Wednesday, August 26, 2015

ஆனந்தம் -- இறைநிலை. வேண்டுதல் வேண்டாமை என்றால் என்ன?



 ஆனந்தம் --  இறைநிலை. வேண்டுதல் வேண்டாமை என்றால் என்ன?

ஒரு பொருள் வேண்டும் என்றால் என்ன?  அந்த பொருள் நம்மிடையே இல்லை என்றுதானே பொருள். இல்லைநிலை என்றால் துன்பநிலை  என்றுதானே பொருள். அந்த பொருள் வேண்டும் என்று நினைபதற்கு முன் நம்மிடையே இருந்தது என்ன?. வேண்டுதல் இல்லாநிலை தானே. அதுதானே ஆனந்தநிலை.  அது எப்போது காணமல் போகிறது?.  வேண்டும் என்ற ஆசை எண்ணம் தொன்றிய பின்னர் தானே.  பொருளினால் இன்பம் துன்பம் மட்டுமே ஏற்படும்.  ஆனால் ஆனந்தம் ஏற்படாது.  வேண்டும் என்ற ஆசை இல்லாவிட்டால் எல்லாம் நம்மிடமே இருக்கிறது என்றே அர்த்தமாகிறது.  இது விளங்க ---  நாம் ஆசைப்பட்டு வேண்டி தேடிய  ஒரு பொருள்  கிடைத்துவிட்டால் அதனால் மகிழ்ச்சி உண்டாகிறது.  அது கிடைகவிட்டால் துன்பம் உண்டாகிறது.  இது இரண்டும் தாண்டிய நிலை ஆனந்தநிலை ஆகும்.

                                      வேண்டும் என்ற ஆசை துடங்கி நிறைவேறி வேண்டாமை நிலையை அடைகிறது. பின்னர் வேறு ஒரு வேண்டும் என்ற ஆசை துடங்கி வேண்டாமை நிலையை அடைகிறது.  அப்படி பார்த்தல் வேண்டாமை நிலையே நிரந்தர உண்மையாக உள்ளது. அதுவே நாம் இயற்கை இயல்பாக உள்ளது.  நாம் இந்த உண்மை அறியாமையால் வேண்டும் என்ற நிரந்திரம் இல்லாத ஆசைநிலையில் துன்பநிலையில் அகப்பட்டு மாய்ந்து போகிறோம்.  வேண்டாம் என்ற ஆசையற்ற ஆனந்தநிலையே சுத்த அறிவுநிலை ஆகும். நாம் எப்போதும் ஆனந்தநிலயிலேயே இருக்கிறோம் என்பதை மறந்து அறியாமையால் நம்மிடையே உள்ள ஆனந்தத்தை வெளியே பொருள்கள் என்னும் மாயை மூலம் தேடி அடையமுடியாமல் சிக்கி ஆனந்தத்தை அறியாமையால் இழந்து தவிக்கிறோம்  ஜகம் அனைத்தும் மாயையே அதனால் இன்பதுன்பம் ஏற்படுமே தவிர ஆனந்தம் ஏற்படாது.  நாம் எப்போதும் ஆனந்த நிலையான சுத்தசிவநிலையில் தான் இருக்கிறோம் என்று உணர்ந்து ஆசைபடாமல்,
 மொவுனமாக, மொனமாக,  சும்மா இருப்பதே சுகம் . அதுவே நிரந்திர உண்மை அறிவுநிலை ஆகும்.  வேண்டாம் என்ற உண்மை அறிவே தத்துவங்களை உடைத்து சுத்த சிவநிலையாம் சித்திநிலையை அடைய உதவும்.   அதனால் தான் வள்ளல் பெருமானார் வேண்டுதல் வேண்டாமை வேண்டும் என்று பாடுகிறார்.

Uyir. 
8/11/2010

2 comments:

  1. ஒவ்வொரு தகவலும் ஒரு பொக்கிஷம்..நன்றி

    ReplyDelete
  2. Nalla thagavalgal mikka nandri swamiji

    ReplyDelete