Friday, September 14, 2012

190 Siva Temples in Kanchipuram


காஞ்சிபுரத்தில் சிவா 190 கோவில்கள்

Siva Temples in and around Kanchipuram






108 Siva temples in kanchipuram with direction 8 page pdf book 






Thursday, September 13, 2012

நால்வர் வழி யாத்ரா திருகூட்டம் தினசரி மாலை 7 மணி முதல் 7.05


உ
சிவமயம்



திரு ஆருரா! தியாகேசா ! 

நால்வர் வழி யாத்ரா திருகூட்டம் தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வழிபாட்டு முறை 

உலகத்தில் உள்ள சிவனடியார்களும் , திருஆரூர் பெருமானின் திருஅருள் துணை கொண்டு தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வடதிசை நோக்கி அவரவர் விண்ணப்பங்கள் , வேண்டுதல்களை இந்த குறிபிட்ட நேரத்தில் வைத்து கூட்டு வழிபாடு பிரார்த்தனைகளை கடைபிடிக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

இந்த வழிபாடு நேரத்தில் சொல்லவேண்டிய பதிகங்களும் , முறைகளும்

1 எந்த இடத்திலும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வட திசை நோக்கி பிரார்த்தனை செய்யலாம் .( கைலாயம் வட திசையில் இருப்பதினால் )

2 முதலில் அவரவர் விண்ணப்பங்களை பெருமானை நினைத்து வைக்க வேண்டும்

3 நால்வர் துதி சொல்லி வழிபாட்டினை தொடங்க வேண்டும் .

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி 
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி,,,,, 

4 சிவாய நம முடிந்தவரை சொல்ல வேண்டும்.

5 வான்முகில் வழாது பெய்க என தொடங்கும் வாழ்த்து சொல்லி முடிக்க வேண்டும்.

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம் 


திருஆருரா வீதிவிடங்கா

நாமும் நாடும் வளம் பெற தினசரி 7 மணி அளவில் ஒரு ஐந்து நிமிடம் ஆரூர் பெருமான் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அருள் புரிய பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலும் தொடர்புக்கு :

சிவத்திரு . மாரிமுத்து ஐயா
திருஆரூர் 
9842545536

Wednesday, August 29, 2012

Sivapuranam Meaning in Tamil & English






பெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த்தம் அனைவரும் அறிந்துதான் பாடுகிறார்களா ?  என்பது கேள்விக்குறியே !!!

"சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" 
                                                                                                  -சிவபுராணம் 96-97 

இப்புனித சிவபுராணத்தை அருளிய மாணிக்கவாசகர் இப்பாடலின் கடைசி தொகுதியில் இப்பாடலின் பொருளுணர்ந்து படித்தால் மட்டுமே சிவனின் அருளை பெறலாம் என தெளிவாக கூறிள்ளார் .

சிவபுராணத்தை பல தமிழ் அறிஞர்கள் விளக்கவுறர எழுதியுள்ளனர்.இருப்பினும் தற்கால பாமரமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த எளிய தமிழில் விளக்கவுரையை எனது நண்பர் திரு.அறிவுநிதி [Advocates Arivunithi K ( arivunithi@yahoo.com )  ] முயற்சித்துள்ளார்.

மேலும் சிவபுராணத்தை முதன்முதலில் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் படிப்பதற்கு கடினமானது என்பதால் எளிய தமிழி போல எளிய ஆங்கிலத்தில் அவர் துணைவியர் திரு.தீப்தி அறிவுநிதி அவர்கள் முயற்சித்து உள்ளார்

Downloand Book pdf : சிவபுராணத்தை எளிய விளக்கவுரை [ Tamil & English ]
https://www.mediafire.com/file/j8kmbuco2on62p6/Arivunithi+Sivapuranam+in+tamil+english.pdf


Other book by Mr.Arivunithi : Thirumoolar Thirumanthiram HandBooks [ Tamil & English ]




Thanks 

Harimanikandan.V
Sadhanandaswamigal Blogspot

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌, யநமசிவ‌, வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

Wednesday, August 1, 2012

SIVALINGAMS WITHOUT TEMPLE AROUND CHENNAI



முக்கிய வேண்டுகோள்