Thursday, June 1, 2023

ஞான சர நூல் (பாகம் -2)

thank to Fb

ஞான சர நூல் (பாகம் -2)
-------------------------------------------
                         மகாதேவனாகிய சிவபெருமானே ஆதி யோகியாக வந்து அன்னை பார்வதி தேவிக்கு அளித்த இந்த சிவரகசியம் தான் சர வித்தை என்பது. நம் சித்தர்களின் குரல் அன்பர்களின் நலம் கருதி முழு ரகசியங்களையும் இரண்டு பாகங்களாக்கி உலக நன்மைக்காக பதிவிடுகிறேன். எங்கு நீங்கள் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷ ரகசியங்கள் இவை. சிவனருள் இருந்தால் மட்டுமே அறிய முடியும்....
பயன்படுத்தி கொள்ளுங்கள்......

(215) தேவி கேட்கிறாள் ஹே... தேவாதி தேவா! ஸ்வரத்தினாலே திரிகால ஞானம் எப்படியுண்டாகிறது.

(216) ஹே.... பார்வதி! பூதபவிஷ்ய வர்த்தமானம் இம் மூன்று காலங்கள் ஜெயம் முதலான சுபம், தோல்வி முதலான அசுபம், இதுகளினுடைய ஞானம் ஸ்வரத்தின் ஞானத்தினாலேயே யுண்டாகிறது. இதற்கு வேறு உபாயமில்லை.

(217) தத்துவத்தினாலேயே சுபா சுபகாரியம், ஜெயம், அபஜெயம், சுபீக்ஷம், துர்பிக்ஷம், இவைகள் உண்டாகின்றன. தத்துவம் காலத்திரயத்தையும் அனுசரித்திருக்கிறதென்று, ஞானிகன் சொல்லுகிறார்கள்.

(218) ஹே... தேவாதி தேவா! சம்சாரசாகரத்தில் மனிதனுக்கு சர்வ காரிய சித்தியையும் செய்யும்படியான சிநேகிதன் யார்? அதை எனக்குச் சொல்லவேண்டும்.

(219) ஹே.... தேவி! மனிதனுக்கு பிராணன், முக்கிய மித்திரனும் சகாவாயுமிருக்கின்றான். பிராணனைப்போல் பந்து வேறொருவருமில்லை.

(220) ஹே... சங்கா! வாயு பிராணணிடத்தில் எப்படியிருக்கிறது. தேகம் எப்படி பிராண ரூபமாயிருக்கிறது, தத்துவத்தினிடத்தில் சஞ்சாரம் செய்கின்ற பிராணனை எப்படி யோகியானவனறிகிறான். இதை எனக்குச் சொல்லவேண்டும்.

(221) சங்கரர்-சரீரம் என்பது ஒரு நகரம். இதில் வாயு, ரக்ஷகன். இவன் உட்செல்லும்போது 10 அங்குலமும், வெளிக்கிளம்பும்போது 12 அங்குலமுமாய்ச் செல்லுகிறான்.

(222) நடையில் 24 அங்குலம், ஒட்டத்தில் 42 அங்குலம்,  மைதுன காலத்தில் 65 அங்குலம், நித்திரையில் 100 அங்குலம். இவ்விதமாக பிராணனுடைய வேகம் உண்டாகிறது.

(223) பிராணனுடைய சுபாவமான வேகம் 12 அங்குலந்தான். ஆனால் போஜன காலத்திலும், பேசும்பொழுதும் 18-அங்குல வேகமுண்டாகிறது.

(224) பிராணனுடைய வேகம் 12 அங்குலமென்று சொல்லியிருக்கிறது.

(224) அதில் ஒரு அங்குலம் யோகாப்பியாசத்தான் குறைந்தால் அவனுக்கு நிஷ்காமியப் பிராப்தி யுண்டாகிறது. 2-இரண்டு அங்குலம் குறைத்தால் ஆனந்தமுண்டாகிறது. 3-மூன்று அங்குலம் குறைத்தால் கவித்துவ சக்தியுண்டாகிறது. 4-நான்கு அங்குலம் குறைத்தால் வாக்குப் பலிதமுண்டாகிறது. 5-ஐந்து அங்குலம் குறைத்தால் தூர திருஷ்டி ஏற்படுகிறது. 6-ஆறு அங்குலம் குறைத்தால் ஆகாய கமனம், 7-ஏழு அங்குலம் குறைத்தால் பிரசண்ட வேகமுண்டாகிறது.

(226) 8-எட்டு அங்குலம் குறைத்தால் சித்தி, 9-ஒன்பது அங்குலம் குறைத்தால் நவநிதிப் பிராப்தம்.

(227) 10-பத்து அங்குலம் குறைத்தால் தசமூர்த்தித்துவம் (அநேக ரூபம்). 11-பதினோறு அங்குலம் குறைத்தால் தன்னிழற்றுப் போகிறது. 12-பண்ணிரண்டு அங்குலம் குறைத்தால் அம்சகதி கங்காமிர்தா பிராசனம், இவ்விதமாக 12 அங்குலத்தையும் ஜெயித்தால் அந்த வாயுவாவது சுகசிகை பரியந்தம் பூர்ணமாய் வியாபிக்கிறது. பிறகு அவனுக்கு எப்பொழுதும் அமிர்த பானம் உண்டாகிக்கொண்டேயிருத்தலினால் ஆகாராதிகள் தேவையில்லை.

(228) எல்லாக் காரியத்திலும் பலத்தைக் கொடுக்கும்படியான இந்தப் பிராண விதியைச் சொன்னேன். பிராண வேகத்தினுடைய அப்பியாச் சாராம்சங்களை குருவைத் தவிர கோடி சாஸ்திரங்களினாலும் அறிய முடியாது. குருவாக்கியத்தினாலேயே அறியவேண்டும்.

(229) சூரிய உதயத்தில் சந்திரனும், அஸ்தமன காலத்தில் சூரியனுமிருந்தால் உத்தமம். பிராப்த யோகத்தினால் அவ்விதம் நடக்காவிட்டால் மத்தியானம் அல்லது மத்திய இரவில் அவ்விதமுண்டானால் அது சுபத்தை கொடுக்கக் கூடியதாயிருக்கிறது.

(230) தூர யுத்தத்தில் சந்திரனும், சமீப யுத்தத்தில் சூரியனும் ஜெயத்தைக் கொடுக்கிறார்கள். உதயமாயிருக்கப்பட்ட நாடியின் பக்கத்துக்காலை முதலில் வைத்து நடக்க சர்வ சித்தி.

(231) பிரயாணம், கல்வியாணம், நகரப்பிரவேசம் முதலான சுப காரியங்களுக்கு சந்திரநாடி எப்பொழுதும் சுபத்தைக் கொடுக்கக் கூடியதாயிருக்கிறது.

(232) அயனம், திதி, வாரம், இவைகட்குரிய ஸ்வரங்களும், தத்துவங்களும் சரியாய் நடக்கும்பொழுது ஒருவன் யுத்தத்திற்கு போனால் அவன் தன்னுடைய ஸ்வா ஸ்தம்பனத்தினால் சத்துருவை ஜெயிக்கிறான். அவனுக்கு வைகுண்ட லோகத்திலும் விக்கினம் கிடையாது.

(233) ஜீவாங்கத்தினிடத்தில் வஸ்திர பரிதானம் செய்துகொண்டு "ஜீவம் ரக்ஷ,ஜீவம் ரக்ஷ" யென்று யாரொருவன் ஜெபம் செய்கிறானோ அவன் யுத்தத்தில் உயிருடனிருந்து சர்வ பிருதிவியையும் ஜெயிக்கிறான்.

(234) பிருதிவி, அப்பு இந்த தத்துவத்தில் சாந்த கர்மத்தைச் செய்யவும். அக்கினி, வாயு, இந்த தத்துவத்தில் உக்கிர காரியங்களைச் செய்யவும். ஆகாச தத்துவத்தில் மேற்சொன்ன இரண்டு காரியங்கள் செய்ய புறப்படலாகாது.

(235) பூர்ணாங்கத்தினாலேயே ஆயுதங்களைத் தரிக்க வேண்டியது. அந்தப் பக்கத்து கைகளினாலேயே பிரயோகிக்கவும் வேண்டும். கீழே ஆயுதங்களை வைக்கும்பொழுதும் பூர்ணாங்க கையினலேயே வைக்கவேண்டும். இவ்விதம் செய்வானாகில் எப்பொழுதும் ஜெயமே யுண்டாகிறது.

(236) வாகனங்களில் ஏறும்போது பிராணவாயுவை ஆக்ரஷ்ணம் செய்து கொள்ளவேண்டியது. குதிரையின் இடது பாகத்தில் காலை வைத்து ஏறவேண்டியது. இவ்விதம் செய்தால் சர்வ காயமும் சித்தியாகிறது.

(237) சூன்யாங்கத்தில் சத்துருவினுடைய சைன்னியமும், பூர்ணாங்கத்தில் தன்னுடைய சைன்னியமுமிருக்கும்படி அமைத்துக்கொண்டு பூர்ண தத்துவத்தில் யார் யுத்தம் செய்கிறானா, அவன் தனியே சர்வ பிருதிவியையும் ஜெயிக்கிறான்.

(238) சரீரத்தில் எந்த நாடி நடக்கிறதோ அந்தப் பக்கம் தெய்வ வாசமிருக்கிறது. அந்தப்பக்கத்துக் காலை அதற்குரிய திசையில் முன் எடுத்து வைத்துப்போனால் சர்வ காரிய சித்தியுண்டாகும்.

239 முதலில் முத்திரையைச்செய்து பிறகு யுத்தம் செய்ய வேண்டியது. எவனொருவன் சர்ப்ப முத்திரையை செய்கிறானோ அவனுக்கு சந்தேகமற சித்தியுண்டாகிறது.

(240) சந்திரன் அல்லது சூரிய ஸ்வரம் நடக்கும்பொழுது யுத்தம் செய்யவேண்டுமென்கிற இச்சையுடன் வருகிற வீரனொருவன் சூன்ய பாகத்தில் நின்றால் தோல்வியும், பூர்ணாங்கத்தில் நின்றால் ஜெயமுமென்று ஸ்வர தத்துவத்தை யறிந்தவன் அறியவேண்டியது.

(241) எந்த திசையை நோக்கி வாயு நடக்கின்றதோ, அந்த திசையை நோக்கி நின்று, யுத்தம் செய்தால் இந்திரனே யுத்தத்திற்கு வந்தாலும் அவனை ஜெயிக்கிறான்.

(242) எந்த நாடியில் வாயு நடக்கிறதோ, அந்தப் பாகத்தின் பிராணனை காது வரையில் ஆகர்ஷ்ணம் செய்து யுத்தம் செய்தால் இந்திரனையும் ஜெயிக்கலாம்.

(243) எவனொருவன் சத்துருவினுடைய அடி விழாதபடி தன் பூர்ணாங்கத்தை காப்பாற்றிக்கொள்ளுகிறானோ, அவனைச் சத்துரு எவ்வளவு பலவானாயிருந்தாலும் வெல்ல முடியாது.

(244) கையினுடைய அங்குஷ்டம், தர்சனி இந்த விரல்களினாலும் காலின் அக்குஷ்டத்தினாலும் தொனிக்கவேண்டியது. இவ்விதம் செய்வதினால் லக்ஷக்கணக்கான ஜனங்களிடத்திலும் யுத்தம் செய்து ஜெயிக்கிறான்.

(245) சூரியன் அல்லது சந்திரன் நடக்கும்போது, இடையிலே வாயு நடந்து கொண்டிருந்தால் ஜெயத்தை இச்சித்த ஒருவன் திக் ரட்சனம் செய்யவேண்டியது.

(246) சுவாசமானது உள்ளே பிரவேசிக்கும்போது தூதன் தான் இச்சித்த வார்த்தையை சொல்வானாகில், அந்த காரியம் சித்தியடையும். சுவாசமானது வெளியே செல்லும்போது சொல்வானாகில் காரியம் ஒரு நாளும் முடியாது.

(247) லாபகரமான எந்த சுபகாரியமும் பூர்ணாங்கத்தில் ஒருவன் நின்று சுவாசம் உள்ளே பிரவேசிக்கும்போது கேட்டாலும் சொன்னாலும அப்படியே அந்தக்காரியம் சித்தியாகிறது. சுவாசம் வெளிப்படும்போது சொன்னாலும் கேட்டாலும் காரிய ஹானியுண்டாகிறது.

(248) புருஷர்களுக்கு சூரிய நாடியும் ஸ்திரீகளுக்குச் சந்திரனும், யுத்தகாலத்தில் கும்பகமும் சிலாக்யம். இவ்விதமாக மூன்று நாடிகளினுடைய மூன்று வேகத்தையும் அறியவேண்டியது.

(249) ஹகார ஸகாரத்தினுடைய பேதம் அறிந்தாலொழிய சுரக்கியானம் உண்டாகமாட்டாது. ஆகையால் ஹகார ஸகாரத்தி னுடைய சொரூபம் அறிய வேண்டியது அறிவானேயானால, ஜீவன் ஹம்ஸ ஸோகம் என்கிற பதத்தினால் மேலான எல்லாப் பதத்தையுமடைகிறது.

(250) சூன்யாங்கமாயிருப்பதை பூரணம் செய்து ஜீவாங்கத்தை காப்பாற்றவேண்டியது. இவ்விதம் செய்தால் ஜெயப்பிராப்த முண்டாகிறது. ஜீவாங்கத்தை காப்பாற்றாமல் சூன்யாங்கத்தை காப்பாற்றினால் அழிவு எற்படும்.

(251) வலது அல்லது இடது பக்கம் கேள்வி கேட்கிற ஒருவன் நின்று யுத்தத்தில் சென்றிருக்கிற ஒருவனைப்பற்றி கேட்டால் அவன் நின்ற பக்கம் உனக்கு பூரணமாயிருந்தால் கெடுதியுண்டாகாதென்றும், சூன்யமாயிருந்தால் கெடுதி யென்றும் சொல்லவும்.

(252) கேள்வி கேட்கிற காலத்தில் பிருதிவி தத்துவம் நடந்தால் வயிற்றில் அடி, அப்பு தத்துவமாயிருந்தால் காலிலடி, அக்கினி தத்துவமாயிருந்தால் தொடையிலடி, வாயு தத்துவமாயிருந்தால் கையிலடியென்று சொல்லவும்.

(253) ஆகரசதத்துவமாயிருந்தால் தலையிலடியென்றும் சொல்லவும். இவ்விதமான ஐந்து விதக் கெடுதியை ஸ்வரசாஸ்திரத்தில் சொல்லுகிறது.

(254) யுத்தகாலத்தில் யுத்தத்திற்கு போகிறவனுக்கு சந்திர ஸ்வமாயிருந்தால் இவனுக்கு ஜெயமும், சூரிய ஸ்வாமாயிருந்தால் எதிரிக்கு ஜெயமுமுண்டாகிறது.

(255) யுத்த ஜெய விஷயத்தில் சந்தேகமுண்டானால் நாடியினுடைய மத்திய பாகத்தை கவனிக்கவேண்டியது. பிராணன் சுழிமுனையில் நடந்து கொண்டிருந்தால் யுத்தகளத்தில் சத்துருவினால் சங்கடமுண்டாகிறதென்றறியவும்.

(256) எந்த நாடி நடக்கிறதோ, அந்த நாடிக்கு விரோதமான திசையை நோக்கி நின்று யுத்தம் செய்கிறவலுக்கு ஜெயமுண்டாகிறது நிச்சயம். உதாரணமாக சந்திரநாடி நடக்குமானால் சூரியதிசையாகிய கிழக்கும் வடக்கும், சூரியநாடி நடக்குமானால் சந்திரன் திசையாகிய தெற்கும் மேற்குமாகிய திசையை நோக்கி நின்று யுத்தம் செய்ய ஜெயமுண்டாகிறது.

(257) யுத்தகாலத்தில் தனக்கு சந்திர நாடி நடந்து கொண்டிருந்தால் ஜெயமுண்டாகிறது. சத்துரு வசியமாகிறான்.

(258) யுத்தகாலத்தில் சூரியஸ்வரம் நடந்தால் யுத்தம் செய்கிற னுக்கு (தெய்வம், இராக்ஷதாள், மனுஷியாள் இவர்கள் யுத்தத்தில்) ஜெய முண்டாகிறது.

(259) எவனொருவன் சந்திரநாடியில் யுத்தத்திற்குப் பிரயாணப்படுகிறானோ அவனை சத்துரு ஜெயிக்கிறான். சுழிமுனையில் பிரயாணம் செய்தால் யுத்தம் நடவாமல் எங்கேனும் சும்மாவிருக்கும்படி நேரிடும். சூரியநாடியில் புறப்பட்டால் நிச்சயமாய் ஜெயம் கிடைக்கும்.

(260) இரண்டு பேர்கள் வந்து யுத்த விஷயமாய் கேள்வி கேட்டால், எவனொருவன் பூர்ணாங்கத்திலிருந்து கேட்கிறானோ, அவன் ஜெயமடைவானென்றும், சூண்யாங்கத்தில் நின்று கேட்கிறவன் அபஜெயமடைவானென்றும் சொல்லவும்.

(261) பூர்ணாங்கத்தில் சத்துரு நின்றால் அவனைத் தனக்கு சூன்யாங்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது. சூன்யாங்கத்தில் எதிரி நின்றால் எதிரி நிச்சயமாய் மரணமடைகிறான்.

(262) கேள்வி கேட்பவன் சந்திரநாடியிலிருந்து கேட்டால், அவன் வாயிலிருந்து புறப்படுகிற கேள்வியின் அக்ஷரங்கள் அல்லது ஜெயவிஷயத்தைப் பற்றிய நாம அக்ஷரங்கள், ஒற்றையெழுத்துக்களா அல்லது இரட்டை எழுத்துக்களாவென்று எண்ணிப்பார்த்து, இரட்டையாயிருந்தால் ஜெயமும், ஒற்றையாயிருந்தால் அபஜெயமும்; அதே சூரியநாடியில் ஒற்றை எழுத்துக்கள் ஜெயமும், இரட்டை எழுத்துக்கள் அபஜெயமுமென்றறியவும்.

(263) கேள்வி கேட்பவன் சந்திரஸ்வரத்தின் பக்கமாய் நின்று கேட்டால் யுத்தம் ஆரம்பமென்றும், சூரியஸ்வரத்தின் பக்கமாய் நின்று கேட்டால் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறதென்றும் சொல்லவும்.

(264) பிருதிவி தத்துவத்தில் யுத்தம் ஆரம்பித்தால் யுத்தம் சமமாக இருக்கும். அப்பு தத்துவத்தில் ஜெயமுண்டாகிறது. தேயு தத்துவத்தில் அபஜெயம் வாயு ஆகாச தத்துவத்தில் மரணமுண்டாகிறது. 

(265) எக்காரணத்தினாலாவது அல்லது திகிலினாலாவது இன்ன ஸ்வரம் நடக்கிறதென்பது நிக்ஷயிக்கமுடியாத காலத்தில் புத்திமான்களாயிருக்கப்பட்டவர்கள் கீழ் கண்டவாறு செய்யவும்.

(266) சலனமில்லா மனதுடன் தேகத்தைக் கோணலில்லாமல் சமமாய் வைத்துக்கொண்டு கையிலிருந்து ஒரு புஸ்பத்தை எதிரே பூமியில் போடவும். அது எந்தப்பக்கமாய் விழுகிறதோ அது பூர்ணாங்கமென்றும் மற்ற பாகம் சூன்யாங்கமென்றுமறியவும்.

(267) யாதொரு காரியத்தைச் செய்யும்பொழுது நின்றுகொண்டாவது அல்லது உட்கார்ந்து கொண்டாவது மன உற்சாகமாய் யாரொருவன் பிராண வாயுவை உள்ளே இழுக்கிறானோ  அவன் அந்தக் காரியத்தை சித்தி செய்கிறான்.

(268) காலன், சஸ்திரம், சர்ப்பம், சத்துரு, வியாதி, திருடன், இவைகள் சூன்யாங்கத்திலிருந்தால் அவனுக்கு மேற்கண்டவைகள் யாதொரு தீங்கும் செய்யமுடியாது.

(269) ஜீவ ஸ்வரத்தினாலேயே வாயுவை நிறுத்தவேண்டும். திரும்பவும் அதினாலேயே விடவேண்டும். தூது, கிரீடை, ஜீவ சுரத்தினுடைய அங்கத்தினால் செய்தால் ஜெயப்பிராப்தியுண்டாகிறது.

(270) ஸ்வரக்கியானம் யாரோருவனுக்கு இருக்கிறதோ, அவனை ஒருவராலும் ஜெயிக்க முடியாது. அவனுக்கு விரோதமாய் கோடிக்கணக்கான விரோதங்கள் செய்யினும் நிஷ்பலமாகிறது. ஸ்வர ஞானி இகத்திலும் பாத்திலும் பலிஷ்டனாகிருன்.

(271) சில அரசர்களுக்கு பத்து, நூறு, பதினாயிரம் லட்சக்கணக்கான வீரர்களுடைய பலமும் இந்திரன் பிரம்மாதி தேவர்களுக்கு கோடிக்கணக்கான வீரர்களுடைய பலமுமிருப்பதெல்லாம் ஸ்வர பலமே யென்றறியவும்.

(272) ஹே... சங்கரா! மனிதர்களின் யுத்தத்தில் ஜெயம் அபஜெயத்தைப்பற்றி சொன்னீர்கள். ஆனால் யமனோடு யுத்தம் செய்யும் படியான சமயம் மனிதனுக்கு எற்பட்டால் அவன் ஜெயத்தை எப்படியடைவான்?

(273) ஸ்திர மனத்துடனிருந்து ஈஸ்வரனைத்தியானம் செய்ய வேண்டியது. பிராணனைக் கும்பகத்தில் நிறுத்தி ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யவேண்டியது, இவ்வாறு செய்கிற மனிதனுக்கு இஷ்டசித்தி, மகாலாபம், ஜெயம் இவையுண்டாகின்றன.

(274) பிரபஞ்சமானது நிராகாரத்திலிருந்து உண்டாயிருக்கிறது என்ற ஞானம் உண்டான பிறகு, பிரபஞ்சமே நிராகாரமாகிறது. ஆசையால் பிரபஞ்ச சிருஷ்டியினால் மனிதனுக்கும் யமனுக்கும் தாரதம்மியம் உண்டாயிருக்கிறது. ஆனால் நிராகார சிருஷ்டியினால் மனிதன், யமன், புழுக்கள் இவைகளெல்லாம் (சமமாக) ஆகிவிடுகின்றன.

வசீகரணப் பிரகரணம்:-
-----------------------------------------

(275) ஹே... சங்கமா! இதுவரையில் நர யுத்தம், இயம யுத்தம் இவைகளைச் சொன்னீர்கள். இப்பொழுது வசீகரணப் பிரகரணத்தைச் சொல்லவேண்டும்.

(276) தனது நாயகிக்கு சந்திரஸ்வரம் நடக்கும்பொழுது, தன்னுடைய சூரியஸ்வரத்தினாலே அந்தச் சந்திரனை ஆகர்ஷ்ணம் செய்து தன்னுடைய ஜீவஸ்வரத்தில் சேர்க்கவும். இவ்விதம் செய்தால் அந்த ஸ்திரீ, ஜென்மம் உள்ளவரையில் அவனுக்கு சுவாதீனமாகிறாளென்று தவத்தில் சிறந்த முனிவர்கள் சொல்லுகிறார்கள். பரஸ்திரீ விஷயத்தில் இவ்விதம் செய்தால் நாசமடைவான்.

(277) புருஷனானவன் தன்னுடைய ஜீவஸ்வரத்தினாலே ஸ்திரீயினுடைய ஜீவஸ்வரத்தை கிரஹணம் செய்து ஸ்திரீயினுடைய ஜீவஸ்வரத்தில் தன்னுடைய ஜீவஸ்வரத்தைக் கொடுக்கவும். இவ்விதமாக ஜீவஸ்வரத்தினுடைய சேர்க்கை செய்தால் அந்த ஸ்திரீக்கு அந்தப்புருஷன் ஜென்ம பரியந்தம் பிரியமுள்ளவனாகிறான்.

(278) இராக்காலங்களில் கடைசி ஜாமத்தில் ஸ்திரீயானவள் அயர்ந்து தூங்கும் பொழுது அவளுடைய சுழிமுனை நாடியை புருஷனானவன் உட்கொள்ள வேண்டியது. இவ்வாறு செய்தால் பிராணனுள்ள வரையில் புருஷனுக்கு  வசியமாகிறாள்.

(279) பிறகு சுழிமுனை ஸ்வரத்தின் கால அளவு சென்றதின் பிறகு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜெபித்துத் தன்னுடைய சந்திர ஸ்வரத்தை ஸ்திரீக்கு கொடுக்கவும். இவ்வாறு கொடுத்தால் தக்ஷணமே அவன் மோகத்தையடைந்து வசியமாகிறான்.

(280) சயனகாலத்தில் ஆலிங்கன சமயத்தில், அல்லது வேறு எந்த சமயத்திலாவது எவனொருவன் தன்னுடைய சூரியஸ்வரத்தினால் தன் நாயகியின் சந்திர ஸ்வரத்தை இழுத்து உட்கொள்ளுகிறானோ அவன் மன்மதனைப் போல் அவளுக்கு மோகனகாரகனாகிறான்.

(281)சிவத்தினால் சக்தியையும், சக்தியினால் சிவத்தையும் யாரொருவன் சேர்க்கிறானோ, அவன் அந்த ஷணத்தில் நூறு ஸ்திரீகளுக்கும் மோகத்தை உண்டாக்குகிறான். (சிவம்-சூரியன், சக்தி-சந்திரன்.)

(282) ஸ்திரீயினுடைய சூரிய ஸ்வரத்தில் புருஷனுடைய சந்திர ஸ்வரத்தை கொடுக்கவேண்டியதாயிருந்தால் (3,5,7,9,) தடவைகளாகக் கொடுக்கவும். அவளுடைய சந்திர ஸ்வரத்தில் புருஷனுடைய சூரிய ஸ்வரம் கொடுக்க வேண்டியிருந்தால் (2,4,6) தடவைகளாகக் கொடுக்கவேண்டியது. இவ்விதம் செய்தால் அந்த நாயகி வசியமாகிறாள்.

(283) சூரியனையோ, சந்திரனையோ, சர்ப்பகதியாக ஆகர்ஷணம் செய்து ஒரு தாமரை புஷ்பத்தை நாயகன், நாயகி இருவரும் உதடுகளில் ஒற்றவும். பிறகு அந்த புஷ்பத்தை முகத்தில் ஒற்றிக்கொண்டு உடனே ஸ்வரத்தை அந்தப் புஷ்பத்தில் சேர்க்கவும். இவ்விதமாக மேலே சொல்லியிருக்கிற கணக்குப்பிரகாரம் செய்யவும்.

(284) மேலே சொல்லியபடி நாயகியானவன் நித்திரை செய்கிற வரையில் செய்யவும். பிறகு அவள் விழித்துக்கொண்டபின் அவளுடைய நேத்திரம், கழுத்து இவைகளை சும்பனம் செய்யவும்.

(285) இவ்விதமாகப் புருஷன், பெண்களின் வ்வரத்தோடு கலந்திருந்தால் பெண்களை வசியப்படுத்துகிறான். அனால் இந்தப் பிரகரணத்தை ஸ்திரீலோலனாயிருக்கப்பட்டவனுக்கு சொல்லக்கூடாதென்று ஸ்ரீ சங்கரருடைய கட்டளை....

கர்ப்பப் பிரகரணம்:-
-----------------------------------

(286) ருதுஸ்நானமான ஐந்தாம் நாள் ஸ்திரீயானவன் பதியுடன் கூடும்போது அவளுக்குச் சந்திர ஸ்வரமும் புருஷனுக்கு சூரிய ஸ்வரமும் நடக்குமானால் அதே புத்ர உற்பத்தியாகி திவ்விய புத்திரன் உற்பத்தியாகிறான்.

(287) ருதுஸ்நானமான ஸ்திரீயானவள் தனக்கு பிருதிவி அல்லது அப்பு தத்துவம் நடக்கும்போது, பசும்பாலில் சங்கவல்லிப் பிராசனம் செய்து தனக்கு சம்போகத்தைக் கொடுக்கும்படி திரிவாரம் புருடனைப் பிரார்த்திக்கவும்.

(288) ருதுஸ்நானம் செய்த ஸ்திரீக்கு மேற்சொன்ன ஒளஷதத்தைக் கொடுத்து புருஷனானவன் சம்போகம் செய்தால், ரூப வானும் பராக்கிரம சாலியுமான புத்திரன் ஜனிக்கிறான்.

(289) சூரிய ஸ்வரத்தோடு சுழுமுனை கலந்து தோன்றும்போது ருது காலத்தில் ஸ்திரீயை அணைத்தால், அங்கஹீனம், குரூபியான குழந்தைகள் பிறக்கும்.

(290) ருதுவான நான்கு நாட்களுக்கு பிறகு விஷம நாளில் (ஒற்றைப்படை நாட்களில்) சூரிய ஸ்வரத்தில் பிருதுவி, அப்பு, அக்கினி இந்தத் தத்துவங்களில் புருஷனானவன் கர்ப்பதானம் கொடுத்தால், மலட்டு ஸ்திரீக்கும் குழந்தை பிறக்கும்.

(291) புருடனுக்கு சூரியனும் ஸ்திரீக்கு சந்திரனும் நடக்கும் போது, இருவரும் அணைந்தால் மலடிக்கும் புத்திர உற்பத்தியுண்டாகிறது.

(292) புருஷனானவன் அணையும்போது சூரியஸ்வரம் நடந்து காம இச்சை முடிந்த பிறகு சந்திரன் நடக்க ஆரம்பிக்குமானால், மகா யோகமென்றறியவும். தெய்வ ஹீனமுள்ளவனுக்கு இந்தப்பாக்கியம் கிடைக்காது.

(293) கேள்வி காலத்தில் சந்திர ஸ்வரமாயிருந்தால் பெண் கர்ப்பமென்றும், சூரியனாயிருந்தால் ஆண் கர்ப்பமென்றும், சுழிமுனையாவிருந்தால் கர்ப்ப நாசமென்றுமறியவும்.

(294) கேள்வி காலத்தின் பிருதியி தத்துவமாயிருந்தால் பெண்னென்றும், அப்பு தத்துவமாயிருந்தால் புத்திரனென்றும், வாயு தத்துவமாயிருந்தால் பெண்ணென்றும், தேயு தத்துவமாயிருந்தால் கர்ப்ப அழிவென்றும், ஆகாசமாயிருந்தால் அலியென்றும் சொல்லவும்.

(295) சக்திர ஸ்வரகாலத்தில் கர்ப்பத்தைபற்றி கேள்வி கேட்டால் பெண்ணென்றும், சூரிய ஸ்வரத்தில் ஆணென்றும்,சுழிமுனையில் அலியென்றும் சொல்லவும். கேள்வி கேட்கிறவன் பூர்ணாங்கத்திலிருந்து கேட்டால் குழந்தையுண்டாகுமென்று சொல்லவும்.

(296) சூன்யாங்கத்திலிருந்து கேட்டால் சூன்யமென்றறியவும். இரண்டு ஸ்வரமும் நடக்கும்போது கேட்டால் இரட்டையுண்டாகும். சங்கிரமத்தில் அதாவது சுழிமுனையிலாவது அல்லது ஸ்வரம் பேதிக்கும் சமயத்திலாவது கேட்டால் கர்ப்ப அழிவு உண்டாகுமென்று தத்துவப் பிரக்ஞையுள்ளவனறியவும்.

(297) வாயு தத்துவத்தில் கர்ப்பம் தரித்தால் அக்குழந்தை எக்காலத்தும் துக்கியாகும். அப்பு தத்துவத்தில் சுகமுடையவனாயும் பிரசித்திப்பெற்றவனுமாயிருப்பான். அக்கினி தத்துவத்தில் கர்ப்ப அழிவு உண்டாகும். அல்லது அற்ப ஆயுளென்று அறியவும். பிருதிவியில் யோகியாயும், தனிகனாயும் கம்பீரமுடையவனாயுமிருப்பான்.

(298) வருணதத்துவம் அதாவது அப்பு தத்துவத்தில் கர்ப்பம் தரித்தால், தனவானாயும், சுகியாயும், போக போக்கியமுடையவனாயுமிருப்பான். ஆகாசத்திலோ கர்ப்பநாசம்.

(299) பிருதிவி தத்துவத்தில் உத்தம புத்திரனுண்டாகிறான். அப்பு தத்துவத்தில் சுகுணமாகிய கன்னிகையுண்டாகிறாள். இதர தத்துவங்களில் கர்ப்ப அழிவு அல்லது பிறந்தவுடன் இறந்துவிடும்.

(300) சூரிய ஸ்வரம் நடக்கும் பொழுது சந்திர ஸ்வரம் நடக்கிறதையும் சந்திரஸ்வரம் நடக்கும்பொழுது சூரியஸ்வரம் நடக்கிறதையும் நல்ல பிரக்ஞையோடு சந்தேகமற குருமுகமாய் தெரிந்து கொள்ளவேண்டியது. காரணம் குருவைத்தவிர கோடி சாஸ்திரங்களினாலும், வேதாத்யாயனம் செய்ததினாலும் அறிவது துர்லபம்,

வருஷ பலன்:-
-------------------------

(301) சித்திரை மாதம் முதல் தேதி (சைத்ர சுத்தப் பிரதமை) தக்ஷணாயணம், உத்திராயணம் இந்த தினங்களில் நடக்கிற தத்துவ பேதத்தினால் வருச பலனையறியவும்,

(302) பிராத காலத்தில் சந்திர ஸ்வரம் நடந்துக்கொண்டிருந்தால் அதில் பிருதிவி, அப்பு, வாயு, இந்தத் தத்துவங்களும் நடந்தால் சர்வதானியங்களும், நன்றாய் விளைந்து சுபீட்சமாயிருக்கும்.

(303) தேயு, ஆகாசம் இந்த தத்துவங்களாயிருந்தால் துர்ப்பிஷம் உண்டாகும். இதே மாதிரியாக வருடம், மாதம், நாள் இவைகளின் பேரிலும் தத்துவ பலனையறியவும்

(304) சுழிமுனையானது குரூரமாயும் சர்வ காரியங்களுக்கு கெடுதலாயுமிருக்கிறது. இதானது மேற்சொல்லிய சைத்ர சுத்தப் பிரதமையில் நடந்துகொண்டிருந்தால் தேச பீடை, மஹா ரோகம், சிரமம், கஷ்டம், இத்தியாதி துக்கங்கள் தேசத்திலுண்டாகின்றன.

(305) மேஷ சங்கரமண சமயத்தில் சுரபேதத்தை கவனிக்கவும், அதிலுள்ள தத்துவ பேதங்களைக் கொண்டு வருஷ பலனைச் சொல்லவும்.

(306) பிருதிவி முதலிய தத்துவங்களினால் தினம், மாதம், வருடம் இவைகளின் பலனையறியவும். இதில் பிருதிவி, அப்பு தத்துவம் நடந்தால் சுபபலன். அக்கினி, வாயு, ஆகாசம் இவைகளில் குரூர பலன்.

(307) மேஷ சங்கரமண காலத்தில் முதலில் பிருதிவி தத்துவம் நடந்தால் நல்ல விளைவு, தேச விருத்தி, ஏராளமான மழை சௌகரியம்,ஏராளமான தானியங்கள் இவைகளுண்டாகின்றன.

(308) அப்பு தத்துவமாயிருந்தால் அதிக மழை, சுபீக்ஷம், ஆரோக்கியம், சௌகரியம், ஏராளமான தானிய உற்பத்தி யென்றறியவும்.

(309) அக்னி தத்துவமாயிருந்தால் துர்ப்பிஷம்,தேச பீடை, சந்ததி நாசம், தானிய நாசம், அற்ப மழை, இந்த பலன்கனென்றறியவும்.

(310) வாயு தத்துவமாயிருந்தால், அற்ப மழை, அதிக மழையினால் பயம், முதலிய அறுவடை விக்னம் பயிருக்குண்டாகும்.

(311) ஆகாச தத்துவமாயிருந்தால், தானிய ஹானி, சுக ஹானி ஏற்படும்.

(312) பூரணமாயும், சுவாசம் உள்ளே பிரவேசிக்கிற சமயமுமாயிருந்தால் மேலே சொல்லப்பட்ட தத்துவங்களினால் தானிய சித்தியுண்டாகிறது. ஆனால் தத்துவோதய வேளையில், சூரியன் அல்லது சந்திர ஸ்வரம் விபரீதமானால் அதாவது சந்திரன் நடக்க வேண்டிய காலத்தில் சூரியனும், சூரியன் நடக்கவேண்டிய காலத்தில் சந்திரனும் நடந்தால் மாத்திரம் தானிய சங்கிரகம் செய்தால் சுகம்.

(313) விஷம நாடி (தக்ஷிண நாடியில்) முதலில் அக்கினி தத்துவமாயிருந்து பிறகு ஆகாச தத்துவம் உதயமானால் சர்வ வஸ்துக்களையும் சேர்க்கவும். காரணம் யாதெனில் இரண்டு மாதத்திற்குள் சகல வஸ்துக்களின் விருத்தியுண்டாகும்.

(314) இராக்கால முடிவில் சந்திர ஸ்வரம் நடந்து பிராதக் காலத்தில் சூரியன் கடக்குமானால் அந்த நாடியிலேயே ஆகாசம், வாயு, அக்கினி , உதயமானால் பூமியில் அநேக அனர்த்தங்களுண்டாகி ஜனங்களுக்கு யாதனை யுண்டாகிறது.

ரோகப் பிரகரணம்:-
----------------------------------

(315) பிருதிவி தத்துவத்தில் கேள்வி கேட்டால் சரீர ரோகமென்றும், அப்பு தத்துவத்தில் ஜல சம்மந்தமான வியாதியென்றும், தேயு தத்துவமாயிருந்தால், கிராமாத்திரங்களிலுள்ள துஷ்ட தெய்வங்கள், பிதுர்க்கள் தோஷமென்றும் கூறவும்.

(316) கேள்வி கேட்கிறவன் முதலில் சூன்யாங்கத்திலிருந்து, பிறகு பூர்ணாங்கத்திற்கு வந்தால் வியாதியஸ்தன் மூர்ச்சையடைந்திருந்தாலும் உயிருக்கு அபாயமில்லையென்று சொல்லவும்.

(317) பூரணாங்கத்திலிருந்து கேள்வி கேட்டால் அந்த மனிதன் அநேக ரோகங்களிலிருந்து துன்பப்பட்டாலும் இறக்கமாட்டானென்று சொல்லவும்.

(318) சூரியனில் வாயு நடக்கும்போது தூதுவன் வந்து குரூரமான அக்ஷரங்களை உச்சரித்து கேள்வி கேட்பானாகில் ரோகியானவன் பிழைப்பான், சந்திரன் நடக்கும்போது குரூர அக்ஷரங்களை உச்சரித்து கேள்வி கேட்டானும் அதே பலன் உ உண்டாகிறது.

(319) பூரணாங்கத்தில் நின்று உயிருள்ன வஸ்துக்களை கையிற் பிடித்துக்கொண்டாவது, அல்லது அதைப் பார்த்துக் கொண்டாவது, உயிருடனிருப்பவனைப்பற்றி கேள்வி கேட்டால் அது சுபம்.

(320) இடை அல்லது பிங்கலையில் வாயு நடக்கும்போது, அல்லது பிரவேசம் செய்யும்பொழுது, தூதன் பூரணாங்கத்தில் நின்று கேள்வி கேட்டால் அவனுக்கு இஷ்ட சித்தியுண்டாகிறது. இதில் சந்தேகமேயில்லை.

(321) கேள்வி கேட்கும்பொழுது, தாழ்ந்த இடத்திலிருந்து கேட்பானாகில், அவன் உயிருடனிருப்பான். உயர்ந்த இடத்திலிருந்து கேட்பானாகில் யமலோகத்திற்கு செல்வானென்று சொல்லவும்.

(322) கேள்வி கேட்பவன் விபரீத அக்ஷரத்தினால் கேள்வி கேட்டு சூன்யாங்கத்தில் நின்றாலும், அதே நேரத்தில் சுழிமுனை உதயமானாலும் விபரீத பலனென்று சொல்லவும். 

(323) சந்திர ஸ்வரம் நடக்கும்போது, சூன்யாங்கத்தில் நின்று வியாதியஸ்தனைப்பற்றி கேள்வி கேட்டால், அவன் நூறு வைத்தியர்களிடம் மருந்து சாப்பிட்டாலும் கடைசியில் மரணமடைவான்.

(324) சூரிய ஸ்வரம் நடக்கும்போது சந்திரனிலிருந்து அதாவது சூன்யாங்கத்திலிருந்து கேள்வி கேட்டால், சாக்ஷாத் சங்கரனே அவனைக் காப்பாற்ற கங்கணம் கட்டிக்கொண்டிருந்தாலும் அவன் பிழைக்கமாட்டான்.

(325) ஒரு பூதம் மிதமிஞ்சினால் ரோகம். அதிக உபத்திரவப்படுத்துகிறது. இரண்டு பூதம் மிதமிஞ்சினால் பந்து அல்லது இஷ்ட மித்திராளுடைய நாசம் உண்டாகிறது. ரோகஸ்தன் மரணத்தையடைகிறான்.

(326) மாசம், பக்ஷம், வருடம், இவைகளின் ஆரம்பத்தில் ஸ்வரத்தினுடைய சஞ்சாரத்தின்மேல் ஸ்வர ஞானியானவன் க்ஷய காலத்தையறியவும்.

(327) பஞ்ச பூதமயமாகிய தீபமானது சிவசொரூபத்தோடு கலந்திருக்கிறது. சூரிய ரூபமாகிய வாயுவினால் பாதுகாக்கவேண்டியது. இவ்விதம் செய்தால் ஜீவன் ஸ்திரமாயிருக்கிறது.

(328) பகலில் சந்திர ஸ்வரத்தையும், சூரியன் அஸ்தமித்த உடன் அதாவது இராக்காலங்களில் சூரிய ஸ்வரத்தையும், நடக்கும் படி ஒருவன் செய்வானாகில் அநேக நாள் உயிர் பெற்றிருப்பான்.

(329) பிரம்மாண்டத்திலுள்ள ஆகாசத்திலிருந்து அமிர்த தாரையுண்டாகிறது. அப்போது சரீர ரூபமாகிய தாமரை மலர்ந்து பிரகாசிக்கிறது. இதனால் கர்ம யோகத்தை அப்பியசிக்கிறவன் சந்திரனை ஆஸ்ஸிரயித்தால், அவன் மரணமற்றிருக்கிறான்.

(330) பகலில் சூரிய ஸ்வரத்தையும் இரவில் சந்திர ஸ்வரத்தையும் நீக்க வேண்டியது. இவ்விதம் அப்பியாசம் செய்கிறவன் யோகியாகிறான், இதில் சந்தேகமேயில்லை.

(331) ஒருவனுக்கு இரவும் பகலும் ஒரே ஸ்வரம் கடந்துகொண்டி ருந்தால், அவன் மூன்று வருஷங்களின் மரணமடைகிறன்.

332 இரண்டு இராப்பகல் ஒருவனுக்குச் சூரியகலை நடந்தால் அவன் இரண்டு வருடங்கள் உயிர் பெற்றிருப்பானென்று ஸ்வர தத்துவத்தையறிந்த ஞானிகள் சொல்லுகிறார்கள்.

333 ஒருவனுக்கு இராப்பகல் மூன்று நாள் ஒரே ஸ்வரம் நடக்குமானால் அவன் ஒரு வருஷம் ஜீவித்திருப்பான்.

(334) ஒருவலுக்கு சந்திர ஸ்வரம் இரவிலும், சூரிய ஸ்வரம் பகவிலும் இடைவிடாது கடக்குமானால், அவனுக்கு ஆறு மாதத்தில் மரணமென்று சொல்லவும்,

(335) திறந்த வெளியில் ஓர் பாத்திரத்தில் ஜலத்தை வைத்து, அதில் சூரியனுடைய பிரதி பிம்பத்தைப் பார்க்கும்போது தெற்கே குறைந்திருந்தால் ஆறு மாதத்தில் மரணம், மேற்கே மூன்று மாதம், வடக்கே இரண்டு மாதம், கிழக்கே ஒரு மாதத்தில் மரணம், மத்தியில் துவாரங்கள் கண்டால் பத்து நாளில் மரணம், அந்தப் பிரதி பிம்பம் முழுவதும் புகையடைந்ததுபோல் தோன்றினால் அதே தினத்தில் மரணமென்று அறியவும். இவ்வாது சர்வக்ஞ முனிவர் ஆயுட் பிரமாணத்தைக் கூறுகிறார்.

(336) தூதுவன் அல்லது வியாதியஸ்தன் சிவப்பு, கறுப்பு, காவி இந்நிற வஸ்திரங்களை உடுத்திக்கொண்டும், எண்ணெய்த்தலையோடும், பல்லில்லாதவனும், தலை முண்டிதமுள்ளவனும், அசுக்தமுள்ளவனும், இவ்வகையுள்ளவன் பூரணாங்கத்தில் வந்து கேள்வி கேட்டாலும் வியர்த்தம். விபூதி, அக்கினி, கப்பரை, கயிறு, உலக்கை, இவைகளுடன் சூரிய அஸ்தமன காலத்தில் சூன்யாங்கத்தில் தூதாக வருவானானால் வியாதியாளன் மரணமடைகிறானென்று சொல்லவும்.

(337) திடீரென்று சித்தம் விகாரத்தையடைந்தாலும், தேகத்தில் மாறுதல் உண்டானாலும், நிஷ்காரணமாய் இந்திரியங்களில் துர்ச்சின்னமுண்டானாறும், இவை சன்னி பாதத்தின் இவைகள் லக்ஷணங்கலென்றறியவும்.

(338) சரீரம் திடீரென்று சில்லிட்டுப்போய் விலக்ஷண விகாரத்தையடைந்தால் அரிஷ்டமென்றறியவும். இவ்விதமாய் அரிஷ்டங்களை சுருக்கமாகச் சொன்னேன். இனி விஸ்தாரமாகச் சொல்லுகிறேன்.

(339) எவனொருவன் துஷ்ட சப்தத்தில் சந்தோஷமும், நல்ல சப்தத்தில் பச்சாதாபமுமடைகிறானோ, அவன் மாணத்தருவாயிலிருக்கிறானென்றறியவும்.

(840) நாசியிலிருந்து வருகிற சுவாசம் சில்லிட்டும் வாயிலிருந்து வருகிற காற்று நெருப்பைப்போல் சுடுகையாயுமிருந்தால், அவனுக்கு மகா பண்டிதன் சிகிச்சை செய்தாலும் மரணமடைகிறான்.

(341) எவனொருவனுக்கு நாக்கு, ஆகாசம், துருவம், தேவ மார்க்கம், மாதுருகை, அருந்ததி, சந்திரன், சுக்கிரன், அசஸ்தி நக்ஷத்திரம் இவைகளில் யாதொன்று தன் எதிரிலிருந்தும் வியத்தமாய் தெரியவில்லையோ, அவன் அவசியமாய் ஒரு வருஷத்தில் மரணமடைகிறான்.

(342) எவனொருவனுக்கு சூரியன், சந்திரன், அக்னி, இவைகள் கிரணங்களின்றி காணப்படுகிறதோ அவனுக்கு பதினொரு மாதம் ஆயுனென் சொல்லவும். 

(343) சொர்ப்பனத்தில் அல்லது ஜாக்கிரதையில் மல மூத்திர விசர்ஜனம் செய்யும்போது அந்த இடத்தில் பொன் அல்லது வெள்ளி, கண்ணுக்குப் புலப்பட்டால் அவன் பத்து மாதத்திற்குமேல் ஜீவித்திருக்கமாட்டான்.

(344) தீபம் சில சமயங்களில் பொன்னைப்போல மஞ்சளாயும், சில சமயங்களில் கருமையாகத் தெரிந்தாலும், சர்வ பூதங்களும் விபரீதமாய் காணப்பட்டாலும், அவன் ஒன்பது மாதத்திற்குமேல் பிழைத்திருக்கமாட்டான்.

(345) ஸ்தூல தேகியாயுள்ள ஒருவன் தீடீரென்று மெலிந்தாலும், மெலிவாயிருப்பவன் திடீரென்று ஸ்தூலித்தாலும், குரூரமும் கருப்பாயுமிருக்கப்பட்டவன் திடீரென்று பொன்னிறமானாலும், சூரனாயிருந்து பயங்காளியானாலும், தர்மிஷ்டனாயிருந்து அதர்மிஷ்டனானாலும், சாந்தமாயிருந்து சஞ்சலமடைந்தாலும், அவன் எட்டு மாதத்திற்கு மேலிருக்க மாட்டான்.

(346) ஒருவனுக்கு உள்ளங்கையிலும், நாக்கின் நுனியிலும் பீடை அல்லது நோயுண்டானாலும், இரத்தம் கருப்பாயும் குத்தினால் இரத்தம் சொட்டாமலிருந்தாலும் அவனுக்கு எழு மாதமும்,

(347) கைகளில் நடு மூன்று விரல்கள் மடக்க முடியாமலும், கழுத்து, ரோகங்களொன்று மில்லாமலே மெலிந்து வந்தாலும், பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி மறதி காரணமாய் கேட்ட சங்கதிகளையே திரும்பக் கேட்டாலும், பிரக் ஞபகங்கமுண்டானாலும் ஆறு மாதத்திற்கு மேலிருக்க மாட்டான்.

(348) நெஞ்சு குளிர்ந்து சுருங்கிப்போனாலும் பிரக்ஞாபகங்கமுண்டானாலும், ஐந்து மாதங்களில் இறப்பான்.

(349) சூரியப் பிரகாசம் (தேஜஸ்) பார்வையில்லாமலிருந்தாலும், நேத்திரத்தில் பீடையுண்டானாலும், நான்கு மாதத்தில் மரணம் நிஷயமாயுண்டாகிறது.

(350) பல்லிலும், விருஷ்ணத்திலும் ஸ்மரணையில்லாமலிருந்தால் மூன்று மாதத்திற்குமேல் மரணத்தையடைகிறான்.

(351) மரண காலம் தூரமென்றும் சமீபமென்றும் எந்த உபாயத்தினால் அறிய முடியுமோ, அதை சிவாகமத்தில் சொல்லிய பிரகாரம் சுருக்கமாய் சொல்லுகிறேன்.

(352) நிர்மானுஷ்யமான ஆரண்ணியத்தில் ஏகாந்தமாய்ச் சென்று சூரியனைப் பிருஷ்ட பாகத்தில் வைத்துத் தன்னுடைய நிழலின் கண்டத்தில் நிர்ச்சலமாய்ப் பார்க்கவும்.

(353) பிறகு ஆகாயத்தைப் பார்க்கவும். பார்த்து "ஓம் ஹ்ரீம் பரப் பிரம்மணே நம" என்கிற மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் ஸ்ரீ சங்கரனுடைய தரிசனமுண்டாகும்.

(354) ஜெய முடிவில் சுத்த ஸ்படிகத்தைப்போல் வெண்ணிற முடையவரும், நானா ரூபத்தைத் தாரணை செய்யும்படியான ஸ்ரீசங்கரர் கட்புலனுக்குத் தோன்றுவார். இவ்விதமாக ஆறு மாதம் அப்பியாசம் செய்தால் அவன் சர்வ பூசரப் பிராணிகளுடைய அரசனாகிறான். இரண்டு வருடம் அப்பியசித்தால் சிருஷ்டி கர்த்தாவாயும், சம்ஹார கர்த்தாவாயுமாகிருன்.

(355) இவ்விதமாக எப்பொழுதும் அப்பியாசம் செய்து கொண்டிருந்தால் திரிகால ஞானமுண்டாகி, பரம ஆனந்தத்தில் சதா காலமுமிருக்கிறான். அவனுக்கு யாதொருகாரியமும் துர்லபமல்ல.

(356) மேற்சொல்லிய ரூபமானது நிர்மலமாகிய ஆகாசத்தில் கிருஷ்ண வர்ணமாய் எவனுக்கு புலப்படுகிறதோ, அப்பேர்ப்பட்ட யோகியானவன் சந்தேகமின்றி ஆறுமாதத்தில் மரணமடைகிறான்.

(357) மஞ்சள் நிறமாய் புலப்பட்டால் வியாதி, சிவப்பு நிறமாய் காணப்பட்டால் பயம், நீல நிறமானால் ஹானி யுண்டாகும். பலவர்ணமான சித்திர ரூபம் தோன்றினால் சித்திப் பிராப்தமாகும்.

(358) சாயா புருஷனுடைய பாதம், கால், வயிறு, இவைகள் கிரமமாய் கட்புலனுக்குத் தெரியாமலிருந்து பிறகு புயங்கள் மறையுமானால் யோகி மரணமடைகிறான்.

(359) இடது கை மறையுமானால் பாரியை நாசம், வலதுகை மறைந்தால், பந்து நாசமாகி அவனுக்கும் மரணமென்றறியவும்.

(360) சாயையானது தலையில்லாமலிருந்தால், ஒரு மாதத்திலும் துடையில்லாமலிருந்தாலும், தோளில்லாமலிருந்தாலும் எட்டு தினத்திலும், சாயையே முழுவதும் மறையுமானால் அந்த க்ஷணமே மரணமடைகிறான்.

(361) பிராதக் காலத்தின் சூரியன் பின்னாலிருக்கும்போது, சாயா புருஷனுடைய விரலும் உதடும் தெரியுமானால் ஒரே நிமிடத்தில் மரணமடைகிறான். சாயா புருஷனுக்கும் இவனுக்கும்

தூரமின்றி சமீபமாயிருந்தால் அரை நிமிடத்தில் மரணமடைகிறான். சாயா புருஷனுடைய காது, தோள், கை, முகம், விலா, ஹிருதயம் இவைகள் ஒரே தடனையில் திடீரென்று தெரியாமலிருந்தால் அரை கணத்தில் மரணமடைகிறான். சாயா புருஷனுடைய தலையில்லாமல் காணப்பட்டு, திக்பிரமை கொள்வானாகில் அவன் ஆறுமாதம் வரையில் பிழைத்திருப்பான்.

(362) விடாமல் பதினாறு நாள் வரையில் சூரிய ஸ்வரமே நடந்தால், ஒருவன் ஒரு மாதத்திற்குள் மரணமடைவான்.

(363) ஒரு மாதம் வரையில், ஒருவனுக்கு சந்திர ஸ்வர உதயமேயில்லாமல், சூரிய ஸ்வரமே நடந்தால் பதினைந்து நாளில் மரணமேற்படுமென்று கால ஞானிகள் சொல்லுகிறார்கள்.

(364) மலம், மூத்திரம், அபான வாயு, இவை மூன்றும் ஒரே காலத்தில் உண்டானால் பிராணனானது சஞ்சலத்தையடைந்திருக்கிறதென்று தெரிந்து கொள்ளவும். அப்பேர்ப்பட்ட மனிதன் பத்து நாட்களில் மாணமடைகிறான்.

(365) சதா காலமும் சந்திரனே நடந்து கொண்டிருந்து சூரிய ஸ்வரமே சற்றேனும் நடவாமலிருந்தால், அவன் ஒரு மாதத்திற்குள் மரணமடைகிறானென்று காலஞானிகள் சொல்லுகிறார்கள்.

(366) எவனொருவனுக்கு ஆயுள் ஷணமாயிருக்கிறதோ, அவன் அருந்ததி, துருவம், விஷ்ணுபதம், மாதுருமண்டலம் இவைகளைப்பார்க்கமாட்டான்.

(367) அருந்ததியென்றால் நாக்கு, துருவமென்றால் நாசி நுனி. விஷ்ணுபதமென்றால் புருவம். மாதுரு மண்டலமென்றால் தாரகம் (தாரகமென்பது கண்ணுக்குள்ளிருக்கும் பாவை)

(368) புருவம் தெரியாமலிருந்த நாள் முதற்கொண்டு ஒன்பது நாளில் மரணமடைகிறான். காதில் சப்தம் கேட்காமலிருந்த நாள் முதற்கொண்டு எழுநாளில் மரணமடைகிறான். கண்ணிலுள்ள தாரகம் (பாவை) தெரியாமல் போனால் ஐந்து நாளில் மாணமடைகிறான். நாசி நுனித்தெரியாமல் போனால் மூன்று நாளில் மாணமடைகிறாள். நாக்குந் தெரியாவிட்டால் ஒரே நாளில் மரணமடைகிறான்.

(369) கண்களில் கடைக்கண்ணில் விரல்களினால் அமுக்கிப்பார்க்க பிந்து தெரியாமல் போனால் பத்து நாட்களில் மரணமடைகிறான்.

(370) தீர்த்தஸ்நானம், தானம், ஜெபம், தியானம், யோகம் போன்ற இத்தியாதி புண்ணிய கர்மங்களினால் யமனை ஜெயிக்கலாம்.

(371) அநேக துராச்சாரங்களினாலேயும், தாதுக்களிலிருக்கிற மலங்களினாலேயும் இந்த சரீரம் நாசமாகிறது. வாயுவானது சரீரத்தில் எப்பொழுதும் இருக்கிறதினால் பலம், தேஜஸ் இவைகளை விருத்தியாக்குகிறது.

(372) தேகமானது தர்மார்த்த காம மோக்ஷங்களுக்குக் காரணமாயிருப்பதால் சரீரத்தை சவரக்ஷணை செய்ய வேண்டியது. இதற்கு முந்திய சுலோகங்களில் சொல்லப்பட்ட தோஷங்கள் யோகாப்பியாசத்தினால் நாசமடைகிறபடியால், யோகத்தை அவசியம் செய்ய வேண்டியது. செய்தால் மேற்கண்டவைகள் சாத்தியமாகிறது. மேற்கண்ட தோஷங்கள் அசாத்தியமாயிருப்பதால் பிராணனின் நாசத்தைச் செய்கிறது. இதற்கு யாதொரு பரிகாரமும் கிடையாது.

(873) எவனுடைய ஹிருதயத்தில் அஞ்ஞானக் கூட்டத்தை நாசம் செய்யும்படியான, அநாதியானதும் ஒப்பு உவமையில்லாததும் அத்தியந்த ரகசியமானதுமாகிய இந்தச் சிவஸ்வரோதய ஞானம் நிரந்தரமாயிருக்கிறதோ, அவனுடைய சரீர காந்தியானது பூரண சந்திரனைப்போல் உல்லாசமாய் நிறைந்திருக்கிறது. சொர்ப்பனத்திலும் கூட காலனால் அவனுக்குப் பயமுண்டாகமாட்டாது என்பது திண்ணம்.

(374) இடைகலையாகிய வாம நாடியானது கங்கையென்றும், பிங்கலையாகிய நாடி யமுனையென்றும், சுழி முனை சரஸ்வதியென்றும் அறியவும். இந்த நாடித்திரயங்களுடைய சங்கமமானது பிரயாகைக்குச் சமமாயிருக்கிறது.

(375) ஆதியில் தாத்காலம் சுவாசத்தை உத்பன்னம் செய்யும்படியான சாதனம் சொல்லியிருக்கிறது. அதாவது யோகியானவன் பத்மாசனத்தைப் போட்டுக்கொண்டு ஒட்டியாண பந்தனம் சாதிக்கவும்.

(376) பிறகு தேக சுத்தியுண்டாக வேண்டியதற்காக யோகியானவன் பூரகம், கும்பகம், ரேசகம் என்று சொல்லப்பட்ட பிரணாயாமத்தைச் செய்யவேண்டியது.

(377) பூரகம் (வெளியே இருக்கப்பட்ட சுவாசத்தை உள்ளே இழுத்தல்) செய்வதினால் தேகத்தினுடைய தாதுக்களை சமப்படுத்துகிறது. கும்பகம் (வெளியேயும் உள்ளேயும் வாயுவை சலனப்படாமல் கட்டுப்படுத்தல்) செய்வதினால் ஜீவனை எப்பொழுதும் ரஷிக்கிறது.

(378) ரேசகம் (கும்பித்திருந்த வாயுவை வெளியில் விடுதல்) செய்வதால் பாவம் நாசமடைகிறது. இவ்விதமாய் முக் குணங்களையுடைய பிரணாயாமம் செய்தால் யோகத்தில் ஸ்திரம் ஏற்படுகிறது. பிறகு யுத்தகளத்தில் நின்ற வீரனைப் போலிருந்து லய பந்தம் செய்யவும்.

(379) வாயு ஸ்தம்பனம் அதாவது கும்பகம் சகஜமாய் ஏற்படுகிற அளவு சக்திக்கேற்ப செய்யவும். ரேசகம் சந்திர நாடியில் செய்யவும். பூரகம் சூரிய நாடியில் செய்யவும்.

(380) சந்திர ஸ்வரம் சூரியனோடு லயப்படுகிறதும், சூரிய ஸ்வரம் சந்திரனோடு லயப்படுகிறதுமான அப்பியாசத்தை செய்கிற யோகியானவன் சூரிய சந்திரனுள்ள வரையில் ஜீவித்திருப்பான்.

(381) எந்த ஸ்வரம் நடக்கின்றதோ அதை உள்ளேயிழுத்து வாயின் வழியாய் வெளியே செல்லவொட்டாமல் பந்தனம் செய்து வருகிற யோகியானவன் யெளவன பருவத்தையடைகிறாள்.

(382) வாய், நாசி, கேந்திரம், காது இவைகளை விரலினால் அமுக்கிக்கொண்டு தத்துவ உதயத்தையறியவும். இந்த முத்திரைக்கு ஷண்முகி கரணம் என்று பெயர்.

(383) ஷண்முகி முத்திரையின் மார்க்கத்தை யறிந்த யோகியானவன் அதன் வழியாக ரூபம், கதி, ருசி, மண்டலம் இந்த லக்ஷணங்களை அடைகிறான்.

(384) நிஷ்பிரகமாயும், சுசியாயும் யாதொரு சிந்தனையுமில்லாமல் மேற்கண்ட முத்திரையை அனுஷ்டிக்க வேண்டியது. இன்விதம் அனுஷ்டிக்கிற யோகியானவன் யமனையும் ஜெயிக்கிறான்.

(385) சர்வ ஜெகத்தையுமறியும் படியான சக்தி கேத்திரத்திலிருந்து வெளிப்படுகிறது.

(386) அந்த சக்தியினிடத்தில் எவனுடைய மனதானது ஒரு பிரகரம் ஸ்திரமாய் நிற்கிறதோ அவனுடைய ஆயுள் நாளொன்றுக்கு மூன்று கடிகைப்பிரமாணம் வளர்கிறதென் ஸ்ரீ சங்கர தந்திரத்தில் சித்தர்களுடைய குணத்தை வர்ணிக்கும்போது ஸ்ரீ சங்கரர் சொல்லியிருக்கிறார்.

(387) யோகியானவன் பத்மாசனத்திருந்துகொண்டு குய்யத்திலிருக்கப்பட்ட அபானவாயுவை பிராண சக்தியினுடைய உதவியினால் மேலிழுத்து ஒரு ரூபமாக்கி பிறகு சுழிமுனை

வழியாக அந்த வாயுவை பிரம்மரந்திரத்தினிடத்தின் கொண்டு போய் ஆகாசமார்க்கத்தில் வைத்து சிவசரணத்தில் சேர்க்கவும். எந்த யோகியானவன் இந்த ஸ்திதியிலிருந்து பிரணோத்கிரமணம் செய்கிறானோ அவன் தன்யனாகிறான்.

(388) யாரொருவன் இந்த ஸ்வர சாஸ்திரத்தை அப்பியசித்தாலும், பாராயணம் செய்தாலும் சர்வதுக்கத்திளிலுமிருந்து முத்தனாகி இச்சித்த பலனையடைகிறான்.

(389) ஸ்வரக்கியானம் அறிந்த ஞானிகளிடத்தில் இலக்குமியானவள் ஸ்திரமாய் வாசம் செய்வாள். அவன் அதிக சுகத்தை யடைவான்.

(390) சர்வ வேதங்களிலும் பிரணவமானது எப்படி பூஜ்யமானதோ, பிராமணர்களுக்கு சூரியன் எப்படி பூஜ்யனோ, அவ்வாறு ஸ்வரக்யானியானவன் இப்பூவுலகில் பூஜ்யனாகிறான்.

(391) யாரொருவனுக்கு மூன்று நாடிகளிலும், தத்துவங்களிலும், ஞானமிருக்கிறதோ அவனுக்குக் கோடி ரசாயனமும் ஈடல்ல.

(392) ஏகாக்ஷரத்தை எவனொருவன் உபதேசிக்கிறானோ, நாடிககளின் பேதங்களை எவனொருவன் விபரித்துரைக்கிறானோ, அப்பேர்ப்பட்டவனுக்கு எந்த திரவியத்தைக்கொடுத்தாலும் சிஷ்யன் ருணமுக்தனாகிறான். அத்தகைய திரவியம் இப் பூவுலகிலே இல்லை.

(393) ஹே.... பார்வதி! இந்த சாஸ்திரத்தில், ஸ்வரம், தத்துவம், யுத்தம், ஸ்திரீ வசீகரணம், கர்ப்பதானம், ரோகம், இவ் விஷயங்களின் நிர்ணயத்தை ஒரு பாதி கலையில் செய்யக்கூடும்.

(394) இவ்விதமான இந்த சாஸ்திரத்தை இந்த லோகத்தில் சித்த யோகிகள் வெளியிட்டிருக்கிறார்கள். இதை சந்திர சூரிய கிரகண காலங்களில் பாராயணம் செய்தால், சித்திப்பிராப்தமாகிறது.

(395) தன் சொந்த ஸ்தலத்தில் ஸ்திரமாய் உட்கார்ந்து நித்திரை ஆகாரம், இவைகளை மிதமாய் வைத்துக்கொண்டு ஹிருதயத்தில் ஸ்வர ரூபமாகிய பரமாத்மாவை ஒருவன் சிந்தனை செய்தால் அவனுக்கு ஸ்வரக்ஞானமுண்டாகி மேலான பதவியுண்டாகும்.

சுபம் 
          (முற்றிற்று.)

நன்றி : வாசன் அச்சுக்கூடம், தஞ்சை

     - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
       சித்தர்களின் குரல் shiva shangar
G

No comments:

Post a Comment