Thursday, July 7, 2016

ஸ்ரீ ஆயுர்தேவி மகிமை [ Ayur Devi ]


Thank : http://www.kulaluravuthiagi.org/ayurdevi.htm

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் குருவே சரணம்

ஸ்ரீ ஆயுர்தேவி மகிமை


Sathguru Venkataraman's Book on Mother Ayur Devi
கிருதயுகத்தில் சிறப்புற்று விளங்கிய ஸ்ரீ ஆயுர்தேவி உபாசனை, காலப் போக்கில் மக்களின் அசிரத்தையால் மறைந்துவிட, தற்போது சித்த புருஷர்களின் அருட்பெருங் கருணையால் கலியுகத்து மக்களிடையே ஸ்ரீ ஆயுர்தேவி மீண்டும் பவனி வருகிறாள்.

திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குருமஹா சந்நிதானம் சக்திஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் 1992ம் ஆண்டு நவராத்திரி தினப் பெருவிழாவில் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீவெள்ளீஸ்வரர் சிவாலயத்தில் “ஸ்ரீ ஆயுர் தேவி மஹிமை” என்னும் தலைப்பில் ஒன்பது நாட்களுக்கு ஆன்மீக உரை அருளி “ஸ்ரீ ஆயுர் தேவி” யின் திரு உருவத்தையும் ஆஸ்திக மக்களின் நல்வாழ்விற்கென அர்ப்பணித்தார்.

தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளின் திருவருட் கருணையால் ஸ்ரீ அகஸ்திய கிரந்தங்களிலிருந்து ஸ்ரீ ஆயுர்தேவியின் பராசக்தி அம்சங்களை வடித்தெடுத்துக் கலியுக மக்களுக்கென ஈந்து அற்புத ஆன்மீகத் திருப்பணியாற்றி வருபவரே ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்.ஒன்பது கரங்களை சித்தர்களை

ஒன்பது கரங்களைத் தாங்கி பராசக்தியாம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அவதாரமாகப் பொலியும் ஸ்ரீ ஆயுர் தேவி மக்கள் சேவையே மஹேஸன் சேவையெனத் தியாகம் புரிந்த அருட்பெருஞ் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண்கரங்களில் ஏந்தி அருள் பாலிக்கின்றாள். அவள்தம் ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகும்.

பொதுவாக சித்த புருஷர்களின் திரூஉருவத்தைக் கோயில் தூண்களில்தான் காணலாம். ஸ்ரீ ஆயுர்தேவியை வழிபட, ஸ்ரீ பராசக்தியோடு, சித்த புருஷர்களையும் நமஸ்கரிக்கும் பேறு கிட்டுகிறது. ஸ்ரீதேவி (சாக்த) உபாசனையில் உன்னதம் பெற்றவர்கள் சித்த புருஷர்களே! தம் அடியார்களை வணங்கினால் மகிழும் ஸ்ரீ ஆயுர்தேவி, என்றும் எங்கும் எப்போதும் சிவ சித்தத்தில் திளைக்கும் சித்தர்களின் மூலம் பக்தர்களுக்குப் பரிபூர்ணமாக அருள் புரிவதில் பேரின்பங்கொள்கிறாள். எனவே ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்து துன்பங்களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு சம்பூர்ணமான வழிபாடாகும்.

ஸ்ரீ அகஸ்திய கிரந்தங்களிலிருந்து, தம் குருவருளால், ஸ்ரீ ஆயுர்தேவி மஹிமைகளாகத் தாம் திரட்டியளித்தவை ஓர் அணுவினும் சிறிதே என்றும் ஸ்ரீ ஆயுர்தேவியின் மஹிமைகளை விரித்துரைக்கப் பலகோடி சதுர் யுகங்கள் கூடக்காணா என்றும் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அருள்கின்றார். என்னே ஸ்ரீ ஆயுர்தேவியின் மஹிமை!

ஸ்ரீ ஆயுர்தேவியின் திருகரங்களின் விளக்கம் 

வலதுகரம் [மேலிருந்து கீழ்]: 1. கயாஸூர மஹரிஷி 2.ஆணி மாண்டவ்யர் 3. அத்ரி மஹரிஷி 4. குண்டலினி மஹரிஷி

இடது கரம் [மேலிருந்து கீழ்]: 1. அஹிர்புத்ன்ய மஹரிஷி 2. சாரமா முனிவர் 3. அஸ்தீக சித்தர் 4. கார்க்கினி தேவி, சம்வர்த மஹரிஷி

எட்டாவது கரத்தில் அமர்ந்துள்ள கார்க்கினி தேவி ஸ்ரீ ஆயுர்தேவியின் அருளால் அமுதக் கலசமாக மாறி அருள் புரிபவள். இக்கரத்திலேயே ஸ்ரீசம்வர்த மஹரிஷியும் கலசத்தினுள் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
அகத்தியர்:- “ஆம் போகா! முதலில் குருவின் காலைப் பற்று! அவரே அனைத்தையும் அறிந்தவர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் வேதம், கணிதம், பௌதீகம், அணுவியல், மருத்துவம், சட்டம் போன்ற அனைத்துத் துறைகளையும் கற்க முடியுமா? ஆனால் இறையருளால் அனைத்தையும் பெற்று தரவல்ல சற்குருவை அடைந்தால் போதும், அவரே அறிவு. உண்மையான ஞானம். மற்றவை எல்லாம் ஏட்டு சுரைக்காய்களே! எனவே நம் சித்தர் பாரம்பரிய சற்குரு மூலம், ஆங்கீரஸ வருட்த்தில் [கலியுகாதி 5094] ஸ்ரீ ஆயுர் தேவி உருவ தரிசனம் நவராத்திரி பூஜையின் போது மீண்டும் தோன்ற வேண்டும் என்பது இறைவனின் சித்தம்”பொதிய மலைச் சாரல்… பல்லாயிரக் கணக்கான அற்புதமான மூலிகைகளின் குணங்களைத் தாங்கி நறுமணத்தென்றல் வீச…
சித்தர்குல நாயகராம் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் தம் சிஷ்யர்களுடன் சிவ ஆராதனையை நிகழ்த்திய பின் மெளனமாய் அமர்ந்திருக்கிறார். போகர் சாந்தமாய்த் தன் சற்குருவைத் தொழுது, வணங்கி கேட்கத் தொடங்குகிறார்.

போகர்: “சற்குருதேவா! இன்று முதல் நாம் அனைவரும் திவ்ய க்ஷேத்ராடனம் தொடங்குகிறோம் அல்லவா? குறிப்பாக, “தேவி உபாசனையைப் பற்றிக் கலியுக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய தருணம் இது” என்று சாட்சாத் சதாசிவனே அருளியதாக இன்றைய பூஜையில் எடுத்துரைத்தீர்கள். எனவே நாம் அம்பிகை அருள்புரியும் திருத்தலங்களுக்குச் செல்கிறோமல்லவா….?”
தேவி அவதாரங்கள் 

அகத்தியர்:- “ஆம் போகா! அது மட்டுமல்ல, ஸ்ரீவித்யாவாக தரிசனம் தரும் பராசக்தி உறைகின்ற மேருச்சக்கரத்தில் மட்டும் 43 கோடி தேவியர் அருளாட்சி செலுத்துகின்றனர். அதர்மம் பெருகி வரும் கலியுகத்தில் கோடி கோடியாய் உடல் நோய்களும் மன நோய்களும் வறுமை, திருட்டு, கொலை, கொள்ளை, கடத்தல் பொன்ற சமுதாய நோய்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆதலால் இந்த 43 கோடி தேவியரும் பூலோகதில் அவதரித்துத் தீவினைகளை எதிர்த்து நல் வாழ்க்கையை நிலைநாட்டிக் கலியுக மக்களுக்கு அருள் புரிய விழைகின்றனர். ஆனால் சிவபெருமான் திருவுளம் யாதோ அதுதானே நடைபெறும்!”
புலிப்பாணி:- “இறைவனின் திருவுளம் தாங்கள் அறியாததா குருதேவா?”
அகஸ்தியர்:- “சீடர்களே, ஆதி சிவனின் ஆக்ஞைப்படி பல்வேறு யுகங்களில் பல்வேறு தேவியர் அவதாரம் பெற்றுள்ளனர். ஆனால் யுகதர்மங்கள் மாறுவதால் தேவியருடைய அவதார அம்சங்களும் மாறுகின்றன.”
போகர்:- “ஞான குருவே! தற்போது மீண்டும் அவதாரம் பெறும் ஸ்ரீதேவி சக்தி யாரென்று அறிய விரும்புகிறோம்!”
ஸ்ரீ ஆயுர்தேவி மீண்டும் அவதாரம் 
அகத்தியர்:- (புன்முறுவலுடன்) “கிருத யுகத்திலும், திரேதா யுகத்திலும் வீட்டிற்கு வீடு பூஜிக்கப்பட்டு வந்த “ஸ்ரீ ஆயுர் தேவி” என்னும் ஆதிபராசக்தி அவதாரமே தற்போது சித்த புருஷர்கள் மூலமாக கலியுகத்தில் மீண்டும் அருள் புரிய வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.”
ஸ்ரீ ஆயுர் தேவி மீண்டும் அவதாரம் பெறுகிறாள் என்று சொல்வதைவிட ஸ்ரீ ஆயுர் தேவி உபாசனை கலியுகத்தில் மீண்டும் புத்துணர்ச்சி பெறுகிறது என்பதே சரியானது!!
“ஆம் சிஷ்யர்களே! இதனைப் பின்னர் விளக்குகிறேன், எத்தனையோ ஆன்மீக ரகசியங்கள் பல யுகங்களில் சற்குருமார்களால் அளிக்கப்பட்டு வந்து சென்றுள்ளன. இவையெல்லாம் சாதாரண மனிதனின் அறிவிற்கெட்டாத ஆன்மீக ரகசியங்கள். காலபோக்கில், சரியாக கடைபிடிக்காதவற்றை மனித குலம் மறந்து விடுகிறது. மறைந்தவைகளைச் சற்குரு மூலமாகவே ஒருவன் அறிந்து தெளிவு பெறமுடியும்.”
போகர்:- “குருதேவா! மனிதன் வாழ்நாளில் அறிந்து கொள்ள வேண்டியவை எண்ணிறத்தன என்பதை உணர வேண்டும். “எதை அறிந்து கொண்டால் மனிதன் எல்லாவற்றையும் அறிந்து கொண்டவன் ஆகிறானோ அதை மட்டும் அறிந்து கொண்டால் போதும்,” என்பதை அவன் உனர வேண்டுமல்லவா.”
(ஸ்ரீ வித்யா உபாசனையில் உன்னத நிலைகளை அடைந்த ஸ்ரீ பாஸ்கரராயர், ஸ்ரீ ஆயுர்தேவி உபாசனையை உய்த்துணர்ந்து ஸ்ரீ அம்பிகையின் பாதங்களைச் சரணடைந்த உத்தம புருஷர்.
ஸ்ரீ அகஸ்திய மஹா பிரபுவின் ஆக்ஞைப்படி திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சந்நிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தம் குருநாதர் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர் திருவருளால் “ஸ்ரீ ஆயுர்தேவி” யின் சிலா ரூபத்தை, பிம்ப ஸ்வரூபத்தைச் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் அக்டோபர் 1992 நவராத்திரித் திருவிழாவில் நிகழ்ந்த் ஆன்மீக சொற்பொழிவின் போது கலியுக ஆன்மீக பக்தர்களுக்குச் சமர்ப்பணம் செய்தார். ஸ்ரீ ஆயுர் தேவி ஸ்வரூபம் “கபால சித்த வடிநாடி” என்ற கிரந்தங்களிலிருந்து ஸ்ரீ-ல-ஸ்ரீ சுவாமிகளால் தொகுத்து அருளப்பட்டது. சித்தர்களின் பொக்கிஷமான இந்த கிரந்தங்கள் ஸ்ரீ வித்யா உபாசனையின் உன்னத ஆன்மீக நிலைகளில்தான் அறிவால் உணரப் பெறும்.)
போகர்:- கிருதயுகம், திரேதா யுகத்திற்குப் பிறகுப் ஸ்ரீ ஆயுர் தேவி பூஜை மறைந்து விட்ட்தா? குருதேவா?

அகத்தியர்:- ”இல்லை போகா! எவ்வாறு ஸ்ரீ ஐயப்பன் வழிபாடு, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மகிமை, ஸ்ரீ குருவாயூரப்பன் தரிசனம் போன்றவை, 300, 400 வருடங்களுக்குள்ளாகப் பல சித்தர்களின் மூலம் புத்துணர்ச்சி பெற்றதோ அதுபோல பல்வேறு யுக மக்களின் அசிரத்தையால் கால போக்கில் மறைந்த ஸ்ரீ ஆயுர் தேவி வழிபாடு தற்போது நடைமுறைக்கு மீண்டும் வருகிறது. ஸ்ரீதேவி, காருண்ய தேவியாக மக்களின் நலனுக்காக மீண்டும் தோன்றி அருள்பாலிக்கின்றாள்.
புலிப்பாணி:- “ஞானாசிரியரே! புதுப்புது தேவியர் தோன்றுவது அவசியமா என்று சில ஆன்மீகவாதிகளே குழம்புகின்றனரே, அது ஏன்?”
அகத்தியர்:- “நன்கு கேட்டாய் புலிப்பாணி! கலியுக மக்கள் சுகங்களை நாடுபவர்கள். ‘துக்கங்களும், துன்பங்களும் உடனே தீரவேண்டும்’ என்று எதிர்பார்க்கின்றனர். சுகதுக்கங்களுக்கிடையே உண்மையான பக்தியை அவர்களால் பெற முடியாது. எனவேதான் அவர்களுக்கு உரித்தான தக்க இகபர சுகதுக்கங்களைத் தந்து அதற்கு அப்பாற்பட்ட பரம்பொருளும் உண்டு என்பதைச் சாதாரண மக்களுக்கும் உணர்த்துவதற்காகவே தேவி உபாசனை என்று சாக்த வழிபாடு பிறந்தது.”
போகர்:- “இதனால்தான் மாரியம்மன் திருவிழா, காளி பூஜை போன்ற பல்வேறு அம்மன் வழிபாடுகள் கலியுகத்தில் பிரபல்யம் அடைந்துள்ளதல்லவா குருதேவா?”
அகத்தியர்:- “ஆம்! எந்த சுவாமிக்குப் பிரார்த்தனை செய்தால் எந்த வியாதி நீங்கும்? பணக் கஷ்டம் தீரும்? குழந்தைப் பேறு உண்டாகும்? வேலை கிடைக்கும்? என்று கோடிக்கணக்கான மக்கள் அலைந்து திரிந்து பல கோயில்களை நாடுகின்றனர். இம் முறையிலாவது மக்களின் இறைநம்பிக்கை பெருகுவது குறித்து மேலுலகத்திலுள்ள பித்ருக்களும், ரிஷிகளும், தேவதைகளும் மகிழ்ச்சியுறுகின்றனர்.
எனவே குறிப்பிட்ட வியாதியையோ கஷ்டத்தையோ நிவர்த்தி செய்ய தேவியர் மீண்டும் அவதாரம் பெறுகின்றனர். இதனால்தான் பல தேவிசக்திகளின் வழிபாடு கலியுகத்தில் வலுப்பெற்று வருகிறது. புதுப்புது தேவி அம்சங்கள் என்பதை விட பல யுகங்களில் அவதாரம் பூண்டிருந்த தேவியரே மீண்டும் சக்தி வடிவம் பெறுகின்றனர் என்பதை ஆன்மீகவாதிகள் உணர்ந்து தெளிவு பெற வேண்டும்.”
போகர், புலிப்பாணி:- “ஸ்ரீ ஆயுர்தேவியின் அவதார மஹிமைகளை எளிமையாகக் கூற வேண்டுகிறோம் குருதேவா?”
அகத்தியர் :- “பல இலட்சம் கிரந்தங்களில் பல்லாயிரம் சித்தர்களும், மஹரிஷிகளும் வர்ணித்துள்ளதைச் சுருக்கித் தருவது எளிதா? எனினும் கூறுகின்றேன். கிருதயுகத்திலிருந்து யுகம் யுகமாக தர்ம நெறிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடப் பட்டமையால்தான் கலியுகத்தில் இன்றைக்கு வன்முறைகளும், அராஜகமும் பெருத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் ஜீவன்களிடத்தில் ஒழுக்கம் குறைந்து விட்டதேயாகும். இறை நம்பிக்கையோடு ஒழுக்கம் வளர்ந்தால், தனக்குரித்தானதைத் தன் கர்ம வினைகளுக்கேற்பப் பெறுவோம் என்று ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் காமம், குரோதம், போட்டி, பொறாமை இவற்றிற்கு இடமில்லையே! உலக ஜீவன்கள் சாந்தமயமாக ஜீவிக்குமல்லவா!
புலிப்பாணி:- “சற்குருவே! அப்படியானால் சிறு குழந்தை முதல் வயோதிகர்கள் வரை அனைவருக்கும் பொறுமை, நல்லெண்ணம், அடக்கம், போன்ற இகபர சுகங்களையும் அளிக்க வல்லவள் ஆயுர்தேவி. ஆனால் ஸ்ரீ அம்பிகை இவற்றை அருளும் முறைகளே அதிஅற்புதமானதாகும்!”
போகர்:- “கலியுகத்தில் மனிதன் கைமேல் பலன் காணத் துடிக்கிறானே! அர்ச்சனை செய்தவுடன் வியாதி குணமாக வேண்டும், ஒரு மணடல பூஜைக்குப் பின் உடனே குழந்தை பாக்கியம் கைகூடவேண்டும் – இவ்வாறு ஸ்ரீ ஆயுர்தேவியிடம் கூட மன்றாடுவார்களே, குருதேவா!”
அகத்தியர் :- “முறையான இகபர சுகங்களுக்காகப் பிரார்த்திப்பதில் தவறில்லை சிஷ்யர்களே! அது நல்ல முறையில் பூஜை, தான தர்மங்களோடு அமைந்தால் பிரார்த்தனையின் பலன் வலுப்பெறும். இதற்காகத் தான் நாம் சத்சங்கங்களை உருவாக்கியுள்ளோம். சத்சங்களில் இருப்போர் சொற் பொழிவுகள், புத்தகங்கள், பத்திரிக்கைகள், உரையாடல்கள் மூலமாக மக்களுக்குத் தான தர்மங்களைப் பற்றி போதிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் இரவு உறங்குவதற்க்கு முன் “இன்றைக்கு இரண்டு பேர்களிடமாவது நல்ல விஷயங்களையும் இறைப்பணி பற்றியும் (சற்குரு போதித்தவைகளை) பரிமாறிக் கொண்டோமா?” என்று தன்னையே கேட்டுக் கொள்ள வேண்டும். இதுவே உன்மையான ஆத்ம விசாரமாகும். இத்தகைய எளிமையான ஆத்ம விசாரத்திற்கு வித்திட்டு உரிய செல்வங்களை வழங்கி அருள்புரிபவளே ஸ்ரீ ஆயுர்தேவி. இதற்காகவே ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஒன்பது கரங்களைப் பூண்டு அவதாரங் கொண்டுள்ளாள். “வேண்டுவதை வேண்டிடில் அவள் தருவதை தருவாள்” என்பது பிரார்த்தனையின் இரண்டாவது பாடம். அதுவே ஆத்ம விசாரத்தின் தெளிவு”
போகர் :- “நல்லாசாணே! வழக்கமாகச் சங்கு, சக்கரம், மழு போன்ற ஆயுதங்களைத் தாங்கி துஷ்ட நிக்ரஹ பாணியில்தான் அம்பிகைகள் அவதாரங் கொண்டுள்ளனர். ஸ்ரீ ஆயுர்தேவியின் தோற்றமே வித்தியாசமாக உள்ளதே!”?
அகத்தியர் :- “ஆதிபராசக்தியின் அவதார விருப்பமும் அதுவேதான் போகா! இதையே ஸ்ரீ ஆயுர்தேவியின் அனுக்கிரக பரிபாலனமும் வித்தியாசமானது எனக் குறிப்பிட்டோம். ஸ்ரீ ஆயுர்தேவியின் ஒன்பது கரங்களும், நவக்கிரஹத் தத்துவங்களை எளிமையாக விளக்குகின்றன.”
நவக்கிரஹ தத்துவம் 
போகர் :- “மனிதனுடைய இன்பங்களையும், துன்பங்களையும் தனித்தனியே ஒன்பது வகைகளாகப் பிரிக்கலாம். உலகின் அனைத்து ஜீவன்களின் எல்லாவிதமான சுகதுக்கங்களும் இந்த ஒன்பதில் அடங்கி விடுகின்றன. துன்பங்களையும், துக்கங்களையும் நிவர்தி செய்ய வேண்டும் என்பதே தற்போதைய பொதுப் பிரார்த்தனை ஆக்கிவிட்டது. இது கருதியே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கேற்பவே நவக்கிரக தெய்வங்களை இறைவன் படைத்தான். அவரவர் கர்மவினைகளுக்கேற்ப இகபர சுகங்களை நவக்கிரகாதிபதிகள் கணிக்கின்றனர்”
ஒன்பதாவதாக உள்ள கரமே அபய ஹஸ்தம். இதன் உட்கரத்தில் ஸ்ரீ சக்கரத்திற்கு ஒப்பான “தீபிகா பிம்ப சக்கரம்” அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் பிந்து ஸ்தானத்திலிருந்து நறுமண தூபப் புகை எப்போதும் படர்ந்து பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோடி லோகங்களுக்கும் ஊடுருவிச் செல்கிறது. இந்த தூபக் கதிரே உலகின் அனைத்து ஜீவன்களின் சிருஷ்டி, கர்ம பரிபாலன்ங்களை நிர்ணயிக்கின்றது. நித்ய ஜீவசக்தியை அளிக்கின்றது.
கும்பகோணம், வாரணாசி போன்ற ஸ்தலங்களில் கொண்டாடப்படும் கும்பமேளா உற்சவம் உணர்த்தும் சிருஷ்டியை உற்பவிக்கச் செய்யும் அமிர்த கலச குடத்தைச் சிவபெருமான் இந்த தூபிகா பிம்பச் சக்கரத்திலிருந்துதான் வடிவமைக்கிறார்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் அற்புதத் தோற்றம் 
நவ கரங்களை உடைய ஸ்ரீ ஆயுர்தேவி சிவாம்சம் பூண்ட ஆதிபராசக்தி, வல இடப்புறங்களில் நான்கு கரங்களை கொண்டவள். ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாக விளங்குகிறது.
எட்டு கரங்களிலும், ஒன்பது சித்தர்கள் மஹரிஷிகள் கலியுக மக்களின் பல்வேறு வகையான துன்பங்களைக் களைவதற்கெனப் பல அற்புதமான தவங்களைப் புரிந்து தெய்வாவதாரங்களிடமிருந்து பெற்ற வரங்களையும் சாந்தமான முறையில் எதிர்த்துச் சித்த புருஷர்களின் அருட் பெருந்தவத்தால் அவற்றைக் களைவதோடு மட்டுமின்றி தீவினைகள் மீண்டும் அணுகா வண்ணம் பல பிராயச்சித்த முறைகளையும் அவர்கள் மூலம் அருள்பவளே ஸ்ரீ ஆயுர்தேவி!!
ஒன்பதாவது கரமான அபயஹஸ்தத்தில் சாட்சாத் பரமசிவனே குடிகொண்டு அம்பிகையின் தோற்றத்தையும், அவளுடைய எண்திருக்கரங்களில் அமரும் பேறு பெற்ற கோடானு கோடி சித்த புருஷர்களின் தவப்பெரு நிலைகளையும் எடுத்துரைக்க, ஸ்ரீ நந்தீஸ்வரர் அவற்றைப் பல இலட்சம் கிரந்தங்களாக இன்றைக்கும் எழுதித் தொகுத்து வருகிறார். ஸ்ரீ வித்யா உபாசனையில் உன்னத நிலைகளை அடைந்தோரே இக்காட்சிகளைக் காணும் அருள் பெறுவர். குருவருள் பெற்றாலோ அனைத்தையும் உய்த்துணரலாம்.
ஒரு கரத்தில் பலகோடி யுகங்கள் அமரும் பேறு பெற்ற சித்த மஹரிஷி அக்கரத்தில் அமரத் தகுதி வாய்ந்த மற்றொருவர் உருவாகும் போது ஸ்ரீ அம்பிகையின் திருமேனியில் தாம் ஐக்கியமாகி அடுத்தவருக்குக் கரபீடம் பெறும் பாக்கியத்தை அம்பிகையின் அருளால் அளிக்கின்றார். இவ்வாறு ஸ்ரீ ஆயுர்தேவியின் திருகரங்களில் அமரும் பேறு பெற்றவர்களைக் கணக்கில் வடிக்க இயலாது. இதுவரை கோடி கோடியான சித்த புருஷர்களும், மகரிஷிகளும் இவ்வாறாக ஸ்ரீ ஆயுர்தேவியின் திருமேனியில் ஐக்கியமாகியுள்ளனர்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் மஹிமைகளையும், தோற்றங்களையும் அவதார ரகசியங்களையும் விவரிக்கும் ஸ்ரீ அகஸ்திய கிரந்தகளுள் கபால சித்தவடி கிரந்தம், தூபிகாதேவி கிரந்தம் ஆகியவை அடங்கும்.
தம் குருநாதர் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தரின் குருவருளால் பெற்ற இத்தகைய சித்த கிரந்த இரகசியங்களைக் கலியுகமக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக எடுத்தருளியவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளவார்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் வாகனம் 
அன்ன வாகனத்தை பூண்டவள் ஸ்ரீ ஆயுர்தேவி. அவள் திருவடியில் இரண்டு சிம்மங்கள் பீடங்களாக அமரும் பேறு பெற்றுள்ளன. திருவிடைமருதூரில் சிவபெருமானுக்கு நந்தியாகச் சலாலகன் என்ற நந்திஸ்வரர் அறக்கடவுள் அமர்ந்துள்ளார். பலகோடி ஆண்டுகள் தவம் புரிந்து இத்தகைய அரிய பேற்றைச் சலாலகன் பெற்றார் எனில் ஸ்ரீ ஆயுர் தேவிக்கு அன்ன வாகனமாகவும், இரண்டு சிம்ம பீடங்களாகவும் அமைந்துள்ளோர் எத்தகைய தவப்பெருநிலையை அடைந்திருக்க வேண்டும்!!
ஸ்ரீ ஆயுர்தேவியின் அன்னவாஹனமான சுவாரோஸிஷன் என்னும் மஹா தபஸ்வி ஸ்ரீமன் நாராயணனை உபாசித்து மஹரிஷியானவர். அவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவையே சாட்சாத் சிவபெருமானாக எண்ணித் தரிசனம் பெற விழைந்த போது, “தேவி உபாசனை மூலமாகவே எம்மை ஸ்ரீ சிவபெருமானாக வரித்துத் தரிசனம் செய்ய இயலும்” என்று ஸ்ரீ பெருமாள் அருளிடவே சுவாரோஸிஷ மஹரிஷி ஸ்ரீதேவி உபாசனையில் திளைத்து அன்னவாகனமாக அமையும் பேறு பெற்றார்.

ஒன்பதின் தத்துவம் 
ஒவ்வொரு மனிதனின் தேகத்திலும் ஒன்பது துவாரங்கள் உள்ளன. நாசி துவாரங்கள் வழிச் செல்லும் சுவாசத்தை முறைப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தும் வாசிகலைத் தத்துவத்திற்கு “பிராணாயாமம்” என்று பெயர் இதன் விளக்கங்களைப் பலரும் அறிவர்.
நாசிகள் தவிர ஏனைய ஏழு துவாரங்களிலும் சுவாசம் உண்டு. இந்த ஆன்மீக ரகசியங்களை அறிந்தவர்கள் சித்த புருஷர்களே! கர்ணாயாமம், யோனியாமம், குக்குடயாமம் என்று மூன்று வகை யாம நியம முறைகளினால் ஏனைய ஏழு துவார வாசிகலைகளை முறைப்படுத்தினால், சித்தர்களைப் போல் என்றும் சிவ சித்தத்தில் திளைக்கும் பேற்றைப் பெறலாம்.
மனித எண்ணங்களின் மூலம் 
இந்த ஒன்பது துவாரங்களின் மூலம் சக்திகளும், எண்ணங்களும் உள்வெளிச் செல்கின்றன. இதனால் நொடிக்கு நொடி ஒவ்வொரு மனிதனின் ஆன்மீக நிலை மாறி கொண்டேயிருக்கிறது. ஆயிரக்கணக்கான எண்ணங்கள், சக்திகளின் உள்வெளிப் போக்குவரவால் மனிதனின் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. அவன் மனோநிலையும் மாறுகிறது.
பத்மாசனத்தில் ஆசன, யோனி வாயில்களும், பிராணாயாமத்தால் நாசிகள், கண்களும், மௌனத்தால் வாயும், ஒங்காரத்தால் செவிகளும் சாந்தமடைகின்றன. நவ துவார வாசிகளை முறைப்படுத்துதலே உன்னத தியானமாகும். ‘இதற்கு ஸர்வ ஸித்த யோகம்’, அல்லது ஸர்வ ஸித்த சரீர தியானம்’ என்று பெயர்.
உடலே திருகோயில் 
நவ துவார வாசிகளுக்கேற்ப மனிதனுடைய தேகக் கர்ம பரிபாலனம் நடைபெறுகின்றது. இதற்கேற்ப இன்ப துன்பங்கள் அமைகின்றன. எனவேதான் அனைத்து ஜீவன்களின் இன்ப துன்ப நிலைகளை ஒன்பதாகப் பகுத்துள்ளனர். மனிதனுடைய தேகத்திலும் ஒன்பது நவக்கிரகங்கள் ஆட்சி கொண்டுள்ளன. நவகிரக தேக பரிபாலன விதியும் உண்டு. இருதய கமலத்தில் ஆத்மா, ஸர்வேஸ்வரனாக வீற்றிருக்க, தேகமே இறைவன் குடி கொண்ட கோயில். உடலின் ஒன்பது பகுதிகளில் நவக்கிரகங்கள் ஆட்சி செலுத்துகின்றன. ஏனைய தெய்வங்களின் அருளாட்சி அமையும் தேக அம்சங்களும் உண்டு. நவக்கிரக வழிபாடு பொதுவாகக் கோயில்களில்தான் அமைந்துள்ளது. ஆனால், ஸ்ரீ ஆயுர்தேவி இல்லந்தோறும் இருக்க வேண்டிய அகிலாண்டேஸ்வரி ஆதலின், ஸ்ரீ ஆயுர் தேவி பூஜை,
  1. சிவாம்சம் பரிபூரணமாக நிறைந்திருப்பவள் ஆதலின் – பரம்பொருள் வழிபாட்டையும்,
  2. நவக்கிரக தத்துவம் விளக்கும் ஒன்பது வகையான இகபர சுகங்களைத் தருபவளாதலால் – நவக்கிரக வழிபாட்டையும்,
  3. சகல ஐஸ்வர்யங்களையும் தந்து காத்து ரட்சிப்பதால் – ஸ்ரீ லக்ஷ்மி நாராயண வழிபாட்டையும்,
  4. அதி அற்புத சித்த புருஷர்களும், மகரிஷிகளும் அருட்பெரும் தவத்தால் அருளியுள்ள பரிகார முறைகளால் ஒன்பது வகையான துன்பங்கள் நிவர்த்திக்கின்ற முறையையும் தந்து சற்குருமார்களின் வழிபாட்டையும் ஒருங்கே தருவதால்
ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தேவியின் – ஸர்வ தெய்வ சம்பூர்ண வழிபாடாக அமைகிறது.
அன்னவாஹனம் 
போகர் :- “சற்குரு தேவா! ஸ்ரீ ஆயுர்தேவி அன்ன வாஹனத்தைத் தேர்ந்தெடுக்க காரணம் யாதோ?”
அகத்தியர் :- பறவையினங்களில் முதன் முதலில் தோன்றியது அன்னமே! சிருஷ்டியின் போது ஒவ்வொரு லோகத்திலும், ஒவ்வொரு பறவையை ஆதிமூலப் பட்சியாக இறைவன் படைகின்றான். பட்சி சாஸ்திரத்தில் இடம் பெறும் ஒவ்வொரு பட்சியும் வெவ்வேறு யுகங்களில் முதன் முதலாகப் படைக்கப்பட்ட பட்சியேயாகும். இவ்வாறாக தேவிலோகத்தில் ஆதிபட்சியாகிய அன்னப் பறவை ஒருமுறை பரப்பத அரங்கநாதர் பள்ளி கொண்டுள்ள பாற்கடலிலும் கூட பாலையும் நீரையும் இரண்டாக பிரித்ததாம்.
ஸ்ரீ ரங்கநாதனின் திருச்சன்னிதியில் கூடக் கலப்படமா?” என்று தேவர்கள் அதிசயிக்க ‘அனைத்து லோகங்களிலும் புனிதமான க்ஷீரத்தைக் (பால்) கொண்ட பாற்கடலிலும் நீர் கலந்துள்ளதா? இந்த நீர் எவ்வாறு உட்புகுந்தது’ என அனைவரும் வியந்து நிற்க, ஸ்ரீ பெருமாள் விவரித்தார்.
“என்னுடைய பிரார்த்தனைகளுக்கேற்ப சிவபெருமான் என்னுடைய திருமார்பில் திரு நடனம் ஆடினார். இதனால் என் எடை கூடியது.” அதைத் தாங்க இயலாது ஆதிசேஷன் பெருமூச்சு விட்டு, “பிரபோ! திடீரென்று தங்கள் திருமேனியின் எடை பெருகக் காரணமென்ன?” என்று வினவ, அடியேன் ஆதிசேஷனுக்கு இறைவன் சிவபெருமான் திருநடனம் ஆடிய காட்சியை விவரித்தேன்.
”சாட்சாத் சதாசிவ பரம்பொருளையும், நாராயண மூர்த்தியையும் ஒருசேரத் தாங்கும் பாக்கியம் பெற யான் என்ன புண்ணியம் செய்தேனோ!” என்று புளகாங்கிதம் அடைந்து ஆதிசேஷன் ஆனந்த கன்னீர் வடித்தனன். அக்கண்ணீர்த் துளிகள் பாற்கடலில் கலந்தன. அதனையே ஆதிமூல அன்னபட்சி பிரித்து தந்தது. இத்தகைய தெய்வ திருவிளையாடல் புரிந்த அன்னப் பறவையே ஸ்ரீ ஆயுர்தேவியுன் வாகனமாக அமைந்துள்ளது’
சிம்ம பீடங்கள் 
புலிப்பாணி :-  “ஆஹா! கேட்பற்கே இனிமையாக உள்ளதே! குருவே! அடுத்து சிம்ம பீடங்கள்…
அகத்தியர் :- “சொல்கிறேன் புலிப்பாணி! சிம்ம பீடங்களாய் இருக்கும் இவர்கள் யுகதர்ம மனுக்களாவர். பலகோடி யுகங்களில் தர்மத்தைப் பரிபாலனம் செய்து வந்த மனுப்ரஜாதிபதிகள், கர்த்தம பிரஜாபதியின் சிஷ்யர்கள். அதர்மத்தை எதிர்த்து கர்ஜித்தவர்கள். பிராணிகளின் கர்ம பரிபாலனங்களை நிர்ணயிக்கும் பித்ருலோக ஆதித்யர்களின் நியமனத்தையே மேற்கொண்டுள்ள அற்புதமான மனு அவதார புருஷர்கள் ஒவ்வொரு லக்கினத்தில் பிறக்கும் ஆண், பெண் ஜீவன்களைப் பரிபாலிப்பதற்கென்றே யுகாந்தர மனு தேவர்கள் உள்ளனர். சிம்ம ராசிக்கு அதிபதியான சூரிய நாராயணமூர்த்தியின் அருட் கடாட்சத்தைப் பெற்றவர்களே இந்த சிம்ம பீடங்கள். அனைத்து லோகங்களிலும் சிம்ம லக்ன ஜீவன்களுக்கு அதிபதி இவர்களே!”
போகர் :- “குருவே! அப்படியானால் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனத்தின் மூலம் நமஸ்காரயோகமும், அனைத்து ஆசன் முறைகளும் சித்திக்குமல்லவா?”
அகத்தியர் :- “நிச்சியமாக! யோகம் பயில்வோருக்கு குறிப்பாக ராஜயோகிகளுக்கு ஸ்ரீ ஆயுர்தேவி தியானம சிறந்த, விரைவான பலன்களை அளிக்கக் கூடியதாகும். அது மட்டுமல்லாது, அன்ன வாகன தரிசனமானது (அன்னம் பால் நீர் இரண்டையும் தனித்தனியே பிரிப்பது போல்) பகல் – இரவு பிரித்துக் கானும் தீர்க்க தரிசனத்தையும் அபாரமான ஜோதிட கிரக பரிபாலன அறிவையும் தரவல்லதாகும். ஜோதிடர்களுக்கு ஸ்ரீ ஆயுர்தேவி பூஜை முக்கியமானதாகும்.”
திரிமூர்த்திகள் 
போகர் :- “பிரம்மா, விஷ்ணு, ருத்ர திரிமூர்த்திகள் ஸ்ரீ ஆயுர்தேவியை வணங்கும் தத்துவத்தை விளக்க வேண்டுகிறேன் குருதேவா!”
அகத்தியர் :- “திரிமூர்த்திகள் தமக்குரித்தான ஆக்கல், காத்தல், அழித்தல் முப்பெரு இறை நியதிகளால் மூவரே தவிர அவர்கள் ஒன்றிடும்போது பரப்பிரம்ம்மாக ஒளிர்கின்றனர். மூவரும் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்ய ஸ்ரீ ஆயுர்தேவியைப் பரம்பொருளின் அம்சமாக வழிபடுகின்றனரென்றால் தேவியவள் மகாத்மியத்தை வடித்துரைக்க இயலுமா?”
மேலும் திரிமூர்த்திகள் அம்சங்கள் யுகத்திற்க்கு யுகம் மாறுபடுகின்றன. மனிதனின் சிற்றறிவிற்கெட்டாத இவ்வித இறைநிலைகளைச் சற்குருவருளால்தான் அறிந்து கொள்ள இயலும்.
திரிமூர்த்திகள் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நாமத்தைப் பூண்டு அருள் புரிகின்றனர். ஸ்ரீ ஆயுர்தேவியைப் பூஜிக்கும் திரிமூர்த்திகள் நாமங்கள் யாதெனில்
ருத்ரர் – தைத்ரீயப்ரஜாபதி
விஷ்ணு – ருத்ரப்ரளயர்
பிரம்மா – ருத்ரப்ரியர்
இவர்கள் “தேவி குணாந்தர யுகத்தை”ச் சார்ந்த திரிமூர்த்திகள். திரிபுர சம்ஹாரமூர்த்திற்கும் முந்தைய யுகத் திரிமூர்த்திகள்.
எனவே, இத்திரிமூர்த்திகள் தரிசனம் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களின் மாயா அறிவைத் தந்து, அம்மாயைகளைக் களையும் எளிய பரிகார முறைகளையும் சித்த மகரிஷிகளின் மூலமாக உணர்த்துகிறது. ஸ்ரீ ஆயுர்தேவியிடமிருந்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைப் பெற்று மனிதனுடைய உடல், மன வளர்ச்சிக் கேற்ப அருள்பவர்களே இத்திரிமூர்த்திகள்.”
ஸ்ரீ சித்திரகுப்த தேவர் 
போகர் :- “ஆசானே! சித்திரகுப்த நாதர் ஸ்ரீ ஆயுர்தேவியின் திருவடிகளில் சமர்ப்பிப்பது யாதோ?”
அகத்தியர் :- “பாலினன் என்னும் திருப்பெயரைப் பூண்ட சித்ரகுப்த தேவர் சிருஷ்டியைக் கூட்டுவிக்கும் பிரம்மாக்களின் கர்ம பரிபாலனத்தையும், பிரம்ம குருக்களின் ஆயுளையும் ஸ்ரீ தேவியின் ஆக்ஞைப்படி நிர்னயிப்பவர். இவர் சாதரண தேவஸ்வரூபர் அல்லர். பிரம்ம குரு லோகங்களின் அமைப்பைப் பரிபாலிப்பவர். இவருடைய தரிசனம் காணக்கிட்டாதது. இவருடைய கிரீடம் வெறும் தலைப்பாகை மட்டுமன்று. கோடிக்கணக்கான ஜீவன்களின் தலைவிதிகளை நிர்னயிக்கும் பிரம்ம குருமார்களின் கர்ம வினைகளைத் தொகுத்து வரையறுக்கும் அற்புதமான இறை சிருஷ்டியாகும்.
ஒவ்வொரு விநாடியிலும் என்னிறந்த ஜீவன்களின் கர்ம வினைகள் மாறிக் கொண்டே இருக்கும். இவற்றை இம்மியும் பிசகாது அணுவளவும் குறையின்றிச் சீராகப் பகுப்பது இறைவனின் அற்புதப் படைப்பால்தான் முடியும்.
ஆத்ம விசார மூர்த்தி 
ஒவ்வொரு மனிதனும் தினமும் இரவில் உறங்கும் முன் தன்னுடைய அன்றைய செயல்களை உன்மையான மனச்சாட்சியுடன் நினைவுகூர்ந்து அவற்றை இந்த பாலினன் என்ற சித்ர குப்த தேவரிடம் சமர்ப்பித்து அன்றைய தவறுகளுக்கு மனம் வருந்தி அந்நாளில் நற்செயல்களைச் செய்ய வாய்ப்புத் தந்த பித்ரு தேவர்களுக்கு நன்றி செலுத்துவதே “நான் யாரென்ற” உண்மையான ஆத்ம விசாரத்தின் துவக்கமாகும். ஸ்ரீ சித்ர குப்த தேவர் வெறும் கர்ம கணக்கு எழுதுபவர் என மக்கள் கருதுகின்றனர். அது தவறு. மனிதனின் ஆத்ம விசாரத்திற்கு வித்திடுபவர் இவரே.”
போகர் :- “ஆத்ம விசாரத்திற்கு வழி வகுக்கும் அருளைச் சித்ர குப்தர் எவ்வாறு பெற்றார் குருதேவா?”
ஸ்ரீ கிருஷ்ணன் திருமேனி கண்ட கிரீடம் 
அகத்தியர் :- “சொல்கிறேன் போகா! ஒருமுறை சித்ரகுப்தர் பலகோடி ஜீவன்களின் தலைவிதிக்குரித்தான கர்ம வினைகளைக் கணக்கெழுத, அவற்றுள் பெருமளவு தீவினைகளாக இருப்பது குறித்து மனம் வருந்தி ஸ்ரீ பாலினன் தம் தலையில் குட்டிக் கொள்ள அவருக்கு தீராத தலைவலி வந்து விட்டது. இதனால் அவர் மேலும் பணிபுரிய இயலாது திகைத்திட, கர்மங்களின் தேக்கத்தால் சர்வ லோகங்களும் ஸ்தம்பித்தன. சித்ரகுப்தர் பதறி எழுந்து ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டிட, அவர் நம் இடைகச்சையையே ஸ்ரீ பாலினன் சித்ரகுப்தனின் தலைக் கிரீடமாக்கிட தீராத தலவலியும் நின்றது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய தலைப் பாகையே ஸ்ரீ ஆயுர்தேவியின் திருவுருவப் படத்தில் ஸ்ரீ பாலினன் சித்ரகுப்த தேவரின் சிரசில் மிளிர்வதாகும். காணக் கிடைக்காத கிரீடம் இது.
ஒற்றைத் தலைவலிக்கு மருந்து 
தீராத ஒற்றை தலைவலியால் அவதியுறுவோர்க்கு இந்த சித்ரகுப்தரின் தரிசனமும், தியானமும், நாமஸ்மரணமும் விரைவில் பலனளிக்கும். எனவே இத்தகைய நோயுடையோர் தலைக்கு எண்ணெய் கூட இல்லாது வாடும் ஏழைகட்குச் சீப்பு, எண்ணெய் தானமளித்து இந்தப் பாலினன் சித்ரகுப்த தேவரைத் துதி செய்ய வேண்டும்.”
புலிப்பாணி :- “ஞான குருவே! ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ பாலினன் சித்ர குப்த தேவருக்கு தரிசனம் அளித்தாரா?”
அகத்தியர் :- சித்ரகுப்த தேவர் வேண்டியும் அவருக்கு விஸ்வரூப தரிசனம் அளிக்காத ஸ்ரீ கிருஷ்ணன், அவருக்குக் குழலூதும் கிருஷ்ணனாகத்தான் காட்சியளித்தார். அவர் விஸ்வரூப தரிசனம் அளிக்காததற்குப் பல காரணங்கள் உண்டு!”
போகர் :- “கலியுகத்தில குழலூதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வழிபாட்டிற்கு வைத்தால் செல்வம் ஊதிய காற்றுபோல் மறைந்துவிடும் என்ற கருத்து நிலவுகிறதே குருதேவா!”
அகத்தியர் :- “வீடுகளில் குழலூதும் கிருஷ்ணன் விக்ரகத்தையோ, படத்தையோ வைத்து வழிபடுவதால் எவ்வித் தவறும் இல்லை. குழலூதும் கிருஷ்ணனாக காட்சியளித்த கண்ணபிரான் சித்ரகுப்த தேவரிடம் “இன்றிலிருந்து உன் நாமஸ்மரணமும், வழிபாடும் மக்களுக்கு ஆத்ம விசாரத்தை வளர்ப்பதாக!” என்று வரங் கொடுத்தார். மேலும், மக்களின் நித்ய கர்மங்களை நீ தொகுப்பதால் உன்னை எண்ணுபவர்களுக்கு தம் குறைகளை நிவர்த்தி செய்யும் பக்குவம் கிட்டி தன்னை முதலில் அறிந்து, தானே பிற அனைத்தும் என்ற உயரிய மனோபாவமும் கிட்டும்” என்று வரமருளினான்.
எனவே குழலூதும் கிருஷ்ணனை வழிப்பட்டால் ஸ்ரீ சித்ரகுப்தனின் அருளும் கூடுவதால், பிற கடுமையான தியான முறைகளை விட ஆத்ம விசாரம் எளிதில் கைகூடும். இது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய வரமாகும். ஸ்ரீ இரமண மகரிஷியின் பழைய ஆஸ்ரமத்தில் குழலூதும் கிருஷ்ணன் படம் ஒன்று அனைவரையும் கவர்ந்திழுத்தது. ஆனால் அதன் ஆத்ம விசார ஆன்மீக ரகசியத்தை இன்றேனும் பக்தர்கள் புரிந்து கொள்வார்களாக!”
ஸ்ரீ தர்மதேவர் 
போகர் :- “சற்குருவே! ஸ்ரீ தர்ம ராஜாவாகிய கால மகா பிரபு ஸ்ரீ ஆயுர்தேவியை வணங்கும் தாத்பர்யம் என்ன?”
அகத்தியர் :- “அணுவினும் சிறிய கிருமிகள் முதல் பெரிய பிராணிகள், தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவன்களின், தேவாதிதேவரின் கால முடிவை இறை நியதிப்படி பரிபாலிப்பவரே ஸ்ரீ எமதர்மராஜாவாகிய ஸ்ரீ கால மகாபிரபு”
பூலோகத்தில் மக்கள் “எமபயம் நீங்க” மந்திரங்களைச் சொல்லி வழிபாடுகளையும் நிகழ்த்துகின்றனர். இந்த மனோநிலையைச் சற்று விருத்தி செய்து, எமபயம் நீங்குவதைவிட தங்களுடைய பூஜைகளும், ம்ருத்யுஞ்ஜய ஹோமங்களும், தான தருமங்களும், இறையருளால் ஆயுளை விருத்தி செய்கின்றன என உணருவது சத்தியமானதாகும்.
ஸ்ரீ கால மகாபிரபு தம்முடைய இறைப்பணியை அவரவர் கர்ம வினைகளுக்கேற்பச் செவ்வனே செய்து வருகிறார். இல்லாவிடில் பிராணிகளும், தாவரங்களும் மக்களோடு மக்களாய்ப் பெருகி உலகமே இட நெருக்கடியில் ஸ்தம்பித்து விடும்.
மரண பயம் வேண்டாம் 
மனிதர்கள் இன்னமும் மரணம் என்பதைத் தாங்க முடியாத துன்பமாகத்தான் கருதுகின்றார்கள். மரணத்திற்குப்பின் வாழ்வு என்பதை உணர்ந்தாலும் மனித மனம் அதன் நிலைகளை உணர்வதில்லை. ஸ்ரீ எமதர்மராஜா ஓர் உயிரை ஒரு தேகத்தில் இருந்து பிரித்து மற்றொரு தேகத்திற்கு எடுத்து செல்லும் அதி அற்புதமான இறைப்பணி புரிகிறார்.
எனவே எமனைக் கண்டு அஞ்ச வேண்டாம்!
அவரவர் விதி நிர்ணயத்திற்கேற்ப மரணத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பவர்களுக்கு எமபயம் இராது. தியானத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மனிதனும் ஸ்ரீ ரமண மகரிஷிபோல தினந்தோறும் தன்னுடய மரணத்தை ஒத்திகை பார்த்துக் கொண்டால் அது அற்புதமான தியானமாக மலர்ந்து “ஆத்மா அழிவற்றது.ஆத்மா குடியிருக்கும் கோயில்களே தேக சரீரங்கள்” என்பதை அறிவர். உண்மையில் தூக்கம் என்பது மரணத்தின் ஒத்திகையே.
ஸ்ரீ ஆயுர்தேவி திருஉருவ படத்தில் பிரசன்னமாகியிருப்பவர்கள் ஸ்ரீ சுதர்மனன் என்ற ஸ்ரீ காலமகாப்பிரபுவும் அவர் பத்தினி தெய்வமாகிய ஸ்ரீ சுதர்மிணியும் ஆவர்.
சுமங்கலி பாக்கியம் 
கலியுகத்தில் ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் தீர்க்க சுமங்கலியாக வாழ விரும்புகிறாள். அவளுடைய பூஜை முறைகளும், கற்புத் தன்மையும், பெரியோர்க்கு பணிவிடை செய்தலும், அவள் கணவனின் ஆயுளை விருத்தியடையச் செய்யும். இத்தகைய குணங்களை உடைய பெண்மணிகளுக்கு மாங்கல்யப் பிராப்தத்தையும், சுமங்கலித் தன்மையையும் இறையருளால் மேற்கண்ட ஸ்ரீ சுதர்மிணி சமேத ஸ்ரீ காலமகா பிரபுவே மனமுவந்து அருளி அருள்பாலிக்கின்றனர்.
போகர் :- “அகாலமிருத்யுதோஷ நிவர்த்தி பற்றி விளக்க வேண்டுகிறேன் குருதேவா!”
விபத்துக்கள், தோஷங்கள் நீங்க
அகத்தியர் :- “சில குடும்பங்களில் பித்ரு சாபங்களாலும் பித்ரு காரியங்களைச் சரிவர செய்யாததாலும் ஏற்படுகின்ற அகால ம்ருத்யு தோஷத்தால் நேரிடும் இள வயது மரணங்கள், திடீர் மரணங்கள், விபத்துக்கள், இளம் விதவைக் கோலங்கள், சிசு மரணங்கள் போன்ற பெருந் துன்பங்களை ஸ்ரீ கால மகா பிரபு நீக்கி, ஸ்ரீ ஆயுர்தேவி அனுக்கிரகத்தால் நல்வழி காட்டுகின்றார்


more : http://www.Agasthiar.Org/ayurdevi
 http://www.agasthiar.org/AUMzine/0008-ad.htm
english http://hinduspirit.blogspot.in/2012/12/ayurdevi-mother-of-universe.html


The nine Siddhas (to whom Mother Ayur Devi gave kara peetam, i.e., a seat on Her Hands) are:

1. Mother's top right hand  Gayaasura Maharishi

2. Mother's second right hand Aani Maandavya Maharishi

3. Mother's third right hand  Atri Maharishi

4. Mother's fourth right hand  Kundalini Maharishi

5. Mother's top left hand  Ahir Puthnya Maharishi

6. Mother's second left hand  Saaramaa Munivar

7. Mother's third left hand  Astheeka Siddha of the Agasthiar divine teacher lineage

8, 9. Mother's fourth left hand  Gaargini Devi and Samvartha Maharishi in a consecrated amrutham pot

Mother's ninth hand

 Held in the Fear Not (abhaya hastham) posture, the Mother looks after all beings with this protective gesture.

 The fragrant dhoopam smoke emanating from the Dhoopika Bimba Chakram in the palm of the Mother's hand determines the destiny of every being in the universe.

 The other deities and siddhas are:

 Suvaarosisha Maharishi as the Swan vehicle (anna vaahanam)

 Manu Prajapatis as the Lion peetam.

 The Trimoorthi TRINITY looking on in awe:

 Taitriya Prajapati RUDRA,

 Rudra Pralaya VISHNU and

 Rudra Priya BRAHMA.

 Paalinan Chitragupta (dutifully cataloging the karma of all beings)

 Sudharmana Yama Dharmaraja and

 His consort Sudharmini,

 both accompanied by Tapasvi Suvaalinan in the form of a buffalo.

 Seated thus, the Great Mother presides over the universe as
"Adi Arunachaleswari Akhilandeswari AYUR DEVI". Siddha Sathguru Venkataraman also gave special times for Mother Ayur Devi worship, during which times devotees should increase their daily worship of Mother Ayur Devi.

These special times are:
 Prathamai, the 1-st thithi,
 Dasami, the 10-th thithi,
 Utthirattadhi (Uttara Bhadra), the 26-th nakshatra,
 Tuesdays, and
 Fridays. 

Ayur Devi Moola Mantra - ROOT Mantra of the Mother
 After chanting the dhyaana sloka and visualizing Mother Ayur Devi, we should chant Her Moola Mantra, the root mantra of the Mother:
Om Sreem Hreem Aim Subaayai Devasenaayai Aayur Devyai Svaaha

Ayur Devi Gayatri Mantra
 After chanting the Moola Mantra, chant Mother Ayur Devi's Gayatri mantra:

Om Maha Devyai cha vidhmahé
Paraasakthyai cha dheemahi
thannó Aayur Devyai prachódhayaath

 Chant the Gayatri mantra 24, 36, 64, 108, 1008, 10008 or more times. The more the merrier!

1 comment: