Tuesday, November 3, 2015

Ganesa Pancharathnam - Adi Shankara at Madurai Meenakshi Temple Mudali Mandapam

ஆதிசங்கரரின் கணேச பஞ்ச ரத்னம்
Ganesa Pancharathnam - Adi Shankara

Madurai Meenakshi Temple - Mudali Mandapam
 Today only i say Jbee ayya article in his site ... How HE call & ask my DAD to do renovate this historical mandapam where Adi Shankara created Ganesa Pancharathnam .... 

  Meenakshi Temple my dad  ' Chamundi ' P.N.Viveakanandan while crossing Iruttu Mandapam, he will ask himself   "Why Ganesa and Subramanian idols right and left corner , No gopuram but only having  granite pillar’s structures ?".
Madurai Meenakshi Temple kumbabishekam fixed 7 July 1995 , that time Temple PWD  engineer Mr.Sridaran sir , down very amusing job to getting donor to help for kumbabishekam  , he also ask my dad to renovate Iruttu Mandapam . At that time only we came to know that is “Mudali Mandapam”.This was constructed by Kadanthai Mudaliar in 1613 .
'Dream came true to .. ', my Dad  accepts to do renovate but  he requested to  “Build new small gopuram to Ganesa and Subramanian idols”. Mr.Sridaran sir told “i will try to get permission from temple endowment board” and he give order to renovate Iruttu Mandapam [Mudali Mandapam]. Now I am proudly say … " My dad name also in Meenakshi Temple history to Build two small gopuram . I think now this is last gopuram to build in Meenakshi Temple too .."  More:https://sadhanandaswamigal.blogspot.com/2014/12/goddess-meenakshi-child.html



வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி    
Thank to https://www.visvacomplex.com/ganesa_pancharathnam.html ]
ஆதிசங்கரர், இந்த தோத்திரத்தை மதுரையில் பாடியதாகச் சொல்லப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அம்மன் சன்னிதியிலிருந்து உள்ளே போனால் பொற்றாமரைக் குளத்துக்குச் செல்லும் வழியில் கோபுர வாசல் ஒன்று இருக்கும். அதில் சில
அற்புதமான சிறபங்கள் உண்டு. அந்தக் கோபுர வாசலின் இடப்பக்கத்தில் 'நர்த்தன கணபதி' மூர்த்தி இருக்கிறார்.



    அவருடைய நர்த்தனத்துக்கேற்ற வகையில் ஆதிசங்கரர் இந்தத் தோத்திரத்தைத் தாளக்கட்டுடன் அமைத்திருப்பதாகச் சொல்வார்கள். இந்தத் தோத்திரத்துக்கேற்றவகையில் விநாயகரும் ஆடியதாகச் சொல்வார்கள்.


ஸ்ரீசங்கரபகவத்பாதர் இயற்றிய
கணேச பஞ்சரத்னம்

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்


முதாகராத்த மோதகம் - மகிழ்ச்சியுடன் கரத்தில் மோதகத்தைக்
கொண்டுள்ளவர்

ஸதாவிமுக்திஸாதகம் - தம்மை வழுத்துபவர்களுக்கு எப்போதும்
முக்தியைக் கொடுப்பவர்

கலாதராவதம்ஸகம் - கலா என்பது சந்திரனின் கலை - பிறைச்சந்திரன்.
பிறையணிந்தவர் சிவனென்பது மட்டுமே மக்கள் சாதாரணமாக
அறிந்திருப்பது. 


ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பாலா திரிபுரசுந்தரி, ஆத்யகாளி
எனப்படும் மகாகாளி தசமுகி ஆகிய அம்பிகை வடிவங்களும்
பிறையணிந்திருப்பார்கள்.
மகாகணபதி, வல்லபகணபதி, உச்சிஷ்டகணபதி என்னும் வடிவங்களுக்கும்
முக்கண்களும் பிறைச்சந்திரனும் உண்டு.





விநாயகர் அகவல் :
சீதக்களபச்சுஎந்தாமரைப்பூம்
பாதச்சிலம்பு பல்லிசை பாட
பொன்னரைஞாணும் பூந்துகிலாடையும்
வண்ணமருங்கில் வளர்ந்தழகெறிப்ப
பேழைவயிறும் பெரும்பாரக்கோடும்
வேழமுகத்தில் விளங்கு சிந்தூரமும்
அஞ்சுகரமும் அங்குசபாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்
நான்றவாயும் நாலிருபுயமும்
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்பரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞான
அற்புதம் திகழும் கற்பகக் களிறே!

முருகனுடைய திருவுருக்களில் மகாசுப்பிரமணியர் என்னும் வடிவம் உண்டு.
மீனாட்சியம்மன் கோயிலின் சில கோபுரங்களில் இந்த வடிவின்
சிலைகளைக் காணலாம். இவ்வடிவிலும் ஒவ்வொரு முகமும் முக்கண்கள்
பெற்று, பிறைகள் அணிந்தவாறு காட்சியளிக்கும்.

இந்த வரியின் பொருள் - சந்திர கலையைத் தலைல் தரித்திருப்பவர்.

விலஸிலோகரக்ஷகம் - தம்முடைய பக்தியில் திளைத்து மகிழ்ச்சியாக
இருக்கும் பக்தர்களைக் காப்பவர்

அநாயகைகநாயகம் - அநாயக ஏகநாயகம் - தங்களைப் பாதுகாக்கக்கூடிய
தலைவனில்லாதவர்களுக்குத் தாமே ஒரே தலைவராக விளங்குபவர்

விநாசிதே பதைத்யகம் - இபதைத்ய என்னும் சொல் கஜாசுரனைக்
குறிக்கும். இபம் - யானை.
காசியப முனிவருக்கு திதி என்னும் மனைவி உண்டு. அவர்களுக்குப்
பிறந்தவர்கள் அசுரர்கள். திதியின் புத்திரர்கள் என்பதால் தைத்யர்
என்று பெயர்.
கஜாசுரனைக் கொன்றவர்.

நதாசுபாசுநாசகம் - தம்மை வணங்குபவர்களின் பாவங்களை எப்போதும்
நாசம் செய்பவர்

நமாமிதம் விநாயகம் - அப்படிப்பட்ட விநாயகரை வணங்குகிறேன்.
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்


இரண்டாவது பாடல்:

நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்



நதேதராதிபீகரம் - தம்மை வணங்காதவருக்கு அடிக்கடி பயத்தைக்
கொடுத்துத் தடுத்தாட்கொள்பவர்.
விநாயகரின் பல மூர்த்தங்களில் விக்னஹரன் என்று விக்னகரன்
என்றும் இரண்டு உண்டு.
அவரை வணங்காது தொடங்கப்படும் காரியங்களில் விக்னங்கள்
ஏற்படுத்துபவர் விக்னகரன்.
ஆகவே எந்தக் காரியத்தைத் தொடங்கும்போதும் விக்னம்
ஏற்படாமல் இருப்பதற்காக வழிபடப்படுபவர்.
இன்னொருவராகிய விக்னஹரர், இடையூறுகளை நீக்குபவர்.
    இவர்கள் இருவரையும் சேர்த்து 'இரட்டைப் பிள்ளையார்' என்று
சொல்வார்கள். மதுரை மீனாட்சியம்மன் சன்னிதியில்கருவறைக்குப் பக்கத்தில்
இவர்கள் இருவரின் திருவுருவங்கள் இருக்கின்றன.

நவோதிதார்க்கபாஸ்வரம் - நவ உதாதித அர்க்கபாஸ்வரம் - உதய கால
சூரியனைப்போல் விளங்குபவர்

நமத்ஸ¤ராரி நிர்ஜரம் - ஸ¤ரர் என்போர் தேவர்கள்; அவர்களின்
விரோதிகள் அசுரர்கள்; ஸ¤ராரி என்பது அசுரர்களைக் குறிக்கும்.
தம்மை வணங்கும் தேவர்களின் விரோதிகளான அசுரர்களை அழிப்பவர்.

நதாதிகாபதுத்தரம் - ஆபதுத்தரம் என்றால் ஆபத்திலிருந்து காப்பாற்றுதல்.
தம்மை வணங்குபர்களை ஆபத்துக்களைலிருந்து காப்பாற்றுவர்.

ஸ¤ரேச்வரம் - தேவர்களின் தலைவர்

நிதீச்வரம் - நவநிதிகளுக்கும் அதிபதி; புதையல்களுக்கு அதிதேவதை.

கஜேச்வரம் - யானைகளுக்கு அதிபதி

கணேச்வரம் - கணங்களுக்கெல்லாம் நாதராக இருப்பவர்

மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம் - மஹா ஈஸ்வரனாக
விளங்குபவரும் பரத்தும் பரமாக
இருப்பவரும் ஆகியவர்.

அப்படிப்பட்ட கணபதியை வணங்குகிறேன்.


ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்


கணேச பஞ்சரத்னம் 3-ஆவது பாடல்

ஸமஸ்தலோகசங்கரம் - அனைத்து உலகங்களுக்கெல்லாம் சுகத்தைக்
கொடுக்கக்கூடியவர்
நிரஸ்ததைத்யகுஞ்சரம் - தைத்ய குஞ்சரம் -அசுர யானையாகிய
கஜாசுரனை அழித்தவர்
தரேதரோதரம் - அனைத்து உலகங்களையெல்லாம் தமது வயிற்றுக்குள்
வைத்து, காப்பாற்றுபவர்.
கணேச புராணம் என்றொரு புராணம் இருக்கிறது. அது காணபத்ய
சமயத்தின் முக்கிய புராணம். விநாயகரின் ஆதீஸ்வர, மஹேஸ்வரத்
தன்மையை நிறுவதாகும். அதில் ஒரு கட்டத்தில் மும்மூர்த்திகளையும்
தம்முடைய துதிக்கைக்குள் இழுத்து, தமது வயிற்றுக்குள்
செலுத்திவிடுகிறார். அங்கு அவர்கள் பிரபஞ்சமும் சராசரங்களும்
புவனங்களும் இருப்பதைக் காண்பார்கள்.
 
வரம் வரேபவக்த்ரம் - உத்தமமானவர்; சிறந்த யானை முகத்தோன்
அக்ஷரம் - அழிவற்றவர்
க்ருபாகரம் - கிருபை செய்பவர்
க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம் மநஸ்கரம்நமஸ்க்ருதாம் பாஸ்வரம் -
பிழைகளை மன்னிப்பவர்; பொறுப்பவர்; கிருபை கொண்டு
அவர்களின் மனத்தை நல்வழியில் திருப்பி அவர்களுக்கு
மகிழ்ச்சியையும் கீர்த்தியையும் மேன்மையையும் உண்டாக்குபவர்.

நமஸ்கரோமி - அப்படிப்பட்ட விநாயகரை வணங்குகிறேன்


கணேச பஞ்சரத்னம் - 4-ஆம் பாடல் 

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் - தம்முடைய பக்தர்களின் ஏழ்மையை
நாசம் செய்பவர்
சிரந்தநோக்தி பாஜநம் - அநாதியாக விளங்கும் வேதங்களின்
மந்திரங்களால் பூஜிக்கப்படும் சிறப்புமிக்கவர்
புராரிபூர்வநந்தநம் - புர அரி - திரிபுரங்களை நாசம் செய்த சிவன்;
அவருடைய மூத்த மகன்
ஸ¤ராரிகர்வ சர்வணம் - ஸ¤ர அரி - அசுரர்; கர்வ சர்வணம் -
அசுரர்களின் கர்வத்தை அடக்குபவர்
ப்ரபஞ்சநாசபீஷணம் - பிரபஞ்சத்தை அழிக்கக்கூடிய காலனுக்கு
பயத்தைக் கொடுப்பவர்
தநஞ்சயாதிபூஷணம் - அர்ஜுனன் முதலானவர்களால் பூஜிக்கப்பட்டவர்
கபோலதாநவாரணம் - கபோலத்தில் மத நீர் பெருகியோடப்பெற்றவர்
பஜேபுராண வாரணம் - புராதனமான முதல்வனாகிய யானை உருவனை
வணங்குகிறேன்.
'முன்னைப் பழம்பொருளுக்கும் மூத்த பழம்பொருள்' என்று
சிவன் குறிப்பிடப்படுகிறார்.
அம்பிகையை ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 'புராதனா' என்று
வழுத்துகிறது. பழந்தமிழர்கள் தாய்தெய்வமாகிய கொற்றவையை
'பழையோள்' என்று அழைத்திருக்கின்றனர்.

கணேச பஞ்சரத்னம் - 5-ஆவது பாடல்

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

நிதாந்தகாந்ததந்தகாந்தம் - அழகிய பல்வரிசையும் தந்தமும் தருகின்ற
பிரகாசத்தையுடையவர்
அந்தகாந்தகாத்மஜம் - அந்தக அந்தக - காலனுக்குக் காலனாகிய சிவன்;
அவனுடைய மகன்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம் - மனதால் சிந்திக்கமுடியாத
அளவுக்கு அப்பாற்பட்ட உருவத்தை உடையவர்; நாசமற்றவராகிய
அவர், வழிபடுவோரின் எல்லா விக்கினங்களையும் நாசம் செய்பவர்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம் - யோகியர்களின் இருதயதிற்குள்
அந்தரங்கமாக நிரந்தரமாக வசிப்பவர்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் - ஒரே தந்தத்தையுடையவராகிய
கணேசரை மட்டுமே எப்போதும் சிந்திக்கிறேன்.

கணேச பஞ்சரத்னம் - 6-ஆம் பாடல் 
பலசுருதி

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்


மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த தோத்திர நூலை
யார் தினந்தோறும் அதிகாலையில் விழித்தெழுந்தவுடன்
மகாகணபதியை இருதயத்தில் நினைத்து இருத்திக்கொண்டு
பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள்விரைவிலேயே எல்லாப்
பிணிகளிலிருந்தும் விடுபடுகிறார்கள். அவர்கள் நல்ல கவித்துவத்தையும்
நன்மக்களையும் நீண்ட ஆயுளையும் அஷ்ட ஐஸ்வரியங்களையும்
அடைகிறார்கள்.



    இப்போது இந்த கணேச பஞ்சரத்னத்தில் உள்ள விசேஷத்தைப் பார்ப்போம். அதற்கு முன்னால் முழுத் தோத்திரத்தையும் பார்ப்போம்.

அப்படிப்பட்ட கணபதியை வணங்குகிறேன்.

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்

நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்

    முழு தோத்திரத்தையும் மீண்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.

    இதில் பல விசேஷங்கள் இருக்கின்றன.

    அவற்றில் ஒன்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

    இந்தப் பாடலின் ஒவ்வொரு அடிக்கும் பதினாறு அட்சரங்கள்
இருக்கின்றன. அட்சரங்கள் என்னும்போது மெய்யெழுத்துக்கள் சேர்த்துக்
கொள்ளப்படுவதில்லை. உயிர், உயிர்மெய் ஆகியவைதாம். மாத்திரைக்
கணக்கும் உண்டும்.

    முதல் பாடலின் ஒவ்வொரு அடியும் இரண்டு பாதிகளாகப்
பிரிப்போம்.
    ஓர் அடியின் பாதியில் எட்டு அட்சரங்கள் இருக்கின்றன.
    ஒவ்வொரு அரையடியின் எட்டாவது அட்சரத்தைக் கவனியுங்கள்.
 

மு-தா-க-ராத்-த-மோ-த-கம்
ஸ-தா-வி-முக்-தி-ஸா-த-கம்
க-லா-த-ரா-வ-தம்-ஸ-கம்
வி-லா-ஸி-லோ-க-ர-க்ஷ-கம்
அ-நா-ய-கை-க-நா-ய-கம்
வி-நா-சி-தே-ப-தைத்-ய-கம்
ந-தா-சு-பா-சு-நா-ச-கம்
ந-மா-மி-தம்-வி-நா-ய-கம்

'கம்' என்று முடிகிறதல்லவா?
'கம்' என்பது கணேச பீஜாட்சரம். இதுதான் விநாயகரின்
முக்கியமான பீஜ மந்திரம். இப்படி ஒவ்வொரு எட்டாவது அட்சரத்துக்கும்
ஒரு அட்சரத்தை வைப்பதை 'அஷ்டப்பிராஸம்' என்று சொல்வார்கள்.
முதல் பாடலில் உள்ள அறுபத்துநான்கு அட்சரங்களுக்கும்
மொத்தம் எட்டு 'கம்' பீஜம் அமைந்திருக்கின்றன.
அடுத்த இரண்டு பாடல்களிலும் 'ரம்' என்னும் 'அக்னி பீஜம்'
பயில்கிறது.
நான்காவது பாடலில் 'ணம்' என்னும் பீஜம் வருகிறது.

அதற்கடுத்த பாடலில்,

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

தோத்திரத்தின் எல்லாப்பாடல்களுமே இது நல்ல தாளக்கட்டுடன்
அமைந்திருந்தாலும் இந்த ஐந்தாவது பாடல்தான் ரொம்பவும் 'துள்ளலுடன்'
விளங்குகிறது. அதுவும் 'ஜம்நம்ரம்நாம்தம்தம்' என்று விசேஷமாக
விளங்குகிறது.

இந்தத் தாள அமைப்புக்கும் ஒரு விசேஷம் இருக்கிறது.

இந்தத் தோத்திரத்தை ஆதி சங்கரர் மதுரை மீனாட்சியம்மன்
கோயிலில் அங்கிருந்த விநாயகர் சிலையன்றின் முன்னிலையில் பாடினார்.
அவர் பாடப் பாட அந்த நர்த்தன விநாயகர் ஆடினாராம். அப்படித்தான்
அந்தப் பாடலின் ஐதீகம்.

சரி.
இந்தச் சிலை எங்கிருக்கிறது?

    மீனாட்சியம்மன் கோயிலில் அம்மன் சன்னிதி வாயிலின் வழியாக உள்ளே சென்றோமானால் அஷ்ட சக்தி மண்டபம் இருக்கும். அதைத் தாண்டியவுடன் ஒரு பெரிய மண்டபத்தில் ஏராளமான பூக்கடைகள் தென்படும். அதற்கும் அப்பால் ஒரு கோபுரவாசல். அதைத் தாண்டிச் சென்றால் ஒரு ஆறுகால் மண்டம இருக்கும். மிக அழகிய தூண்களில் உயிரோட்டமுள்ள சிலைகள் இருக்கும். இங்குதான் குறவன் குறத்தி சிலை என்ற புகழ்பெற்ற சிலைகள் இருக்கின்றன.
    இந்த மண்டபத்துக்கும் அடுத்தாற்போல இன்னொரு கோபுரவாசல். அதையும் தாண்டிச் சென்றால் பொற்றாமரைக் குளம் வரும். அந்தக் கோபுர வாசலின் இருபக்கங்களிலும் விநாயகர், முருகன் சன்னிதிகள் இருக்கின்றன.
    விநாயகர் சன்னிதியில் இருப்பவர் நர்த்தன விநாயகர்.
    அவர்தான் ஆதிசங்கரரின் கணேச பஞ்சரத்னத்துக்கு ஏற்றவாறு ரசித்து ஆடியவர் என்று கர்ணபரம்பரைக் கதை சொல்கிறது.

அன்புடன்

ஜெயபாரதி


சும்மா 3 -- எஸ்.ஜெயபாரதி


சும்மா #3

வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


 

எண்ணங்களின் பிறப்பை இப்போது பார்ப்போம்.

உள்ளத்தில் எப்போதும் இரண்டு செயல்கள் மாறி மாறி நடந்துகொண்டேஇருக்கின்றன.

ஒன்று, நினைப்பு.

இன்னொன்று, மறப்பு.

மனத்திரையில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. நம்மை அறியாமலேயே அது போய் விடுகிறது. ஆனால், வேறொன்று வந்து விடுகிறது. இருந்தாலும், மனது வெற்றிடமாக இருப்பதேயில்லை. மனதில் எந்தவொரு நினைப்புமே இல்லாமலோ, மறப்பும் இல்லாமலோ இருப்பது கடினமாக இருக்கிறது.

நினைப்பு" என்பது எப்படி ஒரு active process ஸோ அதுபோலவே மறப்பு என்பதுவும் ஒரு active processதான்.

ஒன்றை நாம் உணருகிறோம்.

இன்னொன்றை நாம் உணருவதில்லை.

மறப்பு என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்தான்.

"நினைக்கத் தொ¢ந்த மனமே!
உனக்கு மறக்கத் தொ¢யாதா?"

நினைவையெல்லாம் மறக்கமுடியாமல் போனால் பைத்தியம் அல்லவா பிடித்துவிடும்!

பழங்காலத்து யோக நூல்களில் எண்ணத்தை "வாக்" என்று குறிப்பிடுகிறார்கள். இந்த வாக்குகளில் நான்கு உண்டு. பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகா¢ ஆகியவை.

வைகா¢யும் இரண்டாக இருக்கிறது.
சொல் வடிவத்திலும் வாக்கிய அமைப்பிலும் எண்ணம் விளங்குவதைத்தான் "வைகா¢" என்கிறோம். அது பேச்சாக வெளியில் பா¢ணமிக்கும்போது அதை "தூல வைகா¢" என்றும், வெறுமனே அதே வடிவில் மனதில் மட்டுமே வெளிப்பாடு கொண்டு விளங்கும்போது அதனை "சூட்சும வைகா¢" என்றும் கூறுகிறோம். இதெல்லாம் ஏதாவது ஒரு மொழியில் அமைந்திருக்கும் - தமிழ் , இந்தி, ஆங்கிலம் என்று.
வைகா¢ வாக்குக்கு அடிப்படையான இன்னொரு நிலையில் அதற்கு முன்னதாக விளங்கும். இதனை "மத்யமா" வாக் நிலை என்போம்.

Instinct என்பது சொல் வடிவம் பெறாத ஓர் எண்ணக்கூறு.

இதைப்போன்ற நிலையில்தான் மத்யமா விளங்கும். இதை யோக நூல்கள் மயில் முட்டையுடன் ஒப்பிடும். மயில் முட்டையில் வெளியே ஓடு இருக்கிறது. அதனுள்ளே வெண் கரு, மஞ்சள் கரு எல்லாம் இருக்கின்றன.
அதற்குள் மயிலின் அனைத்துக்கூறுகளும் விளங்குகின்றன.
இதுவேதான் முழு மயிலாகப் பா¢ணமிக்கிறது. மயிலை வைகா¢ என்றால் முட்டைதான் மத்யமா.
மத்யமா நிலையில் இருக்கும் எண்ணத்தை நாம் சாதாரணமாக முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால், வைகா¢ நிலையில் உணரலாம். யோகிகள் மத்யமா நிலையை உணருவார்கள்.

இதற்கும் அடிப்படையான இன்னொரு புராதன நிலை உண்டு. அதை "பஸ்யந்தி" என்று கூறுவார்கள்.
மத்யமா நிலையில் பா¢ணமிக்கும் முன்னதாக எண்ணம் பஸ்யந்தி நிலையில் விளங்கும்.
இந்த நிலை இன்னும் சூட்சுமமானதொன்று.
விதையிலிருந்து வெளிவந்த முளையைப்போன்ற நிலை.

இதற்கும் அடிப்படையான ஆதார நிலையை "பரா" வாக் என்பார்கள். முளைக்கும் முன்னால் உள்ள விதையின் நிலையைப் போன்றது அது. யோக நூல்கள் பராவை ஆலவிதைக்கு ஒப்பிடும். ஆலவிதையிலிருந்து முளை தோன்றி, அது செடியாகி, அதன் பின்னர் தண்டு, கிளை, கொப்பு, காம்பு, இலை, விழுது, என்ற முழு ஆலமரமாகப் பா¢ணமிக்கின்றது அல்லவா?

ஆலவிதை - பரா
முளை - பஸ்யந்தி
செடி - மத்யமா
ஆலமரம் - வைகா¢

இப்படியாகத்தான் எண்ணம், பேச்சு, எழுத்து எல்லாம் தோன்றுகிறது. மாபெரும் யோகியரே பஸ்யந்தி, பரா வரைக்கும் சென்று வாக், எண்ணங்களை உணரமுடியும். அப்படிப்பட்டவர்கள் பரா நிலையிலேயே எண்ணத்தின் பிறப்பை நிறுத்தி விடுவார்கள்.

இந்த நிலைதான் "சும்மா" இருக்கும் நிலை.

"சொல் அற; சும்மா இரு!" என்பது அருணகி¡¢யாருக்கு முருகன் கூறிய உபதேசம். அந்த மாபெரும் பொருள் அறியமுடியவில்லை என்று அருணகி¡¢யார் கூறுகிறார்.

எண்ணங்களை அற்றுப்போகச் செய்ய வேண்டுமானால், முதலில் வைகா¢யை அடக்கி, மத்யமாவை அடக்கி, பஸ்யந்தியையும் அடக்கி, முடிவில் பரா நிலையில் ஒன்றுமே எழும்பாமல் நிறுத்தவேண்டும்.

இவ்வாறு செய்யும் அதே நேரத்தில் "மனஸ்" எனப்படும் உள்ளப்பகுதி ஒடுங்கி விடும். ஏனெனில் அங்கு எண்ணங்கள் ஏதும் நிலவ மாட்டா. புத்தி, சித்தம், அஹம்காரம்,ஆகிய மற்றவையும்கூட இல்லாமல் போய்விடும்.

மனசு அழிந்த நிலை இதுதான். இந்த நிலையில்தான் உணர்வுகள்கூட இருக்கமாட்டாதே? ஆகவே எதுவும் உணரப்படவும் மாட்டாது, பதிப்பிக்கப்படவும் மாட்டாது.

இதுதான் நினைவும் மறப்பும் அற்ற நிலை.

நினைப்பு இருந்தால்தானே மறதி ஏற்படுவதற்கு?

இதைத்தான் "சும்மா" இருத்தல் என்பார்கள்.

"தி¡¢புடி ஞானம்" என்று ஒரு விஷயம் இருக்கிறது. காண்பான், காணும் செயல், காட்சிப்பொருள், இவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகள்; இதைத்தான் தி¡¢புடி என்பது.

சும்மா இருக்கும்போது தி¡¢புடி ஞானம் அற்றுப் போய்விடும்.

மனசு இயங்கும்போது உணர்வுகள், உணர்ச்சிகள் இருக்கும். உணர்வு இருந்தால்தான் ஓர் அனுபவம் எப்படியிருக்கும் என்பதை உணரமுடியும்.

ஆனால், உணர்வு, மனசு எல்லாம் இருக்கும்போது சும்மா இருக்கும் நிலை ஏற்படமாட்டாது. சும்மா இருக்கும்போதோ மனசு, உணர்வுகள் இரா.

ஆகவேதான் சும்மா இருக்கும் தன்மை எப்படியிருக்கும் என்பதனைச் சொல்ல முடியாது.

"கண்டவர் விண்டதில்லை;
விண்டவர் கண்டதில்லை"

நினைப்பும் இல்லை, மறதியும் இல்லை;
வாக்கும் இல்லை, மனமும் இல்லை;
இரவும் இல்லை, பகலும் இஇல்லை.

அது ஒரு Twilight Zone.

"வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே
எந்தன் உள்ளம் தெளிவித்து"
ஒளவையார்

ஒளவையார் "விநாயகர் அகவ"லில் மேற்கூறியவாறு சொன்னவாக்கும் மனமும் இல்லாத நிலைதான் "சும்மா இருப்பது".

"ஆங்காரம் உள்ளடக்கி, ஐம்புலனைச்சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?"

                =பத்திரகி¡¢யார்

அந்தத் தூங்காமல் தூங்கும் நிலையும் அதுதான். ஐம்புலன்களின் செயல் பாட்டினை நிறுத்தினால் ஆங்காரமாகிய "தான்" என்னும் உணர்வு இருக்கமுடியாது அல்லவா?

"வேட்டை பொ¢தென்றே, வெறி நாய் துணை கொண்டு,
காட்டில் புகுவேனோ? கண்ணே, ரகுமானே!"
                - குணங்குடி மஸ்தான்

ஐம்புலன்களை மஸ்தான் சாகிபு வெறிநாய்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். இதனை "ரகுமான் கண்ணி" என்னும் பகுதியில் காணலாம்.

அவர்கள் யோகியராக இருக்கட்டும்; Sufiக்களாக இருக்கட்டும்; யூத Essenes ஆக இருக்கட்டும்; Augustine, St.Theresa போன்ற Christian Mystics ஆகவோ, சீன Taoist ஆகவோ, Zen பெளத்தராகவோ, அல்லது நம் தமிழ் சித்தர்களாகவோ இருக்கட்டும். யாராகவே இருந்தாலும் அவர்களுடையது ஒரு common மொழி.

அதுதான் "சும்மா இருக்கும்" மொழி.

"மோனம் என்பது ஞானவரம்பு".

சும்மா 4 -- எஸ்.ஜெயபாரதி

"சும்மா #4

வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி



இந்த "சும்மா" என்ற சொல்லைத் தற்சமயம் பல வகையான அர்த்தங்களில் பயன்படுத்துகிறோம் அல்லவா? சிற்சில பிரயோகங்களைப் பார்ப்போமே?

(1) பேசாமல் இருப்பது:

"என்னவே! அப்பொம் பிடிச்சு பாக்கேன்?
தொணதொணன்னுன்னு பேச்சிக்கிட்டே இருக்கீர்!
இப்பொம் கொஞ்சம் சும்மா இரும்."

(2) ஒன்றும்செய்யாமல் இருப்பது:

"துருதுருன்னு எதையாவது செய்யாமல் கொஞ்சம் சும்மா இரு!'

(3) இயல்பாக normal ஆக இருப்பது:

"என்னா மம்முது? ஒங்க வாப்பா முடியாம இருந்தாலுவளே?
இப்ப எப்பிடி இருக்காலுவ?"
"இப்ப பரவாயில்லை, மாமு. சும்மாதான் இருக்காஹ."

(4) வெறுமையாக இருப்பது:

"அந்த வீட்டுல யாரும் குடி வந்துட்டாஹளா?"
"இல்லை. இன்னும் சும்மாதான் கிடக்குது."

"அவள் காதுல கழுத்தில ஒண்ணுமே நகைநட்டு இல்லாம சும்மா இருக்கே?"

(5) தொழிலின்றி இருப்பது:

"ஏனுங்கோ? உன்ற பையன் வேலையில சேர்ந்துட்டானுங்களா?"
"இல்லீங்களே! சும்மாதானே இருக்குறானுங்கோ!"

(6)காரணமின்றி:

"அடங்க இஸ்க்கி! இன்னாபா இம்மாந்தொலை வந்து கீறே?"
"சொம்மாதாங்கண்ணு."

(7)பயனின்றி:

"ஏங்க்றேன், கானா ரூனா பானா ழானா? என்னங்கிறேன்?
அந்த வடுவாப்பய சும்மா வெட்டித்தனமா இஙிண வந்துக்கிணும்
அஙிண போயிக்கிணுமா இருக்கான்?"

(8)விளையாட்டாய்ச் சொல்வது:

"வக்காலி! ஏண்டா, குருத பறக்குதுன்னுட்டு சொன்ன?"
"குருத எங்கனாச்சும் பறக்குமா? சும்மா சொன்னேன்."

(9) கருத்தில்லாமல்:

"இவ்வளவு நேரம் சும்மாவா உங்கிட்டே அவ்வளவு கதையும் சொன்னேன்?"

(10) இலவசமாக:

"இது என்ன விலைக்கு வாங்கினே?"
"விலைக்கெல்லாம் வாங்கலை. சும்மா கெடச்சுது."

(11)ஓய்வு எடுத்தல்; relaxing:

"ரொம்ப tired ஆ இருக்கு. கொஞ்சநேரம் சும்மா இருக்கேன்."

(12) அடிக்கடி:

"ஏன் சும்மா சும்மா வந்துண்டே இருக்கேள்?"

(13) தடங்கலின்றி:

"மத்தவங்களுக்குத்தான் பர்மிஷனெல்லாம் தேவை.
நீங்க சும்மா வாங்க."

(14) பயன்படுத்தப்படாமல்:

"சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!"

"சும்மா" என்ற சொல் கன்னடத்திலும் மலையாளத்திலும் இருக்கிறது.
வேறெந்த இந்திய மொழியிலும் இருக்கிறதா என்பது தொ¢யவில்லை.

ஆனால், மலாய் மொழியில் "சும்மா" என்ற சொல் இருக்கிறது.
இரண்டே அர்த்தங்களில் மட்டுமேதான் வழங்குகின்றது.

Mana pergi? (எங்கே போகிறாய்?)
"Cuma jalan jalan sahaja." (சும்மா நடந்துகொண்டிருக்கிறேன்.)

"Baju-ni cantiknya! Berapa harga?" (இந்தச் சட்டையின் விலை என்ன?")
"Tak beli-ni! Dapat percuma-dah! (வாங்கவில்லை. இலவசமாகத்தான் கிடைத்தது.)

மேலே உள்ள எடுத்துக்காட்டுகள் தமிழர்களிடையே விளங்கும் பல வட்டார, சமூக, பேச்சுமரபுகளில் இருப்பதைக்காணலாம். எல்லாருமே "சும்மா" என்னும் சொல்லைபயன்படுத்துகிறார்கள் என்பதையே அது சற்று அழுத்தமாகக் காட்டும். அவ்வளவுதான்.

இந்த நீள்கட்டுரை தமிழ் இணையத்தில் வெளியிட்டேன். அதன் தொடர்பாக சில உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பியிருந்தனர். அவற்றிற்காக கொடுக்கப்பட்ட மேல்விளக்கங்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

¡¢ஷி தன்னுடைய posting ஒன்றில் ஜாக்ரத், ஸ்வப்னா, ஸ¤ஷ¤ப்தி, து¡¢யம் ஆகியவற்றைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

இவையெல்லாம் மனிதனின் உணர்வுகளின் பல்வேறு நிலைகள். They are various levels of Human Consciousness. இவற்றை "அவஸ்தை"கள் என்பார்கள். இவற்றுடன் து¡¢யாதீதம் என்பதனையும் சேர்த்து "பஞ்சாவஸ்தைகள்" என்பர்.

1. ஜாக்ரத் அல்லது சாக்கிரம் என்பது முழு நினைவோடு இருக்கும் விழிப்பு நிலையாகும். இதனை தமிழ் சித்தர் மரபு "நனவு" என்று அழைக்கும்.

மூளையில் தோன்றும் "Electro Encephalography" யில் "beta rhythm" காணப்படும்.

2. ஸ்வப்னா அல்லது சொப்பன நிலையாகிய கனா நிலை - தூக்கத்தில் கனவு காணும் நிலையாகும் இது. இதனை "Rapid eye Movement Phase of Sleep" அல்லது "REM Stage of Sleep" என்றும் கூறுவார்கள்.

இதன்போது மூளையின் E.E.G.யில் "theta rhythm" பதிவாகும்.

3. ஸ¤ஷ¤ப்தி அல்லது சுழுத்தி அல்லது உறக்க நிலை - கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கம். தூங்க ஆரம்பித்து அரைமணியிலிருந்து ஒன்றரை மணி நேரம் வரையில் இந்த நிலை பெரும்பாலும் நீடிக்கும். இதில் E.E.G. patternஇல் "delta rhythm" தோன்றும்.

4. து¡¢ய நிலை- இது சமாதி நிலை. சும்மா இருக்கும் நிலை. இதன் ஆரம்ப நிலைகளில் E.E.G. யில் "alpha rhythm" தோன்றும்.

5. து¡¢யாதீதம் - இது போக்கும் வரவும் அற்ற நிலை. சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார் அல்லவா? "போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனே".

பிறப்பு இறப்பு ஏற்படாத நிலை. உயிர்ப்படக்கம் என்று சித்தர்கள் கூறுவார்கள். இதுதான் "நிர்விகல்ப்ப சமாதி" எனப்படுவது. "சாயுஜ்ஜியம்" என்பதுவும் இதுபோன்றதுதான்.

தமிழ் சித்தர்கள் இவற்றிலேயே உட்பி¡¢வுகளைக்கூட கண்டிருக்கின்றனர்.

1. சாக்கிரத்தில் சாக்கிரம் - மனதை வெளியில் போய் அலையவிடாமல் ஒரே விஷயத்தில் ஆழமாக ஈடுபடுத்துவது. அந்நிலையில் ஏற்படும் சிந்தனைகளை மனதில் ஆழமாகப் பதிய வைத்து நினைவில் இருத்திக் கொள்வது.

2. சாக்கிரத்தில் சொப்பனநிலை - விழிப்பு நிலையிலும்கூட மனதை அவ்வப்போது வேறு சில Fantasy களில் சஞ்சா¢க்க விடுவது. சில விஷயங்கள் மறந்தும் சில விஷயங்கள் மனதில் நிற்பதுமாக உள்ள நிலை. "Day- dreaming".

3. சாக்கிரத்தில் சுழுத்தி நிலை - கண்கள் விழித்திருந்தாலும்கூட விஷயங்களை கவனிக்காமல் மனதை உறக்க நிலையில் வைத்திருப்பது.

4. சாக்கிரத்தில் து¡¢யம் - விஷயங்களை மிக ஆழமாக non - verbal நிலையில் ஆராய்ந்து ஆழ்ந்திருத்தல். Abstract thought."ஐன்ஷ்டைன்" நிலை.

5. சொப்பனத்தில் சாக்கிரம் - தூங்கிக் கனவு கண்டு, எழுந்த பின் கனவில் கண்டது அனைத்தையும் சொல்லமுடிவது.
வெள்ளையம்மாள் பாதர் வெள்ளையிடம் பாடிய,
"போகாதே! போகாதே! என் கணவா!
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்"
என்ற பாட்டின் நிலை.

6. சொப்பனத்தில் சொப்பனம் - கண்ட கனவில் சிலவற்றை மட்டும் ஞாபகத்தில் வைத்து மற்றவற்றை மறந்து விடும் நிலை.

7. சொப்பனத்தில் சுழுத்தி - கண்ட கனவு முற்றாக மறத்தல்.

8. சொப்பனத்தில் து¡¢யம் - சொல்லத்தொ¢யவில்லை.

ஓர் உதாரணம் வேண்டுமானால் தருகிறேன்.

    Benzeze molecule இல் 6 Carbon, 6 Hydrogen அணுக்கள் இருப்பது வாசகர்களுக்குத் தொ¢ந்ததே! (தினத்தந்தி பாஷை). Hydrogen valency 1; Carbon valency 6. ஆக கார்பனின் 24 + ஹைட்ரஜனின் 6 ஆக மொத்தம் 30 கொக்கி களையும் இணைத்து கார்பனுடன் ஹைட்ரஜன் அணுக்களை சா¢யான அமைப்பில் இணைக்கவேண்டும். ஆனால் இது எப்படி என்பதுதான் பு¡¢யவில்லை.
    இதில் ஆய்வுகள் நிகழ்த்தி வந்த Dr.Kekule பல நாட்கள் போராடியும் இணைப்பை சா¢யாக உருவகப்படுத்த முடியவில்லை. எப்படியும் சில வேலன்ஸி கொக்கிகள் சும்மா தொங்கின. என்னும்பொழுது பென்ஸீன் மாலிக்கியூல் எப்படியிருக்கும் என்பதுவும் தொ¢யமுடியாமல் இருந்தது.
    ஒரு நாள். கெக்கூலே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு விசித்திரமான கனவு. ஒரு பாம்பு நெளிந்து ஆடி வந்தது.பின்னணியில் நாகின் மெட்டு கேட்டதா என்பது தொ¢யாது. அந்தப் பாம்பு அப்படியே சுருண்டு தன்னுடைய வாலைச் சுருட்டித் தன்னுடைய வாயில் திணித்துக் கொண்டது. அப்படியே ஓர் அறுமுனைச் சதுக்க வடிவில் தோன்றியது.
கெக்கூலே விழித்தெழுந்ததும் அந்த Hexagon வடிவத்தை வரைந்து ஓவ்வொரு முனையிலும் ஒவ்வொரு கார்பன் அணுவை வைத்து ஒவ்வொரு கார்பனுடனும் பக்கவாட்டில் ஒவ்வொரு ஹைட்ரஜன் அணுவைக் கொக்கி போட்டு இணைத்தார்.
    அந்த Hexagon வடிவில் Benzene molecule-இன் structural formulaவை ஏற்படுத்திவிட்டார், கெக்கூலே. இதுதான் அந்த famous Benzene Ring. Steroids போன்றவற்றின் ஆய்வுகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் Benzene Ring தான் அடிப்படை. (கெக்கூலேயை "Lord of the Rings" என்றோ "Ring-master" என்றோ அழைக்கலாமோ?)

9. சுழுத்தியில் சாக்கிரம் - தூங்கிய தூக்கத்தின் தன்மையை விழித்ததன்பின் உணர்ந்திருத்தல்.

10. சுழுத்தியில் சொப்பனம் - தூங்கினோமா, தூங்கவில்லையா என்ற ஐயப்பாடு உள்ள நிலை.

11. சுழுத்தியில் சுழுத்தி - தூங்கியதுகூட தொ¢யாத நிலை.

12. சுழுத்தியில் து¡¢யம் - Hypnosis, Mesmerism செய்வதெல்லாம் இந்த மாதி¡¢ மனமுறங்கிய நிலையில்தான்.

    அந்த அளவிற்குப் பண்டைய கால சித்தர்கள் ஆராய்ச்சி செய்து உணர்ந்திருக்கிறார்கள்.

    Biofeedback கருவிகளின் உதவியோடு இந்த நிலைகளை ஆராயலாம்.

    இதனால் மனதைப்பற்றிய ஆய்வுகளில் புதிய எல்லைகளைக் கண்டறிய முடியும். இதனால் ஏற்படும் லாபமோ அளவிடப்பட முடியாததாக இருக்கும்.

    சித்தர்கள் நூல்களைப் பு¡¢ந்து கொள்ள முடியாத குப்பைகள் என்று நினைக்கப்படும் கருத்தை அகற்றி, அவற்றைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க வைக்கும்.

    இதனால் நாம் அளவிட்டு அறிந்து கொள்ளும் விஷயங்களை நாம் எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம்.

    அந்தந்த நிலைகளை வெளிக்கருவிகளினாலோ அல்லது மருந்துகளினாலோ செயற்கையாக ஏற்படுத்த முடியுமா?

    எப்படிச் செய்யலாம்?
    மனோதத்துவ ¡£தியில் இதற்கு என்னென்ன applications உண்டு?
    மனோவியாதிகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் பயன்படுமா?
    ஓர் உதாரணம் சொல்கிறேனே?
    REM Sleep இல் இருக்கும்போதெல்லாம் தூக்கத்தைக் கலைத்துவிட்டோமானால் தற்காலிக புத்திமாறாட்டம் ஏற்படும்.
    Relaxation Response போல இந்த நிலைகளை develope செய்யமுடியுமா?...etc.
Gentlemen! The sky is the limit!

    சும்மா இருத்தலுக்கு என்ன செய்யவேண்டும்?
    நம் மனதில் ஓடும் எண்ணங்களை trace பண்ணவேண்டும்.
    எங்கிருந்து தோன்றுகின்றன?
    எங்கே செல்கின்றன?
    என்ன sequence of thought ஏற்படுகிறது?
என்பனவற்றையெல்லாம் impartial observer ஆக இருந்து கவனிக்கவேண்டும். வேற்றுப் புலனுணர்வுத் தூண்டுதல்கள் sensory stimulations குறைக்கப் பட வேண்டும்.

    கண்களை லேசாக மூடிக்கொள்ளலாம். வெளி ஓசைகள் கேளா வண்ணம் தடைசெய்ய ஏதாவது மெல்லிசையைக் கேட்கலாம். சில Kitaro pieces, Enigma, Gregorian Chants, Baroque music போன்றவற்றைக் கேட்கலாம்.
    நம் பக்கத்து இசையானால் குழல், வீணை, போன்ற கருவிகளில் இசைக்கப் படும் வசந்தா, நீலாம்பா¢, மோஹனம், கானடா, தன்யாசி போன்ற ராகங்களைக் கேட்கலாம்.
அல்லது வெறும் தம்பூராவை மீட்டிக்கொண்டு அதன் சுருதியில் லயிக்கலாம்.
ஊதுவர்த்தியைப் பற்ற வைத்துக்கொள்வதால் நுகர்வு உணர்ச்சியை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். சில வகையான வாசனைகள் மனச்சாந்தியை ஏற்படுத்தும். சந்தனஎண்ணெய், அரகஜா, ஜவ்வாது, ரோஜா போன்றவை.

    இதுதான் ஆரம்ப நிலை.
    ஒரு காலத்தில் சும்மா இருக்கும் நிலையை அடையலாம்.

( இந்தக் கட்டுரை என்னுடைய சொந்த அனுபவங்கள், சிந்தனைகள், பதினெட்டு ஆண்டுக்காலப் பயிற்சி, பல நூல்களில் கண்ட அறிவு, சில பெரும் சித்தர்களின் தந்த விளக்கம் , காட்டிய வழி ஆகியவற்றின் Distilled essence என்று கூறலாம்).

Monday, November 2, 2015

வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்!

Krishna Jayanthi in my house (Madurai)
நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம்.
அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி கலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம்.

ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது.

பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும். அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது.

இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.
1. கதலீபலம் – வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் – கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் – பெரப்பம் பழம்
4. பதரி பலம் – எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் – பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் – நாவல் பழம்
7. கபித்த பலம் – விளாம் பழம்
8. த்ராஷா பலம் – திராøக்ஷ பழம்
9. சூ பழம் – மாம்பழம்
10. மாதுஸங்கபழம் – மாதுளம் பழம்
11. நாரங்கபலம் – நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் – பலாப் பழம்
13. உர்வாருகம் – வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் – எலுமிச்சம் பழம்
15. இக்ஷúகண்டம் – கரும்பு
16. சணகம் – கடலை
17. ப்ருதுகம் – அவல்
18. ஸர்க்கரா – சர்க்கரை
19. ததி – தயிர்
20. குடோபஹாரம் – வெல்லம்
21. ஆப்பிள் – காஷ்மீர பலம்
22. அமிருதம் – தீர்த்தம்
23. நாரிகேளம் – தேங்காய்
24. ஸால்யன்னம் – சம்பா அன்னம்
25. குளா பூபம் – அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் – தயிர் சாதம்
27. திந்திரியன்னம் – புளியோதரை
28. ஸர்கரான்னம் – சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் – வடை
30. ரஸகண்டம் – கற்கண்டு
31. மோதகம் – கொழுக்கட்டை
32. திலான்னம் – எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் – நெய்
34. லட்டூகம் – லட்டு
35. சித்ரான்னம் – பலவகை கலந்த சாதம்
36. நாரிகேளகண்டத்வயம் – இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் – வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் – பசும் பால்
ருதுக்கள்
சித்திரை, வைகாசி – வஸந்த ருது
ஆனி, ஆடி – க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி – வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது
மார்கழி, தை – ஹேமந்த ருது
மாசி, பங்குனி – சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை
ஞாயிறு – பானு வாஸர
திங்கள் – இந்து வாஸர
செவ்வாய் – பவும வாஸர
புதன் – சவும்ய வாஸர
வியாழன் – குரு வாஸர
வெள்ளி – ப்ருகு வாஸர
சனி – ஸ்திர வாஸர
பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை
சித்திரை – மேஷ மாஸே
வைகாசி – ரிஷப மாஸே
ஆனி – மிதுன மாஸே
ஆடி – கடக மாஸே
ஆவணி – ஸிம்ம மாஸே
புரட்டாசி – கன்யா மாஸே
ஐப்பசி – துலா மாஸே
கார்த்திகை – வ்ருச்சிக மாஸே
மார்கழி – தனுர் மாஸே
தை – மகர மாஸே
மாசி – கும்ப மாஸே
பங்குனி – மீன மாஸே

Tuesday, October 27, 2015

சும்மா இருப்பது எப்படி



"சும்மா இருப்பது எப்படி?"
ஒரு மடத்தில் "சும்மா இருப்பது எப்படி?"என செய்முறை விளக்கம் 
தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை 
வைத்தார்.யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் 
ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு 
அளிப்பதாக அறிவித்தார்.

எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.சிலர் பேசாமலும்,
சிலர் அசையாமலும்,சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர்.

சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள்.
இன்னும் சிலர் மலைகள்,காடுகள் என்று போய் சும்மா இருப்பதை 
செய்து காண்பித்தார்கள்.

ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த முயற்சியும் எடுக்காமல்,தன்னுடைய வேலைகளை எப்போதும்போல செய்துக்கொண்டிருந்தான்.போட்டியின் முடிவு நாள் வந்தது.
குரு முடிவை சொன்னபோது அனைவருக்கும் அதிர்ச்சி.

எந்த முயற்சியும் எடுக்காத அந்த மாணவனுக்குத்தான் குரு 
பாராட்டி பொறுப்பை அளிப்பதாக அறிவித்தார்.இதை ஏற்காமல்,
எல்லா மாணவர்களும் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள்.
இதற்கு குரு,

"நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பதைப் பற்றி சிந்தித்துக் சிந்தித்து,
எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள்... நீங்கள் எடுத்த முயற்சியாலேயே நீங்கள் சும்மா இருக்க தவறிவிட்டீர்கள்...

ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல்,அந்தந்த 
நேரத்தில் தன் முன்வரும் வேலைகளை செய்தபடி 
உண்மையாகவே சும்மா இருந்து காட்டியது இவன் மட்டுமே"
என்று கூறினார் குரு.

ஆக சும்மா இருப்பது என்பது மனதில் சும்மா இருப்பது.
மனம்,நடந்து முடிந்து போன விஷயத்திற்கும்,
இனி வரப்போகிற விஷயத்திற்கும் குழப்பமடையாமல் 
இருப்பதே சும்மா இருப்பது.

thank: FB friend ...

Monday, October 26, 2015

ஆகாச கருடன் கிழங்கு [Akasa Garudan Kilangu]


அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..!
Akasa Garudan Kilangu
கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.

இம் மூலிகை காடுகள்,வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 - 50 வருடங்க ளுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடு , நகரங்களில் கூவி கூவி விற்பார்கள். நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் 
முன்னோர்கள் சூட்டினார்கள்.?
பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும்.
இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும்.
உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. "சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது . இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும்சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.
இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மைகொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்றமாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவப் பயன்கள் :-
இதன் முக்கிய குணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. 
அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும்,உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் மேற் பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்பு சுவை கொண்டது.
சிறப்பாக பாம்பு விஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில் முறியும்.பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும்,மலம் கழியும் உடனே விஷமும் முறிந்து விடும்.



கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது. இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்). உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. “சாகா மூலி” என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது 
இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

வீட்டில் ஆகாச கருடன் கிழங்கை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே, கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும அளவுக்கு, சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு. பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும். வீட்டுப்புறத்தைச் சுற்றியும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அண்டாமலும் பாதுகாக்கும்.

இது திருஷ்டி, தோஷங்கள் மட்டுமல்லாமல் சித்த மருத்துவத்திலும் தொன்றுதொட்டு பயன்பட்டு வருகிறது. 
ஆகாச கருடன் கிழங்கு பற்றிய சித்தர் பாடல்
அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை
கரையாத கட்டியிவை கானார்- வரையிற்
றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு
கருடன் கிழங்கதனைக் கண்டு.

– சித்தர் பாடல்.

இந்தக் கிழங்கு நஞ்சு முறிவிற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
நீர்க்கொழுப்புக்கட்டி கரைய , இந்த கிழங்குடன் மல்லிகை மொட்டு சம அளவு கலந்து அரைத்து , காலையில் பசும் பாலில் கலந்து குடித்து வர , விரைவில் கட்டி கரையும்.சூலை,பாண்டு,பலவித நஞ்சுகள்,கழிச்சல்,கரப்பான்,சொறி,மேகநோய்,கட்டி,தீரும்.

தொடர்புக்கு 
சதுரகிரி சித்தர்கள் அங்காடி மற்றும் சதுரகிரி மூலிகை மருத்துவ மையம்



மூலிகையின் பெயர் -: ஆகாச கருடன் கிழங்கு.
தாவரப்பெயர் -: CORALLO CARPUS.
தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE.
வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன


வகைகள் -: இதன் குடும்பத்தில் 16 வகைகள் உள்ளன.
பயன் தரும் பாகங்கள்- இலை மற்றும் கிழங்கு முதலியன.
வளரியல்பு -: ஆகாச கருடன் எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரும். காடுகளிலும், மலைகளிலும் அதிகம் காணப்படும். தமிழகமெங்கும் காணப்படும். ஆப்பிரிக்காவில் அதிகம் இருக்கிறது. இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையில்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது. காடு, வேலியோரத்தில் உள்ள இதன் கொடி வாடி விட்டாலும் மழைகாலத்தில் தானே கொடி வளர ஆரம்பிக்கும். பின் அருகில் உள்ள மரம், புதர் வேலிகளில் பிடித்து மேல் நோக்கிச் செல்லும்.  இதன் இலை கோவை இலை போன்று இருக்கும். இதன் கொடி மென்பையாக இருக்கும். இதன் பூக்கள் சிறிதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்த மருநாள் உதிர்ந்து விடும். அந்த இடத்தில் சிறிய காய் உண்டாகும். அது பழுத்துச் சிவப்பாக இருக்கும் பின் காய்ந்து கீழே விழுந்து விடும். விதை மூலமும், கிழங்கு மூலமும் இன விருத்தி யுண்டாகும்.
மருத்துவப் பயன்கள் -: பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும் படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும்.  விடம் முறிந்து நோயாளி குணமடைவான்.  விடம் முறிந்து உயிர் பிழைத்த பின் அவனை 24 மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது.  பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்துக் கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.

மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக இரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விடம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரிலில் போட்டு நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விடம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும்.

இதே தூளைக் கொடுத்து வந்தால் லிங்கப்புற்று, கொருக்குப்புண், நாட்பட்ட வெள்ளை ஒழுக்கு இவைகள் குணமாகும். மேக ரோக கிரந்திப் புண் யாவும் குணமாகும். மற்ற விடப்பூச்சிகளின் விடத்தையும் முறிக்கும். இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது புளி, எண்ணெய், மிளகாய் ஆகாது. பத்தியம் காக்க வேண்டும்.

இந்தக் கிழங்கின் இலைகளைக் கொண்டு வந்து மை போல் அரைத்து கண்டமாலை, தொடைவாளை, இராஜபிளவை, கழலைகட்டிகள் அரையாப்பு, இரத்தக் கட்டிகள், சிறு கட்டிகள் இவற்றின் மேல் கனமாகப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்து இரத்தம், சீழ் வெளியேறி ஆறிவிடும்.
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, அதே அளவு கொடியின் தண்டு இவைகளைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு சீரகம் தேக்கரண்டியளவு, அதே அளவு மிளகு இவைகளை அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால்  ஓயாத வயிற்று வலி, வாதப்பிடப்பு, குலைநோய், பாண்டு ரோகம் இவைகள் யாவும் குணமாகும். ஆனால் காரம், புளி,  நல்லெண்ணையை விலக்க வேண்டும்.
ஆகாச கருடன் கிழங்கு இலையைக் கொண்டு வந்து பொடியாக நறுக்கு வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்துத் தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்த வுடன், மூன்று கைப்பிடியளவு இலையைப் போட்டு, இலை பதமாக வதக்கியவுடன் அதை சுத்தமாக துணியில் சிறிய முட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன்  வேதனையுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்கள் குணமாகும்.

ஆகாய கருடன் கிழங்கின் இலையைக் கொண்டு வந்து வெய்யிலில் சறுகு போல உலர்த்தி எடுத்து, உரலில் போட்டு இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சொறி, சிரங்கு, ஆறாத புண், குழந்தைகளுக்குத் தோன்றும் அக்கி, கரப்பான் புண்,  சிரங்கு இவைகளுக்கு இந்தத் தூளுடன் தேங்காயெண்ணைய் சேர்த்து,  குறிப்பிட்ட புண்களைக் கழுவி விட்டு மேலே தடவி வந்தால் மூன்றே நாட்களில் மறைந்து விடும்.

ஆகாச கருடன் கிழங்கு 100 கிராம், வெங்காயம் 50 கிராம், சீரகம் 20 கிராம் எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெயில் வதக்கி,  அரைத்து இளஞ்சூட்டில் வாதத்திற்குப் பற்றுப் போட்டால் வாத வலி குறையும் என்பது பாட்டி வைத்தியம்.
சருமநோய்களை குணமாக்கும் தைலம் இக்கிழங்கில் இருந்து தைலம் இறக்குகின்றனர். இத்தைலத்தை மனிதர்களுக்கு வரும் சரும நோய்களுக்கு மேல்பூச்சாகப் போட ஆறும். கால்நடைகளுக்கு வரும் சரும நோய்களுக்கும் மேற்பூச்சாக பூச நோய்கள் குணமடையும்.

we can get in chennai :
K Ramaswamy Chetty No. 177 / 157(new), Rasappa Chetty Street, Park Town, Rattan Bazaar, George Town, Chennai, Tamil Nadu 600003
044 25357997

Somu chettiar Sons , 177 /157(new) Rasappa chetty street Park-town chennai ( near kandaswamy koil) H/p 94442 79661

அவரது முகவரி:-பெ.கண்ணன்.சதுரகிரி ஹெர்பல்ஸ்,
 2/147,மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)
 திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.
+919894912594 ,+919943205566


ALL TAKEN FROM NET:


Saturday, October 24, 2015

Sabarimala Virtual Q Coupons OPEN 2015-2016 ...

Sabarimala Temple Opening & Closing 2016-2017

Book Virtual Q Coupons here
https://www.sabarimalaq.com/
















New 18 steps-Click: Behind Pathinettapadi (18 steps) on 16/10/2015  https://sadhanandaswamigal.blogspot.com/2013/11/behind-pathinettapadi-18-steps.html



How to reach Sabarimala Temple
Please note all details only up to Pamba, one has to walk steep hill Neelimala around 7 Kms. In fact many people prefer walking right from Erumeli 42 Kms to reach Sabarimala. The joy of reaching Sabarimala thru this long walk gives immense pleasure once it is reached. Without pain not much gain. May be that is the hidden agenda of Sabarima pilgrimage.






Virtual Tour of Sabarimala Temple p4panorama

Rare photo of Sabarimala Temple taken by Shri. Utrradam Thirunal Marthand Varma in 1942 when he came to sabrimala with his brother King Shri. Chitra Thirunal Balarama Varma Maharaja.

thank to Sabarimala Temple