Thursday, June 1, 2023

ஞான சர நூல் (பாகம் -1)------------------------




Thank to FB

ஞான சர நூல் (பாகம் -1)
-------------------------------------------
                         மகாதேவனாகிய சிவபெருமானே ஆதி யோகியாக வந்து அன்னை பார்வதி தேவிக்கு அளித்த இந்த சிவரகசியம் தான் சரசாஸ்திரம் என்று உயர்வாக சித்தர்களால் போற்றப்படும் "சர வித்தை" என்பது. நம் சித்தர்களின் குரல் அன்பர்களின் நலம் கருதி முழு ரகசியங்களையும் இரண்டு பாகங்களாக்கி உலக நன்மைக்காக பதிவிடுகிறேன். எங்கு நீங்கள் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷ ரகசியங்கள் இவை. சிவனருள் இருந்தால் மட்டுமே அறிய முடியும்....
பயன்படுத்தி கொள்ளுங்கள்......

சிவ ஸ்வரோதயம்.
--------------------------------

(01) ஸ்ரீசங்கரர், பார்வதி, கணபதி இவர்கள் அனைவரையும் வணங்கி சம்சாரதாரகராகிய சற்குருவையும் பரமாத்மாவையும் நான் பூஜிக்கிறேன். 

(02) அன்னை பார்வதி தேவி மஹாதேவனாகிய ஸ்ரீ சங்கரரைப் பார்த்து, ஹே... தேவாதி தேவனாகிய சங்கரரே? என்மேல் கருணை கூர்ந்து அனைத்து காரியங்களையும் சித்தியாக்கக் கூடிய ஞானத்தை எனக்குச் சொல்லுங்கள்.....

(03) ஹே.... தேவரே!
இந்த பிரம்மாண்டம் எப்படி உற்பத்தியாயிற்று?
இதனுடைய போஷணை எதனாலுண்டாகிறது?
பிறகு லயத்தை எப்படியடைகிறது?
இப்படியாயுள்ள இந்தப் பிரம்மாண்டத்தின் நிர்ணயத்தை எனக்குச் சொல்லும்?
         என்றார்.....

(04) ஈஸ்வரியைப் பார்த்து சங்கரர்-சொல்லுகிறார்.....
               ஹே.... தேவி! தத்துவத்திலிருந்து பிரம்மாண்டம் உற்பத்தியாகிகிறது. தத்துவத்தினாலேயே இதனுடைய போஷணையும் லயமுமுண்டாகிறது. இந்தப் பிரம்மாண்டத்தின் நிர்ணயமும் தத்துவத்தினாலேயே அறியப்படுகிறது.

(05) உடனே பார்வதி தேவி கேட்கிறாள்.... தத்துவவாதிகளெல்லாம் பிரம்மாண்டத்திற்கு தத்துவமே மூலகாரணமென்று நிச்சயிக்கிறார்கள். ஆனால் தத்துவமென்பது என்ன? அதன் ஸ்வரூபமென்ன? இதை எனக்கு விளங்கச் சொல்லவேண்டும்.

(06) மாயைக்கு அன்னியமாயும் நிராகாரமாயும் சுயப்பிரகாசமாயும் ஏகமாயும் சர்வாந்தர்யாமியாயுமிருக்கிற பரமாத்மாவினிடத்திலிருந்து ஆகாசமுண்டாயிற்று. ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று.
         
(07) வாயுவிலிருந்து அக்கினி, அக்கினியிலிருந்து ஜலம், ஜலத்திலிருந்து பிருதிவி, இவ்விதமாயுண்டான இந்த ஐந்து தத்துவம் பிரத்தியேகம். ஐந்தைந்தாக விஸ்தாரமுண்டாயிற்று.

08) அந்தந்த தத்துவங்களினாலே இந்த பிரம்மாண்டம் உற்பத்தியாயிற்று. அவைகளினாலேயே போஷணையும், கடைசியில் அவைகளிலே லயத்தையுமடைந்து நிற்கின்றது.

(09) ஹே.... சுந்தரியே! இந்த ஐந்து தத்துவங்களினாலே உற்பத்தியாகிய தேகத்தில் இந்த ஐந்து தத்துவங்களும் சூட்சும ரூபமாயிருக்கின்றன. அதை யோகிகளே அறிகிறார்கள்....

(10) இப்பொழுது அகாராதி ஸ்வரங்களின் உச்சாரத்திற்கு மூல காரணமாகிய இந்த சரீர ஸ்தவ ஸ்வரமோ அதைப்பற்றி சொல்கிறேன். ஸ்வரஞானம் உண்டாயிருக்கையில் ஹம்ஸ சாரத்தின் (சுவாசம் வெளியே வரும்போது ஹம் என்றும், உள்ளே வாங்கும்போது ஸம் என்றும் உச்சாரமாகிறது) ஸ்வரூபத்தின் பேரில் யோகிகளுக்கு பூத பவிஷ்ஷிய வர்த்த மானம் எனப்பட்ட திரிகால ஞானமுண்டாகிறது.

(11) அத்தியந்த ரகசியமானதும் சர்வோபகாரமும், ஸாரபூதமானதுமான ஸ்வரோதயத்தின் ஞானம் எல்லா ஞானத்திலும் மேலான சிரோன்மணியாயிருக்கிறது.

(12) இந்த ஸ்வரஞானம் மிக்க சூக்ஷமமாயிருந்து அதிமேலான போதமாயும் சத்தியமாயும் விளங்கக்கூடியதாயிருக்கிறது. நாஸ்தீக ஜனங்கள் ஆச்சரியப்படுகிற இந்த ஞானமானது ஆஸ்தீக ஜனங்களுக்குப் பெரிய ஆதாரமாயிருக்கிறது.

சிஷ்யன் லக்ஷணம்.
------------------------------------

(13)  சாந்தன், சுத்தன், ஆசாரஸம்பன்னன், குருபக்தி தத்பரன், மனக்களங்கமற்றவன், கிருதஞ்ஞன் (அதாவது உபகாரத்தை மறவாதவன்) இப்பேர்ப்பட்ட சிஷ்யனுக்கு ஸ்வர ஞானத்தை உபதேசிக்கவேண்டும்.

(14) துஷ்டன், துர்ஜனன், குரோதி, அவிஸ்வாசி, குருபத்தினியை இச்சிக்கிறவன், தைரியமில்லாதவன், துராசாரன் இப்பேர்ப்பட்ட சிஷ்யனுக்கு ஸ்வரஞானம் கொடுக்கலாகாது.

(15) ஹே.... தேவி! நம்முடைய சரீரத்திலிருக்கப்பட்ட ஸ்வரத்தின் ஞானத்தை நான் உனக்குச் சொல்லுகிறேன் கேள்.... ஸ்வர ஞானத்தின் யோகத்தினால் எல்லா  ஞானமும் பிராப்தியாகிறது.

(16) சர்வவேதம், சாஸ்திரம், சங்கீதம் இவைகள் ஸ்வரத்தினுடைய ஆசிரயத்தினாலேயேயிருக்கின்றன. மூன்று உலகங்களும் ஸ்வரத்தினிடத்திலேயே இருக்கின்றன. ஸ்வரமானது ஜகத்தினுடைய ஸ்வரூபமாயிருக்கிறது.

(17)  புருஷனில்லா கிரகமும், சாஸ்திரப்பயிற்சி இல்லா முகமும், தலையில்லா சரீரமும் எப்படி சிறக்காதோ, அவ்விதம் ஸ்வர ஞானமில்லாதவன் சோதிடம் சிறக்காது.

(18) எல்லா நாடிகளுடைய பேதங்கள் பிராணதத்துவத்தின் பேதம், சுழுமுனையீறாக உள்ள நாடித்திரயங்களின் பேதங்களை யார் அறிகிறானோ அவனே முக்தியை அடைகிறான்.

(19) ஸ்வர ஞானத்தில் தேர்ந்த பண்டிதர்களில் அநேகருடைய மத வியவகாரத்திற்கும், நிராகார பரமார்த்தத்திற்கும் வாயுவினுடைய பலம் அவசியமென்றும், சிலர் பரமார்த்தத்திற்கு வாயுபலம் அவசியமில்லையென்றும் சொல்லுகிறார்கள்.

(20) சர்வ பிரம்மாண்டம்,  பிண்டம் இவைகள் ஸ்வரத்தினாலே நிர்மாணமாயிற்று. ஜகசிருஷ்டி சம்ஹார கர்த்தாவாகிய ஈஸ்வரனும் ஸ்வரரூபமே.

(21) ஸ்வரஞானத்தைப்போல ரகசியமானது வேறொன்றுமில்லை. ஸ்வாஞானமே முக்கியமான தனம். ஸ்வரஞானத்தைவிட சிரேஷ்ட ஞானம் வேறொன்றிருப்பதாக பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை.

(22) ஸ்வரஞானத்தின் பலத்தினால் சத்ரு நாசம், மித்ர ஸமாகமம், லட்சுமி பிராப்தி, கீர்த்தி, சுகம் இவைகள் பிராப்தமாகின்றன. 23 ஸ்வர பலத்தினால் ஸ்திரீ, புத்ராதி, சம்பதி பிராப்தி, ராஜதரிசனம், தேவதா சித்தி முதலியவைகளும், ராஜவசியமும் உண்டாகிறது.

(24) ஸ்வரbபலத்தின் பேரில் தேசயாத்திரை, போஜனம், மலமூத்திர விசர்ஜனம் செய்யவேண்டும்.

(25)  ஹே... தேவி! எல்லா சாஸ்திரங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், வேதாந்தங்கள் இவைகளில் ஸ்வரஞானத்தைவிட சிரேஷ்ட தத்துவம் வேறொன்றுமில்லை.

(26) நாமரூபமுள்ள சகல பதார்த்தங்களும் மாயை. எதுவரையில் ஸ்வர ரூபதத்துவஞானம் உண்டாகவில்லையோ, அது வரையில் இந்த ஜீவன் மாயையினால் மோகிக்கப்பட்டு மூடனாகிறான்.

(27) இந்த ஸ்வரோதய சாஸ்திரம் எல்லா சாஸ்திரத்திலும் உத்தமோத்தமமானது. ஆத்மா (பஞ்சகோசாத்மக ஜீவன்) இதுவே ஒரு கும்பமாயும், இதில் பிரகாசிக்கிற இந்த ஸ்வர சாஸ்திரம் மகா தீபத்தினுடைய சுவாலை போலிருக்கிறது.

(28) இந்த ஸ்வரோதய சாஸ்திரம் தனக்குத்தானே தெரிந்து கொள்ளவேண்டியதே தவிர, அன்னியர்களின் தர்க்கத்திற்காக ஏற்படவில்லை.

(29)  இந்த ஸ்வரோதய சாஸ்திரத்தில் விசேஷமாய் திதி, நக்ஷத்திரம், வாரம்,கிரஹம், தேவதை, முதலியவைகள் ஒன்றுமில்லை. இதில் பத்திரை, விதிபாதம், வைதிருதி, முதலிய கெட்ட யோகங்களின் தோஷங்களுமில்லை.

(30) ஹே... தேவி! இந்த ஸ்வர சாஸ்திரத்தில் எவ்விதமான கெட்ட  யோகங்களும் கிடையவே கிடையாது. இனி உண்டாகிறதுமில்லை. ஸ்வரத்தினுடைய பூர்த்தியான சித்தியுண்டானால் எல்லாமே சுபபலனாகவே முடிகிறது.

(31) அறிவாளிகள் முதலில் சவிஸ்தாரமாய் தேகத்திலிருக்கப்பட்ட நாடிகளின் அநேக ரூபங்களை அறிய வேண்டும். அப்படி அறிகிறபடியால் சாரீர ஞானமுண்டாக ஏதுவாகிறது.

(32) நாபிஸ்தானத்திலிருக்கப்பட்ட கர்ணிகையின் முனையிலிருந்து 72,000 நாடிகள் உத்பன்னமாயிருக்கிறது. இவைகளெல்லாம் சரீரத்திலிருக்கின்றன.

(33) இந்த நாடிகளில் பாம்பைப்போல் சயனித்துக்கொண்டிருகிற குண்டலினி என்னும் நாமத்தையுடைய ஒரு சக்தி இருக்கிறாள். அதன் மேல் பத்து நாடிகளும், கீழே பத்து நாடிகளுமிருக்கின்றன.

(34) இருபக்கங்களிலும் இரட்டை இரட்டையாய் சேர்ந்து நான்கு கோணலாகப் போகிற நாடிகளிருக்கின்றன. இதுவும் முதலில் சொல்லிய 20 நாடிகளும் சேர்ந்து 24 நாடிகளாகின்றன.

இவைகளில் பத்து வாயுக்களையும் நடத்தும் பத்து நாடிகள் முக்கியமானவை.

(35) கோணலாக மேலும் கீழுமிருக்கப்பட்ட எல்லா நாடிகளும் வாயுவுடன் தேகத்தில் சக்கிராகாரமாயிருக்கின்றன. இவைகளுக்கெல்லாம் பிராணனுடைய ஆஸிரயமிருக்கின்றன.

(36) மேலே கண்ட எல்லா நாடிகளிலும் பத்து முக்கியமானவை. அவைகளில் இடை, பிங்கலை, சுழுமுனையாகிய இம்மூன்றும் முக்கியமானவைகளேயாகும்.

(37) 4-வது காந்தாரி, 5-வது ஹஸ்தி ஜிவ்ஹா, 6-வது பூஷா, 7-வது எஷஸ்வினி, 8-வது அலம்புஷா, 9-வது கூஹு, 10-வது ஷங்கினி, இவ்விதமாக பத்து நாடிகளையறியவும்.

(38) இடை இடது பக்கத்திலும், பிங்கலை வலது பக்கத்திலும், சுழுமுனை மத்திய பாகத்திலும், காந்தாரி இடது நேத்திரத்திலுமிருக்கிறது.

(39) ஹஸ்தி ஜிவ்ஹா வலது நேத்திரத்திலும், புஷா வலது செவியிலும், எஷஸ்வினி இடது செவியிலும், அலம்புஷா முகத்திலுமிருக்கின்றன.

(40) கூஹு லிங்கத்தினிடத்தும், சங்கினி குதத்திலும், இவ்விதமாகப் பத்து நாடிகளும் சரீர துவாரங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன.

(41) இடை, பிங்களா, சுழுமுனை இந்த மூன்று நாடிகளும் பிராண மார்க்கத்தை தழுவிக்கொண்டிருக்கின்றன. இவ்விதமாகப் பத்துநாடிகள் சரீரத்தில் முக்கியமானவை.

(42) இப்பொழுது நாடிகளின் ஆஸிரயத்திலிருக்கிற சரீரத்தின் வாயுக்களின் பேர்களை சொல்லுகிறேன். பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்ற இந்த ஐந்து வாயுக்கள் முக்கியமானவை.

(43) நாகன், கூர்மன், கிருகதன், தேவதத்தன், தனஞ்சயன் இந்த ஐந்தும் உபபிராணங்கள். இப்பொழுது இந்தப் பத்து வாயுக்களின் ஸ்தானங்களை சொல்லுகிறேன். பிராணன் எப்பொழுதும் இருதயத்திலும், அபானன் குதஸ்தானத்திலுமிருக்கின்றது.

(44) சமானன் நாபிஸ்தானத்திலும், உதானன் கண்ட மத்தியத்திலும், வியானன் சர்வ அங்கத்திலுமிருக்கின்றது.

(45) பிராணன் முதல் ஐந்து வாயுக்களுடைய ஸ்தானங்களைச் சொன்னோம். இப்பொழுது நாகன் முதல் ஐந்து வாயுக்களுடைய ஸ்தானங்களைச் சொல்லுகிறேன்.

(46) நாகன் ஏப்பத்தையும், கூர்மன் நேத்திர உன்மீலனத்தையும், கிருகதன் தும்மலையும், தேவதத்தன் கொட்டாவியையும் உண்டாக்குகின்றன. இவைகள் வாயுஸ்தானத்திலிருந்து தங்கள் தங்களுடைய காரியங்களை நடத்துகின்றன.

(47) தனஞ்சயன் மாத்திரம் சர்வ அங்கத்திலும் வியாபித்துக் கொண்டு பிராணன் வெளிப்பட்ட பிறகும் சரீரத்தை விட்டுப் பிரிகிறதில்லை. இவ்விதமாக இந்த தச வாயுக்கள் ஜீவரூபமாய் சகல நாடிகளிலும் வியாபிக்கின்றது.

(48) புத்தியுள்ளவன் இடை, பிங்கலை, சுழுமுனை இந்த மூன்று நாடிகளின் பேரில் தேகத்தில் பிராணன் சஞ்சரிக்கிறதை அறியவேண்டும்.

(49) இடைநாடி வாம பாகத்திலும், பிங்கலை தக்ஷிண பாகத்திலுமிருக்கின்றது. இடது பக்கத்து நாடிகளெல்லாம் இடைகலை எனவும், வலது பக்கத்து நாடிகளெல்லாம் பிங்கலை எனப்படும்.

(50) இடைகலையில் சந்திரனும், பிங்கலையில் சூரியனுமிருக்கின் றன. சுழுமுனையில் ஹம், ஸ எனும் மிஸ்ர ரூபமாய் சாக்ஷத் சம்புவானவரிருக்கிறார்.

(51) ஸ்வரமானது வெளிப்படுக்கையில் ஹகார சப்தத்துடனும், உள்ளுக்குப்போகும்பொழுது ஸகார சப்தத்துடனும் செல்கின்றன. இதில் ஹகாரம் சிவரூபம். ஸகாரம் சக்திரூபமென்றறியவும்.

(52) வாமநாடியை செலுத்துகிற சந்திரன் சக்தி ரூபமாயும், தக்ஷிண நாடியை செலுத்துகிற சூரியன் சிவரூபமாயுமிருக்கின்றார்கள்.

(53) சுவாசமானது ஸகாரத்திலிருக்கும் பொழுது எந்த தானம் கொடுத்தாலும் இந்த லோகத்தில் கோடானு கோடி பலத்தை தருவதாயிருக்கின்றது.

(54) இந்தப்பிரகாரமாய் யோகியானவன் களங்கமற்ற சித்தத்துடனிருந்து சந்திர சூரிய நாடி மார்க்கமாய் சர்வத்தையுமாறியுவான்.

(55) ஜீவன் ஸ்திரமாயிருக்கும்பொழுது தத்துவசோதனை செய்யவேண்டும். ஸ்திரமில்லாதிருக்கும் பொழுது செய்யக் கூடாது. எவனொருவன் ஸ்வஸ்த சித்தத்துடன் தத்துவ சோதனை செய்கிறானோ, அவனுக்கு இஷ்டசித்தியும், மகா லாபமும், ஜயமும், பிராப்தமாகின்றது.

(56) எவனொருவன் சந்திர சூரியன் இவர்களின் சரியான அப்பியாசம் செய்கிறானோ, அவனுக்கு பூதபவிஷ்ஷிய ஞானம் ஹஸ்தகதமாகிறது.

(57) வாமபாகத்திலுள்ள இடை நாடியானது அமிர்த ரூபமாய் சர்வ ஜகத்தையும் புஷ்டி செய்கிறதாயிருக்கிறது. தக்ஷிணத்திலுள்ள பிங்களா நாடியானது சர்வ ஜகத்தையும் உத்பன்னம் செய்கிறது.

(58) நடுவிலிருக்கப்பட்ட சுழுமுனை நாடியானது சர்வ கர்மத்திற்கும் நிஷேதிக்கப்பட்டதும் குரூரமுமுள்ளது. வாமநாடி சர்வ சுபகாரியத்திலும் சித்தியுள்ளது.

(59) வீட்டிலிருந்து வெளியே போகும்போது வாமநாடி சுபம். உள்ளே போகும்பொழுது தக்ஷிண நாடி சுபம். சந்திரன் சமம் சூரியன் விஷமம்.

(60) சந்திரன் ஸ்திரீ, சூரியன் புருஷன். சந்திரன் வெண்மை நிறம், சூரியன் நீலவர்ணம். இதனாலே எல்லா சௌபாக்கிய காரியங்களும் சந்திர ஸ்வரத்தில் செய்யவும்.

(61) சூரிய நாடியில் உக்கிரமானக் காரியங்களையும், சுழுமுனையில் பக்தி முக்தி பலதாயகமான கர்மங்களையும் செய்யவும்.

(62) சுக்லபக்ஷம் ஆதியில் சந்திரன், கிருஷ்ணபக்ஷம் ஆதியில் சூரியன், இவ்விதக் கிரமமாய் பிரதிபதையிலிருந்து மும் மூன்று நாள் சந்திர சூரியர்களுடைய ஸ்வர உதய காலம் பலமானது.

(63) சந்திரன், சூரியன் இந்த ஸ்வரங்கள் கிரமமாய் சுக்லபக்ஷம், கிருஷ்ணபக்ஷம் இதுகளில் தனித்தனி 2.5 நாழிகை நடக்கிறது. இவ்விதமாய் 24 ஆவர்த்தி (60 - நாழிகை) இரவும் பகலுமாகின்றது.

(64) தனித்தனி இந்த 21-நாழிகையில் ஐந்து தத்துவங்களும் நடக்கின்றன. எந்த பிரதிபதையில் முதலில் சந்திர உதயம் சொல்லியிருக்கிறதோ, அப்பொழுது சூரிய உதயமும் சூரிய உதய காலத்தில் சந்திர உதயமுமானால் அசுபம்.

(65) சுக்லபக்ஷம் பிரதிபதையில் முதலில் சந்திரனும், கிருஷ்ண பக்ஷம் பிரதிபதையில் முதலில் சூரியனும் சுபம். இதனாலே யோகியானவன் ஏகாகிரசித்தத்துடன் சந்திர சூரியர்களுடைய ஸ்வரத்தையறிய வேண்டும்.

(6)  இரவில் சந்திர ஸ்வரத்தை நடத்தக்கூடாது. பகலில் சூரிய ஸ்வரத்தை நடத்தக்கூடாது. இவ்விதமான அப்பியாசத்தை எவன் செய்கிறானோ அவன் தான் யோகி.

(67) சூரியனால் சூரியனும், சந்திரனால் சந்திரனும் கட்டுப்படுகிறது. சந்திரனை நிறுத்தவேண்டுமானால் இடது பக்கமாய்ப் படுக்க வேண்டும். அல்லது இடது கக்கத்தில் யோக தண்டத்தை அமுக்கிப்பிடிக்கவேண்டும். இவ்விதமாக சூரியனை நிறுத்த வலது பக்கமாய்ப் படுப்பதுடன் வலது கக்கத்தில் யோக தண்டத்தை அமுக்கிப் பிடிக்க வேண்டும். இக்கிரியையை யார் ஒருவன் அறிகிறானோ அவனுக்கு மூன்று உலகங்களும் வசியமாகிறது.

(68) சந்திர திதியில் சந்திரமார்க்கமாய் உதயமும், சூரியநாடி மார்க்கமாய் ஹஸ்தமனமுமானால், அப்பொழுது அநேக நல்ல குணங்கள் உத்பன்னமாகின்றன. இதற்கு நேர் விரோதம் எப்பொழுதாகிறதோ, அப்பொழுது அநேக தோஷங்கள் உண்டாகின்றன. இதனால் அது சுபகாரியங்களுக்குத் தள்ளப்பட்டது.

(69) வியாழன், வெள்ளி, புதன், திங்கள், இந்த வாரங்களில் இடைகலை சர்வ காரியங்களுக்கு சித்திதாயகமாயிருக்கிறது. அதிலும் சுக்கில பக்ஷமாயிருந்தால் ரொம்பவும் விசேஷம்.

(70) சிலர் புதன்கிழமை சுழுமுனை நாடி நல்லதென்கிறார்கள். ஞாயிறு, செவ்வாய், சனி, இந்த தினங்களில் தக்ஷிண நாடி பிங்கலை) சரகாரியத்திற்கு அதி உத்தமம். அதிலும் கிருஷ்ணபக்ஷமாயிருந்தால் மிக்க விசேஷம்.

(71) முதலில் வாயு தத்துவம், இரண்டாவது அக்கினி, மூன்றாவது பிருதிவி, நான்காவது அப்பு, ஐந்தாவது ஆகாசம், இவ்விதமாக ஒவ்வொரு 2.5 நாழிகையிலும் கிரமமாய் உதயமாகின்றது.

(72) ஒவ்வொரு 2.5நாழிகைகளிலும் ஐந்து தத்துவங்களும் உதயமாகின்றன. இவ்விதமாக இடை, பிங்கலை இரண்டிலும் ஐந்து தத்துவங்கள் உதயமாகின்றன.

(73) இரவும் பகலும் 60 நாழிகை. இதில் சந்திரனும் சூரியனும் சேருங்காலம் சங்கிரமணமெனப்படும். அவ்வாறு 12 சங்கிர மணம். இந்த பன்னிரண்டும் 12 லெக்கினமெனப்படும். இதில் ரிஷபம் ,கடகம், கன்னி,விருச்சிகம், மகரம், மீனம் இவைகள் சந்திரனுடையவை.

(74) மேஷம், சிங்கம், கும்பம், துலாம், மிதுனம், தனுசு, இவை சூரியனுடையவை. இவைகளினால் சுபா சுபங்களை நிர்ணயிக்கவும்.

(75) கிழக்கு, வடக்கு, இந்தத் திக்குகளில் சூரியனிருக்கிறான். சந்திரன் மேற்கு, தெற்கு திக்குகளிலிருக்கிறான். இதனாலே தக்ஷிண நாடியில் சூரிய ஸ்வரம் உதயமாயிருக்கையில் தெற்கு மேற்குத் திக்கில் போகலாகாது.

(76) வாம நாடியில் சந்திரஸ்வரம் உதயமாயிருக்கையில் கிழக்கு வடக்குத் திக்குகளில் போகலாகாது. மீறிப்போனால் அவனுக்குச் சத்ருபயம் தவிர, போனவன் திரும்பமாட்டான்.

77 அதனாலே ஹிதத்தை அபேக்ஷிக்கிறவன் மேலே நிஷேதிக்கப்பட்டிருக்கிற திசைகளில் போகலாகாது. எந்த ஸ்வரத்திற்கு எத்திசை நிஷேதிக்கப்பட்டிருக்கிறதோ அதில் போகிறவனுக்கு மரணம் சம்பவிக்குமென்றறியவும்.

(78) சுக்கில பக்ஷம் துதியையில் சூரியஸ்வரம் நடக்கும்பொழுது சந்திர தரிசனமானால், லாபகரமானதும் நல்ல விஷயத்தில் சுகமும் உண்டாகும்.

(79) எந்த நாளில் சூரிய ஸ்வர உதயம் சொல்லப்படுகிறதோ, அதில் சூரிய ஸ்வரமும், சந்திர ஸ்வர உதய நாளில் சந்திரனும் நடந்தால் எல்லாக் காரியங்களும் சித்தியாகிறது. காலமானது இரவாயிருந்தாலும் பகலாயிருந்தாலும் சரி.

(80) சந்திர ஸ்வர காலத்தில் சூரியனும், சூரிய ஸ்வர காலத்தில் சந்திரனும் நடந்தால் பயம், கலகம், ஹானி, சுபகாரியத்திற்கு தடை முதலியவைகள் உண்டாகும்.

81 சூரிய ஸ்வர காலத்தில் அர்த்தமாகாதவைகளும் நிச்சயமாய் அர்த்தமாகும். சந்திர ஸ்வரமாயிருந்தால் அர்த்த ஞானம் உண்டாகமாட்டாது.

விபரீத லக்ஷணம்.
---------------------------------

(82) சூரியோதய காலத்தில் ஸ்வர உதயம் விபரீதமானால் (சந்திரனுடைய இடத்தில் சூரியன், சூரியனுடைய இடத்தில்,

(83) சந்திரன்) அதன் விபரீத பலன் சொல்லுகிறேன். முதல் நாள் விபரீத ஸ்வரம் நடந்தால் மனக்கிலேசம், 2-ம் நாள்

(84) தனஹானி, 3-ம் நாள் பிரயாணம், 4-ம் நாள் இஷ்ட நாசம், 5-ம் நாள் ராஜவித்துவம்சம், 6-ம் நாள் சர்வ நாசம், 7-ம் நாள் வியாதி துக்கம், 8-ம் நாள் மரணம்.

(85) காலை மாலை சாயரக்ஷை இம்மூன்று காலத்திலும், மேல் சொன்ன 8 நாளும் ஸ்வரம் விபரீதமாய் நடந்தால் கெட்டபலன் என்றறியவும். யாதேனும் மாறுதலானால் சுபபலமென்றறியவும்.

(86) காலையிலும் மத்தியானத்திலும் சந்திரனும், சாயரக்ஷை சூரியனுமிருந்தால் அப்பொழுது ஐயமும் லாபமும் உண்டாகும். விபரீதமானால் அசுபமென்றறியவும்.

(87) வலது, இடது, இந்தப் பக்கங்களில் எந்தப் பக்கத்தில் ஸ்வரம் நடக்கிறதோ அந்தப் பக்கத்துக் காலை முதலில் வைத்து பிரயாணம் செய்தால் காரிய சித்தியாகும்.

(88) சந்திரக்கலை நடக்கும்போது முதலில் சம அடி 2, 4, 6-ம் சூரியக்கலை நடக்கும்போது 3, 5, 7, (விஷமம்) இவ்விதமாக அடிவைக்கவும். பூர்ணபாதத்தை முன்வைத்துப் பிரயாணம் செய்தால் சித்தியாகும்.

(89) தூங்கி எழும்பொழுது, எந்தப்பக்கத்தில் ஸ்வரம் நடக்கிறதோ அந்தப் பக்கத்துக் கையினால் முகத்தைத் தடவ, இச்சித்த பலன் கைகூடும.

(90) அன்னியருக்கு ஒரு வஸ்து கொடுக்கும்பொழுதும், அன்னியரிடமிருந்து வாங்கும்பொழுதும், வீட்டினின்று வெளியே போகும் பொழுதும், எந்த ஸ்வரம் நடக்கிறதோ அந்தப்பக்கத்துக் கை, காலை முதலில் உபயோகிக்கவும். இவ்விதம் செய்தால் காரியம் உத்தமமாகும்.

(91) இப்படி செய்தால் காரியத்தில் ஹானியும் கலகமும் உண்டாகிறதில்லை. சத்துருக்களினால் யாதொரு தீங்கும் நேரிடாது. பிரயாணத்தில் யாதொரு சங்கடமுமில்லாமல் வீட்டிற்கு சுகமாய்த் திருப்பலாம்.

(92) குரு, பந்து, ராஜன், மந்திரி, இவர்களிடத்தில் வேலையிருக்கும்பொழுது காரியத்தை பூர்ண பாகத்தினால் ஆரம்பிக்கவும். அப்படிச்செய்தால் காரியம் நம் இஷ்டம்போல் நடக்கும்.

(93) அக்கினி தாஹம், திருட்டுக்கொடுக்கிறது, அதர்ம கிருத்தியம், வாதி நிக்கிரஹம் இவைகளை சூன்னிய நாடியில் செய்யவும். இவ்விதம் செய்கிறவனுக்கு லாபம், ஜெயம், சுகம், இவைகள் உண்டாகின்றன.

(94) தூரதேசத்திற்குப் பிரயாணம் சந்திர ஸ்வரத்திலும், சமீப இடத்திற்குப் பிரயாணம் சூரிய ஸ்வரத்திலும் செய்யவேண்டுமென்பது சிலர் அபிப்பிராயம்.

(95) முதலில் சொல்லப்பட்டதும், லாபகாரியமும், யுத்தமும்,

(96) பூர்ண ஸ்வரத்தில் செய்தால் காரிய சித்தியும், சூன்னியத்தில் காரிய ஹானியும் உண்டாகுமென்று சர்வஞ்ஞராகிய ஸ்ரீ சங்கரருடைய வசனம்.

(97) விவகாரம், உச்சாடன கர்மம், வஞ்சகம் செய்கிறவர்கள், கோபித்துக்கொண்டிருக்கிற எஐமானன் தரிசனம், திருடர்களுக்கு எதிர்ப்படல், இச்சமயங்களைப் பூர்ண ஸ்வரம் பயங்கரத்தை யுண்டாக்கும். ஆதலால் அவர்களுக்கு முன் சூன்னிய நாடியை வைத்து நிற்கவேண்டும்.

(98) தூரதேசப் பிரயாணத்தில் சந்திர ஸ்வரம் நிர்விக்கினமாய் இஷ்ட சித்தியைக் கொடுக்கும். திரும்புகையில் சூரியநாடி மிகவும் நல்லது.

(99) ஸ்வர விசேஷத்தினால் அயோக்கியனுக்கு யோக்கியதையும், யோக்கியனுக்கு அயோக்கியதையும்,உண்டாகின்றபடியால் மனுஷனானவன் தன் காரியத்திற்கு யோக்கியமான நாடியை உபயோகிக்க வேண்டும். தவிரவும் எப்படி வாயு இருக்குமோ அப்படி நடக்கவேண்டும்.

(100) சந்திர ஸ்வரம் நடக்கும்பொழுது அன்னியர்கள் செய்த அபகாரத்தை சகிக்கிறான். சூரிய ஸ்வரத்தில் பலவானையும் வசியம் செய்கிறான். சுழுமுனை நாடி நடப்பு காலத்தில் மோக்ஷமுண்டாகிறது. இவ்விதமாக ஒரு தெய்வம் மூன்று விதமாயிருக்கிறது.

(101) பகலிலாவது, இரவிலாலது சுபம் அல்லது அசுபகாரியமிருந்தால் காரியத்திற்கு தகுந்த ஸ்வரத்தை நடத்திக் கொள்ளவும்.

இடைகலை:-
----------------------

(102) ஸ்திரமாகிய காரியங்கள், அலங்காரம், தூரதேச கமனம், ஆசிரம தருமம், கிரகம் வாங்கல், சாமான் வாங்கல், இதுகளுக்குச் சந்திரநாடி உத்தமம்.

(103) துறவு, கிணறு, குளம் வெட்டல், கால் நாட்டல், தேவதா பிரதிஷ்டை, யாத்திரை, தானம், கல்யாணம், வஸ்திர தாரணம், அலங்கார தாரணம் இவைகளுக்கு சந்திரநாடி உத்தமம்.

(104) சாந்தி கர்மம், பௌஷ்டி கர்மம், திவ்விய மருந்து, ரசாயனம், பந்துக்கள் எஜமானன் தரிசனம், சிநேகிதன் சேர்க்கை, வியாபாரம், தான்னிய சேர்க்கை இவைகள் சந்திர நாடியில் சுபம்.

(105) கிரகப்பிரவேசம், சேவை, கிருஷி, விரை தெளித்தல், இன்னும் சுபகாரியங்கள் சந்திர நாடியில் உத்தமம்.

(106) வித்தியாரம்பம், பந்து தரிசனம், உபநயனம்,

(107) மோக்ஷம், தர்மம், தீக்ஷை, மந்திரசித்தி, காலவிக்ஞானம், வேத பாராயணம், சதுஷ்பாதம் (ஆடு, மாடு, குதிரை) வீட்டிற்குக் கொண்டு வருதல், வியாதி சிகிக்ஷை, எஜமானனை அழைத்தல் முதலியவைகளுக்கு சந்திரநாடி சுபம்.

(108) முதல் முதல் யானை குதிரை ஏறுதல், அவைகளைவாங்கி கட்டுதல்,

(109) பரோபகாரம், நிதிஸ்தாபனம், சங்கீதம், வாத்தியம், கேளிக்கை, இவை ஆரம்பித்தல், சாஸ்திர விசாரம், பட்டணம் அல்லது கிராமம் இவைகளுள் பிரவேசித்தல், திலகதாரணம் நிலம் வாங்கல் இவைகளுக்கு சந்திர நாடி சுபம்.

(110) துக்கம், சோகம், விஷாதர், ஜூரம், மூர்ச்சை இவைகளும், ஸ்வஜன சேர்க்கை, எஜமானன் சேர்க்கை, அன்னபானாதிகளுக்கு வேண்டியவையும், விறகும், வாங்கல் இவைகள் சந்திர நாடியில் சுபம்.

111 ஸ்திரீகள் வளையல் முதலானது அணிதல், மழை ஆரம்பம்

(112) குருபூஜை, விஷமிறக்கல். யோகாப்பியாசம் இவைகள் சந்திரநாடியில் ஆரம்பித்தால் சித்தி. மேலும் இந்த நாடியில் வாயு, தேயு, ஆகாசம் இந்த மூன்று தத்துவமும் நிஷேதம்.

(113) மேலே சொன்னக் கிருத்தியங்களெல்லாம் பகல் இரவு எந்தக் காலத்தில் செய்தாலும் சித்தி. எல்லா சுபகாரியங்களும் சந்திர நாடியில் சுபம்.

பிங்கலை:-
------------------

(114) கடினமானதும், குரூரமானதும், வித்தையைப் படித்தலும்,

(115) படித்துவைப்பதும், ஸ்திரீ ஸங்கமம், வேசி கமனம்,

(116) கப்ப லில் ஏறுவது, துஷ்ட கிருத்தியம், மதுபானம், வீரமந்திரங்களின் உபாசகை, தேசவித்துவம்ஸம், விரோதிக்கு விஷம் கொடுத்தல், சாஸ்திர அப்பியாஸம், கமனம், வேட்டையாடல், மிருகங்களின் சண்டை.

(117) சூதாடல், குதிரை, யானை, இரதம் இவைகளை சித்தம் செய்கிறதாவது அல்லது அவைகளில் எறுதல்,

(118) திருடல், எந்திரம்

(119) தந்திரம்,கோட்டை, மலை, இவைகளின் மேல் ஏறுதல், சிலம்பம் பழகுதல், மாரண உச்சாடன முதலான ஷட் கர்மம், எட்சணி எட்சவேதாளம், பிசாசு, விஷப், இவைகளின் நிலாரணம், கழுதை, ஒட்டை, எருமை, யானை, குதிரை இவைகளில் ஏறுதல், ஆற்றைக் கடத்தல், தீவிரமான மருந்து, லிபி எழுதுதல் இதுகளுக்கெல்லாம் தக்ஷிணநாடி உத்தமம்.

(120) மாரணம், மோஹனம், ஸ்தம்பனம், வித்வேஷணம், உச்சாடனம்

(121) வசீகரணம், பிரேரணம், ஆகர்ஷணம், க்ஷோபம், தானம், கிரய விக்கிரயம், பிரேத ஹரணம், சத்துரு நிக்கிரஹம், போகம், ராஜ தரிசனம், போஜனம், ஸ்நானம், சத்துருவிடத்தில் சண்டை இவைகளுக்கு பிங்கலை நாடி உத்தமம்.

(122) போஜனத்தினால் அக்கினி மந்தம் ஏற்படுதல், ஸ்திரீ வசீகர ணம், சயனித்தல் இவைகள் சூரிய ஸ்வரத்தில் செய்யவும்.

(123) சாராம்சம் குரூரமானதும், சாமானதுமான காரியங்களெல்லாம் சூரிய ஸ்வரத்தில் செய்தால் சித்தி. இதில் யாதொரு சந்தேகமில்லை.

சுழுமுனை:-
--------------------

(124) ஸ்வரமானது க்ஷணநேரம் வலத்திலும் இடத்திலும் செல்லும் போது சுழுமுனையின் காலமென்றறியவும். இந்த சுழுமுனை எல்லா காரியத்தையும் நாசம் செய்கிறதாயிருக்கிறது.

(125) சுழுமுனை நாடியிடத்தில் பிரளயகால ரூபமாகிய அக்கினி எப்பொழுதுமிருந்துகொண்டிருக்கிறபடியால் அது விஷத்திற்கு சமானமாய் காரியாரம்பங்களுக்கு நிஷேதமாயிருக்கிறது. ஆகையால் அதில் யாதொரு காரியம் செய்தால் நாசமாகிறது.

(126) எப்பொழுது கிரமம் கப்பி இரண்டு நாடிகளும் சென்றுக ண்டிருக்கிறதோ அப்பொழுது அவனுக்கு அசுப பலனென்றறியவும்.

(127) யாருக்கு நாடியானது க்ஷணநேரம் வலதும் க்ஷண நேரம் இடதுமாய் செல்லுகிறதோ அவனுக்குச் சங்கடம் வந்ததென்றறியவும்.

(128) எப்பொழுது இரண்டு நாடிகளினுடைய சஞ்சாரம் உண்டாகிறதோ, அக்காலம் விஷத்திற்கு சமானமாயிருக்கிறபடியால் அவ்வித சுழுமுனை நாடியில் எப்பேர்ப்பட்ட குரூரமும் சாந்தமுமான காரியங்கள் செய்யலாகாது. அது நிஷ்பலனாய் முடியும்.

(129) ஜீவிதம், மாரணம், லாபம், நஷ்டம், பிரஷ்ணை, ஜெயம், அப ஜெயம், இவ்விதமான கேள்விகளை ஸ்வரம் விபரீதமாய் நடக்கும்பொழுது செய்யலாகாது. ஈஸ்வர ஸ்மரணை மாத்திரம் செய்யவும்.

(130) ஈஸ்வர ஸ்மரணை செய்த பிறகு யோகாப்பியாசம் முதலாகிய பரமார்த்தீக கிருத்தியங்கள் செய்யவும். ஜெயம், லாபம், சுகம், இவைகளில் இச்சையுடையவர்கள் பரமார்த்தீகத்தைத் தவிர வேறு காரியம் செய்.

(131) சூரிய ஸ்வரத்தில் சுழுமுனை நாடி செல்லும்பொழுது சாபம் அல்லது வரம் கொடுத்தால் அது நிஷ்பிரயோஜனமாகும்.

(132) நாடிகளினுடைய சங்கிரமண காலத்திலும், தத்துவங்களின் சலன காலத்திலும் தானம் முதலாகிய புண்ணிய கர்மங்கள் செய்யவேண்டும். சுபகாரியங்கள் செய்யலாகாது.

(133) எந்தக்காலத்தில் விஷம ஸ்வரத்தின் உதயமாயிருக்கிறதோ அப்பொழுது யாதொரு காரியத்தையும் மனதில் நினைக்கக் கூடாது. விஷம ஸ்வரத்தில் யாரொருவன் பிரயாணம் செய்கிறானோ அவனுக்கு மரணம் சம்பவிக்கிறது. அநேக விதமான கிலேசங்கள் பிராப்தமாகிறது. இதற்கு சந்தேகமில்லை.

(134) முன்னும், இடது பக்கமும், ஊர்த்துவமும் சந்திரன் பலவான். வலது பக்கமும், பின்னும் கீழும் சூரியன் பலவான். ஆகையால் வித்வான் பூர்ண சூன்னிய ஸ்தானங்களை விசாரணை செய்யவேண்டும்.

(135) சந்திர ஸ்வர காலத்தில் வருகிற தூதன் இடது பக்கம், மேல்பக்கம், அதே பாகத்தில் வந்தால் சுபம். அவ்விதமே சூரிய ஸ்வர காலத்தில் பின்னால் வலது பக்கம் கீழ் பாகத்தில் வந்தால் சுபயென்றறியவும்.

(136) அனாதியாயும் நிஷ்கிரியையாயும் நிட்சலமாயுமுள்ள சுழுமுனை

(137) விஷம சந்தியானது பரதத்துவமாகிய பிரம்மத்தில் லீனமாகிறது.

(138) அதை சாதுக்கள் சந்தியா என்று சொல்லுகிறார்கள். பிரசித்தமாகிய வேதத்தை வேதமென்று சொல்லுகிறதில்லை. காரணம் அதனிடத்தில் வேத தத்துவமில்லை. எதனாலே பரமாத்மாவை அறியப்படுகிறதோ அதற்குத்தான் வேதமென்று சாதுக்களால் சொல்லப்படுகிறது. பிராமணன் பகல் இரவு இவைகளின் சந்தியில் ஸந்தியாவந்தனம் செய்கிறான். இதற்கு சாதுக்கள் ஸந்தி என்று சொல்லுகிறதில்லை. ஆனால் சுழுமுனை நாடியிலிருக்கப்பட்ட பிராணனைத்தான் ஸந்தி என்பார்கள்.

நாடிபேதம்:-
-------------------

(139) ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கரையேற்றப்பட்ட தேவாதி தேவனே! உங்களுடைய இருதயத்திலிருக்கப்பட்ட ரகசியத்தை எனக்குச் சொல்லவேண்டும்.

(140) ஹே.... பார்வதி! அத்தியந்தம் ரகசியமாகிய ஸ்வா ஞானத்தைத் தவிர வேறு ரகசியமில்லை. இதுதான் நமது இஷ்ட தெய்வம். எந்த யோகியானவன் ஸ்வர அப்யாசியோ அவனே சிரேஷ்ட யோகி.

(141) பஞ்ச தத்துவத்திலிருந்து சிருஷ்டி, உத்பன்னமும் லயமுமாகிறது. இதனாலேயே பஞ்ச தத்துவம் முக்கியமானது. நிர்குணமாகிய பரமாத்மா இந்த ஐந்து தத்துவத்திலிருந்தும் வேறாக இருக்கிறார்.

(142) யோகியானவன் அப்பியாச யோகத்தினால் ஸ்வரத்திலுள்ள தத்துவங்களின் பெயரை அறியவேண்டும். யாரொருவனுக்கு தத்துவத்தினுடையதும் ஸ்வரத்தினுடையதும் பூர்ண ஞானமிருக்கிறதோ அப்பேர்ப்பட்ட யோகி பூதங்களினுடைய துஷ்ட கின்னங்களை சகஜமாய் அறிகிறான்.

(143) பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், இந்த ஐந்து பூதங்களே பஞ்ச தத்துவம் பஞ்ச பூதங்களே இந்த ஜகமாயிருக் கிறது. இந்தப் பஞ்ச தத்துவத்தை யார் அறிகிறானோ அவனே பூஜிக்கப்பட்டவன்.

(144) பூலோகம் முதல் சத்தியலோகம் வரையிலுள்ள சர்வலோகத்தின் ஜீவராசிகளின் தேகத்தில் தத்துவங்கள் வெவ்வேறுயில்லை. எல்லாவற்றிலும் பஞ்சபூதம் ஒரே மாதிரியாயிருக்கிறது. ஆனால் சரீரத்திலுள்ள நாடிகள் மாத்திரம் வெவ்வேறாயிருக்கின்றன.

(145) இடைகலை, பிங்கலையில் ஐந்து தத்துவங்களினுடைய உதயம் ஐந்தாயிருக்கிறது.
       ஹே.... சுந்தரியே! அந்த தத்துவத்தினுடைய ஞானத்தை எட்டுவிதமாய் உனக்குச் சொல்லுகிறேன்.

(146) முதலில் தத்துவத்தினுடைய சங்கை. 2-வது சுவாசத்தினுடைய ஸந்தி.

(147) 3-வது ஸ்வரத்தின் சின்னம். 4-வது ஸ்தானம். 5-வது தத்துவத்தின் நிறம். 6-வது பிராண நிலை. 7-வது வாசனை 8-வது சுவாசம் செல்லும் அளவின் லக்ஷ ணம், இந்த 8 விதமாய் சராசரத்தில் வியாபித்து நிற்கின்றது.
       ஹே..... பார்வதி! இந்த ஜகத்தில் ஸ்வர தத்துவ ஞானம் முக்கியம், மற்றது சிரேஷ்டமல்ல.

(149) யோகியானவன், பிரபாத காலமுதல் ஸ்வரத்தையும் அதன் தத்துவ உதய காலத்தையும் மிகவும் ஜாக்கிரதையாய் கவனிக்கவேண்டியது. எந்த காரியம் செய்தாலும் ஸ்வரத்த னுடைய அனுஸந்தானத்திலேயே இருக்கவேண்டும். ஸ்வர ஞானமுடைய யோகியானவன் கேவலம் காலக்ஷேப நிமித்தம் கர்மம் செய்கிறானே யொழிய அவனுடைய லக்ஷியமெல்லாம் ஸ்வரத்தினிடத்திலேயே இருக்கும்.

(150) தத்துவ ஞானம் உண்டாக வேண்டியதற்காக ஷண்முகி முத்திரையை அப்பியசிக்கவும். அது எவ்விதமென்றால், கைகளின் பெருவிரல் இரண்டினால் காதையும், நடுவிரல் இரண்டினால் நாசியையும், தர்ச்சினி இரண்டினால் கண்களையும், மற்ற விரல்களினால் வாயையும் அழுத்திக்கொண்டு இருப்பதற்கு ஷண்முகி யென்று யோகிகள் சொல்லுகிறார்கள்.

(151) இவ்விதம் செய்வதினால் ஐந்து தத்துவங்களினுடைய ஞானமுண்டாகிறது. இதில் 5-விதமான நிறங்கள் காண்கின்றன. 1-மஞ்சள் 2-வெள்ளை 3 - சிவப்பு 4 - நீலம் 5-பலவர்ணம், இதில் பிருதிவி -மஞ்சள், அப்பு-வெள்ளை, தேயு - சிவப்பு, வாயு - நீலம், ஆகாசம் - சித்திர விசித்திர வர்ணம்.

(152) சுவாசத்தை இழுத்துக் கண்ணாடியின் மேல் சுவாசத்தை விட்டால், அதின்பேரில் என்ன ஆகிருதி, காணப்படுகிறதோ, அதைக்கொண்டு மனுஷனுடைய தத்துவத்தையறியவும்.

(153) பிருதிவி - சதுஷ்கோணம், அப்பு - அர்த்த சந்திரன், தேயு திரிகோணம், வாயு-சக்கிராகாரம், ஆகாயம்- அநேக பிந்துக்கள். இதைக்கொண்டு இன்ன தத்துவம் உதயமாயிருக்கிறதென்று அறியவும்.

(154) சுவாஸமானது செல்லும் பொழுது மூக்கில் மேலும் கீழும் படாமல் மத்தியில் சென்றால் பிருதிவி தத்துவம். மூக்கின் கீழ்பாகத்தை ஒட்டிச்சென்றால் அப்பு தத்துவம். மூக்கின் மேல் பாகத்தை ஒட்டிச்சென்றால் தேயு தத்துவம். கோணலாய் சென்று கொண்டிருந்தால் வாயு தத்துவம். இரண்டு ஸ்வரமும் வெளியில் வராமல் உள்ளேயிருந்தால் ஆகாச தத்துவ மென்றறியவும்.

(155) அப்பு-வெள்ளை, பிருதிவி-மஞ்சள், அக்னி-ரக்தவர் ணம், வாயு-நீல வர்ணம், ஆகாசம்-சித்திரவர்ண மென்றறியவும்.

(156) அக்னி இரண்டு தோள்களிலும், வாயு நாபி மூலம், பிருதிவி முழங்கால், அப்பு பாதத்தின் கடைசி, ஆகாசம் சிரசு.

(157) பிருதிவி -மதுரம், அப்பு - துவர்ப்பு வாயு-புளிப்பு, ஆகாசம்- கசப்பு, தேயு - உறைப்பு,

(158) வாயுவு 8-அங்குலம், அக்கினி 4-அங்குலம் பிருதிவி 12-அங்குலம், அப்பு 16-அங்குலம், ஆகாயம் அதேயிடத்தில்...

(159) அக்கினி மேலே செல்லுகிறபடியாலும் அது மிருத்துவானதாலும் அதில் மாரணக்கிரியையும், அப்பு கீழ்நோக்கி செல்கின்றபடியால் அதில் சாந்திகர்மமும், வாயு கோணலாய் செல்லுகிறபடியால் அதில் உச்சாடனக்கிரியையும், பிருதிவி மத்தியில் செல்லுகிறபடியால் ஸ்தம்பனக்கிரியையும் செய்யவும். ஆகாசம் எங்கும் வியாபித்திருக்கிறபடியால் அதில் யாதொன்றும் செய்யலாகாது.

(160) பிருதிவி தத்துவத்தில் ஸ்திர கர்மம், அப்புவில் சர கர்மம், தேயுவில் குரூரமான கர்மம், வாயுவில் மாரண உச்சாடன கர்மங்கள் செய்தால் சித்தி.

(161) யோக அப்பியாசத்தைத் தவிர ஆகாஸ தத்துவத்தில் யாதொரு கர்மமும் செய்யக்கூடாது. செய்தால் காரிய நாசம்.

(162) பிருதிவி, அப்பு இவை இரண்டும் சித்திப்பிரதம். அக்கினி மிருத்திகாரகம், வாயு க்ஷ்யகாரகம், ஆகாசம் நிஷ்பலம்.

(163) பிருதிவி தத்துவம் நீடித்த லாபத்தையும், அப்பு தத்சமய லாபத்தையும், அக்கினி வாயு ஹானியையும் கொடுக்கும். ஆகாசத்தில் சர்வமும் நிஷ்பலம்.

(164) மஞ்சள் வர்ணமும் மெதுவாய் செல்லக்கூடியதும்,மோவாய்க்கட்டை வரையில் கீழும் மேலும் படாமலும் நடுவில் செல்லுகிறதும், பெரிய சப்தமும் கொஞ்சம் உஷ்ணமுமுடைய எந்த சுவாசமோ, அது ஸ்திரகாரியத்தை சித்தி செய்யக் கூடியதுமான பிருதிவி சம்மந்தமான வாயு ஆகும்.

(165) கீழே செல்லக்கூடியதும், பெரிய சப்தமும், சீக்கிரமாய் செல்லக்கூடியதும், சீதளமும் 16-அங்குல பரிமாணமுடையதுமானது அப்பு சம்மந்தமானது. இது சுபகர்மம் சித்தி செய்யக்கூடியது.

(166) பம்பரம்போல் செல்லக்கூடியதும், அதி உஷ்ணமும் ரக்த வர்ணமும் 4-அங்குலம் மேல் செல்லக்கூடியதுமான வாயு தேயு சம்மந்தமானது. இது குரூரமான கர்ம சித்தி கொடுக்கக் கூடியது.

(167) சீதோஷ்ணம், கிருஷ்ணவர்ணம். கோணலாயும் 8-அங்குலம் செல்லக்கூடியதுமான சுவாசம் வாயு சம்மந்தமானது. இதானது சரகாரியசித்தி செய்யக்கூடியது.

(168) எந்த வாயுவானது, ஸமரசமாயும், எல்லா தத்துவங்களின் குணத்தையுமுடையதோ அது ஆகாச சம்மந்த வாயுவாகும். இதில் யோக சித்தியுண்டாகும்.

(169) பிருதிவி தத்துவம் நிறத்தில் மஞ்சளாயும், வடிவம் நாலு மூலையாயும், ருசி மதுரமாயும், நடுவில் செல்லக்கூடியதும் 12-அங்குலம் பரிணாமமுடையதும் அநேக காரியங்களுக்கு உபயோகமாயும் இருக்கிறது.

(170) அப்பு தத்துவம் வெள்ளை நிறம். வடிவம் அர்த்த சந்திரன் (பிறை), ருசி துவர்ப்பு, ஈரமும் 16-அங்குலம் பரிணாமமுடையது. இதனால் லாபமுண்டாகும்.

(171) தேயு தத்துவம் ரக்தவர்ணம். திரிகோணம். உவர்ப்பு. மேல் நோக்கிச் செல்லக்கூடியது. தேஜூஸுடையது. 4-அங்குல பரிணாமமுடையது.

(172) வாயு தத்துவம், நீலவர்ணம். சக்கிராகாரம். புளிப்பு. கோணலாய் செல்லக்கூடியது. சபலம். 8-அங்குல பரிணாமமுடையது.

(173) வர்ணம், வடிவம், ருசி, செல்லும் நிதானம் இந்த நாலும் ஸ்பஷ்டமில்லாதது ஆகாச தத்துவம். இது பிரவர்த்தி காரியங்களில் நிஷ்பலத்தை கொடுக்கக்கூடியது. மோக்ஷ மார்க்கத்திற்கு மாத்திரம் சாதகமுடையது.

(174) பிருதிவி, அப்பு-சுபம், தேயு மத்திமம். வாயுவு ஆகாசம், காரியஹானி மிருத்திவும் செய்யக்கூடியது. புருஷாளுக்கு அசுபம் கொடுக்கக்கூடியது.

(175) கிழக்கு முதல் மேற்கு பரியந்தம் பிருதிவி தத்துவம். தெற்கு தேயு. வடக்கு வாயு. மத்தியதிசை ஆகாசம். இவ்விதமாய் தத்துவங்களின் திசை வியாபித்து நிற்கின்றன.

(176) சந்திர ஸ்வரத்தில் பிருதிவி அப்புவும், சூரிய ஸ்வரத்தில் அக்கினி தத்துவமும் நடக்கையில் கிரமமாய் ஸௌமியமும், குரூர காரியமும் சித்தியுண்டாகும். இதில் சந்தேகமேயில்லை.

(177) பகலில் பிருதிவி தத்துவமும், இரவில் அப்பு தத்துவமும், லாபகரமானது. அக்கினி தத்துவத்தில் மிருத்துவும், வாயு தத்துவத்தில் க்ஷயமும் (ஹானி) ஆகாச தத்துவத்தில் ஸ்தானபேதமுமுண்டாகிறது.

(178) பிருதிவி தத்துவத்தில் நீடித்த காலம் ஜீவித்திருக்க உபாயம், ஜயம், லாபம், கிருஷி, தன கர்மம், மந்திரம், யுத்த கர்மம், ப்ரஷ்ணம், கமனம், ஆகமனம் இவைகள் செய்ய சுபம்.

(179) பிருதிவி, அப்பு தத்துவத்தில் சத்துரு வந்தால் சுபம். வாயு தத்துவத்தில் வந்தால் வேறிடம் போவான். ஆகாசம் தேயு தத்துவத்தில் சத்துரு வந்தால் ஹானியும், மிருத்துவுமுண்டாகும்.

(180) ப்ரஷ்ணம் கேட்க வந்தால் தத்துவத்தினாலறிந்து சொல்லவும். பிருதிவி தத்துவமாயிருந்தால் விருக்ஷங்களைப்பற்றி, அப்பு தத்துவமாயிருந்தால் ஜீவனைப்பற்றி, தேயு தத்துவ மாயிருந்தால் தாதுக்களைப்பற்றி, ஆகாச தத்துவமாயிருந்தால் ஒன்றுமில்லையென்றறிந்து சொல்லவும்.

(181) பிருதிவி தத்துவமாயிருந்தால் அநேகருடனும், அப்பு, வாயு, தத்துவத்தில் ஒருவராகவும், தேயு தத்துவத்தில் இருவராகவும் போகவேண்டும். ஆகாச தத்துவத்தில் போகவே கூடாது.

(182) தக்ஷிண நாடியில் அக்கினி தத்துவமாயிருந்தால் அது செவ்வாய், பிருதிவி தத்துவமாயிருந்தால் சூரியன், அப்பு-சனி, வாயு-இராகு.

(183) வாம நாடியில் (இடைகலை) அப்பு தத்துவம்-சந்திரன், பிருதிவி-புதன், வாயு-குரு தேயு-சுக்கிரன். இந்த கிரகங்கள் சந்திர ஸ்வரத்தில் சர்வ காரியங்களுக்கும் சுபம்.

(184) சுழிமுனை நாடியில் பிருதிவி தத்துவம்-புதன், அப்பு-சந்திரன், சுக்கிரன்-தேயு, சூரியன்-செவ்வாய், வாயு-இராகு சனி, ஆகாசம்-குரு.

(185) சூரிய ஸ்வரத்தில் யாரேனும் பிரயாணப்பட்டுவிட்டார்களாவென்று ப்ரஷ்ணம் கேட்டால், அந்தக் காலத்தில் ஸ்வாசத்தில் இராகு இருந்தால் அவர்கள் இருப்பிடத்தை விட்டு புறப்பட்டு விட்டார்களென்று சொல்லவும்.

(186) அப்பு தத்துவத்தில் கேள்வி கேட்டால் சீக்கிரம் வருவான். பிருதிவியில் போனவிடத்தில் அங்கேயே சுகமாயிருப்பான். வாயு தத்துவத்தில் அன்னிய இடங்களில் போயிருப்பான். தேயுவாயிருந்தால் மாணமடைந்திருப்பானென்று சொல்லவும்.

(187) பிருதிவி தத்துவத்தில் கேள்வி கேட்டால் விருக்ஷங்களைப் பற்றியென்றும், அப்பு தத்துவமாயிருந்தால் சுபகாரியத்தைப்பற்றியென்றும், அக்கினி தத்துவமாயிருந்தால் உலோகங்களைப் பற்றியென்றும், ஆகாச தத்துவமாயிருந்தால் சூன்யமென்றும் சொல்லவும்.

(188) பிருதிவி அப்பு இத்தத்துவங்கள் நடக்கும்போது கேள்வி கேட்டால் பிரயாணத்திலிருக்கப்பட்டவன் சந்தோஷமாயும், புஷ்டியாயும், பிரீதியாயும், கிரீடை இவைகளோடிருப்பானென்றும்; தேயு, வாயு, இவைகள் நடக்குங் காலங்களில் கேட்டால் பிரயாணத்திலிருக்கப்பட்டவன் முறையே நித்திரையிலும், ஜுவரத்திலுமிருப்பானென்று சொல்லவும்.

(189) ஆகாச தத்துவத்தில் கேள்வி கேட்டால் மரணமென்று சொல்லவும். இம்மாதிரி 12-கேள்வி தத்துவங்களையும் தெய்வ ஞானியானவன் பிரயத்தனத்தினாலேயறிவான்.

(190) பிருதிவி, அப்பு, தேயு, வாயு, இந்தத் தத்துவங்களுக்கு முறையே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குத் திசைகளில் பலனுண்டு.

(191) ஹே... சுந்தரி! பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், இந்த ஐம்பூதத்தினால் தேகமானது உண்டாயிருப்பதால் பஞ்ச பூதாத்மகமென்று சொல்லப்படும்.

(192) எலும்பு, மாமிசம், தோல், நாடி, உரோமம், இவைகளானது பிருதிவியின் கூறென்று வேதாந்த சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

(193) வீரியம், இரத்தம், கொழுப்பு, மூத்திரம் சளி, எச்சில் அப்புவின் கூறு.

(194) பசி, தாகம், நித்திரை, தேஜஸ், சோம்பல், இவைகள் அக்கினியின் செய்கை.

(195) ஓடுதல், அசைதல், ஒடுங்கல், பூரித்தல், பரவுதல், இவைகள் வாயுவின் செய்கை.

(196) கோபம், துவேஷம், லஜ்ஜை, பயம், மோகம், இவைகள் ஆகாசத்தின் செய்கை.

(197) பிருதிவி 50 வினாடி, அப்பு 40, அக்கினி 30, வாயு 20, ஆகாசம் 10, இவ்விதமாக மேற்கண்ட  தத்துவங்களும் இரண்டரை நாழிகைக்குள் நடக்கின்றன.

(198) பிருதிவி தத்துவத்தில் எப்பொழுதும் லாபமுண்டாகிறது. அப்பு தத்துவத்தில் தாத்கால லாபமுண்டாகிறது. வாயு தத்துவத்தில் சுவல்ப லாபமுண்டாகிறது. அக்னி தத்துவத்தில் லாபம் சித்தமாயிருந்தாலும் சூன்யமாகும்.

(199) பிருதிவிக்கி ஐந்து குணம், அப்புவிற்கு 4, அக்கினிக்கு 3, வாயுவுக்கு 2, ஆகாசத்திற்கு 1.

(200) சீறுகிறதும், சிதரினதும், நாளடைவில் ஜீர்ணமானதும், விழுந்ததும் இவ்விதமான பிருதிவியானது எவ்விதக் காரியங்களிலேயும் தன்னுடைய அவஸ்தையைப் போல் பலனைக் கொடுக்கிறது.

(201) அவிட்டம், ரோகிணி, கேட்டை, அனுஷம், திருவோணம், உத்திராடம்,அபிஜித், இந்த நக்ஷத்திரங்கள் பிருதிவி தத்துவம்.

(202) பூராடம், ஆயில்யம், மூலம், திருவாதிரை, ரேவதி, உத்திரட்டாதி, சதயம், இவை அப்பு தத்துவம்.

(203) பரணி, கிருத்திசை, பூசம், மகம், பூரம், பூரட்டாதி, சுவாதி இவை தேயுவின் தத்துவம்.

(204) விசாகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, புனர்பூசம், அசுவதி, மிருகசீரிடம், இவை வாயுவின் தத்துவம்.

(205) நாடி நடக்கின்ற பக்கத்தில் அதாவது பூர்வாங்கத்தில் நின்று கொண்டு ஒருவன் கேள்வி கேட்பானாகில் சுபாசுபக்காரியங்கள் சர்வமும் சித்தியாகும். சூன்னியாங்கத்திலிருந்து கேட்பானாகில் காரிய நாசமென்று சொல்லவும்.

(206) சுவாசமானது சுபதத்துவத்தில் உதயமாயிருந்தாலும், அந்தச் சுவாசம் வெளிப்படுங்காலங்களில் ஒருவன் கேள்வி கேட்பானாகில் காரியம் சித்தி பெறாது. இவ்விதமாகவே சந்திர சூரிய ஸ்வரமும் உட்செல்லுங்காலமாயிருந்தால் சர்வ காரியமும் சித்தியாகும்.

(207) ஸ்ரீ இராமனும் அர்ச்சுனனும் இந்தத் தத்துவத்தினாலேயே ஜெயமடைந்தார்கள். கௌரவர்கள் தத்துவ விபரீதத்தினாலேயே நாசமடைந்தார்கள்.

(208) ஜன்மாந்திர சுகிர்தத்தினாலும், அல்லது குருவினுடைய கிருபையினாலும், சுத்தமான ஹிருதயமுடைய ஜனங்களுக்கு தத்துவ ஞானம் பிராப்தமாகும்.

(209) "லம்" பிருதிவி தத்துவத்தின் பீஜம் சதுஷ்கோணம். சுவர்ண நிறம், சுகந்தம், இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவர்களுக்கு தேகத்தில் சுவர்ணச் சாயை. சுகந்தம் லகுத்துவம் இவைகள் உண்டாகின்றன.

(210) ''வம்" அப்புவின் பீஜம். அர்த்த சந்திராகாரம். இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவர்களுக்கு பசி தாகம் அற்று விடுகிறது. தண்ணீருள் மூழ்கியிருத்தல் சாத்தியமாகிறது.

(211) "ரம்" அக்கினியின் பீஜம். திரிகோணம், ரக்த வர்ணம், இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவனுக்கு அதிக ஆகாரமும், ஜலமும் சீக்கிரம் ஜீர்ணமாகிவிடுகிறது. வெய்யலினுடைய தாபத்தையும், நெருப்பினுடைய சுடுகையையும் சகிக்கும்படியான சக்தியுண்டாகிறது.

(212) "யம்" வாயு தத்துவம். சக்கிராகாரம், நீலவர்ணம். இந்த தத்துவத்தை தியானம் செய்கிறவர்களுக்கு ஆகாய கமனமும் பக்ஷியைப் போல பறக்கும் சக்தியுமுண்டாகிறது.

(213) "ஹம்" ஆகாச தத்துவம், நிராகாரம், பலவர்ணம், இந்த தத்துவத்தை தியானிக்கிறவர்களுக்கு திரிகால ஞானமும் அணிமாதி அஷ்டசித்தியுமுண்டாகிறது.

(214) ஸ்வர ஞானத்தைப்போல் தனம் வேறு கிடையாது. இதையடைந்து எந்தக் காரியத்தை உத்தேசித்து சென்றாலும் பலனடையாமல் வரமாட்டான்.

     - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
       சித்தர்களின் குரல் shiva shangar


Bb

No comments:

Post a Comment