Saturday, August 8, 2015

மனிதன் இரகசியங்கள்

Facebook : உயர் திரு மர்ம யோகி ஐயா

இன்று முதல் நிறை மனிதன் இரகசியங்கள் பதிவுகள்:-
பகுதி ஒன்று-- நிறை மனிதன் இரகசியங்கள்
வினாயக சதுர்த்தி இன்று ( 29-08-14 ) நல்வாழ்த்துகளுடன் ஒரு நற் செய்தி
வினாயகன், வி நாயகன்
எல்லா பத்திரிக்கை, தொலை காட்சி ஊடங்களில் எல்லாம் இன்று விநாயகர் சதுர்த்தி என்றே குறிப்பிடுகிறார்கள்.. மிக்க மகிழ்ச்சி....வினாயகர் சதுர்த்தி என்று ஓரிரு இடங்களில் மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.. வினாயகருக்கும் விநாயகருக்கும் அப்படி என்ன வித்தியாசம் ?... நிறையவே இருக்கிறது.. வினாயகர் என்றால் வினா என்ற கேள்விகளுக்கு மையமான மனத்தில் அறிவு தூண்டல் சதா உறுத்தலை ( மூஞ்சுரு போல ) உருவாக்கி கொண்டு இருக்கிறது என பொருள்.. ஆனால் விநாயகர் என்றால் வினாக்கள் தொலைந்து விடை ஒன்றையே பெற்று விண்ணின் இயல்பான பேரறிவு, ஞானம் பெற்று விளங்குபவர் என பொருள்..
ஞான பழம் பெறும் முன் அவன் வினாயகன், பெற்றபின் அவன் விநாயகன்..
'நா' வுக்கும் 'னா' வுக்கும் உள்ள வித்தியாசம் தமிழ் நன்கறிந்த மேதைகள் நன்கு அறிவர்...
வினாயகன் என்பவன் விதிக்கப்பட்ட சக்தியை மட்டுமே கொண்டவன் என பொருள்.. விநாயகர் என்றால் விதிக்கப் பட்ட சக்திக்கு மேல் அளவற்ற அதிகப்பட்ட சக்தியையும் கொண்டவன் என பொருள்.. ஆதி அந்தம் இல்லா வினாயகருக்கு சதுர்த்தி கிடையாது... ஆனால் ஞானம் நிலை அடைந்த விநாயகருக்கு மட்டுமே சதுர்த்தி உண்டு.. விநாயகர் சதுர்த்தி என்பதே என்பதே சரியானது... இது இப்படி இருக்க, இதில் நாம் உபயோகப்படும் படியான விசயம் என்ன இருக்கிறது..? இருக்கிறது.. இதில் மட்டுமே ஆன்மீக உயர்வுக்கான மிக பெரிய இரகசியம் உள்ளது.. வேறு எதன் மூலமும் ஆன்மீக உயர்வு அடைய வாய்ப்பு இல்லவே இல்லை.. அதானால் தான் இந்த விநாயகர் சதுர்த்திக்கு இத்தனை தனி சிறப்பு.. அது என்ன இரகசியம்..
விதிக்கப்பட்ட சக்தியை முழுமையாக பயன் படுத்தாமல் மதி வழி வருகின்ற அதிகப்பட்ட இறையாற்றல் பெறவே முடியாது என்பது தான் அந்த பெரிய இரகசியம்.. தனக்குள் இறைவனால் ஏற்படுத்திய விதிக்கப் பட்ட சக்தியை பயன் படுத்தாதவனுக்கு அந்த விதிக்கப்பட்ட சக்தியே ஒரு தடையாய் இருந்து அதிக பட்ட சக்தியை பெற முடியாமல் செய்து விடும்.. இதை உணராத ஆன்மீகம் ஆன்மீகமே அல்ல.. இதனை அறியாத சோம்பேறி கூட்டங்கள், விதிக்கப் பட்ட சக்தியை பயன் படுத்தாது முட்டாள் தனமாக அதிகப்பட்ட இறையாற்றலை அடைய ஏங்கி ஏங்கி வீணாய் போய் விட்டனர்..
இந்த இரகசியத்தை அறியாத எந்த யோக பயிற்ச்சியும், எந்த வாசியோக பயிற்ச்சியும், எந்த இறை பயிற்ச்சியும், குறைவு பட்டதாகவே முடிந்து அழிவை ஒன்றையே தரும் .. ஆகவே தான் இந்த இரகசியத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஆகிறது.. இனி வரும் பாடங்களில் இந்த இரகசியத்தை மையமாக வைத்தே, அனைத்தும் அமைய இருக்கிறது.. புதுமையான பயனுள்ள பயிற்சிக்கு தயார் ஆகி இறை ஆற்றலை ஆன்மா லாபத்தின் மூலம் அளவற்ற அளவில் பெற துணிவு கொள்ளுங்கள்.. வினாயகன் மூலமாக மட்டுமே ஒருவன் விநாயகன் ஆக முடியும்.. நேரடியாக விநாயகன் ஒரு போதும் ஆக முடியாது.. இங்கே சொல்லப்படுவதேல்லாம் தமிழ் சித்தர்கள் கண்ட தமிழ் யோகம்.. உண்மை யோகம் .... இன்றும் வாழும் சித்தர்களின் ஒரு வகையில் வாய் மொழி சொல்லே என நம்புங்கள்.. பயன் பெறுங்கள்.. இதனை எழுத்து வடிவமாக்கி தரும் இந்த மர்மயோகி எல்லாம் பெற்று இருப்பவன்.. யாரிடமும் எதையும் துளி அளவு கூட பெற அவசியம் இல்லாதவன்.. ஆன்ம லாபமே மிக உயர்ந்த லாபம் என உயர் புத்தியோடு செயல் புரிந்து வருபவன்.. ஆகவே நம்பி படியுங்கள், பயிலுங்கள்,நிறை வாழ்வு கொள்ளுங்கள்..

பகுதி இரண்டு:-- நிறை மனிதன் இரகசியங்கள்
1) முடியாததோடு மோது. ஓத ஓத பாடி முடி.
2) புரியாததை புரியாதவே ஏற்க.. அது தன்னை வெளி படுத்தும் வரை..
இந்த இரண்டு சத்திய உண்மை வாக்கியங்கள் நிறை நிலை மனிதனின் இரண்டு கண்கள் போல்.. இவை இன்றைய அத்தனை யோகங்களும் எவ்வாறேல்லாம் அன்றைய புனித யோகநிலைகளிலிருந்து வேறு பட்டு மனிதனை முடக்கி, மிக வளமான நம் திரு நாட்டில் நம்மை சீராக வாழ வழி இல்லாமல் செய்து விட்டது என்பதை தெள்ள தெளிவாக காட்டும்.. தியானம் என்ற பெயரில் தாங்க முடியாத நெருப்பாற்றலை கடக்கும் வழி சொல்லாமல், நீர் என்ற எண்ண பதிவுகளிலேயே உழன்று உழன்று, நெருப்பாற்றல் கதவினை அடைத்து, அதற்கு மேலே காற்று என்ற புத்தி, ஆகாயம் என்ற பேரறிவு பெற முடியாத அவல நிலைக்கு தள்ளி பட்டு கொண்டிருக்கிறார்கள்.. எண்ண மயக்கத்திலும், எதையும் சாதிக்காத பொய் குரு மயக்கத்திலும் விழுந்து எதோ எந்திர மயமாய் யோகப் பயிற்சியினை செய்து, ஏமாறி ஏமாறி முடங்கி போய் இருந்து கொண்டு இருக்கிறான்..
முடியாத ஒன்றை எதுவும் காட்டப் படுவதும் இல்லை.. உதாரணமாக இறை நிலை உணர்வது ஆரம்ப நிலையில் முடியாத ஒன்று தான்.. அதோடு மோதும் இரகசியத்தை அறிந்தால் மட்டுமே முதல் உறவு ஏற்படும்.. ஏன் மோத வேண்டும் இணையக் கூடாதா என்ற கேள்வி எழலாம்.. அதற்கான விளக்கம் பின்னால் வருகிறது.. வீரம் இழந்து முடிந்த ஒன்றோடு உறவாடி புதுமை காட்டுவது போல் காட்டி, ஒருவரின் திறமை பெருக்கத்திற்கு தடையாய் இருந்து, அவனை முடக்கி செயல் இழக்க செய்து, கொண்டிருக்கும் இன்றைய யோக கல்வியின் அவல நிலை, நிறை மனித இரகசியங்களை புதிய மனதோடு படித்தால் மட்டுமே விளங்க வரும்..
புரியாத ஒன்றை புரிந்தது போல் காட்டும் வஞ்சகர்கள், தானும் கெட்டு தன்னை சார்ந்தவர்களையும் கெடுத்து, திசை மாறி போய் ஆக்கம் என்ற நல் பாதையை விட்டு விலகி மயக்கம் என்ற பாதையில் செயல் இழந்து போய் இருக்கிறார்கள்.. ஏதோ கைலாய மலைக்கு சென்று சோர்ந்து போன நிலையில் இப்படி மற்றவர்களை தாக்குகிறார் என்று நீங்கள் எண்ண தொடங்கலாம்.. புரியாததை புரியாததாகவே ஏற்று கொள்ளும் பண்பில் கைலாய யாத்திரை வலு கூட்டியதால் யாம் பல பல மடங்கு தெளிவுடன் உள்ளோம்.. ஐயம் எதுவும் வேண்டாம்.. பின் வரும் பகுதிகளில் மேல் சொன்ன இரண்டு சத்திய வாக்கியங்கள் எவ்வாறு அதன் மேன்மை வெளி படுகிறது என்பதை உற்று கவனிக்குமாறு வேண்டுகின்றனன்..
ஞான பழம் அடைய முருகன் விநாயகர் எடுத்து கொண்ட பாதைகள் வினோதமானது.. தானே ஞான பழம் என்பதை அறியாத முருகன் உலகெல்லாம் வலம் வந்தும் பழம் கிடைக்காமல் மன உழைச்சல் அடைந்தார்.. ஆனால் விநாயகர் ஆன்ம லாப உணர்வு மட்டுமே துணையாக கொண்டு ஞான பழத்தை சுலபமாக பெற்றார்.. நிறை மனித இரகசியங்கள் விநாயகர் வழி... புரியாததை புரியாததாகவே ஏற்று கொள்ளும் இரகசியத்தில் அளவற்ற ஆன்மா லாபம் பெற்று முடியாததோடு மோதி சாதனை ஆளராக சுலமாக மாறி நிறை நிலை மனித நிலைக்கு பயணிப்போம்.. பத்து பகுதிகளுக்கு மேல் தொடரும் இந்த பாடங்கள் சற்று பொறுமையாக படிக்குமாறு வேண்டுகின்றனன்..
[8/8, 11:34 AM] ‪+91 97516 80133‬: பகுதி மூன்று :--- நிறை மனிதன் இரகசியங்கள்
முடியாததோடு மோது
முட்டாள் முடியாததோடு மோதி வெல்வான்
அறிவாளி முடிந்ததோடு மோதி தோற்பான்
இது என்ன புதுமையான வாக்கியமாக இருக்கிறது.. இது புதுமை மட்டும் அல்ல உண்மையும் கூட.. கண்ணப்பர் தன் கண்ணை சிவனுக்கு தானமாக வழங்க முனைந்தது முட்டாள் தனமென்றால் வென்றது சிவன் அருளை.. முடியாத ஒன்றோடு மோதி சிவன் அருளை வென்றான். அதுவும் ஏழே நாடகளில்.. அதே சிவனை 20 வருடங்கள் பூஜித்த பூசாரிக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.. ஒரு பானை நீரை காட்டு தீயில் கொதிக்க வைத்து ஆவி ஆக்கி மன மாற்றம் அடைந்து சிவன் அருளை பெற்றார் கண்ணப்பர்.. வெறும் மெழுகுவர்த்தி சூட்டில் கொதிக்க வைக்க முயன்று 20 வருடங்கள் வீணாக்கினார் அறிவாளி பூஜாரி.. உலக விவகாரங்களில் அறிவாளி தனம் வேலை செய்யும்.. ஆனால் அக உலகில் முட்டாள் தனமே வேலை செய்யும்.. அதுவும் அடி முட்டாள் தனம் மிக அதிகமாக வேலை செய்யும்.. இடம் மாறினால் மிகுந்த தொல்லைகளே மிஞ்சும்..
முட்டாள் என்ற வார்த்தைக்கு தமிழில் அழகான அர்த்தம் இருக்கிறது.. முட்டாள் ஐ பிரித்தால் ம்+உ+ட்+ஆள் என ஆகும்.. இதில் 'ட்' மெய்யில் கிடை கோடு மண்ணையும், நிலை கோடு விண்ணையும் குறிக்க அது இணைந்த நிலையில் தேசம் கடந்த நிலையினை குறிக்கும். தேசம் இல்லையேல் காலமும் இல்லை.. காலமும் தேசமும் கடந்த நிலையில் தான் இறைவன் இருக்கிறான் என்பதை நாம் அறிந்ததே.. ஒருவன் மரணம் அடையும் தருவாயில் எல்லா நினைவுகளும் கடந்து சர்வ முட்டாளாகி இறை நிலைக்கு பயணமாகிறான்.. ம் என்பது அகம் பொருந்திய நிலை.. 'உ' என்பது இயக்கம்.. ஆள் என்பது ஆளும் தன்மை.. முட்டாள் என்பது அகம் பொருந்தி இயங்கி இறை தன்மையில் ஆளும் தகுதி உடையவன் என பொருள்... இன்றைய குருமார்கள் அகநிலையில் முட்டாளாக இல்லாதது தான் மிக பெரிய குறை பாடு.. அது பெரிய வெட்க கேடு..
முடியாததோடு மோது.. எந்த அறிவாளியும் முடியாததோடு மோதவே மாட்டான்.. வெளியே லாபம் நஷ்டம் பார்த்து பார்த்து பழகியவன் அகத்திலும் முடியாததோடு மோதி பார்க்க தயாராக மாட்டான்.. முடியாததோடு மோதும் தகுதி நாம் புரிந்து கொண்ட முட்டாளுக்கு மட்டுமே உண்டு.. முதலில் முட்டாள் ஆகுங்கள் என்றால் முகம் சுழிக்க வேண்டாம்.. இறை நிலையை அணுகும் போது எந்த லாப நஷ்டம் பார்க்காத பண்பு வேண்டும் என்பதற்காகவே அப்படி சொல்லுவது.. லாப நஷ்டம் பார்த்து அணுகு முறையில் எந்த நளினமும் இல்லாத காரணத்தால் முடியாததை பற்றி ஏதும் அறியாத நிலையில் முடியாததோடு மோதவே வேண்டிய திருக்கும்.. மோதுவதுக்கு எந்த நுணுக்கமும் தேவை இல்லை.. நுணுக்கம் வந்தால் அறிவு வந்து விடும்.. அறிவு வந்து விட்டால், லாப நஷ்டம் பார்க்க வேண்டிவரும் பின் காரியம் கெட்டு விடும்.. ஆகவே முடியாததோடு மோதவே வேண்டும்.. வேறு வழி இல்லை..
ஏன் முடியாததோடு மோத வேண்டும் ? என்ற கேள்வியை நீங்கள் கேட்கும் முன் நானே கேட்கிறேன்.. நீங்கள் எமது பதிவுகளை படித்த பின்பும் எந்த கேள்விகளையும் கேட்பதில்லை.. மிக சிக்கலான விசயத்தில் கூட சந்தேகமே எழவில்லை என கவனிக்கும் போது, மேலோட்டமாக, இயந்திர தன்மையோடு படிக்கின்றீர்களோ என்ற ஐயம் எழுவது உண்டு.. நான் என் கடமையை செய்வதால் எனக்கு கவலை எதுவும் இல்லை.. ஏன் முடியாததோடு மோத வேண்டும் ???
1) முடியாததோடு மோதும் போது நமது முழு சக்தியை பயன் படுத்தும் சந்தர்ப்பம் வாய்க்கிறது..
2) முழு சக்தியை பயன் படுத்திய பின் அதிக சக்திக்காக ஒரு ஏக்கம் வருகிறது..
3) கருணை சக்தி தாய் உடன் வந்து தன் சக்தியையே கொடுக்கும் சூழ்நிலை உருவாகிறது..
4) அந்த அளவற்ற சக்தியை பெற்றபின் முடியாததை முடிக்கின்ற நிலைக்கு வருகின்றோம்
5) இப்போது முடியாததை தன் விதிக்கப் பட்ட சக்தியாலும், அதற்கு மேல் அதிக பட்ட இறை ஆற்றல் சக்தியாலும் சாதித்து நிறை நிலை மனித நிலைக்கு நகருகின்றோம்
கிணற்று பழைய நீரை இறைத்து உபயோகப்படுத்தி பின்பே புதிய ஊற்று ஊறுவது போல, விதிக்கப் பட்ட சக்தியை பயன் படுத்திய பின்பே அதிகப் பட்ட இறை ஆற்றல் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஒரு நாளும் மறக்க கூடாது.. விதிக்கப் பட்ட சக்தியை பயன் படுத்தாத சோம்பல் கூட்டம் விண்ணிலிருந்து அதிசயம் நிகழும் என எதிர் பார்ப்பதில் துளியும் அர்த்தமே இல்லை.. விண்ணிலிருந்து அதிசயம் நிகழும்.. எப்பொழுது என்றால் தனக்கு விதிக்கப்பட்ட சக்தியை பூரணமாக பயன் படுத்திய பின் அதிகப்பட்ட சக்திக்கு ஏங்கும் போது விண்ணிலிருந்து மகா சக்தி வந்தே ஆக வேண்டும்.. கிணற்று நீரை இறைத்த பின் ஊறும் நீரை போல் மகா சக்தி வந்தே ஆக வேண்டும்.. அபிராம பட்டர் அந்த மகா சக்தியால் விண்ணில் அமாவாசை திதியன்று முழு நிலவை காட்ட வில்லையா? அதிகப்பட்ட சக்தியால் எதுவும் நிகழ்த்தலாம்.. ஆனால் அதை அடையும் வழியான யுக்தி சோம்பலால் அடைக்கப்பட்டு இருக்கிறது.. சோம்பல் வாழ்வையே சுகமான வாழ்வு என எண்ணும் இந்திய சமுதாயம் மீள வழியை அன்றே விழித்திரு எழுந்திரு என விவேகானந்தர் சொன்னார்.. நம் சமுதாயம் இன்னும் விழிக்கவே இல்லை.. அப்படியே ஓரிருவர் விழித்து இருந்தாலும் தூங்கி கொண்டிருப்பவர் வீட்டில் திருடவே செய்கின்றனர்.. ஆகவே நிறை நிலை மனிதன் ஒருவன் வர வேண்டும்... நாமோ நம்மில் ஒருவரோ ஊக்கத்துடன் எழுந்தால் அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும்.. அம்மனிதன் விரைவாக வர வேண்டும்..மேலும் இதை குறித்து அடுத்த பகுதியில் சற்று விரிவாக பார்க்கலாம்..
( விதிக்கப் பட்ட சக்தி, அதிகப்பட்ட இறை சக்தியில் குழப்பம் இருப்பின் வாசி யோக இரகசியங்கள் பகுதி 12 மேலும் 13 ல் பார்த்து தெளிவு பெறவும்..)
-- உயர் திரு மர்ம யோகி ஐயா

No comments:

Post a Comment