Saturday, July 30, 2016

அருணாசலபுராணம்பாகம் 1: arunachalapuranam1

இன்று முதல் அருணாசல புராணம்.(22.07.2016)


பாகம் 1:
கயிலாய மலையின் தோற்றம்:

இந்த அண்ட சராசரத்திலேயே மிகப்பெரிய உயர்ந்த மலை கயிலாய மலை.அதன் அழகு சிவபெருமான் தன் சடையில் கங்கையையும் நிலவையும் சூடி நெற்றியில் திரு நீற்றையும் சூடி இருப்பது போல் தோன்றும். அவரைக்கான எப்போதும் தேவர்கள் கூட்டம் வந்துகொண்டே இருக்கும். அவ்வாறு அவர்கள் வந்து காணும் போது அவர்களின் கிரீடங்கள் ஒன்றோடொன்று உரசி அதில் உள்ள தங்கத்தின் பொடிகள் இரத்தினத்தின் பொடிகள் கீழே சிந்திக்கிடக்கும்.

சிவபெருமானின் மண்டபம்:

சிவபெருமான் வீற்றிருக்கும் மண்டபம் இந்திரலோக கற்களாலும் வைரத்தூண்களாலும் செய்யப்பட்டது.
அதன் கூரை சந்திரகாந்த கற்களால் ஆனது.

நந்திகேஸ்வரர் தோற்றம்:

மகேசனின் கட்டளைப்படி கயிலாய மலையை காவல் காப்பவர் நந்திகேஸ்வர். அவர் கைகளில் மான் , மழு , பிரம்பு , உடைவாள் அகியவற்றை தாங்கிக் கொண்டும், அவர் தேகம் பிரகாசமான நிலவைப் போன்றும், திரிநேத்திரங்களுடன் நான்கு புயங்கள் இடையில் புலித்தோல் ஆகியவற்றுடன் பார்ப்பதற்கு இவர்தான் சிவபெருமானோ என்று என்னும் அளவிற்கு அவர் தோற்றம் பவளமாய் பிரகாசித்தது.

மோட்சம் பெற வழி யாது?

நந்திகேசுவரர் அருகில் குற்சர், உரோமசர் ,குமுதாற்சர் , சகடாயர் , அகத்தியர் , வற்சர் , வைசம்பாயனர் , கணாசிமுனி , வியாக்கிரபாதர் , வாசுதேவர் , சனகர் , சனர்குமாரர் , வியாக்ரபாதர் , வியாசர் , மதங்கர் , பதஞ்சலி, மார்கண்டேயர் முதலான முனிவர்கள் சூழ்ந்திருந்தனர்.
அப்போது மார்கண்டேயர் நந்திகேசுவரரை நோக்கி வணங்கி
" சுவாமி உயிர் என்பது மின்னலைப்போன்று உடனே தோன்றி அழியும் தன்மை கொண்டது இந்த நிலையற்ற வாழ்வில் தாங்கள் தான் மோட்சம் அடைவதற்கான உரிய உபாயத்தை கூற வேண்டும்"
 என்று வேண்டினார்.
நந்தி தேவர் பதில் கூறத் தொடங்கினார்.
 அருணாசல புராணம் தொடரும் .....
ஓம்
நமசிவாய
- சிவனடி சிவகணேசன்
அருணாசலபுராணம்

அருணாசலப்பராணம்.
பாகம்2:
நதிகளின் பெருமை:

நந்தியெம்பெருமான் சைவ முனிவர்களுக்கு முக்தி தரும் நதிகளின் பெருமையை கூறலானார். உலகில்
 காவிரி , கோதாவரி , கிருஷ்ணவேணி , சம்பை, கும்ப நதி, வேதவதி சரயு , தாமிரபரணி, பொன்முகி, நர்மதா, யமுனா. ஆகிய நதிகளில் நீராடியவர்கள் பாவங்கள் அனைத்தும் விலகும்.
கங்கையின் பெருமை:
மேலும் புன்னியமான காசி என்ற தலத்தில் கங்கை என்னும் புண்ணிய நதியில் முழுகினால் முக்தி நிச்சயம். அந்த கங்கை நதி எப்பொழுதும் பரமசிவனின் நாமத்தை கேட்டுக்கொண்டே இருப்பதால் அதில் உயிர் விடுகின்றவர்கள் அனைவரும் சிவனடி சேர்வர். இத்துனை பெருமை பெற்ற காசி கயிலாயத்தை விட சிறப்பான தலமாகும்.

தலங்களின் சிறப்பு:

திருவாரூர்:

அகிலத்தை காக்கும் தொழிலை செய்பவர் மஹாவிஷ்னு. ஒரு முறை அசுரர்களை தம் கோதண்டத்தால் அழித்து கொண்டிருக்கையில் அசுரர்கள் சிலர் செல்லாக மாறி நாணினை அறுத்துவிட அவரின் தலை துண்டானது. மஹாலஷ்மி தன் கணவரின் தலை மீண்டுவர தவம் இயற்றி மீட்டுப்பெற்ற தலமே கமலாலயம் என்னும் திருவாரூர். இத்துனை பெருமை பெற்ற ஈசன் உறையும் திருவாரூரை சென்று வணங்கி கமலாலய குலத்தில் மூழ்கினால் முக்தி நிச்சயம்.

மேலும் தலங்களின் பெருமை தொடரும்....
அண்ணாமலையெம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி
அண்ணாமலையாருக்கு அரோகரா.
- சிவனடி சிவகணேசன்

அருணாசலபுராணம் :

Thank to
பஞ்சபுராணம் ஐம்புராணம 
whatsapp group 

Wednesday, July 27, 2016

கஷ்டங்களை தீர்க்கும் பஞ்சபுராணம்

சிவபெருமானை முழுமுதற்கடவுளாகப் போற்றுபவை பன்னிருதிருமுறைகள். இவை சிவனடியார்களால் பாடப்பட்டவை.
ஒம் சரவணபவ ஒம்'s photo.
இப்பாடல்களில் ஐந்து நூல்களை மட்டும் பஞ்சபுராணம் என்று போற்றுவது மரபு.
கோயில்களில் சிவபெருமானுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும்போது பன்னிருதிருமுறைகளைப் பாட நேரமோ, அதற்கான சூழ்நிலையோ இல்லாமல் இருந்தால் பஞ்சபுராணத்தையாவது அவசியம் ஓதுவார்கள் ஓதவேண்டும் என்ற விதியை பெரியவர்கள் ஏற்படுத்தினர்.
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து நூல்களில் இருந்து ஒவ்வொரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடுவதே பஞ்சபுராணம் ஓதுதல் ஆகும்.
மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் அஞ்சுபாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர்.
தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்தபின் இதனை பாடுவது சிறப்பு.

தினமும் உங்கள் பூஜை முடிக்கும் முன் ஓதி வருவது சிறந்த பலனை தரும். இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது இதனை தவறாது கோவிலில் சென்று செய்யுங்கள். உங்களது எல்லா வித கஷ்டங்களும் சூரியனை கண்ட பனி போல் நீங்கிவிடும்.
பஞ்சபுராணம்
ஞாயிற்றுக்கிழமை 1
தேவாரம்
செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வ வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்தும் செல்வஞ் செல்வமே.
திருவாசகம்
ஆடு கின்றலை கூத்துi யான் கழற்(கு)
அன்பிலை: என்புருகிப்
பாடு கின்றலை: பதைப்பதும் செய்கிலை
பணிகிலை: பாதமலர்
சூடுகின்றலை: சூட்டுகின் றதுமிலை:
துணையிலி பிணநெஞ்சே!
தேடுகின்றலை தெருவுதோ றலறிறை:
செய்வ தொன்ற றியேனே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே ! உலப்பிலா ஒன்றே !
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே !
திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனி எல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன
அடியோமுக்கு அருள்புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
பெரிய புராணம்
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்:
அலகில் சோதியன்: அம்பலத்து ஆடுவான்:
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
திருச்சிற்றம்பலம்
******
திங்கட்கிழமை 2
தேவாரம்
தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால் மான்கன்று துள்ளக்கவரி
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே
திருவாசகம்
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடவு ளிருக்கும்
அருளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
திருவிசைப்பா
நீறணி பவளக் குன்றமே! நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவனபோகமே! யோக
வெள்ளமே! மேருவில் வீரா!
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா!
அம்பொன்செய் அம்பலத் தரசே!
ஏறணி கொடிஎம் ஈசனே! உன்னைத்
தொண்டனேன் இசையுமாறு இசையே!
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள் :
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் :
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு
ஆட் செய்மின் குழாம் புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் : மீண்டும்
பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்: இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
அறவா! நீ ஆடும் போதுஉன்
அடியின்கீழ் இருக்க என்றார்.
திருச்சிற்றம்பலம்
செவ்வாய்க்கிழமை 3
தேவாரம்
கானருகும் வயலருகுங் கழியருகுங் கலரும்
மீனரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தம் சென்று உரையாயே.
திருவாசகம்
வேதமும் கேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதியு மாய் இருள் ஆயினார்க்குப்
துன்பமு மாய் இன்பம் ஆயினர்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
திருவிசைப்பா
ஏகநாயகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை, எதிர்இல்
போகநாயகனைப், புயல்வனற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேகநா யகனை, மிகு திருவீழி
மிழலை வீண் ணிழி செழுங் கோயில்
யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே
திருப்பல்லாண்டு
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
து}ய்மனத் தொண்டருள்வீர்,
சில்லாண் டிற்சிதை யும்சில தேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்டகன கத்திரள் மேரு
விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுர்கே
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கைதொழுதார்:
பரிவரிய தொண்டர்களும் பணிந்துமனம் களிபயின்றார்:
அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப் போவாரம் மறைமுனிவர்.
திருச்சிற்றம்பலம்
******
புதன்கிழமை 4
தேவாரம்
ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக்
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
சென்று, தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்து நட்டம்
என்றுவந் தாய்என்னும் எம்பெருமான் தன்திருக்குறிப்பே.
திருவாசகம்
சிரிப்பாய் களிப்பார் தொனிப்பார்
திரண்டு திரண்டுன் வார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெள்வே றிருந்துன் திருநாமத்
தரிப்பார் பொன்னம் பலத்தாடுந்
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே.
திருவிசைப்பா
நையாத மனத்தினை நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ! உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள்? கோடைத் திரைலோக்கிய சுநதரனே.
திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார் உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமை மணவாளனுக்கு ஆள்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
செங்கண் விடையார் திருமலர்க்கை
தீண்டப் பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின்மேல்
அளவின்று உயர்ந்த சிவமயமாய்ப்
பொங்கி எழுந்த திருவருளின்
மூழ்கிப் பூமேல் அயன்முதலாம்
துங்கவமரர் துதி செய்யச்
சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.
திருச்சிற்றம்பலம்
வியாழக்கிழமை 2
தேவாரம்
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்அடி யேனையும் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.
திருவாசகம்
மாய னேமறி கடல்விடம் உண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயினேன் உனை நினையவும் மாட்டேன்
நமச்சிய வாயஎன் றன்னடி பணியாப்
பேய னாகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ
சேய னாகிநின் றலறுவ தழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
திருவிசைப்பா
மின்னார் உருவம் மேல்வி ளங்க
வெண்கொடி மாளிகை சூழல்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்தில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
என்று கொல் எய்துவதே!
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
பெரியபுராணம்
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவுஎன்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்குஇனிய வாம்என்றும்
அவனுடைய நிலைஇவ்வாறு; அறிநீ என்று அருள் செய்தார்.
திருச்சிற்றம்பலம்
******
வெள்ளிக்கிழமை 6
தேவாரம்
திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்
சுடரே செழுஞ்சுடர் நற்சோமிமிக்க
உருவேயென் உறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தினுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினை நோய் அடையாவண்ணம்
ஆடுவடு தண்துறை உறையும் அமரரேறே.
திருவாசகம்
பிட்டு நேர்பட மண்சு மந்த
பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
நாயி னுங்கடை யாயவெங்
கட்டனேனையும் ஆட்கொள் வான்வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
திருவிசைப்பா
அல்லாய் பகலாய் அருவாய் உருவாய்
ஆரா அமுதாய்க்
கல்லால் நிழலாய்! கயிலை மலையாய்!
காண அருள் என்று
பால்லா யிரம்பேர் பதஞ்ச லிகள்
பரவ வெளிப்பட்டுச்
செல்வாய்மதிலின் தில்லைக் கருளித்
தேவன் ஆடுமே.
திருப்பல்லாண்டு
தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ்
வண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்
போனக மும்அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
திரிபுரம் எரித்தவாறும்
தேர்மிசை நின்றவாறம்
கரியினை உரித்தவாறும்
காமனைக் காய்ந்தவாறும்
அரிஅயற்கு அரியவாறும்
அடியவர்க்கு எளியவாறும்
பிரிவினர் பாடக் கேட்டுப்
பரமனார் அருளினாலே.
திருச்சிற்றம்பலம்
******
சனிக்கிழமை 7
தேவாரம்
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உனையல்லால் இனி யாரை நினைக்கேனே.
திருவாசகம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தன்எனக் கருளியவாறு யார்பெறுவார் அச்சோவே!
திருவிசைப்பா
எழுந்தருளாய் எங்கள் வீதி யூடே
ஏதமில் முனவரோ டெழுந்த ஞானக்
கொழுந்தது வாகிய கூத்த னேநின்
குழையணி காதினின மாத்தி ரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும்
செங்கணி வாயும் என் சிந்தை வெளவ
அழுந்தும் என் ஆருயிர்க் கென்செய் கேனோ
அரும்புனல் அலமரும் சடையினானே!
திருப்பல்லாண்டு
எந்தைஎன் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு
தாம்எம் பிரான்என் றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார்
அகுநாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்(து)
ஆண்டுகொண் டாருயிர்மேற்
பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று
பல்லாண்டு கூறுதுமே.
பெரிய புராணம்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று உளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது: எங்கும் நிலவி உலகெலாம்.
திருச்சிற்றம்பலம்
திருமுறைகள் ஓதும் (பாராயணம்) முறை
காலையில் ஐந்து மணிக்கெல்லாம் துயிலெழுந்து நீராடி, திருநீறணிந்து, உருத்திராட்சம் (இருப்பின்) அணிந்து பூசை அறையில் கிழக்கு அல்லது வடக்குத் திசை நோக்கி அமர வேண்டும்.
முதலில் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். பிறகு விநாயகப்பெருமானைத் துதிக்க வேண்டும். இதனை அடுத்து நால்வர் துதிப்பாடல்ளைப் பாடவேண்டும். அதன் பின்னரே, அவரவர்கள் விரும்பும் பதிகங்களைப் பக்தி சிரைத்தையுடன் ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஓதுதல் வேண்டும். "பக்திமையாலே பாடியும் ஆடியும் பயிலவல்லோர்கள். விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வானுலகாண்டு வீற்றிருப்பவர் தாமே" என்பது திருஞான சம்பந்தப் பெருமானார் வாக்காகும்.
திருமுறை பதிகங்களை ஓதிப் பெறமுடியாத செல்வம் உலகில் இல்லை. இது சத்தியமாகும். இதை அவரவர்களே அனுபவித்த உணரலாம.;
பதிகங்களைத் துவங்குவதற்கு முன்பாகவும் முடித்த பின்னரும் திருச்சிற்றம்பலம் என்று கூறுதல் வேண்டும்.
"சிவமே நமக்குப் பொருள்"
திருச்சிற்றம்பலம்.
ஆன்மீக முகநூல் தளத்தில் இணைந்திட சொடுக்கவும்
===========================================================================
பதிகம்: 2
திருச்சிற்றம்பலம்
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!
(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன்.
ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன்.இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!
2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!
திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று - பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு - பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;
ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!
3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.
4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் - ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி - அதள் - அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம்ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேருமுதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.
10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!
கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.
11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
திருச்சிற்றம்பலம்
ஆங்கிலத்தில் மின்னூலாக இங்கே:https://slokas.yolasite.com/resources/kolaru%20pathigam.pdf
இங்கே பதிகம் யூடியூப் காணொளியாக: https://www.youtube.com/watch?v=uWO9_Pb7kJo
ஓம் நமச்சிவாய! _/\_
ஆன்மீக முகநூல் தளத்தில் இணைந்திட சொடுக்கவும்
============================================================================

விநாயகர் வணக்கம்


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே 

ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.


01. திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் - முதல் திருமுறை


தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் 
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. 

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, தூய வெண்மையான பிறையை சூடி, காட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன் இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ! 


02. திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் - இரண்டாம் திருமுறை


என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே. 

முழுமையான மணிகளும், முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும், அன்பு செய்தும், பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத்தலால், கடல் சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில், நெஞ்சே! நீ! எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்?.


03. திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் - மூன்றாம் திருமுறை


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே. 

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் "நமச்சிவாய" என்ற திருவைந்தெழுத்தாகும்.


04. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் - நான்காம் திருமுறை


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே. 

புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும்.


05. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் - ஐந்தாம் திருமுறை


அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கு மாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே. 

நாம் இறந்த பின்னர் பேரின்ப வீடு அளித்து நமக்கு அருளும் தில்லைச் சிற்றம்பலவன், பொன் அளித்து நம்மை இம்மையிலும் காக்கின்றான். அத்தகைய சிவபிரானை, மறுபடியும் மறுபடியும் கண்டு களிக்க, எனக்கு மனிதப் பிறவியினை மீண்டும் மீண்டும் அளிப்பாரோ?.


06. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் - ஆறாம் திருமுறை


அரியானை அந்தணர்தம் சிந்தை யானை 
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் 
திகழ் ஒளியைத் தேவர்கள் தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் 
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 


07. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் - ஏழாம் திருமுறை


பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை 
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் 
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, "அருட்டுறை" என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய், அதனால் எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி இப்பொழுது, "உனக்கு அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.


08. மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம் - எட்டாம் திருமுறை


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே.

பாலை காலமறிந்து கொடுக்கின்ற தாயைக் காட்டிலும் மிகவும் அன்பு கொண்டு, நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி, உள்ளத்தில் ஞானத்தை பெருக்கி, அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து நான்கு புறங்களிலும் உடன் திரிந்த அருட்செல்வமே! சிவபிரானே! நான் உன்னைத் தொடர்ந்து உறுதியாகப் பற்றியுள்ளேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.


09. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு - ஒன்பதாம் திருமுறை 


பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

பாலை உண்பதற்கு வியாக்கிர பாதமுனிவர் புதல்வனாகிய உபமன்யு என்ற சிறுவன் விரும்பிப் பால் பெறாது அழுது வருந்த அவனுக்குப் பாற்கடலையே அழைத்து வழங்கிய பெருமானாய், ஒரு காலத்தில் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருள் செய்தவனாய், நிலைபெற்ற தில்லைத் திருப்பதியிலே வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற சிற்றம்பலத்தையே இடமாக்கொண்டு அருளை வழங்கி நாட்டியத்தை நிகழ்த்தும் எம் பெருமானுக்கு பல்லான்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.


10. திருமூலர் அருளிய திருமந்திரம் - பத்தாம் திருமுறை 


சிந்தையது என்னச் சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளிய வல்லார் கட்குச்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.

அரசனைத் தாங்கும் அரசு கட்டில் அரசனெனவே மதிக்கப்படும். அதுபோல் கொற்றந்தரும் முரசு கட்டில் கொற்றவை எனவே மதிக்கப்படும். இம்முறையே சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிந்தை சிவனெனவே மதிக்கப்படும். அக்குறிப்புத் தோன்றச் "சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை" என ஓதினர். பால் கலமும் பால் போல் மதிக்கப்படும். மேலும் உயிருள்ள உடலும் உயிர்போன்றே மதிக்கப்படுமல்லவா? அஃதும் ஒப்பாகும். நீங்கா நினைவுடன் திருவைந்தெழுத்தினை நினைவார் ஓங்கும் செந்நெறிச் செல்வராவர். அத்தகையார் திருவுள்ளத்தின்கண் சிவனும் வெளிப்பட்டருள்வன். திருவருளால் உள்ளந்தெளியக் 'கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகிளத்தல்' என்னும் முறையான் தெளியவல்ல நற்றவத்தார்க்குச் "சிந்தையினுள்ளே சிவன்" எழுந்தருளி வெளிப்பட்டு வீற்றிருந்தருள்கின்றனன்.


11. சேரமான் அருளிய பொன்வண்ண அந்தாதி  - பதினொன்றாம் திருமுறை


பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.

தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே. தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே. பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே. 


12. சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம் - பன்னிரண்டாம் திருமுறை 


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம். 

எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம் அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.


அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 


ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே.

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம் தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம் தான். உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்துவைப்பது உன் ஒரு முகம் தான். கிரெளஞ்ச மலையை உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதி காத்ததும் உன் ஒரு முகம் தான். உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம் தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம் தான். அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மை வாய்ந்த திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.


கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம்


வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

மேகங்கள் தவறாது மழையை பெய்ய வேன்டும், வளங்கள் எல்லாம் பெருக வேண்டும், அரசன் நீதியுடன் ஆட்சி செய்ய வேண்டும், உயிரகள் யாவும் நிறைவோடு வாழ வேண்டும், நான்கு வேதங்களில் சொல்லப்பட்ட தர்மஙகள் வளர வேண்டும், தன்னலமற்ற நல்ல வழிபாடுகள் பெருக வேண்டும், பெருமை மிக்க சைவ நீதி உலகமெல்லாம் பரவ வேண்டும்.


ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் 
கூறுசெய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.

முருகனின் பரந்த தோள்கள் பன்னிரண்டும் வாழ்க. ஆறுமுகமும், மலையைப் பிளக்கும் சிறந்த வேலும் வாழ்க. சேவலும், அவன் வலம் வரும் மயிலும் வாழ்க. தெய்வானையும், வள்ளியும் வாழ்வார்களாக. அடியவர்களும் நல்வாழ்வு வாழட்டும். 


திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளியது 


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள், அர்ச்சனைகள், வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க. அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க. வேள்வி, வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும், திருநீற்றினையும் அளிக்கும் பசுக் கூட்டங்கள் வாழ்க. வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக. சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக. வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடு விளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க. உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக. இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக.



1.திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம்
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ள நினை வாயினவே வரம்பெறுவ ரையுறவேண்டாவொன்றும் வேயனதோளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
2.மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம்
பால்நினைத் தூட்டுந் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே.
3.கருவூர்த்தேவர் சுவாமிகள் அருளிய திருவிசைப்பா
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயா !நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுது அருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ? அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
4.சேந்தனார் சுவாமிகள் அருளிய திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
5.சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரிய புராணம்
ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப் போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி
- See more at: 
https://athavannews.com/election2015/?p=234779