Monday, April 3, 2017

தோஷ பரிகாரம்

thank: https://kaalapirakasigaijothidam.blogspot.com/2015/04/blog-post_3.html



தோஷ பரிகாரம்

பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும்,

ஜனங்களுக்கு இந்த காலத்தில் பல விதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. மனநிம்மதியின்மை, உடல் ஆரோக்கியக் குறைவு,பொருளாதாரம் ,சமுகம்,குடும்பம், வழக்கு, வியாபாரம் போன்ற பலதரப்பட்டவற்றில் இருந்து பலவிதமான கஷ்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.இவைகள் அனைத்தும்வாழ்க்கையின் போராட்டத்தின் ஒரு பகுதியே,அனால்,ஒரு சிலரது வாழ்கையில் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சினைகளக்  காட்டிலும்,ஒருபடி அதிகமாகவே பிரச்சனைகள் தோன்றுகின்றன, இதற்கு மனிதன் தன்பணவலிமை,மற்றும் சொந்த புத்தியையும் திறமையையும் உபயோகித்து,அந்தப்பிரச்சைனையைத் தீர்க்க முயல்கிறோம் .அது பலனளிக்காமல் போகும்பொது தெய்வத்தின் அருளை நாடுகிறான்.அப்போது தான் இந்த பரிகாரம் பற்றிய சிந்தனை வருகிறது .

ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள் .அதாவது ,ஒரு குறிப்பிட்டஹோமம்,கடவுள் வழிபாடு அல்லது வேறு ஏதாவதுஒரு சாந்தி ஒருவர் செய்து ,அதனால் ஒருவருக்கு பிரச்னைதீர்ந்து,நன்மை ஏற்படுகிறது.மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்னை வரும் சமயத்தில் அதே சாந்தி,வழிபாடு ஹோமம் செய்தால் நிவர்த்தி ஆகி நல்ல அபாலன் கிட்டும் என்று எதிர்பார்த்து செய்கிறார்கள்.இது தவறு ,இது போன்று செய்யக்கூடாது.ஒருவருக்கு தலைவலி, ஜூரம் வந்தால் சில வியாதிகளுக்கு அது அறிகுறிகளாகும்.ஆகவே தலைவலி என்று ஒரு மருந்தை ஒருவர் சாப்பிட்டு ,அவருக்கு குணம் ஆனால்,அதே மருந்தை மற்றொருவர் தலைவலி வருவதால் சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் கூறுவதை

கேள்விப்பட்டிருக்கிறோம்.தலைவலி ஜூரம் ஆகியவை பலவிதமான வெவ்வேறு உடல் கோளாறுகளின் அறிகுறிகளே .அது போல ஒருவருக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது ,மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை பார்த்திருக்கிறேம். ஒன்றாகவே இருந்தாலும்,இதற்கு காரணங்கள் வேறுபடலாம் பிரச்சனை/ தோஷங்கள் ஏற்படுவதற்கு ஜோதிட சாத்திரத்தில் கூறியபடி கிரஹங்களின் கோபம் தான் காரணம்.பிரச்சனைகள் ஒன்றாகவே இருக்கும்,ஆனால்,அதற்கான காரணமான கிரஹங்கள் வேவ்வேறுக் இருக்கும்.கிரஹத்தின் தோஷத்தினாலும் ,அதற்குரிய தேவதையின் கோபத்தினாலும் தான் பிரச்சனைகள் உண்டாகின்றன.ஆகவே கிரஹங்களுக்கு கிரஹங்கள் தேவதை ஆராதனை,ஹோமம் மற்றும் அதன்குணம் ,சுபத்வம்/அசுபத்வம் இவைகள் மாறுபடும் .



ஆகவே ஒருவருக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது ,அந்தக் கஷ்டங்கள் எந்த கிரஹத்தின் தோஷத்தால் ஏற்பட்டுள்ளது ,என்பதை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி ,அந்தக் கிரஹத்தை திருப்பதிப்படுத்தும் வகையில் பரிகாரம் சொல்ல வேண்டும் ஒரே கிரஹத்திற்கு பிரச்சினையின் வேகத்தின் அடிப்படையில் பரிகாரங்களைக் கூட்டிகுறைத்துசெய்யவேண்டும்.மேலும் பரிகாரம் அவரவர்களுடைய பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தையோட்டி அதற்கு தகுந்தபடி சொல்லி செய்ய வைக்க வேண்டும் 

No comments:

Post a Comment