த இயற்கைவளம் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல பல ஆன்மீக அதிசயங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆணித்தரமான உதாரணம் அத்ரி மலையும் அங்கே உடனுறையும், சிவன் வடிவில் உள்ள அத்ரி ஆலயமே.
கையடக்கமான அந்த ஆலயம், அன்றாடம் ஆன்மீக பக்தர்களை ஈர்த்த வண்ணமிருக்கிறது.
எந்த ஒரு பொருளையும் நினைத்த வேளையில் அடைந்து விட்டால் அதற்கு மதிப்பு குறைவு தான். சிரமப்பட்டு, கஷ்டங்களை அனுபவித்துப் பெறும் பொருள், அதுவே பரம்பொருள் ஆனாலும், அது தரும் சுகமும், அமைதியும், வாழ்நாள் முழுக்க மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடும்.
அத்ரிமலை ஆலயத்தின் வரலாற்றுக்குள் போவதற்கு முன், அந்த ஆலயம் சென்றடைவதற்கான வழியினை முதலில் பார்த்து விடுவது நல்லது.
நெல்லை மாவட்டத்தின் நகரமான தென்காசி அல்லது அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ஆழ்வார்குறிச்சிக்கு, பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 6 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.
சுத்தமான பிராணவாயுக்காற்றோடு மூலிகை மணத்தையும் கொண்ட காற்று வீசும் சூழல். சுவாசிக்கும் மனிதர்களின் இதயத்தைச் சுத்திகரிக்கும். புத்துணர்ச்சியோடு கரடு முரடானபாதையைக கடப்பது கூட அங்கே செல்லும் பக்கதர்களுக்குத் துன்பமே தெரியாது.
அப்படி ஒரு சிறப்பம்சம்.
சரி. இனி ஞான விஷயத்திற்கு வருவோம்.
ஆன்மீக சரித்திரம் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறது.
இன்றைக்கு சரியாக 2.500 ஆண்டுகளுக்குச் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணமாக வந்த மகாமுனிவர் தான் அத்ரி.
தனது பக்தர்களோடு வந்த அத்ரி முனிவர் அந்த மலையில் சிவபெருமானை வேண்டிக் கடும் தவம் செய்தார். தனது அடியாரின் கடும் தவத்தை மெச்சிய சிவபெருமானும் அத்ரி முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.
அத்ரி மாமுனிவர் அங்கு தவமிருந்ததால் அது அத்ரி மலை எனப் பெயராகி, சிவன் வடிவில் உள்ள அத்ரி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய ஆலயாமானது.
இடையில் ஒரு அதிசயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அத்ரி முனிவர் தவ வேளையில் இருக்கும் சமயம் அவரது சீடர்களில் ஒருவரான அனுசுயாதேவிக்குத் தாக மெடுதத்து. தண்ணீருக்காக தன் சிஷ்யை தவிப்பதை உணர்ந்த அத்ரி முனிவர் தனது கமண்டலத்தைத் தரையில் ஒங்கி ஒரு தட்டு தட்ட, அந்த இடத்தைப் பிளந்து கொண்டு நீருற்று பீய்ச்சியடிக்க அனுசுயாதேவி தன் தாகம் தீர்த்துக் கொண்டாள். வானம் பிளந்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்தாலும், 110 டிகிரியளவு கோடைவெப்பம் சூட்டைக்கிளப்பினாலும், அந்த நீர் ஊற்று ஒரே சீரான அளவு பொங்கி வருவது. அற்புதமானது என்பது பக்தர்களின் திகைக்கவைக்கும் பேச்சாகத் தொடர்கிறது.
அத்ரி மலையின் சிவனாலயம் பற்றிய பேச்சு கசிந்த உடனேயே. அது ஆலயமாக உருவெடுக்கும் காரியங்கள் நடக்கத் தொடங்கின. மலைக்கு அவரைத் தரிசிக்கச் சொல்லும் பக்தர்களே நேர்ச்சையாகத் தலைக்கு மூன்று செங்கற்களைக் கொண்டு சேர்க்க, அதன் பிறகே பக்தர்களால் அமைக்கப்பட்ட கையடக்க கோயில் மலைமேல் உருவானது வனதுர்க்கை, பேச்சியம்மன், 21 கன்னிமார்சிலைகள், கருப்பசாமி, சுடலை மாடன உள்ளிட்ட பல துணை தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு. காலப் போக்கில் பிரபலமாகி தற்போது பக்தர்களின் ஜனரஞ்சகக் கேத்திரமாக மாறி நிற்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது. [
அத்ரி மலை சிவபெருமானைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் தங்களின் மன எண்ணப்படி நேர்ச்சையாகவும் விரதமிருந்தும், சிலர் அவரையே நெஞ்சில் தேக்கிக் கொண்டு மலை ஏறுகிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு கரடு, முரடான கற்களையும், பாதைகளையும், முட்களையும் மெத்தையாக மாற்றி அவர்களைச் சேதாரமில்லாமல் மலைக் கோவிலுக்குக் கொண்டு சேர்க்கிறார். அங்குள்ள வனதுர்க்கையம்மன். காட்டு மிருகங்கள் பக்தர்களை அண்ட விடாமல் பாதுகாத்தும், மழைக் காலங்களில் அங்குள்ள கல்லாறு வெள்ள மெடுத்து பக்தர்கள் கடப்பதற்கு தடையாய் நிற்பதையும் தடுத்துக் கொண்டு, அத்ரி பரமேஸ்வர சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களைச் சிரமமின்றி தரிசனம் முற்றுப் பெற்று தரையிறங்கும் வரை காவல் துணையாய் வழித்துணையாய் வந்த வனதுர்க்கையம்மனுக்கு முதல் வணக்கும் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
ஆலயம் தோன்றிய காலம் தொட்டே இந்த வனதுர்க்கை தான் அத்ரிவனத்தின் காவல் தெய்வம். ராமரும், சீதாப்பிராட்டியாரும் அத்ரிமலை தபோவனத்திற்கு வந்த போது வனதுர்க்கையைத் தான் முதலில் வணங்கி முதல் மரியாதை செலுத்தினார்கள்.
அத்ரிமலை அமைதிச் சூழலையும், மெஞ்ஞானத்தையும் கொண்ட சிறப்பான ஒரு தபோவனமாக இருந்த காரணத்தினால் தான், தன் பிரதான சிஷயர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார் அத்ரி மகரிஷி. அவரது சீடர்களில் குறிப்பிட்டத்தக்கவர் கோரக்கர். தன்னுடைய குருவான ஆத்ரி முனிவருக்குப் பணிவிடைகளைச் செய்தமையால், அதன் வலிமை காரணமாக தென்பாண்டிச் சீமையின் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தையும் போக்கியவர் கோரக்கர்.
அத்ரி பரமேஸ்வர சுவாமியை மனதார வணங்கி நீர் ஊற்றில் தலை நனைத்து பிறகு, அங்கேயுள்ள அரச மரத்தின் முன்பாக தியானத்தில் அமர்வது தான் இங்கே குறிப்பிடும்படியான விசேஷம்.
பரம்பொருளை வணங்கி விட்டு, மனதார அரசமரம் முன்பு தியானத்திலிருப்பவர்களின் மனக்குறை நீங்கப் பெற்று எண்ணிய காரியங்கள். ஈடேறுகின்றன. பறைசாற்றலோ விளம்பரமே இல்லாமல் அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தெல்லாம் அத்ரி மலைக்கு வருகின்றார்கள்.
ஞாயிறு, அமாவாசை, பங்குனி, சித்திரை, மாதப் பிறப்பு, பிரதோஷம் போன்ற காலங்களில் சிறப்பான சிறப்பு பூஜை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கிறது என்கிறார் ஆதிகைலாசநாதர் பக்தர்கள் சேவாசங்கத்தின் செயலாளரும், அத்ரி ஆலய பொறுப்பாளர்களில் ஒருவரான அழகப்பபுரம் செல்லையா.
அத்ரிமலையின் அற்புதங்களில் இது கடுகளவே... மலை ஏறினாலோ புதைந்து கிடக்கும் பிரம்மாண்டங்கள் விரியும்.
To view classic photos , click :

அத்ரி மலையின் அற்புதங்கள்!

No comments:

Post a Comment