Thursday, July 21, 2016

மகா மந்திரம் உச்சரிக்கும் முறை


மகா மந்திரம் உச்சரிக்கும் முறை

மகா மந்திரத்தில் இரண்டு முக்கியமான பகுதிகள் உள்ளன !


முதலாவது பகுதி ஓரிறைவனையே துதிக்கிறோம் -- ஓம் +
இரண்டாவது பகுதி யார் மூலமாக துதிக்கிறோம் என்பது -- நாமத்தினாலே


கீதை 10 : 20 அர்ச்சுணா ! தனித்த பரமாத்துமாவாக நான் இருப்பினும் ஒவ்வொரு மனிதனிலும் ஜீவாத்துமாவாகவும் நானே குடிகொண்டிருக்கிறேன் ! படைப்பினங்கள் அனைத்திற்கும் துவக்கமும் நடுவும் முடிவுமாக நானே இருக்கிறேன் !


கீதை 8:4 வானவர்களான தேவர்கள் அசுரர்கள் அதிதேவதைகள் அல்லது தேவதூதர்கள் என அறியப்படுகின்றனர் !சூரியசந்திர நட்சத்திரங்கள் உள்ளிட்ட வானமண்டலசேனைகள் மற்றும் பூமியிலுறையும் படைப்பினங்கள் அனைத்தும் எதிலிருந்து உருவாக்கபட்டதோ அந்த பரமாத்வான நானே ``ஆதியஜ்னா `` அல்லது வேள்விகளின் புருஷனாவேன் ! 
பூமியிலுறையும் படைப்புகளும் , வாணமண்டல படைப்புகளான தேவதூதர்கள் மற்றும் அசுரர்களும் நாராயணனிலிருந்தே படைக்கப்பட்டுள்ளனர் ! இந்த தேவதூதர்களில் பல வகையினர் உள்ளனர் !உதாரணமாக அஸ்வினிகள் ருத்திரர்கள் கந்தர்வர்கள் வசுக்கள் அசுரர்கள் மற்றும் மஹரிஷிகளும் தேவர்களாக உள்ளதாக குறிப்புகள் உள்ளன ! அப்படி ருத்திரர்கள் வகைப்பட்ட தேவதூதர்களில் ஒருவராக சிவன் உள்ளார் ! அஸ்வினிகளில் ஒருவராக விஷ்ணு உள்ளார் !  தேவர்கள் மற்றும் அசுரர்களும் நாராயணனுக்குள் படைக்கப்பட்ட படைப்புகளே ! இவர்களுக்கு ஒவ்வொரு பொறுப்புகளும் நிர்வாகமும் கடவுளாலும் நாராயணனாலும் வழங்கப்பட்டுள்ளன ! அவைகள் நாராயணனுக்கு கீழான சக்திகள் !! ஆனாலும் மனிதர்களை விட அவைகள் மேலான சக்திகள் ! 

மனிதர்களுக்கு தன்னை விட மேலான சக்திகளுக்கு பயப்படுதல் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது ! செல்வந்தர்களை கண்டால்கூட கூழைக்கும்பிடு போடும்   மனிதர்கள் அவர்களை விட பெரிய வாணமண்டல சக்திகளை பிரியப்படுத்துவது என்பது இயல்பாக வந்த ஒன்று ! 
ஆனால் எல்லாபுகழும் கடவுளுக்கே என்பதுதான் ஆதியிலேயே மனிதர்களுக்கு உபதேசிக்கப்பட்டது ! கடவுளை யார் மூலமாக நாம் படைக்கப்பட்டுள்ளோமோ அந்த நாராயணன் மூலமாக வழிபடுவது சரியானது ! ஓரிறைவனை நாராயணன் மூலமாக துதிக்கிறோம் என்பதையே மகா மந்திரமாக `` ஓம் நமோ நாராயணா `` என்பதாக முதல் மகாமந்திரமாக மனித இனத்திற்கு வழங்கப்பட்டது !

ஆனாலும் மனிதனை விட மேலான சக்திகளான தேவதூதர்கள் மற்றும் மனிதர்களில் தூய்மயடைந்த மஹரிஷிகள் - குருனாதர்கள் மூலமாகவும் கடவுளை வழிபடுவதும் ஆத்ம கல்விக்கு ஏற்புடையது என்பதால் அவர்கள் மூலமாகவும் கடவுளை வழிபடுவது வழக்கத்தில் வந்தது ! 

மகா மந்திரத்தில் இரண்டு முக்கியமான பகுதிகள் உள்ளன !

முதலாவது பகுதி ஓரிறைவனையே துதிக்கிறோம் -- ஓம் 
                  
                +

இரண்டாவது பகுதி யார் மூலமாக துதிக்கிறோம் என்பது -- நாமத்தினாலே 

ஓம் நமோ நாராயணாய
ஓம் நம சிவாயா 
ஓம் சிவாய நம
ஓம் விஸ்ணுவே நம 
ஓம் பிரம்மாய நம   
ஓம் வருணாய நம 
ஓம் அகத்தியாய நம 
ஓம் வசிஸ்ட்டாய நம 
ஓம் விஸ்வாமித்ராய நம 

இப்படி குருமூலமாக கடவுளை துதிப்பது என்ற சரியான வழக்கம் அசுரர்களின் துர் உபதேசத்தால் கலப்படம் அடைந்து ஓமை அர்த்தமற்றதாக்கி விட்டார்கள் ! கடவுளை விட்டுவிட்டு குருவையே கடவுளாக மாற்றிவிட்டனர் ! ஏக இறைவனை ஓரம்கட்டி குருக்களை பல கடவுள்களாக சித்தரித்துவிட்டனர் !

ஓரிறைவனையே துதிக்கிறோம் என்ற எளிதான பொருள் உள்ள ஓமை ஏதோ மூடுமந்திரம் என்றும் ரகசியம் என்றும் சிவனுக்கே தெரியாததை முருகன் ரகசியமாக காதில் ஓதினார் என்றும் இட்டுகட்டி விட்டனர் ! அதிலே ஓமை ரெம்ப பெரிய விசயம் என்பதுபோல காட்டி ஓரம் கட்டிய சாதனையை அசுர சக்திகள் செய்து விட்டன !

ஆனாலும் கதை சரியாகத்தான் உள்ளது ! பிரணவ மந்திரத்தை சிவனும் பிரமனும் மறந்துவிட்டனர் என்று ! வைணவம் மட்டும் மறக்கவில்லை ! இதுதான் குரான் சொல்லும் ஆதி இசுலாம் என்பது ! ஆதி இசுலாம் வைணவமே !! 

நாராயணன் பூமியில் அதர்மம் அதிகரிக்கும்போதெல்லாம் அவதாரமாக வருவார் என்பதுவே முருகன் -- ராமன் -- குமாரன் !

அந்த இறைதூதர்கள் சிவனுக்கும் பிரமனுக்கும் ஓமை மீண்டும் உபதேசிப்பார்கள் என்பது வைணவம் !

நீங்கள் யாரை வழிபட்டாலும் அது என்னையே வழிபடுகிறீர்கள் என கீதையில் உள்ளதாக உள்ளது ! அது திரிபு !

நீங்கள் யார் மூலமாக கடவுளை வழிபட்டாலும் அது என் மூலமாக கடவுளை வழிபட்டதற்கு சமாணம் என்பதுவே சரியானது !

நீங்கள் யார் மீது பக்தியாக இருக்கிறீர்களோ அவர்கள் மூலமாக ஓரிறைவனையே துதியுங்கள் !!
கடவுள் என்பதற்கும் கடவுளின் தூதுவர் என்பதற்கும் மரியாதைக்குறைச்சல் ஏதுமில்லை ! 

ஒருவர் கடவுள் என்றே வைத்துக்கொள்ளுவோம் ! அவர் மூலமாக கடவுளை வழிபட்டால் அது அவருக்கு அவ மரியாதையில்லை !

ஆனால் மகான்கள் , மனிதனாக இருந்து கடவுளை அடைந்தவர்கள் , தவயோகிகள் , தேவதூதர்கள் ஆகியோரை அல்லது கடவுளால் படைக்கப்பட்டவர்களை அவர்களது தெய்வீகத்தண்மை கண்டவர்கள் அவர்கள் மீதுள்ள குருபக்தியை கொஞ்சம் அதிகமாக்கி கடவுளாகவே சித்தரித்து வழிபட்டால் அது கடவுளுக்கு செய்த அவ மரியாதை ஆகிவிடும் !

எட்டாத காரியத்தில் தலையிடாதே என்றொரு பழமொழி உண்டு !

கடவுள் யாரென்று அறிந்துகொள்ளுவது உண்மையில் எந்த நன்மையும் செய்யாது ! அவர் யாரென்று அறிந்துகொள்ளுவதை விட அவருக்கு ஒப்புறவாக நடந்து ஆத்ம தூய்மையடைந்து அவரை சேர்வதுவே முக்கியம் ! அங்கு சென்ற பிறகு அவர் யாரென்று அறிந்துகொள்ளலாம் ! அதுவரை கடவுளை கடவுள் என்று மட்டுமே அழைத்து வழிபடுவது மிகவும் பாதுகாப்பனாது ! 

நாம் மதிக்கும் யார் மூலமாகவும் கடவுளை வழிபடுவது ஏற்புடையதே !

எந்தக்கோவிலுக்கும் சென்று அங்கிருப்போர் மூலமாக கடவுளை வழிபடுவது மிகவும் நன்மையானது ! வேதங்களால் அங்கீகரிக்கப்பட்டதே !

யார் மூலமாகவும் கடவுளை வழிபடலாம் ! ஏனென்றால் சகலரும் கடவுளால் படைக்கப்பட்டவரே ! ஆனால் எவ்வளவு ஆற்றல் உள்ளவராக இருந்தாலும் ; கடவுளை நெருங்கியவராக இருந்தாலும் கடவுளை விட்டுவிட்டு அவரின் அடியவர்களை வழிபடுவது நல்லதல்ல !

நாளை இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் அத்தகையோரிடம் `` பூமியில் உங்களுக்கென்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டீர்களா ? என கேட்கும் போது இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ; அவர்களாக எங்களை கடவுளுக்கு இணை வைத்துக்கொண்டார்கள் என்று கைவிரித்து விடுவார்கள் என்று குரான் எச்சரிக்கிறது !

5:116. இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, "அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.
5:117. "நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" 

16:86. இன்னும், இணை வைத்தவர்கள் தாங்கள் இணைவைத்தவர்களை (மறுமை நாளில்) பார்த்தார்களாயின் "எங்கள் இறைவனே! நாங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். உன்னையன்றி நாங்கள் இவர்களைத் தான் அழைத்துக் கொண்டிருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள்; அதற்கு அவர்கள் , "நாங்கள் தெய்வங்களல்ல நாங்களே சதா இறைவனையே வழிபட்டவர்கள்  நிச்சயமாக, நீங்கள் பொய்யர்களே" என்னும் சொல்லை அவர்கள் மீது வீசுவார்கள் !
ஆகவே ஞானமானது ` யார் மூலமாகவேனும் கடவுளை மட்டும் வழிபடுவதே சிறந்தது என்பதை வெளியாக்குகிறது !

நான் அழைக்கிற பலரை நம்மால் சந்திக்கமுடியவில்லை ! ஒருவேளை சந்தித்தால் அவர்கள் நிச்சயமாக நமக்கு கடவுளை வணங்கும்படியாகவே வழிகாட்டுவார்கள் !

வள்ளலாரின் வாழ்விலும் இதுவே நடந்தது !

அவர் சைவசமயத்தில் ஈடுபாட்டோடு ஆரம்பத்தில் இருந்தவர் ! தருமசாலை ஆரம்பித்து அதை நடத்திவரும் வேளையில் ஒருனாள் தருமசாலைக்கு பழுத்த சவனடியார் ஒருவர் வந்து வள்ளாலாரிடம் உரையாடிக்கொண்டிருந்தார் ! வள்ளலார் மதிய ஓய்வுக்கு அறைக்கு சென்ற போது அவரும் கூட சென்று அறையில் படுத்துக்கொண்டார் ! உறங்கும்போது வள்ளலார் தன்தலையில் சிவனடியார் பாதம் வைத்ததை உணர்ந்து எழுந்து என்ன காரியம் செய்கிறீர் என கேட்ட போது உனக்கு நான் திருவடி தீட்சையளித்தோம் என கூறி மறைந்துவிட்டார் !

அவ்வாறு சிவனே திருவடி தீசை அளித்தபிறகு வள்ளலார் `` சிவனிலிருந்து அருட்பெரும்ஜோதியாக இறைவனை வழிபடுபவராக மாறினார் `` ஆரம்பத்திலே நான் சைவ சமயத்திலே லட்சியம் வைத்துக்கொண்டிருந்தேன் என்பதை அறிவீர்கள் ஆனால் இப்போதோ ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றிவிட்டார் ! `` என்று இந்த அனுபவத்தை வள்ளலார் குறிப்பிட்டுள்ளார் ! அப்படியானால் சிவனே வள்ளலாரை தன்னை வழிபடுவதற்கு பதிலாக ஏக அரூப இறைவனை வழிபட வழிகாட்டினார் என்றுதான் இதை எடுத்துக்கொள்ளவேண்டும் !

அதுவே உண்மையும் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டுவதும் ஆகும் !

நாம் அவ்வறு நமக்கு பக்திக்குரியவர்கள் மூலமாக கடவுளை வழிபட்டால் அது நமது பக்திக்குரியவர்களாலும் ஆசிர்வதிக்கப்படும் ! .   

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய


சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள் .
தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்)  சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.

முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்",
"ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக
செபம் செய்யவேண்டும் . மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார். 

பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.  முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.


உதாரணமாக :
முதலில் "ஓம்"  பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து  மந்திரம் கூறும் முறை ..
 "ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.

நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.

இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார் இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் . 
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்

ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
thank :https://jafarullaazh.blogspot.com/2014/08/blog-post_59.html

1 comment: