Thursday, August 13, 2015

நாகபஞ்சமி !

நாகபஞ்சமி ! 19/08/2015
---------------------

18 naga chathurti
19 naga panjami

Any milk powder offerings towards unfortunate children's will be good and any simple respects upon NAGA PRATHISTA area will be good too.
It is not just a reptile but more than that indeed...!
Symbolically it may representing Kundalini but mysteriously it has some other subjective hidden values...
Some may say it is superstition but our ancestors are not stupid...
Naga Logam , Naga DEvathai's or parallel dimensions are ever exists ...The world that we are living has a strong connections towards all these dimensions ; some are visible and some are invisibles... thank Shivabaraty Bairava 



நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை
வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாகபஞ்சமி திதி” அதென்ன திதி?

பரிகாரத்தை பார்ப்பதற்கு முன்னர் திதி பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். பிறந்த ஒவ்வொருவருக்கும் நட்சத்திரம் எவ்வளவு முக்கியமோ, அது போல இறந்த
முன்னோருக்கு திதி என்பது மிகவும் முக்கியமானது.

பெளர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை ”தேய்பிறை திதி” என்றும், பின்னர் அமாவாசை முதல் பெளணமி வரையான பதினைந்து நாட்களை ”வளர்பிறை திதி” என்றும் குறிப்பிடுவர். இதனை சமஸ்கிருதத்தில் ”கிருஷ்ணபட்சம்”, ”சுக்கிலபட்சம்” என்பர்.

இவை முறையே...
1. பிரதமை.
2. துவி்தியை.
3. திருதியை.
4. சதுர்த்தி.
5. பஞ்சமி.
6. சஷ்டி.
7. சப்தமி.
8. அஷ்டமி.
9. நவமி.
10. தசமி.
11. ஏகாதசி.
12. துவாதசி.
13. திரயோதசி.
14. சதுர்தசி.
15. அமாவாசை அல்லது பெளர்ணமி.

சோதிடத்தில் இந்த திதிகளின் அடிப்படையில்தான் நல்ல நாட்கள் பார்க்கப் படுகின்றன. அஷ்டமி, நவமி திதிகளில் நல்ல காரியங்கள் எதையும் செய்வது நற்பலனைத் தராது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தத் திதிகளில் நாம் பார்க்கப்போவது அமாவாசை கழிந்து வரும் ஐந்தாவது நாளான வளர்பிறை பஞ்சமி திதி பற்றியே.. அதிலும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறைப் பஞ்சமி நாள்தான் ”நாகபஞ்சமி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாக பஞ்சமி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்,அதுவே சிறப்பானது. 


போகர் அருளிய பரிகார விவரங்களை பார்ப்போம்.

நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே
உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல்
வேண்டும் என்கிறார்.

நாகதோஷம் உள்ளவர்கள், அடுத்த சில நாட்களில் வர இருக்கும் ஆவனி வளர்பிறைப் பஞ்சமி திதியன்று, நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி, நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும்  சிறப்புடனும் வாழ்ந்திடுங்கள்....

அபூர்வ ஷக்தி வாய்ந்த நாகம்மன் மந்திரம்.
--------------------------------------------------------------------
ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம் ஓம் ஓம்!!

நாகதோஷம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை108 முறை ஜபித்து வர நாகதோஷம் நீங்கும்.

ஆடி மாதத்தில் நாகபஞ்சமி விரதம் பெண்களால் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாகப்பாம்பு கடித்து இறந்து போன 5 சகோதரர்களுக்காக, சகோதரிகள் நாகராஜன் பூஜை செய்து சகோதரர்களை உயிர் பெறுமாறு செய்தனர். ஆடி மாத வளர்பிறையில் பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைபிடிப்பர். இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் குறையின்றி வாழ்வார்கள்,
திருமணம் தடை , புத்திர தடை, கோர்ட் வழக்குகள் உள்ளிட்ட அனைத்துவிதமான  பிரச்னையும் நீங்க  எளிய பரிகாரம் 

அன்றைய தினம் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாகர் , புற்று உள்ள கோவிலில் நாகர் வழிபாடு செய்து நாகருக்கு பால் , பலம் நாகருக்கு சாத்தும் பூமாலை உள்ளிட்ட அபிஷேக சாமான்கள் வாங்கி தரும்போது நாக தோஷம் அனைத்தும் விலகும். 


அன்று வரும் நாக பஞ்சமி அன்று நாகர் வழிபடு செய்வோம் , நல் வாழ்வு பெறுவோம் ...

நாகபஞ்சமி ,கருட சதுர்த்தி சிறப்பு பதிவு
ஆடி அமாவாசை பண்டிகை கொண்டாட்டங்களை ஆரம்பித்துக் கொண்டு வருகிறது. ஆடி அமாவாசை அன்று நோன்பு நோர்ப்பது கணவருக்கு என்றால் நாக சதுர்த்தி அன்று விரதம் மக்களுக்காக.
”மக்களைப்பெற்ற மகராசிகளும் பெறப்போகும் மகராசிகளும்” தன் பிள்ளைகளின் நல்வாழ்வு கோரி விரதம் செய்வார்கள்.பாம்பு புற்றுக்கு பால் வார்த்து பூஜை செய்து எந்த வித
தோஷமும் இல்லாமல் வம்சம் தழைத்தோங்க பூஜை. இன்று துள்ளரிசியும், வெல்லமும் எள்ளும் சேர்த்தரைத்தபிரசாதம் நைவேத்யம் செய்து எறும்புகள் சாப்பிட
போட்டு விடுவோம். எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது. 
பிள்ளைகள் நலனுக்காக உப்பில்லாமல் சாப்பாடு. அடுத்த நாள் கருட பஞ்சமி. இது கிட்டத்தட்ட எங்களுக்கு (தெலுங்கர்களுக்கு) ரக்‌ஷா பந்தன் போல.

இந்த நோன்புக்கு ஒரு கதையும் உண்டு. ஒரு வீட்டில் 7 அண்ணன் தம்பிகள் அவர்களுக்கு கறிவேப்பிலை கொத்துப்போல ஒரே ஒரு தங்கை.
அம்மா, அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட தங்கையைக் கண்போல பார்த்தக்கொள்வது அண்ணன்கள் தான்.
அண்ணன்கள் காலையிலேயே வயலுக்கு சென்று விட வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தங்கை அண்ணன்களுக்கு கஞ்சி எடுத்துச் செல்வாள்.

அன்றும் அப்படித்தான் கருட பஞ்சமி என்றுத் தெரியாமல் வீட்டை சுத்தம் செய்து, ஒட்டடை அடித்து துவாரங்களை எல்லாம் அடைத்துவிட்டு கஞ்சி கலயத்தை தலையில்
சுமந்துக்கொண்டு வயலுக்கு செல்கிறாள். அப்போது ஆகாய மார்கமாக கருடன் ஒன்று பாம்பை கவ்விக்கொண்டு செல்கிறது. இறுக்கமான பிடி தாளாமல் பாம்பு விஷத்தைக்
கக்க அது கஞ்சி கலயத்தில் விழுகிறது. அது தெரியாமல் அதை அவர்களுக்குகொடுத்துவிட அவர்களும் குடித்து இறக்கிறார்கள். ஒருவர் பின் ஒருவராக 7 அண்ணன்களும் 
இறந்துவிட தானும் அதைக் குடித்து இறக்க முற்படும் பொழுது ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் வந்து அவளைத் தடுத்து கருட பஞ்சமி விரதம் செய்வித்து அட்சதை, புற்றுமண் ஆகியவற்றை உடன்பிறந்தவர்களின் வலது காது, வலது புஜத்தில் வைக்கச்சொல்ல அவர்களும் உயிர்தெழுகிறார்கள்.

இந்தக் கதையைச் சொல்லி நாங்களும் உடன் பிறந்தவர்களுக்காக வேண்டிக்கொண்டு 7 முடி போட்ட தோரம் அணிந்து புற்றுமண் கொண்டு வந்து உடன் பிறந்தவர்களின்
வலது காது, புஜத்தில் வைத்து பூஜை செய்து அவர்களுக்கு பரிசளித்து வேண்டி பூஜை செய்வது வழக்கம்.

நம்ம உடன்பிறப்புக்கள் எல்லாம் வெளி நாட்டில் வெளியூரில் தானே! அதனால் அவர்களுக்கெல்லாம் சேர்க்கும் படி சாமிக்கே வைத்து பூஜை செஞ்சாச்சு. அம்ருதா அண்ணனுக்கு
பூஜை செஞ்சு ட்ரெஸ் வாங்கிக்கொடுத்திட்டாங்க.

https://supertamilan.blogspot.com/2014/04/blog-post_7982.html#sthash.4EBUFUrG.dpuf

https://pudugaithendral.blogspot.com/2010/08/blog-post_14.html

No comments:

Post a Comment